Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கண் விழித்தேன் உன் நினைவில் ep 8(1)

Advertisement

Sesily Viyagappan

Well-known member
Member
கண் விழித்தேன் உன் நினைவில்
-- செசிலி வியாகப்பன்

அத்தியாயம் 8

அன்று......

"அபி நீ எவ்வளவு சொன்னாலும் சரி நான் அங்க போக மாட்டேன்." பிடிவாதமாக முகத்தைத் திருப்பிக் கொண்டு அமர்ந்து இருந்த கண்ணாடி அருகில் வந்து அமர்ந்த ஆபிரஹாம்

"கனலி குட்டி நீங்க இங்க வந்து கிட்டத்தட்ட ஒரு வருஷம் ஆகப்போகுது, இதுவரைக்கும் ஒரு தடவை கூட நீங்க ஊருக்கு போயிட்டு வரல.
உனக்காக உங்க அம்மா, அண்ணா அக்கா எல்லாரும் காத்துக்கிட்டு இருக்காங்க."

"அபி நான் ஒன்னும் சின்ன குழந்தை இல்ல நீ சொல்றத எல்லாத்தையும் நம்புவதற்கு. அவங்களுக்கு என் மேல உண்மையான பாசம் இல்லன்னு எனக்கு நல்லா தெரியும். எனக்கு அவங்க முகத்தை பாக்க இது கூட பிடிக்கல, அப்படி இருக்கும் பொழுது எதுக்காக என்ன அங்க போக சொல்ற."

"குட்டிமா பிளீஸ் குடும்பத்துல எப்பவும் எல்லாரும் சிரித்து பேசிக்கிட்டே இருக்க முடியாது. சின்ன சின்ன சண்டைகள் வர தான் செய்யும். அதுக்காக அவங்க யாரு கூடவும் கடைசிவரைக்கும் பேசாமல் இருக்க முடியுமா. இந்த ஒரு தடவை நீ போயிட்டு வா, அதுக்கப்புறம் உனக்கு பிடிக்கலைன்னா நான் கட்டாயப்படுத்தவே மாட்டேன்."

"புரிஞ்சுக்காே அபி எனக்கு அங்க போக பிடிக்கலை."

"கனலி..." என்று அழைத்த பாதரின் குரலில் இருந்த மாறுபாட்டை உணர்ந்த கனலி நிமிர்ந்து பார்க்க அவரோ

"உனக்கு அங்க இருக்க பிடிக்கல, உன்னால அங்க சந்தோஷமா இருக்க முடியாதுன்னு தான் நான் உன்னை இங்க கூட்டிட்டு வந்தேன்.
நீ என் கூடவே கடைசி வரைக்கும் இருக்க முடியாது, உனக்குன்னு சொந்தங்கள் வேணும். என்னால உனக்கு சொந்தங்கள் இல்லாமல் போயிடகூடாது. நீ போயிட்டு வாடா எனக்காக, நீ வெகேஷன் முழுசா அங்க இருக்கணும்னு எந்த அவசியமும் இல்லை, ஒரு பத்து நாள் வீரபாண்டி கோவில் திருவிழா முடிஞ்சதுக்கு அப்புறம் நீங்க இங்க வந்துடு."

"இப்ப என்ன உனக்காக நான் போயிட்டு வரணும் ஓகே போயிட்டு வரேன். இதுதான் லாஸ்ட் இதுக்கு அப்புறம் நீ என்ன கட்டாயப்படுத்த கூடாது."

"ஓகே டன் இதுக்கு அப்புறமா நான் உன் எதுக்காகவும் கட்டாயப்படுத்த மாட்டேன்."

_________________________________________________________

அதிகாலை மதுரை ஜங்ஷன் வந்து இறங்கிய கனலிக்கு ஏனோ தன் சொந்த ஊருக்கு செல்வதில் அவ்வளவு விருப்பம் இல்லை. இவ்வளவு தூரம் வந்த பிறகு திரும்பி செல்வது சரியல்ல என்று தன் மனதை சமாதானப் படுத்திக் கொண்டு அங்கிருந்து வீரபாண்டி செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தாள்.

ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து வெளியில் வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்த கனலி மனதுக்குள் தன்னை இங்கே அனுப்பிய ஃபாதர் ஆபிரகாமிற்கு தவறாமல் அர்ச்சனை செய்துகொண்டே வந்தாள்.

தன் ஊர் நெருங்க நெருங்க கனலிக்கு உள்ளுக்குள் ஒரு படபடப்பு ஏற்பட்டு அது அதிகமாக ஆரம்பித்தது. தான் பிறந்து வளர்ந்த ஊர்க்கு செல்கின்றோம் என்ற எண்ணம் துளியும் அவளுக்குள் இல்லை.

17 வருடங்களாக வளர்ந்த ஊரின் மீது கனலிக்கு தற்பாேது ஒரு ஒட்டுதல் இல்லை. அதற்கு காரணம் அங்கு இருப்பவர்களிடம் ஒட்டுதல் இல்லாததே. தந்தை இருந்தவரை அவள் மகிழ்ச்சியாகவே இருந்தாள்.

என்று அவர் இறந்த பிறகு இப்பாெழுது இருப்பவர்களுடன் இருந்த கொஞ்சம் நஞ்ச ஓட்டுதலும் மொத்தமாக சென்றுவிட்டது.

கனலி குடும்பம் என்றும் அமைதி பூங்காவாக இருந்தது கிடையாது. உதவும் மனப்பான்மை கொண்ட கருணாகரனுக்கு, தான் மட்டுமே அனைத்தையும் ஆளவேண்டும் என்ற எண்ணம் கொண்ட திலகவதி மனைவியாக அமைந்ததே வீட்டில் நடைபெறும் பெரும்பான்மையான பிரச்சனைகளுக்கு காரணமாக அமைந்தது.

திலகவதிக்கு எந்த அளவு சுயநலம் இருக்கின்றதோ அந்த அளவு சுயபுத்தி கிடையாது. அதுவே வீட்டின் மற்ற பல குழப்பங்களுக்கு வழிவகுத்தது.

விவசாய குடும்பத்தில் பிறந்த கருணாகரன் கடின உழைப்பாளி. தாய் தந்தைக்குப் பிறகு தனக்கு ஒரே உறவான தன்னை விட ஏழு தம்பி தினகரனை எப்பொழுதும் தனக்கு நிகரான அவனாகவே நடத்திவந்தார். அதுவே வீட்டில் பிரச்சனைகள் பூதாகரமாக வெடிப்பதற்கு போதுமானதாக இருந்தது.

திருமணமான புதிதில் திலகவதி ஓரளவு அண்ணன் தம்பி பாசப்பிணைப்பை கண்டுகொள்ளாமல் இருந்தார். அதற்கு காரணம் தினகரனின் கணிசமான வருமானமே.

சம்பளம் முழுவதையும் தினகரன் தன் அண்ணியின் கையில் கொடுத்துவிட அப்பொழுது பிரச்சனை எதுவும் ஏற்பட வழி இல்லாமல் போனது.
திருமணம் முடிந்த அடுத்த வருடம் பிறந்த கமலி சகாேதரர்கள் இருவரின் செல்லப் பிள்ளையாகவே வளர்ந்தாள். அடுத்த வருடத்தில் கார்த்திக் பிறந்த பின்பு திலகவதி தரையில் கால் படாமல் சுற்றினார் என்றே சொல்ல வேண்டும்.

தன்னை எதிர்காலத்தில் வசதி வாய்ப்போடு வாழ வைக்க பிறந்த மகன் என்று அவனுக்கு அதிக செல்லம் கொடுக்க ஆரம்பித்தார். அதன் பிறகு கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்குப் பிறகு கனலி பிறந்தாள்.

தாயின் காெள்ளை அழகுடன் பிறந்த கனலியை ஆரம்பத்தில் திலகவதி காெண்டடாடவே செய்தார்.

