“என்ன செழியா அவ பாட்டுக்கு பேசிட்டே போறா!.. நீ அவ வாயை பாத்துக்கிட்டு எனக்கென்னன்னு நிக்கிறவன், பொண்டாட்டி பக்கம் தாவிட்டியோ? கேட்டும் கேட்காத மாறி அமுக்கனா நிக்கிற” என்று எரிச்சலுடன் சின்னப்பொண்ணு கேட்க..
“என்னம்மா விசியம்” என்று செழியன் நிதானமாக கேட்டான்..
மேல்மூச்சி கீழ் மூச்சி வாங்க மகனை முறைத்து பார்த்தார் சின்னப்பொண்ணு..
“செழியா, தாலிகட்ட காலையில அழைச்சிட்டு போவ பஸ் ஏற்பாடு பண்ணியிருந்தோமில்ல அந்தப்பணம் பாதி பொண்ணு வூட்டு பக்கம் தரணும், அதை அவங்க தரலை! மறந்திறுப்பாங்க போல, இப்போ கணக்கு பாக்கும் போது பிரகாசம் சொல்லவும் உங்கம்மா அதைக்காதுல வாங்கிட்டு சண்டை கட்டுறா?” என்றார் வெங்கடாஜலம்..
“நான் சண்டை கட்டுறன்னா?” என அதற்கும் சின்னப்பொண்ணு எகிறிக்கொண்டு வர, “அம்மா இப்போ என்ன? அந்தப்பணம் அவங்க பக்கமிருந்து கொடுக்கணும் அம்புட்டு தானே?.. நா பெரியம்மா- கிட்ட பேசி வாங்கித்தரன்.. இதுக்கு ஏன் காலையிலங்காட்டியும் வாக்குவாதம்” என்று செழியன் கேட்க..
“உன் அப்பன் அப்படிச்சொல்லியிருந்தா நான் ஏன் வாயைகொடுத்து உன் பொஞ்சாதி பேசுற, வக்கெத்த வார்த்தையெல்லாம் வாங்கப்போறேன்” என்று நொடித்தவாரு கேட்டார் சின்னப்பொண்ணு..
“யாரு வக்கெத்த வார்த்தை” என ராகவி கேட்க வரும்போதே அவள் புறம் திரும்பிய செழியன் வேண்டாமென்று கண்ணால் சமிஞ்கை செய்ததும் அடுத்த வார்த்தை ராகவியின் வாயிலிருந்து வரவில்லை..
அவன் ஒற்றை புருவத்தை உயர்த்தி மற்றொரு புருவத்தை தாழ்த்தி பார்த்த இரைஞ்சும் பார்வையில் பட்டாசாய் வெடிக்க தயாராய் இருந்தவள் புஸ்வானமாய் அடங்கிப்போனாள்..
செழியன், அவளை அடக்கியதைக்கண்டு வாய் ஊறிப்போனார் சின்னப்பொண்ணு..
‘இவளை அடக்க என் மவன் தான் சரியான ஆளு’ என்று நினைத்தவர் ராகவியை முறைத்துவிட்டு அங்கிருந்த இருக்கையில் ஆயாசமாக அமர்ந்தார்..
“பிரகா, நீ சொல்லு” என்று கணக்கு வளக்குகளை பற்றி வெங்கடாஜலம் கேட்கவும், அவரிடம் கவனத்தை பதித்தான் பிரகாசம்..
“ராகவி நீ என்கூட வா” என்று மல்லிகா அவளை இழுத்துக்கொண்டு கிச்சனுக்குள் வந்தாள்..
“ஏன்- க்கா இப்படி இழுத்துட்டு வரிங்க?”
“ராகவி ஏன் கூடக்கூட பேசுற?.. மாமியார் வாய் கொஞ்சம் துடுக்குத்தான் அதுக்குன்னு வந்த நாளே வாயைக்கொடுத்து உன் பேரைக்கெடுத்துக்காத” என்றாள் மல்லிகா..
“அவங்க பேசுறதை கேட்டுட்டு அமைதியா நிக்கணும்னு சொல்லுறீங்களா அக்கா” என்று கடுப்புடன் கேட்டாள் ராகவி..
“கேட்டும் கேட்காம கடந்து போன்னு சொல்லுறேன்” என்றாள் மல்லிகா..
“என்னால அப்படியெல்லாம் கேட்டும் கேட்காத ஜடமா இருக்க முடியாதுக்கா?.. அதும் வரமுறையே இல்லாம வாயை விடுறவங்கட்ட அடங்கிப்போகனும்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை!.. நீங்களும் அங்க நடந்ததை கண்கூட பாத்திங்க தானே?.. பேச்சி எதைக்கொண்டு ஆரம்பிச்சது!.. அவங்க அதை எங்கெங்கயோ கொண்டு போயி நிப்பாட்டராங்க! ஒரு ஐயாயிர ரூபாய்க்கா நா போறாம போயிட்டேன்.. அப்படித்தான், அவருக்கான்டி நா தவமா தவமிருந்து கட்டிக்கிட்ட கணக்கா என் வரிசையை பத்தி வையிராங்க?”
