Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன்னில் சிக்க வைக்கிற-21

Advertisement

lakshu

Well-known member
Member
உன்னில் சிக்க வைக்கிற-21

கார்மெட்ஸ் ஆரம்பிக்க இரண்டாவது தளத்தை பார்த்தார்கள்.. ரவி அண்ணா எத்தனை மிஷின் போடலாம்..

இடம் பெரிசா தான் இருக்கு இப்போ இருபது மிஷின் போடலாம்... மிஷன் கொட்டேஷன் வாங்கிட்டியா..

ம்ம்.. ஆச்சிண்ணா.. ஆனா ஆட்கள்தான் சேர்க்கனும்..

எப்படி சேர்க்கலாம் விளம்பரம் கொடுக்கலாமா.. இல்ல கன்சல்டன்ஸி போகலாமா அசோக் ஐடியா தர..

வேணாம் இனியா.. நான் வேலை செஞ்ச இடத்தில கார்மெட்ஸ் மூடிட்டாங்க... அங்க வேலை செஞ்சவங்க எனக்கு தெரியும்.. அவங்கிட்ட சொல்லிருக்கேன்... டிசைனர் இரண்டு பேர், ஹெட் டைலர் ஒருவர் அவங்க பேரு சுமதி எங்கவீட்டு பக்கத்து வீடுதான்... தற்போது சூப்பர்வைசரா நானும் அசோக்கும் மாத்தி மாத்தி பார்த்துக்கலாம்..

சரியண்ணா மிஷினை நாளைக்கு இறக்கிடலாம்.. அந்த சுமதியக்காவ வர சொல்லுங்க... பர்னிசர் வாங்கனும்... திருப்பூர் இல்ல சூரத் போய் பேப்ரிக் கிளாத் வாங்கனும் வர வெள்ளிக்கிழமை போனோம் அண்ணா ரெடியாயிருங்க...

இனியா ஜோசியர் நாள் குறித்து தந்தார்... வர இருபதாம் தேதி நாள் நல்லாயிருக்காம்.. அன்னைக்கு பூஜை போட்டு ஆரம்பிக்கலாம் சொன்னார்... இன்னும் நமக்கு பதினெந்து நாளிருக்கு... கம்பெனிக்கு பேர் வைக்கனும்டா..-அசோக்.

ம்ம்..யோசிக்கலாம்..

அங்கே விழுப்புரத்தில், பழனிவேல் தன் மகன் சந்தோஷூக்காக கடையை பிடித்து டைல்ஸ் ஆடர் கொடுக்க ஆரம்பித்தார்... சந்தோஷின் பங்கு ஜஸ்ட் என்பதுபோல் இருந்தது. பணத்திற்கும் அவன் அலையவில்லை பழனிவேலே கொடுத்துவிட்டார்... இரண்டுநாளில் பூஜையும் போட்டனர்.. அதில் நிர்மலா மற்றும் அந்த வீட்டின் ஆண்மகன்கள் கலந்து கொண்டார்கள்...

அசோக்கின் போன் ரிங்காக ,போனை எடுத்துப்பார்த்தான்.. மச்சான் மோனல் போன்டா...

ம்ம்..ஹோட்டல் ரூஃப் கார்டனுக்கு வர சொல்லு... இனியன் அசோக்கிடம் சொல்ல..

போனை உயிர்பித்தான் அசோக்..ஹலோ மேடம்..

ஹலோ உங்க பாஸ் இல்ல .. நான் இங்கதான் சோழால இருக்கேன்...

ஓ மோனல் மேடம் பாஸ் பெரிய டீல் பேசிட்டு இருக்காரு.. நாங்க வெளியில இருக்கோம்...

ஒரு நிமிஷம் நான் பாஸ்கிட்டே பேசிட்டு போன் செய்யறேன் ....சிறிது நேரம் கழித்து திரும்ப மோனலுக்கு போன் செய்து ,ஒரு பைவ் ஓ கிளாக் ரூஃப் கார்டன் வாங்க.. அங்க மீட் பண்ணலாம் பாஸ் சொன்னாரு என்றான்...

மச்சான் சீக்கிரம் வேலையை முடிச்சிட்டு வாடா... அந்த பொண்ணு வெயிட் பண்ணும்...

