“கடை வைக்க மூணு லட்சம் பத்தாது அமலா”..
“உன்னை இழுத்துட்டு ஓடியாந்ததால எங்கப்பா எனக்கு செய்ய வேண்டியதை நகையா போடாம கடையா வச்சிக்கொடுக்கணும்னு நினைச்சித்தான் உங்கட்ட மூணு லட்சம் கேட்டது.. அதும் கடைக்கு அட்வான்ஸ் கொடுக்கத்தான்.. பெத்தவங்க ஓரளவுக்குத்தான் செய்வாங்க, எல்லாத்துக்கும் அவங்கட்டயே போயி நிக்கக்கூடாது”..
“மூணு லட்சம் தர அளவுக்கு எனக்கு யாரையும் தெரியாது அமலா”..
“கடன் வாங்குங்க, கடன் கூடவா வாங்க முடியாது.. இன்னும் ஒருவாரம் உங்களுக்கு கால அவகாசம்... பணத்தோட வந்திங்கன்னா? குழந்தையை எந்த சஞ்சலமும் இல்லாம பெத்துப்பேன்.. இல்லை என்னால முடியலை நா இப்படித்தன்னு கையை விரிச்சிட்டா? உன்னை காதலிச்சு கட்டிக்கிட்ட பாவத்துக்கு, உருவான குழந்தையை அழிச்சிட்டு தினமும் உன்கிட்ட ஓரியாடியே காலத்தை ஓட்டிக்கிரேன்” என்றாள் அமலா அழுதவாரே..
வெளியே, கயிற்று கட்டிலில் படுத்திருந்த மாயவேல் அருகில் வந்தமர்ந்தாள் ராகவி..
“என்ன ராகா அங்க அம்புட்டு பேசி சண்டை கட்டுறாங்க, எனக்கென்னன்னு நீங்க இங்க வந்து படுத்துட்டிங்களான்னு பக்குறியா” என்று மாயவேல் கேட்க..
“ஒருவார்த்தை என்னன்னு கேட்கலாமே- ப்பா”..
“உன் அண்ணன் ஊதாரியா இருந்தான்.. அந்தப்பிள்ளைய கட்டிக்கிட்டு வந்தப்பறம் தான் ஏதோ நாளு காசு சம்பாதிக்க ஆரம்பிச்சான்.. அது கேட்கிறதுல தப்பில்லையே ராகா.. அதுவே இங்க திண்டாட்டிக்கிட்டு கடக்குது.. இதுல குழந்தைக்குட்டின்னு வந்தா அதுக்கான தேவை அதிகமாகுமே? அமலா வீட்டுல கடை வச்சித்தராங்கன்னு சொல்லுறாங்களே? இவன் எங்கேயாவது வட்டிக்காவது வாங்கிக்கொடுக்களாமில்லை?.. அவனை சொல்லியும் குத்தமில்ல அம்புட்டு பெரிய தொகையை அவனை நம்பி யாருக்கொடுப்பா” என கேள்வியும் கேட்டு பதிலும் கூறிக்கொண்டார் மாயவேல்..
அழுகையுடன் வெளியே சென்ற அண்ணங்காரனை பார்க்கவே பாவமாக இருந்தது ராகவிக்கு..
‘பெரியம்மா போட்ட நகை இருக்கே? அதை ஏன் பேங்க்ல வச்சி அண்ணனுக்கு கொடுக்கக்கூடாது’ என்ற எண்ணம் ராகவிக்குள் உதிக்க, அதைப்பற்றி யாரிடமும் கேட்காமல் அடகு வைக்கும் முடிவிற்கு வந்தாள் ராகவி..
அண்ணங்காரணை அழைத்துக்கொண்டு தையல் கடைக்கு வந்திருந்தாள் ராகவி..
"இங்க வரவா என்னை கூட கூட்டியாந்த" என்று தமிழ் கேட்க..
"பேசத்தான் கூட்டியாந்தேன், டீ குடிக்குறியா?"
