Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

எங்கேயோ பார்த்த மயக்கம் -13

Advertisement

எங்கேயோ பார்த்த மயக்கம் -13

ஹரியை கூட்டிக்கொண்டு கார் ஊட்டியை விட்டு கீழே இறங்கியது... உங்க அக்கா ,என் தம்பி, தங்கை தான் முக்கியம் அவங்களுக்காக நான் இருக்கேன்... எனக்கு கல்யாணம் வேண்டாம் சொல்லுறா...

அறிவில்லடா உனக்கு லவ் கேட்குதா..

டேய்... நாலு சுடிதார் தான்டா வச்சிருக்கா, அதையே மாற்றி மாற்றி போடுவா... நீ அதை பார்த்திருக்கீயா... ஆனா உங்களுக்கு எத்தனை டிரஸ் எடுத்து தந்திருக்கா..

அவளுக்கென்று ஒரு ரூபா செலவழிச்சு இல்ல.. சம்பாரிக்கிறதெல்லாம் உங்க இரண்டுபேருல சேவிங்க்ஸ் போட்டுட்டு வரா..

மாமா... நான் யாரையும் லவ் செய்யலை, அக்கா புது ஸ்கூல்ல சேர்த்துவிட்டாங்க... அங்க அஞ்சலின்னு ஒரு பொண்ணு என்னை ரொம்ப தொந்தரவு செஞ்சது... ஒரு டைம் பார்க்ல பார்த்து நான் பேசினேன்... எனக்கு அந்த ஃபீல் இல்லையின்னு... என் கையை பிடிச்சிக்கிட்டா.. அப்பதான் ஒரு ரௌடி கூட்டம் வந்துச்சு.. எங்களை ரௌன்ட் பண்ணாங்க... செல்லுல போட்டோ எடுத்துட்டாங்க..

அதை காட்டி மிரட்டினாங்க... தினமும் கவர்ல பௌடர் மாதிரி தருவாங்க.. அதை எடுத்துட்டு போய் ஸ்கூல்ல ஒரு அண்ணாகிட்ட நான் கொடுக்கனும்..

முதல்ல மாட்டேன் சொன்னேன்... அப்பறம் உங்க அக்காவ தூக்கிடுவோம், சொன்னான்.. அவன் பெயர் முரளி மாமா... ரொம்ப பிரச்சனை செய்யறான்.. ஒரு முறை என்கிட்ட கேட்டான், அவனுக்கு மலர் அக்காவ பிடிச்சிடுச்சாம் கல்யாணம் செஞ்சிக்கவான்னு ..எனக்கு உயிரே நின்னுடுச்சு மாமா... அவன் பார்க்கிற பார்வையும் சரியில்ல...

அப்பதான் உங்களை வீட்டுக்கு கூட்டிட்டு வர ஐடியாவ நான்தான் சொன்னேன்... ஏற்கனவே அக்கா உங்களை பற்றி சொல்லிருக்காங்க... எங்க அக்கா எனக்கு அம்மா மாமா... அவங்க கஷ்டப்படுறாங்க எனக்கு தெரியும்... இப்பதான் இந்த ஸ்கூலுக்கு பீஸ் கட்டனாங்க... திரும்பவும் போய் வேற ஸ்கூல் மாறனும் சொன்னா, பீஸ்க்கு எங்க போவாங்க.. அதான் இந்த பிரச்சனையை நானே சமாளிக்கலாம் நினைச்சேன்...

சரி அந்த முரளி வீடு எங்கயிருக்கு உனக்கு தெரியுமா..

ம்ம்... என்று வழியை காட்டினான்... சந்து சந்தாக சென்றது... எஸ்டேட்டில் வேலை செய்பவர்கள் வாழும் பகுதிக்கு சென்றார்கள்... ஷீட் போட்ட வீடுகள் வரிசையாக இருந்தது... இந்த வீடுதான் மாமா என்று காட்டினான்...

கதவை தட்டினான் ஹரி.. திறந்தவன் முரளிதான்.. டிஷர்ட் மற்றும் கைலிதான் உடுத்திருந்தான்... கதவை திறந்தவன் கைலியை மடித்துக்கட்டினான்..

