Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'என் கண்களில் காண்பது உன் முகமே' அத்தியாயம் 29

Advertisement

'என் கண்களில் காண்பது உன் முகமே' அத்தியாயம் 29

அத்தியாயம் 29

“ரொம்ப தாங்க்ஸ் தாமரை! திரும்ப ஊருக்குப் போகும் வரை இப்படியொரு மல்லிப்பூ சாதமும், சுள்ளுனு ஒரு மிளகு ரசமும் கிடைக்குமானு தெரியலை! என் நாக்கு செத்துப் போய் கிடக்கு! மூணு நாளுக்கப்புறம் இன்னைக்குத்தான் வயிறு நிறைய சாப்பிட்டிருக்கேன்!” என்று கௌதம் சொல்ல

“பேசாம நீ அவளையே கட்டிக்கிட்டு தினம் திருப்தியாய் சாப்பிடலாம்!”

“செய்யலாம்தான்! ஆனால் அவள் காதலன் அஷ்வினையும் என் காதலி தாராவையும், என்ன செய்றது? என்று கௌதம் கேட்க, தாமரை தொடர்ந்தாள்,

“சாப்பாடு மட்டுமே வாழ்க்கயில்லையே சிஸ், அவருக்கு நீங்க காட்டிய அன்பையும், காதலையும் என்னால் காட்ட முடியுமா? கௌதமின் கனவிலும் நினைவிலும் அவன் கண்களில் காண்பது உங்கள் முகத்தை மட்டும்தான்,,,

இப்ப உங்கக்கிட்ட மயங்கிக் கிடக்கும் மனதை யாராலும் சொந்தம் கொண்டாட முடியாது!”

‘ம் அப்படியா?’ என்பதுபோல் அவள் விழி உயர்த்தி அவனைப் பார்க்க, அவன் அவளுக்குப் பதில் சொல்லாமல், தாமரையிடம் பேசத் தொடங்கினான்

“தாமரை, இன்னும் டாக்டரம்மாவுக்கு என் காதல் மேல் நம்பிக்கை வரலை, நீயும் தாராவும் பேசிக்கிட்டிருங்க, எனக்கு ஒரு வேலையிருக்கு கொஞ்ச நேரத்தில் வர்றேன்!” என்று அவன் கிளம்ப,

“நீ தனியா போயிருவியாடா? இடமெல்லாம் தெரியுமா?”

“தோ! என் உள்ளங்கையைப் பார், அதிலிருக்கும் ரேகை மாதிரி, இந்த ஊரோட வழித்தடங்கள் எல்லாம் என் மனசுல அப்படியே பதிஞ்சிருக்கு! இல்லன்னாலும் கூகுள் மேப் இருக்கு, அப்படி ஒண்ணும் நான் தொலஞ்சு போயிற மாட்டேன் இன்னைக்குத் தேதிக்கு என் ஞாபகத்திலிருந்த ஒரு ஃபைல் கூட டெலீட் ஆகாம ஃபுல்லா டவுன் லோட் ஆயிருச்சு! ஏன் நான் செஞ்சுக்கிட்டிருந்த ப்ராஜக்ட், அதை கடைசியா டிப்ளய்மென்ட் பண்ணி அது பயன்பாட்டுக்கு வந்த வரைகூட ஞாபகம் இருக்கு! நான் இப்ப முழு மனிதன். எனக்கு வர்ற தலைவலிகூட இப்பக் குறைஞ்சிருக்கு!”

“அதுக்குக் காரணம் நீங்க இப்ப ஞாபகங்களைத் தேடி உங்க மூளையை ரொம்பக் கசக்கித் துன்புறுத்தலை! உங்க சிந்துவின் ஞாபகங்கள்தான் உங்கள் மூளையிலிருந்து உங்களை ஆட்டிப் படைச்சது. எப்ப அந்த நினைவுகள் உங்களுக்கு முழுசா கிடைச்சு உங்க மூளையும் மனசும் அமதியடையத் தொடங்கியதோ அப்பவே உங்க மூளையோட செல்ஃப் ரிப்பேர் ஒர்க் தொடங்கியிருக்கும். நாம கொஞ்ச நாள் கழிச்சு ஒரு ஃபுல் சீடீஸ்கானும் மற்ற செக்கப்பும் வச்சுக்கல்லாம்.

“அந்த CT SCAN எல்லாம் எனக்கு உன் மேல இருக்க லவ்வை எல்லாம் 3டில காட்டாது இல்லையா?!” இந்தக் கேள்விக்குத் தாமரையே பதில் கூறினாள்

“இது மாதிரி மூளையில் தோன்றும் உணர்வுகளை மின்சாரத் துடிப்புகளா மாத்தி அதுக்கு 3டி வடிவம் கொடுக்கலாமாங்கிற ஆராய்ச்சி எங்க விஞ்ஞான ஆராய்ச்சி கூடத்தில் ஏற்கனவே ஓடிக்கிட்டிருக்கு!”

“ஐய! இது ஒரு மனிதனை அம்மணமாக்குவதற்கு ஈடாகாதா?” அதைக் கேட்ட இரண்டு பெண்களும் ஒரே நேரத்தில் சிரித்தார்கள். இந்த உயிரியல் தொழில் நுட்பம்கிறது ரொம்ப வாஸ்ட் சப்ஜெக்ட். அதில், ‘மனிதனின் மூளையைப் பத்தியும், அதன் உணர்வுகள் பற்றியும் ஆராய்வது ஒரு கிளைக்கதை!

கவலைப்படாத மனித உணர்வுகளை அக்கக்கா தோலுரிக்க இன்னும் பல நூற்றாண்டுகள் ஆகும், அதற்குள் நம் காதல் கதை ஜுஜூஜிபி மேட்டராகிவிடும்!”

“தாரா, நீ தாமரையிடம் மனசு விட்டுப் பேசு! அதுக்குத்தான் இந்த சந்திப்பு, ஓகே பை!” என்று சொல்லிவிட்டு அவன் கிளம்ப புதிதாய்ப் பிறந்த தோழியர் இருவரும் பேசத் தொடங்கினார்கள்.

“தாரா, கௌதம் நினைவுகள் திரும்பியவுடன் உங்கக் கிட்டதான் தன் மனதை முழுசாத் திறந்து காட்டியிருக்கனும்! ஆனால் சிந்துவைப் பற்றிய எண்ணங்களின் நுனி மட்டும்தான் அவருக்குக் கிடைச்சிருந்தது! எங்கே தன் மனைவியை ஏமாத்திட்டோமோன்ற நினைவில் அவர் தவிச்ச தவிப்பு எனக்குத்தான் தெரியும்!”

“சிந்துவின் நினைவுகள் கிடைத்தவுடன், அதை என்கிட்ட கொட்டுனப்புறம் தான் அவர் முகத்தில் ஒரு சந்தோஷமும் மன அமைதியும் சம்மனமிட்டு அமர்ந்தது. அவர் உங்களைவிட்டு ஒடி வநததுக்கு மூணு காரணம். ஒண்ணு அவளோடு வாழ்ந்த வாழ்க்கை நினைவில் வராமல் சிந்து அவனைத் துறத்தியது! ரெண்டு உங்களோட ஆழமான அன்பிலிருந்து தப்பிக்க நினைத்தது, மூணு அம்மாவுக்குக் கொடுத்த வாக்கு!

'தான் காதலித்துத் திருமணம் செய்த பெண்ணை நான்கு ஆண்டுகளாகியும் தன் பெற்றோர் ஒருமுறைகூடப் பார்க்கவில்லையே' என்ற ஏக்கம் அவனிடம் அளவுக்கதிகமாயிருந்தது! அதனால் ‘உன்னை மறுபடியும் சந்திக்கும் போது என் மனைவி குழந்தையோடுதான் சந்திப்பேன்’ என்று அம்மாவிடம் கொடுத்த சத்திய வாக்கைக் காப்பாத்தத்தான் உங்கக்கிட்ட கூடச் சொல்லாம டில்லிக்குப் பயணப்பட்டிருக்கான்! ஏன் தாரா, உங்களுக்குக் கௌதம் மேல் காதல் இல்லையா? அவனைத் திருமணம் செய்ய ஆசை இல்லையா ???”

"என்ன தாமரை இப்படி ஒரு கேள்வியைக் கேட்டுட்டீங்க? அவன் மேல் காதலா? ம்,,,ம்,,,என்னால என் இதயத்தையும் மூளையையும் நீங்க சொன்ன மாதிரி மின்சார அதிர்வுகளாப் படம் போட முடியும்னா அது, ‘கௌதம சித்தார்த்தா நீ எனக்கு வேணும்டானு’ கதறுவதைப் பார்க்கலாம்; நீ என் ஊனோடும் உணர்வுகளோடும் கலந்துவிடுடானு ஏங்கி ஏங்கி அழறது உங்களுக்குத் தெரியும். அது என்னோட காதல்! ஆனால் கல்யாணத்துக்கு இரண்டு மனங்களும் ஒத்துப் போகணும். அதுக்கு நம்பிக்கைதான் ஆதாரசுருதி!

கௌதம் என்னை முழுசா நம்பவில்லை என்ற வலி எனக்கிருந்தாலும் நானும் அவனை முழுதாக நம்பவில்லையோ என்ற வலியும் எனக்கிருக்கு! கௌதமுக்கு ட்ரீட்மென்ட் ஆரம்பிச்சப்பவே எனக்குத் தெரியும் அவனுக்கு சிந்து என்ற மனைவி இருந்து அவள் அளவுக்கதிகமான போதை மாத்திரைகள் சாப்பிட்டு இறந்து போனார் என்ற விஷயம். அந்தக் கடிதத்திலிருந்து என்னால் ஓரளவிற்கு அவர்கள் கதையை ஊகிக்க முடிந்தது! சிந்துவுடைய பிரிவுக் கடிதம் அவனோட ஜீன்ஸ் பாக்கெட்டிலிருந்து எனக்குப் பத்திரமா கிடைச்சது! அவன் உயிருக்குயிராய் நேசித்த குழந்தையும் அந்த விபத்தில் இறந்து போனது! தந்தையும் மகளும் இணை பிரியாமல் அந்தக் குழியில் கிடந்த காட்சியை என் வாழ்நாளில் என்றும் என்னால் மறக்க முடியாது!

அவன் மயக்கத்திலிருந்து கண் விழித்த பொழுதும் அவன் நினைவுகள் திரும்பவில்லை! ஆனால், பவி! பவி என்று அழுது, தவித்து ஆர்ப்பாட்டம் செய்தது என் மனதைத் தாக்கிய அடுத்த காட்சி! நிச்சயமா அவன் குழந்தையின் இறப்பை அவனால் தாங்க முடியாதென்று எனக்குத் தெரியும்! அவன் உயிரைக் காப்பாற்ற வேண்டுமென்றால் அவனுக்கு ஒரு குழந்தையைப் பரிசாக் கொடுக்கணும்!

முதலிலிருந்தே எனக்கு அவன் மேல் இன்னதென்று சொல்ல முடியாத பாசம்! எனக்கு அவன் உயிர் முக்கியம், சோ,,,,யாருமே செய்யத் துணியாத ஒரு காரியத்தை செய்தேன். அவனுக்கருகில் ஒரு குழந்தை வேண்டும் அதுவும் அந்தக் குழந்தையை நான் பவி என்று அழைக்க வேண்டும். அவனை அப்பொழுது கோவைக்கு அருகிலிருந்த ஹாஸ்பிட்டலில் அட்மிட் செய்திருந்தேன்

பிறகு அவனைச் சென்னையில் முதலில் நான் வேலைபார்த்த எனக்கு மிகவும் பரிச்சயமான கிளினிக்கிற்கு அழைத்துச் சென்றேன். என் குழந்தை ‘அபியை’ பவி என்ற பெயரில் அவனருகில் கிடத்தினேன். மறுநாள் அவன் கண்விழித்த பொழுது அவனருகில் என் குழந்தை அபி அவனுடைய பவியாகக் கிடத்தப்பட்டிருந்தாள். அங்கிருந்த யாருக்கும் அவள் என் குழந்தை என்று தெரியாது! ஏன் இந்த ஊர் உலகத்திற்கே எனக்கொரு குழந்தை இருப்பது தெரியாது!

என்னுடைய இறந்த காலத்தில் நான் வாழ்ந்த வாழ்க்கை எனக்கு மட்டுமே சொந்தமானது. அதன் பிறகு அந்த மருத்துவமனையிலேயே என் டாக்டர் தொழிலைத் தொடர்ந்தேன். அந்த மருத்துவமனை சீஃப் என்னை இரு கரம் கொண்டு வரவேற்று அந்த ஆஸ்பத்திரியின் பெரிய பொறுப்பைக் கொடுத்தார்! உங்களுக்குத்தான் தெரியுமே ஒரு நியூரோ சர்ஜனுக்கு எவ்வளவு மதிப்பும் மரியாதையும் உண்டென்று, ஏன்னா மூளை வியாதிகளால் வரும் கூட்டம் நம் இந்தியாவில் மிக மிக அதிகம்.

நான் யாரிடமும் என் மண வாழ்க்கையைப் பற்றியோ குழந்தையைப் பற்றியோ பேசியதில்லை. ஷார்ட்டா சொல்லணும்னா என்னை ஒரு தீவா பலரிடமிருந்து பிரித்துக் கொண்டுதான் சில வருடங்கள் வாழ்ந்து வந்தேன். என் பெற்றோர், அண்ணா தவிர வேறு எந்த உறவையும், தோழமைகளையும், என் வீட்டிற்குள் அனுமதித்ததில்லை; நான் இறுக்கி மூடப்பட்ட ஒரு புத்தகம்.!”

“அப்ப உங்க கணவர் என்ன ஆனார்?”

“என்னோட முழுக்கதையும் கௌதமிற்கு மட்டுமே சொந்தமானது! கோவிச்சுக்காத தாமரை! அவன் என் கதையை கேட்டப்புறம் தான் நம் கல்யாணம்னு சொல்லியிருக்கேன்.

அவனை அந்த விபத்திலிருந்து காப்பாற்றிய பின், முதலில் அவன் மேல் ஒரு வகையான அன்பும் பாசமும் மட்டுமே இருந்தது! அவன்கிட்ட உண்மையை சொல்லி அவன் மனதை உடைக்க மனசு வரலை! அது மட்டும் காரணம் இல்லை நான் எவ்வளவோ சொல்லியும் என் மனம் அவனைப் பிரிய மறுத்தது! அவன் ஒரு கையில் குழந்தையைத் தூக்கிக் கொள்ள அவனுடைய இன்னொரு கரத்தோடு என் கரத்தைப் பிணைத்துக் கொண்டு காடு மேடு மலை எல்லாம் சுற்றி வர ஆசைப்பட்டது!

மூன்று மாதங்களில் இறந்த கால ஞாபக இழப்பைத் தவிர உடலளவில் முற்றிலுமாகக் குணமடைந்தான். அதிலும் அவனுக்கு, பேச்சு மொழியோ மற்ற செயல்பாடுகளோ எதுவுமே மறக்கவில்லை. அவனுக்காகவே அவன் பெயரில் ஒரு வீட்டைப் பதிவு செய்து அவனை என் குழந்தையோடு அதில் குடி அமர்த்தினேன். முதலில் அவன் என் மடியில் குழந்தையாகக் கிடந்தான்.

ஆனால் நாட்கள் செல்லச் செல்ல என் மூளையிலும், இதயத்திலும் ஏறி ஒய்யாரமாய்ப் படுத்துக் கொண்டான். அவனிடம் நிறைய காதல் இருந்தது. அந்தக் காதலில் காமமும் இருந்தது! ஆனால் அவனுக்குள் என்னையே பிரமிக்க வைத்த எழுதப்படாத மாரல் வேல்யூஸ், நல்லொழுக்க நெரிமுறைகள், நிறையவே இருந்தது! என்னை ஒரு நாளும் அவன் தவறாகப் ஸ்பரிசிக்க நினைத்ததில்லை! முதலில் அவன் வாழ்ந்த காதல் வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை இவற்றைத் தூண்டுவதற்காகவே காதல், கல்யாணம் என்று நடிக்கத் தொடங்கினேன். ஆனால் அவனிடம் ஏற்கனவே சரணடைந்திருந்த என் இதயம் அதை நாடகமாக ஏற்றுக் கொள்ளவில்லை. முடிவில் நான் என் இதயத்திடம் தோற்றுப் போனேன்.

நான் மனதார அவனைக் காதலிக்கத் தொடங்கினேன். என்னை அவனுக்குச் சொந்தமாக்கப் போராடினேன். அவனுடைய மனைவி சிந்து உயிரோடில்லை என்பதும் என் மனதிற்குத் தீர்க்கமாய் தெரியும். ஆனால் அனைத்து உண்மைகளையும் அவனிடம் கூற வேண்டுமென்றால் அவனுடைய மூளை வலுப்பெற வேண்டும். அவன் முற்றிலும் இழந்த ஞாபகங்களைத் திரும்பப் பெற வேண்டும்.

இப்பவும் என் டாக்டர் தோழிகளோடு மது, போதை வஸ்த்துக்கள் அதனால் மனிதனுக்கு ஏற்படும் பேரிழப்புகள் பற்றிய ஆராய்ச்சியில் இருக்கிறேன். அவனுடைய சிந்து அளவுக்கதிகமான போதை மாத்திரைகளா சாப்பிட்டுத்தான் இறந்து போயிருக்கிறாள். அவன் ஞாபகமீட்சிக்காக மனிதன் போதைக்கு அடிமையாவது, அதனால் ஏற்படும் பின் விளைவுகள், அவர்கள் சாவு வரை இழுத்துச் செல்லப்படும் மனப் போராட்டம், அந்த போதையிலிருந்து வெளி வர நினைக்கும் மனிதன் சந்திக்கும் போராட்டங்கள் என்று பலவற்றை விவாதித்தாலும், அவன் சிரித்துக் கொண்டே பதில் கூறினானே தவிர அவன் ஞாபகங்கள் கிளறப்படவில்லை.

என் மனம் பொறுமை இழந்தது! முழு மூச்சாக அவனை என்னுடையவானாக்க நினைத்த நான் திருமணம் செய்து கொள்ள அவனை நெருக்கினேன். அவன் அதற்கு ஒரு காலக் கெடுவை நிர்ணயித்தான். விபத்து நடந்து ஒரு வருடம் முடியட்டும் அதுவரை என் ஞாபக மீட்சிக்காகக் காத்திருப்போம் என்று கூறினான்.

சரியாப் பத்து நாள் பாக்கி இருக்கும் பொழுது நீச்சல் குளத்தில் விழுந்த குழந்தையைக் காப்பாற்ற சென்ற பொழுது அந்த ஷாக்கில் சற்றும் எதிர்பாராமல் அவன் நினைவுகள் திரும்பத் தொடங்கியது! இன்னும் ஒரே ஒரு நாள் அவன் வெயிட் பண்ணி இருந்தால் என் கதை முழுவதையும் அவனிடம் கூறி நான் காதல் பிச்சை கேட்டிருப்பேன்.

இப்பவும் என் கடந்தகாலக் கதையைக் கேள்! அதன் பிறகு திருமணம் செய்து கொள்வோம் என்றுதான் நான் கூறுகிறேன். இல்லை திருமணம் புரிந்து கொண்டு உன் கதையைக் கேட்டுக் கொள்கிறேன்னு அவன் சொல்றான் தாமரை. இப்ப நாங்க எங்களுக்காக விதித்துக் கொண்ட காலக் கெடு முடிய நான்கு நாள் தான் பாக்கி இருக்கு!”

“கௌதம் சொல்றதுல ஒரு தப்பும் இல்லையே! உங்க கதை எதுவா இருந்தாலும் நீங்கதான் அவர் மனைவின்றதுல உறுதியா இருக்கார்! அதில் என்ன தப்பிருக்க முடியும்?”

“இல்லை காதலுக்கும், திருமணத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கு! திருமணம் கடைசிவரை நிலைக்கணும்னா கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் முழுமையா நம்பணும், அவர்களுக்குள் எந்த ரகசியமும் இருக்கக் கூடாது!”

“ரகசியங்களை மனதில் பொதிந்து வைக்காத மனிதர்களே உலகத்தில் இருக்க முடியாது தாரா! எல்லோருக்குமே முகமூடிகள் இருக்கும் டாக்டர்!”

“நீங்க சொல்றது நூத்துக்கு நூறு உண்மை தாமரை, ஆனாலும்,,,நான் என்னைப் பற்றிய உண்மைகளைக் கூறாமல் அவன் கைப் பிடித்தால் அது,,, அது ஒரு வகையான துரோகம் இல்லையா!!!?”

“சிந்துவைக் காதலித்து, கரம் பிடித்து அவளோடு காதல் வாழ்க்கை வாழ்ந்து அது முற்றிலுமாகக் கலைந்து போனதை உங்கக்கிட்டச் சொல்லாம,,, கௌதம் உங்களைத் திருமணம் செஞ்சா அதை நம்பிக்கைத் துரோகம்னு சொல்வீங்களா?!”

“இல்லை இது என் வாழ்க்கையும், நம்பிக்கையும் சம்பந்தப்பட்ட விஷயம், பார்க்கலாம் விடுங்க! என்னைப் பொருத்தவரை அவன் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம், என்னிடம் அவன் தன் கடந்த காலத்தைப் பற்றிய முழுக்கதையும் கூறாவிட்டாலும் என் மனம் எந்தக் கேள்வியும் கேட்காமல் முற்றிலுமாக அவனை ஏற்றுக் கொண்டுவிட்டது! ஆனால் என் வாழ்க்கையை அவன் கிட்டயிருந்து ரகசியமா மறைத்து விட்டேன், அந்த ரகசியத்தை அவன்கிட்ட நான் நேரடியா உடைக்கணும்!

“என்ன உங்களுக்கு ஒரு குழந்தையைக் கொடுத்த உங்க காதலரோ, கணவரோ உங்க கூட இல்லை! அதுதானே அந்த ஒன்லைன் ஸ்டோரி!”

“நீங்க சொல்றது சரிதான் தாமரை! அது என் கடந்தகால வாழ்க்கையின் ஒன் லைன் ஸ்டோரிதான்!!! ஆனால் அதற்குள் நான் வாழ்ந்த வாழ்க்கையும் என்னை ஆட்டிப் படைக்கும் உணர்வுகளும் அடக்கம் பண்ணப்பட்டிருக்கே?”

“சரி அப்பக் கௌதமை உட்கார வச்சு உங்க கதையைக் கேட்கச் சொல்லுங்க டாக்டரம்மா!”

“திருமணம் செஞ்சதுக்கப்புறம் என் கடந்த கால நிகழ்வுகளைத் தெரிஞ்சு திருமணம் செஞ்சிட்டமேனு சகிச்சுக்கிட்டு வாழறதைவிட, என்னைப் பற்றி முழுசா தெரிஞ்சு என்னை ஏத்துக்கட்டும்! இல்லை கதையைக் கேட்டப்புறம் ‘சீ! நீ வேணாம்னு என்னை ஒதுக்கினாலும் பரவாயில்லை, திருமணத்துக்கு முன்னாடியே நாங்க நல்ல நண்பர்களாப் பிரிந்துவிடுவோம்!?”

“அப்ப அந்தக்குழந்தை பவி!?” இப்பொழுது தாரா மனம் விட்டுச் சிரித்தாள்.

“கௌதம் சொன்னப்பக்கூட நான் நம்பலை, உன்கிட்ட ஷார்ப்பான மைன்ட் இருக்கு! என்ன செய்யலாம்னு நீயே சொல்லு!”

“என்கிட்ட அந்தக் குழந்தையைக் கொடுத்திருங்க, ஒரு குழந்தை இல்லாம மலடின்ற பட்டத்தோட என் அக்கா படுற பாடு எனக்குத்தான் தெரியும்! அதனால என் அக்கா வாழ்க்கை அழிவது மட்டுமில்லாம அதோட என் வாழ்க்கையையும் சேர்த்து அழிக்கப் பார்த்தாங்க; எப்படியோ அந்தக் கண்டத்தில் இருந்து நான் தப்பிச்சிட்டேன்! தாரா சிஸ், நீங்க என்ன வேணா செய்ங்க, ஆனால் என் ரயில் ஸ்நேகிதனை இன்னொரு முறை மரணத்தின் வாசல் கதவுகளைத் தட்ட வச்சிறாதிங்க, ஏன்னா உங்க இழப்பையோ, இல்லை பவியின் இழப்பையோ அந்த மனசு தாங்காம அப்படியே நொறுங்கிப் போயிருவான்…!” தாரா தாமரைக்குப் பதில் சொல்லும் முன்னரே,

“தாரா என்னோட பெரிய ப்ராப்ளம் சால்வாயிருச்சு!” என்ற சந்தோஷக் கூச்சலோடு தாமரை வீட்டிற்குள் நுழைந்தான் கௌதம். அவன் விட்டுச் சென்ற மகளிர் அணியின் இரண்டு ஜோடிக் கண்களும் அவனை விழிவிரித்துப் பார்க்க,

“ஐயோ என்மேல் இப்படி மலர் அம்புகளை ஏன் எய்யணும்? நான் ஒரு தப்பும் செய்யலம்மா!” என்று சொன்னபடி, நிறைய பார்சல்களைத் தூக்கிக் கொண்டு வீட்டிற்குள் வர,

“என்ன தோழரே டில்லியையே விலைக்கு வாங்கிட்டிங்களா?”

