அத்தியாயம் 1
-------------
அய்யோ... அய்யோ.... இந்த அநியாயத்தை எங்கே போய் சொல்வேன்.... கையில் இருந்த கோலமாவு டப்பாவை வீசி எறிந்து விட்டு கத்தி கூப்பாடு போட்டார் சரோஜினி.
சரோஜினியின் பேரிரைச்சல் கேட்டு அரை தூக்கத்தில் லுங்கியை இறுக்கி கட்டியபடி வெளியே ஓடி வந்தார் பொன்னுசாமி.
"காலங்காத்தால இவ வேற..." தொண தொணத்து கொண்டே வாயிலுக்கு வந்தார்.
வந்தவர் உயர் மின்னழுத்த கம்பியை தொட்டாற்போல் ஷாக்காகி நின்றார்.
தாய் தகப்பன் கூப்பாட்டில் கொட்டாவி விட்டு கொண்டே தலையை சொரிந்து கொண்டு வந்தாள் அக்க்ஷயா.
வாசலில் நின்ற அண்ணனை கண்டு ஸ்தம்பித்து போனாள்.
எல்லோரும் திக் பிரம்மையுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர்.
கையில் குழந்தையை அணைத்து பிடித்துக் கொண்டு மாலையும் கழுத்துமாய் அஸ்வினை நெருங்கி நின்றாள் கீர்த்தனா.
தங்கத்தாலி மின்ன... மல்லிகை சரம் இரு தோளிலும் வழிய.... அழுந்த பதிந்திருக்கும் குங்குமம் ஜொலிக்க...புது மணமகளாய் அழகே வடிவாய் நின்றாள் கீர்த்தனா.
அடப்பாவி மாடும் கண்ணுமா ஓட்டிட்டு வந்திருக்க..! உனக்கு என்னடா தலை எழுத்து எவன் சாப்பிட்ட எச்சில் இலையில் சாப்பிட.... பெற்ற தாய் மனம் தகிக்க கத்தி கறினார் சரோஜினி.
அஸ்வின் உன்கிட்ட இதை நான் எதிர்பார்க்கலை என்று சுவரை வெறித்தார்
பொன்னுசாமி.
அப்பா ஸாரி... நிலைமை கை மீறி போயிடுச்சு...! வார்த்தைகளால் பேசி கண்களால் கெஞ்சினான் அஸ்வினாகாப்பட்டவன்.
என்னடா நிலைமை? நம்ம தகுதி என்ன? தராதரம் என்ன? புழுங்கி போனார் பொன்னுசாமி.
அப்பா ப்ளீஸ்... எதுவானாலும் வீட்ல போய் பேசிக்கலாமே மன்றாடினான்.
"என்னது வீட்டுக்குள்ள போய் பேசறதா? " பேயாட்டம் ஆடி விட்டார் சரோஜினி.
எவன் பெத்த பிள்ளையை எவன் வீட்டுக்கு கூட்டிட்டு வர....?
உனக்கு நாட்டுல வேற பொண்ணே கிடைக்கலைனா அறுத்து முண்டமா நின்னவளை கட்டிக்கிட்டு வந்திருக்க?
சரோஜினியின் தாண்டவத்தில் சுரீர் என்ற வலியில் கண்ணீரில் கரைந்தாள் கீர்த்தனா.
அம்மா ப்ளீஸ்... தாயை அடக்க முயன்றாள் அக்ஷயா.
என்னடி அம்மா "என் கொழுந்தன் குடியை கெடுத்திட்டு என் குடும்பத்தை கஞ்சி காய்ச்ச வந்துட்டியா....?" சரோஜினியின் வார்த்தைகள் அக்கினி பிழம்பாய் வந்து விழுந்தது.
கீர்த்தனாவிற்கு உயிரை சிதைத்தது சரோஜினி வீசிய வார்த்தை என்னும் அணுகுண்டு.
அம்மா போதும்.... அவ உன் குடியை கெடுக்க வரல...! இந்த குடும்பத்துல வாழ வந்திருக்கா... பல்லை கடித்தான் அஸ்வின்.
பாருடா நான் பெத்து பேறு வச்ச எம்புள்ளகாரன் என்ன பேச்சு பேசறான்....! ஓ.... புது பொண்டாட்டி மயக்கம்? த் தூ காரி துப்பினார் சரோஜினி.
அதிகாலை நேரம் என்பதால் தெருவே கூடி நின்று வேடிக்கை பார்த்தது.
கூசி போன கீர்த்தனா.... இயலாமையுடன் ஒரு பார்வை பார்த்தாள்...." நானா உன்னை வாழ்க்கை கேட்டேன்" என்பதாய் இருந்தது அவள் பார்வை..
அவன் பார்வையோ தயவு செய்து அமைதியாய் இரு! என்பதாய் இருந்தது.
அம்மா கீர்த்தனா பாவம்.... அவளுக்கும் அவ குழந்தைக்கும் ஒரு பாதுகாப்பு வேணும்.
அதுக்கு.... நீ தாலி கட்டி வேலி போட்டுட்டியாக்கும்! எள்ளலாய் வந்து விழுந்தது சரோஜினியின் வார்த்தை.
அப்பா நீங்களாவது...!
டேய் உங்கப்பன் படித்த பண்பட்ட வாத்தியார் தான் அதுக்காக என்னால் இந்த கருமத்தை எல்லாம் ஏத்துக்க முடியாது.... கத்தரித்தாற் போல் பதில் சொன்னார்.
அப்பா என்ன பேசறீங்க? வகுப்பறையில் மாணவர்களுக்கு வாழ்க்கையை போதிக்கிற நீங்க இப்படி பேசறது நல்லா இல்லை.
ஆமான்டா நான் பேசறது நல்லா இல்லை. நீ நடந்துகிட்டது ரொம்ப கௌரவமா இருக்கா?
பேசறதுக்கு நல்லா இருக்கிறதெல்லாம் வாழ்க்கைக்கு ஒத்து வராது!கொதித்து போனவருக்கு நாடி நரம்புகள் ஆடி அடங்கியது.
அப்பா இவ யாரோ இல்லை...! உங்க தம்பிக்கு மருமகளா இருந்தவ... ஆவேசமானான் அஸ்வின்.
நீயே சொல்லிட்ட இல்லை என் தம்பிக்கு மருமகளா இருந்தவன்னு.... இன்னொருத்தன் மருமகள் எனக்கு எப்படி மருமகளாக முடியும்?
அப்பா இப்படி எல்லாம் பேசாதீங்க! எல்லோரும் வேடிக்கை பாற்க்கிறாங்க.
நீ தான் சந்தி சிரிக்க வச்சிட்டியே.... ரௌத்திரமாய் பார்த்தார் சரோஜினி.
ப்ளீஸ் நீங்க உள்ள போங்க...! நான் கிளம்புறேன்... அஸ்வின் கையில் இருந்த தன் ஒன்பது மாத குழந்தை தியானேஷை பிடுங்கி கொண்டாள் கீர்த்தனா.
அட... அட.. வாடி என் வக்கத்த சிறுக்கி மவளே... என்னம்மா ஆக்டிங் கொடுக்கற!
மலையாட்டம் இருந்த எம்புள்ளய சாய்சிப்புட்ட இறுமாப்பா?
கீர்த்தனா உதடு கடித்து தன்னை நிலை படுத்தி கொண்டாள்.
யார் யாரை சாய்த்தது? நான் என்னவோ வாழ்க்கை பிச்சை கேட்டு மடியேந்தி நின்றது போல் பேசறாங்களே... அவள் அங்கம் குமுறியது.
தூண்டில் புழுவாய் துடித்தவளுக்கு இக்கணமே உயிர் பிரிந்தால் தேவலாம் என்பதாய் இருந்தது.
அம்மா இப்போ என்ன தான் சொல்றீங்க? முடிவோடு கேட்டான் அஸ்வின்.
நீ மட்டும் வரதுன்னா உள்ள வா.... எங்க புள்ளையா!
அவ கூட தான் வருவேன்னா நாங்க செத்தா கூட நீ வரக்கூடாது.... தீர்மானமாக சொல்லி விட்டார் சரோஜினி.
பரிதவிப்போடு அப்பாவை பார்த்தான்.... பொன்னுசாமி எதுவும் செய்வதற்கில்லை என்பது போல் தலை தாழ்த்தி கொண்டார்.
ம்ம்மா அண்ணன் பாவம்மா உள்ளே கூப்பிடும்மா! இதுவரை மௌனமாய் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த அக்க்ஷயா வாய் திறந்தாள்.
அடி செருப்பால... அண்ணனா? அவனா? உன் நினைப்பு இருந்தா இப்படியாபட்ட காரியத்தை பண்ணியிருப்பானா?
இவன் பண்ணின மானங்கெட்ட காரியத்தால உனக்கு ஒருத்தன் கிடைப்பானான்னு நான் துடிச்சிக்கிட்டு இருக்கேன். போடி உள்ளே... மகளை
சீற்றத்துடன் விரட்டினார் சரோஜினி.
"அப்பா உங்க புள்ள நல்லது தான் பண்ணியிருக்கேன்...." நீங்க தலை குனியற மாதிரி எதுவும் பண்ணிடல....!
ஆயிரம் கோயில் கட்டி கும்பாபிஷேகம் பண்றதை விட ஒரு கைம்பெண்ணுக்கு வாழ்க்கை கொடுப்பது புண்ணியம்னு நீங்களே எனக்கு சொல்லி கொடுத்திருக்கீங்க.
யாருக்காகவும் நான் கீர்த்தனாவையும் குழந்தையையும் கைவிடறதா இல்லை.
நாங்க கிளம்புறோம்... குழந்தை தியானேஷை பிடுங்கி மார்பில் போட்டு கொண்டு கீர்த்தனா தோள் பற்றி அழைத்து கொண்டு போனான் அஸ்வின்.
அவன் கார் ஏறி போன பிறகு.... தலையில் அடித்து கொண்டு வாசலில் சரிந்தமர்ந்து பெருங்குரல் எடுத்து அழத் தொடங்கினார் சரோஜினி.
என் பெத்த வயிறு பத்தி எரியுதே... ஏதாவது ஏப்ப சாப்பையா கட்டிக்கிட்டு வந்திருந்தா கூட பரவாயில்லையே....
"கை குழந்தையை வச்சிக்கிட்டு மூலியா நிற்கிறவளை கட்டிகிட்டு வந்து நிக்கிறானே.... " ஏ பாழும் தெய்வமே உனக்கு கண் இல்லையா? எம் பெத்த மனம் இதை எப்படி ஏத்துக்கும்.... அழுது துடித்து அரண்டு புரண்டார் சரோஜினி.
தன் மனத்தில் உள்ளதை தான் மனைவி வாய்விட்டு அழுகிறார் என்று சிலையாய் நின்றார் பொன்னுசாமி.
-------தொடரும் ----

Attachments
Last edited: