Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கனவுப் பூக்கள்...அத்தியாயம் 2

Advertisement

Srija Venkatesh

Well-known member
Member
அத்தியாயம் 2.

மேலும் இரு வாரங்கள் சென்றன. ஆனால் அகிலாவுக்கு வேலை கிடைக்கவில்லை. மனம் நொந்து போனாள் அவள். அம்மாவும் மிகவும் கவலைப் பட்டாள்.

"அகிலா! நாம பேசாம கிராமத்துக்கே போயிடலாமாடி? உனக்கு இங்கே வேலை கிடைக்காது போல இருக்கே?"

"போயி? என்ன பண்ண? அங்க மட்டும் எனக்கு வேலை கெடச்சிடுமா?"

"நான் பாட்டுக்க ஸ்கூல்ல டீச்சரா வேலை பாத்துக்கிட்டு இருந்தேன் அதையும் விட வெச்சு என்னை இங்க கூட்டிக்கிட்டு வந்து..ஹூம்! நான் உனக்கு பாரமா ஆயிட்டேன். அதை நெனச்சாத்தான் எனக்குக் கவலையா இருக்கு"

"அம்மா பிளீஸ்! தனியா நின்னு போராடி நீ என்னை வளத்த? அப்ப நான் உனக்கு ஒரு பாரமாத் தெரிஞ்சேனா? சொல்லும்மா தெரிஞ்சேனா?"

"இல்லை கண்ணம்மா! நீ தான் என்னோட பலம். நான் உயிர் வாழ்ந்ததே உனக்காகத்தான்"

"அப்ப எனக்கு மட்டும் பாசம் இல்லாமலா போகும்? கொஞ்ச நாள் பொறுத்துக்கம்மா எல்லாம் சரியாப் போயிடும்"

"கையில இருக்கற பணம் காலியாகிக்கிட்டே வருதேம்மா! உனக்கு கல்யாணம் வேற நான் செஞ்சு வைக்கணும்! இதெல்லாம் எப்ப நடக்குமோ எனக்குத் தெரியல்ல! ஆண்டவன் என்னை ரொம்ப சோதிக்கறான். அவ்ள தான் சொல்ல முடியும்"

"மனசைத் தளர விடாதம்மா! இன்னிக்கு ஒரு கம்ப்யூட்டர் கம்பெனியில நேர்முகத் தேர்வு இருக்கு,. அங்க எனக்கு வேலை கெடச்சிடும். பாக்கலாம்"

"ஏம்மா! நீ அந்தத் தம்பி ஆனந்துக்கு யாரையாவது தெரியுமான்னு கேளேன். அவரு பெரிய ஆபீஸ்ல தானே வேலை செய்யிறாரு. அங்க உனக்கு ஒரு வேலை வாங்கித் தர மாட்டாரா?"

"ஏம்மா அவரைப் போட்டு தொந்தரவு பண்ணணும்? ஏதோ இரக்கப்பட்டு நம்மை கொறஞ்ச வாடகைக்கு இந்த வீட்டுல தங்க வெச்சிருக்காரு. மேற்கொண்டும் அவரையே வேலை வாங்கித்தான்னு சொன்னா நல்லாவா இருக்கும்?"

"சரி சரி! சாப்பிட்டுட்டுக் கிளம்பு ! இன்னிக்காச்சும் வேலை கிடைக்கட்டும்" என்று சொல்லி அகிலாவை அனுப்பினாள் அம்மா ராதா.

நேர்முகத் தேர்வை முடித்துக் கொண்டு பஸ்ஸுக்காகக் காத்திருந்தாள். அப்போது ஆனந்த் திடீரென வந்தான்.

"என்ன அகிலா இங்க நிக்கறீங்க? எங்க போகணும்? நான் டிராப் பண்றேன்" என்றான்.

"ம்ச்சு! எங்க போக! மனசே சரியில்ல சார்! எங்கியாவது கண்காணாம போயிடலாமான்னு தோணுது" என்றாள் விரக்தியாக.

ஆனந்துக்கு அவளைப் பார்க்க பாவமாக இருந்தது. இளம் வயதில் ஒவ்வொரு பெண்கள் முகத்தை மூடிய துப்பாட்டா போட்டு இஷ்டத்துக்கு ஊர் சுற்றி வரும் போது இவள் மட்டும் பாவம் ! அம்மா ! குடும்ப பாரம் என்று இருக்கிறாள். என நினைத்தான்.

