Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன்னில் சிக்க வைக்கிற II -22

Advertisement

lakshu

Well-known member
Member
உன்னில் சிக்க வைக்கிற II -22

பின்னாடி ப்ளாட்டில் தேனுதான் வந்திருக்கிறாள் , இது கனவல்ல, நிஜம் என்று உணர்ந்துக்கொண்டு, தன் பால்கனி கதவை தாளிட்டுக்கொண்டான்.. கதவில் சாய்ந்தபடியே , ஒரம்சென்று ஜன்னலின் இடுக்கில் தன் மகனை பார்த்தான்...

நான் இல்லாம கரைச்சிட்டான், மூனுமாசம் ஆயிடுச்சு அவனின் மகனை பார்த்து, கண்கலங்கினான் இனியன்.. பப்பூ அவன் உதடுகள் முனங்கின. எதுக்கு இங்க மறுபடியும் வந்திருக்கா... மனம் கோபத்தில் கொதித்தது.. உடனே பெட்டில் மேலிருந்த செல்லை உயிர்பித்து அசோக்கை அழைத்தான்..

ரிங் போய்க்கொண்டிருந்தது அசோக் எடுக்கவில்லை..

இந்தநேரம் பார்த்து போனை எடுக்கமாட்றான்.. தன் அறையை திறந்து வேகமாக ஹாலுக்கு வந்தான்.. கிச்சனில் தன் மாமனுக்க காபியை கலந்துக்கொண்டிருந்தான் மோகன்..

மோகன்... இங்கவாடா ,இனியன் அழைக்க..

இரு கப்பில் காபியை கலந்துக்கொண்டு ஹாலுக்கு வந்தான் மோகன், தன் கையிலிருந்த காபிக் கப்பை இனியனிடம் கொடுத்துவிட்டு..

என்ன மாமா.. என்றான் மோகன்..

டேய் என்னை நிம்மதியா இருக்க விடமாட்டிங்களா...உங்க அக்கா எதுக்குடா பின்னாடி ப்ளாட்டுக்கு வந்திருக்கா..

யாரு தேனுக்கா வா..

அவனை பார்த்து முறைச்சான் இனியன்..

சத்தியமா எனக்கு தெரியாது மாமா.. அக்கா இங்க வரும்முனு.. அப்பா ஆசையா வாங்கினதாம், அதான் திரும்பவும் சிவா அண்ணே வாங்கி தேனுக்கா கிட்ட கொடுத்திருக்கு போல..

நான் இந்த ஹிஸ்ட்ரி எல்லாம் கேட்டேனா.. எதுக்குடா வந்திருக்கா, எல்லாம் சேர்ந்து கூட்டுசதி செய்றீங்க போல..

எனக்கு எப்படி மாமா தெரியும்.. அவங்க வீட்டுக்கு வந்திருக்காங்க.. நீங்க ஏன் அக்காவ பார்க்கிறீங்க.. கண்டுக்காதீங்க மாமா.. பிடிக்கலைன்னா வேற வீட்டுக்கு வாடகைக்கு போலாம் மாமா...

எங்க அம்மா ஞாபகமா இந்த வீட்டில இருக்கேன் மோகன்.. இந்த வீடுமட்டும்தான் எனக்கு சொந்தமா இருக்கு.. இதையும் கொடுத்துட்டு காசி ராமேஸ்வரமுனு போயிடுறேன்.. உங்களுக்கு சந்தோஷமா டா..

அவங்களை பார்க்காதீங்க.. அவ்வளவு தான் நான் சொல்லுவேன்.. எனக்கு காலேஜூக்கு டைமாயிச்சு நான் கிளம்புறேன் மாமா..

மோகனுக்கு தேவையான காலை சிற்றுண்டியை ரெடி செய்ய போனான் இனியன்..

.....

காலை பத்து மணிக்கு அசோக் நகரில் உள்ள அந்த அடுக்குமாடியின் நான்காவது ப்ளாரில் ஹனி கார்மெட்ஸின் ஆபிஸ் ரூம். பரப்பரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது..

தனது ப்ளாக் ஆடியை கார்பார்க்கிங்கில் விட்டுவிட்டு, லிப்ட் ஏறினான் இனியன். இன்று ஸ்கை ப்புளுவில் மேல் ஷர்டும் கீழே ஜீன்ஸில் , அவன் இயங்கும் ஆபிஸின் நான்கவது மாடியின் கதவை திறந்து உள்ளே நுழைந்தான்.