“இல்லமா! அதுக்கு நாம அரசியலில் இருக்கணும், கண்ணே இல்லாதவனுக்கு ஏழு பொண்டாட்டினு சொல்ற மாதிரி, எனக்கு அந்த மாதிரி விபரீத ஆசை எல்லாம் இல்லை. என்னோட பழைய ஆஃபிஸ் போயிருந்தேன். எனக்குக் கொடுத்திருந்த ட்ரான்ஸ்ஃபர் ஆர்டர் இன்னும் லைவ்ல தான் இருக்கு. இன்னும் ஒரு வாரத்துக்குள்ள நான் சென்னை ஆஃபிசில் ஜாயின் பண்ணனும்!”

“என்கிட்ட வேலிட் ரீசன் கேட்டாங்க. ஊருக்கு போகும்போது ஒரு விபத்தில் சிக்கி கொஞ்சம் காம்பிளிக்கேஷன் ஆயிருச்சு, இப்ப நான் முழு சுகத்துடன் இருக்கேன்றதை சொன்னேன். என் திறமை மேல் அவங்களுக்கு அபரிமிதமான நம்பிக்கை இருந்ததால ஒரு ஃபுல் மெடிக்கல் டெஸ்ட் எடுத்து, மருத்துவ ரீதியா நான் ஃபுல்லி ஃபிட்டுனு கன்ஃபர்ம் பண்ணிட்டு கோவை ப்ராஞ்சில் ஜாயின் பண்ணச் சொல்லிட்டாங்க! எனக்கு ஃபுல்லி ஃபிட்டுனு சர்டிஃபிக்கேட் தர இதோ என்கூடவே இருக்காங்க என்னோட டாக்டரம்மா! என்று அவன் ஆர்ப்பாட்டமாய் சிரிக்க,

“என்ன கோவை பிராஞ்சா என்று இரு தோழியரும் ஒரே சுருதியில்கத்த,

'ஹேப்பி, ஹேப்பி இன்றுமுதல் ஹேப்பினு' எனக்குப் பாடி ஆடத் தோணுது! அதுதானே என்னோட நேட்டிவ் பிளேஸ், அங்கதானே என்னோட அம்மா இருக்காங்க!”

“அப்ப நான்!” என்று வெறுமையான பார்வையோடும் அதிர்ச்சியோடும் தாரா கேட்க, அதுவரையில் சிறு குழந்தைபோல் நடனமாடிக் கொண்டிருந்தவன், படக்கென்று அவளை நோக்கித் திரும்பி, தன் கண்களை அவள் கண்களிலிருந்து ஒரு நொடி கூடப் பிரித்துக் கொள்ளாமல் அதை அப்படியே ஆணி அடித்ததுபோல் தன் பார்வையால் அடித்து நிறுத்தியவன், உறுதியான குரலில்,

“ராமன் இருக்கும் இடம்தான் சீதைக்கு அயோத்தி! எப்ப வேணா நீங்க என்னோட வந்து ஜாயின் பண்ணிக்கலாம்; புகழ் பெற்ற மூளை நரம்பியல் நிபுணர் டாக்டர் தாரா எங்க வேணா மருத்துவத் தொழில் செய்யலாம்! மூளை கலங்கினவுங்க நிறையப் பேர் எல்லா ஊரிலும் இருக்காங்க! நீங்க எப்படி எங்க வேணா இருந்துவிட்டுப் போங்க டாக்டர், ஆனால் இனிமேல் நீங்க தாரா கௌதம்னு போட்டாலும் சரி இல்லை கௌதம் தாரான்னு போட்டாலும் சரி, நாம் இருவரும் கணவன் மனைவிதான், திருமணம் நடந்தாலும் நடக்காவிட்டாலும் தாராதான் என் தாரம், நம் குழந்தை பவித்ராவுக்கு இந்த கௌதம்தான் அப்பா, தாராதான் அம்மா! இதை இனி யாராலும் மாற்றமுடியாது!” தொடரும்IMG-IUS 006 cover.jpg
 
Top