ஹரியை பார்த்தவுடன் ஆச்சரியம்தான் முரளிக்கு.. டேய் எப்படி வெளிய வந்தே... அந்த இன்ஸ்பெக்டர் விட்டுட்டாரா.. யார் இவங்க என்று ஜீஜே, ராக்கியை பார்த்தான்.. ஒரு ஹால் பெட்ரூம் என சின்னதாகதான் இருந்தது அந்த வீடு..

இவனா அவன் என்று கண்களாலே வினவினான் ஜீஜே..

ஆமாம் என்று தலையை ஹரி ஆட்ட.. அவன் கழுத்தை கொத்தாக பிடித்து வீட்டுக்குள் தள்ளினான் ஜீஜே... இன்னோரு அடி அவன் முதுகில் அடித்தான் ராக்கி... போதை பொருளாடா சப்ளை செய்யற.. ப்ளாருன்னு கண்ணத்தில் அடித்தான் ஜீஜே..

என்ன செய்வதென்றே புரியவில்லை முரளிக்கு... பயந்துபோய் நின்றான்...

யாரெல்லாம் உங்கவீட்டில இருக்காங்க..

ஸார் எங்க அம்மா , தங்கச்சி மட்டும்தான்...

இன்னோருமுறை ஹரிக்கிட்ட ஏதாவது தந்தே உடம்புல உயிர் இருக்காது... எந்த எஸ்டேட்டில் உங்கம்மா வேலை செய்யறாங்க..

ஜெய்சிம்மன் எஸ்டேட்ஸ் ஸார்... ராக்கியை பார்த்தான்...

சரிங்க பாஸ்...

வேற ஏதாவது ப்ரன்ஸ் கூட்டிட்டு வந்து பிரச்சனை செஞ்சே.. உன் குடும்பமே இருக்காது.. இவனை வீடியோ பிடிச்ச செல்லை காட்டு...

ஸார் என்று விழிக்க... மறுபடியும் ப்ளாரென்று அடி இடிபோல் விழுந்தது.. இதோ தரேன் ஸார்.. அவனிடமிருந்து போனை வாங்கி டெலிட் செய்தான் ஹரி...

உள்ளே இருக்கிற ஸிம்மை எடுத்துக்கோ ஹரி...

சரிங்க மாமா...

.....

வீடு வந்து சேர்ந்தார்கள்... அதற்குள் அந்த காலனி பெண்கள் மலர் வீட்டில் இருந்தார்கள்..

மலர் உன் தம்பி வந்துட்டான்... சாரதா சொல்ல..வாசலுக்கு வந்தாள்...

டேய் ஹரி என்று அவனை அனைத்துக்கொண்டாள்... எங்கடா போனே.. கண்கள் கலங்கின அவனை பார்த்தவுடன்..

ஒண்ணுமில்ல அக்கா..

பின்னாடியே வந்த ஜீஜே... வெளியே வச்சு ஏன் பேசற... பசிக்குது எனக்கு அவனுக்கும் சாப்பிட கொடு என்று சொல்லியபடியே உள்ளே வந்தான்... ஹாலிருந்த பெண்கள் எழுந்து நின்றனர்..

அவன் ஃபிரண்ட் விமலுக்கு பர்த் டே இன்னைக்கு , ஸ்கூலை கட் அடிச்சிட்டு எல்லா பாய்ஸும் போயிருக்காங்க.. அதான் கம்ப்ளைன்... அங்க போன் ரீச் ஆகல போல..

ஆமாக்கா நானும் எவ்வளவு ட்ரை செஞ்சேன்... அப்பறம் பஸ்ஸ்டான்டுல மாமா வந்து பிக் கப் செஞ்சாங்க..

இதுக்கு போய் பயந்திட்டியே மலர் வைதேகி அவளை தேற்றினாள்.. சரி நாங்க வரோம்... வந்தவருக்கு காபி போட்டு கொடு மலர்..

மாமா.. என்று ஹரி கூப்பிட்டவுடன் மலரும், அபியும் ஆச்சரியமாக ஹரியை பார்த்தார்கள்...

அக்கா, இவன் என்ன மாமாவை பார்த்து இப்படி பம்புறான்...

நான் ஊட்டி கான்வென்ட்லே போய் படிக்கிறேன் மாமா... அந்த ஸ்கூல் எனக்கு ஓகேதான்..

சரி நான் உடனே ரெடி பண்ணுறேன்... இன்னும் டூ டேஸ்ல சேர மாதிரி இருக்கும்...

