என் ஆயுள் ரேகை நீயடி 26 (இறுதி பகுதி)

Advertisement

Sagee Elumalai

Member
Member
Chapter 26
மனம் தேடும் மார்க்கமொன்று
இருக்குமென்றால்
அது உன் நெஞ்சம்
சேர்வது தானோ...
என் சஞ்சலங்கள் நீக்கி,

என்னை சமநிலையடைய வைக்கிறதே...

புது தாலி நெஞ்சின் நடுவில் மஞ்சம் கொண்டு இருக்க, கணவன் நெஞ்சில் கண் மூடி சாய்ந்திருந்தாள் மேகவினி. அவள் காதோரம் முடியை ஒதுக்கி விடும் சாக்கில் அவன் கன்னம் காதுமடல் என்று விரல்களால் வருடிகொண்டிருந்தான் வீரபத்ரன். தேகம் கூசி சிலிர்த்தது, ஆனாலும் அதை ஒரு மெல்லிய சிரிப்புடன் அனுபவித்து கொண்டிருந்தாள் மனைவி.
என்னவெல்லாம் நடந்திருந்தது இந்த கொஞ்சம் நாட்களில், கோபம் ஏமாற்றம், சண்டை, வீம்பு, பிடிவாதம், பிரிவு, சந்தோஷம் அழுகை, கண்ணீர் புன்னகை இப்படி எல்லாமே இந்த குறுகிய காலத்தில் கண்டிருந்தாள் மேகவி.

ஒரு பெண்ணாய் அவள் இந்த உணர்வுகளை பெற்ற நிமிடம் எல்லாம் ஒரு சேர மனகண்ணின் முன்னே அணிவகுத்து நின்றது. அவன் காதல், குடும்பத்தை சேர்க்க செய்த முயற்ச்சிகள், தான் செய்த அலப்பறைகள் என்று ஒவ்வொன்றாய் நினைவுக்கு வர மெல்லியதாக இதழ்கள் விரிந்தே இருந்தது. பட்டென அதில் இதழ்கள் ஒற்றப்பட, கண்களை திறந்து பார்த்தாள்.

“என்னடி சண்டைகோழி எவ்வளவு நேரம் தான் இப்படி மோன நிலையிலேயே இருப்ப” என்றான் அவள் இதழை கிள்ளி எடுத்து முத்தமிட்டு.

“எனக்கு இது பிடிச்சிருக்கு” என்றாள் அவள் அவன் மார்பில் இன்னும் முகம் புதைத்து கொண்டு.

“பிடிச்சிருக்கு சரி, அதுக்காக மேற்கொண்டு முன்னேற வேண்டாமா” என்றான் அவன் கிறக்கமாக.

“அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம் சும்மா இருங்க வீரா”

“அடியே ஒரே ரூம்லா இவ்வளவு நாளும் சும்மா தாண்டி இருந்தேன், இதுக்கு மேல எல்லாம் என்னால முடியாது” என்றவன் அவள் இதழ்களை தன்னிதழால் பூட்டினான்.

ம்ம் ம்ம், என முதலில் தினறியவள், பிறகு அவனுடன் தானும் ஒன்றி போனாள். இதழ் முத்தம் முடிந்து இடைவேளை வரும் என்று அவள் எதிர்பார்த்திருக்க, அவனோ இனி இடவேளைக்கு இடம் இல்லை என்று அவள் முகம் முழுவதும் முத்தமிட்டு, கழுத்தில் புதைந்து மெல்ல கீழிறங்கி கொண்டு இருந்தான். சுக மயக்கத்தில் கிறங்கி போனாள் மேகவி.

உடலின் பாகங்கள் எல்லாம் புதுவித செல்களை உற்பத்தி செய்து கொண்டிருப்பதை போல எங்கெங்கோ என்னவெல்லாமோ நடந்து கொண்டிருந்தது. என்ன என் உடலில் புதிதாக இறக்கைகள் முளைத்து கொண்டதா, இப்படி காற்றில் மிதக்கிறேனே என்று நினைத்தாள். ஆனால் அவன் தான் அவளை தன் கையில் தாங்கி பால்கனியில் கொண்டு சென்று அமர்ந்தான்.