இருவரும் ஹோட்டலுக்கு கிளம்பினர்... மோனல் வருவதற்கு முன்னே அங்கியிருந்தார்கள்... பிளாக் அன்ட் ஒயிட் கலந்த வொர்க் சாரி, கையில்லாத பிளவுஸ் அணிந்திருந்தாள்... ப்ரி ஹேர் விட்டு லோ ஹீப்ல சாரி கட்டி நடந்து வர..

டேய் அசோக்கு அங்கே பாருடா எப்படி டிரஸ் செஞ்சிட்டு வந்திருக்காக சேலை இடுப்புல நிற்குமா , விழுந்துடுமா...

ஏன்டா போய் பிடிச்சிக்கோ விழாதமாறி... ரொம்ப ஏத்தம்டா உனக்கு என் தேனு பாப்பா பார்க்கட்டும்.. மவனே தலையில ஒரு முடி இருக்காதுடி..

கூலர்ஸ் மாட்டிய படி இனியன் பொறாமைடா உனக்கு... மோனல் அவர்கள் அருகில் வர... ஹாய் தேவ் ஸார்.. கையை நீட்டினாள்..

ஹலோ ஸ்வீட்டி அப்படியே ஏஞ்சலா ஜோலிக்கிறீங்க.. வாட் ஏ பியூட்டி... என்று கையை கொடுத்தான் இனியன்...

தப்பா நினைக்காதீங்க அசோக், நான் பாஸ் பக்கத்தில உட்காரவா..நீங்க எதிர் சீட்ல மோனல் கையை காண்பிக்க..

ம்ம் புரியுது.. இனியனை முறைத்துக் கொண்டே அசோக் எதிர் சேரில் உட்கார்ந்தான்...

மூவரும் கோல்ட் காபியை அருந்தியபடி..

நானே உங்களை மீட் செய்யனும் நினைச்சேன் மோனல், பட் பிஸினஸ் வேலை பிஸியாயிட்டேன்...

ஹோ.. அப்படியா , எப்போ எங்க வீட்டு லன்சுக்கு வறீங்க, எங்க மம்மி நாளைக்கு ஊருக்கு போறாங்க.... வறீங்களா..

ய்யா.. ஒரு குட் நீயூஸ், உங்கள எங்க கம்பெனி மாடலா செலக்ட் செஞ்சிருக்கோம் லக்கி பர்ஸன் நீங்க மோனல்...

ஓ மை டார்லிங்... தேங்க் யூ என்று இனியனை கட்டிபிடித்து கண்ணத்தில் முத்தமிட்டாள்.. அந்த நிமிடம் இனியன் தன் பற்கள் தெரிய சிரிக்க... கையில் பர்சேஸ் செய்த பையோடு ஹோட்டலுக்குள் நுழைந்த தேனு இந்த காட்சியை பார்த்து அப்படியே நின்றாள்..

தேனு வந்ததை பார்த்த இனியன் , மோனலை விலகியபடி... சாரி அவசர மீட்டிங்.. உடனே போனோம் அசோக் பில் செட்டில் பண்ணிட்டு வா..

ஒன்று புரியாத அசோக் , எதுக்கு அவசர படுறான்... ஏன் இப்படி முழிக்கிறான்... இனியன் கண்கள் பார்க்கும் இடத்தை நோக்கி திரும்பி பார்த்து அதிர்ந்தான்.. தேனுவா வந்திருக்கா...

என்னாச்சு தேனு , பின்னாடி வந்த சமீரா கேட்க... தன் கண்கள் கலங்க ஒண்ணுமில்ல சமீ... நாம போலாம்.. இருவரும் வெளியேற..

ஏய் இப்போதானே வந்தோம்... சாப்பிடக் கூடயில்லை தேனு..

கட கடவென கீழே இறங்கினான்.. அய்யோ பார்த்துட்டாளே.. இவ வர நேரம் பார்த்தா இந்த எரும கிஸ் செய்யனும், முடிஞ்சிடுச்சு என் கதை.. எப்போ ஊரிலிருந்து வந்தா...

கார் பார்கிங்கில் ஓடிவந்து தேனுவின் கையை பிடித்துவிட்டான்... தேனுமா நான் ஒண்ணும் தப்பு பண்ணல...

அவனின் முகத்தை உற்று பார்த்தாள்... மேலும் தலை முதல் பாதம் வரை அவனுடைய வேஷத்தை பார்த்துவிட்டு.. ச்சே ..கையை விடு..

இனியன் வார்த்தைகள் தந்தியடிக்க.. ஏய் கோபப்படாத நான் சொல்லுறதை கேளும்மா...

