Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கண் விழிதேன் உன் நினைவில் ep 24

Advertisement

Sesily Viyagappan

Well-known member
Member
கண் விழித்தேன் உன் நினைவில்
--செசிலி வியாகப்பன்

அத்தியாயம் 24

விஷ்வா கனலி இருவரின் முதல் திட்டமாக வீட்டு பெரியவர்கள் அனைவரையும் அழைத்து தங்கள் முடிவு பற்றி தெளிவாக பேசி முடித்தனர். கனலி பைரவி தாயின் முன்பு வந்து

"உங்க மனசுக்குள்ள இருக்கிற பயம் எனக்கு நல்லா புரியுது. நிச்சயமா நீங்க பயப்படற மாதிரி எதுவும் நடக்காது. எனக்கு விஸ்வா மேல எவ்வளவு காதல் இருக்கோ அதை விட அதிகமாகவே பிள்ளைகள் மேல பாசம் இருக்கு.

அதுக்காக எல்லா நேரமும் அவங்கள கொஞ்சிகிட்டு இருப்பேன்னு என்னால சொல்ல முடியாது. எந்த இடத்துல கண்டிப்பு இருக்கவேண்டுமாே அந்த இடத்தில அம்மாவா என்னுடைய கண்டிப்பு இருக்கும்."

இருவரும் மாறி மாறி தங்கள் தரப்பு நியாயத்தை புரியவைக்க மூத்த தலைமுறையினர் அனைவரும் மனம் உருகி போயினர்.

தவறேதும் செய்யமல் பல வருடம் பிரிந்திருந்து கஷ்டப்பட்டவர்களை தாங்கள் மேலும் கஷ்டப்படுத்த கூடாது என்ற எண்ணம் வலுபெற்றது. ரஞ்சித்

"என்ன இருந்தாலும் பிள்ளைகளுக்குள் இருக்கிற பிரச்சினையை பற்றி நாம கொஞ்சம் யோசிக்கணும்." என்று குடும்பத்தின் மூத்த உறுப்பினராக ரஞ்சித் பேச

"நீங்க என்ன சொல்ல வரீங்கன்னு எங்களுக்கு நல்லா புரியுது பா. பிள்ளைகளுக்கு இருக்கிற பயம் நாங்க ரெண்டு பேரும் எங்க அவங்க கிட்ட பாசமா இருக்க மாட்டோமாே என்கிறது மட்டும்தான். அது இல்லன்னு நிரூபித்தால் போதும் ஆட்டோமேட்டிக்கா அஞ்சு பேரும் ராசி ஆயிடுவாங்க."

"நீங்க நினைக்கிற மாதிரி இது ஒன்னும் ரொம்ப சுலபமான விஷயம் கிடையாது மாப்பிள்ளை." என்று திலகவதி பிள்ளைகளுக்கு இடையிலேயே ஒற்றுமை இல்லை என்பதை மனதில் வைத்துக் கொண்டு பேச விஷ்வா

"அதற்காகத்தான் நான் உங்க எல்லாருடைய உதவியையும் கேட்டு நிக்கிறாேம்."

நீங்கள் இருவரும் எது கூறினாலும் நாங்கள் செய்ய தயாராகவே இருக்கின்றோம் என்ற முடிவில் மூத்த தலைமுறையினர் இருக்க,

"ஒண்ணுமில்லை எங்களப் பத்தி நல்ல விதமா பிள்ளைகள் காதில் படுமாறு பேசினா மட்டும் போதும். மிச்சத்த நாங்க ரெண்டு பேரும் பாத்துக்குறோம்." என்று தன் திட்டத்தை விஷ்வா மற்றவர்களிடமும் விளக்க, கனலி புன்னகை முகமாக அனைத்தையும் கேட்டுக் கொண்டே இருந்தாள். அவள் புறம் திரும்பி

"என்ன ஒரே சிரிப்பா இருக்க போல....!" என்று விஸ்வா கேட்டு வைக்க இதுக்கெல்லாம் அசைகின்ற ஆளா நான் என்பதுபோல் விஷ்வாவை பார்த்துவிட்டு

"இல்ல நம்ம ரெண்டு பேரும் காதலிக்கும் போது கூட நீ இவ்வளவு திட்டம் தீட்டி தீவிரமாக வேலை பார்த்த மாதிரி எனக்கு தோணல.

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்று சும்மாவா சொன்னாங்க, பெற்றவர்களுக்கு தெரியாமல் காதலித்ததால் இப்படி கல்யாணத்துக்கு அப்புறம் நம்ம பிள்ளைகளுக்கு தெரியாமல் ராணுவ ரகசியம் அளவுக்கு திட்டம் தீட்ட வேண்டியத இருக்கு." என்று கூறிவிட்டு கனலி சிரிக்க கேட்டுக்கொண்டிருந்த அனைவரின் முகத்திலும் புன்னகை விரிந்தது.

கனலி நம் பிள்ளைகள் என்று கூறிய வார்த்தையே பைரவி பெற்றவர்களுக்கும், அபி பாட்டிக்கும் போதுமானதாக இருந்தது.

இவர்களின் திட்டத்தின் முதல் படியாக பிள்ளைகள் வீட்டில் இருக்கும் நேரங்களில் விஷ்வா பற்றி ரூபா தீபா இந்திரா காதுகளில் படும்படியாக விஷ்வா பெருமைகளை திலகவதி பேச ஆரம்பித்தார்.

அங்கு இருந்திருந்தால் பிள்ளைகளை எவ்வளவு சிறப்பாக விஸ்வா கவனித்துக் கொண்டு இருப்பான் என்பது போல் பேசி பேசி பிள்ளைகள் மனதில் இனி விஸ்வஜித் மட்டுமே அவர்களின் தந்தை என்ற எண்ணத்தை விதைக்க ஆரம்பித்தார்.

கிருபா அபி இருவரிடம் பூரணி பேச அவ்வப்போது வந்து செல்லும் பைரவியின் தாயாரும், மாலினியும் கனலி பற்றி உயர்வாக கூற இருவரும் கனலி பற்றி நல்ல விதமாக நினைக்க ஆரம்பித்தனர்.

கனலி ஒரு நல்ல தாயாக இருந்து உங்களுக்கு எதையெல்லாம் செய்திருப்பாள் என்று மாறி மாறி கூற தங்களுக்கு ஒரு அம்மா இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைக்க ஆரம்பித்தனர்.

அன்று மாத பரீட்சை முடிந்து முடிவு அறிக்கையை பெற்றுச் செல்ல பெற்றவர்கள் பள்ளிக்கு வரும் நாள்.

மாதம் ஒருமுறை பெற்றவர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வந்து தேர்வு முடிவுகளுடன் பிள்ளைகளை பற்றி வகுப்பு ஆசிரியர்களிடம் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே அந்த ஒருநாள் செலவிடப்படும்.

என்ன வேலையாக இருந்தாலும் விஸ்வா அன்றைய தினத்தில் நிச்சயம் பள்ளிக்கு வராமல் இருப்பது இல்லை.

இன்றும் தந்தை வந்து விடுவார் என்று அபி கிருபா இருவரும் காத்திருக்க அவர்களின் எண்ணத்தை பொய்யாகாமல் விஷ்வா வந்து சேர்ந்தான்.

கூடவே கனலியும் பிள்ளைகள் இருவரிடமும் வந்து நின்றுகொண்டாலும் அவர்கள் எப்படி நடந்து கொள்வார்களோ என்று உள்ளுக்குள் உதறல் எடுத்தது.

இருவரும் கவனமாக முகத்தில் எதையும் காட்டிக்கொள்ளாமல் இயல்பாகவே இருப்பது போல நின்று கொண்டனர்.பிள்ளைகள் இருவரும் கனலியை கேள்வியாக பார்த்தார்களே தவிர வேறு எதுவும் கூறவில்லை.

இருவரின் வகுப்பு ஆசிரியர்களையும் சந்திக்க நால்வரும் ஒன்றாகவே சென்றனர்.

வகுப்பு ஆசிரியர் பிள்ளைகளை பற்றி நிறை குறை ஒவ்வொன்றாக கூற அனைத்திற்கும் கனலி பதில் கூற, விஷ்வா ஒரு பார்வையாளனாக மட்டுமே அமர்ந்திருந்தான். கிருபா வகுப்பு ஆசிரியர்

"மேடம் உங்க பொண்ணு படிப்ப பத்தி எந்த குறையும் இல்லை. அட் தி சேம் டைம் பேசும்பொழுது பேச்சில் கொஞ்சம் கூட மரியாதை இருக்கிறது இல்ல." என்று கிருபா பற்றி குறைகளை அடுக்கிக் கொண்டே செல்ல கிருபாவிற்கு கண்கள் கரித்துக்கொண்டு வந்தது.

விஷ்வா முன்பு மற்றவர்கள் தன்னை குறை கூறுவது பிடிக்காமல் கண்ணீர் நிறைந்த விழிகளை தாழ்த்திக்கொண்டு நின்றிருந்தாள். கிருபாவை தாேளாேடு அணைத்து பிடித்த கனலி

"சாரி மேடம் அதற்கு நான் தான் காரணம். கிருபா என்னை மாதிரி, அவளுடைய எல்லா நடவடிக்கையும் கிட்டத்தட்ட என்னை மாதிரியே தான் இருக்கும்.

நாங்களும் அவள் ஒரு டாமினேட்டட் பர்சனாலிட்டியா இருக்கனும்னு எதுவும் சொன்னது கிடையாது. இனி கேர் எடுத்து பாத்துக்குறேன்."

கிருபா பற்றி நல்லவிதமாக கனலி பேசி, அவள் செய்யும் தவறு அனைத்திற்கும் தானே காரணம் என்பது போல் கூறி முடிக்க கிருபா மனதில் கொஞ்சமே கொஞ்சம் கனலிக்கு இடம் கொடுக்க தயாராக இருந்தாள்.

வகுப்பு ஆசிரியர்களிடம் பேசி முடித்து வெளியே வர அபி, கிருபா நண்பர்கள் சிலர் சூழ்ந்துகொண்டனர். தன் கைப்பையில் வைத்திருந்த சாக்லேட் எடுத்து அபி கிருபா கையில் கொடுத்து அனைவருக்கும் கொடுக்கச் சொல்ல சுற்றியிருந்த அனைத்து பிள்ளைகளுக்கும் அந்த நொடி கனலி பிடித்துவிட்டது. அதில் ஒரு சிறுவன் கனலியை முதல் முறை பார்ப்பதால்

"இவங்க யாரு அபி?" என்று கேட்க அவன் பதில் கூறுவதற்கு முன் கனலி

"நான் கிருபா அபி அம்மா.
என்னுடைய பேரு கனலி." என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள். அப்பொழுது அருகில் நின்ற கிருபா வகுப்புத் தோழி ஒருத்தி

"கிருபா உன்னுடைய அம்மா உன்ன மாதிரியே ரொம்ப அழகா இருக்காங்க." என்று கூற, அபி நண்பன் கனலி தந்த சாக்லேட் ஆசையில் அபியின் காதுகளில்

"உங்கம்மா தினமும் வருவாங்களா?" என்று கேட்க, பிள்ளைகள் இருவருக்கும் மேலும் கனலியை பிடிக்க ஆரம்பித்தது.

குழந்தைகள் அனைவருக்கும் இந்த உலகத்திலேயே மிக அழகான பெண் யார் என்று கேட்டால் முதலில் கை காட்டுவது தன் தாயாக தான் இருக்கும்.
இருக்க வேண்டும்.

அப்படி தான் அழகாக நினைக்கும் தாயே பிறரும் அழகு என்று கூறும்பொழுது அதுவும் தன்னை போலவே அழகு என்று கூறும்பொழுது அந்த மகிழ்ச்சிக்கு ஈடு இணை எதுவும் இருப்பதில்லை.

அதுபோலவே பிரியா கனலியை காட்டி உன்னைப் போலவே உன் அம்மா அழகு என்று கூறும்பொழுது கிருபாவிற்கு மகிழ்ச்சியாகவே இருந்தது.

அபியின் தோழன் ராகுல் 'உன் அம்மா தினமும் வருவார்களா?' என்று கேட்கும் பொழுது அபியின் மனதில் ஒரு சிறு ஏக்கம் தோன்றி மறைந்தது.

ஏனெனில் தன் வகுப்பு தோழர்கள் பலர் தினமும் தன் தாயுடன் பள்ளிக்கு வரும் பொழுது தன்னையும் தன் அம்மா வந்து பள்ளிக்கு விட்டுச் சென்றால் நன்றாக இருக்கும் என்று அபராஜித் நினைத்ததுண்டு.

இப்பொழுது தன் நண்பன் கேட்கும் பொழுது என்ன சொல்வது என்று தெரியாமல் நிற்க கனலி

"கண்டிப்பா தினமும் வருவேன்." என்று கூற அபி உலகத்தையே வென்றது போல மகிழ்ச்சியில் திளைத்தான்.

இருவரின் முகம் மாற்றத்தையும் துல்லியமாக கணக்கிட்டுக் கொண்ட கனலி விஷ்வாவிடம் கட்டைவிரல் உயர்த்தி காட்ட அவனும் பார்வையால் 'சபாஷ்' கூறிக் கொண்டான்.

மாலையில் பள்ளி முடிந்து பிள்ளைகள் அனைவரும் வீட்டை நோக்கி பறந்து செல்ல இந்திரஜித் பொறுமையுடன் காத்திருந்து தன் தங்கைகள் இருவரையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டான்.

பள்ளிக்கும் வீட்டுக்கும் இடையே 15 நிமிட நடைபயணம் தான்.எப்பொழுதாவது திலகவதி அழைக்க வர முடியாத சமயத்தில் இந்திரஜித் தங்கை இருவரையும் அழைத்துக் கொண்டு நடந்தே வீட்டிற்கு வந்து விடுவான்.

மிகவும் பொறுப்பான பையனாகவே இம்மாதிரியான விஷயங்களில் செயல்படுவான்.

நடந்து செல்லும் பொழுது தங்கைகள் இருவரும் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் பதில் கூறிக்கொண்டு நடந்து வருவது அவனுக்கு மிகவும் பிடித்தமான செயலே.

அன்றும் தங்களை அழைத்துச் செல்ல பாட்டி வராததால் தங்கைகளுடன் வெளியில் நடந்து வர, சாலையின் ஓரத்தில் தாயுடன் நின்றுகொண்டிருந்த ஒரு நாய் குட்டி ஒன்று சின்ன சிட்டு இருவரின் கவனத்தையும் கவர்ந்தது.

தன் அண்ணனிடம் இப்பொழுதே அந்த நாய்க்குட்டி வேண்டும் என்று அடம்பிடிக்க, இருபுறமும் வாகனங்களை கவனித்த இந்திரஜித் மறுக்க இருவரும் அவனுக்கு செவிசாய்க்க தயாராக இல்லை.

வேறு வழி இல்லாமல் தங்கைளுடன் சாலையை கடந்து அந்த நாயின் அருகில் செல்ல தன் குட்டியை தொட வந்தவனை நோக்கி தாய் நாய் குரைக்க ஆரம்பித்தது.

பயத்தில் இரட்டையர்கள் இருவரும் தன் அண்ணன் கையை பிடித்துக் கொள்ள நாய் குட்டி கிடைக்காததால் சோகமாகவே வீடு வந்து சேர்ந்தனர்.

அவர்கள் முகத்தில் இருக்கும் சோர்வை கண்டு கனலி எத்தனை விதமாக கேட்டும் அவர்களிடம் பதில் இல்லை.

அடுத்த நாள். பள்ளியின் வாசலை கடந்து வரும்போது இரட்டையர் இருவரின் கண்களும் நாய்க்குட்டி இருந்த இடத்தை பார்க்க இந்திரா பொறுமையுடன்

"பாப்பா இப்படி சோகமா மூஞ்ச வச்சிருந்தா அண்ணனுக்கு ரொம்ப கவலையா இருக்கும்.
இப்போ சிரித்துக்கொண்டே வந்தா அம்மா கிட்ட சொல்லி உங்களுக்கு குட்டி பப்பி வாங்கித்தர சொல்லுவேன்." என தங்கைகள் இருவரையும் சமாதானப்படுத்த நினைக்க அவர்களும்

"அண்ணா அம்மாவுக்கு பப்பிஸ் பிடிக்கவே பிடிக்காது. என்னுடைய கிளாஸ்ல அனிதா வீட்டில் பப்பி இருக்குன்னு எப்படி என்கிட்ட சாெல்லி வெறுப்பேத்துவான்னு தெரியுமா. எனக்கும் பப்பி வேணும்." என்று கிட்டத்தட்ட அழும் குரலில் ரூபா கூற, அதே போன்று முகபாவனையுடன் தீபா நின்று கொண்டு இருந்தாள்.

எப்படி இருவரையும் சமாதானம் செய்வது என்பது போல இந்திரஜித் விழித்துக்கொண்டு நிற்க, அவர்கள் அருகில் யாரோ வந்து நிற்கும் ஆரவாரத்தில் மூவரும் திரும்பி பார்த்தனர்.

புன்னகை முகமாக நின்றுகொண்டிருந்த விஷ்வாவை பார்த்து பேசத் தோன்றாமல் மூவரும் அமைதியாக நிற்க, அவர்கள் முன் மண்டியிட்டு நின்ற விஸ்வா தன் டிரைவரை அழைக்க, அவர் கொண்டு வந்த பெட்டியை தீபா ரூபா இருவரின் முன் நீட்டினான்.

அந்த அழகிய சிறு பெட்டியினுள் இருந்து தலையை மட்டும் நீட்டி வெளியே பார்த்த குட்டி பப்பியின் அழகில் பிள்ளைகள் மூவரும் சொக்கி தான் போயினர் என்றே கூறவேண்டும்.

ஒரு நாய்க்குட்டி தூய வெள்ளை நிறத்தில் கருகருவென்று இருந்த கண்மணிகளை உருட்டி பார்க்க, உள்ளே மற்றொன்று பிஸ்கட் நிறத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தது.

இருவரும் கண்களில் ஆர்வம் மின்ன நாய் குட்டியையும் விஸ்வாவையும் மாறி மாறி பார்க்க இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டு இருந்த இந்திரா

"அம்மாவுக்கு நாய் குட்டி பிடிக்காது." என்று மெதுவாக கூற, இரட்டையர்கள் இருவரின் முகத்திலும் ஏமாற்றம் பரவியது.

எவ்வளவுதான் இரட்டையர் இருவரும் சேட்டைகள் செய்தாலும் மற்றவர்களின் முன்பு அண்ணன் சொல்லை மீறி நடப்பதில்லை.

ஒருபுறம் நாய்க்குட்டி அவர்களின் ஆசையை அதிகரித்தாலும் மறுபுறம் அண்ணன் பேச்சை மீறி அதை வாங்கிக் கொள்வதற்கு விருப்பமில்லை.

பிள்ளைகள் மன உணர்வை கனலி மூலம் புரிந்து வைத்திருந்த விஷ்வா

"அப்பா கொடுத்தாங்கன்னு சொல்லுங்க, அம்மா ஒன்னும் சொல்ல மாட்டா."

"இல்ல வேண்டாம்..." என்று இந்திரா மறுத்துக் கூற

"நான் காெடுத்து நீங்க இத என்கிட்ட இருந்து வாங்கினால் உங்க அம்மா ரொம்ப ஹேப்பியா தன் இருப்பாள்." என்ற கூற

'அப்படித்தானாே...!' ஒரே காரணம் இந்திரஜித் சம்மதம் கூற போதுமானதாக இருந்தது.

தன் அண்ணன் சம்மதம் கூறிய அடுத்த நொடி நாய்க்குட்டியை வாங்கி கொண்ட இரட்டையர்கள் இருவரும் செல்லம் கொஞ்ச ஆரம்பித்தனர்.

அப்பொழுது தந்தையுடன் வந்த அனிதாவிடம் இரட்டையர்கள் நாய்க்குட்டியை காட்டி பெருமையாக பேசிக் கொள்ள புன்னகை முகமாக இவற்றையெல்லாம் விஷ்வா இந்திரஜித் பார்த்துக்கொண்டு நின்றிருந்தனர்.

"ரொம்ப அழகா இருக்கு....
யாரு வாங்கி தந்தா...!" என்று அனிதா கேட்க ஒரு நிமிடம் என்ன கூறுவது என்று தெரியாமல் பிள்ளைகள் இருவரும் விழிக்க அவர்கள் அருகில் வந்த விஷ்வா

"ஹாய் க்யூட் ஏஞ்சல் நீங்கதான் அனிதா வா..
நான் விஷ்வா. இவங்க அப்பா." என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள, டிரைவர்

"சார் சீக்கிரம் கிளம்பணும் உங்களுக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு." என்று ஞாபகப்படுத்த மூவரையும் காரில் வீட்டிற்கு அழைத்து சென்று விட்டுவிட்டே சென்றான்.

காரில் ஏறும் சமயம் மூவரின் வகுப்பு மாணவர்கள் பலர் அந்த ஆடி காரை தொட்டு பார்த்துவிட்டே சென்றனர்.
அதிலும் அன்வர்

"உங்க அப்பா கிட்ட கார் எல்லாம் இருக்கா..! அப்புறம் ஏன் நீங்க ஸ்கூல்க்கு நடந்து வரனும்." என்ற கேட்க இரட்டையர்கள் ஏக்கமாக விஸ்வாவை பார்க்க

"இனி தினமும் கார்ல தான் ஸ்கூல்க்கு ஓகே."

பள்ளி காலத்தில் மறக்க முடியாத நிகழ்வு என்று நாம் வரிசை படுத்தினால் அதில் ஒன்று நண்பர்களிடம் இல்லாத ஒன்று தன்னிடம் இருக்கும் பாேது காட்டி மகிழ்வது.

அப்படிபட்ட வாய்ப்பு கிடைத்தால் யாருக்குதான் விட மனம் வரும்.
மூவருக்கும் விட மனமில்லை...
விஸ்வா உறவை ஏற்க இருந்த தயக்கம் தகர ஆரம்பித்தது.

அடுத்த நாளில் இருந்து காலை மாலை கனலி கிருபா, அபியுடனும்....
விஸ்வா இந்திரா, ரூபா, தீபாவுடனும்... நேரம் செலவிட இருவருடன் பிள்ளைகள் உறவு ஏறுமுகமே.

பிள்ளைகளுக்கிடையேயான உறவு..?

இனி நினைவு நிஜமாக்க.....

ஹாய் ஃரெண்ட்ஸ் இந்த எப்பி படிச்சுட்டு மறக்காம கமெ ண்ட் பண்ணுங்க.
இன்னும் ஒரு எப்பி.... pre-final ep.... Final Ep and முடிஞ்ச ஒரு epilogue மட்டும் தான் இருக்கு.
 
ஹா ஹா ஹா
சாய்ச்சுப்புட்டாங்கய்யா சாய்ச்சுப்புட்டாங்க
கனலியும் விஷ்வாவும் ஐந்து பிள்ளைகளையும் அன்பாலே சாய்ச்சுப்புட்டாங்கய்யா
 
Last edited:
ஹா ஹா ஹா
சாய்ச்சுப்புட்டாங்கய்யா சாய்ச்சுப்புட்டாங்க
கனலியும் விஷ்வாவும் ஐந்து பிள்ளைகளையும் அன்பாலே சாய்ச்சுப்புட்டாங்கய்யா
Anbe sivam??
 
Top