Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இமை மீதூறும் துளிகளில் - 5

Advertisement

துமி

Well-known member
Member
அத்தியாயம் 5

கல்லூரியை விட்டு புறப்பட்ட சுபிக்ஷாவிற்கு அப்பொழுது தான் நினைவு வந்தது; நித்யா இங்க பத்திரிக்கை வைக்க வந்திருப்பதாக சொன்னாளே, அப்படியென்றால் நிச்சயம் அவளுக்கு தெரிந்தவர்கள் இந்த கல்லூரியில் தான் பணிபுரிகிறவர்களாக இருப்பார்கள். எப்படியாவது அவளிடம் பேசி சான்றிதழ்களை விரைவாக வாங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என நித்யா இருந்த மரத்தை நோக்கி மீண்டும் சென்றாள் சுபிக்ஷா.

"எனக்கு ஹெல்ப் பண்ணுறியா??" என‌ சுபிக்ஷா கேட்டதும், நித்யாவால் மறுக்க முடியவில்லை‌.

கல்லூரி படிக்கும் பொழுது இருவரும் சண்டைக்கோழிகள் போல் சிலிர்த்து திரிந்துள்ளார்கள். ஆனால் இப்பொழுது அவள் நேச கரம் நீட்டி வருகையில், முடியாது என மறுப்பதா என்று தோன்ற, "சரி நான் அவன்கிட்ட கேட்டு பாக்கறேன்..." என்றாள் நித்யா.

"நான் என்ன ஹெல்ப்னு சொல்லவே இல்லையே..." என சுபி கேட்க,

"இப்ப தானே செர்ட்டிபிகேட் வாங்க அலையறேன்னு சொன்ன… அதுக்குள்ள‌ மறந்திட்டியா??" என கேட்டாள் நித்யா.

"பரவால உனக்கும் கெஞ்சும் மூளை இருக்கு!" என்றவாறே அவளின் அருகில் வந்தாள்.

"மெக்குனா சும்மாவா??" என இல்லாத காலரை சுடிதாரில் இருப்பது போல பாவித்து தூக்கி விட்டாள் நித்யா.

"ஹல்லோ மேடம்… எங்க சி.எஸ்னால தான் இப்ப உலகமே ஓடிட்டு இருக்கு தெரியும்ல??" பதிலுக்கு அவளும் கேட்டாள்.

"அப்படி இந்த உலகம் நிக்காம ஓட மெக் படிச்சவங்க தான் தேவை! தெரியும்ல..." என கெத்தை விடாது சொன்னாள் நித்யா.

நித்யாவின் கூற்றில் இருந்த உண்மை உறைக்க, வெற்றிகரமாக பின் வாங்கி, வேறு பேச்சிற்கு தாவினாள் சுபி.

"இதுல எப்படி சாஞ்சுட்டு இருக்க? கீழ விழுந்திடுவோம்னு பயமாவே இல்லையா??" என கேட்டாள் சுபி.

"அதெல்லாம் இல்ல..." என‌ சாதாரணமாகவே சொன்னாள் நித்யா.

"ஓஹோ..." என கண்களில் ஆசை மிதக்க சொன்னாள் சுபி.

அவள் கண்களில் இருப்பதை படித்த நித்யா, "நீயும் மேல வர்றியா??" என கேட்டாள்.

எத்தனை முறை இந்த மரத்தையே ஏக்கம் சுமந்த விழிகளோடு பார்த்து சென்றிருப்பாள். ஒரு முறையேனும் இதில் ஏறி பார்த்துவிட வேண்டும் என்ற ஆசை இதுவரை அவளுக்கு நிறைவேறியதே இல்லை. அப்பொழுதெல்லாம் நித்யாவும் அவள் நண்பர்களும் இதில் அமர்ந்திருப்பதை கண்டால், உள்ளுக்குள் பொறாமையாக வரும். இப்படியாக நித்யாவை வெறுக்க தேவையான காரணங்களுள், இந்த மரமும் தானாய் வந்து சேர்ந்தது.

நித்யா குனிந்து ஒரு கையை கொடுக்க, இன்னொரு கையால் மரத்தை பிடித்துக் கொண்டு, ஒரு காலை தூக்கி வைத்து மேலே ஏறினாள் சுபி. கைப்பையை குறுக்காக மாட்டிக் கொண்டாள். நித்யாவை போலே தானும் ஒரு மரக்கிளையில் சற்றே சாய்ந்து அமர்ந்துக் கொண்டாள். உள்ளே சிறு பயம் துளிர்த்தாலும், உடன் உற்சாகம் ஊற்றாய் குமிழிட்டது.

லேசாக தென்றல் வீசிப் போக, உடல் சிலிர்த்தது சுபிக்கு. நித்யாவோ கண்களை மூடி அனுபவித்து கொண்டிருந்தாள்.

"காலேஜ் படிக்கும் போது எப்பவும் நீ இங்க தானே உக்காந்துருப்ப??" என சுபி கேட்க,

"இங்க இல்ல… அங்க..." என இன்னும் உயரமாய் இருந்த கிளையை காட்டினாள் நித்யா.

"அப்ப அங்க போய் உக்கார வேண்டியது தானே..." கேலியாக கேட்டாள் சுபி.

"போறதுக்கு பத்தி பிரச்சனை இல்ல… திடீர்னு யாராச்சும் வந்துட்டா மானம் போய்ருமேனு இருக்கு." என்றாள் நித்யா.

"இப்ப உக்காந்திருக்கறதை பாத்தா மட்டும் மானம் போகாதா??" சிரிப்புடனே கேட்டாள் சுபி.

"ஆமால்ல…" சிரித்துக் கொண்டே சொன்னாள் நித்யா.

நித்யாவின் முகத்தை பார்த்த சுபி, "ஓ மை காட்… ஓ மை காட்… அதை தான் பண்ண போறேன்னு சொல்லாத..." என்றாள் அவசரமாக.

"போறேன் இல்ல கண்மணி. போறோம்..." என்றாள் முகம் விகசிக்க.

நித்யா வேகமாய் மேலேற, அவளை பின்பற்றியே தட்டு தடுமாறி ஏறினாள் சுபி. இருவரும் ஆளுக்கு ஒரு கிளைகளில் ஏறி அமர்ந்தனர். தயக்கமெல்லாம் தயக்கமே இன்றி காணமல் போய் இருந்தது சுபியிடம்.

"என்ன திடீர்னு நீயா வந்து பேசுற? அன்னைக்கு கூட முறைச்சிட்டு தானே போன??" கேட்டே விட்டாள் நித்யா.

"சின்ன புள்ள மாதிரி கோபம் இருந்துச்சு. அப்பறம் வீட்டுக்கு போய் யோசிச்சதுல ஞானோதயம் வந்திருச்சு. அதான் பேச வந்தேன்..." என்று காற்றில் இருந்து குளுமையை அனுபவித்துக் கொண்டே சொன்னாள் சுபி.

"பார்ரா..." என கிண்டலாக கேட்ட நித்யா, "அன்னைக்கு உன் கூட வந்தவங்க தான் உன் ஹஸ்பென்டா?" என கேட்டாள். ஆமாம் என்பது போல் தலையசைத்தாள் சுபி.

"குழந்தைங்க இருக்கா?" என நித்யா கேட்க, "ஒரே ஒரு பொண்ணு, பேரு பூர்ணா." என்றாள் சுபி.

பூர்ணாவை பற்றி சொல்லும் பொழுது சுபியின் முகமெல்லாம் மத்தாப்பாய் இருந்தது. அதை பார்த்த நித்யாவிற்கு தானும் இப்படி ஒரு வாழ்க்கையை வாழ்வோமா என ஏக்கம் பிறந்தது.

சிறிது நேரம் காற்று மட்டுமே இவர்களிடையே பேசிச் செல்ல, "இறங்கிடலாமா??" என கேட்டாள் சுபி.

"சரி..." என்றாள் நித்யா.

"இறங்கறதுக்கு முன்னாடி ஒரு செல்ஃபி எடுத்துக்கலாம் வா..." என்றாள் சுபி.

"இங்க வேண்டாம். முன்னாடி உக்காந்திருந்த இடத்தில் போய் செல்ஃபி எடுத்துக்கலாம்…" என்றாள் நித்யா. அது தான் சரியென பட சுபியும் சம்மதம் தெரிவித்தாள்.

முன்பு போலவே நித்யா வேகமாய் இறங்கி விட, சுபிக்கு தான் இறங்க பயமாய் இருந்தது. ஏறும் பொழுது தெரியவில்லை. ஆனால் இறங்கும் பொழுது மிகவும் பயமாய் இருந்தது.

ஒரு காலை மட்டும் கீழே நீட்டுவதும், பின்பு மடக்கி கொள்ளுவதுமாகவே இருந்தாள் சுபி.

"இறங்கு சுபிக்ஷா..." என்றாள் நித்யா.

"பயமா இருக்கு..." என முகத்தில் கலவரம் படற சொன்னாள் சுபி. நித்யாவிற்கு சிரிப்பு வந்துவிட்டது.

"இரு நான் என் கையை தரேன்… அதை பிடிச்சிக்கிட்டு இறங்கு." என்றாள் நித்யா. சொன்னபடி நித்யா கைகொடுக்க, பயத்துடனே இறங்கினாள் சுபிக்ஷா.

"ஹே… பாத்து… விட்டா நாம இரண்டு பேரும் கீழ விழுந்திடுவோம்." என்றாள் நித்யா.

"ஹாங்.. ஹாங் கவனமா தான் இறங்கறேன்." என்றாள் சுபிக்ஷா.

இருவரும் பழையபடி தாழ்வாய் இருந்த கிளைக்கு வந்ததும் தான் சுபிக்கு பயமே குறைந்தது.

"ஆர் யூ ஓக்கே பேபி??" என ஒரு படத்தில் நாயகன் நாயகியிடம் கேட்பது போல் கேட்டு, கிண்டல் செய்தாள் நித்யா.

நித்யாவின் கேள்விக்கு முறைப்பை பரிசாக அளித்த சுபி, குறுக்காக மாட்டியிருந்த பைக்குள் கையை விட்டு போனை எடுத்தாள்.

"இங்க பாரு… போட்டோ எடுக்கலாம்.." என்றாள் சுபி.

சுபிக்கும் நித்யாவிற்கும் இடையே கொஞ்சம் இடைவெளி இருந்தது. முடிந்த அளவு மேனேஜ் செய்து புகைப்படம் எடுக்க முயன்றாள் சுபி.

"இங்க கொஞ்சம் திரும்பு… ஆங் அப்படி தான். வேற போஸ் குடு... இப்படி... இல்லை இப்படி..." என சொல்லி நித்யாவை வேறு வேறு போஸ் குடுக்க சொல்லி பல செல்ஃபிகளை க்ளிக்கினாள் சுபி.

"யம்மா தாயே… இன்னும் எத்தனை தான் எடுப்ப?" சலிப்படைந்து கேட்டாள் நித்யா.

"இன்னும் ஒன்னே ஒன்னு… இதான் லாஸ்ட்." என இருவரும் புன்னகைக்குமாறு ஒரு செல்ஃபியை கிளிக்கிக் கொண்டு இறங்கினர்.

"போட்டோவெல்லலாம் அனுப்பறேன் உன் வாட்சப் நம்பர் சொல்லு…" என‌ சுபி கேட்க, நித்யாவும் தன் நம்பரை தந்தாள்.

சுபி உடனே எடுத்த புகைப்படங்களை அவளுக்கு அனுப்பிவிட்டு, முகநூலில் பதிவிட ஆரம்பித்து விட்டாள். நித்யா இருவரும் எடுத்த புகைப்படத்தை பார்த்து கொண்டிருந்தாள்.

காலம் எவ்வளவு வேகமாக சுழல்கிறது. நிகழ்காலமாய் இருந்ததெல்லாம், நினைவுகளாய் மாறிப் போகும் விந்தை எதுவோ!

பார்க்கும் பொழுதெல்லாம் சண்டை கோழிகளாய் சிலிர்த்துக் கொண்டிருந்து விட்டு, சிறிது நேரத்தில் நெருங்கிய தோழிகள் போல் பழகும் விநோதத்தை எண்ணி சிரிப்பு வந்தது நித்யாவிற்கு. இருவரின் புகைப்படத்தை நீவிக் கொண்டே, சிரித்துக் கொண்டிருந்தாள் நித்யா.

"என்ன நீ பாட்டுக்கு சிரிச்சிட்டே இருக்க??" என சுபி கேட்க, "ஒன்னுமில்ல..." என்றாள் நித்யா.

"சரி உன் எப்ஃபி ஐடி சொல்லு..." என கேட்டாள் சுபி.

தனது ஐடியை நித்யா சொல்ல, உடனே அவளுக்கு சுபியிடம் இருந்து பிரெண்ட் ரெக்வஸ்ட் வந்தது. அவளும் உடனே அதை அக்செப்ட் செய்தாள். டிபியில் இருந்த குழந்தை படத்தை பார்த்து,

"இதான் உன் குழந்தையா??" என கேட்டாள் நித்யா.

"ஆமா… ஒன்றரை வயசாகுது." என்றாள் சுபி.

"ரொம்ப க்யூட்டா இருக்கா..." ரசித்து சொன்னாள் நித்யா.

"சரியான வாலு கூட.
. அவளால தான் என் செர்டிபிகேட்லாம் போச்சு." கவலை போல் சொன்னாலும் அதில் வருத்தம் எதுவுமில்லை.

"ஓய் இங்க என்ன பண்ணறிங்க??" என்ற ஒரு குரல் அவர்கள் இருவரையும் திரும்பி பார்க்க வைத்தது.

மோதல் எல்லாம் காதலில்
முடியுமென யார் சொன்னார்கள்
பல நட்புகளின் தொடக்கங்களும்

அதுவே தான்...!
 
Last edited:
Top