Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கண்ணாமூச்சி ஏனடா!-31 ( இறுதி ஆட்டம்)

Advertisement

பா.ரியா

New member
Member

ஜன்னலை திறந்த மித்ராவுக்கு ஒரு புறம் ஆச்சர்யம். மறுபுறம் சிரிப்பும் கோபமும். அவள் உணர்ச்சிகள் அந்த நிலைக் கண்ணாடியில் பிரதிபலித்தன.

" உங்களை யாரு இங்க வர சொன்னது நவி.. யாராவது பார்த்தா என்ன ஆகும்..?" பதறினாள்.

" ஆமா.. யாராவது பார்த்தா வம்பாயிடும். அதனால குறுக்கு விசாரணை பண்ணாம என்னை உள்ள விடு.." என்று அவளை தள்ளிவிட்டு உள்ளே புகுந்தான் அவன். நேராக சென்று தண்ணீர் பாட்டிலை எடுத்து மடக் மடக் என குடித்தான்.

" யப்பா... இவ்வளவு உயரமாவா பால்கனி கட்டி வைப்பாங்க. ஏறுறதுக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கு.." அவன் கவலை அவனுக்கு.

" அதெல்லாம் இருக்கட்டும். எதுக்கு வந்திங்க..?" இடுப்பில் கை வைத்து லேடி கான்ஸ்டபிள் போல விசாரிக்க ஆரம்பித்தாள்.

" ம்.. பல்லாங்குழி ஆட.."

" என்னது..?"

" கத்தாதடீ.. நீயே என்னை காட்டி கொடுத்துடுவ.." அவள் வாயை பொத்தினான். பொத்திய விரல்களை அவள் பதம் பார்த்தாள்.

" ஸ்..ஆ.. வலிக்குதுடீ.." விரல்களை உதறினான்.

" சரி சொல்லுங்க.. எதுக்கு வந்திங்க.."

" பதில் தெரிஞ்சும் கேட்கிற பாரு.. கள்ளி.. உன்னை பார்க்க தான் வந்தேன்.." கட்டிலில் அமர்ந்து கொண்டான்.

" அதான் நலுங்கு வச்சிட்டா பார்க்க கூடாதுனு சொன்னாங்க இல்ல. அப்புறம் ஏன் வந்திங்க.." ரொம்பவும் ரூல்ஸ் பேசி அவனை சாகடித்தாள் மித்ரா.

" அவங்க சொன்னா நான் கேட்டுடுவனா.. அதெல்லாம் முடியாது.." வம்பு பேசினான் நாயகன்.

" நவி! ஒவ்வொரு சம்ரதாயத்துக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கும். எனக்கும் அது தெரியாது. நாளைக்கு உங்க ஊர்ல இருக்க தொன்னூறு வயசு பாட்டிக்கிட்ட கேட்டு சொல்றேன்.. பார்த்தாச்சு தானே..இப்ப கிளம்புங்க. "

" என்ன மித்ரா.. இப்படி விரட்டுற.. காதலிக்க ஆரம்பிச்ச போது எவ்வளவு நல்லவளா இருந்த.. இப்ப பாரு.. விரட்டிக்கிட்டே இருக்க.." வருத்தம் தொனிக்கும் குரலில் சொன்னான்.

அவனைப் பார்க்க பாவமாய் இருந்தாலும், இது கிராமம். இவன் இப்படி வந்தது தெரிந்தால் ஊரில் உள்ள அத்தனை பெருசுகளும் சேர்ந்து நடுராத்திரியே ஒரு பஞ்சாயத்தை கூட்டினாலும் கூட்டலாம் என்ற ஐயம் அவளுக்கு தோன்றிய காரணத்தினாலேயே அவனை விரட்டினாள்.

" சரி.. என் தங்கம்ல.. இப்ப போவிங்களாம்.. நாளைல இருந்து உங்க கூடவே தானே இருக்க போறேன் நவி.. அப்புறம் என்ன..?" என்று அவன் தலையை கோதி விட்டாள்.

" ம்.. நாளைல இருந்து..." என்று கண் அடித்தான்.

" என்ன.. நாளைல இருந்து..?" அவள் சிரிப்பையும் வெட்கத்தையும் மறைத்துவிட்டு முகத்தை சாதாரணமாக வைத்துக்கொள்ள முயற்சித்தாள்.

" ம்.. நாளைல இருந்து உன்னை கொடுமை படுத்த போறேன்னு சொல்ல வந்தேன்.."

" போங்க நவி.." என்று செல்லமாக அவன் புஜத்தில் ஒரு குத்துவிட்ட போது அவளது அறைக்கதவு தட்டப்பட்டது. மித்ராவுக்கு அந்த ஏசி அறையிலும் வியர்வை துளிர்க்க ஆரம்பித்தது.

" ஐயோ! யாரோ தட்டுறாங்க.. "

" போய் யாருனு பாரு.." என்றான்.

அவனை முறைத்தாள் அவள்.

" நீங்க முதல்ல போங்க நவி.. " என்று அவனை பால்கனிக்கு தள்ளிக்கொண்டு போய் விட்டுவிட்டு " சீக்கிரம் போங்க.. நான் கதவை திறக்க போறேன்.." என்று அவனது பதிலுக்கு காத்திராமல் சென்று தாழ்ப்பாளை விலக்கினாள்.

" என்னடி நான் தான் படுக்க வாரேனு சொன்னேன் தானே.. உள்ள தாழ்ப்பாள் போட்டிருக்க.." பாமா அதட்டினார்.

" அ.. அது வந்தும்மா.. நைட்டி மாற்றிக்கிட்டு இருந்தேன்."

" சரி சரி நேரமாச்சு. படு. மேக் அப் பண்ண விடியவே வந்துடுவாங்கல.. "

" ஆமாம்மா..' என்று சொல்லிக்கொண்டே பால்கனி பக்கம் திரும்பிய சங்கமித்ரா அதிர்ந்தாள். நவிலன் இன்னமும் அங்கேயே நின்று கொண்டு இருந்தான். அவன் நிழல் தெரிந்தது. அவளுக்கோ கால்கள் நடுங்கின. அவன் என்ன செய்வான்? பாவம். ஏறுவதற்காக அவன் சாய்த்து வைத்து ஏணியை " இங்க யார்ட்டா ஏணியை சாய்ச்சு வச்சது.. ஒரு வேலையையும் உருப்படியா பார்க்க மாட்டானுங்க.. எல்லாத்தையும் நானே பார்க்கனும்.." என்று அந்த வீட்டின் முக்கிய வேலையாள் மருது அதை அப்புறப்படுத்தி இருந்தான். பாவம் நவிலன். இறங்குவதற்கு வழி தெரியாமல் விழி பிதுங்கி நின்றுக் கொண்டு இருந்தான். அங்கிருந்து குதித்தால் நிச்சயம் எழும்புகள் உடைவது உறுதி. அப்புறம் காலையில் மணவறைக்கு தவழ்ந்து தான் வர வேண்டி இருக்கும். செய்வதறியாது அங்கேயே ஒதுங்கி நின்றுக்கொண்டு இருந்தான்.

" என்ன ஏதோ யோசிச்சிக்கிட்டு இருக்க.. இப்படியே நின்னா பொழுது விடிஞ்சிரும். அப்புறம் மாப்பிள்ளை உன்னை காணோம்னு மணப் பந்தல்ல வாட்ச்சை பார்த்துகிட்டு தான் உட்கார்ந்து இருப்பார்.." பாமா சொல்ல மித்ரா சிரிப்பதா அழுவதா என்று தெரியாமல் பொய்யாய் சிரித்தாள்.

' அவரு எங்க மணவறைக்கு எனக்கு முன்னாடி போய் உட்கார்ந்து இருக்கது.. இங்க இருந்து போனா தானே போக முடியும்.. ஏன் இன்னும் போகல..' யோசிக்கலானாள் . அதற்கு முன் அம்மாவை கொஞ்சம் வெளியே கிளப்ப வேண்டும். என்ன செய்யலாம் என்று யோசிக்கலானாள். நவிலன் காலி செய்து விட்டு வைத்திருந்த தண்ணீர் போத்தல் கண்ணில் பட்டது.

" ம்மா.. தண்ணி காலியாகிடுச்சு.. கொஞ்சம் எடுத்துட்டு வர முடியுமா..?"

" ஆ.. தா.. நான் கொண்டு வந்து வைக்கிறேன். நீ படு. நேரமாச்சு." பாமா அறையிலிருந்து வெளியேற மித்ரா பால்கனிகக்கு விரைந்தாள்.

" இன்னும் போகாம இங்க என்ன பண்றிங்க நவி.. அம்மா வந்துடுவாங்க.. சீக்கிரம் போங்க.."

" போ.. போன்னா.. பறந்தா போறது. ஏறி வாரதுக்கு வச்ச ஏணியை எவனோ எடுத்துட்டான். இங்க இருந்து குதிக்க சொல்றியா.."

" இதெல்லாம் ஏறி வர முதல் யோசிச்சிருக்கனும்.." அவளுக்கு லேசாய் கோபம் வந்தது.

" சரி சரி கோவிச்சிக்காத.. நீ உள்ள போ.. நான் போயிடுறேன்..போ.. அத்தை வந்துடுவாங்க.." அவளை உள்ளே அனுப்பினான். கதவை மூடிவிட்டு திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே சென்ற மித்ரா படுக்கையில் படுத்துக் கொண்டாள். பாமா வரும் போது தூங்குவது போல பாவனை செய்ய ஆரம்பித்தாள்.

"அதுக்குள்ள தூங்கிட்டாளா..." என்று சொன்ன பாமா அருகில் படுத்துக் கொண்டு மகளின் தலையை ஆதரவாய் வருடிவிட்டார். அதை அனுபவிக்க கூட முடியாத நிலையில் மித்ராவின் ப்ரஷர் ஏறிக்கொண்டு இருந்தது.

' இந்த நவி எப்படி போவாரு.. குதிக்க போறாரா.. ஐயோ.. தேவையில்லாம ஏதாவது செய்றது.. அப்புறம் மாட்டிக்கிட்டு முழிக்கிறது. '

பாமா தூங்கும் வரை காத்திருந்த மித்ரா ஓசைப்படாமல் எழுந்தாள். பூனையை விட மெதுவாக சப்தம் எழாமல் நடந்து ஓசைப்படாமல் பால்கனி கதவை திறந்தாள். தலையை வெளியே நீட்டினாள். நல்லவேளையாக அங்கு நவிலன் இல்லை. அவளுக்கு அப்போது தான் மூச்சு வந்தது.

" அங்க என்ன பண்ற மித்ரா..?" பாமாவின் குரல் கேட்டதும் மித்ராவுக்கு வெல வெலத்தது.

' என்ன சொல்லி சமாளிப்பது..?'

" மித்ரா.."

" ம்மா.. அது வந்து ஏதோ சத்தம் கேட்ட மாதிரி இருந்துச்சு.."

" ஆமா.. எனக்கு கூட கொஞ்ச நேரத்துக்கு முதல் ஏதோ சத்தம் கேட்ட மாதிரி இருந்துச்சு.. சுற்றி வர தென்னை மரமா தானே இருக்கு. தேங்காய் எதுவும் மரத்திலிருந்து விழுந்திருக்கும். நீ படு. கொஞ்சமாவது தூங்கினா தான் காலைல முகம் பார்க்க நல்லா இருக்கும்."

" சரிம்மா.." படுத்துக் கொண்டாள்.

' விழுந்தது தேங்காயா? நவிலனா..?' குழப்பத்துடன் அயர்ச்சியில் உறங்கிப் போனாள்.

விடியற்காலையில் எழுந்து குளித்துவிட்டு வந்த மித்ராவுக்கு அலங்காரம் ஆரம்பமானது. அவளோ நிமிடத்திற்கு ஒருதரம் செல்போனை எடுத்துப் பார்த்தாள். அவனிடம் இருந்து எந்த தகவலும் இல்லை.

' ரூம்க்கு போயிட்டேனு ஒரு மெசேஜ் அனுப்பியிருந்தா என்னவாம்..' கோவம் வந்தது அவளுக்கு.

' நவி! ஆர் யூ ஓக்கே..?' குறுஞ்செய்தியை தட்டி விட்டாள்.

' யெஸ் கண்மணி..' என்று இருபது நிமிடத்துக்கு பிறகு பதில் வந்ததும் தான் மித்ராவுக்கு ஒரு நிம்மதி பிறந்தது.

அந்த பச்சை வண்ண காஞ்சிபுர பட்டுச்சேலை அவளது மேனி அழகை தனியே எடுத்துக் காட்டியது. அவளது நீள கூந்தலை பின்னி வைக்கப்பட்டிருந்த சடை நாகத்தின் எடையை தாங்கும் சக்தி அவள் கூந்தலுக்கு இயல்பாகவே இருந்தது வசதியாகப் போய்விட்டது. அவள் கேட்டுக் கொண்டபடி முழுக்க முழுக்க மல்லிகைப்பூவில் சிகைக்கு அலங்காரம். ஆங்காங்கே சில சிகப்பு ரோஜாக்கள். அவள் கருவண்டு கண்களுக்கு அழகு சேர்க்கத்தான் அந்த கண் மையா? அல்லது அந்த கண் மைக்கு அழகு சேர்க்கத்தான் அவள் கண்களா? என்று நிச்சயம் பார்ப்பவர்க்கு குழப்பம் வரும். அந்த ஒற்றைக்கல் மூக்குத்தி அவள் மூக்கின் வனப்பை மிகைப்படுத்தி காட்டியதில் கிளி மூக்கு மாம்பழமும் தோற்றுவிடும். அந்த செவ்விய இதழ்களை முத்தமிட்டுக் கொண்டு இருந்த உதட்டுச்சாயம் போன ஜென்மத்தில் ஏதோ கொஞ்சம் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

அவள் வகிட்டை மறைத்த நெற்றிச்சுட்டி , காதுகளை சுமைதாங்க வைத்த ஜிமிக்கிகள், சங்கு கழுத்தை ஆக்கிரமித்த அட்டிகையும் காசுமாலையும், அவள் இடையை வருடிய ஒட்டியாணம், அவள் கைகளை நிரப்பிய கை வளையல்கள், அவள் பாதங்களை உரசிய கொலுசு. இத்தனையும் பெருமிதம் கொண்டன. இத்தகைய பேரழகியிடம் அடிமை சாசனம் எழுதித் தள்ளிவிட்டு அவளிடமே இருந்து கொள்ள கூடிப் பேசி ஒரு முடிவுக்கு வந்திருந்தன.

கண்ணாடியில் தன்னைப் பார்த்ததும் நவிலனைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் அவளுக்குள் எழுந்தது. ஆனால் அவனை மணமேடையில் தான் பார்க்க வேண்டும் என்று அவள் விரும்பினாள். அந்த நேரத்தகற்காக காத்திருக்க ஆரம்பித்தாள்.

அவர்கள் அங்கிருந்து குலதெய்வ கோவிலுக்கு கிளம்பினார்கள்.

சடங்கு சம்பிரதாயங்கள் ஆரம்பித்து புகை மண்டலத்துக்கு நடுவே இருந்த போதும் மனம் அவனைத் தான் தேடியது.

இருவருக்கும் தனித்தனியாக நெல் அளப்பு ,மாலை போடுவது என இடம்பெற, பெண் அழைப்பின் போது தான் அவனைப் பார்த்தாள் மித்ரா.

இருவர் கண்களும் கலந்து உறவாட அங்கு மௌனம் நிலவியது.

" ஆ.. ஆ... மாப்பிள்ளை பொண்ணை பார்த்தது போதும். " என்று அவனை சுற்றி இருந்தவர்கள் சீண்ட நவிலன் அசடு வழிந்தான்.

' நலந்தானா?' அவள் கண்களாலேயே கேட்டாள்.

' நலந்தான் கண்மணி. ' அவனும் பார்வையாலேயே பதில் சொன்னான்.

' நிஜம்மா...'

ஒருதரம் கண்களை மூடித் திறந்தான். அவளை தின்று விடுவது போல பார்த்தான். அந்த பார்வை என்ன சொல்லியது என்று அவளுக்கு புரிந்தது.

'சாவடிக்கிறடீ...'

அவள் கீழே குனிந்தாள்.

சுற்றி நின்றவர்கள் அறியாமல் இது இத்தனையும் நடந்தது. இது காதலர்கள் பாஷை.

கல்யாண புடவை நவிலன் ஆசைப்பட்ட படியே கடுஞ்சிவப்பு நிறத்தில் இருந்தது. அதை கட்டி அரக்கு அணிகலன்களை அணிந்த போது அவள் அழகு கூடினாற் போல தான் இருந்தது. தங்கப் பதுமை ஒன்று நடந்து வருவது போல நடந்து வந்து அவன் அருகில் அமர்ந்த அவளை இமை வெட்டாமல் கண்களுக்குள் சிறை பிடித்தான் நவிலன். அவன் தன்னைப் பார்ப்பதை உணர்ந்ததும் நாணம் கொண்ட அவள் கன்னங்கள் சிவந்தன. முத்து முத்தாக வியர்வை துளிர்தது, அவள் கழுத்தோரத்தில் வெண்முத்துக்களை பரப்பின. அதை கண்டு அவன் தன் கைக்குட்டையை எடுத்து அவளிடம் நீட்டினான்.

" ஓகோ.. இப்பவே பொண்ணை கவனிக்கிறிங்களாக்கும்.. " என்ற சீண்டலோடு அந்த கைக்குட்டையை பறித்த சந்தியா தன் தோழியின் நெற்றியில் துளிர்த்த வியர்வையை ஒற்றி எடுத்தாள்.

" பதறாதடீ.. பதட்டப்பட வேண்டிய இடங்கள் இன்னும் நிறைய இருக்கு.. ராத்திரி தெரியும் .." என்று மித்ராவின் காதுக்குள் கிசுகிசுத்து கண்ணடித்தாள் சந்தியா. அவளை செல்லமாக முறைத்த சங்கமித்ராவுக்கோ மேலும் வெட்கம் பிறந்தது.

உண்மையில் அந்த திருமண ஏற்பாடுகள் மித்ராவுக்கு அவ்வளவு பிடித்திருந்தது. கோவிலின் ஒருபுறம் மணப்பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. வந்திருந்தவர்கள் எல்லோரும் கீழே அமர்ந்திருக்க மணமக்களும் கீழேதான் அமர்ந்து இருந்தார்கள். எங்கு பார்த்தாலும் சொந்தங்களும் பந்தங்களும் கூடி பேசி தம் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டிருந்தனர். அந்த இயற்கையான காற்றில் தவழ்ந்து வந்த மேளச்சத்தமும் நாதஸ்வரமும் காதுகளுக்கு விருந்தாய் இருந்தன. நிறைவான திருமண அனுபவத்தை அவள் அனுபவித்தாள். நேரம் செல்ல செல்ல நவிலனும் அந்த உணர்வை அனுபவிக்க ஆரம்பித்தான். நாகரீகம் என்ற பெயரில் பட்டணங்களில் நடக்கும் திருமண கூத்தை நினைக்கையில் கொஞ்சம் சிரிப்பு வந்தது.

முகூர்த்த நேரம் நெருங்கியது. ஐராவதம், பாமா,வருண் நின்ற இடத்தில் அவள் கண்களுக்கு மட்டும் தெரியும் படியாக மதுபாலா நின்றாள். அக்காவை மனதுக்குள் நினைத்துப் பார்த்துக்கொண்ட மித்ரா ஒருகணம் கண்களை இறுக மூடி திறந்தாள்.

' அக்கா! என் சாமியா இருந்து என்னை ஆசிர்வதி..' அவள் நினைத்து முடிக்கவும் மங்கலநாணை நவிலன் கைகளில் ஏந்தவும் நேரம் சரியாக இருந்தது. அச்சமயம் எங்கிருந்தோ ஓடிவந்த சின்ன குழந்தை ஒன்று அத்தனை பேரையும் தாண்டி மணவறைக்குள் புகுந்து அவள் கன்னத்தில் முத்தமொன்றை கொடுத்து விட்டு ஓடிவிட்டது. அந்த குழந்தையை துரத்தி வந்த அதன் தாய் ' மன்னிச்சிடுங்க.. பாப்பா தெரியாம வந்துட்டா. ' என்று அவசர மன்னிப்பாக கையெடுத்து கும்பிட்டுவிட்டு குழந்தையை அழைத்துக் கொண்டே ஓடினாள்.

" ஏய்.. மது.. மது.. நில்லு.. ஓடாதே.."

அந்த பெயரை கேட்டதும் மித்ராவுக்கு கண்கள் கலங்கின. அதை கண்ட நவிலன் கண்களாலேயே அவளை ' நீ ஓக்கேயா..?' என்று கேட்டான்.

அக்காவே ஆசிர்வதித்தது போல உணர்ந்தவள் சந்தோஷமாக தலையாட்டினாள். மனம் மகிழ்ந்த நவிலன் ' ஏழேழு ஜென்மத்துக்கும் இந்த பந்தம் தொடர்ந்து இவளே என் மனைவியாக வாய்க்க வேண்டும்.." என இறைவனை மனதார வேண்டிக்கொண்டு மங்கல நாணை அவள் கழுத்தில் அணிவித்தான்.

அவளும் அதையேத் தான் வேண்டிக்கொண்டாள். இருவர் முகங்களிலும் சொல்ல முடியாத இன்பம் பரவிக் கிடந்தது. திருமணம் இனிதே நிறைவுற்றது.

கல்யாண சாப்பாடு அமோகமாக இருந்தது. வாழையிலையில் சொந்தபந்தங்கள் கையால் பறிமாறப்பட்ட உணவுக்கு ருசி அதிகம் என்று அன்று தான் உணர்ந்தான் நவிலன்.

ஏனைய சடங்குகள் முடிய நவிலன் காத்திருந்த அந்த நேரம் வந்தது. நிலவு லேசாய் அந்த அறை ஜன்னலினூடே எட்டிப் பார்த்து அவன் சந்தோஷத்தை பார்த்து சிரித்தது.

" சும்மா சொல்லக் கூடாது.. படத்துலலாம் வாற மாதிரி நல்லாத்தான் அலங்காரம் பண்ணியிருக்கா நம்ம தங்கச்சி சந்தியா.." என்று தங்கையை மெய்ச்சிக்கொண்டான். அருகில் தட்டில் வைக்கப்பட்டிருந்த பழங்களில் இருந்து ஒரு ஆப்பிளை எடுத்து கடித்தான்.

' எப்போ வருவா மித்துகுட்டி...' என்று வாசலையே பார்க்கலானான். பூட்டிய கதவுக்கு வெளியே சத்தம் கேட்டது. சாதாரணமாக இருப்பது போல் தன் செல்போனை எடுத்து குடையத்தொடங்கினான் அவன். அவன் கைகள் நடுங்கியது அவனுக்கே ஆச்சர்யமாகத்தான் இருந்தது.

கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள் சங்கமித்ரா. அவள் முகத்தில் டண் கணக்கில் வெட்கம் ஒளிந்து இருந்தது. முகம் மத்தாப்பு சுற்றியது போல இருந்தது. நடந்து வந்து அவன் அருகில் வந்தாள். கையில் இருந்த பால் செம்பை வைத்து விட்டு அவன் காலில் விழ போனாள். தடுத்து நிறுத்தினான் அவன்.

" என்ன பண்ற..?"

" கால்ல விழனுமாம்.. அம்புஜம் பாட்டி சொன்னாங்க.."

" நீ விழுந்தா நானும் விழுவேன்.." என்றான்.

" ஐயையோ.. அதெல்லாம் கூடாது. "

" ஆணும் பெண்ணும் சமம்னு கொண்டாடுற காலம் இது. நீ விழுந்தா நானும் விழுவேன். "

" அப்போ.. பாட்டி கேட்டா.."

" விழுந்தேனு மண்டையை ஆட்டு.. " என்று அவன் சொல்ல அவள் அழகாக தலையை ஆட்டினாள்.

" வேற என்னலாம் சொன்னிச்சு அந்த கிழவி.."

" அது வந்து..." பாட்டி சொன்னது எல்லாம் நினைவுக்கு கொண்டு வந்தாள்.

" ராசாத்தி! போனதும் உன் புருஷன் காலுல விழுந்து கும்பிடு. புருஷன் தான் மொத சாமி . அப்புறம் பாலு பழம் சாப்பிடுங்க. அப்புறம் நடக்க வேண்டியது எல்லாம் இன்னைக்கே நடந்துடனும். அதுக்கு தான் நேரம் காலம் எல்லாம் பார்த்து அனுப்பி வைக்கிறோம். காலைல சீக்கிரமே எழும்பி குளிச்சி கிளிச்சிட்டு படுக்கையெல்லாம் அலசி போட்டுட்டு வெளிய வா.. என்ன நான் சொல்றது புரியுதா.. நல்லா சந்தோஷமா இருங்க.. அடுத்த திருவிழாவுக்கு புள்ளயோட வரனும்.." தலை மீது கை வைத்து ஆசிர்வதித்து விட்டு வெற்றிலை பொட்டியை தேடிக்கொண்டு போய் விட்டாள்.

" என்னடீ யோசனை..?"

" ஆ.. ஒன்றுமில்ல.." என்றாள்.

"ம்.... இந்த படத்துலலாம் வாற மாதிரி எல்லாரும் கொண்டு வந்து ரூம்க்குள்ள உன்னை தள்ளியிருந்தா.. நீ வெட்கப்பட்டுகிட்டே வந்திருந்தா நல்லா இருக்கும்ல.."

அவள் முறைத்தாள்.

" இன்னைக்கு நமக்கு முதல் ராத்திரி கண்ணம்மா.. இன்னைக்காவது முறைக்காதேயேன்.." என்ற போது அவளுக்கு சிரிப்பு வந்தது.

" சந்தியா அதுக்கெல்லாம் ஏற்பாடு செஞ்சா. அத்தை தான் எனக்கு சங்கடமா இருக்கும்னு மாடி படியோட அவளை தடுத்து நிறுத்திட்டாங்க."

" நல்ல அம்மா.." தாயை புகழ்ந்து கொண்டான்.

அவள் அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல் தடுமாறினாள்.

" ஆமா.. எதுக்கு இந்த பால் கொடுக்கிற சமாச்சாரம் எல்லாம்னு உனக்கு தெரியுமா..?"

" ம்.. கொஞ்சம்.." என்றாள்.

" எங்க சொல்லு பார்ப்போம். " என்று அவளை பேச்சோடு பேச்சாக கட்டிலில் அமர வைத்து அவள் கால்களைப் பிடித்தான். அதை கண்டுகொள்ளாத அவள் அம்புஜம் பாட்டி எடுத்த வகுப்பை அவனுக்கு எடுக்கத் தொடங்கினாள்.

"பாலில உள்ள சுவை, மணம், வெண்மை, போல தம்பதிகள் இருவரது இல்வாழ்க்கையிலும் இன்பம், துன்பம், விட்டுக்கொடுத்தல் போன்றவை இன்று முதல் தொடங்கும் என்ற அர்த்தத்தில்தான் பால் கொடுத்து அனுப்பப்படுகிறதாம். பால் என்பதை அதிர்ஷ்டத்தின் பொருளாக நம் முன்னோர்கள் கருதி வந்தாங்க. பால் அருந்தி இல்வாழ்க்கையை தொடங்குவதால் தம்பதிகளின் வாழ்க்கையில அதிர்ஷ்டம் பெருகும் என்பது நம்பிக்கையாம். அதான் பால் கொடுத்து ... ஹேய் என்ன பண்றிங்க நவி.."

"உனக்கு கால் பிடிச்சு விடுறேன்.."

" நீங்க போய்.."

" ஏன்டீ.. பொண்டாட்டிக்கு புருஷன் கால் பிடிச்சு விட்டா என்னவாம்..?"

அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருந்தாள்.

" இப்ப பிடிச்சு விடுற மாதிரி ஆயிசுக்கும் பிடிச்சு விடுவானானு யோசிக்கிற... அதானே.."

" ஹேய்.. எப்படி... " அவள் மனதில் யோசித்ததை அவன் கண்டு கொண்டது ஆச்சர்யம் தான்.

" அதான் உன் முகத்துல தெரியுதே.. நீ யோசிக்கிறது வெளிய தெரியுதேடீ.."

அருகில் அடிக்க எதுவும் இல்லாமல் தடுமாறினாள்.

" இன்னைக்கு அடிக்க உனக்கு எதுவும் இல்ல.. உனக்கு பல்லு விழுந்து, தலையெல்லாம் நரைச்சு, நீ நடக்க முடியாம தள்ளாடுற கிழவியா போன பிறகும் உனக்கு கால் பிடிச்சு விடுவேன்... உன் கூடவேத்தான் இருப்பேன் நான்.. எப்பவும்.. எந்த சந்தர்ப்பத்திலும்.. "

" நெஜம்மா...?"

" நெஜம்மா....." அவளைப் போல இழுத்து சொன்னான்.

அவள் ஆனந்த மிகுதியில் இரு கைகளையும் விரித்து அவனை அழைத்தாள்.

தாயின் மடி தேடும் கன்று போல அவள் மார்பில் தஞ்சம் புகுந்தான் அவன்.

" நவி..!"

" ஐ லவ் யூ...." அவள் கண்களில் இருந்து வழிந்தோடிய நீர் அவன் மீது விழுந்தது.

" இப்ப எதுக்கு அழுற..?"

" சந்தோஷத்துல அழ கூடாதா...நான் அழுவேன்.."

" அப்போ இன்னும் சந்தோஷம் தாரேன்.. அழுறியா...?"

கண்ணீரினுடே சிரித்தாள். அவன் சொன்னதன் அர்த்தம் பிறகு தான் புரிந்தது.

" நவீ..." என்று சிணுங்கினாள்.

" மித்து! உனக்கு சம்மதமா.. வேணாம்னா இன்னொரு நாள் வச்சிக்கலாம். இன்னைக்கே எல்லாம் நடக்கனும்னு எந்த அவசியமும் இல்ல.."

அவன் அவளை மதித்து அப்படி கேட்டது அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. மனைவியை போகப் பொருளாக பார்க்காமல் ஒரு உயிருள்ள ஜீவனாக பார்க்கும் அவன் குணத்தில் நெகிழ்ந்தாள்.

சம்மதமாய் தலையாட்டிக் கொண்டே கண்களை பொத்திக் கொண்டு பொங்கி வந்த வெட்கத்தை மறைத்தாள்.

" முதலில் உன் அணிகலன்களுக்கு விடுதலை. " அவள் காதணியில் கை வைத்தான். ஒவ்வொன்றாக கழற்றத் துவங்கினான். அவள் மேனியில் பட்ட அவன் விரல்கள் அவளை ஏதோவொரு லோகத்துக்கு அழைத்துச் சென்றன. அந்த உரசல்களின் தீண்டல் இன்பமயமாக இருந்தது.

" அடுத்து உன் ஆடைகளுக்கு விடுதலை.." என்று சொல்லிக் கொண்டே அவள் முந்தானையில் கை வைத்தான்.

" ஐயோ...!" அவள் அலறினாள்.

" என்னாச்சு மித்ரா..."

கதவை காட்டினாள்.

" என்னடீ..?"

" தாழ்ப்பாள் போடல..."

" அடிப்பாவி.. முக்கியமான விஷயத்தை மறந்துட்டு உள்ள வந்து பாலு பழம்னு எனக்கு வகுப்பு எடுத்துக்கிட்டு இருந்திருக்க.. " என்று அவளை செல்லமாய் கடிந்தவன், எழுந்து சென்று தாழ்ப்பாளை போட்டுவிட்டு வந்தான்.

அவள் எழுந்து நின்று கொண்டு தவித்தாள். பின்னாலிருந்து அவளை அணைத்தான் அவன். அவள் தோளில் முத்தமொன்றை பதித்தான். அவன் முகம் அவள் கழுத்தில் இறங்கி முத்தமிட்டது. அந்த இறுக்கமான அணைப்பு அவளை அப்படியே கட்டிப்போட்டது. அவன் முகத்தோடு தன் முகத்தை தேய்த்தாள். கண்கள் மூடி அவன் ஸ்பரிசத்தை உணர்ந்தாள். முத்தங்களால் யுத்தம் செய்ய ஆரம்பித்தான் அவன்.

திரும்பி அவனை கூர்ந்து நோக்கினாள் அவள். அவன் கண்களை நேராய் பார்த்தாள்.

" ம்.. முடியலடீ.. என்னா கண்ணு இது.. சாகடிக்குது...." போதை தலைக்கேறியது அவனுக்கு.

அவளோ அவன் நெற்றியில் முத்தமிட்டாள். கண்களில் முத்தமிட்டாள். கன்னத்தில், மூக்கில், காதில், கழுத்தில், மார்பில்.. அடுத்து அவன் உதடுகளை நோக்கி படையெடுத்தாள். அவளிடம் அவன் தோற்றுப் போனான்.

முத்தம் அவ்வளவு இனிக்கும் என்று இருவருக்குமே அன்று தான் தெரிந்தது. மூச்சு முட்ட முட்ட முத்தம். இருவரின் ஆடைகளும் கேட்பாரற்று ஓரமாய் கிடந்தன.

" ஐயோ..!" இப்போது அவன் சத்தம்.

" என்னாச்சு.. ?" அவள் பதறினாள்.

" இடுப்பு வலிடீ...நேற்று நைட் கீழ குதிச்சது.."

அவளுக்கு சிரிப்பு வந்தது.

" அர்த்த ராத்திரில சாகசம் பண்ண நினைச்சா இப்படித்தான் அடிபடும்.."

" அப்போ இன்னைக்கு சாகசம் பண்ண வேண்டாமா...?" கண்ணடித்தான்.

" இடுப்பு வலியாமே.." வாயை பொத்திக்கொண்டு சிரித்தாள்.

" நீ தொட்டா இடுப்பு வலி ஓடிடும்..." அவள் கையைப் பிடித்து அவன் இடுப்பில் வைத்தான். அவளோ நெளிந்தாள். இடுப்பில் இதமாய் ஒத்தடம் கொடுத்தாள். உதடுகளால்.. பதிலுக்கு அவனும் அவள்... ( போதும். சென்சார்..)

அவர்களின் அங்கங்கள் அங்கங்களோடு ஒப்பிக் கொள்ள துடித்தன. அந்த பட்டாம்பூச்சிகள் இன்பமயமான லோகத்தில் தங்கள் கண்ணாமூச்சி ஆட்டத்தை ஆடிக்கொண்டு இருந்தன.


அந்த அறைக்கு வெளியே பறந்து கொண்டு இருந்த
மின்மினி பூச்சிகள் பேசிக்கொண்டன.


மின்மினி பூச்சி -1 ' அப்போ கதைல சண்டை சச்சரவு எதுவும் இல்லை யா.. கதை முடிஞ்சிருச்சா..?'

மின்மினி பூச்சி -2 ' ஆமா.. இது ஃபீல் குட் கதை.. நோ சண்டை சச்சரவு.. ஹாப்பி என்டிங் ஒன்லி..'


கண்ணாமூச்சி ஆட்டம் இத்துடன் இனிதே நிறைவுற்றது.


முற்றும் .
 
Top