"இல்லை எனக்கு எதும் வேண்டாம் என்ன பேசப்போற?.. வூட்டுல, அமலா பேசினதை நீ கேட்டன்னு எனக்கு தெரியும்.. அதைப்பத்தி பேசுறதா இருந்தா நா கேட்கிறதா இல்லை ராகவி"..
"ஏன்"..
"அவ ஆடம்பரச்செலவு பண்ணச்சொல்லுறா?.. அவங்கப்பா, கடை வச்சித்தரதெல்லாம் சாத்தியமா?.. அவரு என்னவோ வேண்டாத வேலை பண்ண என்கிட்ட மூணு லட்சம் கேட்குறாரு!.. அமலா அதை புடிச்சிக்கிட்டு குழந்தையை காரணம் காட்டி என்னை ஒருமாசமா ஒருவழி பண்ணிட்டு கடக்கா"..
"படிக்காமத்தான் ஊதாரியா போயிட்ட?.. உழைச்சி முன்னவரனும்னாவது நினைக்கலாமுல்ல, அவங்க பிள்ளைக்கெட்டுப்போகனும்னு பெத்தவங்க நினைக்கவா போறாங்க"..
"அவங்க நினைக்கக்கூடிய ஆளுத்தான்.. அவங்களுக்கு, இவ என்னை கட்டிக்கிட்டது சுத்தமா பிடிக்கல!.. எப்போ என்னோட உறவை வெட்டிட்டு வருவான்னு தான் காத்துட்டு கடக்குறாங்க"..
சட்டறை திறந்து உள்ளே வந்த ராகவி.. "வா" எனக்கூறி நாற்காலியை இழுத்துப்போட, "நா போயிட்டு வரன்" என்றான் தமிழ்..
"வான்னு கூப்பிடுறன்- ல்ல" என்று ராகவி குரலை உயர்த்தியதும் அவளை முறைத்தவாரே வந்தமர்ந்தான் தமிழ்..
"என்ன பண்ணலாம்னு இருக்க!.. அமலா அண்ணி பெத்தவாங்க சொல்லுறதை விடு!.. அவங்க, உனக்கு கடை வச்சிக்கொடுக்க வேண்டாம்.. ஆனா நீ கடைசி வரைக்கும் தினக்கூலிக்கே போயிட்டு வரலான்ற உத்தேசத்துலத்தான் இருக்கியா?" என்று ராகவி கேட்க..
"எனக்கென்ன ஆசையா? என்ன பண்ணுறதுன்னு தெரியல!.. அமலா பேச்சுக்கும் உள்ளுக்குளுந்து போவ முடியல" என்றான் தமிழ் சலிப்புடன்...
"ஆட்டுக்கடைக்குத்தானே நீ வேலைக்கு போயிட்டு கடக்குற? ஏன் சொந்தமா ஆடு வளர்த்து நீயே கறிக்கடையா போட்டு விக்கக்கூடாது"..
"நா யோசிக்காம இருப்பானா ராகா!.. யோசனையெல்லாம் இருக்கு, அதுக்கு பணம் தானே இல்லை!.. இன்னொருத்தர் யாராவது வந்தா கூட்டு சேர்ந்து பண்ணும் போது பணம் குறைஞ்ச அளவுல தேவைப்படும்.. கடனையாவது வாங்கி பொழப்பை பாத்துக்கலாம்னு தான் இருந்தேன்"..
"உழைக்கிற வயசுல உழைச்சிருந்தா இம்புட்டு சிரமம் தேவையா அண்ணா"..
தலைகுனிந்தான் தமிழ்..
"ப்ச்!.. எனக்குத்தான் மனசு கெடந்து அடிச்சிக்கிது.. பெரியம்மா எனக்கு போட்ட நகை சும்மா பீரோவுலத்தான் இருக்கு.. அதைத்தரன் நீ பொழப்பு நடத்திட்டு மூட்டுக்கொடுத்துடு" என்றாள் ராகவி..
"வேண்டாம் ராகா கொஞ்ச நாள் போவட்டும் பாத்துக்கலாம்"..
"எத்தனை நாள்?.. அண்ணி சொன்னதை மறந்துட்டியா? இப்படியே எனக்கென்னன்னு அச்சமில்லாம இருந்தன்னா அவங்களோட அழிச்சாட்டியம் நாளுக்கு நாள் அதிகமாகிரும்" என்றாள் ராகவி..
"நா வெளிய எங்கேயாவது கடன் கேட்டுப்பாக்குறேன்"..
"வெளிய வாங்குவ, நான் கொடுத்தா வாங்கிக்க மாட்டியா? உன்னை வட்டிக்கொடுடான்னா கேட்கிறேன்" என்று ராகவி சலிப்புடன் கேட்க..
"வட்டிக்கு தரமாரியிருந்தா தா, ஒன்றரை லட்சம் போதும்"..
"அம்புட்டு போதுமா?"
"போதும் போதும் இப்போதைக்கு சிறுசாவே ஆரம்பிக்கலாம்!.. எப்படி போவுதுன்னு பாத்துட்டு வரதை வச்சி வாங்கிப்போட்டு பொழப்பு நடத்த வேண்டியது தான்"..
"இம்புட்டு பொறுப்பு இருக்குல்ல, வேணுக்குனே தானே நீ ஊதாரியா சுத்திட்டு கடந்திருக்க" என்று முறைத்தவாரு ராகவி கேட்க..
"என்ன பணம் கொடுக்குறன்னு மிரட்டி மீன் பிடிக்குறியா?.. போ, உன் பணமே வேண்டாம்" என்று எழுந்தவனின் கையை பற்றிய ராகவி.. "கொடுமை கொடுமை நீ என் கையை பிடிச்சு கொடு ராகான்னு கேட்கணும் நா வாங்கிக்கோன்னு கெஞ்சிட்டு கடக்கேன்.. உக்காரு அண்ணா" என்றாள் சிடுசிடுப்பாக..
"அம்புட்டு சலிச்சிக்கிட்டு நீ ஒன்னும் எனக்கு தரவேண்டாம்"..
"என்கிட்ட பணமாயில்லை!.. அத்தை போட்ட அஞ்சுப்பவுன் தான் கடக்கு.. அதுல ரெண்டு பவுன் தரன் பேங்க்- ல வச்சி பணத்தை வாங்கிக்கோ, உன்னால எப்போ மூட்டுக்கொடுக்க முடியுமோ? அப்ப வட்டியோட சேர்ந்து பணத்தை கட்டி மூட்டுக்கொடுத்துடு" எனக்கூறி கழுத்திலிருந்த டாலர் வைத்த இரண்டு பவுன் ஜயினை கழட்டி நீட்டினாள்..
அவள் கையை பற்றிக்கொண்ட தமிழ்.. "ராகா, இந்த உதவியை நா என்னைக்கும் மறக்க மாட்டேன்.. ஆருமாசத்துல நா மூட்டுக்கொடுத்துடரேன்.. உன்கிட்ட நகை வாங்கின விசியம் அமலாக்கு தெரிய வேண்டாம்" என்றான்..
"ஏன்?"
"இந்த நகை திரும்ப உன்கிட்ட வரணும்னா வாயை இறுக்க மூடிக்கோ" என்றுவிட்டு கிளம்பினான் தமிழ்..
"அடப்பாவி!.. விசியத்தை சொன்னா, உரிமைப்பட்டவங்க நகையை ஆட்டையப்போடுற அழுப்பன்னு பொண்டாட்டியை அடிமட்டத்தில இறக்கிப்பிட்டு போறான்" என்று முனகிய ராகவி சிரிப்புடன் வேலையை ஆரம்பித்தாள்..
ஆடிப்பதினெட்டன்று மாரியம்மன் கோவில் திருவிழா ஆரம்பமானது..
