Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'உயிரில் உறைந்த உறவே !' (UUU) - அறிமுகம்

Advertisement

RudraPrarthana

Well-known member
Member

ஹாய் செல்லகுட்டீஸ்...

இதோ என்னுடைய அடுத்த கதையோடு வந்துட்டேன்.. இது முழுக்க முழுக்க பெண்ணை மையபடுத்திய பெண்ணை முதன்மை கதாபாத்திரமாக கொண்ட Non linear narration எனப்படும் ஒன்றுக்கொன்று தொடர்பற்ற காட்சிகளின் தொகுப்பு அதாவது இறந்த காலம் நிகழ்காலம் என்று மாறி மாறி பயணிக்கும் அதனால் நிறம் வேறுபடுத்தி காட்டியிருப்பேன். ஒரு பெண்ணின் ருத்ரதாண்டவமும் அவள் செய்யும் சூரசம்ஹாரமும் தான் கதை..

இது மென்மையான காதல் கதை கிடையாது அசுரவதம் தான் கதைகரு.. கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

நன்றிகள்

ருத்ரபிரார்த்தனா ❤️❤️❤️

"இன்னும்.. இன்னும் எத்தனை நாளைக்கு தான் அப்பா பண்ணின தப்பு, அண்ணன் பண்ணின தப்பு, தம்பி பண்ணின தப்புன்னு ஆண்களோட முட்டாள்தனத்திற்கு பெண்களை பலியிட போறீங்க..??" என்று ஆதங்கத்துடன் கேட்க அங்கே பேரமைதி.

"அதுதானே பார்த்தேன் இனம் இனத்தோட தானே சேரும்..!!" உங்க கிட்ட வேற என்ன எதிர் பார்க்க முடியும், இதே அவ கண்கலங்கிட்டு வந்து உங்க கால்ல விழுந்து வாழ்க்கை பிச்சை கேட்டிருந்தா..?? நீங்களும் பாரி வள்ளலா மாறி வாழ்க்கை கொடுத்திருப்பிங்க... ஐ மீன் கொடுக்க சொல்லி இருப்பிங்க ஆனா இவ பாரதி கண்ட புதுமை பெண்ணா நேர்கொண்ட பார்வையும் நிமிர்ந்த நடையோட வந்து உங்க முன் நின்னா இவளையே தப்பு சொல்விங்களா..??" என்று கர்ஜித்திருந்தாள்.

பின்னே ஆக்க சக்தியும் அழிக்கும் சக்தியும் ஒருங்கே அமைய பெற்றவள் பெண் என்பதையும் அவளை ஒருவர் கையாளும் விதத்தில் அவள் எவ்வாறு ருத்ரகாளியாக அவதரித்து சம்ஹாரம் செய்ய கூடும் என்பதை நெற்றி பொட்டில் அறைந்தார் போல உணர்த்தி இருந்தாள்.

தீப்பெட்டி கொண்டு தீபமும் ஏற்ற முடியும் வீட்டையும் எரிக்க முடியும் இரண்டுமே ஒரே நெருப்பு தான்.. ஆனால் அந்நெருப்பு வீட்டை அலங்கரிப்பதோ அழிப்பதோ அது சென்று சேரும் கரங்களை பொறுத்தே அமைய பெறுகிறது.

வற்றாத ஜீவநதியானவள் பெண்..!!! என்ற ஆன்றோர்களின் கூற்று எத்தனை நிஜம்.. தெளிந்த நீரோடையாக பயணிக்கும் நீர் மனிதர்களின் அன்றாட தேவையை தீர்க்கும் ஆனால் அதே நீர் ஆக்ரோஷம் கொண்டு வெள்ளமாக பெருக்கெடுத்து சீறினால் பேரழிவு நிச்சயம்..!!

ஜீவனுக்கு ஆதாரமாக இருப்பவளே இங்கு இன்று ஜீவனை எடுக்கும் முயற்சியில் முனைப்புடன் செயல்பட்டு கொண்டிருக்கிறாள்..!!!

தென்றலாக ஒருவனின் வாழ்வில் வசந்தம் வீசுபவளும் பெண் தான் அதே நேரம் அவள் சீண்டபட்டால் புயலாக உருமாறி அதே ஆடவனை உருத்தெரியாமல் அழிக்க வல்லவலும் பெண் தான்...!!

பெண் எனும் மாபெரும் சக்தியின் கீழ் அண்ட சராசரமே இயங்குகையில் சாதாரண மனிதன் அச்சக்தியின் முன் எம்மாத்திரம்...!!!

நீர், நெருப்பு, காற்று உள்ளிட்ட பஞ்சபூதங்களின் மறுவடிவமாக இருந்து அகிலத்தின் ஆதாரமாக அடிநாதமாக திகழும் பெண் அவள் சேரும் இடம் பொறுத்து புயலாக, நெருப்பாக, பெருவெள்ளமாக உருமாருகிறாள்.

உருமாருகிறாள் என்பதை விட சென்று சேரும் கரங்களை பொறுத்து உருமாற்றம் பெறுகிறாள் என்பதே பொருத்தம்.

இதில் பெண்ணின் தவறு என்ன..???

மாலை பதிவோடு வருகிறேன் ....

கீர்த்தி  ௧.jpg
 
Last edited:

View attachment 5545
Nirmala vandhachu 😍😍😍
Best wishes for your new story ma 💐💐💐
 
Top