“பெரியவங்கன்னா அப்படித்தான் ராகவி.. அத்தைக்கு, அவங்க அண்ணன் பொண்ணை செழியனுக்கு கட்டி வைக்கணும்னு ஆசையிருந்துச்சி, செழியன் அவங்களை கட்டிக்க விருப்பம் இல்லைன்னு சொல்லவே? மாமா உன்னை பத்தி சொன்னாரு!.. சரின்னு ஒத்துவந்துட்டாரு கொழுந்தன்.. எப்பவும் நாளு வார்த்தை சேர்ந்தாப்புல பேசுறது சாமிக்குத்தமாகிடுற கணக்கா இருப்பாரு!.. அப்படியாப்பட்டவரு இன்னைக்கு உணக்காண்டி பேசினாருல்ல”..
“எனக்காக வா? பொதுவா தான்- க்கா பேசினாரு!.. நீங்கத்தான் அதை எனக்காகன்னு நினைச்சிட்டிங்க?”..
“செழியன் சட்டுனு வார்த்தையை விட்டுற மாட்டான் ராகவி... எழுத்து கூட்டி படிக்கிற கணக்கா எண்ணி எண்ணித்தான் பேசுவான்”..
“உங்க கொழுந்த நாரு புராணம் போதும்.. எதை வச்சி நீங்க அவரு எனக்காக பேசினாருன்னு ஒத்துவரிங்க?” என்று புரியாத பாவனையில் கேட்டாள் ராகவி..
“செழியன் பேசாம இருந்திருந்தா அத்தை அந்தப்பேச்சை எடுத்துட்டு பாதாளம் வரைக்கும் போயிருப்பாங்க ராகவி!.. உனக்கு அத்தையைப்பத்தி அதிகமா தெரியலை, ஒருத்தரை புடுச்சிப்போச்சின்னா அவங்களுக்காக என்ன வேணும்னாலும் செய்வாங்க அத்தை, பிடிக்காம போனா எந்த அளவுக்கும் இறங்கி மட்டம் தட்டுவாங்க” என்றாள் மல்லிகா..
கேட்டுக்கொண்ட ராகவி பதிலேதும் கூறவில்லை.. மல்லிகா, வெங்காயத்தை நறுக்கிக்கொண்டிருக்க அவளுக்கு உதவியாக தோலை உரித்துக்கொடுத்தாள்..
கல்யாணத்திற்கு வரமுடியாதவர்கள் சிலர் வந்து பார்த்துவிட்டு சென்ற வண்ணம் இறந்தனர்..
“ஏன் பொண்ணே? உன் மகனுக்கு என்ன காண்டுவாதமா? தையக்காரியை கட்டி வச்சிருக்க? பொண்ணா கிடைக்கல” என்று சின்னப்பொண்ணுவின் தாய் வீட்டு பக்க பெண்ணொருவர் கேட்க..
“க்கூம்!.. நா மட்டும் என்ன விருப்பப்பட்டா கட்டிக்கோன்னு சொன்னேன்.. அவன் தலையெழுத்து, அவன் தலையில அவனே மண்ணைவாரி போட்டுக்கிட்டா யாராள ஆவுறது”..
“அரசாங்க உத்தியோகம் பாக்குறவனுக்கு தையதக்கான்னு காலை ஆட்டற தையக்காரி இணையா?.. அதுசரி சீர் வரிசையாயாவது வாங்குணியா?”.
“போட்டாங்க போட்டாங்க! அண்ணன் என்ன பண்ணுது, அதுக்கிட்ட எதாவது பேசுனிங்களா?”..
“நாளைக்கு இளவரசிக்கு நிச்சயதார்த்தம்!.. உனக்கு தகவல் வந்துச்சா பொண்ணு”..
“என்கிட்ட எதையும் சொல்லலையே?.. என்ன சட்டுனு முடிவு பண்ணியிருக்காங்க”..
“நீதான் உன் மவனுக்கு பொண்ணெடுக்க மாட்டேன்னு சொல்லிட்டியாமே?.. சீமையிலயே இல்லாத சிறுக்கியை கண்டுட்ட மாறி இளவரசியை வேண்டாம்னு ஒதுக்கிட்ட?.. நீ ஒதுக்கிட்டா? அவளை யாரும் தீண்ட மாட்டாங்களா?.. ஒருவாரத்தில மாப்பிள்ளை பாத்துட்டாங்க?.. பையன் வாட்டசாட்டமா உன் மவனை விட அம்சமா இருக்கான்.. தனியா ஆஸ்பித்திரி வச்சிருக்கானாம்.. ரெண்டும் ஒரே வேலை தானே அதுங்க பொழைச்சிக்கும்”..
