Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஒரு நாளும் மறையாத புதுப் பௌர்ணமி!-7

Advertisement

Banupriya "பா.ரியா"

Well-known member
Member
அத்தியாயம் -7

அந்த தெருவில் வசிக்கும் சபாபதி அவர்களை ஒரு மாதிரியாக பார்த்துவிட்டு கடந்து போனார். அவரைப் பொருட்படுத்தாத ஸ்வப்னா திரும்பி நளனைப் பார்த்தாள்.

"உள்ள வாயேன்.." அழைப்பு விடுத்தாள்.

"ஹூம்... சரி... " என்று சொல்லியவன் அவளோடு வந்தான்.

கல்லூரி ஒன்றில் ஆசிரியராக பணிபுரியும் ரோகிணி, அப்போது தான் வீட்டிற்கு வந்திருந்தார். அவர் முகத்தில் களைப்பு அப்பட்டமாக தெரிந்தது.

"வாப்பா நளா.. நிச்சயம் நல்லா போனதாப்பா...?"

"ஆமாம் அத்தை..." என்று முழு விபரம் சொன்னான்.

"நீங்களும் வந்திருக்கலாம்...." என்றான்.

"நா எதுக்குப்பா??" என்று விரக்தியாய் பேசினார் ரோகிணி.

அவனால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை. அமைதியாக இருந்தான்.

"சரி அத்தை. நான் கிளம்புறேன்.."

"காபி குடிச்சிட்டுப் போப்பா...."

"சரி அத்தை, உங்க காபி குடிச்சு ரொம்ப நாளாச்சு.. தாங்க..."

ஸ்வப்னா அதற்குள் காபியோடு வந்தாள்.

"உங்க பொண்ணு ரொம்ப ஃபாஸ்ட் அத்தை..." என்று காபியோடு அவளையும் சேர்த்து உறிஞ்சினான். பின்னர் விடைப்பெற்றுக்கொண்டு கிளம்பினான்.

அவன் கிளம்பும் போது அம்மாவுக்குத் தெரியாமல் பறக்கும் முத்தமொன்றை அவனுக்கு பரிசளித்தாள்.

அவனோ உற்சாகமாய் கிளம்பினான். அவனுக்கு கல்யாண வேலைகள் காத்து இருந்தன.

~~

சஞ்சுவின் திருமணம் முடிந்து ஒருமாதம் ஆகியிருந்தது. வீட்டில் அவளது இடம் வெறுமையாகத் தெரிந்தது. மகேஸ்வரி மறுபடியும் நளனின் ஜாதகத்தை கையில் எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டார். ஆரோக்கியராஜ் வழக்கம் போல தன்னுடைய லன்ச் பேக்குடன் ஆபிஸ் சென்றுவிட்டார். நளன் வழக்கம் போல வேலைக்கு சென்றுக் கொண்டிருந்தான்.

அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை. அந்த சந்தோஷத்தில் மிதந்துக்கொண்டிருந்தான் நளன். கடந்த மூன்று மாதங்களாக சஞ்சுவின் கல்யாண வேலையில் இவர்கள் இருவரும் அதிகம் சந்தித்துக் கொள்ளவில்லை. நீண்ட நாட்களின் பின் இருவரும் சந்திப்பதாக ப்ளான் செய்திருந்தனர்.

"டேய் நளா.. எப்பவுமே உனக்கு இந்த பீச் மட்டும் தான் தெரியுமா..? வேற இடமே தெரியாதா..?" என்று அவனை சீண்டினாள் ஸ்வப்னா.

"லவ்வர்ஸ்க்கு வேற எந்த இடம்டி இப்படி ப்ஃரீயா கிடைக்கும்..."

"அது சரி... அப்புறம் ..?"

"சஞ்சு இல்லாம போர் அடிக்குதுடி.. ஐ மிஸ் ஹர்... " என்றான் நளன்.

"இருக்கப்ப அடிச்சிக்குறது.. இப்ப மிஸ் ஹர் னு சொல்றது. பேசாம ஒரு விஷயம் பண்ணு..."

"என்னடி...? "

"சண்டை போட ஒரு ஆளை கல்யாணம் பண்ணிக்க..."

"நல்ல ஐடியா.. அம்மா பார்க்குற பொண்ணையே கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தான்.. அந்த பொண்ணு சரி என்னை நல்லா பார்த்துக்குவா... " என்று சொல்லிவிட்டு அவளை ஓரக்கண்ணால் பார்த்தான்.

"உன்னை கொன்னுடுவேன் நளா.. சும்மா விளையாட்டுக்கு கூட அப்படி பேசாத...." ஸ்வப்னா கோபமானாள்.

"சரி.. சரி.. கூல்..."

இருவரும் சிறிது நேரம் அமைதியாகவே இருந்தனர்.

"ஸ்வப்னா! "

"ம்...."

"இப்ப எதுக்கு முகத்தை அந்தப் பக்கம் திருப்பி வைச்சிக்கிட்டு இருக்க....?"

"ஒன்னுமில்ல...."

"ஏய்.. எத்தனை நாளுக்கு அப்புறம் மீட் பண்றோம்.. கொஞ்சம் ஒழுங்காத் தான் பேசேன்..."

"என்னத்தை பேச..."

அவன் கடுப்பானான்.

'இப்ப என்ன சொல்லிட்டோம்னு இவ இப்படி இருக்கா....' என ரீவைன்ட் செய்துப் பார்த்தான். ஒன்றும் பிடிபடவில்லை.

'ஒருவேளை வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்குவேனு சொன்னதில் கோபம் வந்திடுச்சோ....'

"ஸ்வப்பு...." என்றான்.

"நளா... ஒருவேளை நம்ம லவ்க்கு வீட்ல ஒத்துக்கலனா நீ... நீ.. வேற யாரையாச்சும் கல்யாணம் பண்ணிக்குவியா......?" என தயங்கித் தயங்கி கேட்டாள்.

" ஏன் இப்படி லூசு மாதிரி பேசுற... "

"இல்லப்பா.. பயமா இருக்கு. உங்க அம்மா ஒத்துக்குவாங்கனு எனக்குத் தோனலை....." என்று தன் பயத்தை வெளியிட்டாள்.

" நான் அப்பாக்கிட்ட விஷயத்தை சொல்லலாம்னு இருக்கேன். அவருக்கு எந்த பிரச்சனையும் இருக்காது. ஆனா... உங்க....."

"சொல்லு.. அம்மா ஒத்துக்குவாங்களோ தெரியல. அப்படியே ஒத்துக்கிட்டாலும் எங்க குடும்ப மானம் காற்றுல ஆடுது இல்ல... அதை காரணமா வச்சி..." என்று பேசினாள் ஸ்வப்னா.

"ஏய் சும்மா நீயா எதுவும் கற்பனை பண்ணிக்காத... சொல்லவாரத முழுசா கேளு. உங்க அம்மா ஒத்துக்குவாங்களானு கேட்க வந்தேன்."

"இல்ல நளா.. இதுதான் உண்மை.."

"இப்ப எதுக்கு நீ கண்டதையும் யோசிச்சிக்கிட்டு இருக்க...? இங்க பாரு நான் உன்னைத் தான் லவ் பண்றேன்.. உன்கூடத்தான் வாழப் போறேன். உன் குடும்ப கதையெல்லாம் எனக்குத் தேவையில்ல... வீட்ல சொல்லிப் பார்ப்போம்.. ஒதுக்கிட்டா ஒன்னா இருப்போம். இல்லனா தனியா போயிடுவோம். மிச்சம் இருக்க லைப்பை சரி நான் உன்கூட எனக்காக வாழனும்னு நினைக்கிறேன்.." என்று பேசி முடித்தான்.

"நளா.. பயமா இருக்குடா.. வீட்ல எப்படி சொல்றது...?"

"வாயைத் திறந்து தான்...." என ஜோக் அடித்ததாய் நினைத்து சிரித்தான். அவள் முறைத்தாள். பின் வழக்கம் போல சிரித்தாள்.

"அச்சோ லேட் ஆச்சுடா... அம்மா வேற வீட்ல இல்ல.. நான் கிளம்புறேன். நீ இப்படியே உட்கார்ந்து அலைகளை பார்த்துக்கிட்டு இரு..."

"இருடி நான் வீட்ல விடுறேன்..."

"வேணாம் போ.. உங்க அம்மா உன்னை முந்தானையில் காணோம்னு தேடுவாங்க..."

"வாங்கப் போற நீ...."

"போடா.. " என்று சொல்லிவிட்டு ஒரே ஓட்டமாய் மணலில் அவள் ஓடவும் அவன் அவளைத் துரத்திச் சென்று அவளை பின்புறமிருந்து அணைத்து இறுக்கவும், அதை எதிரே வந்த ரோகிணி பார்க்கவும் சரியாக இருந்தது.

இருவரும் ஆணி அடித்தது போல நின்று விட்டிருந்தார்கள்.

அவளுக்கு முன்பே வீட்டிற்கு வந்துவிட்டிருந்த ரோகிணி அந்த வார்த்தையை உதிர்த்தார்.

"நில்லுடீ.. அங்கேயே.."

ஸ்வப்னா பயத்தோடு விழித்தாள்.

இரவு ஏழு முப்பது.

ஸ்வப்னா சத்தம் போடாமல் நடந்து வரும் பூனையைப் போல வீட்டிற்குள் அடியெடுத்து வைத்து வந்தாள்.
 
Nirmala vandhachu ???
 
Top