எதுக்கு ஸ்கூல் மாத்தனும்... இப்போதானே அந்த ஸ்கூல்ல சேர்த்துவிட்டேன் ஜீஜே..

அங்க டீச்சிங் சரியில்லை மலர்...

நிறைய பீஸ் ஆகும், ஜீஜே.

இருக்கட்டும் மலர்... உனக்கே நான்தான் ஸ்பான்ஸர்... அதுப்போல அவனுடைய படிப்பு செலவு என் பொறுப்பு... அதனால எந்த அட்வான்டேஜ் எடுத்துக்க மாட்டேன் மலர் பயப்படாம போ..

அவன் ரூமிற்கு சென்று தன்னை சுத்தப்படுத்தி பாத்ரூமை விட்டு வெளியே வந்தான்... காபியும் பிரட் ஸான்ட்வீச்மும் கொண்டுவந்தாள்...

அவன் முகத்தை துடைத்துவிட்டு உட்கார்ந்தவுடன்... தனது காபியை எடுத்து அவளிடம் கொடுத்தான்... குடி சாப்பிட்டிருக்க மாட்டே...

கப்பை கையில் வாங்கிக்கொண்டாள்... ஜீஜே ஏதாவது மறைக்கிறீயா... அந்த விமல் வீட்டுக்கு போயிட்டு வந்தேன்.. அவனுக்கு பர்த் டே எதுவுமில்ல... என்னாச்சு சொல்லு, உன்கிட்ட ப்ரீயா பேசுறானே..

ம்ம்... நான் யாருன்னு சொன்னேன்...

என்ன சொன்னே..

துபாயிலிருந்து வந்த அத்தை பையன் உன் மாமன்னு...

விளையாடாத ஜீஜே... ஏதாவது தப்பு செஞ்சானா..

மலர் வளர்ப்பு தப்பாகுமா சொல்லு...

கண்களிலிருந்து கண்ணீர் தானாக வந்தது அவளிடம்...

ம்ம்... சொல்லு அவன் தப்பான வழிக்கு எப்பவும் போகமாட்டான்... அவன் அக்கா அவனுக்கு நல்ல பழக்கவழக்கங்களை தான் சொல்லித் வளர்த்திருப்பா.

தன்மீது இவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கும் ஜீஜேவை பார்த்தாள்... தன் கண்களை துடைத்துக்கொண்டாள்.. தேங்க்ஸ் ஜீஜே...

அதை நீ வெச்சுக்கோ எனக்கு வேற காபி கொண்டு வா.. சொல்லிவிட்டு தனது லேப்டாப்புக்கு உயிர் கொடுத்தான்..

......

அடுத்த நாள் காலை, கோவில் திருவிழாவில் அந்த பகுதி மக்கள் கோலாகலமாக ஆரம்பித்தனர்...

கோவில் சுற்றியும் அன்னதானம் வழங்கப்பட்டது... மைக் செட் போட்டு பாட்டுகள் ஒலித்தன.. நிறைய கடைகள் போடப்பட்டன...

காலையிலே நரசிம்மன் ஐயா வந்துவிட்டார்... இன்னைக்கு ஜீஜே வாங்கிக்கொடுத்த புடவையை கட்டிக்கனும்... என்று பாக்ஸை திறந்தாள்... அந்த புடவையை எடுத்தவுடன் பாக்ஸின் அடியில் அதன் விலைச்சீட்டு இருந்தது.. எடுத்து பார்த்தாள்.. ப்பா என்று வாயில் கைவைத்துக் கொண்டாள்...

உடனே ஜீஜேவின் அறைக்குச் சென்றாள் மலர்... ஜீஜேஜே..

குளித்துவிட்டு வெளியே வந்தான்..

என்ன மலர்..

இந்த சாரியின் விலை 49999 னா.. அடப்பாவி ஐம்பதாயிரமா..

அப்படியா நான் விலைப் பார்க்கலை..

பொறுப்பில்லாம இருப்பீயா.. ஒரு ஆயிரம் ரூபாய்க்கு புடவை பத்தாதா... எதுக்கு இப்படி பணத்தை வேஸ்ட் செய்யற.. கத்த ஆரம்பித்தாள்..

காதை மூடிக்கொண்டான்.. நான் ரெடியாகுனும், புடவையை கட்டுனா கட்டு இல்லைனா போ..

சலித்துக்கொண்டு வெளியே வந்தாள்... பணத்திமிரு இவனுக்கு, திருந்த மாட்டான்..

