Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஒரு நாளும் மறையாத புதுப் பௌர்ணமி!-14

Advertisement

Banupriya "பா.ரியா"

Well-known member
Member
அத்தியாயம் -14

வீட்டைப் பூட்டிக்கொண்டு நேராக ரோகிணியின் வீட்டுக்குச் சென்றான் நளன்.

"நளன். என்ன இவ்வளவு காலையில்..?" என்றார் ரோகிணி. அவனது கோலத்தைப் பார்த்துக்கொண்டே.

அவன் தடுமாறி கேட்டான். கேட்பதற்கும் தயக்கமாய் இருந்தது.

"அத்தை.... அது வந்து.. ஸ்வப்னா... இங்க வந்தாளா?"

"என்னதிது...? அவ உன் கூடத்தானே இருக்கனும்..." என்றார் ரோகிணி.

அவன் முகத்தில் லேசான அதிர்ச்சி வெளிப்பட்டது. வேறுவழியே இல்லாமல் "சின்னதா ஒரு சண்டை அத்தை.. "என்றான்.

"ஹூம்.. அவ்வளவுத் தானே.. அவளுக்குத் தான் ரொம்ப நேரம் கோவிச்சுக்கிட்டு இருக்க முடியாதே... ஆனா அவ இங்க வரலயே.. வேற எங்க போயிருப்பா....?" என்று அவரும் யோசிக்கத்தொடங்கினார்.

"சரி அத்தை. நான் பார்க்குறேன். வெளிய பூட்டிக்கிட்டு போயிருக்கா. மற்ற கீயை போட்டு திறந்து தான் நான் வந்தேன். ஒருவேளை கோவிலுக்கு எங்கயும் போயிருக்காளோ என்னவோ.. நான் இங்க வந்த நேரம் அவ அங்க போயிருக்கலாம். அவ இங்க வந்தா எனக்கு சொல்லுங்க.. நான் வரேன்... அவளின் இரண்டு நாள் கோபத்தை எண்ணிக்கொண்டு கிளம்பினான்.

அவன் முகத்தில் டண் கணக்கில் சோகம் அப்பியிருந்தது. அவன் போனதும் ரோகிணியும் அவளுக்கு அழைப்பெடுத்தார். ஆனால் அவளது செல்போன் ஸ்விட்ச் ஆப் ஆகியிருந்தது. அவளைப் பற்றிய கவலை அதிகரித்தது.

அப்படி என்னத்தான் நடந்தது இந்த காதல் பறவைகளுக்குள்??

அன்று காலை பரபரப்பான நேரம்.

ஸ்வப்னா.. என்னோட சாக்ஸ் எங்க...?" என நளன் கத்திக்கொண்டிருந்தான்.

"அது எங்க இருக்குமோ அங்கத் தான் இருக்கும்..." சமையலறையிலிருந்து பதில் வந்தது.

அவன் கொஞ்சம் கடுப்பாகிவிட்டு தேடினான். கப்போர்ட்டில் இருக்க வேண்டிய இடத்தில் தான் இருந்தது. அவர்கள் திருமணவாழ்வில் மூன்று மாதத்தை கடந்திருந்தனர்.

காலை வேளை இருவரும் வேலைக்கு கிளம்பும் போது கொஞ்சம் அவசரகதியில் இயங்க வேண்டி இருந்தது. அது இருவருக்குள்ளும் ஏதோ ஒரு சிறு கடுப்பை ஏற்படுத்தியது.

"இன்னுமா ப்ராக்பஸ்ட் ரெடி பண்ணல..? நான் சீக்கரம் போகனும்னு சொன்னேன் தானே.." என அவன் சொல்ல, அவள் கோபமானாள்.

இரவு முழுவதும் அவன் அவளை தூங்க விடுவதே இல்லை. அதில் கொஞ்சமாய் காலையில் கண் அசந்துவிட்டாள். அதற்கு கத்திக் கொண்டிருக்கிறான்.

"ஒரு ஐந்து நிமிஷம்..."

"இல்ல லேட் ஆகுது எனக்கு.. நான் வெளிய சாப்பிட்டுக்கிறேன்..." என அவன் சொல்லும் போதே செல்போன் கத்தித் தொலைக்க அதை தன் காதுக்கு கொடுத்தவன், அவளிடம் சொல்லிக்கொள்ளாமலேயே கிளம்பிச் சென்றுவிட்டான்.

அவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. ஒருவழியாய் வேலைக்குச் சென்றவள் மனம் வேலையில் இயங்காமல் இருக்கவே லீவ் சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டாள்.

அன்றைய நாள் முழுவதும் அவன் அவளுக்கு அழைப்பெடுக்கவும் இல்லை, இவளும் ஒரு மெசேஜை கூட அனுப்பவில்லை.

இரவு அவன் வந்ததும் கதவை திறந்து வைத்துவிட்டு அவள் சென்றுவிட்டாள். வழக்கமாக அவன் பையை வாங்கி அவள் தரும் முத்தம் அன்று மிஸ் ஆகியது.

அவனும் ஒன்றும் சொல்லாமல் குளித்துவிட்டு வந்தான்.

"சாப்பிடுங்க..." என்றாள். அவள் காட்டிய மரியாதையே அவள் கோபமாக இருக்கிறாள் என்று அவனுக்குச் சொன்னது. ஆனால் எதற்கு இந்த கோபம் என்று புரியாமல் விழித்தான்.

"என்ன ஸ்வப்னா.. ஒரு மாதிரி இருக்க...?"

"ஒன்னுமில்ல..." என்று சாப்பாட்டை பறிமாரினாள்.

அவனுக்கு என்ன தவறு செய்தோம் என புரியவில்லை.

"நான் ஏதாச்சும் பண்ணிட்டேனா...?"

அவள் பதிலே பேசவில்லை. அவன் எவ்வளவோ முயற்சித்தும் அது தோல்வியிலேயே முடிந்தது. அவனுக்கும் உள்ளுக்குள் கோபம் வந்தது.

' என்னனு சொன்னாத் தானே தெரியும்.' என கோபத்தில் அவள் பக்கம் திரும்பாமலே தூங்கிப் போனான். நடு இரவில் விழித்துப் பார்த்தவன் அவள் அருகில் இல்லாது கண்டு திகைத்துப் போய் தேடினான். அவள் ஹால் சோஃபாவில் தூங்கிக் கொண்டிருந்தான்.

மெல்லச் சென்று எழுப்பினான்.

"ஸ்வப்னா.. ஏன் இங்க தூங்குற..."

அவள் தூக்கம் கலைந்தாலும் பதில் சொல்லாமல் திரும்பத் தூங்கத் தொடங்கினாள். அவனுக்கு பயங்கரமாய் கோபம் வந்தது. வலுக்கட்டாயமாக அவளை தூக்கிக் கொண்டுச் சென்று படுக்கையில் கிடத்திவிட்டு தூங்கத் தொடங்கினான். மறுபடியும் அவள் எழும்பிச் சென்றுவிடலாம் என அவள் கையையும் இறுக்கமாய் பிடித்துக் கொண்டான். அவள் ஒன்றும் பேசாமல் தூங்கத் தொடங்கினாள்.

மறுநாளும் அவள் பேசவேயில்லை. அவனுக்கும் கோபம் வந்தது. இருவரும் எதற்கு கோபம் என்று தெரியாமலே இரண்டு நாட்களை வேஸ்ட் செய்தனர். ஒரு கட்டத்தில் அவள் இறங்கி வந்தாள். அவள் இறங்கி வந்தப் போது அவன் முருங்கைமரத்தில் ஏறிக்கொண்டான்.

"நளா... காலையில என்ன ப்ரேக்பஸ்ட் செய்யட்டும்? " என்று படுக்கையில் படுத்திருந்தபடியே அவன் முதுகைப் பார்த்துக் கேட்டாள்.

அவன் திரும்பவேயில்லை. அவள் மெதுவாய் அவனை சுரண்டினாள். அவன் அசையாமல் கண்மூடியிருந்தான். அவளுக்கு அழுகை வர ஆயத்தமானது. இருந்தாலும் கட்டுப்படுத்திக்கொண்டு திரும்பவும் அவனைக் கூப்பிட்டாள்.

