Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கடல் நீ கரையும் நீ -34

Advertisement

Geetha Boopesh

Well-known member
Member
அத்தியாயம் - 34

ரஞ்சித்தும் அம்ருவும் பிரிந்துவிட்டார்கள் என்பதே சத்யாவிற்கு பெருமகிழ்ச்சியாய் இருந்தது. தன் மகனின் துக்கமெல்லாம் கண்ணிலேயே படவில்லை.
இப்போது கஷ்டப்பட்டாலும் பின்னாளில் நன்றாக இருப்பான் என்று நினைத்துக் கொண்டார்.
இது வாழ்நாளுக்கான துயரம் என்பது புரியாமல்!

உடனுக்குடன் மகன் மனம் மாறுவதற்குள் யாராவது ஒரு பெண்ணை பார்த்து முடித்துவிட வேண்டும் என்று முழுமூச்சாய் இறங்க .. ஸ்ரீஜா தான் காத்துக் கொண்டிருந்தாளே ..

"அம்மா ..ராகவோட சித்தப்பா பொண்ணு இருக்காளே ஹரிணி..அவளை பாக்கலாம். நமக்கு ஈகுவலான குடுமபம். அவளும் நல்ல பொண்ணு. அவளை கல்யாணம் பண்ணினா என் வீட்லயும் எப்பவும் எனக்கு மரியாதை இருக்கும்" என்று ஏற்றி விட, சத்யாவும் பெண் கேட்டு கிளம்பிவிட்டார்.

ரஞ்சித்திடம் கலந்து கொள்ள வேண்டும் என்று கூட அவருக்கு தோன்றவில்லை.. அவன் தான் நீங்கள் என்ன செய்தாலும் சரியென்று விட்டானே என்ற மிதப்பு.

ஸ்ரீஜாவின் வீட்டில் வைத்து , அவள் மாமியாரும் அவர் தங்கையும் இருக்க .. சத்யா சென்று பேசினார்.

அவர்களுக்கும் சம்மதமாய் இருக்க ...மேற்கொண்டு ஹரிணியை அழைத்து வந்தாள் ஸ்ரீஜா விஷயம் இதுவென்று சொல்லாமல்.

ஏதோ அண்ணி அழைக்கிறாள் என்று அண்ணன் வீட்டுக்கு வந்தவளுக்கு அன்னை சொன்ன விஷயத்தை கேட்டதும் கோபம் பொங்கியது.

தன் அண்ணனை எந்த பெண் மறுப்பாள்? தன் பிறந்த வீட்டுக்கு மருமகளாக வர போட்டி போடுவார்கள் என்ற அதீத நம்பிக்கைக்கு அடி விழுந்தது ஹரிணியிடமிருந்து.

"யாரை கேட்டும்மா இவங்க கிட்ட சம்மந்தம் பேசறீங்க ?" கோபமாக தன் தாயை கேட்டாள் ஹரிணி .

"ஹரிணி.. அவங்க எவ்வளவு பெரிய குடும்பம் ..நம்ம வீடு தேடி பொண்ணு கேட்டு வந்திருக்காங்க ..இப்படி பேசக்கூடாது" மகளை அடக்கமுயன்ற தாய்க்கு தோல்வியே !

" ரஞ்சித்துக்கு ஏற்கனவே ஒரு பொண்ணை நிச்சயம் பண்ணினாங்க ..அதுவும் ரெண்டு பெரும் காதலிச்சாங்க. என்ன காரணத்தினால் ரெண்டு பெரும் பிரிஞ்சாங்களோ தெரியாது .ஆனால் அவங்களை சேர்த்து வைக்க முயற்சிக்காமல் வேற பொண்ணை பாக்கிறீங்க . எனக்கு உங்க மேலயும் சரி அவர் மேலயும் சரி, எந்த மரியாதையும் ஏற்படலை."

“ ஏன் ஹரிணி? எங்கண்ணன் கூட நீ நல்லாதானே பழகின ?" என்றாள் ஸ்ரீஜா.

"என்ன அண்ணி இது ? எந்த காலத்தில இருக்கீங்க? நீங்க பாக்கிற, பேசுற எல்லாரையும் கட்டிக்க தயாராகிடுவீங்களா என்ன ? நான் ஜஸ்ட் சொந்தக்காரங்கன்ற முறையில் தான் அவர் கிட்ட பேசினேன். அதுக்காக கல்யாணம்லாம் பண்ண முடியாது, அம்மா நீங்க இப்போ வரப்போறீங்களா இல்லையா ?" என்றவள் தன் காரில் சென்று ஏறிவிட தாயும் பின்தொடர்ந்து சென்றுவிட்டார்.

அப்போது தான் அலுவலகத்திலிருந்து வந்திருந்தான் ராகவ்.

கதவுக்கு வெளியே நின்று அத்தனையும் கேட்டிருந்தவன் ஸ்ரீஜாவை வைத்து வாங்கிவிட்டான்.

" என் தங்கச்சிக்கு மாப்பிள்ளை பாக்க நீ யாரு ? அதுவும் என்கிட்டயோ எங்க அப்பா சித்தப்பாகிட்டயோ கேக்காமல் நீயா முடிவு பண்ணியிருக்க .. கொஞ்சமாவது மரியாதை தெரியுமா உனக்கு? அட்லீஸ்ட் உங்கண்ணனுக்காவது.. இல்லை மாமாவுக்காவது விஷயம் தெரியுமா ? நீ பண்ண வேலையால் உங்கண்ணனுக்கு தான் அசிங்கம். ஒரு சின்ன பொண்ணு உங்கண்ணனை கேவலமா பேசிட்டு போய்ட்டா . இது போதுமா உனக்கு? தெரியாமல் தான் கேட்கிறேன் உனக்கு என்னை பார்த்து முடிவு பண்ணினாங்களே .. உன்னை கேக்காம தான் நிச்சயம் பண்ணாங்களா ? இல்லை நீதான் உங்கம்மாப்பா சொன்னதுக்காக ஓகே சொன்னியா ? என்கிட்டே நேர்ல பேசி பாத்து நல்லா யோசித்து தானே முடிவு சொன்ன ? இப்போ மச்சானோட வாழ்க்கையில தலையிட உனக்கு எந்த உரிமையும் இல்லை." என்று விட்டு விளாசியவன் மாமியாரை வாங்க என்று கூட அழைக்காமல் சென்றுவிட்டான்.