கையை விடு..

மாட்டேன்டி..

தனது இடது கையால் பளாருன்னு அவன் கண்ணத்தில் பதிந்தாள்...

தேனுமா... இனியனின் கண்கள் அவளிடம் மன்றாட ... நான் தப்பு செய்யலடி அவன் இதயம் கதறியது,,.

விடுடா கையை... தேனு கத்தி சொல்லவும்...

அழுத்தி பிடித்த அவள் கையை விட்டான்...

வா சமீ போலாம்... அப்படியே சுவற்றில் சாய்ந்து நின்றான்.

மச்சான்.. டேய் புரிஞ்சிப்பா ஃபீல் பண்ணாதடா.. இனியனை தோள் சாய்த்து கொண்டான் அவனுடைய ஆருயிர் நன்பன்...

இனியா நம்பிக்கையை கைவிடாதே தேனு உன்னை மீறி போக மாட்டா... நாளைக்கு ஒரு நாள் மட்டும்தான் மோனல் வீட்டுக்கு மதியம் போறோம் எல்லாத்தையும் தூக்கிட்டு வந்துடுவோம்...

மூன்றாவது நாள் சமீ இனியனுக்கு போனில் தகவல் தெரிவிக்க , அண்ணா இந்த மோனல் தேனுவ பார்க்க அவ வீட்டுக்கு வந்திருக்கா.. தனியா பேசனும் சொல்லிருக்கா மேல மாடிக்கு வந்திருக்கோம்... பேசிட்டு இருங்காங்க, சீக்கிரம் வாங்கண்ணா...

டேய் என்னடா செய்ய போறே... தேனுகிட்ட என்ன சொல்ல போறாளோ சீக்கிரம் போ மச்சான்னு அசோக் இனியனை விரட்ட..

பயப்படாதடா விட்டு கொடுக்க மாட்டா... எல்லா சண்டையும் எங்கிட்டதான் போடுவா... முகத்தை தொங்கபோட்டுக்கொண்டே மாடி படிகட்டில் ஏறினான்... டேய் இனியா இங்கேயே நில்லு டேங்க் பின்னாடிதான் பேசறாங்க...

உன் மாமன் அதான் இனியனும் நானும் ரொம்ப டிப்பா லவ் செய்யறோம்... நான் இல்லாத ஒரு நிமிஷம் இருக்கமாட்டாரு... நீ எங்க வாழ்க்கையில குறுக்க வராதே... இனியன் ஏமாற்றியதை தாங்கமுடியாமல் அவனை பற்றி விசாரித்து .... பிரச்சனை கொடுக்கவே இப்படி தேனுவிடம் பேச ஆரம்பித்தாள் மோனல்..

தன் செல்லில் உள்ள போட்டோஸை காட்டி இங்க பாரு என் ஆளு இவள் பக்கத்தில் உட்கார்ந்த போட்டோவை காண்பித்தாள்...

அப்படியா மோனல் , எங்கிட்டயிருக்க சீன பார்க்கிறீயா தன் செல்லில் இருப்பதை காட்டினாள், இது பார்வதி மாமாகூட டேட்டிங் போனபோது பைக்கில எப்படி போறாங்க பார்த்தியா... அடுத்தது பாரு ஸ்வேதா தேர்டு இயர் பொண்ணு பீச்சில...அப்பறம் இந்த போட்டோ பயங்கற ஷாக் கொடுக்கும் ,நிச்சிய தார்த்தம் செய்யல அது முன்னாடி பொண்ணு அபர்னாவோட நின்னு போட்டோ.. அடுத்து நீ போல... இந்த மாதிரி எங்க மாமாவோட கிரஷ் போயிட்டே இருக்கும்... நீ என்னவோ புதுசா பயமுறுத்திற...கிளம்பு காத்து வரட்டும்...

மோனல் அதிர்ச்சியா அப்படியே நின்றாள்.. என்னடா இது நமக்கே பேக் பயர் தரா...

இன்னொரு முறை என்னை தேடி வராதே... என் மாமனை பற்றி எனக்கு தெரியும்... நீ புதுசா புக்கு போடாதே...

மோனல் தோல்வியோட கிளம்ப... எப்படி என் மானத்தை வாங்குறா நான் அப்படியே பொண்ணுங்க கூடே சுத்தன மாதிரி ,மனதில் நினைத்துக்கொண்டு...

தேனுவின் முன்னாடி வந்தான்.. அவ சொன்னதை நீ நம்பல ரொம்ப தாங்க்ஸ்டி.

உன்னை யாரிடமும் விட்டுக்கொடுத்து பேச முடியிலையே.. இந்த பாழாபோன மனசு முழுக்க நீதானே இருக்கே..என்று தன் நெஞ்சில் வேகமாக அடித்துக்கொண்டாள்..

ஏய்.. வலிக்க போகுதுடி..கையை பிடித்துக்கொண்டான்...

உனக்கு நான்தானே பிரச்சனை மாமா... நான் செத்துப்போயிடுறேன்.. என் பொனத்துக்கு முன்னாடி எவக்கூட வேணா ஜோடி போட்டு ஆடு...

அவள் வாயை கையால் மூடினான்...அப்படி சொல்லாதடி என் தேனு நூறு வயசு மேல வாழனும்... என் ஆயுளும் சேர்த்து நீ உயிர் வாழனும்... நாலு அடிவேணா அடிச்சிக்கோ.. நான் நிற்கிறேன்... உன் சின்ன இதயம்தான்டி என் உலகம்... சும்மா வாய்தான்டி பேசுவேன் யாரையும் மனசால கூட அப்படி நினைச்ச தில்லடி... கொஞ்சம் நான் சொல்லுறதை கேளேன்..

எதுவும் நீ சொல்ல வேண்டாம் மாமா... உன்கிட்ட போராடி போராடி நான் தோத்து போயிட்டேன்... வாழ்க்கையே வெறுத்து போயிட்டேன் மாமா... பத்து நாளா உன்னை பார்க்கலையே ஓடிவந்தேனே... நல்லா மனசு நிறைச்சு பார்த்தேன் மாமா.. மறக்கமுடியில கண்களில் கண்ணீர் வழிய பேசினாள்..

சந்தோஷ் கூட பேசனா மட்டும் உனக்கு கோவமா வரும்.. சின்ன வயசிலேயிருந்து அவன்கூட வளர்ந்தவ... அதுவே உனக்கு பிடிக்காதே...

தப்பு தான்டி.. இனிமே இப்படி செய்யமாட்டேன் தேனும்மா.. என்கிட்ட பேசு அவள் கையை பிடித்து கெஞ்சினான்.. கையை உதறிவிட்டு கீழே இறங்கினாள்...

நான்கு மணிநேரம் பால்கணியில் இருந்த அவளை பார்த்தபடியே நின்றிருந்தான்... அவனை கண்டுகொள்ளாமல் புத்தகத்தை படித்துவிட்டு உள்ளே சென்றாள் தேனு...

இரவு பத்துமணிக்கு மேல் , இப்படியே இருந்தா வேலைக்காகாது தேனுவை பார்த்தே ஆகுனும் என்று மாடிவழியாக அவள் வீட்டுக்குள் நுழைந்தான் இனியன்... வெளியே படித்திருந்த சிவாவை பார்த்து உங்க அக்காகிட்ட பேசனும் எங்கடாயிருக்கா..

எதுக்கு பால்கனி பக்கமா வந்தீங்க... கையில் என்ன வச்சிருக்க மாமா..

ம்ம் அது என் டாலிக்கு டையிரி மில்க் சாக்லெட்...

அப்ப எனக்கில்லையா... ம்கும்..

அப்ப நான் அலோ பண்ண மாட்டேன்... பாட்டிய எழுப்பி விடுவேன்..

டேய் சிவா ரொம்ப சண்டைடா... தவிக்க விடுறா மச்சான் என்னை நினைச்சிட்டு அழுதுட்டு இருப்பா... விடுடா.. இதே மோகனா இருந்தா மாமாக்கு எப்படி ஹெல்ப் செய்வான் தெரியுமா.. உனக்கு பாசமேயில்ல மாமாமேல...

நீங்க இந்த கெட் டப் சேன்ஞ் செய்ய சொல்லவே நினைச்சேன்... என்ன பிராடு பண்ணி அக்காகிட்ட மாட்டிக்கிட்டீங்க..

இவன்கிட்ட பேசினா டைமாயிடும்... தன் கையிலிருந்த சாக்லெட்டை சிவாவுக்கு கொடுத்து ,வச்சிக்கோ... அந்த ரூமுல இருக்காளா...

---சிக்க வைக்கிறாள்
 
Nirmala vandhachu ???
 
Top