Chapter 6
எண்ணி கொண்டே இருக்கிறேன்,
என் எண்ணங்களின் நாயகன் உன்னை
நித்தமும் எண்ணி
எண்ணங்கள் யாவும் நீயாகிட
எண்ணம் கொண்டிருக்கிறேன்....
இந்த நாள் விடிந்திட கூடாது என்று நினைத்து கொண்டே கண்களை திறந்தாள் மேகவினி. ஆனால் கண்ணை கூச செய்யும் ஒளி வெள்ளத்தை பாய்ச்சி நான் விடியலை கொண்டு வந்து விட்டேன் என்று கூறி கொண்டு வந்து நின்றிருந்தான் சூரியன்.
நமக்கு தேவைப்படும்போது அத்தான் வருவார் என்ற தம்பியின் வார்த்தையை அவள் ஏன் நம்பி கொண்டிருக்கிறாள் என்று அவளுக்கே தெரியவில்லை.
ஆனால் ஆழ்மனது அவனை தேடிகொண்டிருக்கிறது, அவன் வந்து என்ன செய்து விட போகிறான். அவனுக்கு தான் அவள் மீது எந்த எண்ணமும் இல்லையே. இத்தனை நாட்களில் அலைபேசி வாயிலாக கூட பேசியிராதவன் இப்போது வந்து மட்டும் என்ன பேசி விட போகிறான். அத்தை மகளுக்கு அட்சதை தூவி ஆசி வழங்கி விட்டு செல்வான். மனம் போன போக்கில் நின்றவளை வந்து உலுக்கினான் சஞ்சய்.
“அக்கா, அப்பா உன்னை சீக்கிரம் குளிச்சுட்டு புடவை கட்டிட்டு வர சொன்னார்” என்றான்.
மகளுக்கு தேவையான அனைத்தையும் அவரே சென்று பார்த்து பார்த்து வாங்கி இருந்தார். நேற்று இரவு தான் எடுத்து காட்டி பெருமை பட்டுகொண்டார்.
குளித்து முடித்து மஞ்சலில் நீல நிற பார்டர் கொண்ட அந்த புடவையை நெஞ்சோடு வைத்து பார்த்த போது
“இனி புடவையே பிரிஃபர் (prefer) பண்ணு” என்று கூறிய அவன் வார்த்தைகள் தான் செவியில் வந்து மோதியது.
அவன் சொன்னதற்காகவே இனி அடிக்கடி சேலை கட்ட வேண்டும் என்று நினைத்திருந்தவள், இப்போது ஒரு அழுக்கு சுடிதாரை எடுத்து மாட்டிக்கொண்டு நிற்கலாமா என்ற எண்ணத்திற்கு வந்திருந்தாள்.
அவனோடு பேசியது சில வார்த்தைகள் தானே ஆனால் அசரீரி போல எப்போதும் ஏன் அவள் காதில் ஒளித்து கொண்டிருக்கிறது என்ற கேள்விக்கு தான் அவளிடம் பதில் இல்லை.
ஒரு இயந்திரத்திடம் கொடுக்கப்பட்ட வேலையை அது சரியாக செய்வது போல, புடவை கட்டி அலங்கரித்து அமர்ந்து கொண்டாள்.
அம்மா உள்ளே வந்து அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு பின் ஏதும் சொல்லாமல் சென்று விட்டாள்.
உள்ளே உலைகலனாக நெஞ்சம் கொதிக்க, நடுகூடத்தில் நின்று “எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்” என்று ஹை டெசிபலில் கத்த வேண்டும் போல இருந்தது.
காரணம் கேட்டால் என்னவென்று சொல்வாள், அலைபாய்ந்த மனதோடு அசையாமல் அமர்ந்து இருந்தாள்.
“கவி உங்கப்பா வர சொன்னார்” இயந்திரத்தனமாக கூறி சென்ற அம்மாவை வாசலை கடக்கும் வேலையில் அம்மா என்று அழைத்து நிறுத்தினாள்.
“என்ன” சாதாரணமாக கேட்டவளிடம் என்ன சொல்ல முடியும், ஒண்ணுமில்லை என்று தலைசைத்தாள்.
கூடத்திற்கு வந்து நின்றாள், “மேகா இவர் தான் மாப்பிள்ளை” அமர்ந்து இருந்த மொத்த கூட்டத்தில் ஒருவனை பார்த்து கை காட்டினார் சுகுமார்.
நிமிர்ந்து நின்ற பார்வையை அப்பா சொன்ன பக்கம் திருப்பும் வேலையில், “ஏற்கனவே கல்யாணம் ஆன பொண்ணுக்கு எப்படி மாப்பிள்ளை பார்ப்பீங்க” என்ற குரல் கணீரென்று ஒலித்தது.
திகைத்து விழித்து வாசல் வழி பார்க்க, அங்கே கதவுநிலையை இடிக்கும் அளவிற்கு உயரமாக நின்று இருந்தான் வீரா.
வீரா வந்து விட்டாயா என்று மகிழ முடியாமல் அவன் சொன்ன வார்த்தை உறுத்த அவனைத்தான் புரியாமல் பார்த்து நின்றாள்.
“யாருடா நீ என்ன பேசிட்டு இருக்க” சுகுமார் சீறிக்கொண்டு எழ, அவரை கை காட்டி அமருமாறு சொன்னான் அவன் .
“தம்பி எங்கே வந்து என்ன பேசறீங்க, ஒரு நல்ல விஷயம் நடக்க போற நேரத்திலே ஏன் குழப்பம் செய்றீங்க” வந்திருந்த பெருசுகளில் ஒன்று பேசியது.
“அதுக்காக என்னோட பொண்டாட்டியை அடுத்தவன் கட்டிக்கிட்டு போக விட்டுட்டு வேடிக்கை பார்க்க சொல்றீங்களா”, பேசிக்கொண்டே மேகவினியின் அருகே வந்து நின்றான்.
“என்னது உங்க பொண்டாட்டியா” எல்லோரும் அதிர்ந்து பார்க்க, மேகவியும் அதிர்ந்து தான் பார்த்தாள்.
“ஆமா மேகவினி வீரபத்ரன்”, என்று அவளை தோளோடு அணைத்து கொண்டவன் “கல்யாணம் ரிஜிஸ்டர் பண்ண சர்டிபிகேட்” என ஒரு கட்டு பேப்பரை தூக்கி வீசினான்.
எல்லாரும் ஆர்வமாக எடுத்து பார்த்தனர், முதல் ஆளாக எடுத்து பார்த்த சுகுமார், “இல்லை இது நிஜம் இல்லை” என்று கத்தினார்.
“இவன் ஏதோ பித்தலாட்டம் பண்ணி இருக்கான், என் பொண்ணு அப்படி பட்டவ கிடையாது”, அவர் அடித்து சொல்ல தன்னோடு ஒட்டி நின்றவனை பார்த்து நின்றவள், தந்தையின் குரலில் அப்போது தான் சுயம் பெற்று அவனிடம் இருந்து விலகி நின்றாள்.
“என்னங்க சொல்றீங்க இது உங்க பொண்ணு கையெழுத்து தானே” மாப்பிள்ளையின் தந்தை கேட்க, ஆமாம் என தலையாட்டினார்.
“அப்புறம் எப்படி இது போர்ஜரின்னு சொல்றீங்க, நீங்க வக்கீல் உங்க பொண்ணு வக்கீலுக்கு படிச்சிட்டு இருக்கு உங்களையே ஒருத்தர் போர்ஜரி பண்ண முடியுமா. எங்க காதுல பூ சுத்த பார்க்கறீங்களா. ஏதோ நல்ல குடும்பம் நல்ல பொண்ணா இருக்கும்னு வந்தோம், நல்ல வேலை இப்போவே எல்லாம் தெரிஞ்சு போச்சு. நாளைக்கு கல்யாணம் ஆனா பின்னாடி ஒருத்தன் புள்ளை குட்டியோடு வந்து நின்னாலும் ஆச்சர்யப்படறதுக்கு இல்லை”. அவர் பேசிக்கொண்டே போக, ஏய் என்ற கர்ஜனையோடு அவர் பேச்சை நிறுத்தி இருந்தான் வீரா.
“அதான் தெரிஞ்சு போச்சுல்ல ஒருத்தன் இருக்க கூடாது வெளியே போங்க” என்றவன் வாசலை காட்டினான்.
வந்தவர்கள் எல்லாம் வெளியே சென்றுவிட, “யாருடா நீ” என வீராவின் சட்டையை பிடித்தார் சுகுமார்.
“அதான் சொன்னேனே உங்க பொண்ணோட புருஷன்” என்று அவர் கையை லாவகமாக எடுத்து விட்டான்.
“அப்படினு நான் சொன்னேனா” என கேட்டு இருந்தாள் மேகவி.
இதை எதிர் பார்த்தேன் என்ற பாவனையோடு சோபாவில் சென்று கால்மேல் கால் போட்டு அமர்ந்தவன், “சட்டம் சொல்லுதும்மா” என்றான் நக்கலாக.
“அப்பா இதை நம்பாதீங்க இவர் பொய் சொல்றாரு”
“நான் உன்னை நம்பறேன்மா, ஏண்டா நீயா வந்து என்னென்னமோ பேசினா நான் நம்பிடுவேனா, என் பொண்ணை பத்தி எனக்கு தெரியும்டா. முதல்ல நீ யாரு என்ன திட்டத்தோட இங்கே வந்திருக்க, உனக்கு என்ன வேணும் பணம் காசு ஏதாவது வேணும்னா கேளு பிச்சை போடறேன் என் பொண்ணை அசிங்கப்படுத்த நினைச்ச அவ்வளவு தான்” என்றார் கண்ணில் கொலை வெறியுடன்.
“பிச்சை போடறீங்களா, என்னை என்ன நினைச்சு பேசிட்டு இருக்கீங்க மிஸ்டர் சுகுமார். லீடிங் பத்ரா லா ஃபர்ம் ஓட ப்ரோபரைட்டர் வீர பத்ரன் நான்”. அவன் கூறி முடிக்க அவனை நம்ப இயலாமல் பார்த்தார் சுகுமார்.
இவன் லாயரா குழம்பி நின்றவள் “அதுக்காக அடுத்தவங்களை இப்படித்தான் மோசம் பண்ணுவீங்களா” என்று கேட்டு இருந்தாள் அவனிடம்.
“இதுல மோசம் பண்ண என்ன இருக்கு மேகவி, நீ சுய உணர்வோட தானே கையெழுத்து போட்ட. அப்புறம் எப்படி மோசடியாகும்” என்றான் மீண்டும் நக்கல் தொனியில்.
“மேகா இவனை உனக்கு தெரியுமா, யார் இவன், எதுக்காக நீ கையெழுத்து போட்ட” அப்பா அடுக்கடுக்காய் கேள்விகளை கேட்க, அம்மாவும் அவனும் வெறும் பார்வையாளர்களை போல நின்று கொண்டிருந்தது அவளுக்கு விசித்திரமாக இருந்தது.
“அப்பா நான்.. இவர்.. அவள் தடுமாற, “நானே சொல்றேன் மாமா, நான் உங்களோட மச்சான் விஸ்வநாதனோட பையன்” என்றான் அவன் .
அந்த வார்த்தையில் திகைத்து போன சுகுமார் மகளை பார்க்க, “அப்பா இவர் அம்மாவோட அண்ணன் பையன்னு சொன்னதால அவரோட ஃபங்சனுக்கு போனேன். அங்கே ஃபிரண்ட்ஸ் கேட்டாங்கன்னு கையெழுத்து போட சொன்னார், ஆனா இது கல்யாணத்துக்கு... இப்படி எல்லாம் நடக்கும்னு எனக்கு தெரியாது”.. அவள் அவசரமாக கூறி முடிக்க, “இப்போ எனக்கு எல்லாமே தெரிஞ்சு போச்சும்மா இவனும் உங்கம்மாவும் திட்டம் போட்டு தான் இதெல்லாம் செஞ்சிருக்காங்க” என்றார் அவர்.