......

தலையை வாரிவிட்டார் வைதேகி... இந்த நெக்லஸை போட்டுக்கோ மலர்... ஸாரிவேற கட்டப்போற.. போட்டுக்கிட்டா அழகாயிருக்கும்டா..

சரியென்று தலையை ஆட்டினாள் மலர்.. சரி நீ ட்ரஸ் மாத்திக்கோ.. நான் பூ எடுத்துட்டு வாரேன்.. என்று கதவை திறந்து வெளியே சென்றார் வைதேகி..

ஜீஜே கொடுத்த ப்ளவுஸை போட்டுக்கொண்டாள்.. கரெக்டா இருக்கு...

புடவையை எடுத்து பிரித்தாள்..

மலர்.. மலர் என்னுடைய வாலட் எங்கே வெச்ச என்று ரூமின் வாசலுக்கு வந்தான்..

அவன் கூப்பிடவும், மேள சத்தத்தில் அவளுக்கு கேட்கவில்லை.. என்ன ஜீஜே...

கதவு திறந்திருந்ததால்... மலர் எங்க வெச்ச அவன் உள்ளே நுழைய..

ஷாக்கா கதவின் மேல் சாய்ந்து அப்படியே சிலைப்போல் நின்றான்..

எதிரே மெழுகு சிலைபோல் புடவையை கட்ட நின்றிருந்தாள் மலர்..

“ஆத்தாடி என்ன உடம்பு

அடி அங்கங்கே பச்ச நரம்பு

ஐம்பொண்ணால் செஞ்ச ஒடம்பு

அடையாள சின்ன தழும்பு...”

அவன் மனம் வீசில் அடித்து பாட..

ஜீஜே... அவள் கத்தின கத்தில்

சுயநினைவு வந்தவன்... என்ன நீ கதவை திறந்து போட்டுதான் புடவை கட்டுவீயா.. நானாயிருந்ததால பரவாயில்ல... லூஸூ கதவ மூடுடி... வெளியே தெறிக்க ஓடிவந்தான்...

நெஞ்சில் கையை வைத்து, ஹப்பா சமாளிச்சிட்டோம்.. இல்ல பிச்சிஎடுத்திருப்பா...

என்ன பிகருடி நீ செமயா இருக்கடி... காலேஜீல பார்க்க சொல்ல ஒல்லியா இருந்தா... இப்போ அங்கங்க கூடிப்போய் செமையா இருக்காளே.. ஜீஜே நீ கொடுத்து வச்சவன்டா.. தனது காலரை தூக்கிவிட்டான்.

அவன் மனம் ஒரு நிலையில் இல்லை... ஏதோ ஹார்மோன் கோளாரா இருக்குமா.. ஒரு மாதிரி ஃபீல் ஆகுது.. அவன் பார்த்த காட்சியே திரும்ப திரும்ப மனதில் தோன்ற.. கட்டிலில் புரண்டு புரண்டு படுத்தான்..

சிறிது நேரத்தில்.. அவன் கதவு தட்டப்பட்டது... இரு வரேன் என்று கதவை திறந்தான் ஜீஜே..

மென்மலரை பார்த்தவுடன் கள்ளச்சிரிப்பு தோன்றியது அவன் இதழில்...

என்ன இளிப்பு.. இந்தா உன் வாலட்.. அங்கங்க வச்சிட வேண்டியது.. அப்பறம் தேடறது..

அதுக்குதான் நீ இருக்கீயே எடுத்து தர...

அவள் முறைக்க... அவள் உடுத்திய புடவையை நிதானித்து பார்த்தான்... தேவதையாக நின்றிருந்தாள்... லைட்டான மேக் கப் தான்... ஆனால் ஆளை அசத்தம் அழகு...

ஒரு வயசுப் பையன் நானே ட்ரஸ் மாற்றும்போது கதவை லாக் பண்ணிட்டுதான் சேன்ஜ் பண்ணுறேன்.. ஆனா நீ இப்படியா கதவை திறந்துட்டு.. அச்சோ..

ரொம்ப ஓவரா பேசாத ஜீஜே... டைம்மாயிடுச்சு பூஜை ஆரம்பிச்சிடுவாங்க சீக்கீரம் வா.. ஹரி , அபி கிளம்பியாச்சா..

மயக்கம்...
Super ?
 
Top