Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கண் விழித்தேன் உன் நினைவில் ep 9

Advertisement

Sesily Viyagappan

Well-known member
Member
ப்ரெண்ட்ஸ் படிச்சிட்டு மறக்காம ரிப்ளே பண்ணுங்க.
நானும் உங்க பதிலுக்காக எவ்வளவு நேரமா காத்திருக்கிறேன்.
மீ பாவம்.
சாே பாஸ்டா ஒரு ரிப்ளே காெடுங்க
.



கண் விழித்தேன் உன் நினைவில்
--செசிலி வியாகப்பன்

அத்தியாயம் 8


திங்கள் கிழமை = கடுப்பு+சாேம்பேறித்தனம்+எரிச்சல்

'யாருடா கண்டுபிடிச்ச இந்த நாளை.'என பள்ளி செல்லும் சிறுவர்கள் முதல், வேலைக்குச் செல்லும் பெரியவர்கள் வரை அனைவரும் வெறுக்கும் நாள்.

"அம்மா ப்ளீஸ்மா இன்னும் கொஞ்ச நேரம் மட்டும் தூங்குறேன் மா." என்று அடம்பிடித்த பிள்ளைகள் மூவரையும் சமாளித்து பள்ளிக்கு தயார் செய்யும் முன்பு கனலி ஒரு வழி ஆகி விட்டாள்.

இன்று மட்டுமல்ல எல்லா திங்கள்கிழமையும் பிள்ளைகளுக்கு கொஞ்சம் சோம்பேறித்தனம் ஒட்டிக்கொள்ளும். தனக்கும் அப்படித்தான் என்றாலும் அதை பிள்ளைகளின் முன்பு காட்டிக் கொள்ள மாட்டாள்.

பிள்ளைகளுக்கான அனைத்தையும் எடுத்து தயாராக வைத்து விட்டு, தனக்கானதை எடுத்துவைக்க அவளுடைய லஞ்ச் பேக் தேட அது அதன் இடத்தில் இல்லாமல் இருந்தது. அலுவலகத்திற்கு தாமதமாவதை உணர்ந்து

"அம்மா நான் இங்கே டேபிள் மேல வச்சிருந்த என்னுடைய லஞ்ச் பேக் எங்க." என்று கேட்க அவள் தாயாரும் அலட்டிக்கொள்ளாமல்

"அண்ணி எடுத்துட்டு போயிட்டா."

"யாரை கேட்டு என்னுடைய பைக் எடுத்துட்டு போனாங்க."

"கனலி அண்ணி இன்னைக்கு புதுசா வேலைக்கு போற, இருக்கிற அவசரத்திலே தெரியாமல் எடுத்துட்டு போய் இருப்பா."

தாயுடன் வாக்குவாதம் செய்ததால் நேரம்தான் வீணாகும், அதனால் அலுவலகத்திற்கு மேலும் தாமதமாக செல்வது உறுதி என்பதை தெரிந்து கொண்டு, வீட்டை விட்டு கிளம்பினாள்.

கனலி எப்பொழுதும் காலை நேரம் என்பது மகிழ்ச்சியானதாக ஆரம்பிக்க வேண்டுமென்று விரும்புவாள். ஏனெனில் காலை மகிழ்ச்சியானதாக அமைந்துவிட்டால் அந்த நாளும் நல்லதாக இருக்கும் என்று அவளுக்கு ஒரு குருட்டு நம்பிக்கை.

இன்றைய நாளில் ஏற்பட்ட சிறு எரிச்சல் அவள் அலுவலகம் வரும் வரை தொடர்ந்து கொண்டே இருந்தது. இன்றைய நாள் தனக்கு நல்லதாக இருக்கப்போவதில்லை என்று அவள் உள் மனது அவளிடம் கூடிக்கொண்டே இருந்தது.

தன் இடத்திற்கு வந்து அமர்ந்த கனலி சென்ற வாரங்களில் வேலைகளைத் தொடர, ஜென்ரல் மேனேஜரிடம் இருந்து அழைப்பு வந்தது. இருக்கும் வேலைகளை விட்டுவிட்டு ராமின் அறைக்குள் வந்த கனலி காலையில் தனது கூறிய எச்சரிக்கை உணர்வு பொய்யில்லை என்பதை உணர்ந்து கொண்டாள்.

