Chapter 14
உன்னுடன் உண்டாகும் ஊடலை
ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்,
அதன் பிறகு உண்டாகும் கூடலுக்கான
அஸ்திவாரம் அது என்பதால்..
தன் முன்னே பொத்தென வைக்கப்பட்ட பார்சலை பார்த்து விட்டு அவனை நிமிர்ந்து பார்த்தவள் அடுத்து அவன் சொன்ன செய்தியில், வெகுண்டு எழுந்திருந்தாள்.
“எது தேவையில்லாத வேலை, உங்களை முதல் நாள் எங்க வீட்டிலே பார்க்கும்போதே ஏதோ சரியில்லைன்னு தோணுச்சி, ஆனா அதை ஒதுக்கி வச்சிட்டு, உங்களை நம்பி உங்க கூட ஃபங்சன்க்கு வந்தேன் பாருங்க அது தான் தேவையில்லாத வேலை. படிச்சிருந்தும் உங்க மேலே இருக்கிற நம்பிக்கையிலே என்ன ஏதுன்னு விசாரிக்காம அந்த பத்திரத்திலே கையெழுத்து போட்டேன் பாருங்க அது தேவையில்லாத வேலை. இப்போவும் உங்க கூட வந்து உங்க வீட்டுலே தங்கிட்டு உங்ககிட்டே பேச்சு வாங்கிட்டு இருக்கேன் பாருங்க இதுதான் தேவையே இல்லாத வேலை” என்றாள் அவள் ஏளனமாக.
“நீ எதுக்குடி அங்கே போன”
“இல்லை போயும் போயும் உங்களுக்காக, உங்களை மாதிரி ஒரு ஏமாத்துக்காரனுக்காக தற்கொலைக்கு முயற்ச்சி வரைக்கும் போய்ருக்காளே ஒருத்தி அவளை பார்க்கணும்னு தோணுச்சி. நீ உயிரை விடற அளவுக்கு எல்லாம் ஒண்ணும் வொர்த்து இல்லைன்னு ஆறுதல் சொல்லிட்டு வரலாம்னு போனேன்” என்றவள் தோளை குலுக்கி விட்டு அங்கிருந்து அகன்று சென்றிருந்தாள்.
மீனாட்சி மகனுக்கு போனை போட்டு, “என்னோட அண்ணன் பொண்ணை கொல்லாம விட கூடாதுன்னு இருக்கீங்களா, உன் அத்தைக்கும் அவ பெத்த பொண்ணுக்கும் அவங்க உயிரோட இருக்கிறது பிடிக்கலையா. எதுக்கு எங்க அண்ணன் குடும்பத்தையே வம்புக்கு இழுக்கறாங்க” என்று கத்தியதில், இவளுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை என சற்றே கோபத்துடன் வந்து இருந்த வீரா அவள் அவனை மட்டப்படுத்தி பேசிய விதத்தில் அதையெல்லாம் மறந்து பக்கென சிரித்து விட்டான்.
தன்னை தாண்டி கொண்டு சென்றவளை, கை பற்றி இழுத்தவன், தன்னோடு நெருக்கிக்கொண்டு, “ஆமா எதை வச்சி அப்படி சொல்ற” என்றான் காதோரம் கிசுகிசுப்பாக.
சூடான உஷ்ண காற்றை காதுக்குள் செலுத்தியபடி அவன் கேட்டதில் ஒன்றுமே புரியாமல் விழித்தவள், அவனிடம் இருந்து திமிறிட பார்க்க, இன்னும் நெருக்கியவனோ “சொல்லுடி, எதை வச்சி நான் அவ்வளவு வொர்த்து இல்லைன்னு சொன்ன” என்றான்.
ஓஹ் இவன் அதைத்தான் கேட்கிறானா என்று புரிந்து கொண்டவள், “பின்னே நீங்க என்ன மன்மதனா, இல்லை இந்திரலோக சந்திரனா, உங்களுக்காக சாக போற அளவுக்கு” என்றாள் விடாமல்.
“மன்மதனான்னு கேட்டா, அதை உனக்கு நிரூபிக்கிற சந்தர்ப்பம் இன்னும் கிடைக்கலை அதனால உனக்கு தெரிய வாய்ப்பில்லை, ஆனா காலையிலே என்னை வெச்ச கண்ணை எடுக்காம பார்த்தியே அப்போ நான் இந்திரலோக சந்திரனா உனக்கு தெரியலையா, இல்லை கண்ணாடி வாங்கி தரனுமா போட்டுகிட்டு பார்க்க” என்றான் நக்கலாக.