பம்பை உடுக்கை சத்தம் விண்ணை பிளக்க, முளைப்பாரி ஊர்வலம் முடிந்து மாவிளக்கு எடுக்கும் பெண்கள் கோவிலை சுற்றி மாவுத்தட்டையை தலையில் ஏந்தியவாரு அம்மனை வேண்டிக்கொண்டு நடந்தனர்..
வண்ணவண்ண விளக்குகள் மிளிர்ந்து காண்போரைக்கவர்ந்திழுத்தது.. சிறுசிறு தள்ளு வண்டிக்கடையும், பலூன் ஊதும் சத்தமும் இன்னும் இன்னும் திருவிழாவை ஆரவாரமாக்கியது..
சின்னப்பொண்ணு வீட்டு சார்பாக, மல்லிகா மாவிளக்கு எடுக்க, அமலாவிற்கு பதிலாக பிறந்த வீட்டு பெண்ணாக ராகவி மாவிளக்கு எடுத்தாள்..
கூட்ட நெரிசலுக்கு நடுவே, மாவிளக்கு தட்டையை தலையில் ஏந்தியபடி கோவிலுக்குள் நுழைந்தாள் ராகவி..
அவளை சுற்றியிருந்தவர்கள் கூட்டத்தில் மாட்டிக்கொண்டு முகத்தை சுழித்து, பின் பெருமூச்சுடன் எப்போது முன்னே போவோமென்ற பாவனையில் முன்னால் பார்த்துக்கொண்டிருக்க, ராகவி பின்னால் திரும்பி பார்த்தாள்..
செழியன்! அவனே தான் அவளுக்கு அரணாக நின்றிருந்தான்.. இரண்டு கைகளையும் நீட்டி அவளை யாரும் இடிக்காதவாரு அணைக்கட்டி, அவள் நகர நகர பாதுகாப்புடன் பார்த்துக்கொண்டான்..
பின்னாலிருந்தவர்களை அவன் பார்த்துக்கொள்ள, முன்னால் அழகு குத்தியிருந்த ஒருவர் நெரிசலில் அவளின் காலை நன்றாக மிதித்து விட, "அம்மா" என அலறி விட்டாள் ராகவி..
கூட்டத்தின் இரைச்சலில் அவள் சத்தம் யாரின் காதையும் எட்டவில்லை.. செழியனுக்கே அவளின் சத்தம் தூரத்திலிருந்து யாரோ அழைப்பது போல சன்னமாகத்தான் கேட்டது..
உதட்டை கடித்து சிவந்த முகத்துடன் வலியுடன் அவள் பார்த்த பார்வையில் முன்னிருந்தவன் "சாரி" என்று மொழிய, அவனை ஏகத்துக்கும் முறைத்துக்கொண்டிருந்தான் செழியன்..
சற்று பின்னால் தள்ளி நின்ற ராகவி மாவிளக்கு தட்டையை பிடிக்க முடியாமல் திண்டாடினாள், காலில் ஏற்பட்ட வலியினால்..
அவள் இடையைப்பற்றி தன்னோடு பாதுகாப்பாக நிறுத்திக்கொண்டான் செழியன்..
அதிர்ந்த விழியோடு அவனை பார்த்த ராகவி சுற்றிலும் பார்வையை பதிக்க, அவன் கையின் அழுத்தம் அதிகமானது..
அண்ணாந்து அவனை பார்த்தாள் ராகவி..
அவன் கண்களோ அவள் கழுத்தில் கட்டியிருந்த தாலியில் நிலைக்க, "உரிமையானவருத்தான்!.. என்ன என்கிட்ட மட்டும் ஊமையா நடிக்கவேண்டியது" என்று வாய்க்குள் முனகிக்கொண்டாள் ராகவி..
அம்மனை வணங்கிவிட்டு இருவரும் வெளியே வந்தனர்..
