. திருவாரூர் தியாகராஜா கோயிலுக்குரிய ஆழித்தேர் ஆசியாவிலேயே இரண்டாவது உயரமான தேர் ஆகும். இது 1927 இல் தீக்கிரையானது. பின்னர் 1930 இல் புதுப்பித்து தேர் திருவிழா தொடங்கியது.. சைவ மரபில் பெரிய கோயில் எனவும் திரு மூலட்டானம் எனவும். பூங்கோயில் எனவும் அழைக்கப்படுகிறது.
சமயக்குரவர் நால்வராலும் தேவாரப்பாடல் பெற்ற இத்திருத்தலம்.நாயன்மார்களால் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகவும்.பஞ்ச பூதத்தலங்களில் பிருதிவி த் தலமாகவும் உள்ளது.
தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 87 ஆவது சிவத்தலமாகும்.
மனுநீதி சோழன்;
திருவாரூரை ஆண்ட மனுநீதி சோழன் பசுவிற்கு நீதி வழங்க தன் சொந்த மகனையே தேரை ஏற்றி கொன்றது.வரலாற்றில் நீதிக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அறியப்படுகிறது.
திருவாரூர் ஆழித்தேரில் தியாகராஜ சுவாமிஎழுந்தருள நான்கு மாடி வீதிகளிலும் தேர் ஆடி அசைந்து வரும்.அழகை காண கண் கோடி வேண்டும்.
இறைவன் திருப்பெயர்:
ஆன்மீக நாதர் புற்றிடங் கொண்டார். தியாகராஜர்
இறைவியார் திருப்பெயர்: அல்லியம்பூங் கோதை கமலாம்பிகை நீலோத்பலாம்பாள்.
தல மரம்: கமலாலயம் சங்கு தீர்த்தம்,கயா தீர்த்தம்,வாணி தீர்த்தம்
திருப்பாற்கடல் திருமால் இத்தல இறைவன் தியாகராசரைத் தமது மார்பில் வைத்துப் பூசித்தார்.திருமாலின் மூச்சினால் அவர் மார்பின் ஏற்ற இறக்கங்களில்இறைவர் நடனமாடினார்.பின் இத்தலத்தை இந்திரன் வரமாகும் பெற்று பூசித்தார்.சப்த விடங்கத்தலங்கள் என்று அழைக்கப்படுகிறது.
இத்தலத்தில் சாயரட்சை வழிப்பாட்டின் போது தேவேந்திரனே வந்து பெருமானை பூசிப்பதாக ஐதீகம்.
திருவாரூரில் பிறந்தாலே முக்தி
இன்று ஆழித்தேர் தியாகராஜாவை சேவித்த மகிழ்ச்சி
ஆழித்தேரைப்பற்றி உங்களுடன் பகிர்ந்து கொண்டு ஆன்மிகப் சிறப்பை உங்களுடன் உரையாடியதை போல் மகிழ்ச்சி நீங்களும் இதை படித்து நல்ல கருத்துகளை பகிரவும்.