"என்ன சார் யோசிக்க்றீங்க? இவங்களுக்கு ஏன் தான் இடம் கொடுத்தோமோன்னா? கவலைப் படாதீங்க கரெக்டா வாடகை கொடுத்துடுவோம்"

"அகிலா! உங்களுக்கு ஆட்சேபணை இல்லேன்னா அதோ ஒரு காப்பி ஷாப் இருக்கு. அதுல போயி நாம பேசுவோமா? எனக்கு இப்பக் காப்பி குடிக்கலைன்னா தலை வலி வந்துடும்" என்றான்.

அவளும் மறுக்காமல் வந்தாள்.

காப்பி ஷாப்பில் கூட்டமில்லை. மெல்லிய சங்கீதம் கசிந்து கொண்டிருந்தது. ஆங்காங்கே திட்டுக்களாக இளம் ஆணும் பெண்ணுமாக உலகத்தை மறந்த நிலையில் அமர்ந்திருந்தனர். அவர்களைப் பார்த்ததும் வெட்கம் சூழ்ந்தது அகிலாவுக்கு.

"என்ன சார்! இங்க ஒரே காதலர்களா இருக்காங்க? எனக்கு வெக்கமா இருக்கு"

"ஓ! நீங்க கிராமத்துல இருந்து வரீங்க இல்லியா? அதான் உங்களுக்கு இதெல்லாம் புதுசா இருக்கு. இங்க இது சகஜம். யாரும் யாரையும் கண்டுக்க மாட்டாங்க! நீங்க பாட்டுக்கு உக்காருங்க" என்றான்.

ஒரு மூலையில் இருவரும் அமர்ந்தார்கள். அந்த மங்கிய வெளிச்சத்தில் அகிலா தேவதையாகத் தோன்றினாள் அவன் கண்களுக்கு. காதில் பிளாஸ்டிக் தோடு ! கைகளில் வளையல் இல்லை! கழுத்தில் ஒரே ஒரு கிரிஸ்டல் மாலை. என்று எளிமையாக இருந்தாலும் அவளின் அக அழகால் முகம் பிரகாசமாகத் தோன்றியது.

"என்ன என்னையே பாத்துக்கிட்டு இருக்கீங்க?" என்றவுடன் சுய உணர்வுக்கு வந்தான்.

"ஆமாம்! நான் கேக்கணும்னு நெனச்சேன்! நீங்க எதுக்கு கிராமத்துலருந்து சென்னை வந்தீங்க? உங்கப்பா எங்க இருக்காரு? நான் வந்த அன்னிக்கே கேட்டிருப்பேன். தப்பா நெனச்சுப்பீங்களேன்னு தான் கேக்கல்ல!"

"சொல்றேன் சார்! எங்களுக்கு ஊர் திருநெல்வேலிப் பக்கம் ஒரு கிராமம். எனக்கு நினைவு தெரிஞ்ச நாளா நான் எங்கப்பாவையே பாத்ததில்லை. ஆனா அவர் கட்டுன தாலி மட்டும் எங்கம்மா கழுத்துல தொங்குது. எப்பவாவது அவரைப் பத்திக் கேட்டா அம்மா ரொம்பக் கோவப்பட்டுக் கத்தி அப்படியே மயக்கமாயிடுவாங்க"

"பாவமே! அப்ப உங்கப்பா உயிரோட தான் இருக்காரு இல்லியா?"

"ஆமா! நானே அவரை ரெண்டொரு தடவை பாத்திருக்கேன். ஊர்ல எங்கம்மா ஒரு ஸ்கூல்ல டீச்சரா இருந்தாங்க! என்னையும் படிக்க வைச்சாங்க! நான் கல்லூரிப் படிப்பை முடிக்கவும் அங்கேயே கொஞ்ச நாள் வேலை பாத்தேன். ஆனா எங்கம்மாவுக்கு அடிக்கடி உடம்பு சரியில்லாமப் போயிடிச்சி"

"என்ன உடம்பு?"