கூட்டத்தில் சிக்கி சின்னாபின்னமாகியதில் செழியன் முழுதாக வியர்வையில் நனைந்திருந்தான்..
இடையில் சொருகியிருந்த புடவை முந்தானையை உருவி அவன் வேர்வையை ஒத்தி எடுக்க ஆரம்பித்தாள் ராகவி..
அவர்களை சிலர் பார்த்து புன்னகைத்துவிட்டு கடந்து சென்றனர்..
தூரத்திலிருந்தவாரே அவர்களை கண்ட மல்லிகா.. "இவங்களுக்குள்ள சண்டையே வராதாங்க" என பக்கத்தில் நின்றிருந்த கணவனிடம் கேட்டாள்..
"ஏன் இப்போ சண்டைக் கட்டனும்னு ஆசைப்படுறியா?"..
"அப்படி சொல்லலங்க!.. ராகவி அங்க இருந்த வரைக்கும், புருஷன் பொண்டாட்டி பேசிக்கிட்டு நான் பாத்ததேயில்லை.. கண்ணால உங்க தம்பி ஜாடைக்காட்டினா சாப்பாடு எடுத்து வந்து வச்சி, பரிமாறிவா!.. ஒரு சின்ன சவுண்டுக்கூட அவங்க அறையிலருந்து வெளிய வந்ததில்ல" என்றாள் மல்லிகா..
"அந்தப்பிள்ளைய அந்தளவுக்கு பிடிச்சிருக்கு அவனுக்கு"..
"இருக்கலாம்!.. ஆனா பிடித்தம் கல்யாணத்துக்கு முன்னயே வந்தமாறி இருக்கு" என்றாள் மல்லிகா..
"அப்படியே இருந்தாலும் இப்போ அதைப்பேசி என்னாவாகப்போகுது வா!.. அம்மா, நேரத்தோட வரச்சொல்லித்தானே அனுப்பினது" எனக்கூறி மனைவியை அழைத்துச்சென்றான் பிரகாசம்..
பக்குவமாக வேர்வையை துடைத்துவிடும் மனைவியையே பார்த்துக்கொண்டிருந்தான் செழியன்..
அவளின் முகத்தில் உணர்வுகள் அண்டிக்கிடக்க, அவன் முகத்தில் தான் உணர்வுகள் செத்துப்போய் கிடந்தது..
நிஜத்திற்கும் நிழலுக்கும் வித்தியாசத்தை உணர முடியாமல் திண்டாடிப்போனான் செழியன்...
"நேரமாச்சு வீட்டுக்கு கிளம்புங்க" என்றாள் ராகவி, புடவை முந்தானையை இடையில் சொருகியவாரு..
அவள் கழுத்தையே கூர்ந்து பார்த்தான் செழியன்..
அவனின் கூர் பார்வை கழுத்தில் படிவதை உணர்ந்தவளுக்கு நிமிடங்கள் கழித்து தான் ஜயின் இல்லாதது உரைக்க, "மாமா அது! நா அண்ணன் கிட்ட கொடுத்துருக்கேன்" என்றாள் தடுமாற்றத்துடன்..
இடது புருவத்தை உயர்த்தி எதற்கு என்ற பாவனையில் செழியன் கண்ணை உருட்ட, "அண்ணன் ஆடு வாங்கி புதுசா தொழில் தொடங்குறன்னு சொன்னுச்சி, அண்ணி மாசமா இருக்குற இந்த நேரத்துலயும் அஞ்சுக்கும் பத்துக்கும் வெளிய கூலி வேலை பாத்தா கட்டுப்படியாகாதுன்னு நான்தான் அதுக்கான்டி கழுத்துலருக்குற ஜயின கழட்டிக்கொடுத்தேன்.. வரவு வந்துட்டா மூட்டுக்கொடுத்துடும்" என்று நம்பிக்கை தீர்மானம் இளைத்தாள் ராகவி..
செழியன் தலையை மட்டும் ஆட்டினான் மேலும் கீழும்..
அவன் என்ன நினைக்கிறான் என்பதை கவனிக்க முடியாமல் தடுமாறிய ராகவி பின் 'இவங்க என்ன நினைச்சா என்ன?.. என் அத்தை தானே எனக்கு போட்டுச்சி, அவங்களுக்குத்தான் நா முறையா பதில் சொல்லணும்' என்றெண்ணியவள் செழியன் முன்னே செல்வதை கண்டு அவன் பின்னால் செல்லலாமா? வேண்டாமா? என்ற அடுத்தக்கட்ட யோசனையில் இறங்கினாள்..
செழியன் நின்று அவளை திரும்பி பார்க்க, அவனின் விழி வீச்சை உள்ளூர குறுகுறுப்பில் உணர்ந்தவள் அவன் பக்கத்தில் வந்து நின்றாள்..
அவள் கை விரலோடு தன் கையை கோர்த்துக்கொண்ட செழியன் அங்கிருந்த வளையல் கடைக்கு அழைத்து வந்திருந்தான்..
கடையைக்கண்டதும் ராகவியின் மனதில் சொல்லிலடங்காத உணர்வு வந்துத்தாக்கியது..
வருடாவருடம் திருவிழா நாளென்று ஒருசில நொடியேனும் வளையல் கடையை, அவள் பார்வை ஏக்கமாக தொட்டுவிட்டு நகரும்..
அவளையே நோட்டம் விட்டிருந்த செழியனுக்கு அந்தப்பார்வையின் அர்த்தம் புரிந்தாலும் அப்போது அவன் வாங்கிக்கொடுக்க முனையவில்லை!. இப்போது அவள், உரிமைப்பட்டவளாகியிருந்ததால் வாங்கிக்கொடுக்கலாமென்ற எண்ணத்தில் அழைத்து வந்திருந்தான்...
செழியன் கண்ணை சுழட்டி வளையல் பக்கம் பார்வையை பதித்துவிட்டு ராகவியின் கையை அழுத்தம் கொடுத்து பிடித்தான்..
"எனக்கு எதும் வேண்டாம் மாமா" என்றாள் ராகவி, அவனின் மறைமுக செய்தி புரிந்து..
"தம்பி, வீட்டம்மாவுக்கு வளையல் போட்டு விடுறிங்களா? இல்லை வாங்கிட்டு போயி, வச்சிப்போட்டுக்குறிங்களா?"
"இங்கயே போட்டுக்குவா!.. திடமான வளையலா பாத்து இரண்டு டஜன் கொடுங்கம்மா" என்றான் செழியன்..
'இவருக்கு என்கிட்ட பேசமட்டும் தான் வாய்- லருந்து வார்த்தை வராது, மத்தவங்ககிட்ட மணிக்கணக்கா உக்காந்துக்கூட பேசுவாரு' என்று மனதுக்குள் நினைத்த ராகவிக்கு நெஞ்சம் விம்மியது..
செழியன் ஏன் பேசாமல் மௌனம் காக்கிரான் என்று யோசித்தாளே உருமேரி நன்றாக இருந்த உடலிலும் உபாதைகள் உண்டானதுபோன்ற அவஸ்தையில் தவித்துப்போனாள்..
கடைக்கார பெண்மணி வளையலை சரிப்பார்த்து முதலில் ஒரு டஜனை எடுத்துக்கொள்ள, ராகவியின் கையை இழுத்து அவரிடம் ஒப்படைத்தான் செழியன்..
அவனை பார்த்தவாறே அட்டென்ஷனில் நின்றாள் ராகவி.. அவளின் இரண்டு கைக்கும் வளையல் அணிவித்து முடித்ததும் பணத்தை கொடுத்துவிட்டு அடுத்து, மனைவியுடன் பஞ்சு மிட்டாய் கடையின் முன்பு வந்து நின்றான்..