ஒருவாரம் சென்று வந்ததால் இனியனை சூழ்ந்துக்கொண்டார்கள் அங்கே வேலை செய்யும் பெண்கள்...

அக்கா, ஒரு நிமிஷம் எங்க இனிஸார் வந்திட்டாரு.. போய் பார்த்துட்டு வந்து நீங்க சொல்லுறதை செய்யுறேன் அக்கா ப்ளீஸ் என்று கெஞ்சியபடியே ஒடினாள் அக்கௌவுன்ட் டிப்பார்ட்மன்ட் பெண்..

எல்லாரையும் விசாரித்து விட்டு அவனுக்கு ஒதுக்கப்பட்ட எம்.டி ரூமிற்கு வந்தான்...தன் லேப்டாப்பை ஆன் செய்ய.. கதவை தட்டிவிட்டு உள்ளே நுழைந்தான் அசோக்..

அவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு, ஏன்டா போனை எடுக்குல... முக்கியமான விஷியம் பேசதான் போன் செய்தேன்..

பாப்பாவ ஸ்கூல்ல விட்டுவரபோனேன்... அதான் உன் போனை அட்டன் செய்யல..

சரி என்ன விஷியம் மச்சான்..

அது.. மறுபடியும் இனியன் முடிப்பதற்குள், அசோக் குறுக்கிட்டு பேசினான்

இனியா நானே ஒரு விஷியம் சொல்லனும்.. உனக்கு பி.ஏ வேணும் சொன்னதானே..

ஆமாம்டா.. பி.ஏ மட்டுமில்ல இந்த ப்ளோர்ல நடக்கிற எல்லா வேலையிலும் இன்சார்ஜ் எடுத்துக்கனும்.. லைக் மேனேஜர்.. கரக்டா மேனேஜர் போஸ்ட்தான் வேணும்..

அதான்டா உன் தங்கச்சி ஸ்ட்ராங் ரெக்கமென்ட், ஒரே பிரச்சனையா போச்சு.. சரி ஒகே சொல்லிட்டேன் உன்னை கேட்காம..ஸாரிடா.

லூஸூ இதுக்கு போய் எதுக்குடா ஸாரி சொல்லுற.. நல்லதுதானே செஞ்சிருக்க.. அப்பாய்ன்மென்ட் கொடுத்திட்டியா..

வரச்சொல்லுறேன்.. பாரு, தன் கைபேசியில் அழைக்க.

கதவை தட்டி உள்ளே நுழைந்தாள் தேனு.. அவளை பார்த்தவுடன் எழுந்துக்கொண்டான் இனியன்..

மச்சான்னு....அசோக் இழுக்க,

இவளுக்கு ஏன்டா வேலைபோட்டு கொடுத்த.. கத்த ஆரம்பித்தான்..

ஹலோ.. தேனு பதிலுக்கு சொல்ல.

யார பார்த்துடி ஹலோன்ற.. கையை காட்டி ,வெளியே போடி என்றான்..

நான் எதுக்குபோனோம், இங்கநானும் எம்.டி தான்.. மூனுபேரும் ஷேர்தான் நச்சுன்னு பதில் அளித்தாள்..

இனியன் கோவத்தில் அசோக்கை பார்க்க..

அது நீ பண்ண தப்பு, தேனுபெயர்ல எல்லாத்தையும் மாத்தினதானே..

அமைதியாக உட்கார்ந்தான்.. பாரு இங்க எல்லாரும் ஸ்டாப்தான் யாரும் முதலாளி கிடையாது.. முதல்ல இதை ஞாபகம் வச்சிக்கோ, மாமா, நோமான்னு கூப்பிட்ட வாய்ல பல்லே இருக்காது.. வெட்டிவிட்டியா அதோட முடிச்சிடுச்சு...

ஒருமுறை ஏமாந்திட்டேன், மறுபடியும் ஏமாற மாட்டான் இந்த இனியன்..சின்ன வயசிலே உன் புத்தி தெரிஞ்சிடுச்சுடி எனக்கு, அப்பவே விலகியிருந்தேன்.. வந்து லவ் பண்ணுறேன், என் பின்னாடியே திரிஞ்ச

அண்ணா ஆபிஸ் விஷியமா இருந்தா என்கிட்ட பேச சொல்லுங்க.. என் வாழ்க்கை பற்றி பேச இவருக்கு உரிமையில்ல.. நான் இப்ப என்ன வேலை செய்யனும் சொல்லச் சொல்லுங்க..