ஏசி காற்று அல்லாமல் சில்லென்ற இயற்கை காற்று உடலில் பட, இன்னும் வாகாக கணவனுடன் ஒன்றி கொண்டாள் பெண். அவளை நெஞ்சோடு இறுக அணைத்து அப்படியே தன் மடியில் கிடத்தி அமர்ந்தான் அவன். கண் திறந்து பார்த்தாள், கரிய மேகங்கள் வானை சொந்தம் கொண்டாடி கொண்டிருக்க, வெள்ளி நிலவு அங்கே முகம் மறைத்து விளையாடிகொண்டிருந்தது, பார்த்த பார்வை விலக்க முடியாமல் விழிகள் அங்கே விரிந்து கிடக்க, சட்டென ஒரு துளி நெற்றியில் விழுந்தது, படக்கென கணவனை பார்த்தாள்.

“ஜலக்கிரீடை ஸ்டார்ட் பண்ணுவோமா”, என்றான் அவன் கண்ணடித்து.

“எது அதெல்லாம் முடியாது போங்க” என்று அவள் அவன் பிடியில் இருந்து எழுந்து ஓட பார்க்க, அவள் இடையில் கை கொடுத்து தன்னுடன் சேர்த்து கொண்ட நொடி வானம் உடைத்து பெருவெள்ளமாய் கொட்டியது மழை துளிகள்.

“அய்யோ மழை, வீரா வாங்க உள்ளே போகலாம்” என்று அவனையும் அவள் சேர்த்து இழுக்க, இன்னும் அவளை வாகாக அணைத்து கொண்டவன், “மேகவி நம்மளோட ஃபர்ஸ்ட் ஸ்பெஷல் டே ஸ்பெஷல் ஆ இருக்க வேண்டாமா” என்றான்.

“அதுக்கு, இங்கேவா” என்றாள் விழிகள் விரிய.

“எஸ்”

“என்ன எஸ், விளையாடாதீங்க”

“உனக்கு பிடிக்கலைன்னா வேண்டாம், ஆனா இது என்னோட விருப்பம்” என்றான் அவன்.

இதற்குள் மழை அவர்களை மொத்தமாய் அடைந்து இருந்தது. உச்சியில் தொடங்கி உள்ளங்கால் வரையில் ஈர சில்லிப்பும் அது தந்த சிலிர்ப்பும் பரவி இருந்தது.

அவன் கைகள் அவள் இடை வளைத்திருக்க, அவள் விருப்பத்திற்காக முகம் நோக்கி காத்திருந்தான் கணவன்.

“வீரா, ஓபன் பிளேஸ்ல”, அவள் தயங்க “அது தான் உன்னோட கவலையா” என்றான் சிரிப்புடன் அவன் இடைமறித்து.

ம்ம் மேலும் கீழுமாக தலையசைத்தாள் பெண், சட்டென அவளை விலக்கி எழுந்தவன், சுருட்டி விடப்பட்டது இருந்த பாய்களை கீழே இறக்கி விட்டான். மூன்று பக்கமும் விரிந்து ஒரு பாதுகாப்பு காவலர்கள் போல அது நின்று விட, உச்சியில் மட்டும் திறந்திருந்த வெளியில் இருந்து பன்னீர் துளிகளாய் மழை துளி அவர்களை நனைத்து கொண்டிருந்தது.

அதன் பிறகு புருவம் உயர்த்தி அவளை பார்த்து என்ன என்று அவன் வினவ, எட்டி நின்ற கணவனை தாவி அணைத்து கொண்டாள் பெண். முதல் முத்தம் அவளுக்கு தான் அதாவது அவள் பெயர் அச்சிடபட்டு இருந்த அந்த இடத்திற்கு தான். அதிலேயே அவன் கிறங்கி போனான். அடுத்து முகம் முழுவதும் அவன் முத்தமிட துவங்க, இருவருமே சரிசமமான தங்கள் காதலில் ஆற்றலை அறிந்து கொள்ளும் தருணமாய் அது மாறியது.