“இங்க என்ன நடந்துச்சின்னு தெரியாம வாயை விடாதீங்க!.. என் அண்ணன் பண்ணினதெல்லாம் சரிக்கிடையாது!.. என் புருஷன் நாக்கைப்புடுங்கிட்டு சாவர கணக்கா? ஏன் பிரகாசத்துக்கு தரண்ணு சொல்லிட்டு தரலைன்னு கேட்கிறாரு!.. பதில் சொல்ல முடியல என்னால, அப்ப பிரகாசம் இருந்த நிலை என்னன்னு அரிஞ்ச நானே அழிச்சாட்டியம் பண்ணி இளவரசியை சின்னவனோட இணைக்க எதாவது முயற்ச்சி பன்னியிருந்தா? அதைவிட அசிங்கம் அம்மாவா எனக்கென்ன இருக்கப்போவுது.. ம்!.. நடந்து முடிஞ்சதை பேசி என்னாவப்போவுது விடு, அதான் செழியன் கல்யாணம் முடிஞ்சதே” என்றார் சின்னப்பொண்ணு..
“என்ன இருந்தாலும் அரசாங்க உத்தியோகம் பாக்குறவனுக்கு தையக்காரியை கட்டிவச்சதைத்தான் காண சகிக்கல” என்று கூறி சின்னப்பொண்ணுவின் முகம் போன போக்கை கண்டு திருப்தியாகி வந்தவேலையை முடித்துவிட்டு சென்றார்..
வந்திருந்தவர்களில் பலர் ராகவியை பற்றி புகழ்ந்து பேசியிருந்தாலும், ஒருசிலர் செழியனின் உத்தியோகத்தை வைத்து உதாரித்தனமாக பேசியதுத்தான் சின்னப்பொண்ணுவின் மண்டைக்குள் ஓடியது.. அதும் அண்ணன் மகளுக்கு நிச்சியம் அதை தன்னிடம் ஒருவார்த்தை கூறவில்லை!.. யாரோ ஒரு மூன்றாம் நபரின் மூலம் காதை எட்டியதை எண்ணி கரித்துக்கொண்டு வந்தது..
காலை உணவை முடித்துவிட்டு அறைக்கு வந்தாள் ராகவி.. செழியன் இன்னும் கீழே சாப்பிட்டுக்கொண்டிருந்தான்..
அறையின் மூலையில் அண்டியிருந்த அடப்பாசரத்தை அகற்றும் வேலையில் இறங்கியிருந்தாள் ராகவி..
புடவையை ஏற்றி இடுப்பில் சொருகிக்கொண்டு துடப்பத்தை எடுத்து தூசியை தட்டி, அங்கிருந்த பொருட்களையெல்லாம் வெவ்வேறு இடத்தில் அடப்பாசரம் அண்டாமல் அடுக்கி வைத்துவிட்டு ஓய்ந்தவாரு கட்டிலில் அமர்ந்தார்..
அவளின் ஃபோன் தானும் இருக்கிறேன் என்பதை உணர்த்த, சலிப்புடன் ஃபோனை எடுத்தாள்..
“அக்கா, புடவையை குஞ்சம் வைக்க கொடுத்தத்தன்னு நம்ம மருவாயி ஆயா வீட்டுலருந்து ஆளுங்க வந்திருக்காங்க” என்றாள் கடையில், ஓவர்லாக் அடிக்கும் ராதா..
“ரேக்ல, கீழருந்து மூனாவது வரிசையில கட்டப்பை இருக்கும் பாரு!.. அந்தக்கட்டப்பைக்குள்ள ரண்டு புடவை இருக்கும், அதுல பொடிக்கலர் புடவைதான் அவங்களுது அதை எடுத்து கொடுத்துட்டு 500 ரூவா வாங்கிக்கோ” என்றாள் ராகவி..
“சரிங்கக்கா!.. நீங்க எப்போ வருவீங்க?” என்று ராதா கேட்க..
“இன்னும் எட்டு நாள்ல வந்துடுவேன் ராதா, சாயங்காலமா நம்ம சத்ராபதி அண்ணனை வரச்சொல்லியிருக்கேன்.. அட்டைப்பொட்டியில இருக்குற பொருளையெல்லாம் அவருட்ட கொடுத்துவிடு”..
“அக்கா அது இங்க பொருத்தரத்துக்கில்லையா?”
“ஏன் உனக்கு கூடப்பேச நான் ஒருத்தி போதாதா?.. அதையும் அங்கயே பொருத்தி அதுக்கு ஒருத்தியை வேலைக்கு வைக்கணுமா?” என்று ராகவி கிண்டலுடன் கேட்க..
“நீங்க எப்பவும் தமாசு தான்- க்கா!”..
“ராதா, நாளைக்கு பள்ளிக்கூடம் இருக்கு விளையாட்டு கட்டாம போயிட்டு வந்து இருக்கிறதை ஓரம் அடிச்சிக்கொடு!.. சும்மா கடையை திறந்து வச்சிக்கிட்டு உக்காந்துக்காத? தைக்கிறதுக்கு அவசரம்னு கொண்டு வந்தா வாங்கி குமிச்சிடாத, இருக்கிறதை தச்சிக்கொடுத்தாவே போதும்னு இருக்கு” என்றுவிட்டு வைத்தாள் ராகவி..
பர்ஸ்ஸிலிருந்து ஐயாயிரம் பணத்தை எடுத்து அவளின் முன்பு வைத்தான் செழியன்..
‘இவரெப்ப வந்தாரு’ என யோசனையுடன் அவனை பார்த்துக்கொண்டிருந்த ராகவி அவனின் செய்கையில் புரியாமல் விழித்து பின் புரிந்ததும் அந்தப்பணத்தை எடுத்துக்கொண்டு அவன் கையைப்பற்றினாள்..
செழியன் அவளை என்னவென்பது போல பார்க்க, “ஐயாயிரத்தை கொடுத்து, உங்கம்மா சொன்னமாறி நா வக்கெத்தவன்னு குத்திக்காட்டுறிங்களா?.. எனக்கு இந்தப்பணம் தேவையில்ல, கீழ மாமா கேட்கும் போதே எனக்கு உங்கக்கிட்ட வாங்கிக்கொடுக்க தெரியாதா?.. இது எங்களோட சுயமரியாதை சம்பந்தப்பட்ட விசியம்.. சோ இந்தப்பணம் எனக்கு வேண்டாம்.. என்னால சொன்ன தேதிக்குள்ள பணத்தை கொடுக்க முடியும்” என்றவளிடம் மேற்கொண்டு எதையும் அவன் பேசவில்லை.. பணத்தை வாங்கிக்கொண்டான்..
‘ஜாடையிலயே ஜடமாறி பேசி ஜாலமுட்டும் குடும்பம் நடத்திடலாம்னு முடிவிலருக்காரு போல’ என மனதில் நினைத்துக்கொண்டாள் ராகவி..
இரண்டு நாள் கடந்த நிலையில் புதுமணத்தம்பதிகள் மருவீடு வந்திருந்தனர்..
ஜகதா வீட்டுக்குத்தான் வந்திருந்தார்கள்.. அங்கே ராகவியின் தந்தை மாயவேல் அவரின் மகன் மருமகளான, தமிழ் அமலா என அனைவரும் தம்பதியினரை வரவேற்றனர்..
“எப்படி இருக்க ராகவி” என அன்புடன் விசாரித்தான் அண்ணங்காரன்..
அவனை புருவ முடிச்சுடன் பார்த்தாள் ராகவி.. அண்ணங்காரன், இப்படியெல்லாம் பாசமாக பேசி ஜில்லென்று ஐஸ் வைக்கும் ஆளில்லையே?.. அவனின் பாசத்தில் அவளுக்கு ஏதோ வில்லங்கம் இருப்பது போல தோன்றினாலும் கணவன் அருகில் இருப்பதால் “நா நல்லா இருக்கேன்- ண்ணா” என்றதோடு முடித்தவள் “அத்தை” என அழைத்தவாரு நிற்காமல் ஜகதாவிடம் தாவிவிட்டாள்..
அமலா தமிழை முறைத்துத்தள்ள, “சும்மா இருடி பட்டுபட்டுனு எல்லாத்தையும் பண்ண முடியாது.. முன்னப்பின்ன அவக்கிட்ட பாசமா பேசியிருந்தாக்கூட இதெல்லாம் அசவுகரியமாக தெரியாது.. புதுசா பேசவும் ஒருமாறி நாக்கு தந்தியடிக்குது.. உன்னை கட்டிக்கும் போதுக்கூட எனக்கு இம்புட்டு தடுமாற்றம் இல்லை, கூடப்பொறந்த பொறப்புக்கிட்ட புதுசா பேசவோ என்னவோ ஒப்பல” என்றான் தமிழ் சன்னமான குரலில்..
“என்ன ஒப்பல பொய் பாசத்தை காட்டவா?”
“அதுவும் ஒருக்காரணம் தான், அமைதியா இரு அமலா வாயைவுடாத யார் காதுலயாவது விழுந்துட்டா? அசிங்கமாப்போயிடும்.. ராகவி இங்கத்தானே இருக்கா வெளியூர்லயா கட்டிக்கொடுத்துட்டோம் நீ புணங்கிக்கிற? பொறுமையா பேசிக்கலாம் அவசரப்படாத” என்றான் தமிழ்..
செழியன் ராகவி இருவருக்கும் குடிப்பதற்கு குளிர்பானத்தை கொடுத்தார் ஜகதா..
மகளின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தார் மாயவேல்..
அவரை ராகவி கவனிக்கவில்லை என்றாலும் செழியன் கவனித்தான்.. கொஞ்சம் ஒடுங்கி வதங்கி போயிருந்தார் மனிதர்..
“மாமா” என்று செழியன் அழைத்ததும் ராகவி திரும்பி கணவனை பார்க்க, அவன் பார்வை மாயவேலிடம் மட்டுமே நிலைத்திருந்தது..
“சொல்லுங்க மாப்பிள்ளை!”
“எப்படி இருக்கீங்க மாமா!.. ஏன் பாத்துக்கிட்டே இருக்கீங்க உங்கபொண்ணு தான் ரெண்டு வார்த்தை பேசுங்க” என்றான் செழியன்..
“என்ன பேசுறதுன்னு தெரியலை மாப்பிள்ளை.. பேசக்கூட தகுதி எனக்கில்லை, அப்பனா நா அதுக்கு ஒண்ணுமே பண்ணல” என்று அவர் சொல்லும்போதே கண்ணிலிருந்து கண்ணீர் வந்துவிட்டது மாயவேலுக்கு..
ஏண்டா கேட்டோம் என்றானது செழியனுக்கு..
“அப்பா என்ன சின்ன குழந்தையாட்டம் கண்ணைத்துடைங்க” என்று ராகவி அதட்டியதும் கண்ணைத்துடைத்துக்கொண்டார் மாயவேல்..
“நீங்க எனக்கு அப்பாவா இருக்கீங்க? என்னை கவனிக்கிறதுல, எனக்கான பாசத்தை கொடுத்ததுலன்னு உங்களை குறை சொல்லவே முடியாது.. சும்மா எதையாவது நினைச்சி கண்ணுதண்ணியை சிந்தாதிங்க” என்றாள் ராகவி..
“சரி வாங்க சாப்பிடுவிங்க எல்லாம் ரெடியா இருக்கு.. செழியனை பின்பக்கமா கூட்டிட்டு போ ராகவி” என்றார் ஜகதா..
‘ஏன் எனக்கு வழித்தெரியாது பாவம்’ என செழியன் மனதில் நினைத்தாலும் ராகவி சென்றபின் அவளை பின்தொடர்ந்து தான் நடந்தான்..
கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்து வைத்திருக்க, அதிலிருந்து தண்ணீரை இறைத்து கையைக்கழுவிக்கொண்ட ராகவி கணவனுக்கு வழி விட்டு நிற்க, செழியனும் கையை கழுவிக்கொண்டான்..
ராகவி புடவை முந்தானையை அவனிடம் நீட்டினாள்..
முகத்தில் இறுக்கம் வந்து ஒட்டிக்கொள்ள, இடக்கண் மூலம் ஜகதா வாயிலில் நின்று கவனிப்பதை கண்ட செழியன் மனைவி நீட்டிய முந்தானையில் கையை உலர்த்திக்கொண்டான்..
விருந்து வைத்து, விழுந்து விழுந்து புதுமணத்தம்பதியினரை கவனித்து கடைசியில் கிளம்பும் போதும் முறையாக கொடுக்கவேண்டியதை கொடுத்து அனுப்பி வைத்தனர்..
ராகவி அந்த ஐயாயிரம் பணத்தை சொன்ன தேதியில் கொடுத்துவிட்டாள்..
நாட்கள் அதன்போக்கில் நகர, செழியனிடம் மட்டும் எந்த முன்னேற்றமும் இல்லை!.. முன்பை விட இப்போது அழுத்தமாக மனைவியிடம் அமைதியை கடைப்பிடித்தான்..
ஜாடைப்பேச்சிக்குக்கூட இடமில்லை!.. எதுவாக இருந்தாலும் அவன் கண் காட்டும் ஜாலம் மட்டுமே..
இந்த ஒருமாதத்தில் அவன் கண்ணை சுருட்டினால் ‘பசிக்குது சாப்பாடு வை’ எனக்கூறுகிறான் என்பதை மட்டுமே அறிந்து வைத்திருந்தாள்..
‘ஏன் செழியன் பேசமடந்தையாக இருக்கிறான்’ என்ற கேள்வி உள்ளுக்குள் எழுந்தாலும் அவனிடம் கேட்டுக்கொள்ளவில்லை ராகவி.. ஒருமுறை கேட்டு அவன் குற்றம் சுமத்தும் பார்வை பார்த்ததிற்கே இன்னும் அவளால் ‘ஏன் அந்த பார்வை’ என்ற காரணத்தை கண்டறியமுடியவில்லை!.. மீண்டும் ஏன் எனக்கேட்டு இரத்த அழுத்தத்தை இலவசமாக வாங்கிக்கொள்ள விரும்பாமல் விட்டுவிட்டாலும் அவனின் மௌனம் அவளை அதிகமாக பாதித்தது..
கணக்கு நோட்டுடன் சோஃபாவில் அமர்ந்திருந்தார் வெங்கடாஜலம்..
செழியன் அவரிடம் பணத்தை நீட்டினான்..
“இன்னும் கணக்கு பாக்கலப்பா” என்றார் வெங்கடாஜலம்..
“பரவாயில்லப்பா, கல்யாண செலவை பாத்திருக்கிங்க? கணக்கா ஏன் வாங்கணும்”..
“எம்புட்டு இருக்கு செழியா” என்று சின்னப்பொண்ணு கேட்க..
“அம்பதாயிரம் இருக்கும்மா!”
“செழியா எல்லாத்தையும் இங்கயே கொடுத்துட்டா? ராகவி செலவுக்கு என்ன பண்ணுவ? இடையில அப்பாக்கிட்ட பணம் பத்தாக்குறை வந்தாலும் வரும், தேவைக்கு ஏத்தாப்புல எடுத்து வச்சுக்கோ” என்றான் பிரகாசம்..
“அவ சம்பாதிக்கிறதை அத்தைக்காரி வூட்டுக்கா அனுப்பி விடுறா? ஏன் அவத்தேவையை அவப்பாத்துக்க மாட்டாளா?” என்று சிடுசிடுப்பாக கேட்டார் சின்னப்பொண்ணு..
“அம்மா அமைதியா இருக்கியா? பொம்பளைங்களுக்கு அப்பப்ப பணம் தேவைப்பட்டா உங்கட்ட கையைக்கட்டி கேட்டுட்டு இருக்க முடியாதுன்னு மாசம் இம்புட்டுன்னு நீ அப்பாக்கிட்டருந்து வாங்கிக்கிறல்ல, இதுக்கு குத்தகைக்கு விட்ட வாடவைப்பணம் உனக்கு வந்தும்.. உனக்கொரு நாயம் இருக்கவங்களுக்கு ஒருநாயமா மா?” என்று பிரகாசம் கேட்டதும் அமைதியானார் சின்னப்பொண்ணு..
“பிரகாசம் சொல்லுறதும் வாஸ்தவம் தான் செழியா?.. நீ செலவுக்கு எடுத்து வச்சுக்கோ” என ஒப்புக்குத்தான் கூறினார் வெங்கடாஜலம், மகனின் சம்பளம் அம்பதாயிறத்தையும் தாண்டி என்பதை அறிந்ததால்..
“மாமா” என ராகவி அழைத்ததும் செழியன் அவளை பார்க்க, அவள் பார்வை என்னவோ வெங்கடாஜலத்திடம் தான் இருந்தது...
“சொல்லுமா” என்றார் வெங்கடாஜலம், மகன் மருமகள் இருவரையும் பார்த்தவாறே..
“இது என் பங்கு” என்று சம்பளக்கவரை நீட்டினாள் ராகவி..
சின்னப்பொண்ணு அவளை சிறு அதிர்வுடன் பார்க்க, “புரியலமா” என்றார் வெங்கடாஜலம்..
“இங்க சம்பாதிக்கிற ரெண்டு பேரும் பணம் கொடுக்குறாங்க!.. நானும் மாசம் அவங்களவுக்கு இல்லைன்னாலும் ஓரளவுக்கு சம்பாதிக்கிறேன் மாமா.. என் தேவைக்கு போக மீதிப்பணம்” என்றாள் ராகவி..
செழியனுக்கு சுருக்கென்று தைத்தது..
‘ஆக என் பணத்துலக்கூட உரிமைக்கொண்டாடக்கூடாதுன்னு நினைக்கிறா’ என்று உள்ளுக்குள் நினைத்தவன் உடைந்த மனதை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை..
வெங்கடாஜலம் மறுக்காமல் வாங்கிக்கொண்டார் மனைவியின் ஆச்சர்ய பார்வையை ஆராய்ந்தபடியே..
தன்னால் கொடுக்க இயலவில்லையே என மல்லிகாவுக்கு மனம் தத்தளிக்க, அவளைக்கண்டே அதை கணித்த ராகவி பின்பு பேசிக்கொள்ளலாம் என நினைத்துக்கொண்டாள்..
“மகாராணி எம்புட்டு கொடுத்துருக்கா?” என்று சின்னப்பொண்ணு கேட்க..
கவரைப்பிரித்து பணத்தை எடுத்து எண்ணிப்பார்த்த வெங்கடாஜலம் “எட்டாயிரம் இருக்கு” என்றார்..
“அப்பா என் பங்கு” என்று பிரகாசம் பணத்தை கொடுக்க, ராகவி அறைக்கு சென்றுவிட்டாள்..
“என்னடா எப்பவும் விட அதிகமா இருக்கு” என்று வெங்கடாஜலம் கேட்க..
“ஐயாயிரம் சேர்த்து போட்டுருக்காங்கப்பா!.. ஆனி முடியப்போவுதுல்ல, எப்பவும் இந்த நேரத்துக்கு தான் சேர்த்தி போடுவாங்க” என்றான் பிரகாசம்..
“எப்பவும் கொடுக்குற இருபதாயிரம் போதும் டா” எனக்கூறி ஐயாயிரத்தை அவனிடமே கொடுத்துவிட்டார் வெங்கடாஜலம்..
“அடுத்த மாசம் அந்த தையக்காரியை ஆத்தா வீட்டுக்கு அனுப்பணும்.. அதைப்பத்தி எதாவது உங்க அண்ணி மூச்சி விட்டாங்களா?” என்று சின்னப்பொண்ணு கேட்க..
“ஆடி மாசமா?”
“ஆமா!.. முறை செய்ய பணமில்லைன்னு கையை விரிச்சி இங்கையே இருக்கட்டும்னு மட்டும் சொல்லட்டும் இருக்கு” என்றார் சின்னப்பொண்ணு..
“அதெப்படி முறையை விட்டுக்கொடுப்பாங்க!.. நல்ல நாள் பாத்து அழைச்சிட்டு போயிடுவாங்க, எப்போ ஆடிப்பிறக்குது” என்று வெங்கடாஜலம் கேட்க..
“இன்னும் அஞ்சு நாள் இருக்குது மாமா” என்றாள் மல்லிகா..
“ஊர்ல திருவிழா போட்டா வரிப்போடுவாங்க? எப்படியும் இந்த மாசம் அந்த வூட்டுக்கு சுண்ணாம்பு அடிக்க முடியாது சின்னா, இந்த வீட்டுக்கு பெயிண்ட் அடிச்சிடலாம், வரிக்கட்டணும் புதுத்துணி எடுக்கணும் செலவு நிறைய இருக்கு” என்றார் வெங்கடாஜலம்..
“ஆடி முடிஞ்சதுக்கு அப்பறமாவாது அந்த வூட்ட சரிப்பண்ண பாருங்க!.. வாடகைக்கு வுட்டம்னா அது ஒரு வருமானம் வரும்.. முப்பதாயிரம் செலவு பண்ணுறதுக்கு மூக்கால அழுவுறிங்க?” என்று சலித்துக்கொண்டார் சின்னப்பொண்ணு..
“இருந்தா பண்ண மாட்டன்னா? கல்யாண செலவுல மாட்டிக்கிட்டதால அதுக்குன்னு தனியா ஒதுக்க முடியலை.. எப்படியும் ஆடியில யாரும் குடிவர மாட்டாங்க, பொறுமையா பண்ணிக்கலாம்” என்று முடித்துவிட்டார் வெங்கடாஜலம்..
ராகவி ஜாக்கெட் தைப்பதற்காக துணியை வெட்டிக்கொண்டிருந்தாள்..
மெத்தையில் சம்மணமிட்டு அமர்ந்த செழியன் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்..
‘இவ எப்படி சமாளிக்கிறா?.. மூணு லட்சம் இவப்பேர்ல கடன் இருக்கு, அதுக்கு அசலைக்கொடுக்காம வட்டியே மாசம் நாலாயிரத்தைநூரு வருது! இங்க எட்டாயிரம் கொடுத்துருக்கா? செலவுக்கு வச்சிருக்காளா என்னன்னு தெரியலையே’ என யோசித்தவன் சில நிமிடங்களுக்கு பின் தையல் மிஷின் பக்கத்தில் பர்ஸ்ஸை வைத்தான்..
அண்ணார்ந்து அவனை பார்த்தாள் ராகவி..
கண்ணை சுழட்டி பர்ஸில் பார்வையை பதித்தான் செழியன்..
பர்ஸ்ஸை எடுத்து திறந்து பார்த்த ராகவி செலவுக்கு இரண்டாயிரம் எடுத்துக்கொண்டு அவனிடம் நீட்ட, கையைக்கட்டிக்கொண்டு அவளையே அழுத்தமாக பார்த்தான் செழியன்..
“எனக்கு இதுவே அதிகம்” என்று ராகவி சொன்னதும் செழியனின் பார்வையில் பெரிதாக மாற்றமில்லை, பார்வையையும் அவன் திருப்பவில்லை..
மேலும் இரண்டாயிரம் எடுத்துக்கொண்ட ராகவி.. “பணமும், படுக்கை சுமமும் மட்டும் பொண்டாட்டியை சந்தோஷப்படுத்திடாது” என்றுவிட்டு தையமிஷினை காலால் உதைக்க ஆரம்பித்தாள்..
பர்ஸ்ஸை எடுத்துக்கொண்டு வந்து கட்டிலில் அமர்ந்த செழியனின் இதயம் தையமிஷினின் தக் தக் தக் என்ற சத்தத்தைப்போலவே தடத்தடத்தது..
‘அவ பேசின பேச்சையெல்லாம் மறந்துட்டியா செழியா?.. ஒருவார்த்தைன்னாலும் சுறுக்குன்னு ஊசியை இறக்குற மாறி அவ பேசிடுறா?.. நீ இப்படியே இருந்தன்னா காலமுட்டும் இந்த அறையில தையமிஷின் சத்தத்தை தவிர்த்து வேற எதுவும் கேட்காது.. நல்லதோ கெட்டதோ உன் திருவாயைத்திறந்து பேசிப்பிடு’ என்று மனம் அறிவுறுத்த, பணத்தை கொடுத்ததும் அடுத்து வாயைக்கொடுக்க அவன் மூளை வழிவிடவில்லை..
முழித்திருந்தால் கண்டதையும் நினைத்து தூக்கம் அண்டாது என்பதை உணர்ந்து கண்ணை மூடிக்கொண்டான்..
தையமிஷினின் சத்தம் வேறு தூக்கத்தை கெடுக்க, நிமிடங்கள் பொறுத்து பார்த்தவன் பட்டென எழுந்து அவள் முன்பு வந்து நின்றான்..
அவனின் நிழல், ஆடையில் விழுந்ததில் “ப்ச் என்ன மாமா” என நிமிர்ந்து அவனை பார்த்து கேட்டாள் ராகவி..
அவளை முறைத்து விட்டு மணியை பார்த்தான் செழியன்..
“அவசர பிளவுஸ் ஒரு அரைமணி நேரம் மாமா” என்று ராகவி சொன்னதும் இன்னும் அவளை முறைத்தான் செழியன்..
பாதி தைத்திருந்த பிளவுசை மடித்து வைத்துவிட்டு எழுந்து லைட்டை அணைத்தாள் ராகவி..
செழியன் சென்று படுத்துக்கொள்ள, பணத்தை பத்திரப்படுத்திவிட்டு வந்து தானும் படுத்துக்கொண்டாள் ராகவி...
ஆடிமாதம் ராகவியை, மனைவியுடன் வந்து முறைப்படி அழைத்தான் தமிழ்..
தாம்பூலத்தில் தேங்காய், பழம் வெற்றிலைப்பாக்கு புதுப்புடவை பலகாரம் என மேலும் இதரப்பொருட்களை கடைப்பிறப்பி வைத்தாள் அமலா..
“மாப்பிள்ளை, ராகவியை ஆடிக்காக அழைச்சிட்டு போறோம்” என்று செழியனிடம் கூறினான் தமிழ்..
ராகவியை ஒருகணம் ஏக்கமாக பார்த்துவிட்டு தமிழிடம் தலையசைத்தான்..
ஒருநொடிக்கும் குறைவேயானாலும் அவனின் பார்வையை கண்ட ராகவிக்கு உடல்முழுவதும் புதுவித உணர்வு ஆட்கொண்டு தாக்கியதில் நிற்கவே தடுமாறினாள்..
பெரியவர்களிடம் கூறிவிட்டு ராகவியை அழைத்துச்சென்றனர்..
ஆகிவிட்டது, ஆடிக்கு பிறந்த வீட்டிற்க்கு வந்து ஒருவாரமாகிவிட்டது..
ஒருமாதத்தில் கணவனை பார்த்தே பழக்கப்பட்ட ராகவிக்கு அவனின் முகத்தை பார்க்காமல் ஒருக்கை உடைந்தது போல இருந்தது..
“ராகவி மாப்பிள்ளை ஃபோன் போடுராறா?” என்ற தந்தையின் கேள்விக்கு எப்போதும் “இப்போ தான் அப்பா பேசினேன்” என்று பதில் கூறிவிட்டு தனியே வந்து அழும்போதெல்லாம் அவன் ஏன் பேசமடந்தையாக இருக்கிறான் என்ற கேள்வி நிதமும் தோன்றி மறையும்..
‘ஒருவேளை என்னை பிடிக்கலையா? இல்லை, இல்லை!.. பிடிக்காமையா எனக்கான தேவைய அப்பப்ப பூர்த்தி பண்ணுவாரு!. அப்ப ஏன் பேசமாட்டங்கிறாரு’ என அவ்வப்போது தனக்குள் கேள்விக்கேட்டுக்கொண்டாலும் இறுதியில் பதில் கிடைக்காமல் பத்திக்கொண்டு வரும்..
தையல்கடைக்கு சென்றுவருவதினால் பைத்தியம் பிடிக்காமல் இருக்கிறது..
பேசாமல் ஒருவரை பைத்தியமாக்க முடியுமா?.. கொஞ்சம் கொஞ்சமாக ராகவியை பைத்திய மாக்கிக்கொண்டிருக்கிரானே செழியன்..
‘ஒருக்கா வந்து பாத்துட்டு போனாக்கூட அவங்களுக்கு கவுரவக்குறைச்சல் போல’ என தன்போக்கில் முனகிக்கொண்ட ராகவி வீட்டிற்குள் நுழைய, தமிழ் அமலா இருவரும் கத்தும் சத்தம் காதை எட்டியது..
“என்ன பண்ண சொல்லுறீங்க?.. ஏற்கனவே ஊதாரியா ஒண்ணுமில்லாம சுத்திட்டு, கிடைக்கிற வேலையை செஞ்சி ஏதோ மூணு நேரமும் வயித்து பசியை போக்கிக்கிறேன்.. இந்தச்சூழ்நிலையில இந்தக்குழந்தை அவசியமா?.. ஒருநேரம் நா பட்டினியா கடந்துப்பேன் உள்ளருக்குற உசுரு கடக்குமா?.. அது பிறந்ததுக்கப்பறம் இன்னும் சிரமமாத்தான் இருக்கும்.. அதுக்கு முன்னமே களைச்சிட்டா யாருக்கும் தொந்தரவில்லையே?”
“என்ன அமலா பேசுற? வயித்துல குழந்தையை வச்சிட்டு களைக்கிறேன்னு, வேண்டாம் அதுஇதுன்னு கேட்க நல்லாவா இருக்கு.. நான்தான், வேலைக்கு போயிட்டு தானே இருக்கேன்.. தினமும் இரநூறு கொண்டு வந்து தரனே? அதுக்குமேல உனக்கென்ன வேணும்”..
“நீங்க கொடுக்குற இரநூரை வச்சிட்டு நாக்கைத்தான் வலிக்க முடியும்.. எங்கப்பா மூனு லட்சம் ரெடிப்பண்ணிக்கொடுத்தா புடவைக்கடை ஒன்னு வச்சித்தரன்னு சொன்னாருல்ல!.. அதைப்பத்தி வாயைத்திறக்காமயே இருக்கீங்க?.. தொழிலாளியாவே அதும் நிதமும் இரநூரு மட்டும் சம்பாரிச்சா போதும்ன்ற எண்ணத்துல இருக்கீங்களா?” என்று கோவமாக கேட்டாள் அமலா..

Last edited: