Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இதயம் கேட்கும் காதல் 7.1

Advertisement

Riyaraj

Tamil Novel Writer
The Writers Crew
இதயம் கேட்கும் காதல்…
பகுதி
7(1)

ஹரிஹரன் வீட்டினர் வெளியேறிய அடுத்த நிமிடம், இதழினி ஒரே முடிவாய், "அப்பா, இந்த இடம் வேணாம் ப்பா" என உறுதியாய் சொல்லி விட, மாரியப்பனுக்கு தான் மிகவும் கஷ்டமாகிவிட்டது.

தன் தகுதியால் தான், மகளுக்கு அவர்கள் கேட்டதை செய்ய முடியாது, அவளுக்கென கிடைக்க வேண்டிய நல்ல வாழ்க்கை போய் விட்டதாக நினைத்து கலங்கி நின்றார்.

அதே கவலையோடு,
"நா, முதல்லையே, இத பத்தி நல்லா பேசிட்டு, அவங்கள வர சொல்லியிருக்கனும் இதழினிம்மா. இப்ப உனக்கு ஆசைய காட்டி இப்படி ஆகிடுச்சே" என்று காலை, மகளின் முகத்தில் திருமணம் பற்றிய பேச்சினால் வந்த வெக்கத்தை, பார்த்த கலக்கத்தில், பேசி தன் வருத்தத்தையும், இயலாமையையும் காட்டினார் மாரியப்பன்.

அவரின் ஆதங்கத்தை கேட்டிருந்த அபி,
"அப்பா விடுங்க. அவங்க அக்காவ பத்தி பேசினத கேட்டிங்க தானே. இப்பவே இப்படி பேசறவங்க . அவங்க வீட்டுக்கு போனதும், நாளைக்கு அக்காவ எப்படியெல்லாம் பேசுவாங்களோன்னு நம்ம பயந்துட்டே இருக்கணும்.

இவரு மட்டும் தான் அழகா? இல்ல நல்ல நிலையில இருக்காங்களா? இத விட நல்ல இடமா அக்காவுக்கு அமையும்" என்று சொல்ல, ஒருவாறு மனதை தேற்றியவர், இரவு உணவை முடித்துக்கொண்டு உறங்க சென்றார்.

இதழினிக்கு இந்த திருமணம் நிற்பதிலும், நடப்பதிலும் எந்த ஆர்வமும் இல்லை, துக்கமும் இல்லை என்பது போல இருக்க அதை பார்த்தும் பார்க்காதது போல இருந்த அபி, அனைவரும் உறங்க சென்ற பின் கிடைத்த தனிமையில்,

"ஏன்க்கா, இப்படி இருக்க?! பொண்ணு பார்க்க வர்றாங்க அப்படின்னு சொன்னப்பவும் சரி, இதோ இப்ப அது தட்டி போய் நிக்கும் போதும் சரி, அதுக்கான எந்த சந்தோஷமும், துக்கமும் உன்கிட்ட இல்லையேக்கா?! என்கிட்ட மறைக்காம உண்மைய சொல்லு, உன் மனசுல யாராச்சும் இருக்காங்களா?! அப்பா மனசு வருத்த படக்கூடாதுன்னோ, நாளைக்கி எங்க லைப்பை உன் காதல் கேள்விகுறியாக்கிடுமின்னோ மறைக்கிறியா?!" என இதழினியின் முகம் பார்த்து கேட்டவளுக்கு,

'தன் மீதான அக்கரையால் வந்த கேள்வி' என்பது இதழினிக்கு நன்கு புரிந்தே இருந்தாலும்,
அவளை முறைத்த படியே,

"என்ன பத்தி என்ன நினச்சிட்டு இருக்கீங்க எல்லாரும்?! மாத்தி மாத்தி இதையே கேட்கறீங்க. நா காதலிக்கனுமின்னு நினச்சிருந்தா, இப்ப இல்லடீ, நாலு வருஷத்துக்கு முன்னாடி, அந்த செழியன் ப்ரப்போஷ் செஞ்சப்பவே காதலிச்சிருக்கலாம்.