ஓஓ.. இவ்வளவு பேச தெரிஞ்சி வச்சிருக்கா... இனியா ஜாக்கிறதையா இருடா... பையித்தியமாகி தெருவுல சுற்ற விட்டிருவா.. உஷாரு.. அவனின் மனசாட்சி எச்சரித்தது...

அசோக் அவளுக்கு கேபின் ரெடி செஞ்சிக்கொடு, அப்பறம் ஸ்டாக் லிஸ்ட் பைல்ஸ் இந்த மன்த் தோடது எடுத்து பார்க்கசொல்லு.. தப்பாயிருந்தா ஸ்டாக் ரெடி செய்யற ஸ்டாப்ப கேட்க சொல்லுடா.. இன்னும் மூனு நாள்ல எனக்கு பைல் ரெடியாகி வரனும்.. காட் இட்.

தேனு.. கேட்டியா..

ம்ம்..என்று தலையாட்டினாள்.

வா.. நான் எல்லோருக்கும் அறிமுகம் படுத்திவிடுறேன்..

மதியத்திற்குள் அவளுக்கு கேபின் ரெடி செய்து கொடுத்தான் அசோக்.. மேனேஜர் என்ற போஸ்டிற்கு..

தேனும்மா அவன் உன்மேல பயங்கற கோவத்தில இருக்கான்டா... இங்க அவசியம் வேலை செய்யனுமாடா..

என் மாமன்தானே அண்ணா, அவர் கோபத்தை பார்க்காதவளா

ஏன்டா ,மெட்ரோ ப்ளாட்லதான் தங்கிருக்கியா..

ஆமாம்ண்ணா, ஒரு மாசமா பப்பு அப்பாவ பார்க்கனும் ரொம்ப தொந்திரவு தரான்.. போன மாசம் எங்களுக்கு தெரியாம வீட்டைவிட்டு கிளம்பிட்டான் அவங்க அப்பாவை பார்க்க.. ஊரே தேடிட்டோம்.. இரண்டுமணிநேரம் உயிர கையில பிடிச்சிட்டு இருந்தேண்ணா... தெரிந்தவர் கூட்டிட்டு வந்துவிட்டுபோனார்..

அவங்க அப்பாவை காட்டுறேன் சொல்லிதான் சென்னைக்கு வந்திருக்கேன்..

அன்று முழுவது வேலையில் கவனம் செலுத்தினாள்,அவனை நிமிர்ந்துக் கூட பார்க்க வில்லை தேனு..

மணி மூன்றானது, அண்ணா நான் பப்புவ ஸ்கூல்ல இருந்து கூட்டிட்டு வரனும் கிளம்பறேன்..

இனியன்கிட்ட ஒர்வார்த்தை சொல்லிட்டு போடா.. அவன் பக்கத்தில இருக்குற கார்மெட்ஸ்தான் போயிருக்கான்.. ஒரு மெசேஜ் பண்ணிடு..

சரியண்ணா.. தனது காரை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டாள் மாது.

நான்கு மணிக்கு உள்ளே வந்த இனியன்.. என்னடா மெசேஜ் எல்லாம் வருது..

நான்தான் சொன்னேன், அப்பறம் அதுக்கும் நீ ஏறுவ..

எந்த ஸ்கூல்ல சேர்த்திருக்கா...

என் பொண்ணு படிக்கிறாளே அந்த இன்டர்நெஷனல் ஸ்கூல்டா..

ஆக மொத்தம் அவ வரான்னு உனக்கு முன்னாடியே தெரியும் இல்ல..

மச்சான் , சத்தியமா இது என்வேலையில்ல உன் தங்கச்சி சமீயோட வேலை, அவ சரியில்லடா என்னைய மதிக்கவே மாட்டுறா.. இப்படியே போனா நானும் உன்னை மாதிரி பிரிஞ்சி வந்துடுவேன் சொல்லிட்டேன்..

அவனை முறைத்துக்கொண்டே இருந்தான் இனியன்... நம்ம ஒண்ணு கேட்டா இவன் ஒரு பதிலை சொல்லுவான் மனதில் நினைத்துக்கொண்டான்.

........

மாலை வீடு வந்து சேர்ந்தான்.. அந்த ஏ ப்ளாக் ப்ளாட்டின் மாடியேறும் போது குறுக்கே கையை மறைத்து நின்றாள் பாக்யா..

ஹாய் பாக்யா எப்போ வந்தே டில்லியிருந்து..

இன்னைக்கு காலையில்தான் இனியா... உனக்காக ஒட்டைபோட்ட வடை செஞ்சிருக்கேன் என்று டிபன்பாக்ஸை நீட்டினாள்..

ஷூயர், ஆசையா எனக்காக செஞ்சிருக்க சாப்பிடாத இருப்பேனா.. வாங்கிக்கொண்டான் இனியன்..

ஆமாம் நான் கேள்விபட்டதெல்லாம் உண்மையா,

என்ன கேள்விப்பட்ட பாக்கி..

தன் கால் கட்டவிரலை தரையில் கோலம்போட்டபடியே, நீ இப்போ சிங்களா இருக்கீயாமே.. வெட்கத்தில் தலைகவிழ்ந்து கேட்டாள்..

ஆமாம்... சரி நான் வரட்டா..

ம்ம் என்று வழியை விட்டாள் பாக்கியா.

....

அடுத்தநாள் காலையில், இனியன் தன் வண்டியை எடுக்கும்போது ஏஜ்சல்குட்டி வந்தாள்..

இந்தாடா குட்டிமா, மாமா உனக்கு சாக்கி வாங்கிவச்சிருக்கேன் என்று டேரிமில்க் நீட்டினான்..

தேக்ஸ் அங்கிள் என்று அக்குழந்தை வாங்கிக்கொண்டு தன் வீட்டை நோக்கி நடந்தது..

வண்டியை எடுத்துக்கொண்டு இனியன் சென்றுவிட..இதை பார்த்துக்கொண்டிருந்த பப்பு அந்த சிறுமியிடம் வந்தான்..

ஏய் இங்கவா... உன் நேம் என்ன.

ஏஞ்சல் என்றது..

அது என் அப்பா, அவ கையிலிருந்த சாக்கியை பிடுக்கிக் கொண்டான், எங்க ப்பா வாங்கிக் கொடுக்கிறது எனக்கு மட்டும்தான்.. அப்பறம் கிஸ் கொடுக்க கூடாது புரியுதா என்று கையை நீட்டி மிரட்டினான்..

இந்தா இந்த சாக்லெட்டை வச்சிக்கோ, தனது பாக்கெட்டிலிருந்து ஒரு கேன்டியை எடுத்து தந்தான் பப்பு..

ஏஞ்சலுக்கு, அவன் பிடுங்கினவுடன் அழுகை வந்தது, ஆனாலும் இன்னொரு சாக்லெட் கிடைத்தவுடன் ஹாப்பியாக தன் வீட்டிற்குள் சென்றது..

இதையெல்லாம் காரிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தாள் தேனு.. அப்படியே அவன் அப்பன் புத்தி,சின்னபொண்ணை மிரட்டி வாங்கிட்டு வரான் பாரு..

டேய் என்னடா செஞ்ச..

ஒண்ணுமில்லையே சும்மா பிரண்டுகிட்ட பேசிட்டு வரேன்.. ஸ்கூலுக்கு டைமாயிச்சு காரை எடுக்க சொல்லுங்க..

அந்த டெரிமில்கை நெஞ்சிலே வைத்துக்கொண்டான் பப்பு...

அவன் செய்வதை பார்த்தபடியே வந்தாள் தேனு... அப்படியே இனியன் செய்வதுபோல் இருந்தது பப்புவின் செய்கை... தன்னவனை மறுபடியும் நினைத்து சிரித்துக்கொண்டாள்... நேற்று அவனுடைய கோவம்..
 
Nirmala vandhachu ???
Surprise ???
 
தேடி வந்தான் விலகிச் செல்ல
தேட வைக்கிறான் இனியன்
தேனு நெருங்கி வர விலகிச் செல்ல
தேட வைக்கிறான் இனியன்.....
தேடல் தான் வாழ்க்கையா....
தேடினாலும் கிடைக்க மாட்டான்
தேனீ போல சுற்றும் இனியனை போல....
 
தேடி வந்தான் விலகிச் செல்ல
தேட வைக்கிறான் இனியன்
தேனு நெருங்கி வர விலகிச் செல்ல
தேட வைக்கிறான் இனியன்.....
தேடல் தான் வாழ்க்கையா....
தேடினாலும் கிடைக்க மாட்டான்
தேனீ போல சுற்றும் இனியனை போல....
super sis kavithai
 
நல்லா இருக்கு பதிவு
thks sis
Ipo yethuku iniyan a round u katara
கதையை பொருத்த வரைக்கும் இரண்டுபேரும் பிரிய மாட்டாங்க... தேனு தான் கெட்டு போனாதா நினைக்கிறா,, சோ விலக்கி இருக்கா.. இதுக்கப்பறம் misunderstanding la போகும்..
 
Top