நீயா நானா யார் வெல்வது என்று முட்டி மோதி முத்தெடுக்கும் படலம் ஆரம்பமானது. தேவைக்கு இங்கே தயக்கம் இருக்காது, என்பது போல இருவருமே எந்த வித தயக்கங்களும் இன்றி தங்களுக்கு தேவையானதையும், தங்கள் இணைக்கு தேவையானதையும் கொடுத்தும் பெற்றும் கொண்டிருந்தனர்.

உடல் என்று வரும்போது ஆணுக்கும் பெண்ணுக்கும் காதல் ஒன்று தான் அது சார்ந்த தேவைகளும் ஆசைகளும் ஒன்று தான். ஆணின் தேவை நிறைவேற்றுவது மட்டுமே பெண்ணின் கடமை என்று இல்லாமல், அவள் ஆசை அறிந்து அவன் நடந்திட, தன் விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்வதில் அவளுமே தயங்கவில்லை.

நான் உன் அடிமை என்று எல்லாவற்றையும் விட்டு கொடுத்து விட்டு தன்னுடைய தேவையை சொல்லாமல் ஏக்க பெருமூச்சு விடும் பெண்களும் இங்கே இருக்கிறார்கள். அது உடல் தேவையோ மனதின் தேவையோ இது தான் எனக்கு வேண்டும் என்று சொல்லி அதை பெற்று கொள்வதில் தவறோ தயக்கமோ தேவையில்லை.

இங்கே உணர்வுகள் தான் புதிதே தவிர, ஒருவருக்கொருவர் நன்கு பரிச்சயமானவர்களே. புது வித உற்சாக களியாட்டம் அவர்களை எங்கெங்கோ இட்டு சென்றது. சொர்க்கம் சென்று திரும்பி வந்து ஒருவரை ஒருவர் பார்த்து வெட்க்கத்துடன் புன்னகைத்து கொண்டனர்.

மூச்சு வாங்க இதழ் பிரித்து சிரித்தவன் அவளின் பதில் புன்னகையில், “ஓகே தானே” என்று கேட்டிருந்தான்.


“ச்சீ, சும்மா இருங்க வீரா” என்று அவனை அடித்தாள்.

“ஹே என்னடி வெட்கபடற, நீ முறைச்சா தான் மூடு ஆகுதுன்னு பார்த்தா, வெட்கப்பட்டா ஓவர் ஸ்பீட்ல மூட் ஏறுதே” என்று சீண்டினான்.

“அய்யோ போங்க” என்று சிணுங்கியவள் அவனை விலக்கி விட்டு எழ பார்க்க, “ஹே பொண்டாட்டி இன்னும் ஷோ முடியலை”, என்று மீண்டும் அவளை தன்னருகே கொண்டு வந்திருந்தான்.

“நான் தான் சொன்னேன்ல, என்கிட்டே இது போல சீ சொல்ல வைக்கிற விஷயங்கள் நிறைய இருக்குன்னு. அதுக்குள்ள போனா எப்படி, வா ஒவ்வொண்ணா சொல்லி தரேன்” என்று அவளை ஒவ்வொரு நிமிடமும் சிணுங்க வைத்து அவள் சிணுங்களில் இவன் தொலைந்து தன்னிடம் அவளை தொலைய வைத்து கொண்டிருந்தான் இரவு முழுவதும்.

விரும்பியே கணவன் கையில் உருகி கலைந்து துவண்டு தொலைந்து, மீண்டும் பிறந்து கொண்டிருந்தாள் பெண்.

வானம் தன் பணியை முடித்து கொண்டு, மழை சாரலை நிறுத்தி இருந்தது. ஆனால் இங்கே இன்னும் அவன் வேலைகள் தொடர்ந்து கொண்டே தான் இருந்தது. ஒரு வழியாக லேசான வெளிச்சம் வெளியே பரவ துவங்க, “அச்சோ வாங்க உள்ளே போகலாம்” என்று அவனை பிடித்து இழுத்தாள் பெண்.

“ஏன் இங்கேயே நல்லா தானே இருக்கு” என்று எத்தனையாவது முறை என்றே அறியாமல் அவளிடம் தன் தேடலை துவங்கியவனை, காதை பிடித்து திருகியவள் “அங்கே பாருங்க வெளிச்சமே வர போகுது” என்று கிழக்கே கண்ணை காட்டினாள் மேகவி.

“ம்ச் அதுக்குள்ள யார் இந்த சூரியனை வர சொன்னது”, என்று வெளிப்படையாகவே சலித்து கொண்டவன் “சரி வா குளிக்கலாம்” என்றான் அவளை கைகளில் அள்ள முயன்றபடியே.

“அங்கேயும் இதே வேலையை செய்யாம இருந்தா சரி தான்” என்று அவள் முணுமுணுக்க “நோ நோ அப்படி எல்லாம் சொல்ல கூடாது, நிச்சயம் இந்த வேலை தான் செய்வேன்” என்று தூக்கி கொண்டு உள்ளே சென்றான் வீரா.

ஒருவழியாக இயற்கை மழையில் குளித்து அந்த அலுப்பு தீர, வெதுவெதுப்பான செயற்கை மழையில் நனைந்து அவள் தலையில் ஒரு பாத் டவலை சுற்றி கொண்டு வெளியே வந்து மெத்தையில் விழுந்தாள். அவளை தொடந்து வெளியே வந்தவன் அவள் அருகேயே பொத்தென விழுந்தபடி, “மேகவி நீ சந்தோஷமா தானே இருக்க” என்று கேட்டான்.

பக்கவாட்டாக அவனை திரும்பி பார்த்தவள், ம்ம், அப்பா அம்மாவுக்கு நடுவுலே இருந்த விரிசல் நீங்க, அப்பா அம்மாவை புரிஞ்சுகிட்டது, நம்ம குடும்பம் ஒண்ணு சேர்ந்தது எல்லாமே சுமூகமா முடிஞ்சதுல நானும் ரொம்பவே சந்தோஷமா இருக்கேன்” என்றாள் இவள்.

அவள் நெற்றி முட்டி அங்கேயே இதழ் பதித்தவன் “கொஞ்சம் நேரம் தூங்கு” என்று அவளை அணைத்து கொண்டான்.

அன்று சுகுமாரன் ஒன்று சொல்லாமல் சென்றிருக்க, அழுத விழிகளுடன் நின்று இருந்த மருமகளை அணைத்தபடி உள்ளே அழைத்து வந்தார் மீனா.

எல்லாருக்குமே என்ன சொல்வது என்று புரியவில்லை, நாம் சொல்வதெல்லாம் சொல்லியாயிற்று இனி அவர் தானே முடிவு செய்ய வேண்டும் என்ற நிலை.

தந்தையிடம் இப்படி எல்லாம் பேச வேண்டி வரும் என்று சிறிது நாட்களுக்கு முன்பு யார் சொல்லி இருந்தாலும் மேகவி அதை நம்பி இருக்க மாட்டாள். அவள் தந்தை அவளுக்கு அத்தனை உயர்த்தி. ஆனால் கண்ணறிந்த நியாயம் என்று வருகையில் அதை உரைப்பது தான் அவளின் குணம்.

தனக்கு தெரிந்த நியாயத்தை அவள் கூறிவிட்டாள், இதில் தந்தையாக அவரை பிரிவது அவளுக்கு வருத்தமாக இருந்தாலும் தாயின் பக்கம் நிற்பதில் எந்த வருத்தமும் இல்லை.

நேராக அம்மாவை தேடி சென்றாள், அருணா அவரின் அறையில் இருந்தார். இதுவரையில் அங்கே எல்லாம் மேகவி சென்றதே இல்லை. அது தான் அருணாவின் அறை என்று அகல்யா கூற அங்கே சென்றாள்.

அங்கே ஜன்னல் வழியாக வெளியே பார்த்து கொண்டு அமர்ந்து இருந்தார் அருணா. அவர் அருகே சென்று நின்றாள்.

“உன் அப்பா வரலையா” என்று கேட்டார் எடுத்ததும்.

இல்லை என்று தலையசைத்தாள்.

“வருவார், கவலைபடாதே” இப்போதும் அதே ஒட்டாத பேச்சு தான், ஆனால் தன் துயர் கவலைகளை ஒதுக்கி வைத்து விட்டு மகளுக்காக ஆறுதல் சொல்கிறார் என்பது இப்போது அவளுக்கு நன்றாகவே புரிந்திருந்தது.

“அம்மா சாரிம்மா” என்றாள் தயங்கியபடியே.

“எதுக்கு”

“நான் கூட உங்களை புரிஞ்சுக்கலையேம்மா, ஏன்மா நீங்களாவது சொல்லி இருக்கலாமே” என்று கேட்டாள்.

“சொல்லி, என்னோட பலவீனமான பக்கத்தை உனக்கும் சொல்லி கொடுக்க எனக்கு பிடிக்கலை. சின்ன வயசில இருந்தே எதுக்கும் ஏங்கினதோ, வேணும்னு சண்டை போட்டதோ, அதுக்கான போராடினதோ கிடையாது. அப்படியே எல்லாம் கையிலே கொடுத்து சொகுசா வளர்த்ததால என்னால எதையும் எதிர்த்து போராட முடியலை. மனசுக்குள்ள இருக்கிறதை வெளியே சொல்ல வேண்டிய அவசியமே இல்லாம எல்லாரும் என்னை புரிஞ்சு நடந்துகிட்ட மாதிரியே, உங்க அப்பாவும் நான் சொல்லாமலே என்னை புரிஞ்சுக்கணும் நினைச்சுட்டு இருந்தேன். அது நடக்காதப்ப என்னை நான் புரிய வைக்கணும்னு கூட உணரலை, அப்படி நான் உணர்ந்தப்ப காலம் போய்டுச்சு. அதை எல்லாம் சொல்லி உன்னையும் என்னை போல ஆக்க விரும்பலை. உங்க அப்பா உங்களுக்கு சுதந்திரம் கொடுத்திருந்தார், சுயமா சிந்திக்கவும் செயல்படவும் கத்து கொடுத்திருந்தார், வக்கீல்க்கு படிக்கிற ஒரு நாளும் நீ என்னை மாதிரி ஆக மாட்டன்னு போக போக தெரிஞ்சுகிட்டேன். எனக்கு வேற என்ன வேண்டி இருக்க போகுதுன்னு நினைக்கிற” என்று கேட்டார்.

ஆணோ பெண்ணோ, ஸ்பூன் பீடிங் செய்ததால வந்த பிரெச்சனை இது என்று அவளுக்கு புரிந்தது. தனக்கு எது பிடிக்கும் பிடிக்காது என்று பிரித்தறிய தெரிய வேண்டும். காலம் எப்போதுமே நமக்கு சாதகமான சூழலை மட்டும் தான் கொடுக்கும் என்று இருக்க கூடாது. பிடித்தால் எஸ் சொல்வது போல பிடிக்காததற்கு நோ சொல்லவும் தெரிந்து இருக்க வேண்டும். அதை அழுத்தமாக சொல்ல வேண்டும். இதெல்லாம் ஆண் பெண் இருவருக்குமே சரி சமமாக இருக்க வேண்டும் என்று நினைத்து கொண்டாள்.

அவள் அமைதியாக இருக்க, “கல்யாண பொண்ணு இப்படி இருக்க கூடாது. போ போய் சந்தோஷமா இரு. உங்க அப்பாவுக்கு பிள்ளைங்க மேல பாசம் அதிகம், நிச்சயமா உன் கல்யாணத்துக்கு வருவாரு” என்று கூறினார்.

ம்ம் என்று ஆமோதிப்பாக தலையசைத்தவள், “அம்மா உங்களுக்கு ஒண்ணு தெரியுமா” என்று கேட்டாள்.

என்ன என்பது போல அருணா பார்க்க, “அப்பாவை முதல்ல உங்களுக்கு கல்யாணத்துக்கு கேட்கும் போதே, வீட்டோட மாப்பிள்ளையா கேட்டாங்களாம். அப்பா முதல்ல வேண்டாம்னு சொல்லிட்டு அப்புறம் சரின்னு சொன்னாராம். அது ஏன்னு உங்களுக்கு தெரியுமாம்மா” என்று கேட்டாள்.

இல்லை என்பது போல அருணா தலையசைத்தார், “மாமாவும் இதையே தான் அப்பாக்கிட்டே கேட்டாராம், அப்பா எனக்கு அருணாவை பிடிச்சிருக்குன்னு மட்டும் தான் சொன்னாராம்” என்றாள்.