எனக்கு நம்ம வீட்டோட நிலைமை நல்லா தெரியும்.. போ, தேவையில்லாம யோச்சிச்சுட்டு இல்லாம படிக்கற வழிய பாரு" என்று கூறி, படுக்கையில் விழுந்தவளுக்கு தூக்கம் தான் பறிபோனது.

இதழினி சொல்லிய விசயத்தை கேட்ட அபிக்கோ, 'இதனை எப்படி எடுக்க?' என்பது சிறிது நேரம் வரை புரியவே இல்லை. அவளின் குழம்பிய முகம் பார்த்த வினி,

"ஏய், அபி என்னாச்சு? எதுக்கு இப்படி நிக்கற..?!"என்றிட, வினியிடம், இதழினி கோபத்தில் தன்னை மீறி சொன்ன விசயத்தை சொல்லிட,

"அபி, அப்ப அக்காகிட்ட அவங்க லவ் சொன்னப்ப ஏத்துக்க முடியாட்டியும், இப்ப வரை அதை மனசுல வச்சிட்டு இருக்காங்கன்னா... !" என இழுக்க,

"எனக்கும் அந்த டவுட் தான். இப்ப அக்கா இருக்கும் போது எதுவும் பேச வேணாம். நாளைக்கி அக்கா வேலைக்கு போனதும், அப்பாகிட்ட இத பத்தி சொல்லி, என்ன செய்யலாமின்னு பார்க்கலாம் வா.." என்றுவிட்டு, அவர்கள் அறைக்கு சென்றவர்கள், தங்கள் பாடத்தில் மூழ்கினர்.

இதழினிக்கோ, படுக்கையில் விழும்வரையிலும் தோன்றாத சிந்தனையாய்,

'இத்தனை வருடம் வராத செழியன் பற்றிய நினைவு இப்போது வந்தது ஏன்?! அவன் காதலை நிராகரித்து கிட்ட தட்ட 4 வருடம் கடந்தும், அந்த நினைவு என்னில் மறையாது போனது எப்படி?! எல்லாரும் நான் காதலித்து இருப்பேனோ என கேட்டதன் விளைவா? அல்லது, அவன் என் மனதில் இன்னும் இருக்கிறானா?!' என்று யோசித்தவள், தன் மனம் போகும் போக்கை எண்ணி அதிர்ந்து, பதட்டத்தோடு படுக்கையிலிருந்து துள்ளி எழுந்தாள்.

இதழினி எழுந்த வேகத்தில் படித்துக்கொண்டு இருந்த அபி, வினி இருவரும் இதழினியை பார்க்க, அவளோ வேர்த்து போய், எதோ போல் அமர்ந்திருக்க, என்னவானதோ என பதறி,

"அக்கா என்னாச்சுக்கா?! எதுக்கு இப்படி எழுந்த, பாரு எப்படி வேர்த்திருக்குன்னு?!" படி அவளிடம் நெருங்கி தண்ணீரை தந்தனர்.
அதற்குள் தன்னை நிலை படுத்திய இதழினி, தங்கைகளின் பதட்டமான விசாரணையில் அவர்கள் பயம் புரிய, அவர்களின் கரம் பற்றிய படியே, "ஒண்ணுமில்லடா, ஒரு கெட்ட கனவு. இப்ப ஓகே. நீங்க போய் படிங்க" என கூறி, மறுபடியும் போர்வையை தலை வரை போர்த்தி தூக்க முயன்றாள், 'எங்கே அவர்கள் தனது நிலையை கண்டு கொள்வார்களோ!' என்று அஞ்சியவளாய்..
இதழினியின் இப்படியான நடவடிக்கைகளை இதுவரை பார்த்திருக்காத தங்கைகள் இருவரும்,

'ஹரிஹரன் பெண் பார்க்க வந்து, அது சரியாக அமையாததால் வந்து குழப்பத்தாலா, அல்லது சிறிது நேரத்திற்கு முன் தன்னை மறந்து சொன்ன காதலால் வந்த தடுமாற்றமா, இதழினியின் இந்நிலைக்கு காரணம்..' என்பது பற்றி நாளை தந்தையுடன் பேசியே தீர்வது என்ற முடிவோடு அவர்கள் வேலையை செய்ய துவங்கினர்.

