Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கண்ணாமூச்சி ஏனடா!-21

Advertisement

Banupriya "பா.ரியா"

Well-known member
Member
அத்தியாயம் -21


கடிகாரம் யாருக்காகவும் தன் கடமை ஓட்டத்தை நிறுத்துவதில்லை. நாட்களும் வேகவேகமாய் நகர்ந்துக்கொண்டிருந்தன.
அந்த ஞாயிற்றுக்கிழமை நண்டு வறுவல் விருந்துக்கு பின் மித்ரா நவிலனை சந்திக்கவேயில்லை. இருவரும் பிடிவாதம் பிடித்துக்கொண்டு இருந்தார்கள். 'அவ வந்து பேசட்டும்.. ' என்று அவனும், ' அவரு பேசட்டும்.. நான் ஏன் பேசனும்..?' என்று அவளும் வரட்டு கௌரவம் பார்த்து கொண்டு இருந்தார்கள்.

வேலை முடிந்து வந்த அலுப்பு. குளித்துவிட்டு படுக்கையில் விழுந்தாள்.மித்ரா செல்போனை நோண்டிக் கொண்டு இருந்தாள். அப்போது அந்த வீடியோவில் ஒரு அழகான ஆண்குரல் இப்படி பேசியது.

'மனசுக்கு பிடிச்சவங்களோடு சண்டை போட்டுவிட்டு அவங்களோட பேசாமல் இருந்து விடலாம். எங்களோட ஈகோ அவர்களுக்கு பேசக்கூடாது, மெசேஜ் செய்யக்கூடாதுனு சொல்லி இருந்தாலும், போனை எடுத்து அவங்க நமக்காக எதாவது மெசேஜ் அனுப்பி இருக்காங்களா? நமக்காக எதாவது ஸ்டேஸ்டஸ் வச்சி இருக்காங்களானு பார்த்து பார்த்து பரிதவிச்சிக்கிட்டே இருக்கும். உங்க அன்புக்குரியவங்களும் உங்களை மாதிரியே அந்த ஈகோவை பிடிச்சிக்கிட்டு உங்களோட ஒரு மெசேஜ்க்காக, உங்க போன் கால்க்காக தான் காத்திருப்பாங்க. ஊடல் அழகானது தான். அதுக்காக ரொம்ப நேரம் அப்படியே இருந்துவிட வேண்டாம். ஈகோவை கைவிடுங்க. '

அந்த வீடியோவைப் பார்த்தும் மித்ராவுக்கு மனசெல்லாம் பாரமானது. நவிலனுடைய ஞாபகம் வெகுவாக வந்து தாக்கியது. அவளையும் அறியாமல் கண்களில் துளிர்த்த நீரை அவளது பஞ்சு தலையணை நனைத்தது.

செல்போனை எடுத்து வாட்சப்பிக்குள் புகுந்தாள். அவனுடைய டீபி யை ஊற்றுப்பார்த்தாள். அவனுக்கு மெசேஜ் டைப் பண்ணினாள். அனுப்பினாள். உடனே அழித்தாள். மீண்டும் டைப் பண்ணினாள். அவன் ஆன் லைனில் தான் இருந்தான். இவள் செய்த வேடிக்கைகளை பார்த்து சிரித்தான்.

' என்ன ரொம்ப பாடு படுத்தி எடுத்துட்ட மித்ரா..! அதுக்கு பதிலா உன்னோட நான் ஆடுற கண்ணாமூச்சி ஆட்டம் தொடரும்..' என்று அவனும் வீம்பு பிடித்தான்.

அந்த இரவு இருவரும் மாறி மாறி ஒருவரைப் பற்றி ஒருவர் நினைத்துக்கொண்டு இருந்தார்கள்.

ஐராவதம் ஓரளவு குணமாகி இருந்தார். அவரால் பிறர் உதவியன்றி சக்கர நாற்காலியில் நடமாட முடிந்தது. அந்த ஒரு மாதத்தில் அவரிடத்தில் ஓர் பெரும் மாற்றம் வந்திருந்தது. ஹாஸ்பிடல் வாசம் அவரை பெரிதும் உலுக்கியிருந்தது. முன்னரெல்லாம் காட்டுக்கத்தாய் கத்துபவர் இப்போது அளந்து அளந்து பேசினார். பாமாவிடம் எரிந்து விழாமல் இருந்தார். வருண் கிரிக்கெட் பேட்டுடன் கிளம்பினாலும் வாயை மூடிக்கொண்டிருந்தார். ஆனால் மித்ராவை மட்டும் அவர் நெருங்கவேயில்லை.
ஐராவதம் படுக்கையில் இருந்த போது மித்ராவே முழு வீட்டையும் பொறுப்பாய் கவனித்துக்கொண்டாள். வீட்டில் இடம்பெற்ற மாற்றங்களை அவளும் கவனிக்கத் தவறவில்லை. அதேநேரம் அவள் முன்னர் போல் இல்லாது சதா ஏதோ சிந்தனையில் இருப்பதை பாமாவும் கவனிக்கத் தவறவில்லை. அவள் உடலும் மெலிந்து சோர்ந்து போய் இருந்தாள். அது பசலை நோயால் வந்தது என்று யாருக்கு தெரியப்போகிறது.


