Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன் விழியாக நான் வரவா – 27

Advertisement

lakshu

Well-known member
Member
உன் விழியாக நான் வரவா – 27

டக்டக் கதவை தட்டிவிட்டு மித்ராவின் ரூமில் நுழைந்தார் வாசுவின் தாத்தா அதாங்க நம்ம சல்லுபாய்.

ஓ நீங்களா, உட்காருங்க சொல்லி அவர் பின்னாடி பார்த்தால்.

எங்க அவன்

எவன், ஓ உன் புருஷன தான் இவ்வளவு மரியாதையா கூப்பிடுறீயா,

அதவிட கேவலமா பாட்டி உங்கள கூப்பிடுவாங்க,

அது என் டார்லிங் , என்ன எப்படி வேனா சொல்லுவா. நீ சொல்லேன் உன் புருஷன டார்லிங்னு.

ம்கும், சரி எங்க இந்த பக்கம்.

சும்மாதான் சுத்திபார்க்கலாமுன்னு,

ஆமாம், இது பெரியமாலு ,எங்க கல்யாணத்துக்கே வராத மலேசியாவுல என்ஜாயா இருந்திட்டு , இப்ப என்ன சீன்னு ,

நான் மட்டும் வந்தா உன் சித்தப்பன் கல்யாணத்தை நிறுத்திருப்பான் அவனுக்கு என்னை நல்லாவே தெரியும் என்னவச்சுதான் வாசுபத்தி கண்டுபிடிச்சிருப்பான் ,அதனால தான் என் பேரன் என்னை மலேசியா அனுப்பிச்சிட்டான்.

ஆக இந்த கதையில நீயும் ஏமாத்திருக்க ,பிராடு வாசுக்கூட சேர்ந்து.

பிராடு இல்ல ஆண்டிஹீரோ உனக்கு,

அவன் எனக்கு எப்போவும் வில்லன்தான்,என்ன உங்கள புறா விடு தூது மாதிரி தாத்தாவிடு தூதா அனுப்பியிருக்கானா.

எதுக்கு தூது ,

என்னை உன் பேரன் கூட ஜாயின் பண்ண

அதுக்கு நான் தேவையில்ல , உன்ன அலாக்க அவனே தூக்கிடுவான். அவனபத்தி உனக்கு ஓண்ணும் தெரியல. தாத்தாவின் செல் அடிக்க, ஹாங் சொல்லு வாசு, நான் மித்ரா ரூமுல இருக்கேன் நீ வா இங்க சொல்லி போனை வைத்தார்.

தாத்தா வாசு வா வந்திருக்கான்

ஆமாம், இதோ வருவான்பார்.

மித்ராவுக்கு இதயம் வேகமாக அடித்தது, மனதில் ஒரு புத்துணர்ச்சி, எப்படியிருப்பான் என் வாசு,ஆவலாக இருந்தாள், அவள் கண்கள் வாசுவை பார்க்க துடித்துக்கொண்டிருந்தது . ஆனால் அவள் மனமோ வாசு என் முன்னாடி வர மாட்டேன் சொன்னான். அதற்குள் கதவு தட்டிவிட்டு உள்ளே நுழைந்தான்.

உடனே எழுந்தாள், 6 அடி, கொஞ்சம் புசன உடம்பு மாநிறம், மூக்கு கொஞ்சம் நீளமா இருக்குமே வாசுக்கு அப்படியில்லையே , அலைஅலையாக கேசம் வாசுவுக்கு , ஆனா முடி சின்னதா இருக்கு வெட்டியிருப்பானோ. எப்படியிருந்தாலும் என் வாசு. ஆனா இவன் கண்ணுல எந்த உணர்வும் இல்லையே,

என்ன பார்த்தாவே நீ தெரிஞ்சுப்ப சொன்னானே.

என்ன மித்ரா , வாசுவ பார்த்து ஷாக்காயிட்ட , நேற்று என்னாலதான் பார்க்க முடியல ஃபில் பண்ண , தம்பி வணக்கம் சொல்லு,

வணக்கம் மேடம் புதியவன் பேசியவுடன்.

இவன் என் வாசுயில்ல.

என் பி.ஏ. வாசு சக்கரவர்த்தி மித்ரா, ,நீங்க போங்க தம்பி ,நீ என்ன நினைச்சம்மா உன் புருஷன் இவன இருப்பான் யோசிச்சியோ.

சல்லு ,ஓடி வந்துடு, அவளுக்கு கோவம் வந்துடுச்சு, இருடா கொஞ்சம் கலாச்சிட்டு வரேன்.

ஓ போன்னல வேற பேசற இரண்டு பேரும் என்ன நினைச்சிட்டு இருக்கீங்க சொல்லி பேப்பர் வைட்ட தூக்கி ஏறிந்தாள்.