" நளா.. நான் ஏதாச்சும் பண்ணியிருந்தா ஸாரி... "

அதற்கும் பதிலில்லை. அவன் அருகில் வந்து படுத்துக்கொண்டாள். அப்போதும் எந்த முன்னேற்றமும் இல்லை. மெதுவாய் எழுந்து எட்டிப்பார்த்தாள். அவன் கண்களை இறுக்க மூடிக்கொண்டு இருந்தான். அவன் நிஜமாகவே தூங்கிக்கொண்டிருக்கிறானா இல்லையா என்ற சந்தேகம் அவளுக்கு வந்தது.

அப்படியே பார்த்துக்கொண்டு இருந்தாள். அவன் தூங்குவது போலத் தான் இருந்தது. அவன் மீது கையைப் போட்டாள்.

கொஞ்ச நேரத்தில் அவன் மீது கோபம் வந்தது.

'தப்பு செஞ்சது அவன். நான் எதுக்கு ஸாரி கேட்டுக்கிட்டு இருக்கேன்...' என்று கையை எடுத்துக்கொண்டாள். அவனுக்கு முதுகு காட்டிவிட்டு தலையணைக்குள் புதைந்துப் போய் தூங்கத்தொடங்கியிருந்தாள்.

அவள் தூங்கியதும் அவன் திரும்பிப் பார்த்தான். அவளைப் பார்க்க பாவமாய் இருந்தது. நேரத்தைப் பார்த்தான். ஆறு மணி. ஞாயிற்றுக்கிழமை தானே. கொஞ்சம் தூங்கிட்டு இவள் என்று எண்ணியவன் தலைக்கு இரு கைகளையும் கொடுத்து விட்டத்தைப் பார்க்க ஆரம்பித்தான்.

'ம்.. பார்க்க பாவமாத் தான் இருக்கு.. சரி.. பிறகு பேசுவோம்.'என்று தூங்கிப் போனான். காலையில் எட்டு மணிக்கு எழுந்து அதிர்ந்தான்.

ஸ்வப்னாவை காணவில்லை. அவனுக்கு பதட்டமாகியது. அப்போது அதிசயமாய் மகேஸ்வரியின் இருந்து அவனுக்கு அழைப்பு வந்தது. இவனுக்கு குழப்பம் அதிகரித்தது.

எடுத்து 'ஹலோ' சொன்னான்.

" கொஞ்சம் வீடு வரைக்கும் வந்துட்டுப் போ.. ரொம்ப முக்கியமான விஷயம்.."

அவன் பதில் சொல்ல முடியாமல் தடுமாறினான். அவனுக்கு இப்போது ஸ்வப்னாவை தேடுவது தான் முக்கிய வேலையாக இருந்தது.

"என்னால வர முடியாதும்மா.. ஸ்வப்.. " என்று ஆரம்பித்தவன் நிறுத்தி " நான் கொஞ்சத்துல பேசுறேன்.." என்று வைத்துவிட்டான்.

அந்தப்பக்கம் மகேஸ்வரிக்கு பற்றிக்கொண்டு வந்தது.

" பாத்தீங்களா உங்க புள்ளையுட்டு லட்சணத்தை.. அவ என்னதான் செஞ்சு மயக்குனாளோ.. என் மகன் ஒரேயடியா அவ பக்கம் சாஞ்சிட்டான்.. "

" சும்மா கத்திக்கிட்டு இருக்காது மகேஸ்.. அதுங்க நம்ம புள்ளைங்க... கண்டபடி பேசாத.. "

" எது.. அதுங்களா.. இந்த மூணு மாசத்துல என்னைய பார்க்க ஒரு தடவையாவது வந்துருப்பாங்களா.. இப்ப நீங்க சொன்னதுக்காக தான் நானே போன் பண்ணினேன். எனக்கு இதுவும் தேவை இதுக்கு மேலையும் தேவை.."

மகேஸ்வரி இப்படி கத்திக்கொண்டு இருக்கையில் நளன் ஸ்வப்னாவை காணாத பதட்டத்தில் பரட்டை தலையோடு தெருவில் ' அலைப்பாயுதே' மாதவன் போல சுற்றிக்கொண்டு இருந்தான்.

Nirmala vandhachu ???
 
Top