Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கண் விழித்தேன் உன் நினைவில் சிறப்பு பதிவு 2

Advertisement

Sesily Viyagappan

Well-known member
Member
"இப்பாே கூட நான் உன் பின்னாடி சுத்திகிட்டு வரேன் மா... இதுல உனக்கு இப்போ என்ன சந்தேகம் வந்துருச்சு."

"சந்தேகம் எல்லாம் இல்ல கன்ஃபாமே பண்ணிட்டேன். உங்களுக்கு என் மேல இருந்த இன்ட்ரஸ்ட் குறைஞ்சிடுச்சு. இன்ட்ரஸ்ட் மட்டும்தான் குறைஞ்சிட்டா.... இல்ல நீங்க சொன்னீங்களே என்னை லவ் பண்றதா.. அந்த லவ் குறைந்துவிட்டதா! குறையிருந்தாலும் குறைந்திருக்கும்..
இப்போ சாருக்கும் எனக்கும் கல்யாணம் ஆகி பத்து வருசம் ஆகிட்டு. அதுவும் ரெண்டு குழந்தைங்க வந்தாச்சு. அவங்களுக்கும் எட்டு வயசு ஆகுது. இப்போ ஒருவேளை உங்க கண்ணுக்கு என்ன பாத்தா எப்படி தெரியும்." என்று தன் போக்கில் பேசிக் கொண்டே செல்ல கோபத்தில் சிவந்த சுஜித் கண்களை பார்த்து ரூபா வார்த்தைகள் அப்படியே நின்றுவிட்டது
"பேசு ஏன் நிறுத்திட்ட.... இன்னும் என்ன எல்லாம் தோணுதோ எல்லாத்தையும் பேசி முடி. என்னமோ நான் உன்ன விட்டுட்டு இன்னொரு குடும்பத்தை செட் பண்ணி வச்சிருக்க ரேஞ்சுல பேசிக்கிட்டு இருக்கிற." என்று கோபத்தில் அருகிலிருந்த பூஞ்ஜாடியை தள்ளிவிட அது கட்டிலின் அருகில் விரிக்கப்பட்டிருந்த காஷ்மீர் கம்பளத்தில் மீது விழுந்து தன் உயிரை காத்துக் கொண்டது.

"ஐயோ ஏன் பூச்சாடி... என்னுடைய பிரண்டு எனக்கு கிஃப்டா கொடுத்ததை ஒடைக்க பாத்துட்டீங்க." என்று தன் கணவனை முறைத்து பார்த்துவிட்டு, பீங்கான் ஜாடி உடைந்து விட்டதா என்று ஆராய

"இங்க புருஷன் கோபத்துல கத்திக்கிட்டு இருக்கிறேன். உனக்கு புருஷனை விட பூஞ்செடி தான் முக்கியம் போயிட்டா." என்று கோபமாக பேச அவளை கண்டுகொள்ளாமல் கையில் வைத்திருந்த பூ ஜாடியை மீண்டும் மேசையின் மீது வைத்துவிட்டு

"நீங்க கோவமா இருக்குற மாதிரி நடிச்சா நான் நம்பி விடுவேனா. தேவையில்லாமல் உங்களுக்கு வராத ஒரு விஷயத்தை செய்யாதீங்க. இந்த பத்து வருஷத்துல நீங்க எப்போ எப்படி எப்படி நடந்ததுக்குவீங்கன்னு எனக்கு நல்லா தெரியும். 19 வயசிலேயே உங்களுக்கு வாக்கப்பட்டு வந்து உங்களுடைய மண்டைக்குள்ள என்ன ஓடுதுன்னு புரிஞ்சிகிட்ட எனக்கு, இப்போ புரிஞ்சுக்கிறது ஒன்னும் கஷ்டம் இல்லை." என்று கூறிவிட்டு அறையின் விளக்குகளை அணைத்துவிட்டு கட்டிலின் அருகில் இருந்த இரவு விளக்கை மட்டும் ஒளிர விட்டுவிட்டு ரூபா கட்டிலின் ஒரு ஓரத்தில் படுத்துக்கொள்ள,

"ஓவர் ஆக்டிங் கொடுத்து இவகிட்ட பல்பு வாங்கிட்ட... தேவையா உனக்கு இந்த வேலை." என்று மீண்டும் தன் மனசாட்சி இடம் கேட்ட கேள்வியில்

"அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா." என்று ஒரு இழிப்புடன் அனைத்தையும் ஒதுக்கி வைத்துக்கொண்டு தன் மனைவியை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கினான்.

உள்ளே சென்றால் ஒரு கலவரம் நடக்கும் என்பது தெரிந்த பின்பு தைரியமாக தங்கள் அறைக்குள் நுழைய மகேந்திரஜித் சரியான வழி எதுவும் கிடைக்காமல் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டு இருந்தான்.

வெகு நேர யோசனைக்குப் பின்பு பின்பும் நல்ல திட்டம் எதுவும் கிடைக்காமல் வாசலைப் பார்த்த வண்ணம் நிற்க தங்கள் அறையில் இருந்து வெளியே வந்த மகேந்திரஜித் தாய் கலைவாணி

"மகேன் இந்த நேரத்துல இங்க நின்னுகிட்டு என்ன பண்ற." என்று கேட்க

"ஒன்னும் இல்லமா ஆபீஸ் விஷயமா யோசிச்சுக்கிட்டு இருந்தேன்." என்றும் தன் தாயை சமாளிக்க நினைக்க

"ஆபீஸ் விஷயமா யோசிச்சுகிட்டு இருக்கியா இல்ல... உன் ஆத்துக்காரிய எப்படி சமாளிக்கிறதுன்னு யோசிச்சுகிட்டு இருக்கிறாயா." என்று மகனின் தயக்கத்தில் சரியான காரணத்தை கண்டுபிடித்து கலைவாணி கூற

"அம்மா எப்படிமா இவ்வளவு சரியா சொல்ற." என்று தன் தாயின் புத்திக்கூர்மையை நினைத்து ஆச்சரியப்பட

"உன்ன பத்தி எனக்கு தெரியாதா டா மகனே... ஐஞ்சு வருசமா ஒரு பொண்ணு கிட்ட காதலை சொல்லி கரெக்ட் பண்ண தெரியாமல்.. அவங்க அப்பா உங்க அப்பாகிட்ட சொல்லி கல்யாணம் பண்ணி வச்சதால குடுப்பஸ்தன் ஆனவன் தான நீனு.

சரி காதலதான் ஓகே பண்ண தெரியல... இப்போ கல்யாணத்துக்கு அப்புறமும் பொண்டாட்டிகிட்ட எப்படி சமரசம் பேசறதுன்னு தெரியல.. உன்னை எல்லாம் வச்சுக்கிட்டு எப்படித்தான் அந்த புள்ள காலம் தள்ள போகுதோ... இதுல நீ எல்லாம் பெரிய ஆடிட்டர். வெளியே சொல்லாதே வெட்கக்கேடு." என்று கலைவாணி தன் மகனின் புத்திசாலி தனத்தையே கேள்வி குறியாக்கி விட்டு சமையலறைக்குள் சென்று கையில் ஒரு பாத்திரத்துடன் வந்தார்
"இந்தா இதுல வெண்ணி இருக்கு. காலையில இருந்து கல்யாணத்துல அழைஞ்சதுல மருமக கால் எப்படியும் கொஞ்சம் வீங்கி இருக்கும். வெதுவெதுப்பான தண்ணியில கொஞ்ச நேரம் கால வச்சு பிடிச்சுவிட்டா நல்லா சுகமா இருக்கும். இது உனக்கு தோன்ன மாதிரி சொல்லி போய் சமாதான படுத்து." என்று தீபாவை சமாதனம் செய்வதற்கான வழியை கூற

"தேங்க் யூ மம்மி நீ இருக்கிற வரைக்கும் நான் எதுக்கும் கவலை பட வேண்டாம்." என்று புன்னகையுடன் தன் தாயின் கையிலிருந்த பாத்திரத்தை வாங்கி கொண்டு தங்கள் அறைக்குள் நுழைந்தான்.

கட்டிலில் தனக்கு முதுகு காட்டி அமர்ந்திருந்த மனைவியின் முன்சென்று அந்த பாத்திரத்தை வைத்த மகேந்திரன் அவள் காலை எடுத்து வெதுவெதுப்பான நீரில் வைத்து பிடித்துவிட ஆரம்பித்தான்.
வந்ததிலிருந்து மனைவி எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க நிமிர்ந்து அவள் முகத்தை பார்க்க, மனைவி முகத்தில் தோன்றிய உணர்வுக்கு காரணம் தெரியாமல்

"என்ன ஆச்சு தீபு? எதுக்காக எப்படி என்னுடைய முகத்தை பார்த்துகிட்டு இருக்கிற." என்று கேள்வி கேட்க

"ஒன்னுமில்ல நான் கோபமா இருந்தா என்னுடைய கால புடிக்கிற அளவுக்கு இறங்கி வர அளவுக்கு உனக்கு என் மேல அந்த அளவுக்கு காதல் இருக்கான்னு நெனச்சு பார்த்தேன்." என்று கூற அவள் குரலில் இருந்தது வருத்தமா ஏக்கமா என்று பிரித்தறிய முடியாத உணர்வை கண்டு கொண்டவன் எழுந்து அவளருகில் அமர்ந்து

"என்ன மா? என் மேல கோபமா? எதுக்காக இப்படி பேசுற... எதுனாலும் மனசுவிட்டு சொல்லு. தேவையில்லாமல் எதையும் உன்னுடைய மனசுக்குள்ள வச்சி குழப்பிக்காத." என்று தன் மனைவியின் கைகளை தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டு கேட்க

"மகி உங்களுக்கு என்னுடைய பெத்தவங்கள பத்தி தெரியும் தானே."

"தெரியும்... கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு தடவ உன்ன பத்தின எல்லா விஷயமும் எனக்கு தெரிஞ்சு இருக்கணுக்கனும்னு உன்னுடைய அப்பா என் கிட்ட சொன்னாரு.

"அப்பா...." என்று கூறி விட்டு ஒரு பெருமூச்சு ஒன்றை வெளி விட்ட தீபா

"எனக்கு ரொம்ப நாளா வரைக்கும் அப்பா என்கிற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாது. என்னுடைய அம்மா என்ன பெத்தவங்க கிடையாதுன்னு சின்ன வயசுல எனக்கு புரிந்தாலும் அவங்கதான் என்னுடைய அம்மான்னு என்னுடைய மனசுல பதிஞ்சிட்டு. அதே மாதிரிதான் என் மனசுக்குள்ள அப்பான்னு ஒரு உருவம்னா அது விஸ்வஜித் அப்பாதான். என்ன பெத்தவரு பணத்துக்காக அப்பா அம்மாகிட்ட என்ன வியாபரம் பேசின விஷயம் தெரிஞ்சி அதுக்கு அப்புறம் எனக்கு ஏனோ ஒரு பயம்.

கல்யாணம் காதல் அப்படிங்கிற வார்த்தையிலேயே நம்பிக்கை இல்லை. எனக்கானவன் என் பெத்தவன் மாதிரி இருந்துட்டா.... என் கூட படிக்கிற எத்தனையோ பேரு அவர்களுடைய சொந்த வாழ்க்கையில தோல்விகளை சந்தித்ததை பார்க்கும் பொழுது எல்லாம் எனக்கு கல்யாணம் பண்ணிக்கிட்டு இந்த வீட்டை விட்டு போகனுமான்னு நினைச்சு ஒரு பயம் வந்துச்சு.

அதனாலதான் 19 வயசுலயே ரூபா கல்யாணம் பண்ணிட்டாலும் எனக்கு அந்த எண்ணம் வரவில்லை. படிப்பு முடிஞ்சு கம்பெனி பொறுப்பு எடுத்ததுக்கு அப்புறம் நீங்க என்னை காதலிக்கிறாதா சொல்லும் போது கூட எனக்கு ஒரு பயம் மட்டும்தான் வந்துருச்சு. ஆனா இப்போ நீங்க என்மேல வச்சிருக்கிற காதலை பார்க்கும்பொழுது அதுக்கு எல்லாம் அவசியம் இல்லைன்னு எனக்கு புரியுது. இருந்தாலும் என்னுடைய மனசுக்குள்ள அப்பப்போ சின்ன பயம் வந்துட்டு தான் போகுது.

அதனால் நான் உங்கள ஏதாவது கஷ்டப்படுத்தினா என்ன வெறுத்து விட மாட்டீங்களே." என்று கேட்க தீபாவின் கையை எடுத்து அவள் வயிற்றில் வைத்த மகேந்திரன்

"உன் வயது குள்ள இருக்கிற நம்ம குட்டி பாப்பா உன்னை உதைக்கும் போகுது உனக்கு உள்ளே இருக்கிற நம்ம குழந்தை மேல கோபம் வருதா" என்று கனவன் கேட்ட கேள்விக்கு இல்லையென்று தலையசைக்க,

"எனக்கு எப்பவும்.... உனக்கு 100 வயசு ஆனாலும் நீதான் என்னுடைய முதல் குட்டி பாப்பா. இந்த ரூபா குட்டி பாப்பா மேல எனக்கு எப்பவுமே கோபம் வராது." என்று தன் மனைவியை அவள் வயிற்றில் வளரும் தன் குழந்தையோடு சேர்த்து அணைத்துக் கொள்ள, மனைவியவள் தன் மன்னவனின் தோள்களில் தஞ்சம் புகுந்தாள்.

திருமணமாகி இத்தனை நாட்களில் குறை கூறும் படியாக விஷாலி என்றும் நடந்துகொண்டதில்லை. தன் முகத்தை பார்த்தே தன் தேவைகளை நிறைவேற்றும் ஒரு சக தோழியாக ஏழு வருடங்களாக இருந்தவளை இன்று ஒரே நாளில் வார்த்தைகளால் காயப்படுத்தி விட்டதை நினைத்து குற்ற உணர்வோடு தங்கள் அறைக்குள் இந்திரா வர, அங்கு கோபமாக இருக்க வேண்டியவளோ மேஜையின் மீது ஒரு கிண்ணத்தில் மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்துவிட்டு புன்னகை முகமாய் கணவனின் வருகைக்காக காத்து இருந்தாள்.

"என்ன ஆச்சு இவளுக்கு நாம முதன்முதலா திட்டுன அதிர்சில இவளுக்கு ஏதாவது மர கழண்டு இருக்குமோ?" என்று நினைத்தபடி உள்ளே வர அவள்
"ஹேப்பி ஆங்கிரி டே மை டியர் ஹஸ்ஸ்" என்று கூறிவிட்டு கிண்ணத்தில் இருந்த மெழுகுவர்த்தியை ஊதி அணைத்துவிட்டு, அருகில் வைத்திருந்த ஸ்பூனால் கிண்ணத்தில் இருந்த கேசரியை எடுத்து தன் கணவனின் முன்பு நீட்டினாள்.

விஷாலி நீட்டிய கேசரியை மறுக்காமல் வாங்கிக்கொண்ட இந்திரஜித்

"நான் உன்ன திட்டுனா..... அதுக்கு இந்நேரம் நீ கோபப்படனும், இல்ல வருத்தப்பட்டு அழுதுகிட்டு இருக்கணும். அது ரெண்டும் இல்லாம இப்படி சிரிச்சுகிட்டு கேசரி ஊட்டிவிட்டு இருக்கிற." என்று ஆச்சரியமாக தன் மனைவியை பார்த்து கூற விஷாலி

"நமக்கு கல்யாணம் ஆகி இந்த ஏழு வருஷத்துல நீங்க எதுக்கு என்கிட்ட கோபப்படுதே கிடையாது. நான் கூட நினைப்பேன் இந்த மனுசனுக்கு கோபமே வராதான்ன. ஃபர்ஸ்ட் டைம் நீங்க என்கிட்ட கோவமா பேசி இருக்கீங்க. சோ அதை செலபிரேட் பண்ண வேண்டாமா? அதுக்குத்தான் இந்த கேசரி... அஞ்சு நிமிஷத்துல கேசரி மட்டும் தான் பண்ண முடிஞ்சது. கொஞ்சம் முன்ன பின்ன தான் இருக்கும். அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க." என்று கூறிவிட்டு மீண்டும் தன் கணவனுக்கு கேசரியை ஊட்டிவிட, விஷாலி கையில் இருந்து ஸ்பூனை வாங்கிய இந்திரஜித் அவளுக்கு தன் கைகளால் ஊட்டி விட ஆரம்பித்தான்.

விஷாலியும் தன் கணவனின் கைகளால் தரப்பட்ட கேசரியை ஏதோ தேசிய விருது பெரு மகிழ்ச்சியோடு வாங்கி சுவைத்துக் கொண்டு இருந்தாள். விஷாலின் கண்களில் அழகாக தெரிந்த காதலில் கட்டுண்ட இந்திரஜித் மனதுக்குள்

"ம்மா... ப்பா... நீங்க எனக்கு கொடுத்ததிலே எனக்கு ரொம்ப புடிச்ச கிப்ட்னா... அது என்னுடைய ஷாலி டியர் மட்டும்தான்." என்று நினைத்துக்கொண்டாள்.

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
தெய்வம் ஏதுமில்லை.....
நடப்பதெல்லாம் நினைத்துவிட்டால்....
"என்ன அங்க சத்தம்." என்று மைதிலி குரல் கொடுக்க

"ஒன்னும் இல்ல செல்லம்.... என் மனசாட்சி பேசிக்கிட்டு இருக்குது." என்று அபி தன் மனைவியிடம் கூறிவிட்டு மனதுக்குள்

"முரட்டு சிங்கிளா சுத்தணும் நினைச்ச எனக்கு இப்படி ஒரு மூணு முடிச்சாலே இப்படி என்னுடைய வாழ்க்கையே முடிச்சு வச்சுட்டாங்களே." என்று தன்னுடைய விதியை நொந்து கொண்டு தங்களுடைய 4வயது மகன் யுவராஜ் பாத்ரூமில் இருந்து தூங்கிக்கிக் கொண்டு வர

"மனசாட்சி பேசுமா... பேசும்... பேசும்... பொம்பளைங்களுக்கு எதிராக ஆம்பிளைக மனசாட்சி நல்லா வாய் கிழிய பேசும்." என்று கோபமாக பெண்ணுரிமை குரலை மைதிலி எழுப்ப, விட்டால் இரவு முழுவதும் பேசுவாள் என்ற பயத்தில் அபராஜித்

"மை டார்லிங் நான் ஏதாவது உன்ன சொன்னேனா... அண்ணன் அண்ணியை சொன்னதுக்கு நான் என்ன பண்ணுவேன். எதுக்காக இப்படி எனக்கு ஒரு பனிஷ்மென்ட்." என்று பாவம் போல கேட்டுக்கொண்டு பாட்டியிடம் தூங்கமாட்டேன் என்று அடம்பிடித்த மகனை தூங்க வைக்க முயற்சி செய்ய,

"சொல்லுவீங்களே... பெரியத்தான் அக்காவ திட்டும் போது நான்தான் உங்க முகத்தை பார்த்துக்கிட்டே இருந்தேனே... வாய்ப்பு கிடைச்சா என்னையும் திட்டலாம் அப்படின்னு தானே காத்துகிட்டு இருந்தீங்க."

"இல்லம்மா நான் என்ன சொல்ல வர்றேன்னா...."

"நீங்க ஒன்னும் சொல்ல வேண்டாம்... தப்பு பண்ண தண்டனை நிச்சயம் உண்டு. இன்னையிலிருந்து ஒரு வாரத்துக்கு நீங்கதான் யுவா குட்டிய தூங்கவைக்கனும். காலையில ரெடி பண்ணி ஸ்கூலுக்கு அனுப்பனும். நைஸா எங்க அப்பா அம்மாகிட்ட தள்ளி விடணும்னு நினைக்காதீங்க. அப்புறம் அடுத்த வாரம் காசியாத்திரை போற எங்க பெரியப்பா பெரியம்மா கூட துணைக்கு உங்களுக்கு டிக்கெட் போட்டு அனுப்பி வைத்து விடுவேன்." என்று மிரட்ட

'இனி சில விஷயங்களில் அண்ணன் கூட கூட்டணி வைக்க கூடாது.' என்று உறுதியை மனதுக்குள் எடுத்துக்கொண்டு மனைவியின் தண்டனை மகிழ்வுடனே ஏற்றுக்கொண்டான்.


"மொட்டை மாடில இவளுக்கு என்ன வேலை." என்று மனதுக்குள் தன் மனைவியை திட்டிக்கொண்டே மேலே செல்ல, நிலவொளியிலும், லி அணியிர் அலங்காரத்திலும் மொட்டை மாடியில் அமைக்கப்பட்ட அந்த சிறிய கண்ணாடி அறை தேவலோகம் போல காட்சியளித்தது.

வெளிர் நீல நிறத்தில் சிறு வேலைபாடுகள் கொண்ட டிசைனர் புடவையில், தலை நிறைய மல்லிகைப் பூச்சூடி அலங்காரம் தேவதையாக நின்றவளை கண்டதும் அத்தனை நேரம் மனதுக்குள் இருந்த எண்ணங்களுக்கு எதிர்மறையாக உள்ளாச உணர்வு குடிகொண்டது.

தன்னை நெருங்கி வரும் கணவனின் காலடி ஓசையில் கன்னியவள் தேகம் புதுவித உணர்வால் ஆட்கொள்ளப்பட்டு முகத்தில் பவுர்ணமி நிலவொளியிலும் ஏதோ பகலவன் வெயிலில் நிற்பது போல வியர்வை துளி அரும்பியது.

தனவளின் முகத்தில் தனக்கான மாற்றத்தில் தன்னை தொலைத்தவன் தனவளிடம் தன்னை மீட்டெடுக்கும் பணியை ஆரம்பித்தான்.

ஆதவன் வந்த பின்பும் வெற்றிகரமாக தன்னை மொத்தமாக தன்னவளிடம் தொலைத்து நின்றான்.

"கனல் பேபி ஆர் யூ ஹேப்பி...."

தன் சரி பாதியில் கைகளைப் பிடித்துக்கொண்டு விஸ்வஜித் கேட்க, அவன் கண்களை நேருக்கு நேராக பார்த்து கனலி

"இந்த நிமிஷம் இந்த உலகமே என்ன பார்த்துதான் பொறாமை படுதோன்னு நினைக்கிற அளவுக்கு... எல்லா சந்தோஷமும் என்கிட்ட தான் இருக்குது. அதுக்கு எல்லாம் காரணம் என்னுடைய விஜி மட்டும்தான். ஐ லவ் யூ விஜி..." என்று கூறிவிட்டு அவன் மார்பில் தன் முகத்தை புதைத்துக்கொண்டாள்.

வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும்
ஆனாலும் அன்பு மாறாதது
மாலையிடும் சொந்தம் முடிப்போட்ட பந்தம்
பிரிவென்னும் சொல்லே அறியாதது
அழகான மனைவி அன்பான துணைவி
அமைந்தாலே பேரின்பமே
மடிமீது துயில சரசங்கள் பயில
மோகங்கள் ஆரம்பமே
நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி
நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி
சந்தோஷ சாம்ராஜ்யமே.

.......முற்றும்.......
 
Last edited:
ஹா ஹா ஹா
நிறைவான முடிவு
ரொம்பவே அழகான அருமையான குடும்ப நாவல்
நாவல் போட்டியில் வெற்றி பெற என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள், செசிலி வியாகப்பன் டியர்
 
Last edited:
Top