Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கண்ணாமூச்சி ஏனடா!-4

Advertisement

Banupriya "பா.ரியா"

Well-known member
Member
அத்தியாயம் -4

நாட்கள் வேகமாக நகர்ந்து கொண்டே இருந்தன. சங்கமித்ரா வேலையில் சற்று பிசியாக இருந்தாள். அதனால் அவளுக்கு நவிலனைப்பற்றி யோசிக்க பெரிதாய் நேரம் இருக்கவில்லை. இப்படி சொன்னால் நம்பாதீர்கள். அவளுடைய நினைவுகளில் அவன் எப்போதாவது வரத்தான் செய்தான். ஏதோ அவனைப் பற்றியதொரு சுகமான நினைவு அவ்வப்போது வந்து தழுவிடத்தான் செய்தது.

நவிலனை சந்தித்த அடுத்த நாளே அவளுக்கு அவனுடைய சூப்பர் பவர் தெரிந்தது. இன்சூரன்ஸ் சுந்தருக்கு அவள் வீட்டுக்கு வர இருபத்து நான்கு மணித்தியாலங்கள் தான் அவகாசம் கொடுத்திருந்தான் போல. அவன் பறந்து வந்து அத்தனை வேலைகளையும் பார்த்து பார்த்து செய்து க்ளைம் எடுத்து கொடுத்தான். அவனை முன்னமே தெரிந்திருந்தால் இதுவரை தான் செய்த ஆக்ஸிடென்ட்களுக்கு அவன் உபயோகமாக இருந்திருப்பானே என்று நினைத்தாள் சங்கமித்ரா. எது எப்படியோ வேலை சிறப்பாக நடந்து முடிந்தது. சங்கமித்ராவுக்கும் ஆக்சிடன்க்கும் ரொம்பவும் நெருக்கமான பழக்கம். லைசென்ஸ் எடுத்த நாளிலிருந்தே எங்காவது வண்டியை கொண்டுச் சென்று முட்டிவிட்டு நிற்பாள். பல கரண்ட்டு கம்பங்கள் அவளிடம் அடி வாங்கி இருக்கின்றன. சில தள்ளுவண்டிகள் தங்களது பொருட்களோடு அவளிடம் சிக்கியிருக்கின்றன. ஒரு தடவை இப்படித்தான் ஒரு பாணி பூரி வண்டியில் இடித்து அவன் லபோ லபோவென கத்திக்கொண்டு வந்துவிட்டான். அவனை சமாளித்து, நஷ்ட ஈடு கொடுத்து அவனிடமிருந்து தப்பித்து ஓடி வருவதற்குள் அவளுக்கு போதும் போதும் என்றாகி விட்டது.

இதுபற்றி அதாவது இன்சூரன்ஸ் வேலை நிறைவடைந்தது பற்றி நவிலனுக்கு தெரிவிக்க வேண்டுமா என்று அவளது மூளை கேட்டது. 'தேவையில்லை. அவர் யாரோ நான் யாரோ..' என்று மனசு சொன்னது. சங்கமித்ராவிடம் ஒரு வீம்பு இருந்தது. அவளுக்கு ஆண்கள் என்றாலே சற்று அலர்ஜி. கொஞ்சம் தள்ளியேத்தான் இருப்பாள். அதற்கும் ஒரு கதை உண்டு. பின்னாளில் பார்த்துக்கொள்ளலாம்.

நவிலன் மீது அவளுக்கு இன்னொரு நல்லெண்ணமும் உருவானது. அவளுடைய ஸ்கூட்டி ரெடியாகி இருக்காது. அவள் எப்படியும் டாக்ஸியிலோ பஸ்ஸிலோ தான் அலுவலகம் செல்வாள். இது ஊரே அறிந்த கதை. ஆனால் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவளுக்கு டிரைவர் வேலை செய்யும் வழக்கமான பணக்கார பையன் போல அவன் நடந்து கொள்ளவில்லை. அதுவே அவளுக்கு ஆச்சர்யத்தை அளித்தது. வேறு யாரேனுமாக இருந்தால் அடுத்த நாளே காருடன் அவள் வீட்டு வாசலிலோ அல்லது தெரு முறையிலோ நின்று லிஃப்ட் தருவதாக பல் இளித்திருப்பார்கள். இளித்திருக்கிறார்கள். அவ்வளவு ஏன் அடுத்த தெரு விஷாலுக்கு மட்டும் இவளது ஆக்ஸிடென்ட் கதை தெரிந்திருந்தால் இன்னேரம் வந்து நின்று பல் இளித்திருப்பான். என்ன செய்ய குடும்ப நண்பரின் செல்ல மகன் அவன். அவனை தவிர்ப்பது மித்ராவுக்கு சற்று கடினம் தான். இவன் .. நவிலன் வித்தியாசமானவன் தான். அவளுடைய நம்பர் அவனிடம் இருந்தும் தவறியும் அழைப்பெடுக்கவில்லை. க்ளைம் மேட்டர் நிறைவுற்றது பற்றி அவனுக்கு நிச்சயம் தெரியும். இருப்பினும் அதை சாக்காக வைத்துக்கொண்டு வழிய முற்படவில்லை. நவிலன் தனித்துவமானவன்.
அதுதான் அவளை கவரப்போகிறது என்று தெரியாமல் அவன் சாதாரணமாக இயங்கிக்கொண்டு இருந்தான்.

அன்று ஞாயிற்றுக்கிழமை. ஐராவதம் அன்றைய நாளிதழுடன் நடுஹாலில் அமர்ந்துவிட்டார். பாமா இறால்களின் தலையை கொலை செய்து மதிய சமையலுக்கு அப்போதிருந்தே ஏற்பாடு செய்து கொண்டு இருந்தார். சற்று கூடுதல் நேரம் போர்வைக்குள் சுருண்டுக் கொண்டிருந்துவிட்டு எழுந்து சோம்பல் முறித்த மித்ரா, பால்கனியில் அவள் வளர்த்து வந்த ரோஜாச்செடிகளுக்கு பல்லு தேய்த்தவாறே தண்ணீர் ஊற்றிவிட்டு, சுகமாய் ஷவர் அடியில் நின்று அவளுக்கு தெரிந்த வகையில் பாட்டு பாடி அதன் வரிகளை கொலை செய்து கொலைக்குற்றத்தை அனுபவித்து குளித்துவிட்டு வந்து அம்மாவைத் தேடி சமையலறைக்குள் புகுந்தாள்.

