Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'என் கண்களில் காண்பது உன் முகமே' அத்தியாயம் 33

Advertisement

'என் கண்களில் காண்பது உன் முகமே' அத்தியாயம் 33

வாசக நண்பர்களே, இந்தக் கதையை முழுவதும் எழுதி முடித்தபின்தான் 19.03.20 ல் என்போஸ்டிங்க் ஆரம்பித்தேன். இன்னும் ஒரே ஒரு தொடர்தான் பாக்கி உள்ளது! இன்று நான் பதிவிடும் அத்தியாயமும், இன்றைய தேதியில் போதையில் தள்ளாடும் தமிழகமும் ஒன்றோ என்றுதான் எனக்கு நினைக்கத் தோன்றுகிறது. இது ஒரே ஒரு பெண்ணின் வாழ்க்கையில் நடந்த அவலம்! இதுபோல் லட்சோப லட்ச பெண்களின் வாழ்க்கையில் நடந்துள்ள எத்தனையோ வித்தியாசமான சோகங்கள் உண்டு.,,, காயாதக் கண்ணீர் துளிகள் உண்டு. அவற்றை எல்லாம் யார் துடைக்கப் போகிறார்கள்.

அத்தியாயம் 33

தாரா கௌதமிடம் தன் துன்பியல் கதையைத் தொடர, அவளின் நடுங்கும் கரங்கள் அவனின் ஒரு கரத்திற்குள் சிக்குண்டு கிடக்க! ‘இட்ஸ் ஓகே நீ சொல்லுடா' என்ற அங்கீகாரம் அவனுடைய அந்தக் குளுமையான பார்வையிலிருந்தது! முதுகில் விரிந்து கிடந்த அவளுடைய கூந்தல் அந்த மென்மையான இரவு விளக்கொளியில் பொன் துகில்களாக மின்ன அவனுடைய மற்றொரு கரம் ஆதரவாய் அவளின் கூந்தலை வருடிக் கொண்டிருந்தது!

எச்சில் கூட்டி விழுங்கிய தாரா, தன் கதையைத் தொடர்ந்தாள்.

“மெல்ல மெல்ல என் வலையில் விழுந்தான் சந்தோஷ். ஒருநாள் என் தோழி ஒருத்தி,

“அந்த விளக்கமாத்துக்கு, உன் தோழமை என்னும் பட்டுக்குஞ்சலம் தேவையாடி?” என்று கேட்டவுடன், சுண்டி எழுப்பப்பட்ட என் கோபத்தில் விட்டேன் பார் ஒரு அறை! அவளுக்குக் கொஞ்ச நாள் காது கேட்டிருக்காது, அவ்வளவு வலுவான் அறை அது!

“அந்த நாத்தம் புடுச்ச சரக்கை அடிச்சிட்டு, போதையில் அலையும் நாய்க்காக என்னை அறைவியாடி?” என்று அவள் வார்த்தைகளால் திருப்பித் தாக்கினாள். அவன் ரெஸ்ட் ரூம் மூன்னாடி போடும் கால் மிதிக்குக்கூட சமானமாகமாட்டான்! அவனை நீ உன் தோழமையால ஒரு அழகிய காஷ்மீர் கார்ப்பெட்டா மாத்தப் போறியா?” நான் அடித்த அடியில் அவள் கண்கள் கலங்கிவிட்டது!

அந்தத் தோழி பேர் சரளா! என் மிக நெருங்கிய தோழியவள், கோவையைச் சேர்ந்தவள். என் வாழ்வின் இன்பத்திலும் துன்பத்திலும் என்னோடு கூடவே பயணம் செய்த ஒரே தோழி.

“சாரிப்பா, ஒரு வேகத்தில் அடிச்சிட்டேன்பா, பிளீஸ்!” என்று அவளை சமாதானப்படுத்திய நான், என் செயல்களை ஞாயப்படுத்தி அவளுக்கு பெரிதாக அறிவுரை வேறு கொடுக்கத் தொடங்கினேன். அவள் கொடுத்த அறிவுரையை அன்றே நான் கேட்டிருந்தால் என் வாழ்க்கை இப்படியோர் மரணப்பள்ளத்தில் விழுந்திருக்காது! மனிதன் என்றுமே பட்டுத்தான் திருந்துவான்!

“இங்க பாரு சரளா! இது மாதிரி போதைக்கு அடிமையானவுங்களை நாம வெறுக்கக் கூடாது, இது மூளையில் ஏற்படும் ஒரு நோய்! நாம் வருங்கால மருத்துவர்கள், அவங்களை வெறுக்காமத் திருத்தப் பார்க்கலாம்”

“இந்தக் குடிகார நாயை; இந்த மொடாக் குடியனை; போதையிலேயே சுத்துபவனை நீ திருத்தப் போறியா! எனக்கென்னவோ அவன் உன் மேல் படரவிடும் பார்வையில் ஒரு பிழை இருப்பது போலவே தோணுதுடி!"

"எல்லாக் குடிகாரன் பார்வையும் அந்தக் குடிபோதையில் ஒருவித மயக்கத்தில்தான்டி இருக்கும். அவன் சிரிக்கிறதே இளிக்கிற மாதிரித்தான் இருக்கும்! நீ ரொம்பக் கவலைப்படுற டியர், நம்மை மீறி எதுவும் நடக்கமுடியாதுமா! இது எவ்வளவு பெரிய தவறான கணிப்பு என்று பின்னாளில் புரிந்து கொண்டேன்! அந்தக் கறுப்புதினத்தில் என்னால் ஒரு குடிகாரனின் வலிமையான பிடியிலிருந்துகூட என்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை.

“போ தாரா, எங்கவீட்டுச் சேவல் முட்டை போட்டாலும் போடுமே தவிர, இந்த மாதிரி ஜென்மங்களை நீ திருத்தவே முடியாது! எங்க குடும்பத்திலும் ஒருத்தன் இருந்தான், என்னோட அக்காவைத் திருமணம் புரிந்து; ரெண்டு, வயதிலும் மூணு வயதிலுமான குழந்தைகளையும், 22 வயதிலிருந்த என் அக்காவையும், துடிக்கத் துடிக்க அனாதையாக்கிவிட்டு; ஒரு நாள் போதையிலேயே செத்துப்போனான்! இதுமாதிரி குடிகாரங்களைக் கண்டதும் சுடும் உத்தரவு போடணும்டி, இல்லைனா, இவங்களை எல்லாம் தனிமைப்படுத்தி, இவனை மாதிரி அடுத்த ஜெனரேஷன் உருவாகாம, சோறு தண்ணி இல்லாமச் சாகடிக்கணும்.

“அம்மாடி இந்த சைவ முயல்குட்டிக்குள் இவ்வளவு கோபமா!”

“இதெல்லாம் இயலாமையில் வரும் கோபம் தாரா! மக்களைக் காப்பாத்த வேண்டிய அரசாங்கமே, தெருவோர டீக்கடைகள் மாதிரி முக்குக்கு முக்கு குடிக்கச் சொல்லி, கள்ளுக்கடைகளை திறந்து வச்சிருக்கும் போது யாரால் இந்தக் குடிமகன்களைக் காப்பாற்ற முடியும்? வெளியில் எங்காவது மிகப் பெரிய க்யூ வரிசை, கட்டுக்கடங்காத கஸ்டமர் கூட்டம், இல்லைத் தள்ளு முள்ளு இருந்ததுனா அது ஒரு சாராயக் கடையாத்தான் இருக்கும். வீட்டிற்குள் கூச்சல், குழப்பம்; பெண்டாட்டிக்கு அடி உதைனு திரியிற பசங்க; சரக்கு வாங்க எவ்வளவு ஒழுக்கமா, பௌயமா வரிசையில் நிப்பாங்க தெரியுமா? அவனைத் திருத்தப் போறேன்னு சொல்லி நீயும் அழிஞ்சு போயிறாத!”

“இல்லப்பா இதை என் வாழ்க்கையில ஒரு சாவாலா எடுத்துக்கிட்டு அவனைத் திருத்திக் காட்டுறேன்!”

“அடப் போடி பைத்தியக்காரி!” என்று அவள் நொடித்துவிட்டுச் செல்ல என் ஈகோ ஏறி நின்று என்னை மிதித்தது! ‘ஏன் உன்னால் ஒரு உயிரை போதையிலிருந்து காப்பாற்ற முடியாதா? முயற்சி செய்; முடியலைனா ஒண்ணும் கெட்டுப் போகப் போறதில்லை!’

ஸோ அவனோடு ஒட்டி உறவாடி அவனை முதலில் வாய் திறந்து பேச வைத்தேன். அவனுக்கு எது பிடிக்கும், பிடிக்காது; அவனுடையை இந்த தீய பழக்கத்திற்கான காரணம் என்று மெல்ல மெல்ல அவன் நாடியைப் பிடிக்கத் தொடங்கினேன். வகுப்பறையில் அவனருகில் அமர்ந்து தூங்காமல் பாடங்களை கவனிக்க வைத்து, அவனுக்கேற்படும் சந்தேகங்களுக்கு விடை கூறி, இப்படி அவன் மனதில் இடம் பிடித்தேன். அப்பொழுதெல்லாம் சில சமயம் போதை இல்லாமல் போதை வஸ்த்துக்கள் சாப்பிட்டாமல் இருக்கத் தொடங்கினான்.

அவன் இப்படித் தனிமையில், போதையில் இருப்பதற்கான காரணத்தைக் கூறத் தொடங்கினான். சொல்லும் பொழுதே கோழை போல் அழுதான், தான் யாருமற்ற அனாதையாய் ரோட்டில் விழுந்து செத்துப் போவது போல் கனவுகள் வருவதாய்க் கூறி ஏங்கி ஏங்கி அழுதான்!

அதுதான் தக்க சமயம் என்று போதையால் வரும் தீமைகள் பற்றி எடுத்துக் கூறத் தொடங்கினேன்! அனைத்தையும் காது கொடுத்துக் கேட்டுக் கொண்டான்!

“மது மற்றும் போதைப் பொருட்களால் ஏற்படும் புயலில் உன் மூளை சிக்கி உள்ளது. அந்தப் போதைப் பொருட்களை எடுத்தவுடன், அவை உனக்கு இன்பக் கிளர்ச்சி கிடைப்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கி, இன்பத்தைப் பரிசாக் கொடுக்கும்! அது நிஜமில்லை அது உன் மூளையால் சிருஷ்டிக்கப்படும் மாயம். மிராஜ்! அது வெறும் கானல் நீர். அந்த இன்பப் போதை தரும் கிளர்ச்சிகளுக்கு உன் மூளை அடிமையாகும் பொழுது அதற்குள் நீ சிறைப்படுகிறாய். அந்தக் கிளர்ச்சிகளை அனுபவிக்க உன் மூளை இன்னும் இன்னும் என்று கேட்டுக் கொண்டேதான் இருக்கும், ஏன்னா முதலில் கிடைத்த கிக் நாளடைவில் கிடைப்பதில்லை!

இதுதான் இந்தப் போதைக்கு உன் மூளை மயங்கி நீ அதற்கு அடிமையாவது!

நீ அதற்கான ஆயிரம் காரணங்களைக் கூறினாலும் அதெல்லாம் உன்னையே சமாதானப்படுத்த அது உன் மூளையேபோடும் போலி நாடகம்! நாளடைவில் இந்தப்போதை உன் மூளையைப் பாதிக்கும் நோயாக மாறுது! இந்தப் போதையால் ஏற்படப் போகும் மோசமான பின் விளைவுகள் உனக்குத் தெரிந்தாலும் அதிலிருந்து நீ மீண்டு வர முடியாம, உன் சவக் குழியை நீ ஆழமாத் தோண்டிக்கிட்டே போவ. அப்படி மாற்றவே முடியாத ஆழ் குளிக்குள்ள; மீளா துன்பத்துக்குள்ள போறதுக்கு முன்னாடி நீ கண் விழிச்சுக்க!”

ரவ்வும், பகலும், நான் என் படிப்போடு சேர்த்து, இன்டர் நெட், முகநூல், வெப் பேஜஸ், கூகுள், என்று பல வழிகளில் சென்று தேடித்தேடி போதைப்பழக்கம் பற்றிய அனைத்தையும் எடுத்து அவனுக்கு மட்டுமில்லாமல் என் வகுப்புத் தோழர்கள் அனைவருக்கும் அதை ஃபார்வெர்ட் பண்ணினேன். இதை வைத்து என்னைச் சுற்றி ஒரு பெரிய கூட்டமே கூடியது. அந்தப் பழக்கமுள்ளவர்களில் பலர் இதன் மூலம் பயனடைந்தார்கள்.

எப்படிப் படிப்படியா அவர்கள் உடம்பின் தலைமை அலுவலகமான மூளை முதல், மற்ற முக்கிய உடல் உறுப்புகளான மூளை, நுரைஈரல், இதயம், கணையம், கல்லீரல், சிறுகுடல் பெருங்குடல், சிறுநீரகம் என அனைத்து உறுப்புகளும் பாதிக்கப்படும் என்பதைப் படத்தோடு விளக்கிக் காட்டினேன்.

இந்தப் போதைக்கு மூளையானது அடிமையானால் அதிலிருந்து மீண்டு வெளிவர முடியாத ஒரு வழிப் பாதையில் மாட்டிக் கொள்ளும், அதை நிறுத்த நினைக்கும் பொழுது ஏற்படும் நோவுகள் அதைவிடக் கொடுமையானவை! என்றேல்லாம் அக்கு வேறு ஆணிவேராகப் பிரித்துப் போட்டு அனைவருக்கும் பாடம் எடுத்தேன்,

பலரின் கிண்டல்களையும் கேலிகளையும் பொருட்படுத்தாமல் என் பணியைத் தொடர்ந்தேன். எப்படித் தூக்கங் கெட்டு, மன அமைதி இழந்து, இரட்டை வாழ்க்கை வாழ்ந்து, எப்பொழுதும் ஒரு ஏக்கத்திலும் எதிர்பார்ப்பிலும் அவர்கள் வாழ்க்கை அழிஞ்சு போகும் என்பதை விளக்கினேன்.

அவங்க டி.என்.ஏவில் பதியப்படும் இந்தப் போதைமயக்கம் எப்படி அவங்களோட வருங்கால சந்ததியரையும் பாதிக்கும்; அவர்களின் மூளையும் மதுவிற்கும், போதைப் பொருட்களுக்கும் ஏங்க ஆரம்பிக்கும்; பலருக்கு இந்தப் பழக்கத்தின் பின்விளைவாய் சந்ததியரே இல்லாமல் போகக் கூடும் என்றேல்லாம் விளக்கினேன்.

என் தோழி சரளாவும் இதற்குப் பின்புலமாய் இருந்து பெரிதும் உதவினாள். குடிகாரர்கள் படும் அவஸ்தையை நேரடியாகக் கண்டுணர்ந்தவள்; ரோட்டில் குடி மயக்கத்தில் விழுந்து கிடந்த தன் அக்கா மாபிள்ளையைப் பார்த்துக் கண்ணீர் உகுத்தவள்; அவளும் அந்தக் கூட்டத்தில், தன் அக்கா மாப்பிள்ளைக்கு ஏற்பட்ட அவலத்தைப் பகிர்ந்து கொண்டாள்.

“சாலையில் மயங்கிக் கிடக்கும் எத்தனை குடிகாரர்களைப் பார்க்கிறோம். ரோட்டில் மயங்கிக் கிடப்பவனுக்கு தெரியாது தன்னுடைய சமுதாய அந்தஸ்து எப்படி சீரழிந்து நிர்வாணமாய் சாலையில் கிடக்கிறதென்று’ இந்த விளக்கங்கள் பல நண்பர்களின் மனதில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது! மற்றவர்களும் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினார்கள. ஆனால் என்னுடைய இலக்கு சந்தோஷைத் திருத்துவதுதானே??? ஸோ இப்பொழுது சந்தோஷை நோக்கி என் கவனத்தைத் திருப்பத் தொடங்கினேன்.

சந்தோஷ், டாக்டர் படிப்பு முடிக்கும்வரை என்னுடைய கிடுக்கிப் பிடியிலயே இருந்ததால் அவனை ஒரளவிற்கு போதை மாத்திரைகளிலிருந்தும், ஊசிகளிலிருந்தும், மது அருந்துவதிலிருந்தும் காப்பாற்ற முடிந்தது!

அந்த மருத்தவக்கல்லூரியிலிருந்து நான் ஒரு டாக்டராக வெளி வருவதற்குள், போதையில் தள்ளாடி வெளியே வரப்போராடும் ஒரு மிகப் பெரிய கூட்டம் என்னைச் சுற்றிக் கூடியது! அதில் போதையின் விளிம்பில் நின்று கொண்டிருந்தவர்கள் பலர் காப்பாற்றப்பட்டார்கள் என்பதுதான் உண்மை.

ஜாலிக்காக தண்ணி அடிப்பவர்கள்; வெறும் நண்பர்களுக்காகத் தண்ணி அடிப்பவர்கள்; எப்பொழுதாவது டைம்பாஸிற்காக அடிப்பவர்கள்; இத்தனை பேரை மயக்கும் மதுவிற்குள் அப்படி என்னதான் இருக்கிறதென்று ஒரு க்யூரியாசிட்டில அதை சுவைத்துப்பார்க்க விரும்புபவர்கள்; ஓசியில் கிடைக்கிறதே என்று மது போதைக்குள் எட்டிப்பார்த்தவர்கள்; காதலிக்காகத்தண்ணி அடிப்பவர்கள்; காதலியைத் தொலைத்துவிட்டுத்தண்ணி அடிப்பவர்கள்; குடும்ப சூழ்நிலையின் இறுக்கம் தாளாமல் மது போதைக்கு அடிமையானவர்கள்; தனிமை, தான் இந்த சமுதாயத்தால் ஒதுக்கப்படுகிறோம், நமக்கு யாருமே இல்லை என்ற மன அழுத்தோடு, தனக்கே ஒரு போலியான போர்வையை போர்த்திக்கொண்டு தண்ணி அடிப்பவர்கள்; என்று எத்தனையோ மெய்யான, பொய்யான காரணங்களுக்காய் போதையில் மயங்கிக் கிடந்த பல நண்பர்களைக் கண்டறிந்து, அவர்களை எல்லாம் ஒரு குழுவாய்ச் செர்த்தோம் நானும் சரளாவும். அதனால் பலரின் கேலிக்கும் கிண்டலுக்கும் துவேஷத்திற்கும் ஆளானோம்.

அவர்கள் தங்களுடைய பிரச்சனைகளை பகிர்ந்து கொண்ட பொழுது அவர்களுக்கு ஒரு மனச்சாந்தி கிடைத்து, மனத்தெளிவு கிடைப்பதை நான் உணர்ந்தேன்.

அடுத்த கட்டமாகப் போதை என்னும் புதை சேற்றிற்குள் மூழ்கி அதிலிருந்து வெளிவர முடியாதவர்களைக் கண்டறிந்தேன்! அவர்களோட மூளை நோய்வாய்ப் பட்டுவிட்டது அவர்களேல்லாம் காப்பாற்றப்பட வேண்டுமென்றால் அவர்களுக்குச் சிகிச்சை அளிக்க வேண்டும்.

எங்களுக்குப் பரீட்சை முடிந்து லாங்க் லீவ் கிடைக்கும் பொழுது அவர்களை எல்லாம் என் பொறுப்பில் எடுத்து போதையைத் தெளியவைக்கும், சிகிச்சைக்கு உட்படுத்தினேன். அதற்கான பிரத்யேகமான மருத்துவமனைகளில் அந்த மாணவர்களுக்கு பிரமாதமான சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. என்னிடம் வேண்டுமளவிற்குப் பணம் கொட்டிக் கிடந்தது. எப்பொழுது வேண்டுமானாலும் நாம் பணத்தை சம்பாதித்துக் கொள்ளலாம். ஆனால் மனித உயிர் விலை மதிப்பற்றது! என் பணம் பல மாணவர்களுக்கு உதவியது! அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களும் இதில் இணைந்து கொண்டார்கள். அதையேத் தங்கள் சேவையாய்க் கொண்ட மருத்துவர்கள் பலரின் மிகச்சிறந்த ஆலொசனைகளும் கிடைத்தது.

இரத்தத்தில் கலந்திருக்கும் ஆல்கஹால், மற்றும் போதைப் பொருட்களின் அளவு மெல்ல மெல்லக்குறைக்கப்பட்டு, மூளை அந்த போதைக்காக மண்டியிட்டு கெஞ்சுவது குறைக்கப்பட்டது. பின்னர் அவர்களுக்குக் குடியை நினைத்தாலே அதன்மேல் வெறுப்பும், அருவருப்பும் ஏற்படுத்தும் மாத்திரை மருந்துகள் வழங்கப்பட்டன!

அந்தப் போதை மன்னர்கள் படும், உடல் மற்றும் மனவேதைகளைக் கண்ணாரக் கண்டவள் நான். அந்த சிகிச்சை எடுத்ததில் சந்தோஷும் ஒருவன். அவனுக்கு அவன் பெற்றோர் சுற்றத்தார் உதவியும், சப்போர்ட்டும் சுத்தமாகக் கிடைக்கவில்லை என்றாலும், நான் அவனுக்கு ஓர் பின்புலமாய் இருந்தேன்.

ஏனென்றால் அந்தக் குடியை, அந்த ஜமீன் குடும்பத்தார் ஒரு ராஜ மரியாதை என்று நினைத்துக் கொண்டிருந்ததே காரணம். நனே சற்றும் எதிர்பாராத வகையில் சந்தோஷின் மூளை, சிகிச்சைக்கு பிரமாதமான ஒத்துழைப்புக் கொடுத்தது! அவன் மறுபடியும் ரிலாப்ஸாகி அந்தமகாக் குடிகாரன் குடியைத் தொட்டால் அவன் கதை முடிந்துவிடும் என்று எங்கள் இருவருக்குமே தெரியும் இந்தச் சிக்கிச்சையால் முதல் வருடம் முதல் நான்காம் வருட முடிவிலிருக்கும் பல மாணவ மாணவியர் காப்பாற்றப் பட்டார்கள் என்பதுதான் உண்மை!

சென்னையில் என் கல்லூரி வாழ்க்கை முடியும் கால கட்டத்திற்குள் நான் வந்தேன். போதைக்கு அடிமையாயிருக்கும் ஒரு மனிதனின் மூளையைத் திருத்தி, அவனை அந்த வியாதியிலிருந்து குணப்படுத்துவது மட்டுமில்லாமல் அதே மதுவின்பால் ஏற்படும் ஏக்கம் அவனுடைய ஜீன் மூலம் தன் சந்ததியரின் ஜீனுக்குள் நுழைவதைத் தடுக்க ஒரு ஜெனிடிக்கல் கரக்ஷன் தேவை என்பதை நான் கண்டறிந்தேன். அதற்காகவே, நரம்பியல், அவை சார்ந்த நோய்கள், மூளை சர்ஜரி என்று அனைத்தையும் கரைத்துக் குடிக்கவே என்னுடைய பட்டய மேற்படிப்பில் நரம்பியலும், மாளிக்கியூலார் உயிரியலில், ஜெனிடிக்சும் தேர்ந்தெடுத்தேன்.

நான் ரொம்பப் போரடிக்கிறேனா கௌதம். எங்கயோ தொடங்கி எங்கயோ போய்கிட்டிருக்கேனா?

“இல்லை கண்ணம்மா உன் ஆராய்ச்சி பற்றித்தான் எனக்குத் தெரியுமே! ஆனா இதுக்குள்ள இவ்வளவு பெரிய கதை இருக்கும்னு எனக்குத் தெரியாது!. என் வாழ்க்கையில் நீ முதலிலேயே வந்திருந்தா என் சிந்து கூடக் காப்பாற்றப் பட்டிருக்கலாம் இல்லையா?!”

“ஆனால் நான் இந்த சித்தார்த்தனை இழந்திருப்பேனே! பாரு இப்பக் கூட என் மனசு எவ்வளவு தன்னலமா சிந்திக்கிதுனு? இதுதான் தண்ணி அடிக்காமலேயே வரும் காதல் தரும் போதை!”

“ஆமாம்! இதுக்கும் ஏதாவது சிக்கிச்சயை ஆரம்பிக்காம உன் கதையை முடி!”

“இவ்வளவு கதை பேசுற நான் ஒரு ஆணின்மேல் நாம் காட்டும் அளவுக்கு அதிகமான ஈடுபாடு அவனின் மூளையில் எவ்வளவு பெரிய மன அழுத்தத்தை உண்டாக்கும் என்பதைப் புரிந்து கொள்ளவில்லை.

என் மேல் பல பேருக்கு காதல் வந்தது உண்மை! ஆனால் என் மனம் யாரோடும் காதலில் சுருண்டு கிடந்தது கிடையாது! என்னிடம் அழகிருந்தது, அறிவிருந்தது, படிப்பிருந்தது, ஏன் பணம் கூட நிறைய இருந்தது. ஆனால் காதல் என்ற உணர்வு மட்டும் என்னிடம் இல்லை. மருத்துவம் படிக்கத் தொடங்கியபின், ஆண்கள் அனைவரும் எலும்பினால் செய்யப்பட்டு, சதைகளாலும் தசைகளாலும் அந்த ஃப்ரேமில் நிறப்பப்பட்டு, வெறும் கறுப்பு, சிவப்பு, இளமஞ்சள் போன்ற கலவைகளில் நெய்யப்பட்ட தோலினால் போர்த்தப்பட்ட, சிவப்பு ரத்தம் ஓடும் வெறும் சதைப் பிண்டங்கள் என்ற எண்ணம் வலுப்பெறத் தொடங்கியது.

அதன் உள்ளே பொறுத்தப்பட்டுள்ள, மூளை ஒரு தலைமைச் செயலகம். அது இடும் கட்டளைக்குத் தலை வணங்கும் மற்ற உடலுறுப்புகள் அனைத்தும், வெறும், ரத்தமும், சதையும், நரம்பும், கழிவுகளும் நிரம்பிய மிகப் பெரிய குப்பைக் கூடை! அந்தக் குப்பைக் கூடையை சுத்திகரிக்கும் நான் ஒரு டாக்டர்! இந்த எண்ணங்கள் என்னிடம் மேலோங்கி இருந்தாலும்,

சிறு வயது முதலே எனக்குள் தானாகவே நிரம்பியிருந்த அன்பு, இரக்கம், என்ற இந்த இரண்டு உணர்வுகளை நான் என்றுமே இழந்த்தில்லை! சிறுவயதில் நான் கண்ட காதல், கல்யாணம் போன்ற கனவுகளெல்லாம் என் இதயத்தின் பின் இருக்கைகளை எடுத்துக் கொள்ள உன்னை சந்திக்கும் வரை என் மனம் அப்படித்தான் கனவுகளற்ற ஒரு வெற்றுத்தாளாயிருந்தது!

இந்நிலையில் காதல் ப்ரப்போஸலோடு வந்த பல வாலிபர்களை என்னால் சமாளிக்க முடிந்தது! ஆனால் சந்தோஷை சமாளிக்க முடியவில்லை!

அன்று என் கல்லூரியின் கடைசி நாள். அனைவரும் பிரியப் போகும் வருத்தத்தில் இருந்தோம்.. நான் என் நண்பர்கள், தோழிகள் அனைவரிடமிருந்தும், கண்ணீருடன் விடை பெற்றேன். சந்தோஷ் மட்டும் என்னிடம் மண்டியிடாத குறையாக என்னைத் தனிமையில் சந்திக்க வேண்டுமென்று கெஞ்சினான். என்னால் தவிர்க்கவே முடியாமல் அந்த மாலை வேளையில் ஒரு இருண்டு கிடந்த பார்க்கிற்கு என்னை அழைத்துச் சென்றான். ஒரு மொடாக் குடிகாரனின் போதையைத் தெளிவித்து, ஒரு இயல்பான வாழ்க்கை வாழ வைத்ததில் எனக்கு அவ்வவளவு பெருமை. அந்த பெருமை தந்த போதையோடு அவனைப் பார்த்தேன்.

மினுக் மினுக்கென்று சோம்பேறியாய் ஒன்றிரண்டு விளக்குகள் மட்டும் ஒளிர்ந்து கொண்டிருக்க அந்த இருட்டு என்னை மிரள வைத்தது! அவன் நேரடியாக விஷயத்திற்கு வந்தான்.

