Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கண் விழித்தேன் உன் நினைவில் ep 21

Advertisement

Sesily Viyagappan

Well-known member
Member
கண் விழித்தேன் உன் நினைவில்
--செசிலி வியாகப்பன்

அத்தியாயம் 21


பத்து நெடிய வருடங்களை காத்திருந்து கழித்த விஷ்வாவிற்கு ஏனோ இந்த பத்து நிமிடங்களை கடக்க முடியவில்லை.

வரவேற்பு நிகழ்ச்சி முடிந்து வீட்டிற்கு வந்த பின்பு கனலியை வேறு ஒரு அறைக்கு அழைத்து சென்று விட அவளின் வருகைக்காக காத்திருந்தவனின் மனம் பலவித கற்பனைகளில் மகிழ்ந்து இருந்தது.

விஸ்வா எவ்வளவோ மறுத்தும் யாழினி, பிரகாஷ் இருவரும் தன்னுடைய அறையை பூக்களால் அலங்காரம் செய்திருக்க அவற்றையெல்லாம் பார்த்தவனுக்கு இவற்றையெல்லாம் விட தன்னுடைய கனலி மிகவும் மென்மையானவள் என்றே நினைக்கத் தோன்றியது.

சிறிது சிறிதாக விஷ்வாவின் பொறுமை அவனைவிட்டு செல்ல மேலும் அவனின் பொறுமையை சோதிக்கும் வண்ணம் கடிகாரத்தின் முள் மெதுவாக நகர்ந்து கொண்டு இருந்தது.

மேலும் 20 நிமிடங்களில் அவனை காக்க வைத்ததற்கு பின்பே கனலி அவன் அறைக்கு வந்துசேர்ந்தாள்.

கதவு திறக்கும் சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தவனின் இதயம் ஒரு வினாடி நிமிடம் தன் துடிப்பை நிறுத்தி அடுத்த நிமிடம் பந்தயக் குதிரையின் வேகத்தில் துடிக்க ஆரம்பித்தது.

வரவேற்புக்கென கனலி செய்திருந்த அனைத்து அலங்காரங்களையும் கலைத்துவிட்டு எலுமிச்சை வண்ண ஷிபான் புடவையில் எந்தவித அலங்காரமும் இன்றி எளிமையாக உள்ளே வர அந்த எளிமையிலும் மிளிர்ந்த அழகில் விஷ்வா மயங்கி போனான்.

எத்தனையோ நாட்கள் விஷ்வாவிடம் சரிக்கு சரியாக பேச்சுக் கொடுத்த கனலிக்கு இன்று இனம் புரியாத ஒரு தயக்கம் மனதுக்குள் குடிகொண்டது.

நின்ற இடத்தை விட்டு கால்கள் நகர மறுக்க தலை குனிந்து நின்று விட்டாள். அவள் நிற்கும் நிலையிலேயே அவளின் மன நிலையை உணர்த்த விஷ்வாவிற்கு அவளை சீண்டி பார்க்கும் எண்ணம் வந்தது.

"என்ன கனல் பேபி அங்கேயே நின்னா எப்படி? சீக்கிரம் வா வந்து மாமா கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்காே. இனிதான் நிறைய வேலை இருக்கு."

'நிறைய வேலை' என்பதில் அழுத்தம் காெடுத்து கூற அதுவரை இருந்த தயக்கம் மறைந்து அவனை முறைத்து பார்த்த கனலி

"அப்படி எல்லாம் என்னால யார் காலிலும் விழுந்து ஆசீர்வாதம் வாங்க முடியாது." என்று பட்டென்று பேச அவளருகில் நெருங்கி வந்த விஷ்வா கனலியை குறும்பு பார்வை பார்த்தபடி,

"பேபி நீ என் கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்க மாட்டியா." என்று கேட்க அவன் நெருக்கம் தன்னுள் புதுவித ரசாயன மாற்றத்தை ஏற்படுத்தினாலும் அதை காட்டிக்கொள்ளாமல்

"விழமாட்டேன்.......
உன்னால என்ன பண்ண முடியும்.
உனக்கு வேணும்னா நீ என் கால்ல விழு, நான் ஆசிர்வாதம் பண்றேன்."

இப்பாெழுது கனலி குறுப்பு புன்னகையுடன் கூற, விஸ்வா அவள் குறும்பு புன்னகையை மனதுக்குள் ரசித்தபடி,

"பேபி நீ என் காலை தாெட்டு ஆசிர்வாதம் வாங்காட்டி பரவா இல்ல, பட் நான் உன்னுடைய காலத்தோட வெட்கப்பட மாட்டேன். என கூற,

'இவன் என்ன சொல்ல வரான்' என்பதுபோல பார்த்த கனலி கால்களைப் பற்றி தன் உயரத்திற்கு மேலே தூக்கிப் பிடித்தாள்.

"மை ஸ்வீட் ஹாட் பாத்தியா எப்படி நான் எவ்வளவு பெரிய மனசு பண்ணி உன்னுடைய கால தொட்டுட்டேன்." என்று விஸ்வா கெத்து காட்ட

ஒரு கையில் பால் செம்பு கீழே விழுந்து விடாமல் பிடித்துக் கொண்டு மறுகையால் அவன் தோள்களில் அடித்துவிட்டு

"இதுதான் உங்க ஊர்ல காலை பிடிக்கிறதா....!" என்று காேபமாக கேட்க நினைக்க அவள் வார்த்தைகளாே அவளை மீறி வெக்கத்தில் மென்மையாக வெளிவந்தது. அதை கண்டுகாெண்டவனாே சிரித்துக் கொண்டு

"சில நேரத்துல இப்படி கால பிடிக்கிறது கூட நல்லாத்தான் இருக்கு." எனக் கூறிக்கொண்டு அவள் வயிற்றில் தன் முகத்தை புதைத்துக்கொண்டான்.

அவன் செய்கையால் எற்பட்ட கூச்சத்தில் நெளிந்தபடி,

"விஜி என்ன கீழே விடு, எனக்கு பயமா இருக்கு." என பயத்தில் கனலி கூற விஷ்வா

"உன்ன கீழ விடவா இவ்வளவு கஷ்டப்பட்டு தூக்கினேன். நான் இவ்னிங் சொன்ன மாதிரி சில விஷயத்துல இனி உன்னுடைய பேச்சை கேட்க போறது இல்ல." என விஸ்வா கூறிக்கொண்டு கட்டிலின் அருகில் சென்று கனலியை இறக்கி விடுவதற்கும் கதவு தட்டப் படுவதற்கும் சரியாக இருந்தது.

இந்நேரத்தில் கதவை தட்டுவது யாராக இருக்கும் என்று இருவரும் நினைக்க கதவு மீண்டும் தட்டபட்டது.

வேகமாக சென்று கனலி கதவை திறக்க அவளை இழுத்துக் கொண்டு கிருபா உள்ளே வர அவளை பின்பற்றி அபியும் வந்தான். உள்ளே வந்த கிருபா

"விஷ்வா நீதான தினமும் ராத்திரி எங்களுக்கு கதை சொல்லி தூங்கவைப்ப... இன்னைக்கு எதுக்காக நீ வரல. நானும் அபியும் உனக்காக எவ்வளவு நேரம் காத்துகிட்டு இருக்கிறோம் தெரியுமா."

கிருபா தன்னிடம் எப்பொழுதும் அதிகாரமாக பேசுவது வழக்கம் என்பதால் விஷ்வாவிற்கு கிருபா நடவடிக்கையில் உள்ள மாற்றம் தெரியவில்லை.

தாெரிந்திருக்க வேண்டுமா....?

இதுநாள்வரை நான் செய்து வந்த வழக்கத்தை இன்று கனலி வந்த உடனே தான் மறந்த மடத்தனத்தை நினைத்து வருந்திய விஷ்வா

"சாரி ஸ்வீடி, சாரி அபி அப்பா தெரியாமல் ஏதோ ஒரு ஞாபகத்துல மறந்துட்டேன், இனி இப்படி மறக்க மாட்டேன். சரி வா இப்பமே போகலாம், உங்கள கதை சாெல்லி தூங்க வைக்கிறதுதான் என் முதல் வேலை." என்று பிள்ளைகள் அறையை நோக்கி நடக்க அவன் கையைப் பிடித்து இழுத்த கிருபா

"இன்னைக்கு நானும் அபியும் உன் கூடவே தூங்குகிறோம்...." என்று மெதுவாக விஸ்வா பத்து வருட கனவில் இடியை இறக்க அதிர்ந்து அருகில் நின்ற கனலி முகத்தை பார்க்க, அவளோ விஷ்வா முக மாற்றத்தில் சிரித்துவிட்டாள்.

தான் தன் விஸ்வாவுடன் பேசிக்கொண்டு இருக்கும்பொழுது சிரித்த கனலியை முறைத்து பார்த்த கிருபா விஷ்வாவிடம்

"அந்த பையன்(இந்திரஜித்) அம்மா எதுக்காக உன்னுடைய ரூம்ல இருக்காங்க. இவங்களை வெளியே போக சொல்லு..." என்று கூற

இப்பொழுது அதிர்ந்து விஷ்வா முகத்தை பார்ப்பது கனலி முறை ஆயிற்று. சில விஷயங்களை பெரியவர்களிடம் விளக்குவது போல பிள்ளைகளிடம் கூறுவது அவ்வளவு எளிதான ஒன்று அல்ல.

அப்படிப்பட்ட விஷயங்களை பிள்ளைகளிடம் கூறும்பொழுது மிகுந்த பொறுமையும் நிதானமும் அவசியம். இதைப்பற்றி எப்படி பேச என்று விஷ்வா யோசிக்க, கனலி கிருபா முன்வந்து

"உன்னுடைய தாத்தா பாட்டி ஒரே ரூம்ல தான இருக்காங்க ஸ்வீட்டி, பிகாஸ் தே ஆர் ஹஸ்பண்ட் அண்ட் வைஃப். அதே மாதிரி எங்க ரெண்டு பேருக்கும் மேரேஜ் ஆயிட்டு.

இப்போ நாங்க ரெண்டு பேரும் husband-wife அதனால இனி நான் இந்த ரூம்ல தான் இருப்பேன்." என்று பொறுமையுடன் கூற, அந்த விளக்கங்கள் எதுவும் பிள்ளைகள் இருவருக்கும் புரியவில்லை.

"டாேண்ட் கால் மீ ஸ்வீட்டி, தென் எனக்கு நீ இங்கே இருக்கிறது பிடிக்கல வெளியே போ." என்று கிருபா குரலை உயர்த்திப் பேச திறந்திருந்த கதவின் வழியே அவளின் சத்தம் வெளியில் நின்றிருந்த அனைவரையும் சென்றடைந்தது.

என்ன ஆயிற்றோ என்கின்ற எண்ணத்தில் அனைவரும் விஷ்வாவின் அறைக்கு வர, ஒருவர் மற்றவர் முகம் பார்க்க அங்கே ஒரு சங்கடமான சூழ்நிலை உருவாகியது.

பூரணி எவ்வளவு சமாதானம் கூறி அழைத்தாலும் அபி கிருபா இருவரும் விஸ்வா கையை பிடித்துக்காெண்டு அங்கிருந்து வர மறுக்க என்ன செய்வது என்பது போல அவர் கனலி முகத்தை பார்த்தார்.

"அத்தை நீங்க எல்லாரும் போங்க கிருபா அபி ரெண்டு பேரும் எங்கள் கூட தூங்கட்டும் நான் பாத்துக்கறேன்." என்று சமாளித்து அனைவரையும் அனுப்ப நினைக்க கிருபா

"எனக்கு உன் கூட தூங்க பிடிக்கல ஃபஸ்ட் நீ இங்க இருந்து போ." என்று அனைவரின் முன்னிலையிலும் கூற கனலி இப்படி ஒரு சூழ்நிலையை சற்றும் எதிர்பாராமல் பேச்சற்று நின்றாள்.

தூங்கிக்கொண்டிருந்த தீபாலி விழித்துபர்க்க தன்னருகில் தாய் இல்லாததால் தேடி அழ ஆரம்பித்தாள். அவள் சத்தத்தில் ரூபாலி இந்திரஜித் இருவரும் விழித்துவிட மூவரும் கனலியை தேட ஆரம்பித்தனர்.

தாயை காணாத பதட்டத்தில் தீபா அழுகை மேலும் அதிகரிக்க அந்த சத்தத்தில் வெளியே வந்த கனலி அழும் தீபாவை அணைத்து சமாதானம் கூற ஆரம்பித்தாள்.

ஒருவழியாக தீபாவை சமாதானம் செய்துவிட்டு நிமிர்ந்த கனலி என்ன பேசுவது என்று தெரியாமல்

'ஏதாவது செய்.' என்பதுபோல பிள்ளைகளை கண்களால் காட்டிவிட்டு விஸ்வா முகம் பார்க்க அவனோ தன் இரு கைகளையும் பிடித்து நின்ற பிள்ளைகளயும், கனலியை சுற்றி நின்ற பிள்ளைகளையும் பார்த்து பார்த்துவிட்டு

"கனலி நீ பசங்க கூட போய் தூங்கு எதுன்னாலும் காலையில பேசிக்கலாம்." என்று கூற அவனைப்பார்த்து நன்றியுடன் ஒரு புன்னகையை சிந்திவிட்டு கனலி பிள்ளைகளுடன் அருகில் இருந்த அறைக்குள் புகுந்து கொண்டாள்.

ஏதாே பேச நினைத்த பூரணியை பிள்ளைகளை காட்டி தடுத்த விஷ்வா

"அம்மா ப்ளீஸ் காலையில பேசிக்கலாம்." என்று கூறிவிட்டு பிள்ளைகளுடன் தன் அறைக்கு வந்தான்.

பிள்ளைகள் இருவரையும் தூங்க வைத்த பின்பும் தூக்கம் வராத விஷ்வா கண்களில் பட்ட அறையின் அலங்காரம் அவளைப் பார்த்து சிரிப்பது போல இருந்தது.

பெருமூச்சு ஒன்றை இழுத்துவிட்ட விஷ்வா பால்கனி சென்று அங்கு இருந்து நாற்காலியில் அமர்ந்து வானத்தை வெறித்துப் பார்க்க ஆரம்பித்தான்.

நிலவு இல்லாமல் விண்மீன்கள் மட்டும் பளிச்சிட அந்தக் கரிய நிற வானம் 'நானும் உன்னைப் போன்று என் துணை இன்றி தனித்து நிற்கின்றேன்.' என்று கூறுவது போல இருந்தது.

இன்றைய தவிப்பில் நாளைய பற்றி மனிதன் சிந்திப்பதில்லையாே....!

நாளை கனலி விஸ்வாவிற்கு வைத்திருப்பதை யார் அறிவர்....!

வாழ்க்கையின் சரிபாதியாக ஏற்றவள் உன்னை பாதியில் விட்டு செல்கின்றேன் என்று கூறும் பாெழுது கையறு நிலையில் விதி தன்னை நிறுத்த பாேவதை விஸ்வா அறிந்திருந்தால்....!

முன்பு பிறர் அறியாமல் தான் செய்த தவறை நாளை அனைவரும் பார்க்க சாெல்லிவிட்டு மீண்டும் செய்ய பாேவதை கனலி அறிந்திருந்தால்....!

இனி நிஜத்தின் நிழலுடன்.....
 
Last edited:
Top