Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஆதிரையின் கண்மணி நீ வரக் காத்திருந்தேன் - Episode 9

Advertisement

Aathirai

Well-known member
Member
(Episode-9)

அக்கா சென்று ஒரு வாரம் ஆகி விட்டது... இன்னும் அப்பா இங்கே வருவதாகத் தெரியவில்லை... தன் மேல் படிப்பு என்னாகுமோ என்ற பயம் அஞ்சலியைத் தூங்கவே விடவில்லை... ஏதோ ஒரு மேகசினை புரட்டியபடி இருந்தவள் காதில் அம்மா போனில் யாருடனோ பேசும் சப்தம் கேட்டது...

“ஆங்.. சரிங்க நான் லஞ்ச் அரேஞ்ச் பண்ணிடறேன்... பத்திரமா வாங்க...” என்று போனை வைத்த அம்மாவின் கைகள் நடுங்குவதை அஞ்சலி கவனித்தாள்.. தன் அம்மாவிடம் வந்தாள்..

“என்னாச்சு மா..?? யார் வராங்க...??” என்றாள் அஞ்சலி...

“உங்க அப்பா தான் பேசினார்.. கிளம்பிட்டாராம்.. பிளைட்ல வராரு.. இன்னும் டூ ஹவர்ஸ்ல இங்க வந்துடுவாரு...” என்றாள் பானுமதி பதட்டம் குறையாமல்...

“சரி மா... அப்பா தானே வராரு... அதுக்கேன் நீங்க இவ்ளோ பதட்டப்படறீங்க...?? கையெல்லாம் ஏன் இப்படி நடுங்குது...??”

“உங்க அப்பாவுக்கு ஸ்வேதா விஷயம் தெரிஞ்சுடுமோன்னு பயமா இருக்கு... உங்க அப்பா ஏதாவது கேட்டா, எங்க நானே உளறிருவேனோன்னு இருக்கு... லாஸ்ட் டைம் வந்தப்போ அவளோட கல்யாண விஷயமா நான் பேசினேன்.. அவரே பாக்கறேன்னு சொல்லியிருந்தார்.. அவர் ஏதாவது மாபிள்ளைய செலக்ட் பண்ணி வைச்சிருந்தா என்ன பண்றது சொல்லு...?? ஹய்யோ..!! எனக்கு மயக்கமே வருது அஞ்சலி... நான் என்ன செய்வேன்..??” என்று புலம்பினாள் பானுமதி...

“அம்மா... தயவு செய்து டென்ஷன் ஆகாதிங்க... நீங்க நெனைக்கற மாதிரி எதுவும் நடக்காது... மொதல்ல நீங்க வந்து உட்காருங்க... இருங்க தண்ணி எடுத்துட்டு வரேன்...” என்று சென்றாள் அஞ்சலி...

பானுமதியை தண்ணீர் குடிக்க வைத்து, சிறிது நேரம் ஓய்வெடுக்கச் சொன்னாள் அஞ்சலி... சமையலறையில் இருக்கும் அத்தைக்கு உதவியாக அவளும் சமைக்கச் சென்றாள்...

அப்போதைக்கு அம்மாவை சமாதானம் செய்தாலும், அவளுக்கும் உள்ளுக்குள் பயமாகத்தான் இருந்தது... அம்மா சொல்வது போல், அப்பாவிற்கு தெரிந்தால் என்னாகும் என்பது அவளுக்கும் தெரியும்... இதனால் தன் மேல்படிப்பும் பாதிக்கும் என்பதையும் நன்றாகவே அவள் உணர்ந்திருந்தாள்... இதையே யோசித்துக் கொண்டிருந்தவளின் மொபைல் போன் சிணுங்கியது...

அத்தையிடம் கூறி விட்டு வந்து போனை எடுத்தாள்... மது தான் போன் செய்திருந்தாள்... முகத்தில் ஒரு புன்னகையோடு போனை அட்டன்ட் செய்தாள்...

“ஹாய்... மது எப்படி இருக்க...?? என்ன சடன்னா இந்த டைம் கால் பண்ணிருக்க...??” என்றாள் அஞ்சலி...

“ஹே... அஞ்சலி நமக்கு ரிசல்ட் வந்துடுச்சு... நாம எல்லாருமே பாஸ்... இன்னொரு குட் நியூஸ் சொல்லட்டுமா...??” என்று புதிர் போட்டள் மது...

“ஹே... இதுவே பெரிய குட் நியூஸ் தான் மா... இதுக்கும் மேல என்ன சொல்லப் போற...”

“ஹும்ம்... யூ நோ அஞ்சலி நீ தான் காலேஜ் டாப்பர்... அட் த சேம், நீ யுனிவெர்சிட்டி தேர்ட் மா... இது எவ்ளோ பெரிய விஷயம் சொல்லு...?? ஓ காட்... யூ ஆர் கிரேட் அஞ்சலி... எப்போ எங்களுக்கெல்லாம் ட்ரீட் வைக்கப் போற... ம்ம்... சொல்லு....” என்றாள் மது உற்சாகம் போங்க...

ஆனால், அஞ்சலியோ எதிர் முனையில் அந்த சந்தோஷத்தை வெளிப்படுத்த முடியாமல் திணறிக்கொண்டிருந்தாள்... மதுவோ பேசிக்கொண்டே இருந்தாள்...

“ஹலோ... அஞ்சலி... நீ லைன்ல தான் இருக்கியா...?? ஹலோ...”

“ஆங்... மது... நான் லைன்ல தான் இருக்கேன்...” என்ற அஞ்சலியின் குரல் தழுதழுத்தது.... மது கண்டுபிடித்துவிட்டாள்...

