Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கடல் நீ கரையும் நீ -21

Advertisement

Geetha Boopesh

Well-known member
Member
அத்தியாயம்- 21


சென்ட்ரல் ரயில் நிலையம் .

திருவிழா போல காட்சி அளித்துக் கொண்டிருந்தது.அவ்வளவு ஜன சந்தடி.
இரண்டு நாட்களில் தீபாவளி என்பதால் ஊர்களுக்கு செல்லும் மக்கள் படையெடுத்து வந்திருந்தனர்.

மேட்டுப்பாளையம் செல்லும் அந்த ரயிலில் தங்களுக்கான இருக்கையில் அமர்ந்திருந்தாள் சம்யுக்தா.

அருகே சாந்தினி , மற்றும் இவர்களோடு பணிபுரியும் ராகேஷ் .

ஒரு முக்கிய கொலை வழக்கை எடுத்திருந்தார் பாஸ்கரன்.

அதற்கான ஆதாரங்களும் ஆவணங்களும் சேகரிக்க இவர்களை அனுப்பியிருந்தார்.

பொதுவாக சென்சிடிவ்வான வழக்குகளில் இப்படி குழுவாக சென்று வேலை செய்வது வழக்கம். அதுவும் இது ஒரு கொலை வழக்கு.. ஊட்டி அருகிலுள்ள ஒரு கிராமத்தில் தான் நடந்திருந்தது. கீழ்கோர்ட்டில் சாதகமான தீர்ப்பு கிடைக்காததால் மேல் முறையீடு செய்திருந்தார்கள் பாஸ்கரன் மூலம்.

சிவரஞ்சனி தான் போவதாக இருந்தது. கடைசி நேரம் அவளது கணவனுக்கு காய்ச்சல் வந்துவிட ..தனக்கு பதில் போகும்படி சம்யுவை கேட்டுக் கொண்டாள். சம்யு தன் இருக்கையில் அமர்ந்து ஒரு புத்தகத்தை எடுத்து படிக்க தொடங்கிவிட .. ஷாந்தினி போனை நோண்டிக் கொண்டிருந்தாள்.

ரயில் கிளம்ப இன்னும் சிறிது நேரமே இருக்க ..யாருக்கோ போனடித்தபடி இருந்தான் ராகேஷ்.

ராக்கி என்ற ராகேஷ் அனைவரையும் விட சீனியர். பாஸ்கரனுக்கு வலது கை போல .. நாற்பதை நெருங்கும் வயது. மணமாகி இரு பிள்ளைகள் இருக்கின்றனர். அதனால் எல்லாருக்கும் ராக்கி சாராக இருந்தவன் .. கே ஜி ஃஎப் படம் வெளியானதில் இருந்து ‘ ராக்கி பாய்’ ஆகிவிட்டான்.

"எங்கடா இருக்க ? இன்னும் வரல ?"
மறுமுனை ஏதோ சொல்ல .." பேசாம கார்லயே போயிருக்கலாம் ..நீ தான் மாட்டேன்னுட்ட" பேசிக் கொண்டே வாயில் புறம் செல்ல தொடங்கியவன் .. தன் அருகில் வந்து அமர்ந்தவனை பார்த்து "அடப்பாவி ட்ரைன்ல ஏறிட்டு தான் வந்து சேரலன்னு டபாய்க்கிறியா ?" எனவும் நிமிர்ந்து பார்த்த சம்யுவுக்கு ஐயோ என்றிருந்தது.
பிரித்விராஜ் நின்றிருந்தான்.

சாந்தினியின் கையை லேசாக சுரண்டியவள் .."இவன் எங்கக்கா வர்றான் நம்ம கூட ?" என்று கேட்டாள்.

"ஏன் சிவா சொல்லலியா..அவனையும் தான் சார் அசைன் பண்ணிருக்காரு.. அவன் எப்பவும் அவன் கார்ல தான் வருவான். இன்னிக்கு என்னனு தெரியல ட்ரெயின்ல வந்திருக்கான்"

உடனே சிவாவுக்கு போனடித்தவள் "என்னக்கா இது? இந்த வானரம் வருதுன்னு நீங்க சொல்லவேயில்லை?" என்று காய ...
" அவன் வர்றான்னு தெரிஞ்சாதான் நீ போக மாட்டியே ."

"உங்களுக்கு தான் தெரியும்ல அக்கா அவனுக்கும் எனக்கும் ஆகாதுன்னு. இப்போ கூட எதிர்ல உக்காந்து முறைச்சு முறைச்சு பாக்கிறான்." என்று சிறு பிள்ளை போல் சொல்ல.. அவள் பேசியது காதில் விழ.. என் காதல் பார்வை இவளுக்கு முறைச்சு பாக்கிற மாதிரி இருக்கா ? என்று நொந்து கொண்டான் ப்ரித்வி.

" சம்யு கண்ணு.. என் செல்லம்ல . அவன் வந்தாலும் கார்ல தான் வருவான் . அங்க போனாலும் அவன் ஒரு பக்கம் நீ ஒரு பக்கம் இருக்க போறீங்க அப்படின்னு நெனச்சிதான் உன்ன போக சொன்னேன். அதுவும் ஆதிக்கு உடம்பு சரியில்லை . மது க்குட்டியை பாத்துக்க அவரால முடியாது . அதுக்காகத்தான் உன்ன கேட்டேன். ப்ளீஸ் சம்யு. என் உடன் பிறவா தங்கை இல்லையா நீ ?" என்று சென்டிமென்டை பொழிய ..

"சரிக்கா போதும் . மது பேரை சொல்லியே என்னை ஆஃப் பண்ணிடுவீங்க நீங்க ! என் செல்லக்குட்டி பொண்ணையும் அண்ணாவையும் நல்லா பாத்துக்கோங்க . நான் இந்த குரங்கு குட்டியை மேனேஜ் பண்ணிக்கிறேன்” என்றாள் அவனை முறைத்து பார்த்தபடி .
எதிர்புறம் அமர்ந்திருந்த ப்ரித்வி " இவ வர்றது தெரிஞ்சா நான் கார்லயே வந்திருப்பேன் ராக்கி பாய் !" என்றான் வேண்டுமென்றே அவள் காதில் விழும்படி !

"எனக்கே ரயிலில் ஏறின பிறகு தான் தெரியும் ப்ரித்வி . சிவா ஹஸ்பண்ட் உடம்பு சரியில்லை போல ..லாஸ்ட் மினிட் சேஞ்" என்றவன் மனதுக்குள் உண்மையில் கிலி தான் ..இவர்களை வைத்து எப்படி நான்கு நாட்கள் தள்ளுவது . நாலு நிமிடம் கூட சண்டை போடாமல் வரமாட்டார்கள்! போதாதற்கு இவன் வேறு சொகுசு காரை விட்டு ரயில் பயணத்துக்கு ஆசைப்பட்டு வந்திருக்கிறான். என்ன செய்ய போகிறோமோ ? என்று கவலையாக இருந்தது.

ரயில் கிளம்பவுமே சம்யு எடுத்து வந்த புத்தகத்தில் மூழ்கிவிட .. ராகேஷுக்கு ஆசுவாசம் ஏற்பட்டது.அப்பாடா ! ஒரு புலி பதுங்கிவிட்டது. பாயாமல் இருந்தால் சரி என்பதாக.

ப்ரித்வி முதல் முறையாக ரயிலில் வருகிறான்.. எப்போதும் தங்கள் சொந்த கார் அல்லது விமானம் தான் . ஒரு முறை பள்ளி டூருக்கு பஸ்ஸில் சென்றார்கள். அதன் பிறகு இப்போது தான் சாதாரணமான ஒரு பயணம்.

அவனுக்கு புதுமையாய் இருக்க சற்று நேரம் ரயில் பெட்டியின் ஒரு புறமிருந்து மறுபுறம் வரை நடந்து விட்டு வந்தான். கையில் புத்தகத்துடன் ஓரக்கண்ணால் பார்த்திருந்த சம்யுவுக்கு சிரிப்பு தான் வந்தது. சிறு பிள்ளை போல் அவன் ஒவ்வொன்றாக பார்ப்பதும்.. பின் தன் இருக்கையில் அமர்வதுமாக இருக்க .." ஏய் நீ சாப்பிட்டியா ப்ரித்வி ?" என்றான் ராகேஷ்.

"இல்லை ராக்கி பாய் . இங்க எதுவும் குடுப்பாங்களா ?"
"டேய் இது என்னடா பிளைட்டுன்னு நெனச்சியா ..சில ரயில்கள்ல உண்டு. ஆனால் இது சாதாரண எக்ஸ்பிரஸ். கொஞ்ச நேரத்தில வித்துக்கிட்டு வருவாங்க . வாங்கிக்கலாம்" என்று கூறி முடிக்கவும் ஒருவன் உணவு விற்றுக் கொண்டு வர ...இருவரும் ஆளுக்கு ஒரு பார்சல் வாங்கி கொண்டனர்.

" ஷாந்தி , சம்யுக்தா உங்களுக்கு புட் வேணுமா ?"

"இல்ல. .. ராக்கி பாய்! வீட்டிலேயே சாப்பிட்டாச்சு."

சுற்றியுள்ள மற்ற பயணிகள் சிலர் சாப்பிட தொடங்க இவர்களும் உணவு பொட்டலத்தை எடுத்து பிரித்து உண்ண தொடங்கினர்.

வெளியில் பல இடங்களில் உண்டு பழகியிருந்த ராகேஷிற்கு பெரிதாக வித்தியாசம் தெரியவில்லை.பெரிய ஹோட்டல்களிலும் வீட்டிலேயே என்றாலும் வகை வகையாக உண்டு பழகியிருந்தவனாயிற்றே ப்ரித்வி . அவனால் அந்த உணவை வாயில் வைக்கவே முடியவில்லை !அவன் சிறிதளவு கூட உண்ண முடியாமல் தவிப்பது தெரிந்தது சம்யுவிற்கு.

"எப்படி ராக்கி பாய் இதை சாப்பிடறாங்க ? யாரும் கம்பிளைன் பண்ண மாட்டாங்களா ?" என்றான் ஆற்றாமையாய்.

" பாதி பேர் தினமுமே இப்படி ஒரு சாப்பாடை தான் சாப்பிடறாங்க ப்ரித்வி. அதனால எப்பவோ ஒரு தடவை ட்ரைன்ல சாப்பிடறதை யாரும் பெருசா எடுத்துக்கறதில்லை. இது வெளி ஆட்கள் செய்றதுவேற . வாங்கறதும் வாங்காததும் நம்ம விருப்பம். ரயில்வேலேயே முன்னாலேயே ஆர்டர் பண்ணலாம்..அது கொஞ்சம் நல்லா இருக்கும். நான் வர்ற வழில வாங்கிக்கலாம்னு நெனச்சேன் .அப்பறம் லேட்டாயிட்டதால இங்க வாங்கிக்கலாம்னு வந்திட்டேன். உனக்கு இப்படிலாம் சாப்பிட்டு பழக்கம் இருக்காது. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி சாப்பிடு ப்ரித்வி." என்றபடி வேகமாக உண்ண தொடங்கினான்.

எவ்வளவோ முயன்றும் கால்வாசி கூட உண்ண முடியவில்லை ப்ரித்வியால். அப்படியே மூடி வைத்து விட்டான்.

சற்று நேரத்தில் ஒவ்வொருவராக படுக்க தொடங்க சம்யுக்தாவுக்கு கீழ் படுக்கை தான் கிடைத்திருந்தது. மீதி மூவருக்கும் மேல் பர்த்.. அதிலும் ராக்கிக்கு பக்கத்துக்கு கேபினில் . இரண்டாம் வகுப்பு ஏ சி கோச் என்பதால் இவர்களை தவிர இன்னும் மூவர் இருக்க ..அதில் ஒரு நடுத்தர வயது பெண்மணி ரொம்பவே பருமனானவர் .."என்னால மேல ஏறே முடியாதும்மா .. கொஞ்சம் உங்க கீழ் படுக்கையை தர முடியுமா ?" என்று கேட்க சரியென்று விட்டாள்.

அந்த பெண்ணோ நீங்கள் உட்காரப்போகிறீர்களா என்று எல்லாம் கேட்கவில்லை.. விரித்து படுத்து விளக்கை அணைத்து அடுத்த நிமிடமே உறங்கிவிட்டார். மேலே ஏறி படுப்பது தவிர வேறு வழியில்லை சற்று நேரம் புத்தகம் படிக்க நினைத்தது முடியவில்லை.

புத்தகத்தோடு வாயில் புறம் சென்று சுவரில் சரிந்து நின்றபடி படிக்க தொடங்கினாள்.

அரக்கோணம் கடந்திருக்க ரயில் நல்ல வேகம் எடுத்திருந்தது.

சிறிது நேரத்தில் யாரோ அருகில் நிற்பதுபோல் இருக்க நிமிர்ந்து பார்த்தால் ப்ரித்வி!
கழிவறைக்கு வந்திருப்பான் என்று நினைத்தபடி மறுபடி தலை தாழ்த்திக் கொண்டாள் சம்யு.

அவனோ அசையாமல் அவளையே பார்த்தபடி நிற்க " என்ன வேணும்? எதுக்கு இங்க நிக்கிற ?" என்றாள்.

"நீ ஏன் நிக்கிற ?"

"சும்மாதான் "

"நானும் சும்மாதான் நிக்கிறேன் " என்று அவளை கடுப்பேத்த ..
அவனை ஒரு முறைக்கும் பார்வை பார்த்துவிட்டு மறுபடி புத்தகத்தில் தலையை நுழைத்துக் கொண்டாள் சம்யு.

"ரொம்ப நேரமா ஒரு பொண்ணு .. அதுவும் நம்ம கூட வந்த பொண்னு காணலைன்னா தேட மாட்டாங்களா? இப்படி தனியா நிக்கிறது சேஃப் இல்லை சம்யு.. சம்யுக்தா ." என்றான் தடுமாற்றமாய்.

"இங்க என்ன பயம் ? செகண்ட் ஏ சி தானே . வேற யாரும் உள்ள வரமாட்டாங்க."
"உள்ள இருக்கவங்க எல்லாம் நல்லவங்க தான்னு உனக்கு தெரியுமா ?"
"விதண்டாவாதம் பண்ணாத ப்ரித்வி. என்னை பாத்துக்க எனக்கு தெரியும்"
"ஓ ... ஜி ஹெச் ல பாத்துக்கிட்டியே அப்படியா " என்றான் நக்கலாய்.
"எப்பவோ அப்படி ஆகும்தான் .அதுக்காக பயந்தால் முடியுமா?"
"அதுக்காக அஜாக்கிரதையா இருக்க கூடாது."

" நான் எது வந்தாலும் ப்ரிப்பேர்டாக தான் இருக்கேன்." என்றாள் விடாமல்.
"அப்படியா? சோதிச்சு பாத்திடலாமா ?" என்று சண்டைக்கு தயாரானவன் போல் முஷ்டியை மடக்கி தயாராக .. அன்று அவளை இறுக்கிப் பிடித்து நின்ற காட்சியே இருவர் மனதிலும்!
இதழிலும் ஒரு சிறு புன்னகை பூக்க அவனை பார்த்தாள் சம்யு.

" பானுமதி மேம் உன்மேல ரொம்ப கோபப்பட்டாங்க. இந்த பொண்ணு எல்லாத்தையும் மறைச்சிட்டாளே அப்படின்னு. முதல் தடவை போனப்பவே உங்கள மெரட்டியிருக்காங்க . அதை சொல்லியிருக்க வேண்டாமா ? சொல்லியிருந்தா அவங்க எங்க யாரையாவது அனுப்பியிருப்பாங்க ."

"நம்ம வேலைல இதெல்லாம் சகஜம் தானே ப்ரித்வி."

"அதுக்காக ?உனக்கு ஏதாவதுன்னா தாங்க முடியுமா?" என்றவன் சற்றே நிறுத்தி.."ஐ மீன் உங்க அம்மா அப்பாவால் . எங்க அண்ணிக்கு வேற யார் பதில் சொல்றது ?"

"சரி ஓகே டா ..தப்புதான் " என்று ஒத்துக் கொள்ள ..

"என்னது டாவா? ஒழுங்கா அத்தான்னு கூப்பிடு சம்யு " என்றான் மிரட்டலாய்.

தன் வழக்கமான ரோஷம் மீண்டுவிட "என்னது அத்தானா? அப்படியெல்லாம் கூப்பிட முடியாது போடா " என்றாள் மறுபடியும்.

"ஓஹ்.. முடியாதா?" என்றவன் தன் அலைபேசியை எடுத்தவன் "ஹலோ அத்தை ..உங்க பொண்ணு என்னை அத்தான்னு கூப்பிட மாட்டாளாம் அத்தை" என்று பேசிக்கொண்டே போக ..

"ஏய் ..எங்கம்மாக்கு எதுக்கு போன் போடுற ?" என்றபடி அவன் போனை பிடுங்கி பார்க்க ..அது தே மே என்று அணைந்து கிடந்தது.

"சரியான பிராடு 420 " என்று கோபமாய் அவனை பார்க்க .. “ஐ பீ சி செக்ஷனெல்லாம் கரெக்ட்டாதான் நியாபகம் வச்சிருக்க .. அதெல்லாம் இப்போ ஒப்பிச்சு காட்ட வேண்டாம் . என்ன எங்க அத்தைகிட்ட பேசணுமா ?" என்றான் நக்கலாய்.

"ஆமா பேச தான் போறேன் .. உங்க மாப்பிள்ளையோட தம்பி.." எனவும் இடைமறித்து "ப்ரித்வி அத்தான்னு சொல்லும்மா " என்று மறுபடியும் அவளை கடுப்பேத்த ..

"ம்ம் ..ப்ரித்வி பொத்தான் ..ஐ மீன் அத்தான்.. உங்க புருஷன் கிட்ட பேச ஆசைப்படறார்னு சொல்றேன்" என்று கவுண்டர் கொடுக்க..

"அம்மா தாயே ..நீ அத்தான்னு கூப்பிடலன்னா கூட பரவாயில்லை ..அந்த மைக் மோகன் கிட்ட மாட்டிவிட்டுடாதே." என்று கும்பிடு போட…. "எங்கப்பாவையா கிண்டல் பண்றே ?" என்று கோபமாய் கேட்க முயன்றாலும் சிரிப்பு வந்துவிட்டது சம்யுவுக்கு.

சற்று நேரம் சிரித்து ஓய்ந்தனர் இருவரும்.
 
ப்ரித்விக்கு காதல் வந்திடுச்சா 😂😂😂😂😂🤪😂😂😂

எப்பவும் கடுகடுன்னு பார்த்துட்டு இப்போ திடீர்னு காதல் பார்வை பார்த்தால் எப்படி புரியும் ப்ரித்வி 🤩🤩🤩🤩🤩🤩

வசதியாவே வாழ்ந்தவனுக்கு ரயில் பயணம் கூட ஆச்சரியமாக இருக்கு 🤣🤗🤣🤣🤣🤣🤣🤣


திரும்பி வரும் போது லவ்வை சொல்லிடுவானா 🙋🙋🙋🙋🙋
 
Top