Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கண்ணாமூச்சி ஏனடா!-14

Advertisement

Banupriya "பா.ரியா"

Well-known member
Member

அத்தியாயம் -14

மித்ராவும் நவிலனும் அந்த பூங்காவில் அமர்ந்து இருந்தார்கள். வெயிட் வெயிட் அவர்கள் இருவரும் மங்களாதேவியின் பங்களாவில் தானே அமர்ந்து இருந்தார்கள் என்று கேள்வி கேட்போருக்கு.. வாருங்கள் அவர்கள் வீட்டு ஹாலுக்கு போவோம். கேட் அருகில் பூத்து குலுங்கிய குண்டு மல்லிகையின் வாசனை தென்றல் காற்றோடு உள்ளே நுழைந்து நாசியை கிச்சு கிச்சு மூட்டியது.

"எதுக்கு வந்திங்க..?" முகத்தில் அடித்தாற் போல மித்ராவால் கேட்கப்பட்ட அந்த கேள்விக்கு அவன் " உங்களை கடத்திட்டு போக.." என்று சொல்லி அவளை அதிர்ச்சிக்குள்ளாக்கி , அவளை ரசித்து கவிதை வடித்து வேறு லோகத்துக்கு சென்ற போது அவன் முகத்தின் முன் சொடக்கு போட்டு அவனை பூமிக்கு கொண்டு வந்தாள் மித்ரா.

" என்னது..?" என்றாள்.

அவன் பேசப் போகும் முன் அதுவரை சிரமப்பட்டு காலம் தாழ்த்திய மங்களா மித்ராவுக்கான காபியோடு வெளியே வந்தார். வருணை பின்பக்கம் இருந்த குட்டி தோட்டத்துக்கு தண்ணீர் ஊற்றச்சொல்லி திசை திருப்பியிருந்தார்.

" ஆன்ட்டி.. எனக்கு மித்ரா கூட கொஞ்சம் தனியா பேசணும்.. பக்கத்துல இருக்க பார்க் வரைக்கும் அவளோட நடந்து போயிட்டு வரட்டுமா..? " திடுமென தாக்குதல் நடத்தினான் நவிலன்.

மங்களாதேவிக்கோ தலை சுற்றாமல் இருந்தது அதிசயம் தான். நவிலன் இப்படியாக நேரடியாக கேட்பான் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. அவன் என்ன பொண்ணையா கேட்டான்? சற்று நேரம் வெளியே நடந்துவிட்டு வருகிறோம் என்று எவ்வளவு பணிவாக கேட்டான். அதனால் அவரும் உடனே சம்மதம் தந்தார். அவனுடைய அனுகுதல் அவருக்கு பிடித்திருந்தது. பையன் ஒவ்வொருவர் மனதிலும் சத்தமில்லாமல் இடம் பிடிக்கிறான். அது அவனுக்கே தெரியவில்லை. முதலில் வருண். இரண்டாவது மங்களாதேவி.

தான் முறைத்துக்கொண்டு உட்கார்ந்து இருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்று உணர்ந்த மித்ரா அவனோடு நடக்க ஆரம்பித்தாள். ஐந்து நிமிட நடைதான். அதுவரை இருவருமே ஒன்றும் பேசவில்லை. உள்ளே நுழைந்து அங்கிருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தார்கள்.

அவளுடனான பேச்சை எப்படி ஆரம்பிப்பது என்று அவன் யோசித்தான்.

" அந்த பூ அழகா இருக்கு ல.." பூத்துக்குலுங்கும் ரோஜாவைக் காட்டினான்.

" ஓ.. இதை காட்டத்தான் கூட்டிக்கிட்டு வந்திங்களா.. காட்டியாச்சு தானே.. நான் கிளம்பட்டுமா?" எக்கச்சக்கமாய் மிளகாய் தின்பாள் போல. அவ்வளவு காரம் வார்த்தைகளில்.

" என்ன மித்ரா.. நான் என்ன பேச வநதேன்னு உங்களுக்கு தெரியாதா?"

" தெரியும்.."

" உங்களுக்கு என்னைப் பிடிக்கலயா? இல்லை கல்யாணம் பிடிக்கலையா..?" அவள் எதையோ நினைத்து பயப்படுகிறாளோ என்று நினைத்தே அந்த கேள்வியை கேட்டான்.

" ஒட்டு மொத்த ஆண் வர்க்கத்தையும்.." அவளது பதில் அதுவாகத்தான் இருந்தது.