“ஹே... அஞ்சலி... அழறியா... இது எவ்ளோ சந்தோஷமான விஷயம்... இப்போ போய் அழுதுட்டு இருக்கே... பீல் ஹாப்பி மா...”

அஞ்சலியால் எதுவும் பேச முடியவில்லை... கண்களில் இருந்து கண்ணீர் வந்து கொண்டே இருந்தது...

“மது... நான் உனக்கு அப்பறமா கால் பண்றேன்... ஓகே... பை...” என்று போனை வைத்து விட்டாள் அஞ்சலி...

இவள் பேசுவதை ஒருபுறம் கவனித்துக்கொண்டு தான் இருந்தார் மகேஷ்... அன்று அஞ்சலியின் அப்பா வருகையால், ஆபீசில் இருந்து சீக்கிரமே திரும்பியிருந்தார் அவர்... வந்ததும் வராததுமாக இவளை கவனித்தார்... அவள் அழுதுகொண்டு இருப்பதைப் பார்த்து அவளிடம் வந்தார்...

“அஞ்சலி மா... என்னாச்சு...? ஏன் அழுதுட்டு இருக்கே...??” என்றார்...

“ஒன்னும் இல்ல மாமா... ரிசல்ட் வந்துடுச்சு.. இப்போ தான் மது கூப்பிட்டு சொன்னா...” என்றாள் குரலில் உயிரே இல்லாமல்...

“ரிசல்ட் ஓகே தானே.... நீ அழறதப் பார்த்தா...!!” என்று குறும்புடன் இழுத்தார் மகேஷ்...

“மாமா... நான் பாஸ் தான்... அதுவும் இல்லாம, நான் தான் காலேஜ் டாப்பர்.. அப்பறம் யுனிவெர்சிட்டி தேர்ட்...” என்றாள்...

“அப்படிப் போடு அருவாள... என் பொண்ணா கொக்கா...?? வாவ்... கங்க்ராட்ஸ் மை டியர்...” என்று அவளை கை குலுக்கிப் பாராட்டினார்...

மாமா பாராட்டினாலும் அவள் மௌனமாகவே இருந்தாள்... அதற்குள் விஷயம் தெரிந்து அம்மாவும், அத்தையும் பாராட்டினார்கள்... அம்மா சந்தோஷத்தில் ஸ்வீட் செய்கிறேன் என்று சென்றாள்... ம்ஹும்ம்... அவள் முகத்தில் மட்டும் சந்தோஷமே இல்லை... அவள் கவலையைப் புரிந்து கொண்டவராக மகேஷ் பேசினார்....

“அஞ்சலி... நீ ஏன் இவ்ளோ சோகமா இருக்க...?? இப்போ தான் நீ ரொம்ப சந்தோஷமா இருக்கணும்... உன்னோட கவலை தான் என்ன...??”

“என்ன பிரயோஜனம் மாமா... என்னோட படிப்பு கேள்விக்குறியா இருக்கும் போது, நான் எப்படி சந்தோஷப்படறது...??” என்றாள் விரக்தியாக...

“ஹே அஞ்சலி மா... என்ன பேசற நீ...?? இப்போ யார் உன்ன படிக்க வேணாம்னு சொன்னா...?? நான் தான் அன்னைக்கே அப்பாகிட்ட இதப் பத்தி பேசறேன்னு சொன்னேன் இல்ல... அப்பறமும் ஏன் நீ வொர்ரி பண்ணிக்கிற...??”

“இல்ல மாமா... அக்காவோட விஷயம் தெரிஞ்சா, அப்பா கண்டிப்பா என்னோட ஹையர் ஸ்டடீஸ்க்கு ஒத்துக்கவே மாட்டார்... அதனால தான் என்னால சந்தோஷப்பட முடியல...” என்றாள் அழுதுகொண்டே...

“இப்போ யாரு ஸ்வேதாவோட விஷயத்தப் பத்தி பேசறா... இப்போதைக்கு அதப் பத்தி நான் மாமாகிட்ட பேசமாட்டேன்... எனக்கு இப்போ உன்னோட ஸ்டடீஸ் தான் முக்கியம்... சரியா...”

அஞ்சலி எதுவும் பேசாமல் மாமாவைப் பார்த்தாள்...

“என் தங்கமில்ல... அழாதே டா மா... இந்த சந்தோஷமான விஷயத்த கொண்டாடுவோம்... இப்போ நீ சமத்துப் பொண்ணா என்ன பண்றின்னா, அம்மா செய்யற ஸ்வீட் சாப்டுட்டு ஹாப்பியா இருப்பியாம்... மாமா இன்னைக்கு டின்னர்க்கு உன்ன மட்டும் ஸ்பெஷல்லா கூட்டிட்டு போவேனாம்... ஓகே வா...” என்று சிரித்தார்...

“இல்ல இல்ல மாமா... எல்லாரையுமே கூட்டிட்டு போலாம்...” என்றாள்...

“ம்ம்... ஓகே... ஆனா ஒரு கண்டிஷன், உங்க அப்பாவ மட்டும் கழட்டி விட்டறலாம்” என்று மகேஷ் கிண்டலாக சொன்னதும் தான் அஞ்சலிக்கு சிரிப்பு வந்தது...
 
மிகவும் அருமையான பதிவு,
ஆதிரை டியர்

அஞ்சலியும் பரவாயில்லை
நல்லா ஸ்கோர் பண்ணியிருக்கிறாள்
அப்பா வரப் போறாரு
வந்து என்ன சொல்லுவாரு?
அஞ்சலி மேலே படிக்க பர்மிஷன் கொடுப்பாரா?
 
Top