Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் சுவாசம் நீதானே பாகம் 2 Episode 4

AnuJey

Well-known member
Member
அடுத்த நாள் காலை ரேவதிக்கு சந்தோஷமாக விடிந்தது அவள் எழுந்தவுடன் தன் ஆடைகளை சரி செய்து விட்டு விக்னேஷைத் தேடினாள். விக்னேஷ் தான் செய்த முட்டாள் தனத்தை எண்ணி கடுப்பில் இருந்தான். பெண்களிடம் சுற்றும் விக்னேஷ் பொதுவாக யாரிடமும் எல்லை மீறியதில்லை ஆனால் ரேவதி விஷயத்தில் எப்படி அவசரப்பட்டோம் என்று நினைத்தவன் முன் ரேவதி வெட்க முகத்துடன் வந்து நின்றாள்.ரேவதி யிடம் முகம் கொடுத்து பேசாமல் கிளம்பலாமா என்று கேட்டு அவளுடைய பதிலை எதிர்ப்பார்க்கலாம் இவன் தன்னுடைய காரில் ஏறினான்.
ரேவதியும் கடகடவென முன் இருக்கையில் பொய் அமர்ந்தாள் தன்னைப் பொல் அவனும் வெட்க நிலையில் இருக்கிறான் என்று நினைத்த பெண் மனம் அவனை அமைதியாக பார்த்துக்கொண்டே வந்தாள் விக்னேஷ் பார்க்க அழகாக இருக்க மாட்டான் என்றாலும் ரேவதிக்கு அவனை பிடித்தது ஏனென்னு அவளுக்கு தெரியவில்லை.
திருவான்மியூரில் தங்கள் ஆபிஸ் அக்கம்டேஷனில் ரேவதியை விட்டவன் அவளிடம் எதுவும் பேசாமல் இறங்க சொல்லி விட்டு காரை வேகமாக ஒட்டிச் சென்றுவிட்டான். தன் வீட்டிற்கு வந்த விக்னேஷ் நேராக தன் அறைக்குச் சென்று ரேவதியை எப்படி ஒதுக்குவது என்று யோசித்துக்கொண்டிருந்தான்.

பின் ஒரு முடிவுக்கு வந்தவனாக அட்மின் டிபார்ட்மென்ட்டிற்கு கால் செய்து அன்று இரவு டெல்லிக்கு ஓரு ஏர் டிக்கெட்(Air Ticket) போட சொன்னான். தன்னுடைய திங்க்ஸை பாக் செய்து விட்டு தன் தாய் தந்தையிடம் “மாம் டாட் நான் டெல்லி கிளம்புறேன் இன்னிக்கு நைட் பிளைட்”என்று கூறிவிட்டு கிளம்ப தயாரானான்.

மனம் முழுக்க விக்னேஷை மனதில் சுமந்த ரேவதி விக்னேஷின் நடவடிக்கையில் இருந்த மாற்றத்தை அறியாமல் கனவுலகில் இருந்தாள். விக்னேஷின் மொபைல் எண்ணிற்கு அழைத்த ரேவதி அவன் எடுக்காததால் வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பினாள் ஆனால் அதற்கும் பதில் இல்லை மனதில் ஏதோ தப்பாகப் பட்டாலும் விக்னேஷ் அவளுடன் பழகிய விதம் அவளுக்கு அவன் மேல் நல்லவன் நம்மை கரம் பிடிப்பான் என்ற நம்பிக்கை இருந்தது.

டெல்லி வந்த விக்னேஷ் அனைத்து கிளைகளின் மேனெஜர் களுக்கு ஐந்து மாதம் டெல்லி கிளையில் இருந்து வேலை பார்ப்பான் என்று ஈ மெயில் அனுப்பினான். அடுத்த நாள் டிரெயினிங் வந்த ரேவதி விக்னேஷ் எங்கே என்று கேட்டு அவன் டெல்லியில் டிரெயினிங் இருப்பதைத் தெரிந்து கொண்டாள். ஏதோ மனது படபடப்பாகவே இருந்தது ரேவதிக்கு இப்படியே நாட்கள் சென்றது ரேவதி பெங்களுர் சென்று இருபது நாட்கள் ஆயின ஆனாலும் ரேவதிக்கு விக்னேஷிடம் இருந்து கால் லும் மெசேஜும் வரவில்லை. இத்தகைய சமயத்தில் தான் ரேவதி கருவுற்றாள் தன் நிலைமைக்கு காரணமான தன்னையே வெறுத்தாள் தனக்கு அம்மா என்ற உறவின் அரவணைப்பு கிடைத்திருந்தால் இந்நேரம் இத்தப்பு தான் செய்யாமல் இருந்திருப்போமோ என்று தன் தப்பை நியாயப்படுத்தி தன் மனதை தேற்றினாள்.

தான் கருவுற்ற விஷயத்தை யாரிடமும் சொல்லாமல் இரவு தூக்கம் இல்லாமல் தினமும் அழுதுக்கொண்டே சாப்பிடாமல் தன்னையும் கவனிக்காமல் தன் வயித்தில் இருக்கும் கருவையும் கவனிக்காமல் அவள் நடந்துக்கொண்டிருந்தாள் நான்கு மாதம் கழிந்தது ரேவதியின் உடம்பு மிகவும் பலகீனமானது டாக்டரிடம் சென்றால் எங்கு தனக்கு கல்யாணம் ஆகாமல் கரு உண்டாகி இருப்பது தெரிந்தால் அவமானம் ஆகிவிடும் என்றே டாக்டரிடம் செல்லாமல் இருந்தாள். ஆனால் அவளின் இந்த அலட்சியத்தால் தன் வயிற்றில் இருக்கும் குழந்தைக்குமெ பாதிப்பு நேரிடும் என்பதை அந்த பேதைப் பெண் அறியவில்லை.
ரேவதியின் தோழிகள் அவளைக் காண வந்த போது அவளின் மேடிட்ட வயிற்றைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர் அவர்களிடம் இதற்கும் மேலும் மறைக்க முடியாது என்று நடந்த அனைத்தையும் கூறி அழுதாள் தன் தோழி களிடம் கூறிய பினெ சிறிது ஆறுதல் அடைந்தாள் ஆனால் அவர்கள் அனைத்தும் தெரிந்த பின் இவளை அருவருப்பாக பார்த்தனர். “நீ இவ்வளவு மட்டமான பொண்ணா எவனோ ஒருத்தன் கூட ஒரு வார பக்கத்துல இப்படி குழந்தை உண்டாகி வந்து நிக்குற” என்று அவளை மேலும் காயப்படுத்தினர் இவளுடைய தோழிகள்.
அனைவரிடமும் கையெடுத்து கும்பிட்ட ரேவதி நான் ரொம்ப கேவலமான பிறவி நீங்க யாரும் இனிமேல என்னை பார்க்க வர வேண்டாம் என்று சொல்லிவிட்டு வீட்டினுள் சென்று கதவை தாளிட்டு அழி ஆரம்பித்தாள். தான் செய்த முட்டாள் தனத்தின் வீறியத்தை உணர்ந்த ரேவதி இனிமேல் விக்னேஷின் நிறுவனத்தில் இனிமேல் வேலை பார்த்தால் அனைவரும் தன்னுடைய வயிற்றைப் பார்த்து கேள்வி எழுப்புவார்கள் என்று யோசித்தவள் ஒரு முடிவு எடுத்தவள் தன் பக்கத்து வீட்டில் இருக்கும் மேரியம்மா வீட்டிற்கு விரைந்தாள். “மேரி அம்மா ப்ளிஸ் என்னை காப்பாத்துங்க எனக்கு உங்க பள்ளியில் ஒரு வேலை கொடுங்க” என்று கதறி அழுதாள்.
மேரி பெங்களூரில் உள்ள ஒரு பெரிய பள்ளியின் தாளாளர் நான்கு வருடங்களாக ரேவதியின் வீட்டு பக்கத்தில் இருக்கும் மேரி ரமேஷ் இறந்த பொழுது ரேவதிக்கு ஆறுதல் கூறினார்.தன் அண்ணனுடைய பள்ளியில் தாளாளராக இருக்கும் மேரிக்கு ஒரு மகன் உள்ளார். அவர் இப்போது டுபாயில் தன் மனைவியோடு குடிபுகுந்ததால் இவர் பெங்களுரில் தனியாக இருக்கிறார்.