அப்போ காலையில் இவள் பார்த்ததை அவன் பார்த்திருக்கிறான் என்றதிலேயே தன்னுடைய தன்மானம் அடிபட்டது போல உணர்ந்தவள், “பார்த்தா உடனே நீங்க அழகன்னு முடிவுக்கு வந்திருவீங்களா. வீட்டுல ஒரு முகம் வெளியே ஒரு முகம் காட்டி நடிக்கிற உங்க நிஜ முகம் என்னவா இருக்கும்னு தான் பார்த்தேன்” என அவனிடம் இருந்து விலகியபடியே சமாளித்தாள்.
இதழ் விரிந்த புன்னகையுடன், “ஆமாடி ஒருத்தனை கடிச்சி திங்கிற மாதிரி பார்த்துட்டு, சும்மா தான் பார்த்தேன்னு சொல்லி நல்லாவே சமாளிக்கிற” என்றான் இவனும் விடாமல்.
அவள் இவன் பேச்சை கண்டுகொள்ளாமல் செல்லவும், எட்டி பிடித்து சுவரோரம் நிறுத்தியவன், “வேணும்ணா சொல்லு இங்கே இப்பவே ஒரு மன்மத சாம்ராஜ்ஜியத்தையே உனக்கு நடத்தி காட்டறேன்” என்றான் மயக்கும் புன்னகையுடன்.
அவனை முறைத்து கொண்டே நின்றவள், மெதுவாக கையை உயர்த்தி அவன் இதழை ஒற்றை விரலால் வருடினாள். அவள் செய்கையில் வீரா ஒரு நொடி செயலிழந்து நிற்க, அவள் கடித்த இடத்தை விரலால் தட்டியவள், “காலையிலே வாங்கின கடி மறந்து போச்சு போல, அடுத்த முறை உதடு துண்டாகிடும்” என்று விட்டு நகரந்து விட, அவள் தொட்டதில் அப்படியே கிறங்கி போனவனாக அங்கேயே நின்று விட்டான் வீரா.
அவன் இளகி நின்ற நேரத்தில் அவன் கைசிறைக்குள் இருந்து தப்பியவள் வேகமாக பார்சலை நோக்கி சென்றாள்.
இதழ் பூத்த புன்னகையுடன் சுவற்றின் அருகிலேயே நின்றவன், திரும்பி அவளை பார்த்தபடியே சுவற்றில் ஒற்றை காலை பதித்து சாய்ந்து நின்றான்.
அவள் சென்று பார்சலை பிரிக்க, அதில் அவள் புத்தகங்களும் அவள் பொருட்கள் சிலதும் இருந்தது. “ஒழுங்கா எக்ஸாக்கு படி ஏதாவது டவுட்னா தயங்காம மாமாகிட்டே கேளு சொல்லி தரேன், அதுக்காக எல்லாம் முத்தம் வேணும்னு சண்டை போட மாட்டேன்”
“நான் தனியே படிச்சு ஃபெயில் கூட ஆவேன் உங்ககிட்டே கேட்க மாட்டேன்”
“அடியே பொண்டாட்டி அப்படித்தான் வீம்புக்கு ஃபெயில் ஆகி வைக்காத, அப்புறம் உங்கப்பனுக்கு தான் மானம் போகும்”
“என்ன சொன்னீங்க எங்கப்பாவை மரியாதை இல்லாமலா பேசறீங்க” என அவள் எதையோ தேட, இப்படி அவளை சீண்டி விளையாடுவது அவனுக்கு மிகவுமே பிடித்திருந்தது. அதுவும் கோபத்தில் தான் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் அவள் செய்யும் காதல் வேலைகள் அவனை கிறக்கத்திற்கு உள்ளாக்கி இருந்தது.
இப்போதைக்கு அவளுடன் முழுதாக காதல் களியாட்டம் ஆட அவனுக்கு வாய்ப்பில்லை. அதற்காக கிடைக்கும் வாய்ப்பை விட்டு விட முடியுமா என்ன, கொஞ்சம் அப்படி இப்படி என கிடைப்பதை அனுபவிக்க வேண்டாமா.
அவள் தேடி பிடித்து டிவி ரிமோட்டை எடுத்து அவனை நோக்கி வீச அதற்குள் சரியாக அதை பிடித்து இருந்தவன், “பொருளை எல்லாம் போட்டு உடைக்க கூடாதுன்னு உங்கப்பன் சொல்லி தரலையாடி” என்றான் வேண்டும் என்றே.
“திரும்ப திரும்ப எங்கப்பாவை பத்தி பேசாதீங்கன்னு சொன்னேன்”, அவள் எழுந்து வேகமாக அவள் அருகே, “வாடி செல்லம்” என்று அவன் கையை விரித்து அவளை வரவேற்றான்.
அருகில் நெருங்கி இருந்தவள், அவனது முகபாவனையும், கையை விரித்திருந்த விதமும் சந்தேகத்தை கிளப்ப, அங்கேயே நின்று விட்டாள்.
“என்ன பேபி அங்கேயே நின்னுட்ட, அப்படியே கிட்ட வந்தா ஒரு கிஸ்ஸ் அடிச்சிக்கலாம் நினைச்சேன். காலையிலே கொடுத்த பாரு செம்ம கிஸ்ஸ், இன்னைக்கு நாள் முழுக்க அடி மனசு வரைக்கும் இனிச்சுக்கிட்டே இருந்தது. அதே போல இன்னொன்னு கிடைக்குமா”
அப்போது தான் நியாபகம் வந்தவளாக காலையில் நடந்ததை யோசித்தாள், அதுவரையில் அவன் இதழை கடித்ததை ஏதோ அவனை பழிவாங்கியதாக நினைத்துகொண்டிருந்தவள், இப்போது அவன் உதட்டை கடித்து படி அவளை கிறக்க பார்வை பார்க்கவும், தான் செய்த காரியம் புரிந்தது. ஒரு பொண்ணு உதட்டுல கடிச்சா, அது எந்த ஆணுக்கு தான் வலியா தெரியும். அட மக்கு பொண்ணே என்று தன்னை தானே திட்டு கொண்டாள். இதைத்தான் ஆத்திரத்தில் அறிவிழப்பது என்று சொல்வதா.
இவள் யோசிப்பதை பார்த்து கொண்டிருந்தவன், அவள் அருகில் நெருங்கி வந்து, “ரொம்ப யோசிக்காத, வேணும்னா இப்போ கூட அதே போல கடிச்சுக்கோ, நீ தான் கோபமா இருக்கியே” என்றான் குறும்புடன்.
மிக நெருக்கத்தில் நின்றவனை பிடித்து தள்ளுகிறேன் பேர்வழி என்று அவனை தள்ள முயற்ச்சி செய்ய அவனோ அவளையும் பற்றி இழுத்து கொண்டே சோபாவில் சரிந்தான்.
நெஞ்சம் அவன் மீது மோதி இருக்க, இவள் நெற்றியோ அவன் இதழில் பட்டது. அவனும் இது தான் சமயம் என்று அழுத்தமாக முத்தம் வைத்திருந்தான். அவன் நெற்றியில் முத்தமிடவும் விழி விரித்து அவனை பார்த்தவளை பார்த்து கண்ணடித்து புன்னகை செய்தான் கள்வன்.
அடித்து பிடித்து அவனிடம் இருந்து பிரிந்து எழுந்தவள் வேகமாக தனது உடையை சரி செய்து கொண்டு பால்கனி சென்று நின்று கொண்டாள். உடல் சூடாக இருந்தது, எந்த அளவிற்கு என்றால் எரிமலை குழம்பை கரண்டியால் அள்ளி அவளுள் சிறிது சிறிதாக ஊற்றிகொண்டிருப்பது போல நொடிக்கு நொடி உடல் உஷ்ணம் கூடியது. இது என்ன ஆண் பெண் உறவு பற்றி அறியாதவளா அவள். கல்வியறிவு கேட்டறிவு என்று தெரியும் தானே, அவள் ஒன்றும் அப்பாவி பெண்ணோ அல்லது பொம்பளை சின்ன தம்பியோ இல்லையே. பிறகு இந்த சாதாரண தொடுதலுக்கே ஏன் இப்படி சிலிர்த்து போகிறாள். அவள் கைகள் பால்கனி கம்பியை பற்றி இருக்க, நீண்ட மூச்சுகளாக இழுத்து விட்டு கொண்டிருந்தவளை கதவு நிலையில் வந்து நின்று கைகளை கட்டிகொண்டு பார்த்து நின்றான் வீரபத்ரன்.
அவன் நிற்கிறான் என்று அறிந்தும், திரும்பி பார்க்கவோ கோபமாக பேசவோ அவளால் இப்போது முடியாது போனது. இல்லை மேகவி இது சரி வராது, அவன் உன்னோட உணர்ச்சிகளை தூண்டி உன் மூளையை மழுங்கடிக்க பார்க்கிறான். நீயும் உணர்வுகளுக்கு இடம் கொடுத்து அவன் வலையில் விழுந்து விட தயாராக இருக்கிறாய். இதை எல்லாம் தூக்கி வீசு, அவன் உன்னை ஏமாற்றி இருக்கிறான், உன் தகப்பனை சிறையில் தள்ளுவேன் என்று மிரட்டி உன்னை இங்கே அழைத்து வந்திருக்கிறான். உன் தந்தையை பழி வாங்க போகிறான், அதற்கு நீயும் உடந்தை ஆகி விடாதே என்று மனதிற்குள் இருந்து ஒரு சாத்தான் உரத்து குரல் கொடுக்க துவங்கியது.
பின் புற தோற்றத்தில் அமைதியாக நின்று இருந்தவளின் சாயலில் நெகிழ்ந்தவன், அவன் தொடுகையில் கரைந்த அவள் உள்ளத்தை நினைத்து மகிழ்ந்து கொண்டிருக்க, வெடுக்கென அவன் பக்க திரும்பியவளோ, “என்ன மிஸ்டர் வீரா அவ்வளவு தானா, இன்னும் ஏதாவது வச்சிருக்கீங்களா” என்று கேட்டிருந்தாள் நக்கலாக.
கைகளை மார்பின் குறுக்கே கட்டிகொண்டு நின்றவனோ, இப்போது அவள் வார்த்தைகளையும் அவளையும் உற்று நோக்கி கொண்டிருந்தான். மேலே பேசு என்பது போல அவன் நிற்க, “இல்லை உங்க மன்மத லீலை வேலை எல்லாம் அவ்வளவு தானா, இல்லை இன்னும் இருக்கா. விசுவாமித்ரரை மயக்கிய மேனகையை பத்தி கேள்வி பட்டிருக்கேன், ஆனா இப்போ தாந நேரிலே பார்க்கிறேன், அதுவும் ஆம்பளை மேனகையா” என்றாள் அதே நக்கலுடன்.
“ஸோ, என்ன சொல்ல வர, நான் உன்னை செட்யூஸ் பண்றேன், அப்படித்தானே”
“ஆமா, ஒரு பொண்ணை உடலால பலவந்த படுத்தறதும், இப்படி உணர்ச்சிக்களால பலவீனப்படுத்தறதும், ஒண்ணு தான். இரண்டுமே ஆண்மைக்கு அழகில்லை வீரா” என்றாள்.
“ம்ம் சரி நீ இவ்வளவு சொன்னதால நானும் சில விஷயம் சொல்ல நினைக்கிறேன், சொல்லலைன்னா என்னோட ஆண்மைக்கு அழகில்லை பாரு” என்றான்.
அவள் அமைதியாக அவனை முறைத்து கொண்டு நிற்கவும், அவனே தொடர்ந்தான். “முதல்ல ஏதோ சொன்னியே, உடலாள ஒரு பொண்ணை பலவந்த படுத்தறது, அது ரொம்ப தப்பு. ஒரு பொண்ணை அவ விருப்பம் இல்லாம தொடறது இல்லை பார்க்கிறது கூட தப்பு தான். அதை நான் ஒத்துக்கிறேன், அடுத்து என்னவோ சொன்ன பாரு ஆ, உணர்வுகளால பலவீனப்படுத்தறது, ஒரு பொண்ணு மனசுல ஒருத்தன் இல்லைன்னா அவன் எவ்வளவு பெரிய ..... இவனா இருந்தாலும் அவளை வசியப்படுத்தவே முடியாது” என்றவன் சட்டென அவள் இடையை வளைத்து பிடித்து தன்னோடு இறுக்கி கொண்டான், அவள் விழி விரித்து அவனை பார்க்க “இதோ இப்படி பிடிச்சா, பளார்னு கன்னத்திலே அறையனும், குறைஞ்சது தள்ளியாவது விடனும் அப்படி இல்லாம அவளும் மயங்கி போய் நின்னா, மயக்கினது அவன் தப்பு இல்லை மயங்கினது அவ தப்பு” என்றவன் அவளை பட்டென விட்டு விட்டான். அவன் விட்டதும் தடுமாறி நின்றவள் அவனை பார்க்க,
“இனிமேல் இந்த மாதிரி சீப் உதாரணம் எல்லாம் சொல்லாத, அப்படியே இல்லை நான் தாந உன்னை வலிய மயக்கிறேன்னு நினைச்சா, கட்டின பொண்டாட்டியை தன்கிட்டே மயங்க வைக்க தெரியாதவன் எல்லாம் என்னை பொருத்தவரைக்கும் ஆம்பளையே இல்லையே. புருஷன் தொட்டா பொண்டாட்டி மயங்கணும், பொண்டாட்டி பார்த்தாலே புருஷன்காரன் அவள் கால்ல விழுந்து கிடக்கனும். இதோ இப்படி முறைச்சு பார்க்கிற பாரு இந்த பார்வைக்கே என் மனசு உன் காலடியிலே விழுந்து கிடக்கிற மாதிரி” என்றான் அவள் உயரத்திற்கு குனிந்து நின்றபடி.
அவள் அவனை முறைக்க, “இப்படி முறைச்சிக்கிட்டே இருடி, இதை சொல்றதுல எனக்கு ஒண்ணும் உன்னை மாதிரி ஈகோ கிடையாது. நீ என்னோட பொண்டாட்டி அதுல நான் தெளிவா இருக்கேன், உனக்கு தாந இன்னும் அதுல உறுதி வரலை, அதுக்கு நான் பொறுப்பு இல்லை. அப்புறம் கண்டதை நினைச்சு மனசை போட்டு குழப்பிக்காத படிக்கிற வேலையை பாரு” என்றவன் வெளியேறி விட்டான்.
ஆனால் இவள் தான் அங்கேயே நின்றாள். அவன் சொன்னது எல்லாமே உண்மை தாந, அவன் தொட்டதும் இவள் ஏன் குழைந்து நிற்க வேண்டும். பிடித்து தள்ளி இருக்கலாமே, குறைந்தபட்சம் இவளாவது விலகி வந்திருக்கலாமே இரண்டும் இல்லாமல் மயங்கி நின்று விட்டு அவனை குறை சொல்லி என்ன பயன்.
அட மானங்கெட்ட மனமே இப்போது தானே அவன் உன்னை மயக்க பார்க்கிறான் என்று கூறினாய். இப்போ அப்படியே பல்டி அடித்து திரும்புகிறாயே. இல்லை இது சரி வராது அவனை தன்னிடம் நெருங்க விடவே கூடாது. எப்படியாவது ராகவியை இவனுடன் இணைத்து தனக்கு தேவையான ஆதாரங்களை சேகரிக்க வேண்டும். உன் எண்ணம் எல்லாம் அதில் தாந இருக்க வேண்டும். முனைப்புடன் செயல்படு மேகவி என்று தனக்கு தானே கூறி கொண்டாள்.
நிமிடத்திற்கு நிமிடம் மாறும் இந்த மனநிலை அவளுக்கு பிடிக்கவே இல்லை, இவனிடம் சரண் புக துடிக்கும் அவளது இதயத்தை அறவே வெறுக்க துவங்கினாள். இவன் உன் தந்தையை பழி வாங்க துடிக்கிறவன், உன்னை ஏமாற்றியவன், ஒரு நயவஞ்சகன், இப்படி எல்லாம் மனதில் உருபோட்டு கொண்டாள்.
வெளியே வந்தவனுக்கு அவளது மனநிலை நன்றாகவே புரிந்தது, தந்தையிடம் இருந்து அவளை பிரித்து வந்தவன், ஏமாற்றி திருமணம் செய்தவன் என்று அவனை வெறுக்க நினைக்கிறாள். ஆனால் அவளால் அதை சரியாக செய்ய முடியாது போக அதனால் வந்த கோபத்தினால் அவளையே கேள்விகேட்டு தினறிகொண்டிருக்கிறாள்.
அவள் மனதில் அவன் இருக்கிறான் என்று அவளுக்கு முதலில் புரிய வைக்க வேண்டும், பிறகு அவன் ஏன் இதையெல்லாம் செய்கிறான் என்று சொல்ல வேண்டும். சொன்னால் புரிந்து கொள்வாள். இப்போதைக்கு அவள் படிப்பை முடிக்க வேண்டும், இத்தனை வருட உழைப்பும் கனவும் நிறைவேறும் நேரத்தில் அவளை தொல்லை செய்ய கூடாது என்று நினைத்து கொண்டவன் அதன் பிறகு அவளிடம் இருந்து ஒதுங்கி இருக்க முடிவு செய்தான்.