"குட் மார்னிங் கனலி, லாஸ்ட் மந்த் உங்களுடைய வொர்க் ரிப்போர்ட் எல்லாமே பக்காவா இருந்துச்சு. சோ இப் யூ டோன்ட் மைன்ட் அந்த எவர்கிங் கம்ப்யூட்டர் கம்பெனி கம்ப்ளீட் ரிப்போர்ட் நீங்க ப்ரிபேர் பண்ணா நல்லா இருக்கும்னு நான் நினைக்கிறேன்."

"ஓகே ராம் ஐ வில் ஹாண்டில் இட்."

"that's கிரேட் கனலி, அண்ட் ஒன் மோர் திங்க் திஸ் இஸ் பூஜா இன்னைக்குதான் வேலையில ஜாயின் பண்ணி இருக்காங்க." என்று அறிமுகம் செய்து வைக்க, புதிதாக ஒரு நபரை சந்தித்தால் வெளிப்படுத்தும் ஒரு அறிமுக புன்னகையை மட்டுமே கனலி வழங்கினாள்.

ஆனால் பூஜா கனலி இங்கு சற்றும் எதிர்பார்க்காததால் ஏற்பட்ட அதிர்ச்சியை மறைத்துக்கொண்டு வேண்டாவெறுப்பாக பார்த்து வைத்தாள்.

"பூஜா, கனலி இந்த கம்பெனியோட அசிஸ்டன்ட் மேனேஜர். உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் எனி டைம் கனலி கிட்ட கேட்கலாம்." என்று ராம் கூற அதைக்கேட்ட பூஜா

"சார் இது சாப்ட்வேர் கம்பெனி, நான் ஒரு கம்ப்யூட்டர் என்ஜினீயர் அப்படி இருக்கும் பொழுது என்னுடைய சந்தேகத்தை சாதாரணமா டிகிரி படிச்ச ஒருத்தர்கிட்ட கேட்டு தெரிஞ்சுக்க முடியுமா." என்று கூற, அதில் இருந்த எள்ளலை புரிந்து காெண்ட ராம் பூஜாவிடம்,

"பூஜா உங்களுக்கு ஆல்ரெடி கனலியை தெரியும்னு நினைக்கிறேன். உங்களுக்கு வேலையில சந்தேகம்னா உங்களுடைய டீம் லீடர் கிட்ட கேட்டுக்கணும். அண்ட் அட்மினிஸ்ட்ரேஷன் பத்தி ஏதாவது சந்தேகம் இருந்தா கனலி கெட்ட கேட்டுக்கோங்க.
அஸ் எ எம்ளாயி நீங்க அசிஸ்டன்ட் மேனேஜர் அவர்களுக்கான மரியாதையே நீங்க கொடுத்தா உங்களுக்கு ரொம்ப நல்லது.

உங்களுக்கு பர்சனலா கனலி மேலே ஏதாவது வென்ஜன்ஸ் இருந்தா அதன் ஒர்க்ல காட்டாம இருக்கிறது முயற்சி பண்ணுங்க. இல்லன்னா பெட்டர் யூ ஃபைன்ட் சம் அதர் ஜாப், யூ மே காே நவ்." என்று கடுமையாக கூற,

தான் யாரை அவமானப்படுத்த வேண்டும் என்று பூஜா நினைத்தாலாே, அவள் முன்னே தான் சிறுமைப்படுத்த படுவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் அமைதியாக அந்த இடத்தை விட்டு வெளியேறினாள்.

பூஜா அந்த இடத்தை விட்டு வெளியேறியதும் ராம் கனலியிடம்

"கனலி உங்களுக்கு பூஜாவை முன்னாடியே தெரியுமா."

"எஸ் ராம், அவங்க என்னுடைய அண்ணி தான்."

"கனலி பூஜாகிட்ட சொன்னதையேதான் உங்க கிட்டயும் நான் சொல்றேன், உங்களுக்குள்ளே இருக்கிற பர்சனல் ப்ராப்ளத்தை வொர்க்ல காட்டாதீங்க. ஏதாவது பிரச்சனை வந்தால் நிச்சயம் பாஸ் எடுக்கிற முடிவு நல்லதாக இருக்காது."


"டோன்ட் வாெரி ராம் என்னால எந்த பிரச்சனையும் வராது."

"வராம இருக்கணும், நான் கேட்ட ரிப்போர்ட் இன்னும் த்ரீ டேஸ்ல கெடச்சா ரொம்ப நல்லது. பாஸ் பெங்களூர் கம்பெனி விசிட் முடிச்சுட்டு வரும்பொழுது அவர்கிட்ட இந்த ரிப்போர்ட் காட்டணும்."

"ஐ வில் டூ மை பெஸ்ட் ராம்."

_________________________________________________________

தன் வாழ்க்கை எதை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது என்பதை கனலியால் அறிய முடியவில்லை.

கனலி படிப்பை மட்டும் மூலதனமாக நினைத்து வாழ, அவள் மனதில் காதல் புகுந்து கொண்டது.

அந்த காதலால் தன் வாழ்வு இனிமையாக மாறும் என்று கனவு கண்ட பொழுது, அதை தொலைத்து கண்காணாத இடத்திற்கு ஓட வேண்டிய நிலை ஏற்பட்டது.

நடந்த அனைத்தையும் மறந்து தன் தமக்கையின் பிள்ளைகளுடன் ஒரு வாழ்வை ஏற்படுத்திக் கொண்ட பொழுது, தான் கைகழுவிய விட்டு வந்த காதல் அவள் கண் முன் வந்து நின்றது.

விஜி தன்னை பார்த்த பின்பு ஒரு பூகம்பத்தை எதிர்பார்த்த கனலிக்கு, விஸ்வஜித் அமைதி ஒரு பயத்தை கொடுத்தது.

அவன் தன்னை திட்டி இருந்தாலும், அடித்து இருந்தாலும், இல்லையெனில் ஏதேனும் தண்டனை கொடுத்து இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள தயாராகவே இருந்தாள்.

ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை, அதுமட்டுமல்லாமல் இங்கு வந்த எத்தனை நாட்களில் கனலி விஸ்வஜித்தை சந்தித்தது விரல்விட்டு எண்ணக்கூடிய சந்தர்ப்பங்களில் மட்டுமே.

அப்பொழுதும் வேலை விஷயமாக பேச்சுவார்த்தைகளுக்கு மேல் அதிகமாக ஒரு வார்த்தையை கூட அவன் பேசியது இல்லை, கனலி பேச முயற்சி செய்யவும் இல்லை.

தன் மேசையின் மீது இருக்கும் டெலிபோன் ஓசையில் தன் சிந்தனைகளிலிருந்து விடுபட்ட கனலி எடுத்துப் பேச

"கனலி பாஸ் வந்துட்டாரு நான் சொன்ன ரிப்போர்ட் அவர் ரூம்க்கு கொண்டு வந்துருங்க."

ராமிடம் இருந்து அழைப்பு வந்ததும், எவர்கிங் கம்பெனி சம்பந்தப்பட்ட ஃபைல்களையும் தான் தயாரித்த ரிப்போர்ட் அனைத்தையும் எடுத்து வைக்க, அதில் ஏதோ ஒரு உந்துதலில் கனலி அனைத்தையும் சரியாக இருக்கின்றதா என்று பார்த்தாள்.

பைல்கள் அனைத்தும் சரியாக இருக்க ரிப்போர்ட் பைல் வெற்று காகிதமாக இருந்தது. அவசரமாக கம்யூட்டரை பார்க்க கம்ப்யூட்டரில் எவர்கிங் கம்பெனி சம்பந்தப்பட்ட போல்டர்களும் காலியாக இருந்தது.

எவ்வளவு யோசித்தும் எப்படி இது நடந்தது என்று தெரியாமல் கனலி குழம்பு தவித்தாள். நேரம் செல்லச் செல்ல கனலிக்கு பதட்டம் அதிகரிக்க என்ன செய்வது என்று தெரியாமல் அமர்ந்து இருந்தாள்.

கனலி வருவதற்காக காத்திருந்த ராம், வெகுநேரமாக கனலி வராமல் போக அவள் இடம் நோக்கி வந்தான். கனலி தலையில் கைவைத்து அமர்ந்து இருக்க

"கனலி எதுக்காக இப்படி உட்கார்ந்து இருக்கீங்க, நான் கேட்ட ரீப்பாேர்ட் என்ன ஆச்சு." என்று கேட்க கனலி நடந்ததை கூற,

"ராம் பைல் மிஸ் ஆகிட்டு."

இதுநாள் வரை தன்னிடம் நட்பாக பேசும் ராமா இது என்று எண்ணுமளவுக்கு ராமின் ஒவ்வொரு வார்த்தைகளும் இருந்தது.

அலுவலகத்தில் இருந்த அனைவரும் தங்களை வேடிக்கை பார்க்க, ராம் கோபமாக பேசப் பேச கனலி மிகவும் அவமானமாக இருந்தது.

மற்ற நேரமாக இருந்திருந்தால் கனலி தானும் பதிலுக்கு பேசியிருப்பாள். ஆனால் இப்பொழுது தப்பு தன்மீது என்பதால் அவமானத்தில் பேசமுடியாமல் குன்றிப்போய் குனிந்து தலை குனிந்து நின்றாள்.

கண்களில் கண்ணீருடன் நிமிர்ந்த கனலி கண்பார்வை வட்டத்திற்குள் விழுந்த பூஜாவை பார்த்த அடுத்த நொடி கனலிக்கு நடந்த அனைத்திற்கும் காரணம் யார் என்று விளங்கியது.

ஆனால் இப்பொழுதுதான் பூஜாவை பற்றி எது கூறினாலும் அதை நிரூபிப்பதற்கான ஆதாரம் தன்னிடம் இல்லை. தன் நிலையை நினைத்து தனக்குள் எழுந்த சுய பச்சாதாபத்தில் ரத்தமென சிவந்து நிற்க, அங்கே வந்த விஸ்வஜித்

"ராம் என்ன ஆச்சு எதற்காக இங்கே இவ்வளவு சத்தம்." என்று கனலி முகத்தை பார்த்துக்கொண்டே கேட்க, ராம் நடந்ததை கூற, ஒரு நிமிடம் யோசித்த விஸ்வஜித் கனலி கழுத்தை சில வினாடிகள் பார்த்துவிட்டு கனலியிடம்

"கனலி உங்ககிட்ட கொடுத்தது ரொம்ப முக்கியமான வேலை இத நீங்க செய்யும்பொழுது பேக்கப் மாதிரி ஏதாவது எடுத்து வச்சிருக்கீங்களா." என்று கேட்க அதன்பிறகே கனலிக்கு நினைவு வர

"இருக்கு." என்று கண்ணீர் கன்னத்தில் இறங்க கூற, அவள் கண்ணீரை துடைக்க துடித்த கைகளை கட்டுப்படுத்திக்காெண்டு

"எடுத்துக்கிட்டு என்னுடைய ரூமுக்கு வாங்க." எனக் கூறிவிட்டு அங்கிருந்து அகன்று விட அதுவரை தலைகுனிந்து நின்ற கனலி, தன் முகத்தை சீராக்கி கொண்டு விஸ்வஜித் அறை நோக்கி சென்றாள்.

அனுமதி கேட்டு உள்ளே வந்த கனலி தன் கழுத்தில் இருந்த செயின் உடன் கோர்க்கப் பட்டிருந்த பென்டிரைவ் எடுத்து விஸ்வஜித் டேபிள் மீது வைத்தாள்.

அதை சில வினாடிகள் பார்த்த விஸ்வஜித் ஒன்றும் பேசாமல் அதை எடுத்து தன் கணினியில் பொருத்தி தனக்குத் தேவையான தகவல்கள் அனைத்தையும் தனது கணினிக்கு மாற்றிவிட்டு, பென்டிரைவ்வை கனலி திரும்பத் தர, அதை கையில் எடுத்த கனலி அங்கிருந்து செல்லாமல் அப்படியே நிற்க, நிமிர்ந்து பார்த்த விஷ்வா என்ன என்று பார்வையால் கேட்டான்.

விஸ்வா பார்வையில் இருந்த இந்த கேள்வியை புரிந்து கொண்டு அவன் அருகில் கனலி வர அவள் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்த விஷ்வா எழுந்து நின்றான்.

அடுத்த நொடி கனலி தன் விஜியை இறுக அணைத்து இருந்தாள். தற்பாெழுது கனலிக்கு வேறு எதுவும் நினைவில் இல்லை. நினைவு இருந்தது எல்லாம் நீண்ட நாட்களுக்குப் பின்பும் முக்கியமானதை பென்டிரைவின் சேமிக்கும் தன் பழக்கத்தை நினைவுகூர்ந்து, பெரிய அவமானத்தில் இருந்து தன்னை காத்த தன் விஜி மட்டுமே."

எவ்வளவு நேரம் கனலி விஸ்வாவை அனைத்து இருந்தால் என்று இருவரும் அறியவில்லை. கனலி சுய உணர்வை பெற்றதும் விஷ்வா முகத்தை நிமிர்ந்து பார்க்காமல் அந்த அறையை விட்டு வெளியேறினாள்.

அறையை விட்டு வெளியேறிய கனலியை பார்த்துக்கொண்டு இருந்த விஷ்வா இதழில் ஒரு புன்னகை தோன்றி மறைந்தது.

"ஒரு வழியா மேடம் என்கிட்ட வந்துட்டீங்க. இந்த தடவை நீதான் என்கிட்ட வரணும் கனலி. ஏன்னா நான் உன்கிட்ட வந்தப்போ உனக்கு என்னுடைய அருமை தெரியாம போயிடுச்சு. சோ திஸ் டைம் யூ ஒன்லி."

விஷ்வா அறையை விட்டு வெளியில் வந்ததும் மீண்டும் அனைவரும் முன்பே ராம் கனலி மன்னிப்பு கேட்டான். ஆனால் அந்த நிமிடம் கனலி இருந்த மனநிலையில் ராம் தன்னிடம் என்ன பேசினால் என்பதையே உணரும் நிலையில் இல்லை.

ஏதோ குத்துமதிப்பாக தலையை ஆட்டி விட்டு தன்னிடத்தில் வந்து அமர்ந்தாள். அதன்பிறகு கனலி நடந்ததை மறந்து சற்று இறுக்கம் தளர்ந்து இருப்பது போலவே உணர்ந்தாள்.

_________________________________________________________

மதியம் அனைவரும் உணவு அருந்தும் நேரம் தன் அருகில் இருந்த பெண்களுடன் பேசிக்கொண்டே பூஜா உணவருந்திக் கொண்டு இருந்தாள்.

அப்பொழுது பெண்கள் அனைவரும் தங்கள் தங்களுக்கிடையில் ஏதோ ஒன்றை பற்றி பேசிக்கொண்டு இருக்க, அப்பொழுது அன்று காலையில் ராம் கனலியை திட்டிய சம்பவத்தைப் பற்றியும் பேச்சு எழுந்தது.

கிடைத்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக்கொள்ள நினைத்த பூஜா தன் அருகில் இருந்த விமலாவிடம்

"ஏன் விமலா அசிஸ்டன்ட் மேனேஜர் கனலி நம்ம கூட சாப்பிட வர மாட்டாங்களா." என்று கேட்க அதற்கு விமலா பதில் கூறும் முன்பு அவள் அருகில் இருந்த சரிதா

"அது கொஞ்சம் தலைக்கனம் புடிச்ச ஆளு. என்னமோ நம்ம கூட இருந்தா அவங்க மரியாதை குறைஞ்சிடும்னு நினைச்சு எப்பவும் தனியா தான் இருக்கும். அது மட்டும் இல்ல இங்க யாருக்கும் அது கூட பேச பிடிக்காது."

தன் எதிரியை பிடிக்காது என்று கூறும் சரிதாவின் புறம் திரும்பி

"ஏன் அவள பிடிக்காது?" என்று காரணத்தை கேட்க, புரணி பேசுவதை விருப்பமாக கொண்ட சரிதா

"உங்களுக்கு ஒன்னு தெரியுமா அந்த கனலி சிங்கிள் மதர். இவள் நல்லவளா இருந்தா இவ புருஷன் எதுக்காக இவளை விட்டுட்டு போகப் போறான்.
என்னமோ இந்த ஆபீஸ்ல ஜெனரல் மேனேஜர் ராம் மட்டும்தான் வேலை பார்க்கிற மாதிரி அவர தவிர வேற யாருகிட்டயும் பேச மாட்டா.
அதான் இன்னைக்கு அவரு திட்டவும் மேடம் மூஞ்சி சுருங்கி போச்சு." என்று கூற சுற்றியிருந்த அனைவரும் சத்தமாக சிரித்தனர்.

சரிதா கனலி பற்றி நினைக்கும் கருத்தை சரியாக பயன்படுத்திக்கொண்ட பூஜா,

"எனக்கு இவளை நல்லவே தெரியும், ஸ்கூல் படிக்கும்போது பிரகாஷ் அப்படின்னு ஒருத்தனை காதலிச்சா, அதுக்கு அப்புறம் காலேஜ் படிக்கும் பொழுது வேற எவனோ ஒருத்தன் லவ் பண்ணதா கேள்விபட்டேன்.

காலேஜ் முடித்து வரும்பொழுது அவனை கழட்டிவிட்டு பிரகாஷ் கூட சுத்திக்கிட்டு இருந்தா. குடும்பம் குழந்தைகள் என ஆனபிறகும் அவளுடைய குணம் மாறவே இல்லை.

இப்போ வேலை பாக்குற இடத்துல ராம், இவளுக்கு மட்டும் எங்க போனாலும் ஏதாவது ஒரு ஆம்பள கிடைச்சிடுவாங்க." என்று வார்த்தைகளில் விஷத்தை உதட்டை தடவி பேச சுற்றியிருந்த அனைத்து பெண்களும் அதை உண்மை என்றே நம்பினர்.

கனலி சிங்கிள் மதர் என்ற ஒரு வார்த்தையே அவளை பற்றி கீழான அவர்களின் சிந்தனைக்கு பாேதுமானதாக இருந்தது.

பூஜா கவனமாக கனலிக்கு திருமணமாகததையும், அவளிடம் இருக்கும் குழந்தைகள் கமலி குழந்தை என்பதையும் மறைத்தாள்.

பூஜா அவர்களிடம் கூறிய விஷயம் காட்டுத் தீ போல அந்த ஆறு மாடிக் கட்டிடத்தின் பணிபுரிந்த அனைவரின் காதுகளையும் பல்வேறு வடிவம் பெற்று சென்று அடைந்தது.


அடுத்த நாளிலிருந்து அங்கு வேலை பார்க்கும் ஒவ்வொருவரின் பார்வையும் தன்னை கேலியாகவும், கீழ்த்தரமாகவும் பார்ப்பதை உணர்ந்த கனலிக்கு எதனால் என்பது அவளுக்கு தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் இது அனைத்திற்கும் காரணம் பூஜா மட்டுமே என்பது அறிந்து இருந்தாள்.

இந்தச் சூழ்நிலையில் விகே குரூப் ஆஃப் கம்பெனியின் கிளை சென்னையில் தொடங்கி நான்கு வருடம் முடிந்து ஐந்தாவது வருடம் ஆரம்பிக்கும் நாளும் வந்தது.

ஒவ்வொரு ஆண்டும் அந்த நாளில் மிகப் பெரிய விருந்து ஒன்று ஏற்பாடு செய்து கொண்டாடப்படும். மாலையில் ஆரம்பிக்கும் அந்த விருந்தானது இரவு வரை நடைபெறும்.

அந்த விருந்து கொண்டாட்டத்தில் கம்பெனியில் வேலை செய்யும் பெரும்பாலோனோர் ஏதாவது கலை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க, பாடல் நடனம் நாடகம் கவிதை என அன்றைய நாள் காெண்டட்டமாக இருக்கும்.

கலை நிகழ்ச்சிக்கு நடுவே பலவித உணவு வகைகளுடன் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெறும். அவ்விழாவில் எப்பொழுதும் தவறாமல் ஆனந்த் கலந்து கொள்வான். தன் நண்பனின் ஒவ்வொரு முன்னேற்றத்திலும் பங்கெடுத்துக் கொள்வது ஆனந்திற்கு எப்பொழுதும் பிடிக்கும்.

அனந்த் தான் கலந்து கொள்வதுடன் மட்டுமல்லாமல் தனது இலகுவான பேச்சால் அனைவரையும் சிரிக்க வைத்து விட்டு செல்வான்.

அந்த ஒரு நாள் மட்டும் விஸ்வா மற்றவர்களின் கொண்டாட்டத்தில் தலையிட மாட்டான். அது ஒன்றே அனைவரும் இயல்பாய் இருக்க போதுமான ஒன்றாக இருந்து.

எப்பொழுதும் காட்டன் சேலையில் மட்டும் அலுவலகத்திற்கு வரும் கனலி இன்று விருந்திற்காக சற்று கவனமாக தன்னை அலங்கரித்துக் கொண்டு வந்திருந்தாள்.

இன்றைய விழா விஜி தன் தொழில் வாழ்க்கையில் பெற்ற வெற்றிகளின் கொண்டாட்ட விழா. அதனால் உள்ளத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சி அவள் முகத்திலும் பிரதிபலித்தது.

அன்று கடற்கரையில் கிருபாலி விஸ்வாவை அப்பா என்று அழைத்த ஒன்றே விஸ்வா தன் நினைவில் திருமணம் செய்து காெள்ளமல் வாழ்கின்றன் என்பதே கனலிக்கு பாேதுமானதாக இருந்தது.

வெள்ளை டிசைனர் நிற புடவையில் உடல் முழுவதும் சிகப்பு நிற ரோஜாக்கள் பூத்திருப்பது போன்ற அந்த சேலை பந்தமாக கனலி உடலை தழுவி இருந்தது.

காதுகளில் சிவப்புக்கல் பதித்த தோடு, கழுத்தில் வழக்கமாக போதும் மெல்லிய செயினிற்கு பதிலாக சற்று பெரிய செயின் என, மையிட்ட விழிகளுடன் வந்தவளை பார்த்த விஷ்வா தன் பார்வையை அவள் மீது பதிய விடாமல் இருக்க சிரமப்பட்டுப் போனான்.

மற்றவர்களின் கருத்தை கவராத வண்ணம் அவன் பார்வை முழுவதும் கனலி மீதே இருந்தது.

நிகழ்ச்சி ஆரம்பித்து சிறிது நேரத்தில் கனலி அங்கிருந்து செல்வதை கவனித்த விஷ்வா யாரின் கவனத்தையும் படாமல் அங்கிருந்து வெளியேறி அவள் பின் சென்றான்.
ரெஸ்ட் ரூம் சென்று விலகி இருந்த தன்னுடைய சேலையை சரி செய்து கொண்டு வெளியில் வர அங்கு நின்றுகொண்டிருந்த விஷ்வா அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

கனலி அவ்விடம் இருந்து விலகிச்செல்ல நினைக்க அவளை ஒரு கையால் பிடித்து தடுத்து நிறுத்திய விஷ்வா, யாரும் பார்க்கவில்லை என்பதை உறுதி செய்துகொண்டு, அங்கிருந்த தூண் மறைவிற்கு அவளை இழுத்துச் சென்றான்.

அவன் செயல்கள் ஒவ்வொன்றிலும் அதிர்ந்து நின்ற கனலி தோற்றம் அவனுள் ஏதோ மாயம் செய்ய, அவளைத் தன்னிடம் வர வைக்க வேண்டும் என்று தன் மனதிற்குள் அவன் செய்த சபதம் அனைத்தையும் மறந்தான்.

அவளருகில் நெருங்கி நின்று கனலி முகத்தின் வரிவடிவத்தை அளவிட்ட விஷ்வா விரல்கள் அவள் தோள்களில் இளைப்பாற, அவன் விரல்கள் விட்ட பணியை அவன் இதழ்கள் தொடர்ந்தது.

எதிர்ப்பின்றி நின்றவளின் நெற்றியில் தன் இதழை பதித்த விஷ்வா, அவள் நெற்றி கண் என ஒவ்வொரு இடமாக தன் இதழை பதித்து, இறுதியில் அவள் கன்னத்தில் வந்து இளைப்பாறினான்.

அடுத்ததாக அவள் செவ்விதழ்கள் நோக்கி தன் பயணத்தைத் தொடர, யாரோ வரும் ஆரவாரத்தில் தன்னை மீட்டுக் கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டான்.

அவன் சென்ற பின்பும் நெடுநேரம் மாேனநிலையில் தன்னை மறந்து நின்றுகொண்டிருந்த கனலி ஒருவழியாக தன்னை சமாளித்துக் கொண்டு பார்ட்டி நடைபெறும் இடத்தை நோக்கி சென்றாள்.

பார்வையால் தன் காதலியை வருடிக் கொண்டு இருந்த விஷ்வாவை ஆனந்த் அங்கே இருந்து அழைத்துச் சென்றான்.

அழகு தேவதை தேவதையாக நின்ற கனலின் மீது சிலர் உரசிக் செல்ல கனலி வெறுப்புடன் அவர்களை நிமிர்ந்து பார்க்க அவர்களோ, கனலியை பார்த்து கோணல் சிரிப்பு ஒன்று சிரித்துவிட்டு,

"என்ன பேபி ராம் மட்டுதான் ஆம்பள இல்லை நாங்களும்தான். அதை நிரூபிச்சாதான் நீ நம்புவன்னா வி ஆர் ரெடி பார் தட்." என்று அவளின் கன்னம் தட்டி செல்ல,

இருக்கும் சூழ்நிலையை புரிந்து கொண்டு தன் கோபத்தை கட்டுப்படுத்தி அமர்ந்து இருந்தாள். காேபத்தை கட்டுப்படுத்த முடிந்தவளால் அவள் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை.

சிறிது நேரத்தில் கலைநிகழ்ச்சி ஒவ்வொன்றாக ஆரம்பமாக விஸ்வா தனக்கான இருக்கையில் அமர்ந்து இருந்தாலும் அவன் பார்வை கனலி தொடர்ந்து கொண்டே இருந்தது.

அவளின் சிறுசிறு அசைவுகளும் அவனுள் அவளின் மீதான தாபத்தை அதிகரித்துக்கொண்டிருந்தது. அதேசமயம் அவள் கண்களில் இருந்து ஈரமும் அவன் கண்களுக்கு தப்பவில்லை.

கனலி அருகில் சென்று அவள் துன்பத்திற்கான காரணம் என்று என்று கேட்டு சமாதானம் செய்ய வேண்டும் என்று நினைத்த மனதை கட்டுப்படுத்திக்கொண்டு அமர்ந்து இருந்தான்.

ஆனந்த் மேடையில் ஏறி வழக்கமான தன்னுடைய நகைச்சுவை பேச்சால் அனைவரையும் சிரிக்க வைத்துவிட்டு

"அடுத்ததாக என் உயிர் நண்பன், அதான் உங்களுடைய பாஸ் விஸ்வஜித் இப்பாே பாடுவார்." என்று அறிவிக்க,

இதை சற்றும் எதிர்பார்க்காத விஷ்வா மறுக்க ஆனந்த் 'நீ பாடிய தீரவேண்டும்' என்று வற்புறுத்த வேறுவழியின்றி விஷ்வா மேடைக்கு சென்றான்.

கனலி மீது தன் பார்வையை நிலைக்கவிட்ட விஸ்வா தன் உணர்வுகளை பாடலாக பாடினான்.

கன்னத்தில் முத்தத்தின் ஈரம் அது காயவில்லையே
கண்களில் ஏனந்தக் கண்ணீர் அது யாராலே
கன்னியின் கழுத்தைப் பார்த்தால் மணமாகவில்லையே
காதலன் மடியில் பூத்தாள் ஒரு பூப்போலே
மன்னவனே உன் விழியால் பெண் விழியை மூடு
ஆதரவாய்ச் சாய்ந்துவிட்டாள் ஆரிரரோ பாடு
ஆரிரரோ இவர் யார் எவரோ பதில் சொல்வார் யாரோ

என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியா
என்ன சத்தம் இந்த நேரம் கதிரின் ஒளியா
கிளிகள் முத்தம் தருதா
அதனால் சத்தம் வருதா...அடடா...

அவன் பாடலின் அரங்கத்திலிருந்த அனைவரும் கட்டுண்டு இருக்க, யாருக்காக பாடினானாே அவள் அங்கிருக்க முடியாமல் அங்கிருந்து வெளியேறினாள்.

நினைவு நிஜமாகுமா.......
 
Last edited:
Top