Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஓவியப்பாவை ...9

Advertisement

ஓவியபாவை தான் இவங்கள வழி காட்டனும். Suspense update ma
 
அத்தியாயம் 9:



ராகுலும் ஸ்வேதாவும் அருகில் அமர்ந்திருக்க எதிரில் அருண் சற்றே டென்ஷனோடு அமர்ந்திருந்தான். அவர்கள் தன்னைத் தவறாக நினைத்துக்கொள்வார்களோ என்ற பதட்டத்தை அவனிடம் காண முடிந்தது. எதுவும் பேசாமல் மௌனமாக அமர்ந்திருந்த சூழலை அருண் தான் கலைத்தான்.



"வாங்க ஸ்வேதா! என்னை நம்பி வந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ்"



"இட் இஸ் ஆல்ரைட் மிஸ்டர் அருண். இவர் என்னோட வருங்காலக் கணவர் மிஸ்டர் ராகுல்" என்று அறிமுகப்படுத்தி வைத்தாள் ஸ்வேதா. அதில் அவளது பாதுகாப்பும் எச்சரிக்கையும் நன்றாகத் தெரிந்தது.



புன்னகையோடு கை குலுக்கினர் ஆண்கள் இருவரும்.



"ஓ! இவருக்காகத்தான் என்னை வேண்டாம்னு சொன்னீங்களோ?" என்று சிரித்து சூழலை இலகுவாக்கினான் அருண்.



இருவரும் சிரித்தனர்.



"ஸ்வேதா! ரொம்ப முக்கியமான விஷயம் பேசறதுக்காகத்தான் நான் உங்களை வரச் சொன்னேன். நான் உங்களை இதுக்கு முன்னாடி பார்த்ததே இல்லை! அது தெரியுமா உங்களுக்கு?"



திகைத்துப் போய்ப் பர்த்தாள் ஸ்வேதா.



"என்ன சார் சொல்றீங்க? நீங்க என்னை எங்கியோ வெச்சுப் பார்த்ததாகாவும் ரொம்பப் பிடிச்சுப் போச்சுன்னும் சொன்னதாகவும் சொல்லிட்டு தானே உங்க அம்மா அப்பா என்னைப் பொண்ணு கேட்டு வந்தாங்க?"



மூச்சை ஆழமாக இழுத்து விட்டுக்கொண்டான் அருண். ராகுலையும் ஸ்வேதாவையும் கண்ணோடு கண் பார்த்தான். பிறகு மெல்லப் பேசினான்.



"இல்லைங்க! அது பொய்! ஆனா உங்களை நான் கல்யாணம் செஞ்சுக்கல்லைன்னா என் உயிருக்கு ஆபத்துன்னு எங்கப்பா மிரட்டப்பட்டிருக்காரு. இதான் உண்மை." என்றான். சுற்றுச் சூழலே மௌனமானதைப் போல உணர்ந்தாள் ஸ்வேதா. நெஞ்சம் படபடவென படித்தது. ஓவியப்பெண்ணின் கருத்த முகம் நினைவுக்கு வந்து போனது.



"என்ன அருண் சொல்றீங்க? உங்கப்பாவை மிரட்டுனது யாரு? சமூகத்துல இத்தனை பெரிய அந்தஸ்துல இருக்குற ஒருத்தரை யாரு மிரட்டுறது? அவங்களுக்கும் ஸ்வேதாவுக்கும் என்ன சம்பந்தம்? கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க பீளீஸ்" என்றான் ராகுல். அவன் குரலில் கோபம் இருந்தது.



"அதைத் தெரிஞ்சுக்கலாம்னு தான் உங்களை வரச் சொன்னேன்" என்றான் அருண்.



"புதிர் போடாதீங்க சார்! யாரு அவங்க?"



"அவர் ஒரு சாமியார் ராகுல்!" என்று ஆரம்பித்து தனக்கு விபத்து ஆனது அவனை ரணதீரன் என்ற சாமியார் உயிரோடு மீட்டது அதற்குக் காணிக்கையாக ஸ்வேதாவை திருமணம் செய்து கன்னி கழியாமல் அழைத்து வரச் சொன்னது என எல்லாவற்றையும் சொல்லி முடித்தான். அவன் சொல்லச் சொல்ல இருவரின் முகமும் மாறிக்கொண்டே வந்தது.



"என்னால நம்பவே முடியல்ல மிஸ்டர் அருண்! அந்த சாமியாரை நான் பார்த்தது கூடக் கிடையாதே! அவர் எதுக்கு என்னை தேர்ந்தெடுத்தாரு? எனக்கு எல்லாமே ஏதோ மர்ம நாவல்ல வரா மாதிரி இருக்கு" என்று சொல்லி தலையை அழுத்திப் பிடித்துக்கொண்டாள்.



"ஸ்வேதா நல்லா யோசிச்சுப் பாரு! உங்கப்பாவுக்கு தெரிஞ்ச நண்பர் அல்லது உறவினர் யாராவது இருக்கலாம் இல்ல?"



"அப்படி இருந்தா அவரு எங்க கிட்டத்தானே முதல்ல பேசியிருக்கணும்? அதை விட்டுட்டு இவங்களை ஏன் பிடிச்சாரு?"



"அது மட்டுமில்ல ஸ்வேதா! அவர் கிட்ட உங்க வீட்டு அட்ரஸ் உங்க ஃபோட்டோன்னு எல்லாமே இருந்தது. உங்களை ரொம்ப குளோசா வாட்ச் பண்ணி தகவல் சேகரிச்சா மாதிரி இருக்கு" என்றான் அருண்.



பயத்தில் உடம்பு உதறிப் போட்டது ஸ்வேதாவுக்கு. அவளது கரங்களை ஆதரவாகப் பிடித்துக்கொண்டான் ராகுல்.



"ஏதாவது லிங்க் இருக்கும் ஸ்வேதா! நல்லா யோசி! என்றவன் அருணிடம் திரும்பி "ஏன் சார்! அந்த ஆளு சென்னையில எங்கே இருக்காருன்னு சொன்னீங்க?" என்றான்.



"அவரு சென்னையில இல்லை! எங்கியோ புலிப்பட்டிங்குற கிராமத்துல இருக்குறதா எங்கப்பா சொன்னாங்க" என்றான்.



சட்டென நிமிர்ந்தாள் ஸ்வேதா.



"புலிப்பட்டியா? அது தான் எங்க பூர்வீக கிராமம். அங்க எங்களுக்கு ஒரு வீடு கூட இருக்குன்னு எங்கம்மா சொல்லியிருக்காங்க! அதை வித்துட்டு என் தம்பியை மெடிக்கல்ல சேர்க்கலாம்னு நானும் பிளான் போட்டிருந்தேனே?" என்றாள் படபடப்பாக.



கைகளை சொடுக்கிக்கொண்டான் ராகுல்.



"ஆங்க்! அது தான் லிங்க்! உங்களுக்கு அவரு தூரத்து சொந்தமா இருக்கணும். உங்களுக்கே தெரியாம அவரு அந்த வீட்டை அனுபவிச்சுக்கிட்டு இருக்காருன்னு நினைக்கறேன். அதை ஒரேயடியா தானே ஆட்டையைப் போட்டுரலாம்னு தன் இந்தப் பிளான்" என்றான் ராகுல்.



தலையை அசைத்து மறுத்தான் அருண்.



"எதுக்கு இப்படி சுத்தி வளைக்கணும் அவரு? அந்த வரப்பட்டிக்காட்டுல இருக்குற வீடு மிஞ்சிப்போனா ஒரு கோடி போகுமா? எங்கப்பா அவருக்கு பத்து கோடி குடுக்க ரெடியா இருந்தாரே? அந்தப் பணத்தை அவர் கையால கூடத் தொடலையே? எனக்கென்னவோ இது வேற ஏதோ விஷயம் இருக்கும்னு தோணுது" என்றான்.



"உம்! எனக்கும் அப்படித்தான் தோணுது"



மூவரும் மௌனமாக அமர்ந்திருந்தனர். ஸ்வேதாவுக்கு ஓவியப்பெண்ணின் முகமும் தானே அதிர்ந்து அடங்கிய அந்தப் பெட்டியும் நினைவுக்கு வந்தன. ஒரு வேளை அந்தப் பெட்டியைத் திறந்து பார்த்தால் ஏதேனும் தெரியுமோ? அந்த ஓவியப்பாவைக்கும் ராகுல் சொல்லும் ரண தீரனுக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ? ஆனால் அந்த ஓவியம் பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் வரைந்தது என்று அப்பா சொல்லுவாரே? ஆனால் அந்த ரணதீரன் இப்போது உள்ளவனாயிற்றே என்று குழம்பினாள். அவளை உலுக்கினான் ராகுல்.



"நீ யோசிக்குறதைப் பார்த்தால் ஏதோ விஷயம் இருக்குன்னு தோணுது. என்னம்மா அது?"



தனக்கு நேர்ந்த மற்ற அனுபவங்களைப் பற்றிச் சொன்னால் சிரிப்பார்கள் என்று எண்ணினாள்.



"ராகுல்! எங்க வீட்டுல சாமி ஷெல்ஃபுல பல வருஷமா திறக்காத பெட்டி ஒண்ணு இருக்கு. அதுல தான் வீட்டு டாக்குமெண்ட் இருக்குன்னு நான் நினைக்கறேன். அதுல ஏதாவது க்ளூ இருக்கலாம் இல்ல?"



"என்ன ஸ்வேதா நீ? அம்புலி மாமா கதையில வரா மாதிரி பேசுற? பழைய பெட்டினா ஒரு வேளை நீ சொன்னா மாதிரி டாக்குமெண்ட்ஸ் இருக்கலாம். ஆனால் அதுல வேற என்ன இருக்க முடியும்?"



"சொல்லத்தெரியல்ல ராகுல்! ஆனா அதைத் திறக்கணும்னு என் மனசு சொல்லுது" என்றாள்.



"சரி! அப்படீன்னா நாளைக்கே நீங்க அதைத் திறந்து பாருங்க! அதுல என்ன இருந்ததுன்னு சொல்லுங்க" என்றான் அருண்.



"இல்ல அருண்! தெரிஞ்சோ தெரியாமலோ நாம மூணு பேரும் இதுல சம்பந்தப்பட்டிருக்கோம். அதனால ஸ்வேதா பெட்டியைத் திறக்கும் போது நாம மூணு பேரும் ஒண்ணா இருக்கணும்னு நினைக்கறேன்."



"எனக்கு எந்த அப்ஜெக்சனும் இல்ல ராகுல்! நாளைக்கு வெள்ளிக்கிழமை! உங்களுக்கு ஆபீஸ் உண்டு. அதனால வர ஞாயிற்றுக்கிழமை காலையில நான் ஸ்வேதா வீட்டுக்கு வந்திடுறேன். நீங்களும் வந்திடுங்க" என்றான் அருண்.



"உம் சரி! ஆனா எங்கம்மா என்ன ஏதுன்னு கேப்பாங்களே? அதுவும் நீங்களும் வந்திருக்கீங்கனா ரொம்பவே கற்பனை பண்ணுவாங்க! விஷயத்தைச் சொன்னாலும் ரொம்ப பயப்படுவாங்க! அதான் யோசிக்கறேன்"



"சரி அப்ப ஒண்ணு செய்வோம். வர ஞாயிற்றுக்கிழமை உங்கம்மாவையும் தம்பியையும் எங்க வீட்டுக்கு அனுப்பிடு. அவங்களை மாங்காடு கூட்டிக்கிட்டுப் போகச் சொல்றேன் எங்கம்மாவை. அப்ப நாம நிம்மதியா நம்ம வேலையைப் பார்க்கலாம்" என்றான் ராகுல்.



"ஆனா உங்கம்மா இதுக்கு ஒத்துக்கணுமே?"



"மாங்காடு கோயில்ல வெச்சு பெண் கேக்கற விஷயத்தை ஆரம்பிங்கன்னு சொல்லிடறேன் எங்கம்மாகிட்ட உடனே ஒத்துப்பாங்க! எங்கப்பாவும் இப்ப நல்லா நடக்க ஆரம்பிச்சுட்டாரு. அதனால அவரையும் கூடப் போகச் சொல்லிடுறேன்" என்றான்.



நன்றாக திட்டமிட்ட பின்னர் மூவரும் அவரவர் வீடு வந்தனர். ராகுலின் தாய் ஃபோன் செய்து ஞாயிற்றுக்கிழமை மாங்காடு போகலாம் என்று சொல்லி விட்டார்



ஓவியப்பாவையின் முன்னால் நின்று கொண்டு கண்களை மூடி பிரார்த்தித்தாள் ஸ்வேதா. ஓவியப்பாவை அவளைப் பார்த்து சிரிப்பதைப் போல் இருந்தது. கண்களை மூடினாள்.



"தாயே! நீ யார் என்ன ஏதுன்னு எனக்கு எதுவும் தெரியாது. ஆனா சமீப காலமா நீ என்னை ரொம்ப பாதிச்சுட்ட. உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? ரணதீரன்னு சொல்லுற அந்த ஆள் யாரு? எதுவும் தெரியல்ல. உனக்குப் பின்னால ஏதோ ரகசியம் இருக்குன்னு நான் நினைக்கிறேன். அந்த ரணதீரன் நல்லவனா கெட்டவனான்னு தெரியலையே? எங்களுக்கு வழி காட்டு தாயே! " என்றாள் மனதுள். ரணதீரன் என்ற பெயரை அவள் மனதில் உச்சரிக்கவும் ஓவியப்பாவையின் கண்கள் கர்ண கடூரமாய் மாறின. அது வரையில் ஸ்வேதாவை குளிர்ப்பார்வை பார்த்த அந்தப் பெண் பார்வையில் இப்போது அனல். அதோடு அவளது வாள் நுனியில் ரத்தம் சொட்டுவது போல இருக்க திகைத்தாள் ஸ்வேதா.
Nice ep
 
Top