“என்னப்பா சொல்றீங்க” மேகவிக்கு ஒன்றுமே புரியவில்லை.
“ஆமாம்மா அதுவும் என்னை பழிவாங்க தான்”
“இங்கே பாருடா நீ என்ன திட்டம் போட்டாலும் சரி அதை உடைப்பேனே தவிர என் பொண்ணை உன் கூட அனுப்பி வைக்க மாட்டேன்” மகளை தோளோடு அணைத்து கொண்டு அவர் சொல்லிட வீரா சத்தமிட்டு சிரித்தான்.
“அவ இப்போ உங்க பொண்ணு இல்லை, என்னோட பொண்டாட்டி. அப்படியே இதையும் பாருங்க”, என இன்னொரு பத்திரத்தை எடுத்து காட்டினான்.
அதில் மேகவி அவனோடு மனம் ஒப்பி ஒரு வருட திருமண வாழ்க்கையை வாழ்ந்து ஆக வேண்டும், அப்படி இல்லையென்றால் அதற்கு ஈடாக பல கோடிகளை அவள் தந்தை நஷ்ட ஈடாக கொடுக்க வேண்டும், என்பதோடு அவர் சிறைக்கு செல்லவும் வாய்ப்பு உண்டு என்று எழுதி அதிலும் மேகவியின் கையொப்பம் இருந்தது.
“ரப்பிஷ் இப்படி எல்லாம் யாரையும் கட்டாயப்படுத்தி வாழ வைக்க முடியாது” என்று சீறினாள் மேகவி.
“ஓஹ் அப்போ இதையும் கேட்டுக்கோ, நீயும் நானும் மியூட்சுவல் டிவர்ஸ்க்கு ஒத்துக்கிற வரைக்கும் அதாவது அதுக்கு முன்னாடி இருக்கிற ஒரு வருஷம் சேர்ந்து வாழ்ந்து தான் ஆகனும் அது தான் சட்டம். இப்போ வசதி எப்படி” என்றான் அதே நக்கலோடு.
முன்னர் அவன் சொன்ன காரணத்திற்கு திகைத்தவள் பின்னர் சொன்ன காரணத்திற்கு முகம் சுருக்கினாள்.
அவள் காதோரம் குனிந்தவன், “ஃபிசிகல் ரிலேஷன்ஷிப்பை சொல்லலை” என்றான் இறங்கிய குரலில்.
“நீங்க எதை சொன்னாலும் நான் ஏத்துக்க மாட்டேன்” சீறினாள் அவள்.
“அப்போ சரி உங்கப்பாவை தூக்கி உள்ளே வைக்க வேண்டியது தான்”
“எங்கப்பா லாயர் அவர் மேலேயே கேஸ் போடுவீங்களா” இப்போது அவள் நக்கலாக கேட்க, “அதை உங்கப்பா கிட்டேயே கேட்டுக்கோ” என்று கூறி விட்டு சென்று உணவு மேசை மீது இருந்த தண்ணீரை எடுத்து பருகினான்.
இதை எல்லாம் ஓரமாக நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்த அம்மாவை பார்த்தவள், அப்பாவை நோக்கி சென்றாள். இடிந்து போய் சோபாவில் அமர்ந்து இருந்தவரை பார்க்க மனம் வலித்தது. “அப்பா சொல்லுங்கப்பா இதெல்லாம் ஒரு விஷயமே இல்லைன்னு சொல்லுங்க” அவரை போட்டு உலுக்கினாள்.