கனலி தன் தாயின் பாசத்தை பங்குகொள்ள பிறந்தவள் என்ற எண்ணம் கார்த்திக் மனதில் ஆழமாக பதிய கனலி அவனுக்கு சுத்தமாகப் பிடிக்காது.

அவளை தாய் தூக்கினான் அழுது அடம் பிடிக்க திலகவதி முழுக்கவனமும் தன் ஒரு ஆண்மகனின் மீது திரும்பியது.

பிறந்தது முதல் கனலி பசிக்கு கூட பெரும்பாலும் அழுதது இல்லை, அதனால்தான் என்னவோ திலகவதியும் கனலியை விடுத்து தன் முழு அரவணைப்பையும் கார்த்திக்கிற்கு மட்டுமே வழங்கினார். இதனால் கனலி பிறர் அரவணைப்பு இன்றியே வளர்ந்தாள்.

வீட்டின் நிர்வாகம் முழுவதும் தன் கட்டுப்பாட்டில் என்று திலகவதி நினைத்துக்கொண்டிருக்க அவர் நினைப்பில் முதல் அடியாக வந்தது தினகரன் கவிதா காதல் திருமணம்.

திருமணம் முடிந்த பின்பும் அனைவரும் ஒரே வீட்டில் இருந்தாலும் முன்புபோல் தினகரன் முழு சம்பளப் பணத்தையும் தன் அண்ணியிடம் கொடுப்பது இல்லை. வீட்டில் தங்களுக்கான செலவுக்கான பணத்தை மட்டுமே அண்ணியிடம் தந்து விட்டு மீதியை தன் மனைவியிடம் தர ஆரம்பித்தார், இது அடுத்த இடியாக திலகவதி எண்ணத்தில் வந்து இறங்கியது.

இதனால் வீட்டில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட அதையெல்லாம் கருணாகரன் சமாளித்து தம்பி மற்றும் மனைவியின் காதுகளுக்கு செல்லாமல் பார்த்துக் கொண்டார்.

அடுத்த சில வருடங்களில் இனியன் யாழினி என்று தினகரன் குடும்பம் பெரிதாக, அவர்களின் செலவும் அதிகம் ஆக ஆரம்பித்தது. இதனால் திலகவதி வெளிப்படையாகவே முனுமுனுக்க ஆரம்பித்தார்.

கவிதா எவ்வளவு பொறுமையாக சென்றாலும் அவரை வம்பிழுப்பது வீட்டு வேலைகள் அனைத்தையும் கவிதா தலையில் கட்டுவது என்று இருக்க, கவிதா இது எதையும் தன் கணவனிடம் கூறியது கிடையாது. ஆனால் ஆறு வயது கனலி தன் தந்தையிடம் கூறி விடுவாள்.

கணவன் மனைவி இருவருக்கும் இடையில் அடிக்கடி பிரச்சனைகள் வர ஆரம்பிக்க, திலகவதிக்கு வீட்டில் யார் மீதாவது கோபம் ஏற்பட்டால் அதை கனலி மீதே காட்ட ஆரம்பித்தார்.

தன் மீது கோபப்படும் தாயிடமிருந்து விலக ஆரம்பித்த கனலி சித்தப்பா பிள்ளைகளுடன் அதிகம் நெருங்க ஆரம்பித்தாள்.

கனலிக்கு வீட்டில் இருப்பதை விட பள்ளியில் இருப்பது மிகவும் பிடிக்கும். ஏனெனில் பள்ளியில் இருக்கும் பெரும்பாலான நபர்கள் கனலி நண்பர்களே.

பட்டாம்பூச்சியின் சுறுசுறுப்புடன் அனைவரையும் சிரிக்க வைக்கும் கனலியை எல்லோருக்கும் பிடிக்கும். அவள் பள்ளிக்கு செல்ல விரும்ப இன்னொரு காரணம் ஃபாதர் ஆபிரகாம்.

அவள் எல்கேஜி சேர்ந்த அதே வருடம் பாதர் ஆபிரகாம் பங்குத்தந்தையாக வந்து சேர, அந்த பள்ளியின் பொறுப்பும் அவரிடம் தான் இருந்தது.

முதல்நாள் சந்திப்பிலிருந்து ஒரு இனம் புரியாத பாசம் இருவருக்குள்ளும் ஏற்பட்டது. நாட்கள் செல்லச் செல்ல கனலி தன் வகுப்பிற்கு செல்வதற்கு முன்பு பாதர் ஆபிரகாமை சந்தித்து விட்டு செல்வாள்.

மாலை வீடு திரும்பும் முன் அன்று நடந்த அனைத்தையும் அவரிடம் கூறிவிட்டு வீட்டிற்கு செல்வாள். இப்படியான அவர்களின் பாசப்பிணைப்பு கனலி நான்காம் வகுப்பு படிக்கும் பொழுது முடிவிற்கு வந்தது.

அபிரகாம் பணி மாற்றம் காரணமாக நாகர்கோவிலுக்கு மாற்றப்பட கனத்த மனதுடனே அங்கிருந்து சென்றார். ஆனாலும் வாய்ப்பு கிடைக்கும் பொழுது எல்லாம் வருடத்திற்கு ஒருமுறையாவது கனலியை மறக்காமல் சந்திக்க வந்துவிடுவார்.
அதுபோல கனலி தனக்கு தோன்றும் பொழுது எல்லாம் அவருக்கு கடிதம் எழுதுவாள்.

கனலி எட்டாம் வகுப்பு படிக்கும் சமயம் அவளது சித்தப்பா தினகரனிற்கு பக்கவாதத்தால் ஒரு காலும் ஒரு கையும் அதன் செயல்பாட்டினை நிறுத்திவிட, அவர் வீட்டோடு முடங்கிப் போனார்.

தினகரன் பிள்ளைகளையும் கருணாகரன் தன் பொறுப்பில் ஏற்று கவனித்துக்கொள்ள அதன்பிறகு வீடு போர்க்களமாக மாற ஆரம்பித்தது.

கனலி பனிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் பொழுது கமலி திருமணம் கிரிதரன் உடன் முடிந்தபின்பு ஒரு வேண்டுதலுக்காக திருப்பதி சென்றுவிட்டு திரும்பி வரும் வழியில் ஏற்பட்ட அந்த கோர விபத்தில் கருணாகரன், தினகரனை பழி வாங்கியது.

மற்றவர்கள் காயத்துடன் தப்பித்தாலும் குடும்பத்தின் இருந்த காெஞ்ச மகிழ்ச்சி அத்தோடு அழிந்து போனது.

விபத்திற்குப் பின்பு கவிதாவின் பெற்றோர் தங்களால் முடிந்த அளவு தன் மகளிர்க்கும் மகளுக்கும் பேரன் பேத்திகளும் உதவ அவர்களின் வாழ்வு பிரச்சனை இல்லாமல் சென்றது.

திலகவதி என்ன செய்வது என்று தெரியாத நிலையில் கார்த்திக் வீட்டுச் செலவை காரணம்காட்டி கடன் வாங்க ஆரம்பித்தான். கனலி இதையெல்லாம் கண்டிக்க சில சமயம் அண்ணனுடன் சண்டை பிடிக்க கார்த்திக் தன் தாயிடம்

"அப்பா செத்து போனதிலிருந்து இவ பைத்தியம் மாதிரி இருக்கா." என்று கூற, அதன் பின்பு கனலி நியாயமான பேச்சுக்கள் அனைத்தும் ஒரு பைத்தியத்தின் புலம்பல்களாக மட்டுமே அந்த வீட்டில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதன் பிறகு வீட்டுப் பிரச்சினைகள் எதிலும் கனலி தலையிட விரும்பவில்லை. அந்த வருடம் கனலியை பார்க்கவந்த ஆபிரஹாம் அவள் படிப்பு முடிந்ததும் கல்லூரிப் படிப்பை தான் பார்த்துக்கொள்வதாக வாக்களிக்க, அதில் முதலில் மகிழ்ச்சி அடைந்தது கார்த்திக்கே.

கனலி இங்கிருந்து சென்று விட்டால் தன் விருப்பம் போல செலவு செய்யலாம், மேலும் தந்தை பெயரில் இருக்கும் அனைத்து சொத்துக்களையும் விற்று அவற்றை தன் பெயரில் மாற்றிக் கொள்ளலாம் என நினைத்துக் கொண்டிருந்தான்.

திலகவதி முதலில் ஃபாதர் ஆபிரகாமுடன் கனலியை அனுப்ப மறுக்க, பின் கார்த்திக் சமாதான பேச்சில் ஒத்துக்கொண்டார். இதோ இப்பொழுது கிட்டத்தட்ட ஒரு வருடங்கள் முடிந்த பின்பு கனலி தன் பிறந்த ஊர் திரும்புகிறாள்.

பேருந்தை விட்டு கீழே இறங்கிய கனலி தனக்காக காத்திருந்த தன் தம்பி இனியன் பார்த்ததும் அதுவரை மனதில் இருந்த சஞ்சலங்கள் அனைத்தும் ஓடி மறைந்தது. மிகுந்த ஆரவாரத்துடன் அவன் அருகில் வந்து

"டேய் பொடியா ஒரு வருசத்தில எவ்வளவு பெருசா வளர்ந்துட்டா." என்று அவனை கட்டிக்கொள்ள அவனோ

"ஆமா இப்ப நா உன்னோட உயரத்துக்கு வந்துட்டேன். அடுத்த வருஷம் உன்ன விட அதிகமா வளர்ந்து விடுவேன்." என கூறி தமக்கையின் அருகில் நின்று அவன் உயரத்தை அளந்து காட்ட, கனலி வேகமாக அவனை தள்ளிவிட்டு

"நீ எவ்வளவு வளர்ந்தாலும் எனக்கு நீ பொடியன் தான்."

"நானா பொடியன், நீ தான் குட்டி. அதனாலதான் உன்னுடைய பாதர் ஆபிரகாம் உன்னை எப்ப பாத்தாலும் குட்டிமா குட்டிமா கூப்பிடுறாங்க."

"அவரும் என்னை செல்லமா கூப்பிடுறாரு."

"செல்லமா கூப்பிடல நீ குள்ளமா இருக்குறதுனால அப்படி கூப்பிடுறாரு."

"நான் ஒன்னும் குள்ளமா இல்ல, நான் இன்னும் வளரல அவ்வளவுதான். பொண்ணுங்க 21 வயசு வரைக்கும் வளருவாங்க. அப்படிப் பார்த்தால் நான் வளர்வதற்கு இன்னும் மூணு வருஷம் இருக்கு."

இவர்கள் இருவரும் சேர்ந்து பேருந்து நிறுத்தத்திலேயே நேரம் மறந்து வாயாடி கொண்டிருக்க, அங்கு தன் தாயுடன் வந்த பிரகாஷ்

"ஓய் குள்ள வாத்து எப்ப வந்த, நல்லா இருக்கிறியா?" என்று நெடுநாள் கழித்து பார்த்தன் பள்ளி தோழியை விசாரிக்க, ஏற்கனவே தன் தம்பி தன் உயரத்தை கேலி செய்ததில் கோபத்தில் இருந்த கனலி, பிரகாஷ் அருகில் அவன் தாயார் நிற்பதை கூட கருத்தில் கொள்ளாமல்

"யாருடா குள்ள வாத்து நானா, நீதான் நெட்டை குரங்கு, நெடுமரம்." என்று தன் மனதில் உள்ளதை எல்லாம் இறக்கி வைத்த பின்பு அருகில் இருந்த பிரகாஷ் தாயாரை கவனித்து

"அத்தை எப்படி இருக்கீங்க. நல்லா இருக்கீங்களா?" என்று கேட்க பிரகாஷ் தாயாரோ

"ஒரு வழியாக உனக்கு இந்த அத்தையை கண்ணுக்கு தெரிஞ்சிடுச்சா, எங்க எல்லாருக்கிட்டையும் சண்டை போடுற ஆர்வத்தில் இந்த அத்தையை கண்டுக்க மாட்டன்னு நெனச்சேன்."

"அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல அத்தை, இவங்க ரெண்டு பேரும் கடுப்பேத்திக்கிட்டு இருக்காங்க, இந்த தடியங்க ரெண்டு பேராலதான் நான் உங்களை கவனிக்கலை சாரி அத்தை." என்று அவரின் தோளோடு அணைத்து பிடித்தவண்ணம் செல்லம் கொஞ்சிக் கொண்டிருக்க, பிரகாஷ்

"அம்மா இந்த குள்ள வாத்து ஐஸ் வைக்கிற நம்பிடாதீங்க." எனக்கூற பிரகாஷ் தாயார் கனலியை ஆதரவாக பிடித்துக் கொண்டு

"சும்மா இருடா மடப்பயலே, கனலி சொல்ற மாதிரி நீங்க ரெண்டு பேரும் பணம் பனைமரத்தில் பாதி உசரம் வளர்ந்துட்டா அதுக்கு என் தங்க புள்ள கட்டையா, நம்ம ஊர்ல இருக்குற பொண்ணுங்கள முக்கால்வாசி பேரு இவளைவிட கட்டை தான்.

இன்னும் என் தங்க பிள்ளைக்கு கல்யா வளர்த்தி, பிள்ள வளர்த்தி இருக்கு, அப்போ இன்னும் உயரமா வந்துடுவா. அப்ப நீங்க ரெண்டு பேரும் தான் கட்டயா தெரிவிங்க." என கனலிக்கு ஆதரவாக பேச இனியன்

"அது என்ன கல்யாணம் வளர்த்தி, புள்ள வளர்த்தி." என்று முக்கியமான சந்தேகம் கேட்கும் வகையில் பாவனையில் கேட்க

"அதுவா பொண்ணுங்களுக்கு கல்யாணம் ஆகும்பொழுது கொஞ்சம் வளருவாங்க புள்ள பிறக்கும் பொழுதும் கொஞ்சம் வளருவாங்க." என்று கூற அதைக் கேட்ட பிரகாஷ்

"அம்மா உங்க காலத்துல 18 வயசுக்கு முன்னாடி கல்யாணம் பண்ணி இருபது வயசுக்குள்ள குழந்தையும் பிறந்தது. அப்ப நீங்க சொல்ற கணக்கு எல்லாம் சரியாய் இருக்கும்.
இப்போ உள்ள காலத்துல பொண்ணுங்க 24 வயசுக்கு அப்புறம் தான் கல்யாணத்தை பற்றி யோசிக்கவே ஆரம்பிக்கீறாங்க. அவங்களுக்கு எல்லாம் நீங்க சொல்ற இந்த வளர்த்தி கணக்கு சரி வராது. என்று பிரகாஷ் கூற அவனது தாயாரும்
"என்னமோ படிச்ச பிள்ளைங்க நீங்க சொல்றீங்க நாங்களும் கேட்கிறோம். சரி இனியா பேசிக்கிட்டே இருந்தா நேரம் தான் போகும். காலாகாலத்துல புள்ளைய சீக்கிரம் வீட்டுக்கு கூட்டிட்டு போ. எப்பம் சாப்பிட்டதாே சீக்கிரம் போய் சாப்பிட சொல்லு. எப்படியும் வீரபாண்டி கௌரி அம்மன் திருவிழா முடியும் வரை இங்கதான் இருப்பா அப்ப வந்து பிள்ளை கிட்ட பேசிக்கிறேன்."

பிரகாஷ் அவன் தாயாருடன் விடைபெற்றுச் செல்ல இனியன் தன் தமக்கையை அழைத்துக்கொண்டு வீடு நோக்கி புறப்பட்டான்.

வீட்டிற்குள் முன் வந்த நின்ற கனலி மெதுவாக தன் பார்வையைச் சுழல விட வீட்டில் நடமாட்டம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. கேள்வியாக தன் தம்பியை திரும்பி பார்க்க அவனோ

"வீட்ல இன்னும் யாரும் எழுந்திருச்சிருக்க மாட்டாங்க, அதான் வீடு அமைதியா இருக்கு."

"மத்தவங்க எல்லாம் ஓகே, ஆனா சித்தி இவ்வளவு நேரம் தூங்க மாட்டாங்களே."

"அது வந்து கா நான், அம்மா, யாழி எல்லாம் திருவிழாவுக்காக தாத்தா வீட்டுல இருக்கோம்." தம்பியின் பதிலில்

"இது உங்க அப்பா பிறந்த வீடு தானே, ஊர் திருவிழான்னு வந்தா நீ உங்க அப்பா வீட்டுல தான் இருக்குமே தவிர அம்மா பிறந்த வீட்ல இருக்க கூடாது." என்று கேட்க அவனோ

"இல்லக்கா திருவிழாவுக்கு ஊர்ல இருந்து எல்லாரும் வந்திருக்காங்க. வீட்ல இடம் இருக்காது தானே, அதான் நாங்க தாத்தா வீட்டுல இருக்கிறோம்." என்று கூற கனலி

"சரி நீ கிளம்பு, நான் அப்புறமா வந்து சித்தி, தாத்தா-பாட்டி எல்லாரையும் பார்க்க வரதா சொல்லு." என்று கிளம்ப மறுத்த தன் தம்பியை கட்டாயப்படுத்தி அனுப்பிவிட்டு திண்ணையில் அமர்ந்து கொண்டாள்.

நேரம் ஏழு மணியை தாண்டி சென்றிருக்க கனலி பசிக்க ஆரம்பித்தது. நேற்று இரவு பயணம் என்பதால் மாலையிலேயே உணவு உண்டிருக்க இடையில் எதுவும் சாப்பிடாமல் இருந்ததால் வயிறு பசிக்க ஆரம்பித்தது.

வீட்டிற்குள் செல்ல விருப்பமில்லாமல் திண்ணையிலேயே கால்நீட்டி கண் மூடி அமர்ந்துகொண்டாள். தன் அருகில் யாரே அமரும் ஆரவாரம் உணர்ந்து கண்களை திறந்து பார்க்க யாழினி நின்று காெண்டிருந்தாள்.

"யாழி எப்படி இருக்க, நல்லா இருக்கியா, வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்க."

"நான் நல்லா இருக்கேன் கா உங்கள் வீட்டில் வந்து விட்டுட்டு போனதா அண்ணே சொன்னாள். அதான் உங்கள பாத்துட்டு போகலாம்னு ஓடி வந்துட்டேன்." என்று கூறிவிட்டு தன் கையில் வைத்திருந்த தூக்கு வாளியையும் பொட்டலத்தையும் தர என்னவென்று பார்த்துக்கொண்டிருந்த கனலி

"நீங்க சீக்கிரமே வந்துடீங்க, உங்களுக்கு பசிக்கும்னு அம்மா காபியும் வடையும் கொடுத்து அனுப்பினாங்க. வடை வீட்ல போட்டது இல்லை, நம்ம மூர்த்தி அண்ணன் கடையில வாங்குனது தான்." என்று கூற

தன் சித்தியின் பாசத்தில் உள்ளம் நெகிழ்ந்த கனலி தனக்கு இருந்த பசியில் இரண்டு வடையையும் காபியையும் உள்ளே தள்ளிய பிறகு நிமிர்ந்தாள். கனலி சாப்பிட்டு முடித்ததும்

"சரி அக்கா நான் கிளம்புறேன். பெரியம்மா பாத்தா திட்டுவாங்க." என்று கூறிவிட்டு அங்கிருந்து சிட்டாகப் பறந்து விட்டாள்."
 
Top