Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என்னுடைய புத்தக அறிவிப்பு 😍

Advertisement

Narmadha Subramaniyam

Well-known member
Member
வணக்கம் வாசக தோழமைகளே!

என்னுடைய நறுங்காதல் பொழிபவனே நாவல் புத்தகமாக வெளியாகியிருப்பதை பெருமகிழ்வுடன் தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

நறுங்காதல் பொழிபவனே கதைக்கு எழுத்தாளர் Devi Manogaran அவர்கள் அளித்த அணிந்துரை இது!

நர்மதாவின், "நறுங்காதல் பொழிபவனே" மிக இயல்பான காதல் கதை.

நாம் வாழ்வில் தினமும் சந்திக்கும், நம்மிடையே, நம் குடும்பங்களில் என எங்கும் காண முடிந்த காதல் திருமண தம்பதிகளின் கதை. கதையின் தொடக்கமே திருமணத்திற்கு பின்னான கதை தான் என்றாலும், கதை நெடுக அவர்களின் காதலையே பேசி செல்கிறது.

திருமணத்திற்கு பின் தங்களின் முதல் சந்திப்பை, முதன்முறையாக பேசியதை, காதல் சொல்லியதை என அழகாக நினைவுப்படுத்தி பார்க்கிறார்கள் தம்பதிகள்.
தனித்தனியாக.

இவர்கள் காதலை வீட்டில் சொல்லியது, பெற்றோரின் எதிர்வினை, பின்னர் கல்யாணத்தின் போது நடந்த சம்பவங்கள் அனைத்தும் சேர்ந்து கதையை சுவாரசியமாக்குகிறது.

கதை முன்னும் பின்னுமாக நகர்ந்தால் கூட குழப்பம் இல்லாமல் இயல்பாக வாசிக்க முடிகிறது. கதையின் சுவாரசியம் குறையாமல் தந்திருக்கிறார் நர்மதா.

ஆதவன் போன்ற ஆண்கள் தான் இங்கு அதிகம். அம்மா மேல் அதிக அன்பு, மனைவி மேல் அதீத காதல், இருவருக்கும் நடுவே சமநிலையை பேண பாடுபடும் யதார்த்த ஆண். மிக அழகாக நம்மை தன் பக்கம் ஈர்கிறார்.

கல்யாண நிகழ்வுகள் அதன் பின் வரும் குழந்தை சம்மந்தமான பகுதிகள், இரு பக்க குடும்பத்து சம்பவங்கள், நிச்சயம் நமக்கும் ஒரு நினைவுத் திருப்பலாக தான் அமையும்.

வேல்விழியின் காதலை, கல்யாண வாழ்வின் சந்தோச, சங்கட பக்கங்களை, அவளின் குழந்தை தனங்களை, குழந்தைக்காக அவள் சந்தித்த இன்னல்களை, அவளின் ஆதவனின் அன்பை, காதலை, அழகம்மாவின் பார்வையில், அவளின் "நறுங்காதல் பொழிபவனே" வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மிக இயல்பான நம்மிடையே நடக்கும் நிகழ்வுகளை கொண்டு சொல்லப்பட்ட இக்கதை நிச்சயமாக உங்களுக்குப் பிடிக்கும்.

நீங்கள் இன்னும் நிறைய நிறைய கதைகள் எழுத, எனது மனமார்ந்த வாழ்த்துகள் நர்மதா.

பிரியங்களுடன்,
தேவி மனோகரன்.


----

விமர்சனம் பகுதியில்
இக்கதைக்கு வாசகர் தரப்பில் Kamakshi Hariharan அவர்கள் பிரதிலிபியில் அளித்திருந்த இந்த விமர்சனத்தைப் புத்தகத்தில் இணைத்திருக்கிறேன்.


விமர்சனம்

ரொம்ப அழகான காதல் ப்ளஸ் குடும்ப கதை. ஆதவன் அளவுக்கு முதிர்ச்சியான மனநிலை ஆண்களுக்கு இருந்தால் நிறைய பிரச்சனைகளை சமாளிக்க முடியும். வேல் விழியும் கணவனின் குடும்ப பாசத்தை புரிந்த பெண்ணாக நடந்து கொள்வது அழகு. இந்த புரிதல் இல்லாததால் தான் நிறைய குடும்ப பிரச்சனைகள் பெரிதாகிறது. திருமணமாகப் போகும் மணமக்கள் படிக்க வேண்டிய கதை.

-- காமாட்சி ஹரிஹரன்


நறுங்காதல் பொழிபவனே
-நர்மதா சுப்ரமணியம்
-Rs.240.00

புத்தகம் கிடைக்குமிடம் :

To order from the Publisher, Call/watsapp - 9444462284

இணையத்தில் வாங்க...

மேலுள்ள எண்ணில் தொடர்பு கொண்டும் அல்லது இணைப்பில் ஆர்டர் செய்தும் புத்தகத்தை பெற்றுக்

கொள்ளலாம் தோழமைகளே!

IMG-20230909-WA0023.jpg

அன்புடன்,

நர்மதா சுப்ரமணியம்
 
Top