Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கண்ணாமூச்சி ஏனடா..!-7

Advertisement

Banupriya "பா.ரியா"

Well-known member
Member
அத்தியாயம் -7


" என்னடீ என் அண்ணன்கிட்ட திமிரா பேசுறியாமே.." காபியை ஊற்றிக்கொண்டே குரல் கொடுத்தார் மங்களாதேவி. ஐராவதத்தின் கூடப்பிறந்த தங்கை.

சந்தியா ஏற்பாடு செய்திருந்த பார்ட்டிக்கு செல்ல ஆபிஸிலிருந்து நேராக வந்து, குளித்துவிட்டு தயாராகிக்கொண்டு இருந்த சங்கமித்ராவைப் பார்த்தே இந்த கேள்வியை கேட்டார் அத்தை.

" இல்லையே.. நான் அவரோட பேசுறதேயில்லையே.." என்று இடக்காக பதில் சொன்ன சங்கமித்ரா, சிவப்பு நிற உயர்ரக துணியிலான ப்ளவுஸ்ஸூம் கறுப்பில் சிவப்பு பூ போட்ட ஃப்ளோரல் ஸ்கர்ட்டும் அணிந்து இருந்தாள். ஸ்கர்ட்டுக்கும் ப்ளவுஸ்க்கும் இடைப்பட்ட பகுதியில் அவளது இடுப்பு எலுமிச்சை நிறத்தை ஞாபகம் செய்தது. அவள் காதுகளில் நீளமாய் இரண்டு காதணிகள். அது அசைந்து அசைந்து ஆடிய அழகில் மெய் மறக்கலாம். கூந்தலை பெரிது பெரிதாக க்ர்ல் செய்தாள். அதிக ஒப்பனையின்றி அளவாய் ஒப்பனை செய்தாள். கண்ணுக்கு மட்டும் எக்ஸ்ட்ராவாக மையிட்டு பெரிய விழிகளை உருட்டி அழகு பார்த்தாள்.

" இருந்தாலும் உனக்கு திமிரு தாண்டி.."

" இந்த மாதிரி உங்க அண்ணனுக்கு சப்போட் பண்ணிக்கிட்டு இருந்தா உங்க பங்களா பக்கம் வரமாட்டேன் மங்களா.." என்று ஹீல்ஸ் அணிந்து கொண்டே சொன்னாள்.

" ஆமா.. இப்படி எதாவது காரியம் இருந்தா மட்டும் தானே வார.. அத்தை தனியா இருக்காளே.. ஒரு எட்டு போயிட்டு வருவோம்னு தோணுதா உனக்கு.. யாருக்குமே என் மேல அக்கறை இல்ல..நான் எல்லாத்துக்கும் வேண்டாதவளா ஆகிட்டேன்.." கண்ணை கசக்க ஆரம்பித்தார் மங்களாதேவி.

" அச்சோ.. என் செல்ல அத்தைல.. இப்படிலாம் அழ கூடாது.." என்று அவர் கண்களை துடைத்தாள் மித்ரா.

" நீ மட்டும் தான் அடிக்கடி வந்துகிட்டு இருந்த.. இப்ப அதுவும் இல்ல..." குற்றம் சாட்டப்பட்டது.

" அத்தே.. அழாதிங்க.. இனி வாரா வாரம் வரேன்.." கை மீது கை வைத்து வாக்கு கொடுத்தாள்.

" போடி.. " என்று அவள் கையை தட்டிவிட்டு " சரி ரொம்ப நேரமாக்காம வீட்டுக்கு போ என்ன.." என்று கட்டளையிட்டார். மித்ரா அவரைப் பார்த்து முறைத்தாள்.

" என்னடீ..?"

" கொஞ்சம் சிரிங்க. அப்பத்தான் கிளம்புவேன்..." என்று முரண்டு பிடித்தாள்.

வேறு வழியின்றி மங்களாதேவி சிரித்தார். அப்படி சிரித்த மங்களாதேவி இளம் வயதிலேயே கணவனை பறிகொடுத்தவர். கணவன் இறக்கும் போது மகனுக்கு எட்டு மாதம். அவனும் ஐந்தாவது வயதில் மஞ்சள்காமாலை வந்து இறந்துவிட மங்களாதேவியின் உலகமே இருண்டுதான் போனது. ஆனாலும் மனம் தளராமல் ஒரு சிறுவர் இல்லத்தில் வேலை செய்துகொண்டு தன் மிச்ச நாட்களை ஓட்டி வருகிறார். அவருக்கு மித்ரா என்றால் கொள்ளை பிரியம். அவளுக்கும் தான்.

" என்னோட தங்கம்.. ஒழுங்கா சாப்பிட்டு தூங்குங்க.. டாக்ஸி வந்துடுச்சு.." என்று விடைபெற்ற சங்கமித்ரா 'ஹோட்டல் ரமாடா' வை நோக்கி போனாள்.

ரூஃப் டொப்பில் நீச்சல் குளத்தோடு ஒட்டிய வெட்டவெளியில் பார்ட்டி ஒழுங்கு செய்யப்பட்டு இருந்தது.

சந்தியா தனக்கு நெருக்கமான சில தோழிகளை மட்டுமே அழைத்திருந்தாள். ஏனோ அவளுடைய நட்பு வட்டமும் மித்ராவைப் போல குறுகியதே. இருவரும் தோழிகள் அல்லவா அப்படித்தான் இருப்பார்கள்.

மித்ரா தன் தோழிகளோடு கொஞ்ச நேரம் பழைய கதைகளை பேசிக்கொண்டு இருந்தாள். நெடுநாளைய கதைகள் அவை.

" என்னது ஷில்பாக்கு கல்யாணம் ஆகிடுச்சா..? என்னவோ மாடலிங் பண்ணி பெரிய ஆளா வரப்போறேனு கதைவிட்டா..?"

" ஹேய் உனக்கு தெரியுமாடீ.. நம்ம ஆனந்தி அந்த ஜூனியர் ஹாக்கி ப்ளேயர் ராபர்ட் கூட ஓடி போயிட்டா.."

" அதாவது பரவாயில்லடீ.. அமுதா அவ ஹஸ்பண்ட்டை டைவர்ஸ் பண்ணிட்டாளாம்.. "

இப்படியான உரையாடல்களை அந்த குழுவில் பேசப்பட்டுக்கொண்டு இருந்தது. சங்கமித்ராவால் அதில் ஒட்ட முடியவில்லை. தலையே வலிக்கும் போல இருந்தது அவளுக்கு. லேசாய் நழுவ ஆரம்பித்தாள். தூரத்தே மதிவாணண் தனது நண்பர்களை சந்தியாவுக்கு அறிமுகப்படுத்த அவள் சிரமப்பட்டு அவர்களை நினைவில் வைக்க முயன்று கொண்டிருந்தாள்.

சோமபானங்களை தவிர்த்து ஆரஞ்சு ஜூஸை எடுத்துக் கொண்டவள் அப்படியே நடந்து விளிம்புக்குச் சென்றாள். கண்ணாடியில் தடுப்பு போடப்பட்டு இருந்தது. அங்கிருந்து கீழே எட்டிப்பார்த்தவளுக்கு தலை சுற்றியது. அவளுக்கு உயரமான கட்டிடங்கள் என்றாலே பயம். அது ஒரு விதமான ஃபோபியா. அதற்கு அக்ரோஃபோபியா என்று பெயர். தலை கிறுகிறுவென சுத்த ஆரம்பிக்கையில் அவன் வராமல் இருந்தால் எப்படி?

அவளை தாங்கிப் பிடித்தான் நவிலன். அவன் கைகளில் பூவாய் சரிந்த சங்கமித்ரா கண் விழித்த போது அவனை மிக அருகில் கண்டு நடுக்கத்துக்கு உட்பட்டாள்.

" என்னாச்சு மித்ரா..? ஆர் யூ ஓக்கே..?"

" நத்திங்.. எனக்கு உயரமான கட்டிடங்கள்னா ஒரு பயம்.. இங்க இருந்து கீழ பார்த்தேனா ஒரு மாதிரி கிறுகிறுனு வந்துருச்சு..."

" ஓ. அப்படியா.. வாங்க அந்தப்பக்கம் போகலாம்.." என்று அவளை கூட்டிக்கொண்டு போய் அமர வைத்தான். தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தான்.

" குடிங்க.." என்று சொன்ன நவிலன் நீல நிற ஜீன்ஸும் அடர் பச்சையில் ஒரு சேர்ட்டும் அணிந்து இருந்தான். பிரவுன் நிற ஷூக்கள். கையில் விலையுயர்ந்த கைக்கடிகாரம். ஒருதரம் அவன் தலைகோதிய அழகை ரசித்த மித்ரா அவன் தன்னை கூர்ந்து பார்ப்பதைக் கண்டதும் பார்வையை விலக்கினாள்.

" இப்ப ஓக்கேயா மித்ரா..?"

" ம்.. ஓக்கே.." என்று தன் கண்களை அலையவிட்டாள்.

" எப்படி இருக்கிங்க மித்ரா.. பார்த்தே ரொம்ப நாளாச்சு.. மதன் தான் வந்து ஃப்ராஜக்ட் வேலையை பார்த்துக்கிறார்..." அவளை காண முடியாமல் தவித்த தவிப்பு அவன் பேச்சில் தெரிந்தது.

" வேற ஒரு ஃப்ராஜக்ட் வரவும் எங்க டீம் ஹெட் என்னைத்தூக்கி அதுல போட்டுட்டார்.. ஏன் மதன் ஒழுங்கா பண்ணலயா .? எனி ப்ராப்ளம்?"

' உன்னை பார்க்க முடியலங்கறது தான் ப்ராப்ளம் பெண்ணே..' என்று நினைத்தான்.

" ஹலோ.. நவிலன்.. என்னாச்சு?" அவன் முகத்துக்கு நேரே கையை ஆட்டினாள்.

" ஒன்னுமில்ல மித்ரா.. " என்று அவன் உதடுகள் சொன்னாலும் சொல்லாமல் தவிர்த்த ஒன்று இருந்தது.

' நீ அழகா இருக்க மித்ரா.. உன் மேல வைச்ச கண்ணை எடுக்கவே முடியல..'

என்ன பேசுவது என்று தெரியாமல் இருவரும் ஓரிரு நொடிகள் அமைதி காத்தனர். இவர்களுக்கு இதே வேலையாகிப் போனது என்று அன்று வானத்தில் தெரிந்த முழுமதி கூட அவர்களைத் திட்டித் தீர்த்தது.

" என்ன மித்ரா.. பார்ட்டி உங்களுக்கு பிடிக்கலையா?" என்று திடுமென கேட்டான்.

" உங்களுக்கு எப்படி தெரியும் அது?" அவன் ஏதோ சிதம்பர ரகசியத்தை கண்டுபிடித்துவிட்ட தினுசில் கேட்டாள்.

" இதுக்கு பெரிய டிடெக்டிவ் ஆகனும்னு அவசியம் இல்ல.. எல்லாரும் ஜாலியா அந்தப்பக்கம் என்ஜாய் பண்ணிக்கிட்டு இருக்காங்க. நீங்க மட்டும் தான் குடிக்க கொண்டு வந்த ஆரஞ்சு ஜூஸையும் கீழ கொட்டிட்டு உட்கார்ந்து இருக்கிங்க.. " அப்போது தான் அவள் கையிலிருந்த ஆரஞ்சு ஜூஸ் அங்கேயே கொட்டி கிடந்தது ஞாபகத்துக்கு வந்தது.

" குடிக்க ஏதாவது எடுத்துட்டு வரட்டுமா மித்ரா.?"

" இல்ல இட்ஸ் ஓகே.."

" பயப்படாதிங்க. அதே ஆர்ஞ்சு ஜூஸ் எடுத்துட்டு வாரேன். இந்த சினிமா படத்துல வாற மாதிரி அதுல ஏதாவது கலந்து எடுத்துட்டு வந்து உங்களை மயக்கம் போட வச்சி உங்க கிட்னி எல்லாம் திருட மாட்டேன்.." அவன் இயல்பாய் பேசிக்கொண்டே போக அவள் வாய்விட்டே சிரித்தாள்.

" நீங்க இப்படிலாம் பேசுவிங்களா நவிலன்..?"

" ஏன்.. பேசக்கூடாதா? நானென்ன சாமியாரா? இருங்க வாரேன்.." என்றவன் எழுந்து சென்று இருவருக்கும் ஆரஞ்சு ஜூஸ் எடுத்து வந்தான்.

இரண்டு மிடறு உறிஞ்சியவள் கேட்டாள்.

" நீங்க சரக்கு அடிக்க மாட்டிங்களா நவிலன்? " அவள் கேட்டதும் அவனுக்கு புரைக்கு ஏறியது.

அவள் அவன் தலையை தட்டுவாள் என்று எதிர்ப்பார்த்தால் இந்த இடத்தில் நீங்கள் ஏமாற வேண்டும். அவனே தன் தலையை தட்டிக்கொண்டான்.

" என்னங்க இப்படி பொசுக்குனு கேட்டுட்டிங்க.." என்று நினைத்ததை சொன்னான்.

அதற்கும் அவள் சிரித்தாள்.

அவனுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. நவிலன் எப்போதாவது ஏதாவது பார்ட்டி , பிசினஸ் டின்னர் என்றால் லைட்டாய் ஏதாவது போதையேற்றுவான். அதுவும் அவனுடைய லிமிட் எது என்று அவனுக்குத் தெரியும். அந்த அளவு மட்டுமே எடுப்பான்.
ஆரம்ப சந்திப்புகளிலேயே இதெல்லாம் சொல்ல வேண்டுமா என்று ஒருகணம் யோசித்தாலும் இவளிடம் எல்லாம் சொல்ல வேண்டும் என்ற நினைப்பில் உண்மையை சொன்னான்.

" ம்.. எப்பயாவதுனா ஓக்கே.. இன்னைக்கு எதுவும் கிடையாதா?"

" என்ன மித்ரா .. நான் உங்க கூட உட்கார்ந்து இருக்கது பிடிக்கலனா சொல்லுங்க.. நான் போறேன்.." என்று அவன் எழும்ப அவசராமாக அவன் கையைப் பிடித்து உட்கார வைத்தாள் மித்ரா. அவனோ அந்த நொடி பூமியிலேயே இல்லை. ஏதோ கிரகத்தில் இருந்தான். அவன் கையைப் பிடித்ததை உணர்ந்து அவசரமாய் தன் கையை எடுத்துக்கொண்டாள் சங்கமித்ரா.

' ஏய் மித்ரா.. என்ன இது.. அதிகபிரசங்கித்தனமா..? ' என்று தன்னை திட்டினாள். வழக்கம் போல.

" இல்ல.. எல்லாரும் பார்ட்டியை என்ஜாய் பண்றாங்க. நீங்க எனக்காக உட்கார்ந்து இருக்கிங்களோனு கேட்டேன்.." என்று சொல்லி சமாளித்தாள்.

" இங்க எனக்குனு ஃபரெண்ட்ஸ் யாரும் இல்ல.. சந்தியா தான் வந்தே ஆகனும்னு அடம் பிடிச்சா.. அதான் வந்தேன்.. மற்றபடி யாரும் தெரிஞ்சவங்க இல்ல.. உங்களைத் தவிர..." என்ற போது அவனது செல்போன் அலறியது.

" எக்ஸ்கியூஸ் மீ. பேசிட்டு வந்துடுறேன் மித்ரா.. " என்று எழுந்து அப்பால் நகர்ந்தான் அவன்.

வானில் தெரிந்த நட்சத்திரங்களை கண்களால் எண்ணிக்கொண்டு இருந்தாள் சங்கமித்ரா. அப்போது அந்த குரல் கேட்டது.

" ஹாய் ஃபூ...ட்..டிபு...ல்..." இழுவையோடு அவன் அமர்ந்தான். பார்க்கவே விநோதமாக இருந்தான். பிரவுன் கலராய் தலைமுடியை மாற்றியிருந்தான். அவன் தாடியில் ஒரு குருவி கூடே கட்டலாம். பணக்கார வாசனை அடித்தது.

" யூ லுக் லவ்லி.. என்னோட ஒரு ட்ரிங்க் ??" என்று அவன் கொண்டு வந்த பிரவுன் கலர் பானத்தை நீட்டினான்.
சங்கமித்ரா பதில் பேசாது திரும்பிக் கொண்டாள்.

" இட்ஸ் ஓகே.. தென்.. கம் டான்ஸ் வித் மீ.." என்று அவள் கையைப் பற்றி மறுகையால் அவள் இடையை தொட முயற்சித்தான். அடுத்த நொடி அங்கு பலமான அடி சத்தம் கேட்டது.

நல்லவேளையாக அது கொஞ்சம் ஒதுக்குப்புறமான இடமாக இருந்ததனாலும் அலற அலற டீஜே பாடலை ஒலிக்கவிட்டிருந்ததாலும் அதை யாரும் கவனித்திருக்கவில்லை. ஆனால் அந்த சத்தம் கேட்டு தூரத்தே தெரிந்த கட்டிடங்களைப் பார்த்து போன் பேசிக்கொண்டு இருந்த நவிலன் திரும்பிப் பார்த்தான். அதிர்ந்தான். உடனே அருகில் வந்தான்.

" என்னாச்சு மித்ரா..?" என்றவாறு அவளை நோக்கி முன்னேறி வந்த அந்த முரடனுக்கு முன் நின்று மித்ராவை காப்பாற்றினான் நவிலன்.

" கையை பிடிச்சான்.. அதான் அடிச்சேன் .." என்ற மித்ராவின் குரலில் உஷ்ணம் தெறித்தது.

" உன்னை..." என்று அவனை நோக்கி பாயப்போனான் நவிலன்.

" விடுங்க நவிலன். அவன் நல்லா குடிச்சிருக்கான். எல்லாரும் இருக்காங்க .. பிரச்சனை வேணாம்.. " என்று அவன் கைபிடித்து இழுத்துக்கொண்டு போனாள். மித்ராவினுடைய அறையில் கொஞ்சம் நிலை தடுமாறிய அவன் அவசரமாய் அங்கிருந்து நகர்ந்தான்.

அவனை முறைத்துக் கொண்டே சென்றான் நவிலன். விட்டிருந்தால் அந்த பிரவுன் தலை ஆசாமியின் விலா எலும்பை உடைத்திருப்பான் போல.

" ஆர் யூ ஓக்கே மித்ரா..? அவன் எதுவும் .."

" ஐ ஆம் ஓக்கே நவிலன்.. அதான் பளார்னு கன்னத்துல ஒன்று வச்சேனே.." என்றாள்.
நவிலன் அந்த அறை சத்தத்தை நினைத்துப் பார்த்தான்.

' யப்பா சாமி.. என்னா ஒரு அடி.. அடி வாங்கியவனுக்கு நிச்சயம் இன்று ஒத்தடம் கொடுக்க வேண்டி வரும்.. என்னா அடி அடிக்கிறா.. இவகிட்ட கவனமாகத் தான் இருக்கனும்..' என்று யோசித்தான்.


" எல்லாரும் ஒரே மாதிரி தான் இருக்காங்க நவிலன். ஒரு பொண்ணு சிரிச்சு பேசுனா போதும்.. உடனே லவ்வை சொல்லிக்கிட்டு வந்துடுறது. ஒரு பொண்ணு தனியா இருந்தா போதும்.. துணைக்கு வரட்டுமானு கேட்க வேண்டியது.. கொஞ்சம் இடம் கொடுத்தா போதும்.. உடனே மடியில கை வைக்க வேண்டியது.. இந்த ஆம்பிள்ளைங்களே இப்படித்தான்.. யாரும் உருப்படி இல்ல.."

'ஒட்டுமொத்த ஆண் வர்க்கம் மீது இவளுக்கு என்ன கோவம்..?' என்று யோசிக்கலானான் நவிலன். அவனுடைய அமைதியைக் கண்டு உடனே சொன்னாள்.

" எல்லாரையும் சொல்லல... " குரல் மெல்லிசாய் வந்தது.

' ஏதோ என்னைய அடிச்சிடாதம்மா.. ஒருநாள் நானும் உன்கிட்ட காதல் சொல்வேன்..' என்று மனசுக்குள்ளேயே நினைத்தான் நவிலன்.

" ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் தேடுவாங்க.. நான் போறேன் நவிலன்.. "

" ஆ.. ஓக்கே.. நீங்க போங்க.." என்று அவளுக்கு வழிவிட்டான் அவன்.

அவனிடமிருந்து விடுபட்டு தன் தோழிகளிடம் சென்ற சங்கமித்ராவை அவளது தோழிகள் கலாய்த்தார்கள்.

" ஏய்.. யாருடீ அது..?"

" திடீர்னு எங்க போயிட்ட..?"

" அடியேய்.. அது உன் பாய் ஃப்ரெண்டா..?"

" ஆரம்பிச்சிட்டிங்களா? அவர் சந்தியாவோட ரிலேட்டிவ்.. எங்களுக்குள்ள வர்க் ரிலேஷன்ஷிப் உண்டு... அவர் எனக்கு தெரிஞ்சவர்.. ஒரு ஃப்ரெண்ட். அவ்வளவு தான் " என்று அந்த பேச்சை கத்திரித்தாலும் அவளுக்கே தெரிந்தது. அவன் சாதாரணமானவன் இல்லை சதா ரணத்தை கொடுக்கப்போகிறவன் என்று. அப்படியே திரும்பி கூட்டத்தில் அவனைத் தேடினான்.
அங்கு யாரோடும் அதிக பழக்கம் இல்லை என்று சொன்னவன் தனியே அமர்ந்து செல்போனை நோண்டிக்கொண்டு இருந்தான். அப்போது அவனையே பார்த்துக்கொண்டிருந்த சங்கமித்ராவை அவனும் திடீரென திரும்பிப் பார்த்தான். சங்கமித்ரா நொடிப்பொழுதில் தன் பார்வையை வேறு புறம் திருப்பினாள். அதை கண்டுகொண்ட அவன் லேசாக சிரித்துக் கொண்டான்.
பார்ட்டி கலகலப்பாக நடந்து கொண்டிருந்தது.

அநேகமானோர் சரக்கோடு ஐக்கியமாகி இருந்தார்கள். சில பெண்களும் அவர்களில் உள்ளடக்கம். சங்கமித்ரா பொதுவாகவே இவ்வாறான சூழ்நிலைகளோடு பொருந்திப்போகாத ஐட்டம். சந்தியா கோபித்துக் கொள்வாளே என்று தான் வந்தாள். இப்போது அவளுக்கு வீட்டுக்குச் செல்ல வேண்டும் போல இருந்தது. தோழிகளிடம் விடைப்பெற்றுக்கொண்டு சந்தியாவை தேடி அவளிடமும் விடைப்பெற்றுக்கொண்டு லிஃப்ட்டை நோக்கி நடந்தாள்.

பதினாறாவது தளத்திலிருந்து கிரவுண்ட் ஃப்ளோர்க்கு செல்லக்கூடிய பொத்தானுக்கு அழுத்தம் கொடுத்துவிட்டு நிமிர்ந்த போது அவனும் உள்ளே நுழைந்தான். சங்கமித்ராவுக்கு ஒருகணம் திக் என்றாகிறது. அவன். அவள் அறைந்த அந்த தாடிக்காரன். அவன் கண்களில் ஒரு வெறி தெரிந்தது.

சங்கமித்ராவுக்குள் அப்போதுதான் ஒரு வித பயம் வந்தது. லிஃப்ட்டினுள் அவர்கள் இருவர் மட்டுமே. அப்போது லிஃப்ட்டின் கதவுகளும் மூடப் போக அடுத்து என்னவாகுமோ? வெளியே போய் விடலாமா? என்று மித்ரா பயப்பட, மூடச் சென்ற லிஃப்ட்டை ஒருகரம் தடுத்து உள்ளே நுழைந்தது.
சங்கமித்ராவின் முகத்தில் ஒரு நிம்மதி பிறந்தது. பயமின்றி ஒரு மூச்சு விட்டாள். ஆம். உங்கள் ஊகம் சரிதான்.


ஆட்டம் தொடரும் ❤️?

 
Nice epi dear.
Yedi, moon ae kazhuvi oothittu pora alavu paduthureengaleda.
Avana nee irrukura nu than liquor edukaathu nalla pillaya maintain pannuraan nee vera atha kurichu kettu tempt pannura ithu gnayama???
Yedo brown mandaya Sangi already booked nee vera aalu paru.
Hero sir vanthachu sangi, nee onnum panic avurathu, avar kaapaathu vaar.
 
Nice epi dear.
Yedi, moon ae kazhuvi oothittu pora alavu paduthureengaleda.
Avana nee irrukura nu than liquor edukaathu nalla pillaya maintain pannuraan nee vera atha kurichu kettu tempt pannura ithu gnayama???
Yedo brown mandaya Sangi already booked nee vera aalu paru.
Hero sir vanthachu sangi, nee onnum panic avurathu, avar kaapaathu vaar.
Thank you Leenu?
 
Top