Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

எனது கருத்து

Advertisement

Rubyjosy

Active member
Member
உயிர் நிறைகிறேன் அழகா

இராஜவர்மன்: கிராமத்து பெரிய வீட்டின் ஒரே பையன். இவருக்கு ஒரு தங்கை. இயற்கை விவசாயம் செய்யும் விவசாயி, இன்னும் பிற தொழில்கள், அவ்வப்போது மற்ற ஊர்கள் மாநிலங்கள் சென்று அங்கும் அவர்களுக்கு உதவி செய்வார்... ரொம்ப அகங்காரம் பகட்டு இல்லா ஆள். ரொம்ப பிடிச்சது இவனை.

இவன் வீட்டுக்கு இவன் இல்லா சமயம் இவனின் மாமா பெண் வருகிறாள் ஒரு பிரச்சனையில் மாட்டி கொள்ள கூடாது என இங்கு அனுப்புகிறார் அவள் அப்பா... இவனுக்கு அவளை முதலில் இருந்தே பிடிக்காது. அவள் இவனின் தோழனை காதல் என்ற பெயரில் ஏமாற்றி அவன் மனநல மருத்துவப்
மனையில் இருப்பான்..

மது: பணம்.மட்டுமே பிரதானம். பெரிய பணக்காரன் பார்த்து திருமணம் செய்துக்கனும் அது தான் லட்சியம்.. அப்பா அட்வைஸ் பிடிக்காது. அம்மாவின் வளர்ப்பு, செல்லம், அல்ட்ரா மாடர்ன். அதனால் வரும் பிராப்ளம். கிராமம் பிடிக்க இவள் கிராமம் வந்து எப்படி இருப்பாள்?

அத்தை அத்தை மகள் தாங்குகிறார்.. ஆனால் ராஜாவின் அலட்சியம்.. கிராமம் வந்ததும் மது பயங்கர அடக்க ஒடுக்கம். பத்தாதர்க்கு ராஜாவின் ஃபோட்டோ பார்த்து காதல். நமக்கே இவள் அவளோ இல்லை அவளின் குளோனா என சந்தேகம் வரும் அளவு மாற்றம்.. காதல் படுத்தும் பாடு போல நினைச்சா அவன் ஒரே முறைப்பு.. அம்மா தங்கைகாக அவளுக்கு ஊரை சுற்றி காட்டுபவன் தனியாக மாட்டுபவளிடம் அவளின் பழக்கங்கள் சொல்லி தவறாக பேசி தவறாக நடக்க அவள் இல்லை நான் அப்படி இல்லை உங்களை மட்டும் காதலிக்கிறேன் எனக் கூறும் பொழுது என்னடா இவ முழு பூசணிக்காயை சோத்துல மறைக்கிறா அப்படினு தோணும்... இவ்வளவும் மீறி அவள் செய்யும் வம்படிகளில் காதல் வருது அவனுக்கு. எப்படிடா இப்படி கவுந்த??

அவளின் வற்புறுத்தலால் யாருக்கும் தெரியாம கல்யாணம், அதே போல் அவளின் கெஞ்சலில் திருமண வாழ்வு என போகும் போது அவன் வெளியூர் செல்லும் சமயம் அவள் அப்பா அழைக்க போய் விடுகிறாள். திடும் வரும் அவள் திருமண அழைப்பு. அடித்தட்டு பிடித்து ராஜா அங்கு போனால் அவளுக்கு கல்யாணம் முடிந்து விடுது. அங்கு மதுவின் அந்த திமிரான பார்வை தான் அவனுக்கு காட்டி குடுக்குது. ராஜா எதுவும் செய்யாமல் திரும்பி வந்தது, மதுவந்திக்கு தான் கல்யாணம் என் மதுவுக்கு இல்லை என்று சொல்லி எல்லாரையும் குழப்பி , சில சில விடுப்பட்ட புதிர் போல மது சொண்ணதிலாம் இணைச்சு அவளை கண்டுபிடிக்கிறார்.. அங்க அங்க அவளை அறியாமல் நல்லா க்ளூ குடுத்து இருக்கா..

எப்படி மது மதிவந்தி போல் இருக்கா? எப்படி அவங்க வீட்டுக்கு வந்தா? என்ன காரணத்துக்காக சொல்லாமல் போனா? மதுவந்தி மது என்ன சம்பந்தம்? என ஒவ்வொரு முடிச்சா அவிழ்த்து செம்மையாக சொல்லி இருக்கீங்க..

ஆரம்பம் முதலே சின்ன சின்ன விசயங்கள் இருக்கு கெஸ் பண்ண, புரிஞ்சுக்க..
சில விசயங்கள் கெஸ் பண்ண முடிந்தாலும் கடைசியில் வரும் டுவிஸ்ட் கொஞ்சம் எதிர்பார்க்கலை..

மரகதம்: சூப்பர் அம்மா இவங்க.. கண்டிப்பும் பாசமும் நிறைந்த கலவை. எவ்வளவு பாசம் காட்டினாலும் கண்டிக்க வேண்டிய இடத்தில் இவங்க தயங்கரதே இல்லை... அவர்களை பட்டு தெரிந்ததும் அவரின் கோபம் மிக மிக நியாயம் ஆனதே... அந்த நேர்மை அவளை மட்டும் கோவிக்காம மகனையும் சேர்த்து தண்டனை குடுத்த அந்த நியாயம் எனக்கு பிடித்தது..

பாண்டியன்: எவ்வளவு அசிங்க பட்டாலும் இவன் ஒரு ஜோலி பெர்சன்... நல்லா காமெடி பண்ணிட்டு திரியிரான்... சரியான சாப்பாட்டு ராமன். ராஜாவின் தோழன்.. இவனும் அகல்யாவும் போடும் சண்டைகள் சூப்பர்... நண்பனின் நிழல் போல் தான்.. இவனுக்கும் காதல் வருது... இவனின் லீலைகள் தெரிஞ்சு அந்த பெண் எப்படி சரி சொல்லும் என எனக்கு கொஞ்சம் டவுட்..

அகல்: பாசமான மகள், அன்பான தங்கை, தோழி, 2வயது பேபி க்கு தாய், குடும்பத்தின் மீது அலாதி பாசம், அண்ணியின் மீது பிரியம் என சூப்பர்ப். அண்ணன் காதலுக்காக இவங்க உட்கார்ந்து அழுகிறது நெஞ்சை தொட்டுட்டா..

ஆனாலும் யாருக்கும் தெரியாமல் கடைசியில அவங்க சொல்லாமலே எல்லாரும் கண்டு பிடிக்கிற மாதிரி இருக்கது மண்டையில இருக்க கொண்டை மறந்த மோமன்ட் போல கொஞ்சம் கோபம் ஆதங்கம் எல்லாருக்கும்..

மீனா: இப்படிபட்ட தோழிகள் கிடைக்க குடுத்து வைக்கனும்.. தோழி தவறு செய்ததை கண்டித்தாலும் அவள் நிலை மனம் அறிந்து உடன் இருந்து தாயாய் தாங்குவது சூப்பர்... இவள் காதலும் அவனை சுத்தலில் விடுவதும் சூப்பர்..

மது செய்தது சில விசயங்கள் எனக்கு பிடிக்கலை... என்னதான் காதல் பயம் அவள் நிலை என காரணங்கள் இருந்தாலும் கல்யாணத்துக்கு வற்புறுத்தியது கூட ஓகே ஆனால் அவள் எடுக்கும் அவசர முடிவு எவ்வளவு தலைகுனிவு என அவள் யோசிக்கலை.. அதுவும் கிராமத்தில் என்ன தான் முகத்திற்கு முன் பேசலை என்றாலும் பின் பேசுவார்கள்..

மதுவந்தி : பணம் என பணத்தை மட்டும் அளவுகோலாக வைத்தர்க்கு கிடைக்கும் பாடம் கொஞ்சம் அதிகம் என்றாலும் என்னை பொறுத்தவ
 
சூப்பர் விமர்சனம், ரூபி டியர்
அருமையான எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த நாவல் தந்ததற்கு என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள், நிலாசுப்ரமணியன் டியர்
 
சூப்பர் விமர்சனம், ரூபி டியர்
அருமையான எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த நாவல் தந்ததற்கு என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள், நிலாசுப்ரமணியன் டியர்
Thank you banu sister
 
Top