“ஏன் தாரா என்னை இப்படி சித்திரவதை செய்ற, என்னைப் போதைப் பழக்கத்திலிருந்து காப்பாற்றி உன் போதை ஏற்றும் விழிகளுக்குள் விழ வச்சு; என்னை இப்பப் பைத்தியமாக்கிட்டீல! நானா உன்னைத் தேடி வரலை, நீதான் என்னைத் தேடிவந்த! என்னைப் பிடிக்காமலா என்னோடு இவ்வளவு நெருங்கிப் பழகின? உனக்கு என்னோடு படுக்கணும்கிற ஆசையை ஏன் இப்படி மனசுக்குள்ளையே பூட்டி வச்சிருக்க!?

‘அம்மாடி எவ்வளவு பெரிய குற்றச்சாட்டு!?’ அதைக் கேட்டு என் மனம் அதிர்ந்தாலும் என் பொறுமையை நான் இழக்கவில்லை!

“ஆமாம் உன்னை உன் போதை பழக்கத்திலிருந்து தெளிவிக்க; உன் தனிமையிலிருந்து வெளியே கொண்டு வர; உனக்கு உதவ உன்னிடம் வந்தேன்!” உன்னைக் காதலிக்கிறதா உன்கிட்ட நான் எப்பவாவது சொல்லி இருக்கேனா!?”

“நீ சொல்ல வேணாம், என் மேலிருக்கும் இவ்வளவு அக்கறைக்கும் பாசத்திற்கும் காதல் இல்லைனா வேற என்ன அர்த்தம் தாரா?!” போதை இல்லாமல் அவன் கேட்ட கேள்வியில் நான் அதிர்ந்து போனேன்

“காதல், காமம்ன்ற உணர்வே இல்லாமலா நீ என்னைச் சுத்திச் சுத்தி வந்த?? உன் தோழர்கள் எல்லாரையும் விட நான்தானே உனக்கு ஸ்பெஷல்?” நான் முற்றிலுமாக அதிர்ந்து போனேன். இது என்ன கிணறு வெட்ட பூதம் வந்த கதையா இப்படி ஒரு நூல்கண்டு சிக்கலோடு வருவான் என்று நான் முற்றிலும் எதிர்பார்க்கவில்லை!

“என் மனசுல இருந்த மது போதை என்னும் பேய் கீழே இறங்கி அதை தாரா என்னும் போதை இப்ப ஆக்கிரமிச்சிருக்கு! எனக்கு எப்பவும் உன்னைப் பற்றிய சிந்தனைகள், அதுவும் ஒருவித போதையுடனும் மனக்கிளர்ச்சியுடனும், தாரா தாரா என்று மட்டும்தான் என் மூளை ஜெபிக்குது! நீ எனக்கு வேணும், நான் உன்னை அன்பவிக்கணும்!” என்று நான் சற்றும் எதிர்பாராமல் என்னைக் கட்டி அணைத்து அங்கிங்கெனாதபடி என் அங்கமெல்லாம் பெரிய வள்ளல் போல் முத்தங்களை வாரி வழங்கத் தொடங்கினான்.

என் அங்கமெல்லாம் பதறி அவனிடமிருந்து என்னை விடுவித்துக் கொள்ள நான் பெரும் போராட்டமே செய்ய வேண்டியிருந்தது.

அவன் முற்றிலும் தூண்டப்பட்ட நிலையிலிருந்தான்.

“உன்னை ஒரு நண்பனாய் நினைத்து உன்னோடு பழகியதற்கு நீ எனக்கு நல்ல மரியாதை செஞ்சுட்ட!? இதெல்லாம் ஒரு பெண்ணின் உடம்பை அனுபவிக்க உனக்குள் தோன்றும் காம வெறிகள்! வெறும் சதையின் மேல் ஏற்படும் மோகம்னு உனக்குப் புரியலையா சந்தோஷ்?”

“காமமா இருந்தாலும் அதில் என்னடி தப்பிருக்க முடியும்?” அவன் மரியாதை குறைந்து ஒருமைக்குத் தாவினான். அப்பொழுதே ஏதோ சரியில்லை என்று என் மூளை விழித்துக் கொண்டது.

“உன்னை அனுபவிக்க என் மனம் துடிக்குதுடி! அதுக்காக எனக்கு உன் மேல் காதல் இல்லை என்றெல்லாம் அர்த்தம் இல்லை. வேணும்னா சொல்லு உன்னைக் கல்யாணம் கூட பண்ணிக்கிறேன், ஆனால் நீ எனக்கு இப்ப வேணும்” அந்த நிமிடம் அவனைப் பார்க்க எனக்கு அருவருப்பாய் இருந்தது. பயத்தில் அட்ரினாலினை, என் சீறுநீரகம் அளவுக்கதிகமாய் பம்ப் செய்யத் தொடங்க, அந்த வினாடி எனக்கு அவனிடமிருந்து தப்ப வேண்டுமென்ற பய உணர்ச்சி மட்டும்தான் மேலோங்கி இருந்தது.