ராகவி தன்னால் நாக்கை சுளாப்பிக்கொண்டாள்.. பஞ்சு மிட்டாயைக்கண்டதும் நாவு தன்னால் கொண்டுவா என்றுக்கேட்க கணவனை கண்கள் மின்ன கண்டாள்..
'கட்டச்சி!.. பஞ்சு மிட்டாயிக்கு பறக்குற பாஜாரி, கண்ணைப்பாரு வைரத்தை நேர்ல கண்டக்கணக்கா மின்னுறதை' என்று மனதிலே மனைவியை அர்ச்சனை செய்தவன் மிட்டாயை வாங்கிக்கொடுக்க, புன்னகையுடன் வாங்கி சாப்பிட ஆரம்பித்தாள் ராகவி..
அவள் சாப்பிடும் அழகையே பார்த்துக்கொண்டிருந்தான் செழியன்..
"ஸ்.. மாமா மறந்துட்டேன் இந்தாங்க" என்று அவனுக்கு ஊட்டுவதற்காக நீட்ட, ஆச்சர்யவிழியுடன் அவளை அளவிட்டவன் அளவுடன் மிட்டாயை வாய்க்குள் வாங்கிக்கொண்டான்..
அவன் மீசையில் பட்டதை இயல்பாய் துடைத்து விட்ட ராகவி இன்பமாய் மிட்டாயை சுவைத்தாள்..
ராகவியை, அவளின் அப்பா வீட்டிற்க்கு அழைத்து வந்திருந்தான் செழியன்..
அவளின் வரவுக்காக வாசலையே பார்த்துக்கொண்டிருந்த மாயவேல் பைக்கில் செழியன் வருவதைக்கண்டவர் அவன் பைக்கை நிறுத்தியதும் தான் மகளையே பார்த்தார்..
"என்ன ராகா நேரமாச்சா?" எனக்கேட்டவர் "வாங்க மாப்பிள்ளை" என்று செழியனை வரவேற்றார்..
"காத்துட்டுக்கடந்திங்களா மாமா!.. ஒரு ஃபோன் போட்டுருக்களாமில்ல" என்று கேட்டவாரே அவரோடு வீட்டிற்குள் நுழைந்தான் செழியன்..
ராகவி தண்ணீர் கொண்டு வந்து கொடுத்துவிட்டு மீண்டும் கிச்சனுக்குள் நுழைந்துகொள்ள, "புள்ளை ஃபோனை இங்கயே வச்சிட்டு போயிட்டா மாப்பிள்ளை!.. தமிழத்தான் போயி பாத்துட்டு வரச்சொன்னேன்.. நீங்களே கூட்டிட்டு வந்துட்டீங்க" என்றார் மாயவேல்..
"நா அங்க தான் மாமா இருந்தேன்!.. அதான் சிரமம் பாக்காம கூட்டியாந்துட்டேன்.. நீங்க தமிழுக்கு ஃபோன் பண்ணி சொல்லிடுங்க அவன் தேடிட்டு இருக்கப்போறான்" என்றான் செழியன்..
"ராகா, அண்ணனுக்கு ஃபோனை போட்டு சொல்லிடும்மா" என்று கிச்சனை பார்த்து குரல் கொடுத்தார் மாயவேல்..
"இந்தாங்க" என இருவருக்கும் லெமன் ஜுஸ் கொடுத்த ராகவி.. "அண்ணி எங்கப்பா" என்று கேட்டவள் ஃபோனை எடுத்து தமையனுக்கு அழைத்தாள்..
"அவங்கம்மா வந்து கூட்டிட்டு போனுச்சி ராகா!.. ரெண்டு நாள் இருந்துட்டு வரதா இருக்கும்ன்னு நினைக்கிறேன்.. என்கிட்ட எதையும் சொல்லிக்கல" என்றார் மாயவேல்..
ஃபோனில் தமிழிடம் வந்துவிட்டதாக கூறிவிட்டு கணவனுக்காக இரவு உணவை தயாரிக்க சென்றாள் ராகவி..

Last edited: