Chapter 15
நேசத்தூறலாய் நெஞ்சில் விழுந்த காதல்,
மேகவெடிப்பாய் என்னை மூழ்கடித்து போகிறது..
கரை சேர்ந்து விட நினைக்காமல்
அதில் மூழ்கி போக நினைக்கிறேன்...
தேர்வுக்கு சில நாட்களே இருந்ததில் எந்த பேச்சு வார்த்தையும் வைத்து கொள்ளாமல் படிப்பில் கவனமாக இருந்தாள் மேகவினி. அவள் கனவே அவள் தந்தையை போல தானும் ஒரு வழக்கறிஞர் ஆக வேண்டும் என்பது தானே. அதை எதற்காகவும் எக்காரணம் கொண்டும் தவற விட கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள். இப்போது எப்படியோ புத்தகங்கள் கிடைத்து விட்டது இல்லாமல் இருந்தாலும் தோழிகளிடம் சொல்லி போனில் பாடங்களை படித்து கொள்ளலாம் என்று தான் இருந்தாள். ஆனால் இப்போது புத்தகங்கள் கைக்கு வந்ததும் மற்றவைகளை ஒதுக்கி வைத்து விட்டு முழுவதுமாக படிப்பில் மூழ்கி போனாள்.
வீரா எப்போதும் அவளை கவனித்த வண்ணம் இருந்தான். ஆனால் இடையில் புகுந்து எந்த இடைஞ்சலும் செய்யவில்லை. படிக்கும் போது அவளுக்கு உணவுண்ண கூட கீழே செல்ல வேண்டிய அவசியமில்லாமல், ராணி அல்லது அகல்யா யாராவது ஒருவர் உணவை எடுத்து வந்து கொடுத்து விடுவார்கள். இது அவளுக்கு இங்கே புதிதானது என்றாலும் அவளது வீட்டில் இது பழக்கமான ஒன்று தான்.
தேர்வு நேரங்களில் உணவு உண்ண வேண்டும் என்பதையே மறந்து அவள் படித்து கொண்டிருப்பாள். அருணா தான் நேரத்திற்கு உணவு பானம் என எடுத்து வந்து கொடுப்பார். எப்போது தோன்றுகிறதோ அப்போது உண்டுவிட்டு அப்படியே மீண்டும் படிப்பை தொடர்வாள். ஆனால் இங்கே வந்த பிறகு அந்த மாதிரி இருக்க முடியாது, அதுவும் மேசை மீது இருக்கும் உணவை அவர்களே தான் பரிமாறி கொள்ள வேண்டும் என்ற கொள்கை உடைய இந்த வீட்டில் அவளுக்கு உணவை கையில் கொண்டு வந்து கொடுப்பதெல்லாம் எட்டாம் அதிசயம். முதலில் ஆச்சரியமாக பார்க்க, வீரா தான் கொடுக்க சொன்னான் என்று சொல்ல கேட்டு அப்படியா என்று அதை விட்டு விட்டாள்.
ஆனால் அவளுக்கு பிடித்தவையே கிடைத்ததில் துணுக்குற்றவள், “என்ன உங்க அத்தைக்கிட்டே கேட்டு கேட்டு எனக்கு பிடிச்சதை செய்யற மாதிரி இருக்கு” என்றாள் அவனிடம்.
“அப்படியா தெரியுது” என்றான் மாற்று உடை எடுத்து கொண்டே.
“ஆமாம் சந்தேகமே இல்லாம, ஆனா எதுக்கு இவ்வளவு மெனக்கெடனும். எப்படியும் என்னை கஷ்டப்படுத்த தானே எங்க அப்பாக்கிட்டே இருந்து பிரிச்சு கூட்டிட்டு வந்திருக்கீங்க, எதுக்காக இந்த கன்சர்ன் எல்லாம். நான் எப்படி போனா உங்களுக்கு என்ன” என்றாள்.
“மேகவி நீ எக்ஸாம்க்கு படிக்கிற, இதெல்லாம் பேச வேண்டிய நேரம் இது இல்லைன்னு நினைக்கிறேன்”
“இருக்கட்டும் பேசிடலாம் எனக்கு எந்த பிரெச்சனையும் இல்லை, எதுக்காக அக்கறை இருக்கிற மாதிரி நடிக்கனும்னு கேட்டேன்”.
