Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இணையே என் உயிர்த்துணையே! -3-

Advertisement

Banupriya "பா.ரியா"

Well-known member
Member
அத்தியாயம் -3

ரகுநாத்- கயல்விழி' அந்த அழைப்பிதலில் இருந்த பெயரை பார்த்ததும் காதல் மீதே ஒரு நம்பிக்கை வந்தது மெல்லினிக்கு. கயல்விழியும் ரகுநாத்தும் ஒருவருக்கொருவர் உறவினர்கள். கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்தனர். எப்படியோ இந்த சமாச்சாரம் அவள் வீட்டுக்கு தெரியவந்த போது அதைப் பற்றி கயல்விழி ஏதும் அறிந்திருக்கவில்லை. அவசரமாக ஊருக்கு புறப்பட்டு வரும்படி அவள் தந்தை அழைத்ததும் என்ன ஏது என்று தெரியாமல் கிளம்பிச்சென்றாள். இரண்டு நாட்களின் பின் போனில் மெல்லினியை தொடர்பு கொண்டாள்.

"ஹலோ..." கயல்விழி.

"சொல்லுங்க மேடம். ஊருக்கு போனா என்னை மறந்திடுவியே..." என்று சீண்டினாள் மெல்லினி. மறுபுறம் கயலின் அழுகை தான் பதிலாய் வந்தது.

"ஹேய் கயல்! என்னாச்சு? எதுக்கு அழுகுற...? வீ..வீட்ல எல்லாரும் நல்..லா இருக்காங்க தானே...?" இந்தபுறம் மெல்லினிக்கு பதட்டமாய் இருந்தது.

"அதெல்லாம் ஒன்னும் இல்ல... நல்லா இருக்காங்க..."

"பின்ன எதுக்கு கயல் அழுகுற...?"

"அது.. அது.. எங்க லவ் வீட்டுக்கு தெரிஞ்சு பெரிய பிரச்சனை ஆச்சுடி....."

"அச்சச்சோ... எப்படி..?"

"நானும் ரகுவும் போன வாரம் பீச்சுக்கு போயிருந்தப்ப யாரோ பாத்துட்டு அப்பாகிட்ட சொல்லியிருக்காங்க. அதான் அப்பா உடனே புறப்பட்டு வர சொல்லியிருக்கார். இங்க வந்ததும் தான் எனக்கு விஷயமே தெரிஞ்சுச்சு..."

"ஓ.. மை காட்.. வீட்ல என்ன சொன்னாங்க...?"

"என்ன சொல்வாங்க. உன்னை நம்பி வேலைக்கு அனுப்பினா இதுதான் நீ செய்யுற காரியமானு அம்மா வீட்டையே ரெண்டாக்கிட்டாங்க. அப்பா என்கூட பேசவே மாட்டிக்கிறார். எனக்கு என்ன பண்றதுனே தெரியல... அதான் உனக்கு போன் பண்ணினேன்..."என்று அழுகையைத் தொடர்ந்தாள்.

"சரி சரி அழுகையை விடு. ரகுவோட வீட்ல என்ன நிலைமை?"

"அங்க என்னாச்சுனு தெரியல. ரகுவுக்கு நான் பேசவேயில்ல..."

"ஏன்டி..?"

"வீட்ல.. இத்தனை ப்ராப்ளம் இருக்கப்ப நான் ரகுவோட பேசுறது தெரிஞ்சா என்ன நினைப்பாங்க..."

"அது நீங்க லவ் பண்ணும் போது தெரியலயோ மேடம்..?" என்றாள் மெல்லினி.

"என்னடி.. நீயும் இப்படி பேசுற.."

"சரி சரி விடு. வீட்ல உன் போனையா பிடுங்கி வைச்சாங்க? இல்லை தானே.. பழைய படத்துல ஹுரோயினை ரூம்க்குள்ள தள்ளி அடைச்சி வச்சிருப்பாங்களே.. அந்த மாதிரி பேசுற.. போன் பண்ணி ரகுவுக்கு விஷயத்தை சொல்லு. மேற்கொண்டு என்ன செய்றதுனு முடிவெடுங்க... ஏதாச்சும் ப்ராப்ளம்னா எனக்கு கால் பண்ணு.. ஓகே. மனசை போட்டு குழப்பிக்காத...."

"சரிடி.. நான் பேசிட்டு சொல்றேன்..." என்று கட் செய்தவள் அடுத்து தன் வீட்டில் காதலுக்கு சம்மதம் தெரிவித்துவிட்டதாய் தான் கால் செய்தாள்.

இன்னும் இரண்டு வாரத்தில் கயல்விழிக்கு திருமணம். மேற்குறிப்பிட்ட சம்பவம் நடத்து அதற்குள் இரண்டு மாதங்கள் ஓடிவிட்டது. கயல்விழி தான் செய்துகொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு தன் சொந்த ஊரான நுவரெலியாவிற்கு சென்று சமையலை பழகிக்கொண்டிருந்தாள். ஒரு வாரம் முன்னதாகவே மெல்லினி அங்கு வந்துவிட வேண்டும் என்று அன்புக்கட்டளை வேறு இட்டுவிட்டு சென்றிருந்தாள் கயல்விழி. அதற்காக முன்னரே விடுப்பு எடுக்கவும் விண்ணப்பித்து இருந்தாள் மெல்லினி. அந்த நாளும் வந்தது.

