Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஒரு நாளும் மறையாத புதுப் பௌர்ணமி! -3

Advertisement

Banupriya "பா.ரியா"

Well-known member
Member
அத்தியாயம் -3

நளன் தன் அறையில் ஒரு புத்தகத்தை விரித்து வைத்துக்கொண்டு கனவுலகத்தில் இருந்தான். காலையில் நடந்த சம்பவத்தை அசைப் போட்டுக் கொண்டிருந்தான்.

"உள்ள வரலாமாப்பா..?" திறந்திருந்த கதவில் தட்டப்படும் சத்தம் கேட்டது. அந்த வீட்டில் அவருக்கு மட்டும் தான் அந்தப் பழக்கம் இருந்தது. சஞ்சனா வரும் போதே 'டேய் அண்ணா...' என்று குரல் கொடுத்துக் கொண்டேத் தான் வருவாள்.

" ப்பா.." என்றான் நளன்.

"என்னப்பா .. ஏதாச்சும் வேலையா...? " என்றபடி உள்ளே வந்தார் ஆரோக்கியராஜ்.

அவரிடம் வசமாய் மாட்டிக்கொண்டதில் அவன் திகைத்தான்.

"இ... இல்லப்பா...."

அவன் எதிரே அவர் அமர்ந்தார்.

"என்னப்பா....?" என்று இழுத்தான்.

அவர் நேரடியாக விடயத்துக்கு வந்தார்.

"நான் நேற்று கேட்டதுக்கு நீ பதிலே சொல்லயேப்பா......"

"என்ன கேட்டிங்க.....?" அவன் தெரியாது போலக் கேட்டான்.

"சரியாப் போச்சு.. நீ யாரையாவது..." என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே மகேஸ்வரி உள்ளே நுழைந்தார்.

"தம்பி! ஒரு இடத்துக்குப் போகனும்னு சொன்னனே. ரெடியாகுப்பா... அப்புறம் நல்ல டிரஸ்ஸா போட்டுக்க...?"

" அம்மாவும் புள்ளையும் எங்க போறிங்க...?"என்றார் குடும்பத் தலைவர்.

" போறப்ப சொல்றேன். நீங்களும் வாங்க..." என்று சொல்லிவிட்டு பதிலை எதிர்ப்பார்க்காமல் சென்றுவிட்டார் மகேஸ்வரி.

தந்தையும் மகனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

ஏதோ ஒரு உறவினர் வீட்டுக்குச் செல்வதாக அழைத்துக் கொண்டு வந்த மகேஸ்வரி வரும் வழியில் பூவும், பழமும் வாங்கும் போதே ஆரோக்கியராஜுக்கு சந்தேகம் பிறந்தது.

அங்கு போனதும் அது ஊர்ஜிதமாயிற்று. ஆம் நளனுக்கு பெண்பார்க்கும் படலம்.

அவனோ அதிகபட்ச அதிர்ச்சியில் இருந்தான். ஆரோக்கியராஜ் அதைவிட கோபத்தில் இருந்தார். சஞ்சனாவும் அம்மாவை முறைத்து வைத்தாள்.

ஆனால் நளனோ தெளிவாய் அங்கேயே பதில் சொல்லிவிட்டு வந்துவிட்டான். அவன் பதில் அதிர்ச்சி தரக்கூடியதாக இருந்தது.

'எல்லாரும் என்னை மன்னிக்கனும். இங்க வருவது பற்றி என் அம்மா எதுவுமே சொல்லல.. சொல்லியிருந்தா வந்திருக்கவே மாட்டேன். எனக்கு இப்ப கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் இல்ல.... என் தங்கச்சி கல்யாணத்தை முடிக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கு. அதுக்கு பிறகுத் தான் நான் என்னைப் பற்றி யோசிக்கலாம். உங்க எல்லருக்கும் சிரமத்தை தந்துக்கு எங்களை மன்னிக்கனும். வாங்கப்பா கிளம்பலாம்..." சுருக்கமாக வெட்டிவிடுவது போல பேசியிருந்தான் நளன்.

அவன் இப்படி பேசுவான் என்று யாருமே எதிர்ப்பார்க்கவில்லை.

வீடு வந்து சேரும் வரை ஒருவரும் ஒன்றும் பேசவில்லை. மெனமே நிலவியது. அந்த மௌனம் அச்சுறுத்துவதாக அமைந்தது.

"என்னடா நினைச்சுக்கிட்டு இருக்க உன் மனசுல..? அங்க போய் அப்படி சொல்லிட்டு வந்திருக்க.. அவங்க என்னைப் பற்றி என்ன நினைப்பாங்க..?" என்று பொரிந்து தள்ளினார் மகேஸ்வரி. அவர் குரலில் கோபம் கொப்பளித்தது.

"அவங்க என்ன நினைப்பாங்கனு இவ்வளவு யோசிக்கிறியே.. உன் பையன் என்ன நினைக்கிறான்னு யோசிச்சியா...? இந்த குடும்பத்தோட தலைவன் நீயில்ல.. நான்.. என்கிட்ட ஒரு வார்த்தை சொன்னியா..? யாரோ சொந்தக்காரங்க வீட்டுக்கு கூட்டிட்டுப் போறனு பார்த்தா.. நீ உன் இஷ்டத்துக்கு பண்ற...." என்று உஷ்ணம் தெறிக்கப் பேசினார் ஆரோக்கியராஜ்.

அவர் கோபத்தில் மகேஸ்வரி சற்று அமைதியானார்.

நளன், அறைக்குள் புகுந்தவன் வெளியே வரவேயில்லை. சஞ்சனா உணவு கொண்டு சென்ற போதும் உண்ண மறுத்துவிட்டான். தன் கோபத்தை காட்டினான்.

நேரம் எட்டைத் தொட்டபோது தான் ஸ்வப்னாவை பீச்சுக்கு வரச் சொன்னது நினைவில் வர அவசரமாய் அழைப்பெடுத்தான்.

"ஸ்வப்னா...."

"ஹூம்...." குரலில் கோபம் இருந்தது.

"ஸாரிடா.. எங்க இருக்க..?"

"நீ வெய்ட் பண்ண சொன்ன இடத்துல.. நீ சொன்ன டைம்ல இருந்து...." என்றாள்.

"இன்னும் அங்கயா இருக்க..? ஸாரிடி.. ஒரு சின்ன பிரச்சனை.. அதுல மறந்துட்டேன்.. நீ வீட்டுக்குப் போ.. நான் வந்து டிராப் பண்ணட்டா...."

"நான் போய்க்கிறேன்...." அவள் குரல் அழுகையாய் வெளிவந்தது.

உடனே அவன் பைக்கை விரட்டினான்.

அவள் பீச்சில் இல்லை. சென்றுவிட்டிருந்தாள். அவனுக்கு கவலை அதிகரித்தது. மீண்டும் வீட்டிற்குச் சென்று குளித்துவிட்டு படுக்கையில் விழுந்தான். அவள் எப்படியும் வீட்டுக்கு போயிருப்பாள் என்று அவனுக்கு தெரியும்.

வழக்கமாக வரும் அவளது 'குட் நைட்' மெசேஞ் வந்து சேரவில்லை.

'ஸாரி செல்லம். குட் நைட்...' என்ற குறுந்தகவல் இவனிடமிருந்து அவளுக்குப் பறந்தது. பதில் வரவேயில்லை.

மனது முழுக்க குழப்பத்துடனேயே உறங்கிப் போனான் நளன்.
 
Nirmala vandhachu ???
 
Top