Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஒரு நாளும் மறையாத புதுப் பௌர்ணமி!-27

Advertisement

Banupriya "பா.ரியா"

Well-known member
Member
அத்தியாயம் -27

அடுத்த நாள் காலையில் ரோகிணியின் வீட்டு ஹாலில் நளனும், ஸ்வப்னாவும் ஃசோபாவில் அமர்ந்திருக்க, எதிரே தனித்தனி கதிரைகளில் ரகுவரனும், ரோகிணியும் அமர்ந்திருந்தனர். இருவர் முகத்திலும் குழப்பமும் பதட்டமும்.

நீண்ட காலத்திற்குப் பிறகு தந்தையும் மகளும் சந்தித்துக் கொண்டதில் இருவரும் வாயடைத்துப் போய் இருந்தனர். ரோகிணியோ தனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதைப் போல தலையை கவிழ்த்துக் கொண்டு அமர்ந்திருந்தார். அந்த மௌனத்தை நளன் கலைத்த்தான்.

ரோகிணி காலையிலேயே தன் வீட்டுக்கு ரகுவரன் வந்திருப்பதாகச் சொல்லவும், அவரோடு எப்படி பேசுவது என்று தெரியாமல் அவனையும் அரைநாள் லீவோடு இழுத்துக்கொண்டு வந்து விட்டாள் ஸ்வப்னா.

"இப்படி எல்லோரும் பேசாம இருந்தா என்ன அர்த்தம்...? ஸ்வப்னா நீ ஏதோ பேசனும்னு சொன்னியே...." என்று அவள் கையை இடித்தான் நளன் . அவள் இதழ் திறந்தாள்.

"நான்... எதுக்கு... இத்தனை வருஷத்துக்குப் பிறகு உங்களைப் பார்த்ததுல கொஞ்சம் தடுமாறிப் போயிட்டேன்.. இத்தனை வருஷத்துக்குப் பிறகு எதுக்காக எங்களை தேடி வந்திங்கனு தெரியல. ஆனா நீங்க திரும்பி வந்ததுல அம்மாக்கு ஒரு துணையும், பாதுகாப்பும் கிடைக்கும்னா அது... எனக்கு சந்தோஷம். அம்மா என்னை வளர்க்க ரொம்பவே கஷ்டப்பட்டுட்டாங்க.. இனியாவது அவங்களுக்கு சந்தோஷம் கிடைக்கனும். அம்மாவோட முடிவு என்னனு தெரியல.. எதுவா இருந்தாலும் எனக்கு சந்தோஷம். நா.. நான் எனக்குத் தெரியல.. எதுவா இருந்தாலும் நீங்க ரெண்டு பேருமே பேசி முடிவு எடுத்துக்குங்க.. நான் கிளம்புறேன்..." என எதுவுமே கோர்வையாக பேசாமல் வாயில் வந்ததை பேசிவிட்டு வேகமாய் வெளியேறினாள்.

அவளைத் தொடர்ந்து நளனும் எழும்பினான்.

" அவ நீங்க ரெண்டு பேரும் சேரனும்னு விரும்புறா.. அவ்வளவுத் தான். ஒழுங்கா பேசத்தெரியாம கிளம்பிட்டா... அவ ஏதாச்சும் தப்பா பேசியிருந்தா, நீங்க ரெண்டு பேரும் தப்பா எடுத்துக்காதிங்க.. அவ குழந்தை மாதிரி... நான் கிளம்புறேன் அத்தை..." என்று பறந்தான்.

எதிர்பார்த்தது போலவே வெளியே கண்ணைக் கசக்கிக்கொண்டு இருந்தாள் நாயகி.

" ஸ்வப்னா! "

"நளா... அப்பாடா...." என்று தினறியவள் அவன் மார்பில் ஒண்டிக்கொண்டாள்.

"சரி.. நீ கிளம்பு. வீட்ல உன்னை விட்டுட்டு நான் வேலைக்கு போறேன். இன்னைக்கு நீ வேலைக்குப் போக வேண்டாம்...." என்றான் நளன்.

அவள் தலையசைத்தாள். அவளுக்கு கொஞ்சம் தனிமை தேவையாய் இருந்தது.

~~~

ரகுவரன் முன் காபியை வைத்த ரோகிணி என்ன பேசுவதென்று தெரியாமல் மௌனம் காத்தார்.

" ரோகிணி!..." ரகுவரனின் அந்த அழைப்பில் மனம் தடுமாறிப்போனார்.

' எத்தனை வருஷம். எத்தனை வருஷம்...? கிட்டத்தட்ட இருபத்து மூன்று வருஷம். இந்த குரலில் என் பெயர் சொல்லிக் கேட்டு...' என்று கண்கலங்கினார் ரோகிணி.

"உன்னை விட்டு பிரிஞ்சு இத்தனை வருஷமானாலும், உன்னை நினைக்கத் தவறல ரோகிணி. ஸ்வப்னாவுக்கான கடமைகளை செய்ய முடியலயேனு தவிச்சிருக்கேன். நீதான் அதுக்கும் என்னை அனுமதிக்கல...."

ஒருதடவை ரகுவரன் ஸ்வப்னாவின் ஸ்கூல் ஃபீஸை கட்டியதற்கு அந்த பணத்தை திருப்பி அனுப்பிய ரோகிணி. ரோஷக்காரி.

"ஏதோ மனஸ்தாபத்துல கோர்ட் வரைக்கும் போயிட்டோம். பிரிஞ்சிட்டோம். நம்ம ரெண்டு பேர் மேலயும் தப்பு இருக்கு. நம்ம ஒரு பெண் பிள்ளைக்கு அப்பா-அம்மாய்கிறதை மறந்துட்டு, கணவன்- மனைவியா சண்டை போட்டுக்கிட்டு பிரிஞ்சிருக்கோம்.. ரெண்டு பேருமே விட்டுக்கொடுக்காம போயிட்டோம்... என் தப்பை நான் இப்பத் தான் உணர்ந்தேனு நினைக்காத. நான் அதை உணர்ந்து ரொம்ப காலமாச்சு. உன்கிட்ட வர தயக்கமா இருந்திச்சு. ஸ்வப்னா எப்படி எடுத்துக்குவானு பயமா இருந்திச்சு.. ஆனா என்னைக்கு நளனைப் பார்த்தேனோ அன்னைக்கே எனக்கு உங்களையெல்லாம் பார்க்கனும், பேசனும், உங்க கூட இருக்கனும்னு ஆசை வந்திடுச்சு...."

நளனின் பெயரைக் கேட்டதும் ரோகிணி நிமிர்ந்தார்.

" நளனா....? அவன் எப்ப உங்களை..."

"அது நடந்து ஒரு ஏழெட்டு மாசம் இருக்கும்.. ஒருநாள் அவனைப் பார்த்தேன். அவனா வந்து பேசினான். அவனுக்கும் ஸ்வப்னாவுக்கும் நடந்த கல்யாணத்தைப் பற்றி சொன்னான். உன்னைப் பற்றி .. மறுபடியும் நாம சேரனும்னு.. இதெல்லாம் உன்கிட்ட சொல்ல வேணாம்னு சொன்னான். அதான்..." ரகுவரன்.

ரோகிணி நெகிழ்ந்துப் போனார். நளன் ஸ்வ்ப்னாவை மட்டுமின்றி தன்னைப் பற்றியும் யோசித்திருக்கிறான் என்பதே பூரிப்பாக இருந்தது. மேற்கொண்டு பேசத்தெரியாமல் கண்ணீரோடு இருந்தார்.

"ரோகிணி! எனக்கு உன் கூட வாழனும். வாழ்க்கையில நிறைய நாட்களை தனிமையில் கழிச்சிருக்கேன்.. நான் செஞ்ச தப்பை நினைச்சு நிறைய நாட்கள் தூங்காம இருந்திருக்கேன்.. என்னை மன்னிச்சுடு. உனக்கும் ஸ்வப்னாவுக்கும் நான் எதையும் செய்யல.. என் கடமையை செய்யத் தவறிட்டேன்... நான்.. நான்.. இப்பவும் உன்னை நேசிக்கிறேன் ரோகிணி.... " என்று உடைந்துப் போய் அழுதார் ரகுவரன். ஐம்பதைத் தாண்டி ஐந்தைக் கடந்திருந்த அவர் குழந்தையாய் குலுங்கிக்கொண்டிருந்தார்.

அவர் அருகில் வந்து அம்ர்ந்த ரோகிணி ஆதரவாய் அவர் கைமீது தன் கையை வைத்தார்.

"இப்ப எதுக்கு.. அழுதுக்கிட்டு.. ரெண்டு பேருக்கும் பிரிஞ்சதுல பங்கு இருக்கு. அதை மறந்திடுவோம். ஏதோ விதி. நாம பிரிஞ்சு இருக்கனும்னு இருக்கு.. இனிமேலாச்சும் நம்ம தவறுகளை திருத்திக்க பார்ப்போம்..." என்ற அவரது பதில் சேர்ந்து வாழ சம்மதம் என்பதை உணர்த்தியது.

இருவரும் சந்தோஷமாய் புன்னகையை பறிமாறிக்கொண்டிருந்தனர். இருபத்து மூன்றுவருட பிரிவு ஒரு முடிவுக்கு வந்தது.

நளன் களைப்போடு வீட்டுக்கு வந்தான். அன்று அலுவலகத்தில் ஏகப்பட்ட வேலை.

" நளா.. நளா.. அப்பாவும், அம்மாவும் ஒன்னு சேர்ந்துட்டாங்களாம்...." என்று அவனை கட்டிக்கொண்டு குதித்தாள்.

"சரி.. சரி... அதுக்கு ஏண்டி என்னை இப்படி படுத்துற..." என்று சிரித்தான்.

"டேய்.. ஐ ஆம் சோ ஹாப்பி! அவங்க ரெண்டு பேரும் சேரனும்னு எனக்கு ரொம்ப நாள் ஆசைடா... உனக்குத் தான் தெரியுமே.. அப்பா எங்க இருக்கார்னே தெரியாம இருந்தேன்.. எதோ ஒரு தேவதை வந்து அப்பாவை காட்டியிருக்குடா... " என்று சொல்லி சந்தோஷப்பட்டாள். அந்த தேவதை அவன் தான் என்று தெரியாமல்.

"சரி.. அப்ப அதை செலிப்ரேட் பண்ணலாமா? " என்று கண்களில் குறும்பு மின்ன கேட்டான்.

" ஓ பண்ணலாமே.... ஹேய்.. நீ என்ன கேட்பனு எனக்குத் தெரியும். போ.. இப்ப ஒன்னும் கிடையாது...." என்றாள்.

"ஆண்டவா... நான் ஒன்னுமே கேட்கலயே... டின்னர்க்கு வெளிய போலாம்னு சொல்ல வந்தேன். நீயா ஏதாச்சும் கற்பனை பண்ணிக்கிட்டா நான் என்ன பண்ண..." என்று படம் காட்டினான்.

அவள் அசடு வழிந்தாள்.

"சரி.. சரி.. சான்ஸ் கிடைச்சா ஓட்டுவியே... போ போய் குளி.... நான் ரெடி ஆகுறேன்... " என்று என்ன உடை அணியலாம் என்று அலசி ஆராய்ந்தாள். அவளை இறுக்கி அணைத்து முத்தமிட்டுவிட்டு.. ஒரு அடியையும் இலவசமாய் வாங்கிக்கொண்டு குளிக்க கிளம்பினான்.

இருவரும் வெளியே கிளம்பும் சமயம் பார்த்து நந்தியாய் குறுக்கிட்டாள் தரங்கிணி.

"நள்ளு.. அத்தான்..."

பற்றிக்கொண்டு வந்தது ஸ்வப்னாவுக்கு.
 
Nirmala vandhachu ???
 
Top