"உங்க வேதனை புரியுது மித்ரா. அதுக்காக நீங்க இப்படி ஒட்டுமொத்தமா எல்லாரையும் வெறுக்கிறது நியாயமா? அதுக்காக கல்யாணம் பண்ணிக்க மாட்டேனு சொல்றது எல்லாம் சரியா? நீங்களே சொல்லுங்க..."

"நான் பார்த்த ஆண்கள் எல்லாரும் அப்படித்தான் இருக்காங்க நவிலன். எங்க அக்காவை லவ் பண்ணி அவளை கல்யாணம் பண்ணிக்கிறேனு கூட்டிக்கிட்டு போன அந்த லக்ஷ்மிகாந்த்.. அவனை... அவன் கைகழுவிட்டு ஓடிட்டான். கடைசிவரை எட்டிக்கூட பார்க்காத கோழை அவன். நாலு அடிக்கே தாங்காதவன் எதுக்கு கல்யாணம் பண்ணிக்கிறேனு ஒரு வாக்கு கொடுக்கனும்? பொண்ணுங்களுக்கு அது வாக்கு இல்லை. அது தான் அவங்களோட ஒட்டுமொத்த நம்பிக்கையும். அவன் ஒரு இடியட். அப்புறம் என் அருமை அப்பா. எவ்வளவு கடுமையான எங்களை வளர்த்தாரு தெரியுமா..? அந்த கடுமை தான் எங்களை தப்பு செய்யவே தூண்டுச்சு.. அவங்களை மணக்கோலத்தில் பார்த்ததும் அமைதியா ரியாக்ட் பண்ணத் தெரியாம அடிச்சி இழுத்துட்டு வந்து மானத்தையே வாங்கின என் அப்பா.. அன்னைக்கு அவர் பேசின பேச்சு.. , சரி அதை விடுங்க.. அவ மனசு மாறி ஒரு புது வாழ்க்கைக்கு தயாரானப்ப, அவளை புரிஞ்சிக்காம வார்த்தைகளாலேயே கொலை செய்து கொடுமைப்படுத்தி சாகுற அளவுக்கு கொண்டு போன அந்த அரக்கன்... இவங்க எல்லாம் மனுஷங்களா.. சொல்லுங்க.. சொல்லுங்க நவிலன்...?"

" உங்க ஸ்டைல்லயே உங்களுக்கு பதில் சொல்றேன் மித்ரா.. கேளுங்க.."

மித்ரா அவனை பார்த்தாள்.

" மதுபாலா செய்த முதல் தப்பு அந்த லக்ஷ்மிகாந்த்தை நம்பியது. காதல் எப்ப வரும்னு சொல்ல முடியாது தான். அதை ஒத்துக்கிறேன்.. ஆனா காதல் கல்யாணம் வரை போய் அதற்கு பிறகும் தொடரனும். அவன் அதற்கு தகுதியானவனானு கணக்கு போடுறதுல உங்க அக்கா தவறிட்டாங்க. ரெண்டாவது உங்க வீட்ல விஷயம் தெரிஞ்சதும் நீங்க கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கலாம். இல்ல அப்பா அம்மா கூட பேசி அவங்களுக்கு புரிய வச்சிருக்கலாம். அதை விட்டுட்டு கல்யாணம் வரை போனது கொஞ்சம் அதிகப்படி தான். நீங்க செய்த காரியத்துக்கு உங்க அப்பா அமைதியா ரியாக்ட் பண்ண மாட்டார். அந்த இடத்தில் எந்த அப்பா இருந்தாலும் அப்படித்தான் நடந்துக்குவாங்க. மித்ரா! நம்மளை பெத்தவங்க நம்மளை எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்க்கிறாங்ககிறது நமக்கு புரியவே புரியாது. எப்ப பார்த்தாலும் குறை தான் சொல்வோம். அவங்க இடத்துக்கு நம்ம வரும் போது தான் அது நமக்கு புரியும். உங்க அப்பா கடுமையா வளர்த்தாருனு சொன்னிங்க தானே... ஒவ்வொரு பொண்ணும் வெளிய போயிட்டு வாற வரை பெத்தவங்க உயிரை கைல பிடிச்சிக்கிட்டு தான் வீட்ல இருக்காங்க.. காலம் அப்படி இருக்கு. அவர் உங்க ரெண்டு பேரையும் பாதுகாக்கனும்னு தான் கடுமையா வளர்த்துருக்கார். அதை புரிஞ்சிக்குங்க.. அப்புறம் அந்த துபாய்காரன். அவனைப் பற்றி பேச எதுவும் இல்ல. அவன் ஒரு மிருகம். ஒரு சாடிஸ்ட். அவனை மாதிரியான ஜென்மங்கள் வாழவே தகுதியில்லாதவர்கள் .."

" பாருங்க நீங்களே இப்படி சொல்றிங்க.. அப்புறம் எப்படி எனக்கு யார் மேலயாவது நம்பிக்கை வரும்....?" குறுக்கே புகுந்து கேட்டாள்.

"என் மேல நம்பிக்கை வரலயா மித்ரா..?" திடுமென அந்தக் கேள்வியை அவன் கேட்பான் என அவள் எதிர்பார்க்கவில்லை.

அந்த கேள்வியில் அவளே ஒருகணம் தடுமாறிப்போனாள்.

"என் மேல நம்பிக்கை இல்லாமத் தான் இந்த நிமிஷம் என் பக்கத்தில இருக்கிங்களா? என் கூட கார்ல வந்திங்களா? நான் வெளிய கூப்பிட்டப்போ வந்திங்களா? இதோ இப்ப என்கூட நடந்து வந்திங்களா? நீங்க பார்த்த ஒரு சிலரை மட்டும் மனசுல வச்சிக்கிட்டு ஒட்டுமொத்தமா எல்லாரையும் குருடன்னு சொல்றது முட்டாள்தனம். நீங்க வேலைக்குப் போறிங்க... தினமும் எத்தனைப் பேரைப் பார்ப்பிங்க.. அதுல ஒருத்தர் கூடவா உங்களுக்கு நல்லவங்களா தெரியல.. இதை நான் உங்ககிட்ட இருந்து எதிர்பார்க்கல மித்ரா. நீங்க புத்திசாலியான பொண்ணு. சுதந்திரமா சிந்திக்க தெரிஞ்ச பொண்ணுன்னு நினைச்சேன்.. நீங்க என்னனா சின்னபுள்ளை தனமாக இருக்கிங்க.. நல்லா யோசிங்க.. மனசுல இருக்க கடந்தகாலத்தை தூக்கிப்போடுங்க. அது எந்த விதத்திலும் நமக்கு உதவாது. அதுக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. " நிறுத்தினான். பின் தொடர்ந்தான்.

" இப்படியே எனக்கு கல்யாணம் வேணாம்.. எனக்கு யாரையும் பிடிக்காதுனு உங்களையே நீங்க ஏமாற்றிக்காதிங்க.. வாழ்க்கையை தனிமையிலேயே வாழ முடியாது. அது வலியைக் தான் தரும்.. நான் உங்களை எந்த விதத்துலயும் தொந்தரவு பண்ண மாட்டேன். ஆனா உங்களை காதலிச்சிக்கிட்டே இருப்பேன். உங்களுக்காக காத்திருப்பேன்... உங்க பதில் எதுவா இருந்தாலும் ஏற்றுக்கிறேன் மித்ரா. ஆனா அதுக்கு முதல் நான் சொன்னது எல்லாம் கொஞ்சம் யோசிங்க.. வாங்க வீட்டுக்கு போகலாம்.."

அவள் அமைதியாக இருந்தாள்.

" மித்ரா.. என்னாச்சு?"

"நான் கொஞ்சம் தனியா இருக்கனும் .. நீங்க போங்க.. நான் கொஞ்ச நேரத்தில வாரேன்.."

அவளுக்கு சிறிது அமைதி தேவை என்று உணர்ந்தவன், நடந்து சென்று மங்களாதேவியிடம் அவள் கொஞ்ச நேரத்தில் வந்து விடுவாள் என்று சொல்லி விட்டு விடைப்பெற்றுச் சென்றான்.

வீட்டுக்கு திரும்பிக்கொண்டு இருக்கையில் புழுதியை கிளப்பி விட்டு சென்ற அவனது காரை கண்களில் கண்ணீருடன் பார்த்துக்கொண்டே வந்த மித்ரா தனக்குள் பல கேள்விகளுடன் வீட்டிற்குள் நுழைந்தாள்.

பெயருக்கு இரவு உணவை விழுங்கியவளை அத்தை எதுவும் சொல்லவில்லை. அங்கு அவன் ஏதோ பேசியிருக்கிறான் என்று அவர் உணர்ந்தார். அவளாக சொல்லும் வரை எதுவும் கேட்கக்கூடாது என்று முடிவெடுத்தார் மங்களா.