பாமா அடுத்ததாய் கீரை ஆய ஆயத்தாமானார்.

"அம்மா! பசிக்குது. என்ன இருக்கு சாப்பிட..."

"உனக்கு இடியப்பம் ஹாட்பேக்ல இருக்கு. எடுத்து சாப்பிடு." வேலையில் மும்முரமாக இருந்தார் பாமா.

தட்டை எடுத்து இடியப்பங்களை போட்டு முட்டை சொதியை அதன் மீது ஊற்றினாள். கூடவே தேங்காய் சம்பல். அருமையான காம்பினேஷன். சமையலறையில் ஃப்ரிட்ஜ்க்கு அருகில் தரையில் அமர்ந்து கொண்டாள்.

" ஆஹா.. ஓஹோ..."

" என்னடீ..?"

" என்னா டேஸ்ட்டும்மா.. உங்க கைல என்னமோ இருக்கு.."

" ம்.. விரல்தான் இருக்கு.. மணி என்னாச்சு.. எத்தனை மணிக்கு எழும்பி வாற.. பொண்ணா லட்சணமா இருக்க வேணாமா.. அப்புறம் போற இடத்துல எப்படி காலத்தை ஓட்டுவ.." அவர் பேசிக்கொண்டே போக பதில் வராமல் இருக்க திரும்பிப் பார்த்தார் பாமா.

அவள் எழும்பி கை கழுவ போனாள்.

" ஏய்.. என்ன சொல்லிட்டேனு இப்ப இவ்வளவு கோவம் உனக்கு.. எதுவுமே சொல்லக் கூடாதா..சரிம்மா.. இனி நான் ஒன்னும் சொல்ல மாட்டேன். நீ உன் இஷ்டம் போலவே இரு.." கண்ணை கசக்க ஆரம்பித்தார் பாமா.

அவளுக்கு தெரியும் அது முதலை கண்ணீர் என்று. அதைப் பொருட்படுத்தாமல் கேட்டாள்.

"வருண் எங்க..?"

"அவன் ரூம்ல படிக்கிறான்..." சுரத்தேயின்றி பதில் வந்தது தாயிடம் இருந்து.

மித்ராவுக்கு தெரியும். தன் அருமைத் தம்பி நிச்சயம் படிக்கவில்லையென்று. அதனால் சாப்பிட்ட தட்டை பளபளவென கழுவி அதன் இடத்தில் வைத்துவிட்டு, பழக்கூடையில் இருந்து சில திராட்சைகளை கழுவி எடுத்துக்கொண்டு அவன் அறைக்குள் புகுந்தாள். அவளுடைய அறை போலின்றி அவனுடைய அறை எப்போதும் திறந்தே இருக்கும். அது ஐராவதத்தின் கட்டளை.

"டேய் தம்பி..! என்னடா பண்ற..?"

"ப.. படிக்கிறேன் அக்..கா..." திடுமென அக்காவின் குரல் கேட்டதில் அவன் அதிர்ந்து போனான்.

"அப்படியா.. அதுக்கு புத்தகத்தை தலைகீழா வச்சு படிக்கக்கூடாதுப்பா.. நேரா வச்சி படிக்கனும்.. அப்பதான் மண்டைல ஏறும்.." என்று புத்தகத்தை பிடுங்கி மேஜையின் மீது வைத்தாள்.

அதுவரை என்ன செய்து கொண்டிருந்தானோ, யாரோ வரும் சத்தம் கேட்டு அவசரமாய் புத்தகத்தை கையில் எடுத்தவன் அதை சரியாக பிடிக்காமல் தலைகீழாக பிடித்து தொலைத்துவிட்டான். இப்போது மாட்டிக்கொண்டும் விட்டான்.

"நல்லவேளை.. நீ வந்த அக்கா.. அப்பா பார்த்திருந்தா அவ்வளவு தான்.." என்றான் வருண் வருத்தத்துடன்.

"எதுக்கு அவருக்கு இப்படி பயந்து சாகுற.. நீ இந்த மாதிரி அவருக்காக கஷ்டப்பட்டு படிக்காம, உனக்காக இஷ்டப்பட்டு படி. அப்பத்தான் மண்டையில ஏறும்.."

"நானா படிக்க மாட்டேனு சொல்றேன். எந்த நேரமும் படி படினு உயிரை வாங்கினா எப்படிக்கா படிக்கத்தோணும். இத்தனைக்கும் நான் க்ளாஸ்ல டாப் ஸ்டூடண்ட். எல்லா சப்ஜெக்ட்லயும் ஐயா கில்லி. உனக்குத் தெரியும் தானே..." அவனே அவன் பெருமையை பிதற்றிக் கொண்டான்.

"ம்.. சரி விடு. அதுக்கு ஏன் இப்படி சோகமா முகத்தை வச்சிக்கிட்டு இருக்க?"

"விஷயம் அது இல்லைக்கா. இன்னைக்கு எங்க ஸ்கூல் மாட்ச். நான் இன்னும் அரை மணித்தியாலத்துக்குள்ள அங்க இருந்தாகனும். நான் போகலனா... என் மொத்த டீமும் இங்க வந்திடுவானுங்க.. என்ன பண்றது... எப்படி போறதுனு தெரியலக்கா..." என்று விசும்பினான்.

மித்ராவுக்கு தம்பியின் திறமை பற்றி தெரியும். கிரிக்கெட் என்றால் அவனுக்கு உயிர். சோறு தண்ணி இல்லாமல் கூட இருப்பான். கிரிக்கெட் இல்லாமல் இருக்க மாட்டான். அவன் நன்றாக விளையாடவும் செய்வான். அவனை எப்படியாவது இன்று விளையாட வைத்துவிட வேண்டும் என்று நினைத்தாள். முடிவெடுத்தாள்.

"வருண்! உன் கிட் எங்க? எப்படிடா ஹிட்லரை தாண்டி வெளிய எடுத்துட்டுப் போறது..?" அவளும் கவலைப்பட்டாள். கண்டால் ஐராவதம் கத்துவாரே என்ற எரிச்சல் தான்.

"அது ரமேஷ் வீட்ல வச்சிருக்கேன் அக்கா. போறப்ப எடுத்துக்கலாம்." பல்லை காட்டிக்கொண்டு பதில் சொன்னான். ஐராவதத்துக்கு பயந்து அவனுடைய கிட்டை வீட்டுக்குள் கொண்டு வருவதே கிடையாது. ரகசியமாய் போய் ப்ராக்டிஸ் செய்வான். விளையாடுவான். சந்தோஷமாய் இருப்பான்.

"ம். நீ தெளிவாத்தான் இருக்க. சரி சீக்கிரம் கிளம்பு. நான் பத்தே நிமிஷத்துல ரெடியாகிட்டு வந்துடுறேன்."

தமக்கையின் சொல்லுக்கு துணிந்து தயாரானான் வருண். உள்ளுக்குள் பதட்டம் இல்லாமல் இல்லை.

அறைக்குள் புகுந்து நீல நிற ஜீன்ஸை அணிந்தாள். பொருத்தமாய் வெள்ளை நிற டாப். கூந்தலை ஆராய்ச்சி செய்து வாரிக்கொள்ள நேரமின்றி லூஸ் ஹேரில் விட்டாள். கிடைத்த கம்மலை காதுகளில் சொருகினாள். மஸ்காராவை உபயோகித்து கண்களுக்கு அழகு கூட்டினாள். வாட்சை எடுத்து கட்டினாள். அறையை விட்டு வெளியே வந்தாள்.

புக் ஷெல்ப்பில் இருந்து லைப்ரரி புத்தகங்களை எடுத்துக்கொண்டாள். இரண்டு தினங்களுக்கு முன்தான் எடுத்து வந்தாள். வாசிக்கவே நேரமின்றி அப்படியே வைத்திருந்தாள்.

"அம்மா! நான் வருணோட லைப்ரரிக்கு போயிட்டு வாரேன். அப்படியே ஷாப்பிங் போகனும். போயிட்டு வந்திடுறோம்.." என்று ஹாலில் அமர்ந்திருந்த ஐராவதத்தின் காதுகளில் விழும்படியாக கத்தி, சமையலறையிலிருந்த தாய்க்கு அறிவித்துவிட்டு மாட்டி வைத்திருந்த ஸ்கூட்டியின் சாவியை எடுத்துக்கொண்டு கிளம்பினாள். வருண் எதுவுமே நடக்காதது போல அவள் பின்னே போகும் போது " அப்பா ! அக்கா கூட வெளிய போயிட்டு வந்துடுறேன்.." என்று பவ்யமாக சொன்னான்.

" ம்..ம்.. ரொம்ப நேரம் வெளிய சுத்த வேணாம்.. மத்தியானம் சாப்பாட்டுக்கு வந்துடுங்க.." மகனைப் பார்த்தே சொன்னார்.

" டேய்.. வருண்..வாடா.." என்று லிஃப்ட்டின் சொர்க்க வாசல் திறக்கவும் கத்தினாள்.

அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மேட்ச் பார்க்க கூட்டம் அலைமோதியது. இரண்டு பள்ளிகளுக்கு நடுவில் நடக்கும் பிக் மேட்ச். அடுத்த நாள் ல்லா க்ளாஸ்களிலும் மேட்ச் கதைதான் ஓடும் என்பதற்கு அடையாளமாய் மாணவிகள் கலர் சொக்காய்களில் மின்னினார்கள். அவர்களை டாவடித்த பசங்களுக்கு வாயெல்லாம் பல்லு இருந்தது தெளிவாய் தெரிந்தது.

மேட்ச் ஆரம்பமானதும் மித்ராவும் சுவாரஸ்யமாகினாள். விசிலடிக்காத குறையே தவிர தொண்டை வற்றிப்போகும் அளவு கத்தி மொத்த டீமையும் ஊக்குவித்தாள்.

அன்றைய மேட்சில் வருண் சிறப்பாகவே விளையாடினான். அவன் அதிகபட்சமாக எடுத்த தொன்னூறு ரன்கள் தான் அவர்கள் அணி வெற்றி பெற உறுதுணையாக இருந்தது. மித்ராவுக்கு அவனை நினைத்து பெருமையாக இருந்தது. அவனை ஒருங்காக கோச்சிங் செய்ய வேண்டும் என்று நினைத்துக்கொண்டாள்.

' மேன் ஒப் த மேட்ச்' ஷீல்ட்க்காக மேடையேறிய வருணை கண்களில் சந்தோஷம் மின்ன தொடர்ந்து கவனித்த சங்கமித்ராவின் கண்களில் ஆச்சர்யம் எட்டிப்பார்த்தது.

டீசேட்டும், ஜீன்ஸுமாய் அட்டகாசமாய் பரிசளித்துக்கொண்டிருந்தது வேறுயாருமல்ல நம்ம ஹீரோ நவிலன் தான். இரண்டு தடவையும் அவனை பார்மல் டிரெஸ்ஸில் பார்த்துவிட்டு இப்படி காஷுவலாக பார்க்கையில் அவன் அழகாய்த்தானிருந்தான். இல்லையில்லை. அட்டகாசமாயிருந்தான். அவளது கண்களுக்கு விருந்தாயிருந்தான்.

' இவர் எங்கே இங்கே..?' என்று அவனைப் பற்றி யோசிக்க ஆரம்பிக்கையில், வருண் தன்னை சூழ்ந்து கொண்டாடிய நண்பர்களிடம் இருந்து விடுதலை பெற்றுக்கொண்டு சங்கமித்ராவை நோக்கி ஆவலோடு ஓடி வந்தான்.

" அக்கா....!" அவன் குரலில் மகிழ்ச்சி கொட்டிக் கிடந்தது.

"டேய்.. சூப்பர்டா.. கலக்கிட்ட... ஐ ஆம் சோ ப்ரவுட் ஒப் யூ.." என்று இறுக்கியணைத்துக்கொண்டாள்.

அக்கா அன்பாய் அணைத்ததும், அவனும் நெகிழ்ந்து போனான். கொஞ்சம் வெட்கப்பட்டான்.

"தேங்க்ஸ்க்கா..."

"பார்த்து கவனம். இப்படி நசுக்கியே எங்க ஸ்டார் ப்ளேயரை ஹாஸ்பிடல்ல சேர்த்திடாங்க..." என்ற குரல் கேட்டது. பின்னால் வந்து நின்றான் கதாநாயகன்.

"நீங்க இங்க..." என்று இழுத்தாள் சங்கமித்ரா.

அவன் சங்கமித்ரா கேட்டதிற்கு பதில் சொல்லவில்லை.

"வருண் ரொம்ப நல்லா விளையாடினான். அவனை பார்த்து விஷ் பண்ணலாம்னு வந்தேன். பட் சத்தியமா நீங்க அவன் சிஸ்டர்னு எனக்குத் தெரியாது. வருண்! கங்ராட்ஸ். இன்னும் ப்ராக்டிஸ் பண்ணு.. உன்னோட பேட்டிங் சூப்பர்..இன்னும் நிறைய ப்ராக்டிஸ் வேணும்.. யு கென் டூ இட்..." என்று ஊக்குவித்தான்.

"தேங்க்யூ சார்.. அக்கா! இவர் எங்க ஸ்கூலோட கிரிக்கெட் ஸ்டார்..எங்க டீம் ஸ்பான்சரும் இவர் தான். என் ரோல் மாடலே நீங்க தான் சார்..." என்று நவிலனைப் பார்த்து கூறினான் வருண்.

நவிலன் சின்னதாய் சிரித்து வைத்தான். மித்ராவுக்கு அதற்கு மேல் என்ன பேசுவதென்றே தெரியவில்லை. அவளும் லேசாய் புன்னகைத்தாள்.

"நாங்க கிளம்புறோம் நவிலன்... அப்புறம். க்ளைம் க்ளியர் ஆச்சு. உங்க கார்டை எங்கயோ மிஸ் பண்ணிட்டேன். அதான் சொல்ல கிடைக்கல.. தேங்க்யூ சோ மச்." என்று உதிர்த்தாள். உண்மையில் அவனது விசிட்டிங் கார்ட்டை அவள் தொலைத்துவிட்டிருந்தாள். அதை தேடுவதற்காக அவள் வீட்டையே இரண்டாக்கிய போது ஐராவதம் கூட மகளை ஒரு மாதிரியாக பார்த்தார்.

" இட்ஸ் ஓகே.. சுந்தர் அப்பவே பேசினார்.."

" தேங்கயூ.." என்றாள் மீண்டும்.

தாமதமாக நன்றி சொல்ல நேர்ந்ததை நினைத்து அவளுக்கே சங்கடமாய் இருந்தது.

"இட்ஸ் ஓகே... " என்று அவனும் சொல்லி விடைபெற போகையில் நினைவுக்கு வந்தவனாய் அதை கேட்டான்.

" வருண்.. உன்னோட முழுப்பெயர் என்ன?"

அவன் நவிலனை ஆச்சர்யமாய் பார்த்துவிட்டு " வருண்தேவ்" என்றான்.

" அதானே பார்த்தேன்.. கண்டிப்பா முன்னாடியோ இல்ல பின்னாடியோ ஏதாவது பெயர் இருக்கனுமேனு.." என்று சொல்ல சங்கமித்ராவுக்கு மட்டும் சிரிப்பு வந்தது. வருண் புரியாமல் அக்காவைப் பார்த்தான். அவள் ' ஒன்றுமில்லை ' என்பது போல ஒரு கண்ணை மூடி தலையை இடவலமாக அசைத்து சைகை செய்தாள்.

அதற்கு மேல் பேச எதுவுமில்லாதது போல அந்த இடத்தில் அமைதி நிலவியது.

" ஓக்கே.. நான் கிளம்புறேன் மித்ரா.." என்றான் நவிலன்.

" ஓக்கே.. நாங்களும் கிளம்புறோம்.. போலாமா வருண்.."

அவன் ஒரு தலையசைப்புடன் புன்னகையை தூவிவிட்டு விடைப்பெற்றான். அங்கிருந்து நகர்ந்து சென்று விழா ஏற்பாட்டாளர்களிடம் பேசிக்கொண்டிருந்தான்.

அவன் பேசுவதைப் பார்த்துக்கொண்டிருந்த சங்கமித்ராவிடம் வருண் கேட்டான்.

"உனக்கு இவரை நல்லா தெரியுமோ அக்கா..?"

"ம்.. ஏண்டா இப்படி கேட்கிற..?"

" இல்ல.. இவ்வளவு உரிமையா மித்ரானு உன்னை கூப்பிடுறாரே.. அதான் கேட்டேன்.."

" அதுவா... அது ஒரு பெரிய கதை.." என்று அவள் ஆரம்பிக்கையிலேயே வருண் காலை வாரினான்.

" அவரு மேல தானே கடைசியா வண்டியை கொண்டு போய் இடிச்ச..?"

" டேய்.. எப்படிடா..?" என்று கன்னத்தில் கை வைத்து அதிசயத்தாள் தமக்கை.

" ஆமா.. இதுக்கு பெரிய மூளை வேணுமாக்கும். அது எப்படி நீ இடிக்கிறவங்க எல்லாம் ஜென்ஸாவே இருக்காங்க.. "

" என்ன செய்ய என் தலைவிதி அப்படி.." என்றாள் அவள். அதில் ஒரு வெறுப்பும் கொட்டிக்கிடந்தது.

" நல்ல நேரம் உயிரோட தப்பிக்கிறாங்க.. ஆமா இவரு எத்தனையாவது ஆக்ஸிடென்ட்?"

" பதினாறாவது..போல.." என்று அவள் சொல்லி அவள் சிரிக்க அவனும் சேர்ந்து சிரித்தான்.

" சரி சொல்லு.. இவரை எங்க இடிச்ச..?"

"அதுவா.. " சுருக்கமாக ' வன் வே' கதையை சொன்னாள்.

"ஓ... " என்று கேட்டுக்கொண்டான் வருண்.

"சரி சரி.. கிளம்பு. வீட்ல நம்மளை காணோம்னு ஹிட்லர் தேட ஆரம்சிச்சுடுவார்...." என்று அவனை கிளப்பிக்கொண்டுச் சென்றாள்.

அப்போது தான் அந்த சம்பவம் நடந்தது. பதினேழாவது.

ஆட்டம் தொடரும் ❤️?
 
Last edited:
Authore, ungada azhagu tamizhil arumaiya irrunthathu intha episode.
Yedi penne, saapittu mudichu than ponaya naan kooda roshama paathi saapidum pol poyo nu ninachu...sooru mukkiyam amaichare. Vidu vidu 16 mothal ellam oru kaariyama?? Varalaru namalonu maraka koodathuallo.( paaru thambi kuda oru minute la kandupidichu allo?? namada history appadi.)
Irrunthalum ellavarum aanungala??theriyuthu unn kola veri.
Ayra sir, theriyutha pullaru talents???(eppadi S aagi nu) Ellathukkum restrict seythal ippadi than.
Monae Navi, nee avalav periya attakaraa???
Thambi kku role model ah ???akkaku main role ye avar than.
Cup mukkiyam than athuvum hero, varungaala akka husband kaiyaal ennum pol spl than.
Daily driver ah varala roooomba nallavaruu nu nichukatha di,avan eppovum late ah kelambi,hurryburry ah office pora aasaami ya irrukum ( oru vela avalda logic leak aagiducho???).
 
Cute review.. இவ்வளவு அழகா ரசிச்சு வாசிக்கிறது ரொம்ப சந்தோஷம் தோழி. ஹீரோ நெஜமாலுமே ரொம்ப நல்லவன். நம்புங்க..? தேங்க்யூ சோ மச் ❤️
 
Cute review.. இவ்வளவு அழகா ரசிச்சு வாசிக்கிறது ரொம்ப சந்தோஷம் தோழி. ஹீரோ நெஜமாலுமே ரொம்ப நல்லவன். நம்புங்க..? தேங்க்யூ சோ மச் ❤
Naan aanungala mulusa nambuthilla, namma sangi baby pola,seri vidungo neenga sonna ok va vachukalam.
Reading is my passion, aana enna readers curiosity manasila vachu epi kodukum author maathram than reply pannuvan,ishttam pola epi podura author ezhuthu pidichalum, final epi potta pinnae vasika maatham seyum.
 
அத்தியாயம் -4

நாட்கள் வேகமாக நகர்ந்து கொண்டே இருந்தன. சங்கமித்ரா வேலையில் சற்று பிசியாக இருந்தாள். அதனால் அவளுக்கு நவிலனைப்பற்றி யோசிக்க பெரிதாய் நேரம் இருக்கவில்லை. இப்படி சொன்னால் நம்பாதீர்கள். அவளுடைய நினைவுகளில் அவன் எப்போதாவது வரத்தான் செய்தான். ஏதோ அவனைப் பற்றியதொரு சுகமான நினைவு அவ்வப்போது வந்து தழுவிடத்தான் செய்தது.

நவிலனை சந்தித்த அடுத்த நாளே அவளுக்கு அவனுடைய சூப்பர் பவர் தெரிந்தது. இன்சூரன்ஸ் சுந்தருக்கு அவள் வீட்டுக்கு வர இருபத்து நான்கு மணித்தியாலங்கள் தான் அவகாசம் கொடுத்திருந்தான் போல. அவன் பறந்து வந்து அத்தனை வேலைகளையும் பார்த்து பார்த்து செய்து க்ளைம் எடுத்து கொடுத்தான். அவனை முன்னமே தெரிந்திருந்தால் இதுவரை தான் செய்த ஆக்ஸிடென்ட்களுக்கு அவன் உபயோகமாக இருந்திருப்பானே என்று நினைத்தாள் சங்கமித்ரா. எது எப்படியோ வேலை சிறப்பாக நடந்து முடிந்தது. சங்கமித்ராவுக்கும் ஆக்சிடன்க்கும் ரொம்பவும் நெருக்கமான பழக்கம். லைசென்ஸ் எடுத்த நாளிலிருந்தே எங்காவது வண்டியை கொண்டுச் சென்று முட்டிவிட்டு நிற்பாள். பல கரண்ட்டு கம்பங்கள் அவளிடம் அடி வாங்கி இருக்கின்றன. சில தள்ளுவண்டிகள் தங்களது பொருட்களோடு அவளிடம் சிக்கியிருக்கின்றன. ஒரு தடவை இப்படித்தான் ஒரு பாணி பூரி வண்டியில் இடித்து அவன் லபோ லபோவென கத்திக்கொண்டு வந்துவிட்டான். அவனை சமாளித்து, நஷ்ட ஈடு கொடுத்து அவனிடமிருந்து தப்பித்து ஓடி வருவதற்குள் அவளுக்கு போதும் போதும் என்றாகி விட்டது.

இதுபற்றி அதாவது இன்சூரன்ஸ் வேலை நிறைவடைந்தது பற்றி நவிலனுக்கு தெரிவிக்க வேண்டுமா என்று அவளது மூளை கேட்டது. 'தேவையில்லை. அவர் யாரோ நான் யாரோ..' என்று மனசு சொன்னது. சங்கமித்ராவிடம் ஒரு வீம்பு இருந்தது. அவளுக்கு ஆண்கள் என்றாலே சற்று அலர்ஜி. கொஞ்சம் தள்ளியேத்தான் இருப்பாள். அதற்கும் ஒரு கதை உண்டு. பின்னாளில் பார்த்துக்கொள்ளலாம்.

நவிலன் மீது அவளுக்கு இன்னொரு நல்லெண்ணமும் உருவானது. அவளுடைய ஸ்கூட்டி ரெடியாகி இருக்காது. அவள் எப்படியும் டாக்ஸியிலோ பஸ்ஸிலோ தான் அலுவலகம் செல்வாள். இது ஊரே அறிந்த கதை. ஆனால் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவளுக்கு டிரைவர் வேலை செய்யும் வழக்கமான பணக்கார பையன் போல அவன் நடந்து கொள்ளவில்லை. அதுவே அவளுக்கு ஆச்சர்யத்தை அளித்தது. வேறு யாரேனுமாக இருந்தால் அடுத்த நாளே காருடன் அவள் வீட்டு வாசலிலோ அல்லது தெரு முறையிலோ நின்று லிஃப்ட் தருவதாக பல் இளித்திருப்பார்கள். இளித்திருக்கிறார்கள். அவ்வளவு ஏன் அடுத்த தெரு விஷாலுக்கு மட்டும் இவளது ஆக்ஸிடென்ட் கதை தெரிந்திருந்தால் இன்னேரம் வந்து நின்று பல் இளித்திருப்பான். என்ன செய்ய குடும்ப நண்பரின் செல்ல மகன் அவன். அவனை தவிர்ப்பது மித்ராவுக்கு சற்று கடினம் தான். இவன் .. நவிலன் வித்தியாசமானவன் தான். அவளுடைய நம்பர் அவனிடம் இருந்தும் தவறியும் அழைப்பெடுக்கவில்லை. க்ளைம் மேட்டர் நிறைவுற்றது பற்றி அவனுக்கு நிச்சயம் தெரியும். இருப்பினும் அதை சாக்காக வைத்துக்கொண்டு வழிய முற்படவில்லை. நவிலன் தனித்துவமானவன்.
அதுதான் அவளை கவரப்போகிறது என்று தெரியாமல் அவன் சாதாரணமாக இயங்கிக்கொண்டு இருந்தான்.

அன்று ஞாயிற்றுக்கிழமை. ஐராவதம் அன்றைய நாளிதழுடன் நடுஹாலில் அமர்ந்துவிட்டார். பாமா இறால்களின் தலையை கொலை செய்து மதிய சமையலுக்கு அப்போதிருந்தே ஏற்பாடு செய்து கொண்டு இருந்தார். சற்று கூடுதல் நேரம் போர்வைக்குள் சுருண்டுக் கொண்டிருந்துவிட்டு எழுந்து சோம்பல் முறித்த மித்ரா, பால்கனியில் அவள் வளர்த்து வந்த ரோஜாச்செடிகளுக்கு பல்லு தேய்த்தவாறே தண்ணீர் ஊற்றிவிட்டு, சுகமாய் ஷவர் அடியில் நின்று அவளுக்கு தெரிந்த வகையில் பாட்டு பாடி அதன் வரிகளை கொலை செய்து கொலைக்குற்றத்தை அனுபவித்து குளித்துவிட்டு வந்து அம்மாவைத் தேடி சமையலறைக்குள் புகுந்தாள்.

பாமா அடுத்ததாய் கீரை ஆய ஆயத்தாமானார்.

"அம்மா! பசிக்குது. என்ன இருக்கு சாப்பிட..."

"உனக்கு இடியப்பம் ஹாட்பேக்ல இருக்கு. எடுத்து சாப்பிடு." வேலையில் மும்முரமாக இருந்தார் பாமா.

தட்டை எடுத்து இடியப்பங்களை போட்டு முட்டை சொதியை அதன் மீது ஊற்றினாள். கூடவே தேங்காய் சம்பல். அருமையான காம்பினேஷன். சமையலறையில் ஃப்ரிட்ஜ்க்கு அருகில் தரையில் அமர்ந்து கொண்டாள்.

" ஆஹா.. ஓஹோ..."

" என்னடீ..?"

" என்னா டேஸ்ட்டும்மா.. உங்க கைல என்னமோ இருக்கு.."

" ம்.. விரல்தான் இருக்கு.. மணி என்னாச்சு.. எத்தனை மணிக்கு எழும்பி வாற.. பொண்ணா லட்சணமா இருக்க வேணாமா.. அப்புறம் போற இடத்துல எப்படி காலத்தை ஓட்டுவ.." அவர் பேசிக்கொண்டே போக பதில் வராமல் இருக்க திரும்பிப் பார்த்தார் பாமா.

அவள் எழும்பி கை கழுவ போனாள்.

" ஏய்.. என்ன சொல்லிட்டேனு இப்ப இவ்வளவு கோவம் உனக்கு.. எதுவுமே சொல்லக் கூடாதா..சரிம்மா.. இனி நான் ஒன்னும் சொல்ல மாட்டேன். நீ உன் இஷ்டம் போலவே இரு.." கண்ணை கசக்க ஆரம்பித்தார் பாமா.

அவளுக்கு தெரியும் அது முதலை கண்ணீர் என்று. அதைப் பொருட்படுத்தாமல் கேட்டாள்.

"வருண் எங்க..?"

"அவன் ரூம்ல படிக்கிறான்..." சுரத்தேயின்றி பதில் வந்தது தாயிடம் இருந்து.

மித்ராவுக்கு தெரியும். தன் அருமைத் தம்பி நிச்சயம் படிக்கவில்லையென்று. அதனால் சாப்பிட்ட தட்டை பளபளவென கழுவி அதன் இடத்தில் வைத்துவிட்டு, பழக்கூடையில் இருந்து சில திராட்சைகளை கழுவி எடுத்துக்கொண்டு அவன் அறைக்குள் புகுந்தாள். அவளுடைய அறை போலின்றி அவனுடைய அறை எப்போதும் திறந்தே இருக்கும். அது ஐராவதத்தின் கட்டளை.

"டேய் தம்பி..! என்னடா பண்ற..?"

"ப.. படிக்கிறேன் அக்..கா..." திடுமென அக்காவின் குரல் கேட்டதில் அவன் அதிர்ந்து போனான்.

"அப்படியா.. அதுக்கு புத்தகத்தை தலைகீழா வச்சு படிக்கக்கூடாதுப்பா.. நேரா வச்சி படிக்கனும்.. அப்பதான் மண்டைல ஏறும்.." என்று புத்தகத்தை பிடுங்கி மேஜையின் மீது வைத்தாள்.

அதுவரை என்ன செய்து கொண்டிருந்தானோ, யாரோ வரும் சத்தம் கேட்டு அவசரமாய் புத்தகத்தை கையில் எடுத்தவன் அதை சரியாக பிடிக்காமல் தலைகீழாக பிடித்து தொலைத்துவிட்டான். இப்போது மாட்டிக்கொண்டும் விட்டான்.

"நல்லவேளை.. நீ வந்த அக்கா.. அப்பா பார்த்திருந்தா அவ்வளவு தான்.." என்றான் வருண் வருத்தத்துடன்.

"எதுக்கு அவருக்கு இப்படி பயந்து சாகுற.. நீ இந்த மாதிரி அவருக்காக கஷ்டப்பட்டு படிக்காம, உனக்காக இஷ்டப்பட்டு படி. அப்பத்தான் மண்டையில ஏறும்.."

"நானா படிக்க மாட்டேனு சொல்றேன். எந்த நேரமும் படி படினு உயிரை வாங்கினா எப்படிக்கா படிக்கத்தோணும். இத்தனைக்கும் நான் க்ளாஸ்ல டாப் ஸ்டூடண்ட். எல்லா சப்ஜெக்ட்லயும் ஐயா கில்லி. உனக்குத் தெரியும் தானே..." அவனே அவன் பெருமையை பிதற்றிக் கொண்டான்.

"ம்.. சரி விடு. அதுக்கு ஏன் இப்படி சோகமா முகத்தை வச்சிக்கிட்டு இருக்க?"

"விஷயம் அது இல்லைக்கா. இன்னைக்கு எங்க ஸ்கூல் மாட்ச். நான் இன்னும் அரை மணித்தியாலத்துக்குள்ள அங்க இருந்தாகனும். நான் போகலனா... என் மொத்த டீமும் இங்க வந்திடுவானுங்க.. என்ன பண்றது... எப்படி போறதுனு தெரியலக்கா..." என்று விசும்பினான்.

மித்ராவுக்கு தம்பியின் திறமை பற்றி தெரியும். கிரிக்கெட் என்றால் அவனுக்கு உயிர். சோறு தண்ணி இல்லாமல் கூட இருப்பான். கிரிக்கெட் இல்லாமல் இருக்க மாட்டான். அவன் நன்றாக விளையாடவும் செய்வான். அவனை எப்படியாவது இன்று விளையாட வைத்துவிட வேண்டும் என்று நினைத்தாள். முடிவெடுத்தாள்.

"வருண்! உன் கிட் எங்க? எப்படிடா ஹிட்லரை தாண்டி வெளிய எடுத்துட்டுப் போறது..?" அவளும் கவலைப்பட்டாள். கண்டால் ஐராவதம் கத்துவாரே என்ற எரிச்சல் தான்.

"அது ரமேஷ் வீட்ல வச்சிருக்கேன் அக்கா. போறப்ப எடுத்துக்கலாம்." பல்லை காட்டிக்கொண்டு பதில் சொன்னான். ஐராவதத்துக்கு பயந்து அவனுடைய கிட்டை வீட்டுக்குள் கொண்டு வருவதே கிடையாது. ரகசியமாய் போய் ப்ராக்டிஸ் செய்வான். விளையாடுவான். சந்தோஷமாய் இருப்பான்.

"ம். நீ தெளிவாத்தான் இருக்க. சரி சீக்கிரம் கிளம்பு. நான் பத்தே நிமிஷத்துல ரெடியாகிட்டு வந்துடுறேன்."

தமக்கையின் சொல்லுக்கு துணிந்து தயாரானான் வருண். உள்ளுக்குள் பதட்டம் இல்லாமல் இல்லை.

அறைக்குள் புகுந்து நீல நிற ஜீன்ஸை அணிந்தாள். பொருத்தமாய் வெள்ளை நிற டாப். கூந்தலை ஆராய்ச்சி செய்து வாரிக்கொள்ள நேரமின்றி லூஸ் ஹேரில் விட்டாள். கிடைத்த கம்மலை காதுகளில் சொருகினாள். மஸ்காராவை உபயோகித்து கண்களுக்கு அழகு கூட்டினாள். வாட்சை எடுத்து கட்டினாள். அறையை விட்டு வெளியே வந்தாள்.

புக் ஷெல்ப்பில் இருந்து லைப்ரரி புத்தகங்களை எடுத்துக்கொண்டாள். இரண்டு தினங்களுக்கு முன்தான் எடுத்து வந்தாள். வாசிக்கவே நேரமின்றி அப்படியே வைத்திருந்தாள்.

"அம்மா! நான் வருணோட லைப்ரரிக்கு போயிட்டு வாரேன். அப்படியே ஷாப்பிங் போகனும். போயிட்டு வந்திடுறோம்.." என்று ஹாலில் அமர்ந்திருந்த ஐராவதத்தின் காதுகளில் விழும்படியாக கத்தி, சமையலறையிலிருந்த தாய்க்கு அறிவித்துவிட்டு மாட்டி வைத்திருந்த ஸ்கூட்டியின் சாவியை எடுத்துக்கொண்டு கிளம்பினாள். வருண் எதுவுமே நடக்காதது போல அவள் பின்னே போகும் போது " அப்பா ! அக்கா கூட வெளிய போயிட்டு வந்துடுறேன்.." என்று பவ்யமாக சொன்னான்.

" ம்..ம்.. ரொம்ப நேரம் வெளிய சுத்த வேணாம்.. மத்தியானம் சாப்பாட்டுக்கு வந்துடுங்க.." மகனைப் பார்த்தே சொன்னார்.

" டேய்.. வருண்..வாடா.." என்று லிஃப்ட்டின் சொர்க்க வாசல் திறக்கவும் கத்தினாள்.

அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மேட்ச் பார்க்க கூட்டம் அலைமோதியது. இரண்டு பள்ளிகளுக்கு நடுவில் நடக்கும் பிக் மேட்ச். அடுத்த நாள் ல்லா க்ளாஸ்களிலும் மேட்ச் கதைதான் ஓடும் என்பதற்கு அடையாளமாய் மாணவிகள் கலர் சொக்காய்களில் மின்னினார்கள். அவர்களை டாவடித்த பசங்களுக்கு வாயெல்லாம் பல்லு இருந்தது தெளிவாய் தெரிந்தது.

மேட்ச் ஆரம்பமானதும் மித்ராவும் சுவாரஸ்யமாகினாள். விசிலடிக்காத குறையே தவிர தொண்டை வற்றிப்போகும் அளவு கத்தி மொத்த டீமையும் ஊக்குவித்தாள்.

அன்றைய மேட்சில் வருண் சிறப்பாகவே விளையாடினான். அவன் அதிகபட்சமாக எடுத்த தொன்னூறு ரன்கள் தான் அவர்கள் அணி வெற்றி பெற உறுதுணையாக இருந்தது. மித்ராவுக்கு அவனை நினைத்து பெருமையாக இருந்தது. அவனை ஒருங்காக கோச்சிங் செய்ய வேண்டும் என்று நினைத்துக்கொண்டாள்.

' மேன் ஒப் த மேட்ச்' ஷீல்ட்க்காக மேடையேறிய வருணை கண்களில் சந்தோஷம் மின்ன தொடர்ந்து கவனித்த சங்கமித்ராவின் கண்களில் ஆச்சர்யம் எட்டிப்பார்த்தது.

டீசேட்டும், ஜீன்ஸுமாய் அட்டகாசமாய் பரிசளித்துக்கொண்டிருந்தது வேறுயாருமல்ல நம்ம ஹீரோ நவிலன் தான். இரண்டு தடவையும் அவனை பார்மல் டிரெஸ்ஸில் பார்த்துவிட்டு இப்படி காஷுவலாக பார்க்கையில் அவன் அழகாய்த்தானிருந்தான். இல்லையில்லை. அட்டகாசமாயிருந்தான். அவளது கண்களுக்கு விருந்தாயிருந்தான்.

' இவர் எங்கே இங்கே..?' என்று அவனைப் பற்றி யோசிக்க ஆரம்பிக்கையில், வருண் தன்னை சூழ்ந்து கொண்டாடிய நண்பர்களிடம் இருந்து விடுதலை பெற்றுக்கொண்டு சங்கமித்ராவை நோக்கி ஆவலோடு ஓடி வந்தான்.

" அக்கா....!" அவன் குரலில் மகிழ்ச்சி கொட்டிக் கிடந்தது.

"டேய்.. சூப்பர்டா.. கலக்கிட்ட... ஐ ஆம் சோ ப்ரவுட் ஒப் யூ.." என்று இறுக்கியணைத்துக்கொண்டாள்.

அக்கா அன்பாய் அணைத்ததும், அவனும் நெகிழ்ந்து போனான். கொஞ்சம் வெட்கப்பட்டான்.

"தேங்க்ஸ்க்கா..."

"பார்த்து கவனம். இப்படி நசுக்கியே எங்க ஸ்டார் ப்ளேயரை ஹாஸ்பிடல்ல சேர்த்திடாங்க..." என்ற குரல் கேட்டது. பின்னால் வந்து நின்றான் கதாநாயகன்.

"நீங்க இங்க..." என்று இழுத்தாள் சங்கமித்ரா.

அவன் சங்கமித்ரா கேட்டதிற்கு பதில் சொல்லவில்லை.

"வருண் ரொம்ப நல்லா விளையாடினான். அவனை பார்த்து விஷ் பண்ணலாம்னு வந்தேன். பட் சத்தியமா நீங்க அவன் சிஸ்டர்னு எனக்குத் தெரியாது. வருண்! கங்ராட்ஸ். இன்னும் ப்ராக்டிஸ் பண்ணு.. உன்னோட பேட்டிங் சூப்பர்..இன்னும் நிறைய ப்ராக்டிஸ் வேணும்.. யு கென் டூ இட்..." என்று ஊக்குவித்தான்.

"தேங்க்யூ சார்.. அக்கா! இவர் எங்க ஸ்கூலோட கிரிக்கெட் ஸ்டார்..எங்க டீம் ஸ்பான்சரும் இவர் தான். என் ரோல் மாடலே நீங்க தான் சார்..." என்று நவிலனைப் பார்த்து கூறினான் வருண்.

நவிலன் சின்னதாய் சிரித்து வைத்தான். மித்ராவுக்கு அதற்கு மேல் என்ன பேசுவதென்றே தெரியவில்லை. அவளும் லேசாய் புன்னகைத்தாள்.

"நாங்க கிளம்புறோம் நவிலன்... அப்புறம். க்ளைம் க்ளியர் ஆச்சு. உங்க கார்டை எங்கயோ மிஸ் பண்ணிட்டேன். அதான் சொல்ல கிடைக்கல.. தேங்க்யூ சோ மச்." என்று உதிர்த்தாள். உண்மையில் அவனது விசிட்டிங் கார்ட்டை அவள் தொலைத்துவிட்டிருந்தாள். அதை தேடுவதற்காக அவள் வீட்டையே இரண்டாக்கிய போது ஐராவதம் கூட மகளை ஒரு மாதிரியாக பார்த்தார்.

" இட்ஸ் ஓகே.. சுந்தர் அப்பவே பேசினார்.."

" தேங்கயூ.." என்றாள் மீண்டும்.

தாமதமாக நன்றி சொல்ல நேர்ந்ததை நினைத்து அவளுக்கே சங்கடமாய் இருந்தது.

"இட்ஸ் ஓகே... " என்று அவனும் சொல்லி விடைபெற போகையில் நினைவுக்கு வந்தவனாய் அதை கேட்டான்.

" வருண்.. உன்னோட முழுப்பெயர் என்ன?"

அவன் நவிலனை ஆச்சர்யமாய் பார்த்துவிட்டு " வருண்தேவ்" என்றான்.

" அதானே பார்த்தேன்.. கண்டிப்பா முன்னாடியோ இல்ல பின்னாடியோ ஏதாவது பெயர் இருக்கனுமேனு.." என்று சொல்ல சங்கமித்ராவுக்கு மட்டும் சிரிப்பு வந்தது. வருண் புரியாமல் அக்காவைப் பார்த்தான். அவள் ' ஒன்றுமில்லை ' என்பது போல ஒரு கண்ணை மூடி தலையை இடவலமாக அசைத்து சைகை செய்தாள்.

அதற்கு மேல் பேச எதுவுமில்லாதது போல அந்த இடத்தில் அமைதி நிலவியது.

" ஓக்கே.. நான் கிளம்புறேன் மித்ரா.." என்றான் நவிலன்.

" ஓக்கே.. நாங்களும் கிளம்புறோம்.. போலாமா வருண்.."

அவன் ஒரு தலையசைப்புடன் புன்னகையை தூவிவிட்டு விடைப்பெற்றான். அங்கிருந்து நகர்ந்து சென்று விழா ஏற்பாட்டாளர்களிடம் பேசிக்கொண்டிருந்தான்.

அவன் பேசுவதைப் பார்த்துக்கொண்டிருந்த சங்கமித்ராவிடம் வருண் கேட்டான்.

"உனக்கு இவரை நல்லா தெரியுமோ அக்கா..?"

"ம்.. ஏண்டா இப்படி கேட்கிற..?"

" இல்ல.. இவ்வளவு உரிமையா மித்ரானு உன்னை கூப்பிடுறாரே.. அதான் கேட்டேன்.."

" அதுவா... அது ஒரு பெரிய கதை.." என்று அவள் ஆரம்பிக்கையிலேயே வருண் காலை வாரினான்.

" அவரு மேல தானே கடைசியா வண்டியை கொண்டு போய் இடிச்ச..?"

" டேய்.. எப்படிடா..?" என்று கன்னத்தில் கை வைத்து அதிசயத்தாள் தமக்கை.

" ஆமா.. இதுக்கு பெரிய மூளை வேணுமாக்கும். அது எப்படி நீ இடிக்கிறவங்க எல்லாம் ஜென்ஸாவே இருக்காங்க.. "

" என்ன செய்ய என் தலைவிதி அப்படி.." என்றாள் அவள். அதில் ஒரு வெறுப்பும் கொட்டிக்கிடந்தது.

" நல்ல நேரம் உயிரோட தப்பிக்கிறாங்க.. ஆமா இவரு எத்தனையாவது ஆக்ஸிடென்ட்?"

" பதினாறாவது..போல.." என்று அவள் சொல்லி அவள் சிரிக்க அவனும் சேர்ந்து சிரித்தான்.

" சரி சொல்லு.. இவரை எங்க இடிச்ச..?"

"அதுவா.. " சுருக்கமாக ' வன் வே' கதையை சொன்னாள்.

"ஓ... " என்று கேட்டுக்கொண்டான் வருண்.

"சரி சரி.. கிளம்பு. வீட்ல நம்மளை காணோம்னு ஹிட்லர் தேட ஆரம்சிச்சுடுவார்...." என்று அவனை கிளப்பிக்கொண்டுச் சென்றாள்.

அப்போது தான் அந்த சம்பவம் நடந்தது. பதினேழாவது.
Nirmala vandhachu ???
 
Top