இந்த விஷயம் அருணாவுக்கும் புதிதுதான், வேண்டாம் என்று மறுத்து விட்டு மீண்டும் பிடித்தத்தை சொல்லி மணந்திருக்கிறார். ஆரம்பத்தில் அவர் காட்டிய அன்பு அக்கறை எதிலுமே அருணாவிற்கு குறை இருந்தது இல்லை. ஆனால் ஒரு பிரெச்சனை என்று வந்த பிறகு முழுவதுமாக அந்த அன்பும் அக்கறையும் துடைத்து எறியப்பட்டு விடுமா என்று தான் இருந்தது. அப்படியானால் எது உண்மை அந்த அன்பா இல்லை இப்போது காட்டும் இந்த அடக்குமுறையா சரியாக தெரியவில்லை அவருக்கு.

எல்லாருமே எதிர்பார்த்தது போல, சுகுமார் திருமணத்திற்கு வந்திருந்தார். வந்தவர் நேராக மனைவி அருகே வந்து நின்று கொண்டு அவர் கையை பற்றி கொண்டார். என்ன செய்வது கடைசியிலாவது திருந்தி தானே ஆக வேண்டும்.
சடங்குகள் சம்பிரதாயம் என்று பெரிதாக வேதாசலம் குடும்பத்தினர் எதையும் இழுத்து விட்டு கொள்ளவில்லை, மிகவும் நெருங்கிய சிலரை மட்டுமே அழைத்து திருமணத்தை முடித்திருந்தனர்.

கனகாவும், ராகவிக்கு வீராவை மணப்பதில் பெரிதாக விருப்பமில்லை என்று தெரிந்து, வீராவே அஜய்யை பற்றி பேசி இருந்ததாலும் நிறைவுடனே திருமணத்தில் கலந்து கொண்டார். கூடிய சீக்கிரமே ராகவிக்கும் அஜய்க்கும் திருமணம் செய்து வைக்கலாம் என்று எல்லாரும் ஒரு மனதாக முடிவு செய்து கொண்டனர்.

திருமணம் முடிந்து அனைவரும் வீடு திரும்பி இருந்த வேலையில், யாரும் எதிர்பாராமலே சுகுமாரும் வீட்டின் உள்ளே வந்திருந்தார். வந்தவர் முதல் வேலையாக வேதாசலத்திடம் மன்னிப்பை கோரினார். பரஸ்பரம் தங்கள் தவறுகளை ஒருவருக்கொருவர் பேசி தீர்த்து ஒரு மாதிரி சுமூகமான சூழல் நிலவியது. அருணாவை தொடர்ந்து அருணாவின் அறைக்கு வந்தவர் மனைவியின் கையை பற்றி கொண்டு “என்னை மன்னிப்பியா அருணா” என்று கேட்டார்.

“தெரியலை” என்று அருணா பட்டென சொல்ல, இதுவும் தனக்கு தேவைதான் என்று உணர்ந்தவர், “அதுவும் சரிதான் அருணா அப்படி உடனே மன்னிச்சிடாத, அப்புறம் செய்த தப்பை உணர்ந்ததை நான் மறந்திருவேன்” என்றார்.

“ஆமா அந்த பத்து நாள் கணக்கு இன்னும் சொல்லவே இல்லையே நீங்க” என்று கேட்டார் அருணா.

சற்று தயங்கியவர், “அருணா அது கொஞ்சம் நாளா கிளப்புக்கு போனேன், சும்மா அப்படியே கார்ட்ஸ் விளையாடி விளையாடி அதுவே பழக்கம் ஆகிடுச்சு, ஒரு அடிக்ஷன் மாதிரி. எனக்கே அது புடிக்கலை அதனால டாக்டரை பார்த்தேன். அவர் தான் அந்த மாதிரி கார்ட்ஸ் விளையாடற நியாபகம் வரும்போதெல்லாம் அதை மாத்த ஏதாவது கோவிலுக்கு போங்க, யோகா சென்டர்க்கு போங்க, தியானம் செய்யுங்க, அது மூலமா மனசை திடப்படுத்திகோங்கன்னு சொன்னாங்க. ஒரு பத்து நாளைக்கு வெளி உலக காண்டாக்ட் இல்லாம பார்த்துக்கோங்கன்னு சொன்னாரு. அதனால தான் ஃபோன் எல்லாம் ஆஃப் பண்ணி வச்சிட்டு அங்கே போய் இருந்தேன். இதை மாப்பிள்ளை எப்படியோ தெரிஞ்சுகிட்டு மேகாகிட்டே சொல்லிடுவேன்னு சொன்னாரு. என் பசங்க முன்னாடி நான் ஒழுக்கம் இல்லாதவனா காட்டிக்க விரும்பலை, அதனால தான் அன்னைக்கு வீராவை எதிர்த்து நான் எதுவுமே பேசலை. ஆனா அதெல்லாம் விட பெரிய தப்பை நான் செய்துகிட்டு இருக்கேன்னு எனக்கு தெரியாம போச்சு” என்றார் வருந்தும் குரலில்.