அப்பா கேட்ச் பிடிச்சிட்டேன், இந்த வயிசான காலத்துல எனக்கு ஏதாவது ஆயிடுச்சின என் சிலுக்க யார் பார்த்துப்பா.

எல்லாத்துக்கும் காரணம் உன் பேரன்தான, ஒருநாள் மாட்டுவான் அன்னிக்கு வச்சிக்கிறேன் அவன

எப்ப வச்சிக்கிற கேட்கிறாம்மா, அவன் வைட்டிங்கா.

ஆஆஆ மித்ரா கத்த ஆரம்பித்தாள், அய்யோ , நான் எஸ் ஆயிட்டேன் சல்லு கிளம்பிவிட்டார்.

வீட்டில், சின்னா லேப்டாப் கொண்டுவா கணக்கு பார்க்கனும், சம்பளம் போடனும் , ஸ்டாக் லிஸ்ட் பார்க்கனும்.

அக்கா மூனு நாளுல கம்பயூட்டர் ஆபரேட் பண்ண கத்துக்கிட்ட ஓரளவு புரிஞ்சிக்கன, இந்தாக்கா லேப்டாப் கொடுத்தான்.

ஆன் செய்தால் மித்ரா, டேய் பாஸ் வோர்ட் கேட்குது,

மாமாவுக்கு தான் தெரியும், இரு கேட்கிறேன். போன் செய்தான் வாசுவுக்கு, மாமா லேப்டாப் பாஸ்வோர்ட் என்ன கேட்குது அக்கா ஸ்பிக்கரில் போட்டான்..

ஏன் உன் அக்கா பேச மாட்டாளா. மாட்டேன் சைகை காண்பித்தாள் மித்ரா ,

மாட்டாங்களாம், சரி அவளே பேசுவா போன கட் பண்ணாதே, பாஸ்வோர்ட் நான் கூப்பிடுற அவ நேம்.

மித்ரா என்று டைப் செய்தாள், வரலடா தப்புனு கான்பிக்குது.

நல்ல யோசிக்க சொல்லு , நான் கூப்பிடுற அவ நேம்.

ஸ்ஸ் சொல்லி டைப் செய்தாள், தேனு மிட்டாய், விண்டோஸ் திறந்தது ஸ்கிரினில் ரோஸ் கார்டன் அதில் சிகப்பு ரோஜாக்கள் பூத்துக் குலுஙக ஆண் திரும்பி நின்று பெண்ணின் இதழில் முத்தமிட்ட காட்சி ,அதில் பெண் மயங்கி கண்களை மூடிய காட்சி மட்டும் தெரிந்த்து.

இவன் புத்தி எப்படி போகுது , என்ன மாதிரி ஸ்கிரின் வச்சிருக்கான் பாரு, இதுல இந்த பொண்ணு இப்படி மயங்கி நிக்குது , அசிங்கமாயில்ல இநத பொண்ணுக்கு இந்த பொண்ண எங்கியோ பார்த்த மாதிரி இருக்கு, அய்யோ அது நான்தான்

என்னக்கா ஓபன் ஆயிடுச்சா மாமா கேட்கிறாரு,அந்த போன கொடுத்துட்டு நீ போ.

வாசு என்று மித்ரா அழைக்க

என்ன பேச மாட்டேன் சொன்ன , யாரும்மா அது சூப்பரா கிஸ் அடிக்கிறது.

அறிவு இருக்காடா உனக்கு எதை போட்டோ எடுக்கிறதுன்னு உனக்கு விவஸ்தையே இல்லையா என்று பச்சையா திட்ட ஆரம்பித்தாள்.

ஸ்டாப் பண்ணறியா, நீதான் எல்லாமே மறந்திட்டியே ஞாபக படுத்த தான் ஆனா சும்மா சொல்ல கூடாது செம கிஸ்ஸூடி அன்னிக்கி , நான் கோபமா இருந்தேன் சமாதான படுத்தினியே அப்ப. எனக்கு புடிச்ச பாட்டோட இந்த சீன்ன மேசேஜ் அனுப்புறேன் கேட்டுபார் சொல்லி போனை வைத்தான் வாசு. விடியோ மேசேஜை திறந்து பார்த்தாள்.


பொல்லாத வயச சீண்டித்தான் போனாயே
தடுத்தாலும் உனக்கே விழுவேன் நானே
கண்ணாடி மனச கல் வீசி பார்த்தாயே
ஒடஞ்சாலும் காட்டுவேன் உன்ன நானே"

திருந்தவே மாட்டியா வாசு, திரும்ப திரும்ப போட்டு பார்த்தாள், ஐ மிஸ் யு டா ,வாசு செல்லக்குட்டி. அவளுடைய மனசாட்சி திட்ட ஆரம்பித்தது, எப்படி மித்ரா எல்லாத்தையும் மறந்து அவன கொஞ்சிட்டு இருக்குற, இவன் குடும்பத்தால உன் அப்பா, அம்மா இல்ல என்பதை மறந்திட்டியா மித்ரா ,இவங்கள விட உன் வாசு முக்கியமா போயிட்டானா, உங்க அப்பா, அம்மா இருந்தா எப்படி இருந்திருப்ப

நீ கொஞ்சம் அமைதியா இருக்கிறியா, நானே நொந்து போயிருக்கேன், இந்த உலகத்தில எங்க இருந்தாலும் , அவன்கிட்ட மட்டும்தான் நான் சந்தோஷமா வாழ முடியும், அவன் இல்லைன்னா நான் இல்லை என் வாழ்க்கை முழுமையாகாது.