தான் செய்த அனைத்தையும் மேரி அம்மா விடம் கூறிய ரேவதி அவமானம் தாங்காமல் தலை குனிந்து நின்றாள். “நீ பண்ண தப்பை உணர்ந்துட்டமா அப்போவே கடவுள் உன்னை மன்னிச்சிட்டாரு உன் வயிற்றுல இருக்கும் குழந்தை தான் உனக்கு இனிமேல் உன் உலகம். நான் உனக்கு கண்டிப்பா வேலை வாங்கித் தரேன்மா நீ முதல்ல ஒரு நல்ல டாக்டர் கிட்ட போ என் தங்கை ஒரு மகப்பேறு மருத்துவர் தான் அவ உனக்கு கண்டிப்பா உதவுவாமா கவலைப்படாத கடவுள் உன்னை காப்பாட்டுவாரு” என்று ஆறுதலாகப் பேசினார்

வாழ்க்கையில் ஒரு பிடிப்பே இல்லாமல் இருந்த ரேவதிக்கு மேரி அம்மாவின் வார்த்தைகள் புத்துணர்ச்சி கொடுத்ததால் தன் ரெசிக்னேஷன் லெட்டரை அவளுடைய கிளையின் மேனேஜரான புனித் திடம் கொடுத்தாள்.அவளை யோசனையாக பார்த்த புனித் ஒகே ப்ரோசீடு பண்றேன் மேடம் என்று தன் வேலையை பார்க்க ஆரம்பித்தார்.

மேரி அம்மாவின் பள்ளியில் சேர்ந்த ரேவதி அவருடைய தங்கை லிசா விடம் தான் மருத்துவ ஆலோசனை செய்தாள். மாதங்கள் சென்றது ரேவதிக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது அவனுக்கு ஆகாஷ் என்று பெயர் வைத்தாள் அவன் தாய். ஆகாஷ் பிறந்த பின் அவளுடைய உலகம் அழகாக இருந்தது சம்பளத்தோடு ஆறு மாதம் விடுமுறை இருந்ததாலும் ஆகாஷை தனியாக அவளால் பார்க்க முடியவில்லை அதற்காக ஒரு வயதான பெண்மணியை வேலைக்கு வைத்து பார்த்துக் கொண்டாள். ஆகாஷிற்கு ஆறு மாதம் ஆகும் போது தான் ஒரு நாள் கோவில் சென்று வந்திருக்கிருக்கும் போது புனித் தைப் பார்த்தாள். அவளைக் குழந்தையுடன் கண்ட புனித் “ரேவதி மேடம் எப்படி இருக்கீங்க உங்கள பார்க்கனும்னு நினைச்சிட்டே இருந்த நல்ல வேலை பார்த்துட்ட.உங்கள பத்தி அப்புறம் விக்னேஷ் சார் பத்தி அரசல் புரலசா பேசிக்கிட்டு இருந்தாங்க உங்க மொபைல் நம்பர்க்கும் கால் பண்ண யூஸ்ல இல்லன்னு வந்திடு விக்னேஷ் சார்க்கு ஏதோ பொண்ணு பார்க்குறாங்களாம் நீங்க நான் கேட்கிறேனு தப்பா எடுக்காதீங்க இந்த குழந்தை என்று அவர் இழுக்கும் போது “இது விக்னேஷ் க்கும் எனக்கும் பிறந்த குழந்தை சார்” என்றாள் சிலையாக. “நான் விக்னேஷ பார்க்கனும் அவர் அட்ரெஸ் இருக்கா” என்று கேட்டாள் ரேவதி.”அவர் இப்போ சென்னை திருவான்மியூரில் இருக்கும் சீ வீயூ அபார்ட்மெண்ட்டில் தான் இருப்பார் மேடம் என்றார் ஆனா நான் தான் முகவரி சொன்னேன் சொல்லாதீங்க மேடம் என்றார் புனித்.அவரிடம் கன்னடத்தில் சேரி என்று முடித்த ரேவதி மேரி அம்மாவிடம் கூறிவிட்டு அடுத்த நாள் இரவு சென்னை பஸ் ஏறினாள்.

தன் குழந்தையோடு ரேவதி விக்னேஷின் திருவான்மியூர் வீட்டிலில் காத்திருந்தாள் அங்கு வீட்டின் வெளியே மரத்தடியில் குழந்தையோடு அமர்ந்திருந்தாள் தெருவில் போகிறார்கள் பார்வையை எதிர்கொள்ளாமல் தலை குனிந்து அமர்ந்திருந்தாள். வீடு பூட்டி இருந்தாலும் வெளியில் செக்யூரிட்டி நின்றுக் கொண்டிருந்தார் அவரிடம் குழந்தையை வைத்துக்கொண்டு தன் நிலையைப் பற்றி சொல்ல விருப்பம் இல்லாமல் மரத்தடியில் அமர்ந்தாள். விக்னேஷ் வீட்டிற்கு வர இரவு ஏழு மணி ஆனது அவனுடைய கார் வீட்டில் வந்ததும் செக்யூரிட்டியை பொருத்படுத்தாமல் மடமடவென கேட்டின் உள்ளே ஒடி விக்னேஷ் காரில் இருந்து இறங்கும் போதே அவனை மலாரென்று கன்னத்தில் அறைந்தாள். ரேவதியின் சாப்ட்டர் முடிந்தது என்று நினைத்த விக்னேஷிற்கு தன் முன்னே அவள் ஒரு குழந்தையோடு நிற்பது பேரதிர்ச்சியாக இருந்தது.

ரேவதியைப் பார்த்து சுதாரித்த விக்னேஷ் “யார் நீ? எவ்வளவு திமிர் இருந்தா என் மேல கைய வெச்சிருப்ப” என்று மிடுக்காகக் கேட்டான் “அடப்பாவி என் வாழ்க்கைய கெடுத்துட்டு உனக்கு கல்யாணம் ஒரு கேடா உன்னால என் வாழ்க்கையே போச்சு இது உன் குழந்தை உன்னால எனக்கு வந்த குழந்தை இதற்கு நீ என்ன பதில் சொல்ல போற” என்று கதறி அழுதாள்.

நான் ஒன்னும் உன்னை ரேப் பண்ணல இன்பாக்ட உன்னை காதலிக்குறேனு கூட சொல்லல அப்போ எத வெச்சு நீ என் கூட சந்தோஷமா இருந்த சோ நீ எந்த மாதிரி காரக்டர்னு எனக்கும் தெரியல இந்த குழந்தை யாரோடடுனு யாருக்கு தெரியும் என்றான் அலட்சியமாக. இந்த வார்த்தையைக் கேட்ட ரேவதிக்கு யாரோ ஈட்டி வைத்து கட்டியது போல இருந்தது. அவனைப் பார்த்து காரி துப்பிய ரேவதி நீயெல்லாம் மனிஷ பிறவியே இல்லை நீ நல்லாவே இருக்க மாட்டடா நாசமா பொய்ட்டுவ” என்று கருவி அழுதுக்கொண்டே திருவான்மியூர் மருந்தீசுவரர் கோவில் பேருந்து நிறுத்தத்திற்கு நடந்து வந்து விட்டாள்.
 
Banumathi jayaraman

Well-known member
Member
மிகவும் அருமையான பதிவு,
அனு ஜெய் டியர்

அவன் அப்படித்தான் சொல்லுவான்
இவளுக்கு அறிவு எங்கே போனது?
இப்போ வருத்தப்பட்டு என்ன பிரயோஜனம் ரேவதி?
 
Last edited:
Top