“சரி நீ இப்ப ஒரு வகையான காதல் போதையிலிருக்க; என்னை ஒரு தோழியா ஏத்துக்க உன் மனசு இடம் கொடுக்கலைனா, என்னை விட்ரு, ஐ வில் பி அவுட் ஆஃப் யுவர் லைஃப் சூன்!”

“என்னடி பெரிய பத்தினி வேஷம் போடுற, இதுவரைக்கும் எந்தக் காதலன் கூடவும் உன் படுக்கையைப் பகிந்துக்கலைனா சொல்ற!?”

‘அவன் என் கோபத்தைத் தூண்டி என்னை ஆக்கிரமிக்க நினைக்கிறான்!’ என்று எனக்குப் புரிந்தது! என் மனம் அவன் காம வலையிலிருந்து தப்பிக்கும் வழியைத் தேட்த் தொடங்கியது!

கோபத்தில் அறைவதற்காக என் விரல் அவன் கன்னத்தைத் தீண்டினால் கூட அவன் என்னை ஆக்கிரமித்துவிடுவான் என்று எனக்குத் தெரிந்தது. இவனிடம் இருந்து நான் தப்ப வேண்டும் அதுதான் என் மூளை எனக்கு எழுப்பிய எச்சரிக்கை ஒலி!

“சரி சந்தோஷ் நாளை பார்க்கலாம் என்று அவன் தன் காதல் போதையில் ஆழ்ந்திருந்த நேரம், படக்கென்று அவனிடமிருந்து தப்பித்து சாலைக்கு ஓடி வந்து ஒரு ஆட்டோவை நிறுத்தி என்னோட விடுதிக்கு ஓடி வந்த நான் ஒரு நிமிடம் கூடத் தாமதிக்காமல் கோவையிலிருந்த என் ஃப்ரென்ட் வீட்டிற்குத் தப்பி ஓடி வந்துவிட்டேன். அதுவரையிலும் நடுங்கிக் கொண்டிருந்த என் உடம்பு என் தோழி சரளாவின் கரங்களில் தஞ்சமடைந்த பின்புதான் நடு நிலமை அடைந்தது!

அதன் பிறகு யாருக்குமே தெரியப்படுத்தாமல் எம்எஸ் படிப்பிற்காக டில்லியில் உள்ள எயிம்ஸ் மருத்துவமனை சென்றேன். நான் படிப்பு முடித்து வெளியில் வரும்வரை அவனிடமிருந்து எந்தத் தொல்லையும் இல்லாமல் தப்பித்து விட்டேன். தொடரும்IMG-EKKUM WA0003.jpg
 
Niraya bothai patriya visayankalai pakirthu ullatharku nanri(y)
Neenga sonna mathiri than indraya samugam ullathu
netru orunal mattum 170cr sales in TASMAC?
Silar pattasu vedithu TASMAC open seithathai kondadinarkal
Arumaiyana padivu sagothari

silapadangal kiye indraya thamiyagam
 

Attachments

  • tasmac.jpg
    tasmac.jpg
    14.9 KB · Views: 0
  • TASMAC_EPS.jpg
    TASMAC_EPS.jpg
    79.7 KB · Views: 0
  • tasmac2.jpeg
    tasmac2.jpeg
    147 KB · Views: 0
இந்த மாதிரி போதைகளால் தான் சீரழிவது மட்டுமில்லாமல் தன்னைச் சார்ந்தவர்களையும் அழிக்க நினைக்கிறார்கள்..... இவர்களுக்கு நல்லது செய்ய நினைப்பதே வீண்
 
Niraya bothai patriya visayankalai pakirthu ullatharku nanri(y)
Neenga sonna mathiri than indraya samugam ullathu
netru orunal mattum 170cr sales in TASMAC?
Silar pattasu vedithu TASMAC open seithathai kondadinarkal
Arumaiyana padivu sagothari

silapadangal kiye indraya thamiyagam
நன்றிகள் தோழி. மிகவும் அருமையான விமர்சனம். விமர்சனங்களுக்குப் பதில் அழிக்கும்பொழுது கதையின் ஆர்டர் குலைந்து போகிறது, அதனால்தான் விமர்சனங்களுக்குப் பதில் அளிக்கச் சில காலம் எடுத்துக் கொண்டேன். இப்பொழுதும் அதே ப்ரச்சனைகளை சந்திக்கிறேன்.
 
இந்த மாதிரி போதைகளால் தான் சீரழிவது மட்டுமில்லாமல் தன்னைச் சார்ந்தவர்களையும் அழிக்க நினைக்கிறார்கள்..... இவர்களுக்கு நல்லது செய்ய நினைப்பதே வீண்
என்னுடன் கதை முழுவதும் பயணித்து என் கதைக்கு அழகான தொடர் விமர்சனங்கள் அளித்த உமக்கு நன்றி தோழி.
 
Top