மெல்லினி ஆபிஸ் ட்ரிப் தவிர வேறு எங்கும் சென்றதேயில்லை. அதற்கான அவசியமும் நேரவில்லை. அன்று அவள் உற்சாகமாய் இருந்தாள். கயல்விழியின் திருமணத்திற்காக நுவரெலியாவிற்கு சென்றுக்கொண்டிருந்தாள்.

ரயிலில் ஏறியதுமே மெல்லினிக்கு படபடப்பாக இருந்தது. இதுவரை அவள் சென்றிராத இடம். அதற்கான வாய்ப்பும் அவளுக்கு கிடைக்கவில்லை. அத்தோடு முதல்தடவையாக தனியேவும் செல்கிறாள். இருந்தும் ஒருபுறம் உற்சாகம் கரைகொண்டது. அவளது இயந்திர வாழ்கையில் இருந்து ஒரு மாற்றம் கிடைத்துள்ளது. இந்த பத்துநாள் விடுமுறையை சந்தோஷமாக கழிக்க வேண்டும் என்று முடிவுசெய்துக்கொண்டாள்.

பொடி மெனிக்கே ரயில் கண்டி மாநகரத்தை தாண்டும் வரையில் இருந்த நீண்ட நீண்ட சுரங்கங்களை ரசித்துக்கொண்டு வந்தவள், அதன் பின் மலைநாட்டின் அழகில் சொக்கிப்போனாள். பேராதனையை தாண்டிய பின்னர் இதுவரை தெரிந்துவந்த மலைகளையும் தாண்டி, இன்னும் அழகழகான மலைகள் தம் தலையைக் காட்டத்துவங்கின. அதன் அழகில் தம்மை மறந்து ரசித்துக்கொண்டு வந்தாள் மெல்லினி. ரயிலில் ஏராளமான வெளிநாட்டுப் பயணிகள் தம் சொந்த தேசத்தில் இருப்பது போல சகஜமாக பயணித்துக்கொண்டு வந்தது மெல்லினிக்கு ஆச்சர்யமாக இருந்தது. எத்தனை பிரச்சனைகள் இருப்பினும், இந்த நாட்டின் வளங்கள் அனைத்து தரப்பினரையும் இன,மத பேதமின்றி ஒன்றுசேர்ப்பது சந்தோஷம் தரக்கூடிய விடயம் தான். இலங்கை தேசம் தன் அழகாலும், வளங்களாலும் அனைவரையும் கவருவது கண்டு மெல்லினியும் சந்தோஷித்தாள். அதே நேரம் அரசியல் பிரச்சனைகளை மூளைக்கு புகுந்துவருவதை தவிர்த்து, இந்த நாட்டில் இருப்பதை நினைத்து பெருமைபடவும் செய்தாள்.

நீண்டுவந்த சுரங்கங்களின் ஊடே ரயில் பயணிக்கையில் கோரஸாக "ஓ..ஹோ...." என கத்தி தம் சந்தோஷங்களை வெளிப்படுத்திக்கொண்டு வந்த இளசுகள் அந்த பயணத்தை முழுவதுமாய் ரசித்துக்கொண்டு வந்தனர் என்பது தெளிவாய் தெரிந்தது. மெல்லினிக்கும் தொண்டை கிழிய கத்தவேண்டும் என்ற ஆசை எழுந்தது. ஆனால் அவளோ தனியே செல்கிறாள். அதை நினைத்து பெருமூச்சு விடத்தான் முடிந்தது.

'நமக்கும் ப்ரெண்ட்ஸ் இருந்தா ஜாலியா போகலாம் இல்ல....' என்று உள்ளுக்குள் எண்ணினாள். ரயில் வட்டவளையை தாண்டியதும் குளிர் தின்றெடுக்கத்தொடங்கியது. மெல்லினி தான் கையோடு கொண்டுவந்திருந்த தன் புது ஸ்வெட்டரை எடுத்து போட்டுக்கொண்டாள்.

பச்சைக்கம்பளம் போர்த்திய மலைகளின் நடுவே புகுந்துசென்ற ரயிலில் இருந்து மலைத்தேசத்தை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டே வரலாம் போல இருந்தது. நீண்ட பயணதின் பின் நானூஓயா ரயில்நிலையத்தில் மெல்லினி தன் சூட்கேஸுடன் இறங்கிக்கொண்டாள். அங்கு குளிர் அவளை வாட்டி எடுத்தது. இன்னுமொரு ஸ்வெட்டரை யாராவது தரமாட்டார்களா என ஏங்கிப்போனாள். அப்போதுதான் அவனைக் கண்டாள். கண்டதும் அவள் உடல் சில்லிட்டுப்போய் சிலையாக நின்றுவிட்டாள்.
 
Attachments

  • IMG_20220921_162237.jpg
    IMG_20220921_162237.jpg
    589.4 KB · Views: 2
Last edited:

Nirmala vandhachu ???
 
Top