"ரத்தக் கொதிப்பு தான். இந்த ஊர்ல இருந்தா அது ஜாஸ்தியாகும்மா! அதனால் உங்கம்மாவை வேற ஊருக்குக் கூட்டிக்கிட்டுப் போயிடுன்னு சொன்னாரு டாக்டர்."

"ஏன் அப்படி?"

"எங்க ஊரு சின்ன கிராமம்னு சொன்னேன் இல்லியா? அங்க எங்கம்மாவை எல்லாரும் ஒரு மாதிரி பேச ஆரம்பிச்சிட்டாங்க! நான் சின்னவளா இருந்தப்ப எங்கம்மாவால எல்லாத்தையும் தாங்கிக்க முடிஞ்சது. ஆனா நான் வளர வளர எங்கே மத்தவங்க பேச்சைக் கேட்டு நான் அவங்களை வெறுத்திடுவேனோன்னு பயந்தாங்க!"

"நியாயம் தானே?"

"அது மட்டும் இல்ல! அவங்களுக்கு இருக்கற கெட்ட பெயரால எனக்கு நல்ல மாப்பிள்ளையே கெடைக்காமப் போயிடுமோன்னு கவலைப்பட ஆரம்பிச்சாங்க! ஒரு தடவை ரத்தக் கோதிப்பு ரொம்ப அதிகமாகி மயங்கி விழுந்துட்டாங்க! நல்ல வேளை காப்பாத்திட்டேன். ஆனா இனி இப்படி வந்தா உயிருக்கு ஆபத்து இல்லைன்னா பக்க வாதமே கூட வந்தாலும் வந்துடும்னு சொன்னதால இங்க கூட்டிக்கிட்டு வந்துட்டேன்"

பெருமூச்செறிந்தான் ஆனந்த்.

"பாவம் அகிலா நீங்க! இந்தச் சின்ன வயசுலயே உங்களுக்கு இத்தனை பொறுப்பு. "

"என்னைப் புகழறது இருக்கட்டும். நீங்க உங்களைப் பத்திச் சொல்லுங்க! உங்களுக்கு எந்த ஊரு? அம்மா அப்பா எல்லாம் எங்க இருக்காங்க? கூடப் பொறந்தவங்க யார் யாரு? எல்லாம் விவரமாச் சொல்லுங்க" என்றாள்.

காப்பியைக் குடித்துக் கொண்டே மெல்லிதாக புன்னகைத்தான்.

"என்னைப் பத்தி சொல்றதுக்கு என்ன இருக்கு?" என்றான். குரலில் கழிவிரக்கம்.

"என்ன இப்படி சொல்றீங்க சார்? இந்த சின்ன வயசுல முதியோர் காப்பகம் வெச்சி நடத்திக்கிட்டு இருக்கீங்கன்னா சும்மாவா? இந்த மாதிரி சேவை மனப்பான்மை யாருக்கு வரும்?"

"அட! நீங்க வேற ! சேவையுமில்ல இடியாப்பமுமில்ல! நான் காசு வாங்கிக்கிட்டு தானே அவங்களுக்கு இடம் கொடுக்கறேன் சாப்பாடு போடறேன். அப்புறம் என்ன?"

"இருந்தாலும்? எத்தனை பேருக்கு இந்த மனசு இருக்கு? நீங்க உங்களைப் பத்தி சொல்ல இஷ்டமில்லைன்னா வேண்டாம். "

"ஐயையோ! அப்படி இல்லைங்க! எனக்கு இது தான் ஊருன்னு நினைக்கிறேன். ஏன்னா எனக்கு விவரம் சொல்ல அம்மாவோ அப்பாவோ இல்ல! நான் ரெண்டு வயசா இருக்கும் போதே அவங்க ஒரு விபத்துல இறந்துட்டாங்க! "

"அடக்கடவுளே!"

"எங்கப்பா பெரிய வியாபாரியாம் அதனால எனக்கு கொஞ்சம் காசு வெச்சிட்டுப் போயிருந்தாரு. அதை எடுத்துக்கிட்டு எங்க மாமா என்னைப் படிக்க வெச்சாரு. இருக்க இடம் , சாப்பிட சோறு கெடச்சது,. ஆனா ஒரு குடும்பத்துல கிடைக்க வேண்டிய அன்பும் பாசமும் கிடைக்கல்ல! எங்க மாமா பசங்களை எங்க அத்தை கொஞ்சுறதைப் பாத்துப் பாத்து ஏக்கப்படுவேன். ஏன் என்னைக் கொஞ்ச மாட்டேங்கறாங்கன்னு புரியவே எனக்கு பத்து வயசாச்சி"

கேட்டுக் கொண்டிருந்த அகிலாவின் கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது. அதை கவனிக்காதது போலத் தொடர்ந்தான் ஆனந்த்.