முழுவதுமாக கேட்ட அருணா எதுவும் பேசாமல் சென்று விட்டார். ஏற்கனவே இது வீரா மூலம் அவருக்கு தெரிந்த விஷயம் தான். அதை கணவர் தன் வாயால் ஒத்துகொள்கிறாரா என்று தான் பார்த்தார்.

அதற்காகவெல்லாம் அருணா உடனே மனம் மாறி விடவில்லை, தான் கொஞ்சம் விலகலை கடைபிடித்து கொண்டு தான் இருந்தார்.

.......
ஒரு வருடம் கழித்து, கணவனும் மனைவியும் எதிரும் புதிருமாக இரண்டு பக்கம் ஒரு கேஸ்ஸில் ஈடுபட்டு இருந்தனர். கணவன் மனைவி என்பதெல்லாம் வீட்டில் தான், தொழிலில் இல்லை என்று வீரா கூறி விட்டான்.
மேகவினி தான் ஆசைப்பட்டது போல அவளது சொந்த ஃபர்ம் வைத்து நடத்தி கொண்டிருந்தாள். ஒரு கேஸ்ல் கணவனுக்கு எதிராகவே செயல்பட வேண்டி வரும்போது, புன்னகையுடன் அது உன்னோட தொழில் அதுல நீ நேர்மையா இருந்தா போதும் என்று கூறி விட்டான் வீரா.

அன்று அவர்கள் ஒரு வயது பெண் குழந்தைக்கு காதுகுத்து, எல்லாரும் குலதெய்வம் கோவிலில் கூடி இருந்தனர். பிணக்குகள் நீங்கி எல்லாரும் சந்தோஷமாக இருந்தனர். இப்போதெல்லாம் மனைவி பேச்சு தான் தன் மூச்சு என்று இருக்கிறார் சுகுமார். பேத்தி காது குத்துக்கு ஊரில் இருந்து வந்திருந்தனர். சஞ்சய் தாய்மாமன் ஸ்தானத்தில் அமர்ந்திருக்க அவன் மடியில் ஒய்யாரமாக மறந்து இருந்தாள் நீராழீ, வீராபத்ரன் மேகவினி மகள்.

ராகவிக்கு இப்போது நிறைமாதம், அஜய்யும் அவளும் சந்தோஷமாக இருக்கிறார்கள். அகல்யாவுக்கு இது கடைசி வருடம் படிப்பில் இருந்தாள். வேதாசலம் மகன் மருமகள், மருமகன், மகள் பேர குழந்தைகள் கொள்ளு பேத்தி என்று இப்போது பத்து வயது குறைந்தது போல கணப்பட்டார்.

தவறுகள் செய்வது மனித இயல்பு தான். அதை உணர்ந்து தக்க நேரம் வரும்போது திருந்தி கொள்ளவில்லை என்றால் அது தான் மிகப்பெரிய தவறு.

ஆணோ பெண்ணோ ஒருவருக்கொருவர் சமம், தான். யார் மீதோ இருக்கும் கோபத்தையும் வன்மத்தையும் நம்மவர்கள் மீது காட்டுவது, அவர்கள் அன்புக்கு நாம் செய்யும் துரோகம்.

அன்பை விதைப்போம் பேரன்பையே அறுவடை செய்வோம். (படித்ததில் பிடித்தது)

முற்றும்.
 

Advertisement

Advertisement

Back
Top