****************
தங்கள் வேலையிடத்தில், சந்துரு தனது தகுதியை கொண்டு செய்த தில்லுமுல்லு, அதன் முதலாளி மதிக்கு தெரியவர.. அவனை தன்னறைக்கு அழைத்தவர், எந்த முகாந்திரமும் இல்லாமல்,

"சந்துரு, நா எதுக்கு உன்னை கூப்பிட்டேன்னு நல்லாவே உனக்கு தெரியும். இத யார் சொல்லி நீ செஞ்சிப்பேன்னும் எனக்கும் தெரியும். எதனால ங்கற காரணத்த மட்டும் நீ சொல்லு" என அதிகாரமாய், தன் ஆளுமையான குரலில் கேட்டிட,

அவரின் முன், தன்னை இப்படி நிக்க வைத்தவனை மனதால் வசைபாடிய படியே, மெல்லிய குரலில், "அது வந்து, இதழினியை பெண் பார்க்க இன்னைக்கி மாப்பிள்ளை வீட்டுல இருந்து வர்றாங்கன்னு..

" என்று சொல்லியவன், அவரின் முகம் காட்டிய கோபத்தில், பாதியோடு தலை கவிழ,

"செய்யறது பூராவும் ப்ராடு வேல. இப்ப ஃபீல் பண்ற மாதிரி நடிக்காதடா. போ போய் அந்த களவாணிகிட்ட சொல்லு, இனி இங்க மறுபடியும் இப்படி ஏதாவது செய்ய நினைக்க கூடாதுன்னு" என கராராய் முடிக்க.

"ஓகே மேடம்" என்று குற்ற உணர்வுடன், தலையாட்டும் சந்துருவின் செயலில்,

"மேடம்…. ஹும்! இந்த மரியாதைக்கு ஒண்ணும் குறச்சல் இல்ல" என ஆரம்பித்தவர், சந்துருவின் கலங்கிய முகம் பார்த்து,

"சந்துரு, நீ அவனுக்காக தான் செஞ்ச, புரியுதுடா. ஆனா இது சரியா சொல்லு?" என்றிட,

'சரியில்லை' என்பது போல தலையை ஆட்டியவனை பார்த்து மெல்லிய புன்னகையை சிந்தியவர்,

"அவன நா பார்த்துக்கறேன். நீ இனி அவன் சொல்றான்னு இந்த மாதிரியான விசயத்தை செய்யாத சரியா?! இது ரொம்பவும் முறையில்லாதது சந்துரு. உனக்கு நா சொல்றது புரியுமின்னு நினைக்கிறேன். இத நா சரி செஞ்சுக்கறேன். வீணா நீ இதுல இன்வால்வ் ஆகாத.." என அன்பான குரலில் சொன்னதும்தான் அவனின் முகம் பழைய நிலைக்கு வந்தது.
 
யாருக்காக முறையில்லாத செயலை
சந்துரு செஞ்சான்?
செழியனுக்காகவா?
கார்மெண்ட்ஸ் கம்பெனி ஓனர் மதி செழியனின் அம்மாவா, ரியா டியர்?
 
Last edited:
முதலாளி மதி மேடம் கூப்பிட்டு
திட்டும் அளவுக்கு சந்துரு என்ன
செஞ்சான், ரியா டியர்?
அவளுக்கு வீட்டுக்கு வர சொல்லி சொன்ன போன் கால் பத்தி சொல்லல அதோட அடுத்த வந்த காலையும் அவளுக்கு கனெக்ட் பண்ண கூடாதுன்னு சொல்லி வச்சிருந்தானே டியர்... அது தப்பு தானே...
 
யாருக்காக முறையில்லாத செயலை சந்துரு செஞ்சான்?
செழியனுக்காகவா?
கார்மெண்ட்ஸ் கம்பெனி ஓனர் மதி செழியனின் அம்மாவா, ரியா டியர்?
அடுத்த யூடில சொல்லிடுறேன் டியர்
 
அவளுக்கு வீட்டுக்கு வர சொல்லி சொன்ன போன் கால் பத்தி சொல்லல அதோட அடுத்த வந்த காலையும் அவளுக்கு கனெக்ட் பண்ண கூடாதுன்னு சொல்லி வச்சிருந்தானே டியர்... அது தப்பு தானே...
ஆமாம்
கண்டிப்பாக அது தப்புதான்ப்பா
 
Top