வேலை நேரம். ஆனால் அவளால் வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை.

" மித்ரா! தீபக் மெஹரா உன்னை வரச்சொன்னார்.." என்று அவளது தோளை தட்டிவிட்டு சொல்லிச் சென்ற லோ ஹிப் சாரி அணிந்த வெலண்டினா அன்று கறுப்பு நிற சேலையில் இருந்தாள்.

" மே ஐ கம் இன் சார்.."

" கம் மை டியர்.. சிட் டவுண்.." தீபக் மெஹரா சொல்ல, மித்ரா அவருக்கு எதிர் இருக்கையில் அமர்ந்தாள்.

" ஆர் யூ இன் லவ்?" தடாலடியாக அந்தக் கேள்வியை கேட்டார் அவர்.

" சா...ர்..." அவள் அதிர்ந்து போய் கத்தினாள்.

" பின்ன.. வேலையில் நிறைய தப்பு விடுறியேம்மா.. " அவள் முன் அந்த ஃபைலை தூக்கி போட்டார். அது சோப்பு கம்பனி ஒன்றிற்கான ஆர்டர். அதில் வேறு ஏதோ ஒரு பழைய விளம்பரத்துக்கான காகிதங்களை சேர்த்து வைத்திருந்தாள். சிறிய கடுகு தவறுதான். ஆனால் தீபக் மெஹரா சிறிய தவறுகளையும் பொறுத்துக்கொள்ளாத ஆசாமி.

" ஸாரி ஸார்... இனி இந்த மாதிரி தப்பு நடக்காது.."

" மித்ரா! நீ இந்த மாதிரி தப்பு செய்ற பொண்ணு கிடையாதே.. ஏதாவது பிரச்சனையாம்மா.. அப்பா ஹெல்த் பற்றி யோசனையா?"

" அதெல்லாம் ஓக்கே சார்.."

" அப்ப லவ்வா தான் இருக்க முடியும்.." அவர் சிரித்தார். அவள் தலை குனிந்து இருந்தாள்.

" இட்ஸ் ஓகே. வேணும்னா நீ ரெண்டு நாள் லீவ் எடுத்துக்கோ.. கூட இன்னும் ரெண்டு நாள் சேர்த்தே எடுத்துக்க.. ஃப்ரெஷ் ஆகிய பிறகு வா..யூ மே கோ நவ்.."

அமைதியாக எழுந்து வெளியே செல்லும்முன் " ஸாரி ஸார்.. இனி இப்படி தப்பு நடக்காது.." மன்னிப்பு கேட்டுவிட்டு சென்று சீட்டில் அமர்ந்தாள். தலை பயங்கரமாக வலித்தது. அங்கிருந்து கிளம்பினாள்.

நேராக பீச்சுக்கு சென்று மணலில் அமர்ந்தாள். பகலவன் தன் டியூட்டி முடிந்து மூட்டை முடிச்சை கட்டிக்கொண்டு இருந்த நேரமாதலால் வானம் செக்கச் சிவந்து காணப்பட்டது. பறவைகள் கூடுதேடி செல்லும் நேரம். தூரத்தே தெரிந்த அலைகளை வெறித்துப் பார்த்துக்கொண்டே இருந்தாள். அத்தனை பெரிய சமுத்திரத்துக்கு முன் தன்னுடைய கவலைகள் ரொம்பவும் சின்னதாக தெரிந்தது அவளுக்கு.
அவளுக்கு நவிலனை பார்க்க வேண்டும் போல இருந்தது. அவன் நினைவு அவளை வாட்டியது. அதே சமயம் அவனோடு சந்தோஷமாக கழித்த ஓரிரு நிமிடங்கள் நினைவுக்கு வந்து இதமான இன்பத்தை தந்தது. அந்த நினைவில் ஏதோ தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அவனுடைய நம்பரை தட்டிவிட்டாள். ரிங் போனது. எடுத்தான்.அந்தப்பக்கம் அவன் குரல் கம்பீரமாய் கேட்டது.

"ஹலோ....." அந்த குரலில் தன்னை மறந்து அவள் கண்களில் கண்ணீர் துளிர்த்தது. அது அவன் குரலை கேட்ட சந்தோஷம். ஏதோ அவன் அருகிலேயே இருப்பது போல் உணர்ந்தாள்.

"ஹ...ஹலோ......" தடுமாறினாள்.

"சொல்லுங்க மித்ரா...." மரியாதை தந்தான்.

"அது... அது..." குழறினாள்.
'என்ன சொல்றது. ஏதோ கோளாறால கோல் பண்ணியாச்சு.. என்ன சொல்றது.. என்ன சொல்றது...' மூளையை கசக்கி யோசித்தாள்.

"அது.. அதுவந்து தவறுதலா டயல் பண்ணிட்டேன்..." என்றாள்.

அந்தப்பக்கம் அவன் நம்பியிருப்பானா? அதற்கு வாய்ப்புண்டா?

"ஓ..." என்றான்.

'இந்த 'ஓ..' தவிர ஒன்னுமே தெரியாது போல..' என்று உள்ளுக்குள் திட்டினாள்.

"ஓ.. அப்படியா? எதுவும் இல்லனா.. நான் வச்சிடுறேன்..." என்றான்.

அவளுக்கு பற்றிக்கொண்டு வந்தது. மூக்கு சிவந்தது. மன்னிக்கவும். கோபத்தில் காது சிவந்தது.

அவளும் "ம்" என்ற பதிலுடன் கட் செய்தாள். ஆனால் அதற்கு முன்பே அவன் கட் செய்து இருந்தான்.

'டேய்.. இங்க என்னடா நடக்குது..? ஏதோ லவ் சீன் இருக்கும்னு ஆசையா இருந்தா.. ' - இந்த இடத்தில் வாசகர்கள் கோபப்பட வாய்ப்புண்டு. படுங்கள்.


சிறிது நேரத்தில் அவளுக்கு தன் மீதே கோபம் வந்தது.

' நான் சரியான லூசு.. உங்க கூட பேசனும் போல இருந்திச்சு. அதான் எடுத்தேனு சொல்லி தொலைச்சிருக்கலாம் இல்ல.. ச்சே.. அப்படி சொன்னா அவர் என்ன பற்றி என்ன நினைப்பார்.. நான் சரியான லூசுனு நினைப்பாரா? இல்ல இந்த பொண்ணு எதுக்கு நம்பளை மிஸ் பண்ணுதுனு புரிஞ்சிக்குவாரா? புரிஞ்சும் நடிக்கிறாரா? இல்லனா அதுக்குள்ள என்ன மறந்துட்டாரா? நோ வே.. நவிலன் அப்படிப்பட்ட ஆள் இல்ல... ஐயோ.. என்னை இப்படி புலம்ப விட்டுட்டிங்களே நவிலன்.. நான்.. நான் ஏன் உங்களை மிஸ் பண்றேன்... இதுக்கு என்ன அர்த்தம்...? நான் உங்களை லவ் பண்றேன் நவிலன்.. ஐ லவ் யூ சோ மச்.." அவளுக்கு எதுவோ புரிந்தது போல இருந்தது. சம்பந்தமா சம்பந்தமில்லாமல் யோசித்தாள்.

அவள் மனதில் முதல் நம்பிக்கைக்குரிய ஆணாக அவன் உருவெடுத்திருந்தான். அவன் அருகாமையை அவள் விரும்புவதை உணர்ந்தாள். அவள் மனதுக்குள் அவன் புகுந்துவிட்டதை உணர்ந்து தனியே வெட்கப்பட்டாள். ஆனால் தன் காதலை வெளிப்படுத்த மட்டும் இதுவரை தயங்கினாள். இனி தயங்கக்கூடாது என்று முடிவும் எடுத்தாள்.

அவள் பேசிவிட்டு வைத்த பின் நவிலனுக்கு ஏதோ விட்டமின் குடித்தது போல இருந்தது. செல்போன் திரையில் விழுந்த அவள் பெயரைக் கண்டதும், நடந்துக்கொண்டிருந்த மீட்டிங்கில் இருந்து 'எக்ஸ்கியூஸ் மீ' யோடு எழுந்து வந்தவன், சந்தோஷத்தில் திளைத்து, அவள் தெரியாமல் டயல் செய்துவிட்டேன் என்று கூறவும், ஒருகணம் சூடாகி பின் அவள் குரலின் தடுமாற்றத்தை புரிந்து தனக்குள் மெல்ல சிரித்துக்கொண்டான். அவளை கொஞ்சம் கடுப்பேற்றிப் பார்க்கவே படக்கென போனை வைத்தான். அந்தப்பக்கம் அவள் எப்படி தன்னை திட்டிக்கொண்டிருப்பாள் என்று எண்ணி உள்ளுக்குள் சிரித்தான்.

' நான் என் காதலை சொல்லிட்டேன் மித்ரா..! உனக்கும் என் மேல காதல் இருந்தா... கண்டிப்பா நீயாவே என்னைத் தேடி வருவ.. வரனும்.. நீ தான் உன் காதலை முதல்ல சொல்லனும்...'என்று நினைத்துக்கொண்டான்.

இருவரும் ஒருவரோடு ஒருவர் ஆடிக்கொண்டு இருந்த கண்ணாம்பூச்சி ஆட்டத்துக்கு ஒரு விடிவு வரும் போல இருந்தது.

ரோகிணியின் வீட்டு இட்லி குஷ்புவை லேசாக ஞாபகப்படுத்தியது. செல்போனை நோண்டிக் கொண்டு இருந்தான் நவிலன்.

" சாப்பிடும் போது என்னடா போன்.." அவனது கையில் ஒரு அடிபோட்டு விட்டு அதற்கு பரிகாரமாக ஒரு இட்லியை அவன் தட்டில் வைத்தார் ரோகிணி.

" நவிலா! இன்னைக்கு ' கே டீ குரூப் ஒஃப் கம்பனிஸ்' எம்டீ யோட ஒரு லன்ச் இருக்கு. என்னால போக முடியாது. நீ போயிட்டு வந்துடுறியா?" என்றவாறு ரோகிணி வைத்த இட்லி மீது சாம்பார் ஊற்றினார் வாசன்.

" சரிப்பா.. நான் போறேன்.." என்று நவிலன் சொன்னபோது ரோகிணி இருவரையும் முறைத்தார்.

" எப்ப பாரு.. பிசினஸ் பிசினஸ்.. வீட்லயும் அதைத்தானா பேசனும்.."

" என்ன செய்ய ரோகிணி. அதானே நமக்கு சோறு போடுது.. நவிலா! சீக்கிரம் வந்து சேர். நான் முன்னாடி கிளம்புறேன்.." தந்தை கிளம்ப, நவிலன் மெதுவாய் சாப்பிட்டுக்கொண்டு இருந்தான்.

"என்னம்மா.. ரொம்ப நாளா உங்க ஃப்ரெண்டைக் காணோம்..." என்று அம்மாவை கொஞ்சம் வம்பிழுக்க ஆரம்பித்தான்.

"யாருடா...?" என்றார் ரோகிணி.

"அதான்.. உங்க மித்ரா..."

"மித்ரா உனக்குத் தானேப்பா ஃப்ரெண்ட். எனக்கு ஃப்ரெண்ட்னு சொல்ற...? எனக்கு அவ மகள் மாதிரிடா..."

"ஐயோ அம்மா.. மகள்னு சொல்லதிங்க.. "

"அப்ப..." என்று மகன் முகத்தை கூர்ந்து பார்த்தார். அவர் முகத்தில் மகனின் மனதை முன்னரே அறிந்து வைத்திருந்தது தெளிவாக தெரிந்தது.

"அது.. அது...." என்று வாய் தவறி உளறியதற்காய் வருந்தினான். என்ன சொல்லி சமாளிப்பது என்று மண்டையை குடைந்தான்.

"அப்ப.. மருமகள் மாதிரினு சொல்லட்டா கண்ணா....." என்றார். அவன் ஷாக் அடித்தது போல வாயில் இருந்த இட்லியை விழுங்க மறந்திருந்தான்.

"அம்மா.. அது.. அது..."

"எனக்கு எல்லாம் தெரியும் ராஜா.. நான் உன் அம்மா.... உன் கண்ணைப் பார்த்தே கண்டுபிடிச்சிடுவேன்.. நீ முதல் முதலா அவளை வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வந்த இல்ல... அப்பவே யோசிச்சேன். இதுவரைக்கும் நீ எந்த பொண்ணையும் வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வந்தது இல்லையேனு... அப்பவே தோணுச்சு. அவ ஏதோ ஸ்பெஷல்னு... நான் வேணும்னா அவங்க வீட்ல பேசட்டா...?"

" அம்மா..." என்று அவரை கட்டிக்கொண்டான். அம்மா தன்னை இவ்வளவு தூரம் புரிந்து வைத்திருப்பது பெரும் மகிழ்ச்சியாய் இருந்தது.

"நீங்க பயங்கர ஆள்ம்மா... "

"அப்பாகிட்ட சொல்லி அவங்க வீட்ல பேச சொல்லட்டா...?"

"இல்லம்மா... வேண்டாம். முதல்ல அவ மனசுல நான் இருக்கேனானு தெரியனும்..."

"அவ மனசுல நீ தான் இருக்க..." நூறு சதவீதம் நம்பிக்கையோடு சொன்னார் அந்த தாய்.

"என்னம்மா சொல்றிங்க...?"

"அன்னைக்கு.. அதான் நீ யூ எஸ் போனப்போ.. அவ ஆர்வமா உன்னைப் பார்க்கத்தான் வந்தா... நீ இல்லனு தெரிஞ்சதும் அவ முகம் வாடினதை நீ பார்த்திருக்கனுமே... ஆனா எனக்கு உடம்பு சரியில்லனு தெரிஞ்சதும், அடுத்தடுத்த நாட்களும் வந்தா... எனக்கு உதவியாக இருக்கனுமேங்கறது ஒரு பக்கம் இருந்தாலும் உன்னைப் பற்றி ஏதாச்சும் தெரிஞ்சிக்க மாட்டோமானு அவ ஏங்குறதை அவ கண்ல பார்த்தேன். அவ தடுமாறி தடுமாறி ஏதாச்சும் கேட்பா... அவ முகத்துல காதல் தெரியுது கண்ணா.. ஆனா ஏனோ அதை ஒத்துக்க மாட்டிக்கிறாளோனு எனக்கு தோணுது...."

"நீங்க சொல்றது சரி தான் அம்மா.. அந்த சம்பவத்தால அவ ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கா.. அதுனால கொஞ்சம் தடுமாற்றத்தோட இருக்கா... அவளுக்கு கொஞ்சம் டைம் கொடுக்கனும். என் காதலை அவகிட்ட சொல்லிட்டேன். அவளுக்கு என் மேல காதல் இருந்தா அவளே வந்து சொல்லுவா.. அதுவரைக்கும் நான் பொறுமையா காத்திருப்பேன். அவ என்னைத் தேடி வருவானு எனக்கு நம்பிக்கை இருக்கும்மா.. நீங்களும் எதுவும் தெரிஞ்ச மாதிரி காட்டிக்காதிங்க.." நவிலன் ரொம்பவும் நம்பிக்கையோடு பேசினான்.

"சரிப்பா.. உன் காதல் அவளை கண்டிப்பா உன்கிட்ட கொண்டு வந்து சேர்க்கும். கண்டிப்பா அவ உன்னைத் தேடி வருவா..."அவரும் அதே நம்பிக்கை வார்த்தைகளை சொல்லவும், வெளியே ஸ்கூட்டி சத்தம் கேட்கவும் சரியாக இருந்தது. தாயும் மகனும் முகம் மலர்ந்தனர்.

"இதோ.. வந்துட்டா பாரு..." என்று முகம் மலர வாசலுக்கு விரைந்தார் ரோகிணி. அவன் மாடிக்கு ஓடினான்.

ஆட்டம் தொடரும் ❤️?

 
Nice epi dear.
Yedi oru vazhiya bulb eriyuthu pola... ithukku mela eriyala nangalu kerosene ootri eriya vida vendi irrukum.
Yedo thambi, idili maatti kooda uyir pogum... athukondu idili saapidum pol gavanam idili la irrukanum do.
Athu than ponnu, ego vittu vanthu allo ippol ethukku intha oottam??? already phone matter pending irruku monnae.
Hello authore, engalukku pa.Riya va nalla theriyum,nangalu onnum romance expect pannalam illa,phone ah PA than attend pannuvar nu ethir parthom konjam miss,intha mangan um,Sangi yum romance ah chance illa.
Vow! What ah change Ayra sir???
 
Nice epi dear.
Yedi oru vazhiya bulb eriyuthu pola... ithukku mela eriyala nangalu kerosene ootri eriya vida vendi irrukum.
Yedo thambi, idili maatti kooda uyir pogum... athukondu idili saapidum pol gavanam idili la irrukanum do.
Athu than ponnu, ego vittu vanthu allo ippol ethukku intha oottam??? already phone matter pending irruku monnae.
Hello authore, engalukku pa.Riya va nalla theriyum,nangalu onnum romance expect pannalam illa,phone ah PA than attend pannuvar nu ethir parthom konjam miss,intha mangan um,Sangi yum romance ah chance illa.
Vow! What ah change Ayra sir???
Thank you for your lovely review Leenu ❤️
 
Top