ஆனால் அவர் ஏதும் உரைக்காமல் அமர்ந்து இருந்த விதமே ஏதோ விபரீதத்தை உணர்த்த அம்மாவை பார்த்தாள். அவரிடம் செல்ல போக, “அவங்களுக்கு எதுவும் தெரியாது மேகவி” என்றான் அவன் இடையிட்டு
“ஏன் தெரியாது, நீங்க ரெண்டு பேரும் திட்டம் போட்டு தானே எங்கப்பாவை இப்படி பண்றீங்க, உங்களுக்கு உங்க புருஷனை விட உங்க அண்ணன் மகன் முக்கியமா போய்ட்டானா. என்ன ஒரு நன்றி கெட்டதனம்” அவள் கூறி முடிக்க மேகவி என கர்ஜித்து இருந்தான் வீரா.
“அவங்களுக்கு எதுவும் தெரியாதுன்னு சொன்னேன், இன்னொரு முறை என்னோட அத்தையை ஏதாவது சொன்ன அவ்வளவு தான். கிளம்பு நம்ம வீட்டுக்கு போகலாம்”
“என்ன சார் மிரட்டி பார்க்கறீங்களா, அதுக்கெல்லாம் நான் அசைய மாட்டேன். அப்பா வாங்க நாம போலீஸ் கம்ப்ளைண்ட் குடுப்போம். என்ன செய்யறாருன்னு நான் பார்க்கிறேன்” மார்பின் குறுக்கே கையை கட்டிக்கொண்டு அவள் கூற,
“நீ அவன் கூட போ மேகா” என்றார் சுகுமார்.
“அப்பா” ஆச்சரியமாக தந்தையை பார்க்க, கையில் இருந்த பேப்பர்களை மடித்து வைத்தவர்
“போம்மா” என்றார்.
“என்னப்பா சொல்றீங்க, அவர் என்னை ஏமாத்தி இருக்கார், நம்ப வச்சு ஏமாத்தி இருக்கார். நீங்க எதுக்காக பயப்படறீங்க. இவரால என்ன செய்ய முடியும் பார்க்கலாம்” என்றபடி வீராவை பார்க்க அவனோ மர்மமாக சிரித்தபடி தாடையை தேய்த்து கொண்டே நின்றான்.
“அப்பா நீங்க எதுக்காக பயப்படறீங்க” அவளின் கேள்விக்கு சுகுமார் பதில் கூறாமல் வீராவை முறைத்தார்.
“சட்டப்படி நீ அவர் மனைவி, அதை சட்டப்படியே உடைச்சு உன்னை காப்பாத்தி கூட்டிட்டு வரேன், அப்பாவை நம்புமா” என்றார்.
“அப்பா அப்போ நீங்களும் என்னை நம்பலையா”
“அப்படி இல்லம்மா” சுகுமாரின் குரல் உடைந்தது.
“சொல்லுங்கப்பா நீங்க என்னை நம்புறீங்க தானே”
“நிச்சயம் நம்புறேன் மா”
“போதும்பா, இது என்னோட பிரெச்சனை நானே இதுல இருந்து வெளியே வந்திருவேன். நானும் வக்கீலுக்கு தான் படிச்சிருக்கேன், என்னை எப்படி காப்பாத்திக்கனும் எனக்கு தெரியும். இந்த கல்யாண விலங்கை உடைச்சி, இவருக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லைன்னு சட்டப்படி விலகி வரேன். உங்க பொண்ணா மட்டும் திரும்பி வரேன்” என்றவள் வீட்டை விட்டு வெளியேறினாள்.
அவள் சென்றதும் சுகுமார் அருகே வந்த வீரா, “உங்க பொண்ணு உங்களுக்கு முக்கியம்னு நினைக்கிறேன் மிஸ்டர் சுகுமார்”, என்று கண்ணை சிமிட்டி விட்டு அருணாவை பார்த்தான். அவர் கண்கள் கலங்கி நிற்க, இவன் கண்ணை மூடி திறந்து சமாதானம் சொல்லிவிட்டு கிளம்பினான்.
அவர்கள் வெளியேறியதும் இதை எல்லாம் நம்ப முடியாமல் பார்த்து கொண்டிருந்த சஞ்சய், “என்னம்மா நடக்குது இங்கே” என்று கேட்க, “உங்க அப்பாவை போய் கேளு” என்று விட்டு உள்ளே சென்று விட்டார் அருணா.