நேரம் பதினொன்று இருபது.

ஹெட் போனுக்குள்,

தேசமெல்லாம் ஆளுகின்ற…
ஒரு படையை…
நான் அடைந்தேன்…
காலம் என்னும்…
வீரனிடம் என் கொடியை…
நான் இழந்தேன்…

மணல் ஊரும்…
மழையாய் மடிமீது…
விழ வா வா…
அணை மீறும் புனலாய்…
என்ற 'மாயநதி இன்று மார்பில் வழியுதே..' என்ற பாடலின் வரிகளை கேட்ட போது அவன் ஞாபகத்துக்கு வந்தான். அவன் தான். நவிலன்.

அன்று நடந்ததை நினைத்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

நவிலனின் கேள்வி அவளை யோசிக்க வைத்தது.

ஒருசிலர் தப்பாக இருப்பதற்கு ஒட்டுமொத்தமாக எல்லோரையும் தவறு சொல்வது எந்த விதத்தில் நியாயம். அவள் பார்த்த நல்லவர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள். ஆபிஸில் மேனேஜர், மதன், ராகேஷ், ஜான்.. உதவி என்றால் உடன் ஓடி வரும் எதிர்வீட்டு ஜீவா.. தினமும் காலை வணக்கம் சொல்லும் அந்த செக்யூரிட்டி அங்கிள்.. அவ்வளவு ஏன்? நவிலன்.. இதுவரை எந்த ஆணிடமும் நெருங்கிப்பழகாமல் இருந்தவள் அவனிடம் மட்டும் சகஜமாக பேசுவது ஏன் என்று நினைத்துப்பார்த்தாள். அவன் மீதிருந்த மரியாதையும், அவன் கண்ணியமாய் பழகும் விதமும் அவளை கவர்ந்தனால் தானே அவனோடு பேசத்துவங்கினாள். அவன் வீடுவரை சென்றாள்.

'உனக்கு அவனை பிடிச்சிருக்கு மித்ரா..!'

' ஆமா.. ஆனா அது நட்பு...'

' ஓ .. அதுக்கு உங்க ஊர்ல பேரு நட்போ..'

' ஆமா..'

' நல்லா இருக்குடி உங்க நட்பு.. அப்ப எது காதல்..?'

' அது.. அது.. ' மித்ரா கண்ணாடி முன் நின்று தடுமாறினாள்.

இப்படி பலவாறாக யோசித்துக்கொண்டே குழப்பமான மனநிலையிலேயே உறங்கிப்போனாள்.

அதற்கு பிறகு நவிலன் அவளை தொந்தரவு செய்யவே இல்லை. அவள் கொஞ்சம் தெளிவாகட்டும் என்று இடைவெளி தந்தான். ஆனால் அந்த சமயத்தில் அவனை அவள் மிஸ் செய்ததை அவள் உணர்ந்தாள். இருந்தும் தன்னுடைய ஈகோவை இலகுவாக விட்டுக்கொடுத்து விட இயலாதே. அதனால் படம் காட்டினாள்.

நாட்கள் அதன் இஷ்டம் போல நகர்ந்து கொண்டே இருந்தன.

அன்று பிரதோஷம். கோவிலில் கூட்டம் அதிகமாக இருந்தது.
கோவில் பிரகாரத்தை சுற்றிவிட்டு சற்று ஒதுக்குக்குப்புறமாய் அமர்ந்து யோசனையிலிருந்த போது, "பாமா!" என்ற குரல் கேட்டு திரும்பி, அங்கு கௌதமி நிற்பதைக் கண்டதும் புன்னகையுடன் முகம் மலர்ந்தார் பாமா.

இப்ப யார் இந்த கௌதமி என்று கேட்பவர்களுக்கு, சந்தியாவின் தாயார். சந்தியா யாரென்று கேட்பவர்கள் இரண்டாம் அத்தியாயத்துக்கு சென்று பார்க்கவும்.

"அட.. வாங்க கௌதமி... "

" இன்னைக்கு கூட்டம் அதிகம்ல.." என்று நகர்ந்து அமர்ந்தார் பாமா.

"ம்.. ஆமா.. பிரதோஷம்னால தான்.. நீங்க எப்படி இருக்கீங்க பாமா.." என்றவாறே அமர்ந்து பிரசாதத்தை பாமாவோடு பகிர்ந்து கொண்டார் கௌதமி.

"ம்.. ஏதோ இருக்கேன்.. நீங்க எப்படி இருக்கிங்க கௌதமி.."

"ஹூம்.. இருக்கேன்.. சந்தியா போனதுக்கு அப்புறம் வீடே ஒருமாதிரி இருக்கு. அவரும் நானும் ஒருத்தர் முகத்த ஒருத்தர் பார்த்துக்கிட்டு இருக்கோம்..."

"என்ன பண்ண கௌதமி. பொண்ண பெத்தா இன்னொரு வீட்டுக்கு அனுப்பித்தானே ஆகனும். ஆனா அது எங்க வீட்ல எப்ப நடக்குமோ தெரியல..." என்று உருக்கமாய் பேசினார் பாமா.

மித்ராவைப் பற்றி பேச வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்த கௌதமிக்கு பாமாவே அந்த பேச்செடுத்ததும் வசதியாக இருந்தது.

"நானே உங்ககிட்ட இதைப் பற்றி பேசனும்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன்.. மித்ரா இன்னும் பிடிவாதத்தோட தான் இருக்காளா???"

"உங்களுக்கு தெரியாததா.. அவ அப்படியே தான் இருக்கா.. அவங்க அத்தை வேற அவளுக்கு செல்லம். நானும் எப்படியாவது பேசி வீட்டுக்கு அனுப்புங்க அண்ணினு சொன்னேன். அந்த பேச்சை எடுத்தாலே எதாவது சொல்லி தப்பிச்சிடுறாளாம். எங்க ஏதாவது சொல்லப் போய் எங்கயாவது போயிடுவாளோன்ற பயம் வேற.. அவளோட பிடிவாதம் கொஞ்சம் கூட அர்த்தமில்லாம இருக்கு. ஆனா அது அவளுக்கு புரியனுமே.. யாரு சொன்னா கேட்பாளோ தெரியல. அவ வாழ்க்கை என்னாகுமோனு எனக்கு எப்பவும் யோசனையாவே இருக்கு. ஆண்டவன்தான் வழி காட்டனும்..." பாமாவின் கண்களில் கண்ணீர் எட்டிப் பார்க்க அதை விரல்களால் துடைத்துக் கொண்டார்.

"ம்... அவ மனசை கொஞ்சம் கொஞ்சமா தான் மாத்தனும். சின்னப் பொண்ணு தானே... அதான் வீம்புக்கு பிடிவாதம் பிடிச்சுக்கிட்டு இருக்கா.. எல்லாம் நாள் போக்குல சரி ஆகிடும். நாளைக்கு மித்ராவை எங்க வீட்டுக்கு வர சொல்லுங்க. சந்தியா அவளுக்கு ஏதோ ஒரு பார்சல் அனுப்பியிருக்கா. நானே வீட்டுக்கு வந்து தரலாம்னு நினைச்சேன். ஆனா அவ கூட கொஞ்சம் பேச வேண்டி இருக்கு. எங்க வீட்லனா அவ கூட இயல்பா பேச முடியும்...."

"சரி கௌதமி. வரச்செல்றேன். சரி நான் கிளம்புறேன். வருண் ப்ராக்டிஸ் முடிஞ்சு வீட்டுக்கு வந்திடுவான்."

இருவரும் விடைப்பெற்றுக் கொண்டனர்.

அடுத்தநாள் மித்ராவுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. இது தெரியாமல் மேடம் பச்சை கலர் சிங்குச்சா என்று புடவை கட்டி ஆபிஸ் போய் வேலையை முடித்துவிட்டு அங்கிருந்து நேராக அப்படியே சந்தியாவின் வீட்டுக்கு ஸ்கூட்டியை விட்டாள். ஆம். மீண்டும் யாரையாவது இடிக்கலாம் என்று அவள் முடிவு செய்தால் நாம் என்ன செய்ய? விதி என்ன செய்யுமோ..?

ஆட்டம் தொடரும் ❤️?
 
Nice epi dear.
Navi, thelivu da monnae, enna oru analysis. He is correct.
Yedi penne, ivalavu ku appurom nee scooty edukura paru unn mana thidatha paarattureen.Gents population ah eppadiyum kurai kura mudivulathan irrukura,paarkalam adimai ethuvum maattutha nu.
 
ஆட்டம் தொடரும் ❤?
?
 
அதே அடிமை தான் மாட்டும்.?
Review Ku thanks Leenu ❤️
 
Top