மௌன சிதறல்கள் ஆசிரியர் யாருன்னு தெரியல இருந்தாலும் தெய்வமே உங்க மன தைரியத்தை போற்றுகிறேன், படிக்கும் எங்களாலே நித்திலாவை இப்படி பார்க்க முடியல எப்படி நீங்க அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து வார்த்தையில் உணர்வை கொடுத்தீங்கன்னு யோசிக்கிறேன்
ரகுவரன் இந்த லோகத்தில் இருக்கானா இல்லையா? பிறந்தநாள் பரிசுல குளிர்ந்து போயிருக்காரு மகா பிரபு. ரகு இப்போ உனக்கு ராகு திசை போலடா ..சிறப்பான சம்பவம் எல்லாம் நடக்குது.
உடனே ஹீரோ ஹார்மியே இப்படி பேசலாமான்னு ஓடி வரக்கூடாது.. ரகுவை ஹீரோவாக நான் ஏற்று கொள்ள மாட்டேன், நாங்க நீதிடா, நியாயம் டா பரம்பரை
மௌன சிதறல் கதையை இன்று தான் தொடங்கி படித்தேன் நெஞ்சமெல்லாம் சிதறிடும் போல வலிக்கிறது நித்திலா நிலை .ஆசிரியர் யாராக இருந்தாலும் கதையை இப்படி இக்கட்டான சூழலில் நிறுத்தி செல்லாதீர்கள் .நான் ஹார்ட் பேஷண்ட் ஆகிடுவேன் போல.