வாசு தூங்காமல் ஒரு வருடம் முன்பு பார்வதி சொன்னதை நினைத்து பார்த்தான்.

வாசு , அம்மா மேல கோவமா, உங்களுக்கு பையன் மேல நம்பிக்கையில்ல, நினைக்கும்போது மனசு கஷ்டமாக இருக்கு.

அப்படியில்ல கண்ணா, உங்க அப்பா சாகறப்ப நீ படிச்சிட்டு இருந்த. இப்போ பிசினஸ்ல கவனம் செலுத்துற, அதவிட நீ ரொம்ப கோபக்காரன் எப்படி எடுத்துப்பியோ பயம்.

நான் நடந்ததை சொல்றேன் வாசு, 8 வருஷம் முன்னாடி மித்ரா அப்பா மாணிக்கம்,அம்மா தேவி,மித்ரா மூன்று பேரும் போய் ,சின்னாவ ஊட்டி கான்வென்டுல இருந்து கூட்டிட்டு வந்தாங்க,உங்க அப்பா தனியா கார ஓட்டிட்டு ஊட்டியில நடக்கிற மீட்டிங் போனாரு.அப்ப இரண்டு காரும் மோதி ஆக்ஸிடன்ட் ஆனது உங்க அப்பா எப்படியோ கார விட்டு இறங்கி மாணிக்கத்திடம் வந்தார், அவரு கையை பிடிச்சிட்டு என் பசங்களை எப்படியாவது காப்பத்துங்க சார் சொல்லி இறந்துட்டார். போன் பண்ணி மானேஜரை வர சொன்னார் உங்க அப்பா. மித்ராவுக்கு உயிர் இருந்தது, உங்க அப்பாதான் ஆஸ்பிட்டல் சேர்த்தார். மானேஜர் பார்த்தபோது தான் அங்க பக்கத்தில இருந்த பள்ளத்துல சின்னா முனுகிற சத்தம் கேட்டு சின்னாவ தூக்கிட்டுபோய் ஆஸ்பிட்டல் சேர்த்து விஷியத்தை எங்கிட்ட வந்து சொன்னாரு.

நான் இந்த செய்திய சொல்ல கார்மேகத்திடம் போனே அவரு பேசினதை கேட்டு எனக்கு பயங்கற அதிர்ச்சி, பையன் பொணம் கிடக்கலைன்னா விடு அவன் சொத்து முழுவதும் நமக்கே என்று சொன்னாரு. நான் பயந்து போய் பாட்டிகிட்ட சின்னாவை ஒப்படைச்சேன்.





















.













 
மிகவும் அருமையான பதிவு,
லக்ஷு அருணாச்சலம் டியர்
 
Last edited:
ஹா ஹா ஹா
பி ஏ பேரும் வாசுவா?
பேரனுக்கு மேல சல்லு பாய் தாத்தா செம லொள்ளு தாத்தாவா இருக்காரே
பி ஏ வை வர வைச்சு மித்ராவை என்னமா சீண்டுறாரு
அடப்பாவி கார்மேகம்
ஒரு சின்னப் பையன்ங்கிற நினைப்பு கூட இல்லாமல் சீனிவாசன் பிணம் கிடைக்காட்டி என்ன சொத்து வந்தால் போதும்ங்கிறானே
சித்தப்பா புண்ணாக்குன்னு மித்ரா என்ன சொன்னாலும் அவனை சும்மா விடாதே, வாசு
 
ஹா ஹா ஹா
பி ஏ பேரும் வாசுவா?
பேரனுக்கு மேல சல்லு பாய் தாத்தா செம லொள்ளு தாத்தாவா இருக்காரே
பி ஏ வை வர வைச்சு மித்ராவை என்னமா சீண்டுறாரு
அடப்பாவி கார்மேகம்
ஒரு சின்னப் பையன்ங்கிற நினைப்பு கூட இல்லாமல் சீனிவாசன் பிணம் கிடைக்காட்டி என்ன சொத்து வந்தால் போதும்ங்கிறானே
சித்தப்பா புண்ணாக்குன்னு மித்ரா என்ன சொன்னாலும் அவனை சும்மா விடாதே, வாசு
Thk u banu mam for ur comments story eppadi poguthu theriyalai ennaku, rombaa ezukirana banu mam
 
Top