Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் பார்வையில் என்னவோ மாற்றம் எனக்குள்.

Advertisement

Selvipandiyan

Active member
Member
சொர்ணா சந்தானகுமாரின் என்னவோ மாற்றம் எனக்குள்ளே.
சிறுமிகளின் பாதுக்காப்பு குறித்து எத்தனை கதைகள் வந்தாலும் பாராட்டப்பட வேண்டியதே.
இந்த கதையில் வரும் சூர்யாவின் வாழ்வில் சுற்றி உள்ள ஆண்கள் அவளை பாலியல் ரீதியில் துன்புறுத்துகிறார்கள்.பூவரசியால் தன் மகளை கவனிக்க முடியாத சூழலில் துன்புறுத்தலுக்கு ஆளாகிறாள்.கிழவனில் இருந்து விடலைகள் வரை அவளிடம் அத்து மீறுகிறார்கள்.விவரம் தெரிந்ததும் அவளின் மன நிலையில் வரும் மாற்றங்கள் மற்றும் அவளின் குடும்ப வாழ்வு என்ன ஆகிறது என்பதுதான் கதை.
விக்னேஷ் அவளை விரும்பி மணந்தாலும் அவளின் மன நிலையில் அவனுடன் வாழ முடியவில்லை.மருத்துவரின் கவுன்சலின்க்கில் அவளின் பழைய துன்புறுத்தல்கள் தெரிய வருகிறது.பூவரசியின் தோழி இசக்கி அவளின் அண்ணன் மகன் சபரிக்கு சூர்யாவை மணம் முடிக்க நினைத்து இருப்பாள்.சபரிக்கு ஒரு குழந்தை இருக்கும்,அது சூர்யாவை அம்மா என அழைத்து பாசமாக இருக்கும்.தன் ஆழ் மனதில் சபரியின் மீது ஒரு காதல் இருப்பதை அறியாமலே இருக்கும் சூர்யாவுக்கு விக்னேஷின் மூலம் தெரிய வந்த நிகழ்வுகளை தொடர்ந்து அவளின் வாழ்க்கை எப்படியெல்லாம் திசை மாறுகிறது என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.சபரியின் வாழ்க்கையில் நடந்த்தது பெரிய ஒரு அதிர்ச்சிதான்.எனக்கு ஒரு சந்தேகம்,சூர்யாவுக்கு நிகழ்ந்தவற்றில் சிறு வயதில் ஒன்றும் செய்ய முடியவில்லை,ஆனால் விவரம் தெரிந்தும் முத்துக்குமாரிடம் ஏன் அவளால் தன்னை காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை?அசையாமல் நிற்பது எதற்கு?
அவள் தன் எதிர்ப்பை காட்டியிருக்க வேண்டாமா? இது எனக்கு சற்று குழப்பமாஇருந்தது.
 
1061

அவளின் அதிகபட்ச எதிர்ப்பு என்பது, துஷ்டனென்னு தூர விலகுதல் மட்டுமே. இன்னொன்னு தன்னைப்பற்றி யாரும் தப்பா நினைக்கக்கூடாது என்ற எண்ணம். குறிப்பாக பூவரசி. கெட்டவனை எதிர்த்தா, அவன் நமக்கு நல்லது செய்யப்போறதில்லை. தன்னோட பெயர் வெளிவராமல், அந்தப் பெண்ணின் பெயரைக் கெடுக்க முடியும்.
பயம்! பயம் கொண்டு எதிர்க்க முடியா கோழைகள் அப்பெண்கள்னு சொல்லலாம். இன்னும் சில நுணுக்கமான விஷயங்கள் உண்டு. சிலவற்றை எழுத்தா கூட கொடுக்க முடியாது.

Thank you ???
 
Top