ஹரிணியின் அத்தியாயம் முடிவுற்று விட .. சத்யா வேறு பெண்களின் ஜாதகம் வாங்கி பார்க்க .. எல்லாமே பொருத்தமற்று இருந்தன.

அவரும் ஸ்ரீயும் சேர்ந்து அனைத்து திருமண வலைத்தளங்களிலும் தேட ..பொருந்தத்தான் காணோம்.

"அம்மா ..பேசாமல் இப்படி பண்ணினால் என்ன ?"

சத்யா கேள்வியாய் நோக்க "அந்த உமையாள் இருக்காளே அவளையே அண்ணனுக்கு பார்த்தால் என்ன ?" எனவும் சத்யாவுக்குள்ளும் அது சரிவரும் என்றே தோன்றியது.

இருந்தாலும் அலுத்துக் கொண்டார் " அந்த குட்டச்சியை போய் என் மகனுக்கு கட்டணுமா ? சரி என்ன செய்ய? மங்கையால் நான் கேட்டால் தட்ட முடியாது" என்றவர் அப்படியே தன் நாத்தனாரிடம் கேட்க ..அவரோ "எதுக்கும் உமையை ஒரு வார்த்தைக்கேட்டுட்டு சொல்றேன் அண்ணி " என்று கூறினார்.

"பாத்தியா ஸ்ரீ ? எப்பவும் என்னை எதிர்த்து ஒரு வார்த்தை பேச மாட்டாள். இப்போ மகள் டாக்டர் ஆனவுடன் பேச்சை பார்த்தாயா ? 'அவளை கேக்கணுமாம் '. என் பையனை விடவா நல்ல மாப்பிள்ளை பார்த்துவிடுவாள்?" என்று பொருமினார்.

ஒரு திருமண வாழ்விற்கு பணம் மட்டும் இருந்தால் போதாது.. பிடித்தம் இருக்க வேண்டும் .. பெற்றோர் பார்த்த திருமணமாயிருந்தாலும் இருவருக்குள்ளும் ஒரு ஈர்ப்பு இருக்க வேண்டும் .. இது எதையும் யோசியாமல் வியாபார ஒப்பந்தம் போல் பலர் செய்யும் திருமணம் விவாகரத்தில் முடிவதில் என்ன ஆச்சரியம்?

அந்தப்பக்கம் மோகனும் எப்படியாவது தன் மகளுக்கு வேறு மாப்பிள்ளை பார்க்க ஆயத்தமாகி கொண்டிருந்தார்.
தனுஜா எவ்வளவோ எடுத்து சொல்லியும் கேட்கவில்லை.

"நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க.. அம்ரு இன்னமும் நடந்ததில் இருந்து வெளியே வரவேயில்லை. அப்படி வந்தால் தான், தான் செய்தது சரியா தவறான்னு அவளுக்கு புரியும். அதுக்கு அவளுக்கு கொஞ்சம் டைம் கொடுங்க.. ஆறப்போட்டால் பல காயங்கள் ஆறிவிடும். மனசு கொஞ்சம் சரியானதும் அவளே ஒரு நல்ல முடிவுக்கு வருவாள். கொஞ்சம் பொறுங்கள் " என்று எவ்வளவோ சொல்லியும் அவர் கேட்பதாக இல்லை..

"அவங்க பையனுக்கு வேறு பெண் பாக்கிறாங்க.. தெரியுமா ? அவன் கல்யாணம் முடிவாகரதுக்கு முன்னே நாம அம்ருவுக்கு முடிச்சிடனும்" என்றார் தீர்மானமாய்.

"இதென்னங்க போட்டியா.. யார் முதல் என்று பார்க்க.. வாழ்க்கை.. இதில உங்கள் ஈகோவை காட்டாதீங்க " என்றவருக்கு மகளை தேற்றுவதே பெரும் வேலையாக இருந்தது.

அம்ரிதா கண்ணீர் வடிக்காவிட்டாலும், அவள் உள்ளுக்குள் மௌனமாய் அழுவது அவருக்கு புரிந்தது. அதுவும் சத்யபாமா அபாண்டமாய் பேசியது அவள் மனதை கூறு போட்டிருந்தது.

சம்யுவுக்கும் ப்ரித்விக்கும் தலையில் அடித்துக் கொள்ளலாம் போல் இருந்தது.

வருடக்கணக்கில் முட்டிக் கொண்ட இருவரும் சேர்ந்துவிட.. இதுவரை காதல் மழையில் விடாது நனைந்தவர்கள் .. இப்போது பிரிந்து விட்டனர்.

எப்படி இதையெல்லாம் சரி செய்வது என்று யோசித்து யோசித்தே இருவரும் சோர்ந்து போனார்கள்.

ஆனால் எப்படியும் உடன்பிறந்தவர்கள் துயர் தீர்க்க வேண்டும் என்று முடிவெடுத்தவர்கள் அதற்கான திட்டங்களையும் வகுத்தனர்.
 
Top