Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஒரு நாளும் மறையாத புதுப் பௌர்ணமி!-5

Advertisement

Banupriya "பா.ரியா"

Well-known member
Member
அத்தியாயம் -5

நளன் ஸ்வப்னாவுக்கு மாமன் மகன். ஆரோக்கியராஜின் தங்கைக்கு பிறந்தவள் தான் ஸ்வப்னா. இவர்கள் இருவரும் சிறுவயது முதல் ஒன்றாகவே வளர்ந்தார்கள். இருவருக்கும் இடையில் நான்கு வயது மட்டுமே வித்தியாசம். சஞ்சனாவோடு விளையாடும் ஸ்வப்னாவுக்கு நளன் தான் உயிர்த்தோழன். கடந்த பல ஆண்டுகளாய் இருந்து வந்த நட்பு எந்த நொடியில் காதலாக மாறியது என்று இருவருக்குமே தெரியவில்லை. அநேகமாய் அந்த நொடியாய்த் தான் இருக்கும் என்பது இருவரதும் எண்ணம்.

ஸ்வப்னாவின் இருபத்தோராவது பிறந்த தினத்தன்று நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு அழைப்பெடுத்தான் நளன்.

" ஹாய்டி.. ஹேப்பி கீ பர்த் டே...."

"தேங்க்யூடா....." என்றாள் தூக்க கலக்கத்திலேயே.

"என்னடி தூங்குற..? கேக் கட் பண்ணலயா..?"

"எனக்கு கேக் கட் பண்ண யார் இருக்காடா..?" என்றாள்.

"ஏன்... நான் இருக்கேன் உனக்கு..." என்றான் நளன். அந்த தோரணை வித்தியாசம் காட்டியது. அந்த பதில் அவளை எதோ செய்தது.

"நளா....."

"சரி.. உன் ரூம் பால்கனி கதவை திற..." என்று போனில் கட்டளை இட்டான் நளன்.

"எதுக்குடா..?" எதிர் கேள்வி கேட்டாள் ஸ்வப்னா.

"சும்மா சும்மா கேள்வி கேட்காத.... கதவைத் திற.." என்று மீண்டும் கட்டளையிட்டான்.

அவள் திறந்துவிட்டு அதிர்ச்சியின் விளிம்பிற்கு நகர்ந்தாள்.

அவன் கையில் சின்னதாய் ஒரு கேக்குடன் நின்றுக் கொண்டிருந்தான். அதில் சொருகப்பட்டிருந்த மெழுகுவர்த்திகள் அவனது முகத்தை மகிழ்ச்சியோடு காட்டின.

"இங்க என்னடா பண்ற...?" என்று பதட்டமானாள்.

"ஹூம்.. உன்னை கடத்திட்டுப் போக வந்திருக்கேன்.. முதல்ல உள்ள போ... " என்று அவளைத் தள்ளிக்கொண்டுச் சென்றான். கேக்கை திறந்து வைத்து மெழுகுவர்த்திகளை சரிப்படுத்தி, அணைந்திருந்த மெழுகுவர்த்திகளைப் பற்ற வைத்தான்.

"ஹேய்! வா.. மேக் எ விஷ்.. ஊது.. கட் பண்ணு.... " என்று அவளை ஆச்சர்யப்படுத்தினான்.

அவளோ பிரம்மிப்பில் அவன் சொன்ன அனைத்தையும் செய்தாள்.

"ஹேப்பி பர்த் டே ஸ்வப்பு...." என்றான். அவளோ இமைக்க மறந்து அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

"என்னடி...."என்று வாய் நிறைய கேக்கை அடைத்துக்கொண்டே கேட்டான்.

கொஞ்சமும் யோசிக்காமல் அவனை கட்டிப்பிடித்து அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.

அது அவனுக்குள் மின்சாரம் பாய்ச்சியது. இருபத்தைந்து வயது இளைஞனின் ஹார்மோன்கள் அவன் உடம்பெங்கும் கலாட்டா செய்தன.

அவளோ அடுத்து கண்களில் கண்ணீரோடு அவனை ஏறிட்டாள்.

" என்...ன... ஸ்வப்னா..."

"தேங்க்ஸ்டா.. யாரும் இதுவரைக்கும் இப்படி எனக்கு செலிப்ரேட் பண்ணினது இல்ல.. இப்படில்லாம் யாராசும் பண்ணுவாங்களானு ரொம்ப ஏங்கியிருக்கேன்டா... நீ எப்படித் தான் எனக்குப் பிடிச்சதெல்லாம் பார்த்து பார்த்து பண்ணுறியோ தெரியல்ல.... அதான்....." என்று சொல்லிவிட்டு அப்போது தான் அவனை முத்தமிட்டதை உணர்ந்தாள். வெட்கத்தில் முதல் தடவையாக அவள் முகம் சிவந்தது. அது ஏனோ அவனுக்கும் பிடித்திருந்தது.

"சரி.. நான் வரேன்..." என்று ஏறி வந்த வழியேயே இறங்கிச் சென்றான்.

அவன் கொண்டுவந்த பரிசை பிரித்தாள். இருவரும் சேர்ந்திருக்கும் படமொன்றை ப்ரேம் செய்து தந்திருந்தான். அவளுக்கு அது மிகவும் பிடித்துப் போயிருந்தது. அதை இறுக்க கட்டிக்கொண்டு கட்டிலில் விழுந்தாள்.

அன்று இரவு இருவருமே உறங்கவில்லை. இருவருக்குள்ளும் ஏதேதோ மாற்றம் நிகழத் தொடங்கியது.

அடுத்துவந்த நாட்களில் அவள் அவனைத் தவிர்த்தாள். அவன் ஏங்கிப்போனான். அவளை ஒருவழியாய் பிடித்து காரணம் கேட்ட போது அவன் தன் வசமிழந்தான்.

"ஹேய். ஏன்டி பார்த்தும் பார்க்காம போற..? கோல் பண்ணினா ஆன்சர் பண்ண மாட்டிக்கிற..? பேசினாலும் பேச மாட்டிக்கிற...? என்ன பிரச்சனை உனக்கு..? ம்.. சொல்லு... "

"அது.. வந்து...ஒன்னுமில்ல..." திக்கினாள்.

"ஹேய் சொல்லிட்டுப் போடி.. எனக்கு தூக்கமே வர மாட்டிக்குது. சதா உன் நினைப்புத் தான்..."

அந்த பதிலில் அவள் சந்தோஷித்தாள்.

"சொல்லுடி.. ஏன் விலகி விலகி போற...?"

"உன் பக்கத்துல வந்தா நான் என்னையே மறந்திடுறேன் நளா..." என்று சொல்லிவிட்டு வேகமாய் மறைந்துப் போனாள்.

அவனோ சிலையாய் நின்றான். புரியாத புதிர் அவள் பதிலால் புரிந்தது.

அடுத்த நாள் அவளை சந்தித்தான். தன் மனதையும் திறந்தான்.

"ஹேய்.. காலம் முழுக்க என் கூட இருக்கியாடி...?" என்றான்.

"எப்பவும் உன் கூடத் தானே இருக்கேன்..." என்று தரைக்கு பதில் சொன்னாள்.

"நான் காலம் முழுக்க இருப்பியானு கேட்டது என் பொண்டாட்டியா.....?" என்றான்.

அவளோ இமைக்கவும் மறந்துப் போனாள்.
அந்த நொடி தன்னை முழுவதுமாய் அவனுக்கு எழுதிவைத்துவிட்டாள். சம்மதமாய் அவன் கைபிடித்தாள்.

"இந்த கையை நீயே விட்டாலும், நான் விட மாட்டேன் நளா..." என்று வாக்கு தந்தாள். அதை இன்றளவும் காப்பாற்றி வருகிறாள். நளன் கோபித்துக்கொள்ளும் போதெல்லாம் அவள் தான் இறங்கிப் போவாள். ஆனால் பார்பவர்களுக்கு அவள் தான் ஏதோ பிடிவாதக்காரி போலத் தோன்றும்.

இருவரும் உயிர் நண்பர்களாகவும் இருந்துக் கொண்டு, காதலர்களாய் காதலும் செய்தனர். காலமும் நகர்ந்துக் கொண்டு தன் கடமையை செய்தது.

ஆண்டுகள் கடந்தும் அவர்கள் பின்னிப்பிணைந்து இருந்தார்கள்.

இந்த பெண்பார்க்கும் படலம் வீட்டை கொஞ்சம் ஆட்டி வைத்து விட்டிருந்தது.

நளன் மகேஸ்வரியிடம் பிடி கொடுக்காமல் இருந்து வந்தான்.

"தம்பி! கோவமாப்பா? " என்றார் அவன் அம்மா.

"கோவம் இல்லம்மா.. வருத்தம் தான் இருக்கு... நீங்க ஏன் அப்படி பண்ணிங்க,? கல்யாண வயசுல சஞ்சு இருக்கப்ப நான் எப்படிம்மா கல்யாணம் பண்ணிக்க முடியும். நீங்க எங்க எல்லார்க்கிட்டயும் ஒருதடவை கலந்து பேசியிருக்கலாமே.. "

"இல்லப்பா.. போன வாரம் உங்க ரெண்டு பேர் ஜாதகத்தையும் கொண்டுப் போய் ஒரு ஜோசியர்க்கிட்ட பார்த்தேன். உனக்கு அடுத்த ஒரு வருஷத்துக்குள்ள கல்யாணம் பண்ணியாகனும், இல்லனா..."

"இல்லனா....?" என்றான்.

"இன்னும் ஆறு வருஷத்துக்கு அப்புறம் தான் கல்யாணம் நடக்கும்.. அப்படினு சொல்லிட்டார்ப்பா....இப்பவே உனக்கு இருபத்தெட்டு நடக்குதுப்பா.."

" அம்மா.. அவர் என்ன கடவுளா.. அவர் சொன்னது எல்லாம் நடக்க.. போய் வேலையைப் பாருங்க.. " என்று இலகுவாய் சொல்லிவிட்டுச் சென்றான் நளன்.

ஆனால் மகேஸ்வரிக்கு நெஞ்சு திக் திக் என்று அடித்துக்கொண்டது. ஜோசியர் சொன்ன அந்த வார்த்தைகள் காதில் ஒலித்துக்கொண்டே இருந்தன.
 
Last edited:
அத்தியாயம் -5

நளன் ஸ்வப்னாவுக்கு அத்தைமகன். ஆரோக்கியராஜின் தங்கைக்கு பிறந்தவள் தான் ஸ்வப்னா. இவர்கள் இருவரும் சிறுவயது முதல் ஒன்றாகவே வளர்ந்தார்கள். இருவருக்கும் இடையில் நான்கு வயது மட்டுமே வித்தியாசம். சஞ்சனாவோடு விளையாடும் ஸ்வப்னாவுக்கு நளன் தான் உயிர்த்தோழன். கடந்த பல ஆண்டுகளாய் இருந்து வந்த நட்பு எந்த நொடியில் காதலாக மாறியது என்று இருவருக்குமே தெரியவில்லை. அநேகமாய் அந்த நொடியாய்த் தான் இருக்கும் என்பது இருவரதும் எண்ணம்.

Nirmala vandhachu ???
 
Top