ஒரு சலிப்புடன் அவள் பக்கம் திரும்பியவன், “உனக்கு உண்மையான அன்புக்கும் அக்கறைக்கும் எப்போ வித்யாசம் தெரியுதோ அப்போ இந்த கேள்விக்கு பதில் சொல்லாமலே உனக்கு புரியும்” என்றான்.
“ஓஹ் எங்க அப்பாவை விட உங்களுக்கு என் மேலே அக்கறை இருக்கா” என்று அதிகப்படியாக ஆச்சர்யபட்டாள்.
“உன்னோட அம்மாவுக்கும் இருக்கு அதுவே உனக்கு இப்போ வரைக்கும் புரியலை, இதுல என்னோட.... என இடைவெளி விட்டவன் எங்கே புரிய போகுது” என்று கேட்டான்.
“என்ன உங்களோட, பிளான்க்ஸ் பில் பண்ணுங்க” என்றாள் கைகளை கட்டிகொண்டு அவனை ஏறிட்டவாறு.
“நீயே வாய் விட்டு கேட்கும்போது, சொல்லாம இருக்க முடியுமா” என்றவன் அவள் அருகே வந்தான், அவள் அவனை கூர்மையாக பார்த்து கொண்டிருக்கும்போதே, அவள் முகத்தருகே குனிந்தவன்
“மானே தேனே பொன் மானே இதெல்லாம் நீயே போட்டுக்கோ” என்று அவள் கன்னம் தட்டிவிட்டு சென்று விட்டான்.
போகும் அவனை முறைத்தவாறே நின்றவள், படிப்பதற்கு நியாபகம் வர சென்று படிக்க அமர்ந்தாள்.
அவள் படிப்பு முடியும் வரையில் கூட இதே தான் தொடர்ந்தது, சில நேரங்களில் வந்து “ஏதாவது டவுட்ஸ் இருக்கா” என்று கேட்டான்.
அவளோ காதுவரைக்கும் சிரிப்பை இழுத்து வைத்தபடி “நோ தாங்க்ஸ்” என்றாள்.
அவனோ தோள் குலுக்கி விட்டு நகர்ந்து கொண்டான். இரவில் படித்தபடியே சோபாவில் அமர்ந்து உறங்கி போய் விடுபவள் காலையில் மெத்தையில் இருப்பது வாடிக்கையாகி இருந்தது.
ஒவ்வொரு நாளும் கேட்க வேண்டுமென நினைத்து அப்படியே அந்த கேள்வியை விட்டு விடுவாள்.
என்னவென்று கேட்பது, நீ தான் கும்பகர்ணி போல தூங்கி போகிறாயே என்று அவன் சொல்லி விட்டால், அதனாலே ஒவ்வொரு நாளும் படித்து கொண்டிருக்கும்போதே, இதோடு போதும் எடுத்து வைத்து விட்டு தானே மெத்தையில் சென்று சரிந்து கொள்ளலாம் என்று நினைப்பாள் ஆனால் முடியாது, அங்கேயே தூங்கி வழிந்து போவாள்.
இதற்கிடையில், ராகவி இவளிடம் பேச வேண்டும் என்று இவளது எண்ணை வாங்கியதாக அகல்யா பேச்சு வாக்கில் சொன்னாள்.
“அப்படியா” என்று ஆச்சர்யம் போல காட்டி கொண்டு கேட்டாலும் அதை பெரிதாக எடுத்து கொள்ளாதது போல இருந்தாள்.
“ஆமா அண்ணி நான் கூட எதுக்குன்னு கேட்டேன், அன்னைக்கு அத்தை உங்களை திட்டி பேசிட்டாங்கள்ள அதான் உங்ககிட்டே சாரி சொல்லனுமாம்” என்றாள்.
“அதுதானே பரவாயில்லைன்னு நான் சொன்னேன்னு சொல்லிடு” என்று விட்டாள்.
அதன் பிறகு படிப்பு தேர்வு என்று நேரம் போனது, தேர்வெழுத வீரா தான் இவளை அழைத்து கொண்டு சென்றான்.
“ஏன் தனியா விட்டா திரும்பி வர மாட்டேன்னு நினைப்போ”
“அதெல்லாம் வருவ, ஆனா எனக்கு தான் இன்னும் கொஞ்சம் நேரம் உன் கூடவே இருக்கணும்னு தோனுதே” என்றான்.
“அது சரி, கதை புதுசா நல்லா தான் இருக்கு” என்று எண்ணி கொண்டே கிளம்பினாள். அவளுடன் தானும் கிளம்பினான்.
“தாத்தாகிட்டே சொல்லிட்டு வா”
“ஏன் அவர்க்கிட்டே கேட்டுகிட்டா இங்கே வந்தேன், என்னோட விருப்பம் வந்தேன்”
“என்னது விரும்பி வந்தியா” நின்று திரும்பி அவன் கேட்க, சொல்லி தொலைக்கிறேன் என்று அவர் அறை வாசலில் சென்று நின்றாள்.
அறை வாசலில் நிழலாட, பார்த்தவர்,
“வாடா கண்ணா” என்று பாசமாக அழைத்தார். உணவுண்ணும்போது, எதிர் படும்போது என்று அவர் பாசமாக ஏதாவது பேச முற்படுவார் ஆனால் இவள் தான் எதையும் கண்டுக்காதது போல கடந்து போய்விடுவாள்.
“நான் எக்ஸாம் எழுத போறேன்” விட்டேற்றியாக எங்கோ பார்த்து கொண்டு நின்றவளிடம் “பார்த்து போய்ட்டு பத்திரமா வாடா கண்ணு” என்றார் பாசமாக.
ஆமா என்று சலித்து கொண்டவள், அத்தோடு கிளம்பிவிட்டாள். எதிர்பட்ட விசு தானாகவே, “நல்லா எழுதிட்டு வாம்மா” என்று அனுப்பி வைத்தார். மீனாட்சி மட்டும் ஏதோ இப்போவாவது போறாளே என்ற முக பாவனையுடன் இருந்தாள்.
இருவரும் ஊருக்கு திரும்பி வர, காலேஜ் வாசலிலேயே அவளை எதிர் பார்த்து நின்று இருந்தார் சுகுமார்.
அப்பா என்று ஓடி சென்று அவரை அணைத்து கொள்ள தவித்தவளை தன்னுடன் வேண்டுமென்றே இறுக்கி நிறுத்தி கொண்டவன்,
“அதான் ஒரு வாரம் அங்கே தானே இருக்க போற அப்புறம் என்ன” என்று கேட்டு வைத்தான்.
தானே மகள் அருகே வந்தவர்,
“எப்படிம்மா இருக்க” என்று நலம் விசாரிக்க, “அதுக்கெல்லாம் இப்போ நேரம் இல்லை, போய் எக்ஸாம் எழுதிட்டு வா” என்று என்னவோ பள்ளி செல்ல அடம் பிடிக்கும் சிறுமியை கையை பிடித்து பள்ளி கேட் உள்ளே தள்ளி விடுபவனை போல தள்ளி விட்டான் அவன்.
முறைத்து கொண்டே நின்றவள் “அப்பா நீங்க வீட்டுக்கு போங்க மதியம் வந்திடறேன்” என்று கூறி விட்டு சென்று விட்டாள்.
“ஒரு வாரம் என் பொண்டாட்டி உங்க வீட்டுல தான் தங்க போறா, அதுக்காக ஓவரா அப்பா பாசத்தை பொழிய மாட்டீங்கன்னு நினைக்கிறேன். அப்புறம் உங்க வண்டவாளம் எல்லாம் தண்டவாளத்திலே ஏத்த வேண்டி வரும்” என்று மிரட்டினான் வீரா.
அமைதியாக அவனை முறைத்தபடி தானும் அங்கிருந்து அகன்றார் சுகுமார்.
“அத்தை”
“வீரா, வந்துட்டீங்களா”
“ஆமா அத்தை எக்ஸாம் எழுத போய்ருக்கா, மதியம் கூட்டிட்டு வரேன்”
“சரி வீரா, ஒண்ணும் பிரெச்சனை இல்லையே”
“பிரெச்சனைன்னு எதுவும் பெரிசா இல்லை அத்தை”
“சரிப்பா” என்று வைத்து விட்டார்.
மதியம் அவள் தேர்வெழுதி முடித்து வெளியே வந்த போது வாசலில் தயாராக இருந்தான் வீரா, “ஹே இவர் தான் உன்னோட ஹஸ்பண்ட்டா, செம்மயா இருக்காருடி” என்று கிண்டல் செய்த தோழிகளுக்கு பல்லை காட்டி சிரித்து வைத்தவள் இவன் அருகே வரும்போது அந்த சிரிப்பை அங்கேயே விரட்டி விட்டு வந்தாள்.
எப்போதடா தன்னுடைய வீட்டிற்கு செல்வோம் என்று தவித்து கொண்டிருந்தவளை கொஞ்சமும் நேரம் கடத்தாமல் அழைத்து கொண்டு சென்றான்.
இவளை கண்டதும், “அக்கா, மேகாம்மா” என்று அப்பாவும் தம்பியும் ஆவலாக வர அம்மாவோ சாதாரணமாக வாசலில் நின்று இருந்தவர் மகளை எந்த வித ஆர்பாட்டமும் இன்றி பார்த்து கொண்டிருந்தார்.
ஆமா இவங்களுக்கு என்னைக்கு பாசம் இருந்திருக்கு இப்போ பொத்துகிட்டு வர, என நினைத்தவள் அப்பாவை அணைத்துக்கொண்டாள்.
“உள்ளே வா வீரா” என்று அருணா அழைக்க, இருக்கட்டும் அத்தை நான் கிளம்பறேன் என்றான் அவன்.
“அத்தான், உள்ளே வாங்களேன்” என சஞ்சு அழைக்க ஒரு சிரிப்புடன் அவனிடம் இரண்டு வார்த்தை பேசிக்கொண்டிருந்தவன், கிளம்பும் நேரம் தந்தையுடன் பேசியபடியே இவளை கவனிக்காது போல உள்ளே செல்ல இருந்தவளின் கரம் பற்றி தன் பக்கம் இழுத்திருந்தான்.
அதிர்ந்து திரும்பியவளிடம்,
“புருஷன்காரன் கிளம்பறேன் சின்னதா ஒரு தலையசைப்பை கொடுத்தா என்ன குறைஞ்சா போய்டுவ” என்றான்.
“ஏன் அப்படி இல்லன்னா நீங்க இங்கே இருந்து போகவே மாட்டீங்களோ” அவள் போலியாக புருவம் உயர்த்தி கேட்க, கள்ளி உனக்கு ஆசை அதுதான்னா சொல்லு இங்கேயே மாமனார் வீட்டிலே செட்டில் ஆகிடறேன்” என்றான் அவன் குறும்பாக.
“அப்பா சாமி கிளம்புங்க என் அப்பா வீட்டிலே கொஞ்சம் நிம்மதியா இருந்திருக்கிறேன்” என அவள் சலித்து கொண்டே சொல்ல, அமைதியாக அவளை பார்த்திருந்தவன், “உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேண்டி” என்றான் ஆழ்ந்த குரலில்.
அவன் அப்படி சொன்னதும் ஒரு நொடி அவன் முகத்தை பார்த்தவள், அவன் கண்களில் தெரிந்த காதலில் திகைத்து போனாள்.
உண்மையிலேயே அவன் கண்கள் அப்பட்டமான காதலை காட்டிக்கொண்டிருந்தது. இது உண்மை தானா என்று அவள் நினைக்கும்போதே போ என்று விடுவித்தான்
அவன் அப்படி சொன்ன பிறகும் கூட, பட்டென உள்ளே செல்ல முடியாமல் நின்றவள் மேகாம்மா என்ற தந்தையின் குரலில் நடப்புக்கு வந்து மெதுவாக உள்ளே சென்றாள்.
அவள் உள்ளே செல்லும் வரையில் கூட அங்கேயே நின்று அவளை பார்த்து கொண்டிருந்தவன் பின் வண்டியை எடுத்து கொண்டு கிளம்பினான்.
உள்ளே வந்தவள் தன்னை வா என்று கூட அழைக்காத அம்மாவிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல், தந்தையின் அருகே சென்று அமர்ந்து கொண்டாள்.
“எப்படிப்பா இருக்கீங்க”
“இருக்கேன்மா, நீ ஏம்மா இளைச்சி போய்ட்ட”
“அப்படி எல்லாம் இல்லைப்பா நல்லா தான் இருக்கேன்”
“அங்கே உன்னை கொடுமை படுத்தினாங்களாம்மா”
அவர் கேட்டதை நினைத்து சிரிப்பு கூட வரும்போல இருந்தது மேகவிக்கு, “என்னப்பா நீங்க அதெல்லாம் இல்லை, நீங்க பயபடற மாதிரி எதுவுமே இல்லை” என்றாள்.
“சரிம்மா வா முதல்ல சாப்பிடலாம்”
“ஏய் புள்ளை வந்திருக்கிறது தெரியலை சாப்பாடு எடுத்து வை” என்று உத்தரவிட்டார்.
அருணா அதே அமைதியுடனே சாப்பாட்டை எடுத்து டேபிளில் வைத்து விட்டு எதையோ எடுக்க உள்ளே சென்றார். அதற்குள் மேகவி தன் போக்கை போல, உணவை எடுத்து பரிமாறிக்கொள்ள துவங்க,
“ஏய் அருணா பக்கத்திலே நின்னு சாப்பாடு பரிமாறனும் கூட தெரியாதா” என கத்தினார் சுகுமார்.
“அப்பா விடுங்க நாமளே பரிமாறிக்கலாம் என்று மேகவி, கூற “அட என்னம்மா அவளுக்கு இந்த வீட்டிலே இதை விட்டா வேற என்ன வேலை இருக்கு, வந்து சாப்பாடு போடுடி” என்று அதிகாரம் செய்தார் சுகுமார்.
உள்ளிருந்து அமைதியாக வந்த அருணா கணவன் மகள் மகன் மூவருக்கும் உணவை பரிமாற, மேகவிக்கு உள்ளே ஏதோ போல இருந்தது. அங்கே வீராவின் வீட்டில் மேல் வேலைக்கு ஆட்கள் இருந்த போதும் கூட, தன் அம்மா நின்றபடி எல்லாருக்கும் பரிமாற கூடாது என்று சொல்லிய வீராவின் கருத்துக்களே காதில் விழுந்தது. நிமிர்ந்து அப்பாவை பார்த்தவள், அவர் ஏதோ மேலதிகாரி போலவும் அவரின் கீழே வேலை செய்யும் வேலையாளை போலவும் அம்மாவை ஏவிகொண்டிருப்பது மனதை உறுத்தியது.
“அப்பா நாமே பரிமாறி சாப்பிட்டுக்கலாம்” என்று அவள் அழுத்தமாக கூற, மனைவி மேல் உள்ள கோபத்தால் தான் மகள் அவள் கையால் சாப்பிட விரும்பவில்லை என்று நினைத்த சுகுமார், “சரிம்மா சரிம்மா, உன் கையால கூட என் பொண்ணு சாப்பிட விரும்பலை, நீ போடி” என்று கூறினார்.
அதை கேட்டும் அமைதியாக அருணா உள்ளே செல்ல, “அம்மா நீங்களும் சாப்பிடுங்க" என்று அழைத்தான் சஞ்சய். மேகவிக்கு உள்ளே சுருக்கென்றது, இத்தனையும் பார்த்து பார்த்து சமைத்த அன்னையை சாப்பிடுமாறு அவள் அழைத்திருக்கவில்லை. என்னதான் கோபம் எதிரியே ஆனாலும் கூட சாப்பாட்டு நேரம் வீட்டிற்கு வந்தவரை சாப்பிட அழைப்பது தானே தமிழர் மரபு, அப்படி இருக்கையில் இதை எல்லாம் செய்த அம்மாவை உணவுனன அழைக்க வேண்டும் என்ற பொதுவான அறிவு கூட இல்லாமலா இருக்கிறேன் என்று நினைத்தவள், “அம்மா நீங்களும் சாப்பிடுங்க” என்றாள்.
ஆனால் அருணாவோ இதை எல்லாம் தான் எதிர்பார்க்கவில்லை என்பது போல நீங்க சாப்பிடுங்க என்று விட்டு உள்ளே சென்று விட்டார்.
“அவ கிடக்கிறாம்மா நாம சாப்பிடலாம்” என்று சுகுமார் கூற, பொதுவாக பேசியபடியே மூவரும் உண்டனர்.
உண்டு முடித்து ஓய்வாக அமர்ந்து இருந்தவளிடம், “ஏம்மா அவன் எண்ணை பத்தி ஏதாவது தப்பு தப்பா சொல்லிருக்கானா” என்று கேட்டார்.
“ஏம்பா அப்படி கேட்கறீங்க, இதுவரைக்கும் அப்படி எதுவும் சொன்னது இல்லையேப்பா” என்றாள்.
“இல்லம்மா அவன் அப்படி ஏதாவது சொல்லிருக்க தான் வாய்ப்பு இருக்கு, ஏன்னா அவங்க குடும்பத்துக்கே என்னை பிடிக்காது. அதனால தான் என்னை பழிவாங்கணும்னு தான் இதெல்லாம் பண்ணிக்கிட்டு இருக்காங்க” என்றார் சோகமாக.
“எனக்கு அது புரியவே மாட்டேங்குதுப்பா, இதுவரைக்கும் இந்த கல்யாண நாடகம் எதுக்காக நடந்ததுன்னு எதுவுமே சொல்லலை, ஏன் உங்களை பத்தி கூட ஒரு வார்த்தை தப்பா சொல்லலை ஆனாலும் ஏன் இந்த பிரிவினை நாடகம்னு தான் தெரியலை” என்றாள்.
“அம்மாடி அவங்க வீட்டுலே நான் வீட்டோட மாப்பிள்ளையா இருக்கனும்னு சொன்னாங்க ஆனா எனக்கும் சுயமரியாதை இருக்கு, என்னால அப்படி எல்லாம் இருக்க முடியாதுன்னு சொல்லிட்டேன். அதனால உனக்கு என்ன வருமானம் இருக்கு, எங்களை போல வசதி வாய்ப்பு இருக்கா, எங்க பொண்ணை வச்சி வாழ வக்கிருக்கா அது இதுன்னு பேசினாங்க, அந்த கோபத்திலே நான் உங்களை எல்லாம் இங்கே கூட்டிட்டு வந்துட்டேன் அதுக்கப்புறம் அவங்க வீட்டு வாசல்படியே மிதிச்சது இல்லை. உங்களையும் அனுப்பலை அதுக்காக உன்னை கல்யாணம் பண்ணி அவங்க வீட்டு வாசல்ல என்னை நிக்க வைக்க பார்க்கறான்மா” என்றார்.
மேகவி அவர் சொல்வதை யோசனையுடன் கேட்டுக்கொண்டு இருக்க, “என்னம்மா நீ அப்பா சொல்றதை நம்பலையா” என்றும் கேட்டார்.
“இல்லைப்பா அப்படி நம்பாம இருந்திருந்தா என்ன நடந்ததுன்னு அவர்கிட்டேயே கேட்டு இருப்பேனே, ஆனா உங்களை மட்டும் தான்பா நம்பறேன், எனக்கு உங்க பக்க நியாயம் மட்டும் தான்பா முக்கியம். அதுல உறுதியா இருக்கிறதால தான் ஒரு முடிவுக்கு வந்திருக்கேன்” என்றாள்.
“என்னம்மா”
“அப்பா நானும் கூட சேர்ந்து கையெழுத்து போட்டேன்னு சொல்லிதானே அவர் என்னை அவர் கூட வாழ சொல்றார். ஆனா அவருக்கும் இன்னொரு பொண்ணுக்கும் தொடர்பு இருக்குன்னு சொல்லி அதுக்கு தேவையான ஆதாரத்தோட அதை கோர்ட்ல சப்மிட் பண்ணா, எப்படியும் இதுல இருந்து விடுதலை கிடைக்கும் தானே” என்று அப்பாவிடம் ஆலோசனை கேட்டாள்.