Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஆதிரையின் கண்மணி நீ வரக் காத்திருந்தேன் - Episode 7

Advertisement

Aathirai

Well-known member
Member
1999

(Episode-7)

அந்த நிகழ்வு நடந்து ஒரு வாரம் ஆகி விட்டது... ஆனாலும், அஞ்சலியால் அதை ஏனோ நினைக்காமல் இருக்க முடியவில்லை.. தினமும் அவன் முகம் அவள் முன் நிழலாடியது.. அதை ரசிக்கவும் செய்தாள்..

அவன் கைப்பற்றி இருந்த போது ஒரு இனம் புரியா உணர்வு ஏற்பட்டதை அவள் உணர்ந்தது நிஜம்.. முதன் முதலில் ஒரு ஆண் மகனின் ஸ்பரிசத்தை உணர்ந்ததும் அது அவளை ஏதோ செய்தது.. தன்னையே மறந்து அதை நினைத்து சிரித்துக் கொண்டிருந்தவளின் கண்களை யாரோ தன் கைகளைக் கொண்டு மூடினர்...

“ஹே... யாரு...?? பூஜா தானே.. ஏய்... விளையாடாத...” என்றபடி கைகளைத் தொட்டுப் பார்த்தாள்... கண்டுபிடித்துவிட்டாள்... கைகளை விலக்கினாள்...

“அக்கா.. நீ எப்போ வந்த...?? ஒரு போன் கூட பண்ணல.. இப்போ தான் உனக்கு வரணும்னு தோணுச்சா?” என்று செல்லமாக கோபித்துக்கொண்டாலும் தன் அக்கா ஸ்வேதாவைப் பார்த்ததும் அஞ்சலிக்கு அவ்வளவு சந்தோஷம்...

“சும்மா... உங்க எல்லாருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு தான், எதுவும் சொல்லாம வந்துட்டேன்... நான் சூப்பரா இருக்கேன்... நீ எப்படி இருக்கே...?? மேடம் ஏதோ ட்ரீம்ல இருந்த மாதிரி இருந்தது..? ம்ம்..?” என்றாள் ஸ்வேதா கிண்டலாக...

“ஹே.. ட்ரீமெல்லாம் ஒன்னும் இல்ல கா.. சும்மா ஏதோ யோசனையா இருந்தேன்.. உன்னப் பார்த்து எவ்ளோ மன்த்ஸ் ஆயிடுச்சு.. தென், உன்னோட வொர்க் எப்படி போயிட்டு இருக்கு...?” என்று அப்படியே பேச்சை மாற்றினாள்..

“யா... ஆல் கோயிங் பைன்... தென், நீ நாளைக்கு ப்ரீன்னா கொஞ்சம் வெளில போலாமா??” என்றாள் ஸ்வேதா...

“ம்ம்ம்... இப்போதைக்கு நான் ப்ரீ தான் கா... எனக்கும் வீட்லயே இருந்து ரொம்ப போர் அடிக்குது... கண்டிப்பா போலாம்...” என்றாள் அஞ்சலி...

“ஓகே டியர் நாளைக்கு மார்னிங் ரெடியா இரு.. பிரேக்பஸ்ட் சாப்பிட்டதும் உடனே கிளம்பிடலாம்...” என்றால் ஸ்வேதா..

அவள் சொன்னதும் அஞ்சலி பொம்மை போல் தலையை ஆட்டினாள்.. ஆனால், எதற்கு என்று அப்போது அஞ்சலிக்குத் தெரியவில்லை... அடுத்த நாள் தான் அதன் உண்மை அவளுக்குப் புரிந்தது... இருவரும் லால் பார்க்கிற்கு வந்திருந்தனர்...

“அஞ்சலி, உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்..” என்றாள் ஸ்வேதா..

“ம்ம்.. சொல்லு கா.. என்ன விஷயம்??” என்றாள் அஞ்சலி எதுவும் புரியாமல்..

“நான் காலேஜ் படிக்கும் போது ரோஹன்னு ஒருத்தர் பத்தி சொல்லிருக்கேன் ஞாபகம் இருக்கா??” என்றாள் ஸ்வேதா ஒரு புதிருடன்..

“ம்ம்… சரியா ஞாபகம் இல்லையே கா.. நீ நிறைய பேர் பத்தி சொல்லிருக்க.. ஆனா, பர்ட்டிகுலரா ரோஹன்..” என்று சற்று யோசித்தவாறு “ம்ஹும்.. ஞாபகம் வர மாட்டிங்குது.. நீயே சொல்லு.. அவங்களுக்கு என்ன??” என்றாள் அஞ்சலி பாவமாக..

“நானும், ரோஹனும் சிக்ஸ் இயர்ஸா லவ் பண்ணறோம்.. நாங்க கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவெடுத்திருக்கோம்.. அவங்க வீட்ல எல்லாருக்குமே தெரியும்.. நம்ம வீட்ல உன்கிட்ட தான் ஃபர்ஸ்ட் சொல்றேன்..” என்றாள் ஸ்வேதா..

ஸ்வேதா சொன்னதைக் கேட்டதும் அஞ்சலிக்கு திக்கென்றது... ஆம், அவள் காதலிக்கிறாள் என்பதை அவளால் நம்ப முடியவில்லை.. ஹய்யோ கடவுளே, இது அப்பாவிற்கு தெரிந்தால் என்னாகும்..?? அவள் வேலைக்குச் செல்கிறேன் என்று சொன்ன போதே, வீடு ரெண்டு பட்டது... அவ்வளவு போராட்டத்திற்குப் பிறகு சென்றாள்.. இப்போதோ, காதல் வேறு செய்கிறாள்.. இனி, என்னாகுமோ..?? என்று அவள் உள்ளுக்குள் பதறினாள்..

“அஞ்சலி... ஹே, அஞ்சலி...” என்று அவளை உலுக்கினாள் ஸ்வேதா..

“அக்கா.. நெஜமாலுமேவா..?? என்னால நம்ப முடியல... அப்பாவப் பத்தி தெரிஞ்சும் எப்படி கா...??” என்றாள் பதட்டத்துடன்...

“தெரியும் அஞ்சலி.. ஆனா, என்னால கண்டிப்பா அவர மிஸ் பண்ண முடியாது... அவர் என் மேல உயிரையே வைச்சிருக்கார்.. அவங்க பேமிலில எல்லாருக்குமே என்ன ரொம்பப் புடிச்சு போச்சு.. ரொம்ப நல்லவங்க... என்னை அவ்ளோ கேர் பண்றாங்க... அதுவும், ரோஹன் சான்சே இல்ல... அவ்ளோ கேரிங் என் மேல.. நம்ம மாமா மாதிரியே... ஏன், அவர விட ஒரு பர்சென்ட் மேலன்னே சொல்லலாம்.. இதெல்லாத்தையும் எப்படி விட முடியும் சொல்லு...??”

“அப்போ நீ முடிவே பண்ணிட்டியா கா...??” என்றாள் அஞ்சலி...

“எனக்கு வேற வழி தெரில அஞ்சலி.. அப்பாவ மட்டுமே யோசிச்சா, நான் லைப்ல ஹாப்பியாவே இருக்க முடியாது.. அவங்க அப்பாகிட்ட பேசறோம்னு சொன்னாங்க.. ஆனா, நான் தா இப்போதைக்கு வேணாம்னு சொல்லிட்டேன்...”

“கொஞ்சம் ரிஸ்க் தான் கா...”

“ஹும்ம்.. நல்ல லைப் கிடைக்கணும்னா கொஞ்சம் ரிஸ்க் எடுத்து தான் ஆகணும்... பாக்கலாம்.. மாமா கிட்ட தான் அடுத்து சொல்லணும்னு இருக்கேன்.. நம்பிக்கை இருக்கு...” என்றாள் தெளிவாக...

அக்கா நம்பிக்கையோடு அப்படி சொல்லும் போது அவளால் எதுவும் சொல்ல முடியவில்லை... அவள் முடிவே செய்து விட்டாள்... இனி, ஆண்டவன் செயல் என எண்ணினாள் அஞ்சலி... தனது செல்போனில் இருக்கும் ரோஹனின் போட்டோவைக் காட்டினாள் ஸ்வேதா.. ம்ம்ம்... தன் அக்காவின் அழகிற்க்கு இணையானவன் என்றே தோன்றியது அஞ்சலிக்கு...

“அக்கா... அவங்க, தமிழா..??” என்றாள் அஞ்சலி...

“இல்ல... அவங்க, ஹிந்தி... எனக்கும் ஹிந்தி தெரியும் தானே.. சோ, மொழி ஒரு பிரச்சினை இல்ல..” என்றாள் கூலாக... இது வேறா... என்று நினைத்தாள் அஞ்சலி...

ஆனால், தன் அக்காவின் தைரியத்தை என்ன சொல்வதென்று தெரியவில்லை அஞ்சலிக்கு.. பின்னே, தன்னிடம் கூறிய அடுத்த நாளே தன் காதல் விஷயத்தை அம்மாவிடம் கூறிவிட்டாள் ஸ்வேதா... சுட்டுப் போட்டலும் தனக்கு இந்த தைரியம் வராது என நினைத்தாள் அஞ்சலி...

பானுமதிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.. அவள் மௌனமாக இருப்பதைப் பார்த்து ஸ்வேதா பயந்து போய் அழ ஆரம்பித்து விட்டாள்..

இதைப் பார்த்த அத்தை மீனா, உடனே மாமாவிற்கு போன் செய்து வரச் சொன்னாள்.. மாமாவும் உடனே வந்தார்... விஷயத்தைப் புரிந்து கொண்டவர், முதலில் ஸ்வேதாவை சமாதனம் செய்தார்... பிறகு பானுமதியிடம் வந்தார்...

“அக்கா... நீ ஏன் எதுவுமே பேசாம இருக்க..? அதான், அவ பயந்து போய் அழ ஆரம்பிச்சுட்டா... அவ எந்த தப்பும் பண்ணலையே, டீசன்ட்டா ஒருத்தர லவ் பண்றேன்னு தானே சொல்லிருக்கா.. அவ பண்ணது தப்புன்னா, அப்போ நான் பண்ணது கூட தப்பு தான்...” என்றார் பானுமதியிடம் பொறுமையாக...

“நீயும் ஏன்டா இப்படிப் பேசற.. உங்க மாமாவப் பத்தி தெரிஞ்சும் இவ இப்படி பண்ணிட்டு வந்து நிக்கறான்னா இவளுக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்..?”

“அக்கா, மாமாவுக்காக பாத்தா எதுவுமே நம்ம விருப்பப்படி செய்ய முடியாது... அவளுக்கு புடிச்சிருக்குன்னு சொல்றா... நாம நல்லா விசாரிப்போம்.. அப்பறமா என்ன செய்யலாம்னு யோசிக்கலாம்... நீ எதுக்கும் பயப்படாதே... நான் எல்லாத்தையும் பாத்துக்கறேன்...” என்றார் மகேஷ்...

ஸ்வேதாவிடம் வந்தவர், ரோஹன் மற்றும் அவனது குடும்பத்தைப் பற்றி விசாரித்தார்.. ஸ்வேதா அவனைப் பற்றி செர்டிபிகேட் கொடுக்க, அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள அவளுடன் புனே செல்ல திட்டமிட்டு அந்த வாரத்திலேயே கிளம்பினர்... இரண்டு நாட்கள் கழித்து திரும்பியவரை குடும்பமே சூழ்ந்து கொண்டது... முக்கியமாக பானுமதி..

"டேய்.. என்னடா ஆச்சு?? அவங்கல்லாம் எப்படி??" என்று அக்கறையுடன் விசாரித்தாள் பானுமதி..

“அக்கா, நம்ம பயந்த மாதிரி எதுவும் இல்ல... நல்ல பையன் தான், அவங்க குடும்பம் ரொம்ப கேஷுவலா பழகுறாங்க... ரொம்ப சிம்பிள்லா இருக்காங்க... கண்டிப்பா நம்ம எல்லாருக்குமே ஏத்த மாதிரி தான் நம்ம பொண்ணு சூஸ் பண்ணிருக்கா... அவ அவங்களோட ஹாப்பியா இருந்தா வேறென்ன வேணும் சொல்லு...?? என்ன ஒரே ஒரு பிரச்சினை...” என்று இழுத்தார் மகேஷ்...

“என்னடா பிரச்சினை...??” என்று அவரைப் பார்த்தார் பானுமதி...

“ஹும்ம்... ஒண்ணும் இல்ல... அவங்க ஹிந்திகாரங்க... கொஞ்சம் இங்கிலீஷ் பேசறாங்க... எங்க எல்லாருக்கும் பிரச்சினை இல்ல... ஹிந்தி தெரியும்... உனக்கு தான் கொஞ்சம் ப்ராப்ளம்...” என்றார் கிண்டலாக...

இதைக் கேட்டதும் அனைவரும் சேர்ந்து சிரிக்க, பானுமதிக்கு மட்டும் திருப்தியாகவே இல்லை... மாறாக பயம் தான் அதிகரித்தது... இது மட்டும் அவருக்குத் தெரிந்தால் என்னகுமோ...!!! என்று உள்ளுக்குள் நடுங்கிக் கொண்டிருந்தாள்...
 
மிகவும் அருமையான பதிவு,
ஆதிரை டியர்

ஸ்வேதாவுக்கு ரொம்பவே தில்லுதான்
அப்பா அவ்வளவு கண்டிப்பும் கறாருமா இருக்கும் பொழுதே இவ்வளவு தைரியம்
இன்னும் அப்பா அன்பா அனுசரணையா இருந்திருந்தால்.....?
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
ஆதிரை டியர்

ஸ்வேதாவுக்கு ரொம்பவே தில்லுதான்
அப்பா அவ்வளவு கண்டிப்பும் கறாருமா இருக்கும் பொழுதே இவ்வளவு தைரியம்
இன்னும் அப்பா அன்பா அனுசரணையா இருந்திருந்தால்.....?
ஆமா மேம்.. ஸ்வேதா கேரக்டர் அப்படி தான்.. அஞ்சலிக்கு ஆப்போசிட்..
 
Top