"எனக்கு விவரம் தெரிய ஆரம்பிச்சப்புறம் மனசைத் தேத்திக்கிட்டேன். அந்த குடும்பத்துலருந்து வெளியேறணும்னே வெறித்தனமா படிக்க ஆரம்பிச்சேன். சி ஏ முடிச்சதும் எங்க மாமாகிட்ட சொல்லிட்டு தனியா வந்துட்டேன். அவரு எங்கப்பா பணம்னு எனக்கு கொஞ்சம் கொடுத்தாரு. அதை வெச்சி இந்த முதியோர் காப்பகத்தை ஆரம்பிச்சேன். இதுல எனக்கு ஒரு சுயநலம். "

"என்ன?"

"இங்க வர அம்மாக்கள் என்னை தன் பிள்ளையா நெனச்சி பாசம் காட்டுவாங்க இல்லியா? அம்மாவோட பாசம்னா என்னென்னே தெரியாத எனக்கு இது ஆறுதலா இருக்குமேன்னு தான் பெண்களுக்கு மட்டும்னு ஆரம்பிச்சேன்" என்றான்.

கண்களில் இருந்து பெருகிய கண்ணீரை அவன் அறியாமல் துடைத்துக் கொண்டாள் அகிலா. சற்று நேரம் மௌனமாகக் கழிந்தது.

"அகிலா! நீங்க என்ன படிச்சிருக்கீங்க?" என்றான் திடீரென்று.

அவனது வார்த்தைகளில் தோய்ந்து போயிருந்த அவள் சற்றே திடுக்கிட்டு நிமிர்ந்தாள்.

"நான் எம் எஸ் சி இயற்பியல் படிச்சிருக்கேன். ஒரு பள்ளியில ஆசிரியையா ஒரு வருடம் வேலை பாத்துருக்கேன். உங்களுக்குத் தெரிஞ்சு எங்கையாவது எனக்கு வேலை கிடைக்குமா? கொஞ்சம் சொல்லுங்களேன் பிளீஸ்" என்றாள்.

"ஓ! நீங்க அவ்வளவு படிச்சிருக்கீங்களா? சரி நான் மொதல்ல எங்க ஆபீஸ்லயே ஒரு கிளார்க் வேலை காலியிருக்கு. அதுக்கு உங்களை மனுப்போடச் சொல்லலாம்னு நினைச்சேன். ஆனா இப்ப.."

"பரவாயில்லை சார்! எந்த வேலையானாலும் நான் செய்வேன். "

"இருங்க அவசரப்படாதீங்க! நேத்து நான் பேப்பர்ல ஒரு விளம்பரம் பாத்தேன். நம்ம வீட்டுக்கு பக்கத்துல இருக்கற ஒரு பெரிய பள்ளிக்கு ஆசிரியர்கள் தேவைன்னு போட்டிருந்தான். நீங்க அதுக்கு மனுப் போடுங்களேன்"

"எந்தப் பள்ளி? நம்ம தெருமுனையில இருக்கே சர்வ தேசப் பள்ளிக்கூடம் அதுவா?"

"ஆமாம்! எனக்கு அந்த பள்ளிக்கூட முதல்வரைத் தெரியும். அங்க சம்பளமும் நல்லா தருவாங்க! நீங்க அதுக்கு முயற்சி பண்ணுங்க" என்றான்.

மகிழ்ச்சி தாண்டவமாடியது அவள் முகத்தில்.

"சார்! ரொம்ப தேங்க்ஸ்! நாளைக்கே நான் அங்க நேருல போயிடறேன். நீங்க ஒரு சிபாரிசு கடிதம் முடிஞ்சா கொடுங்க! எப்படியோ எனக்கு அந்த வேலை கெடச்சா சரி" என்றபடி எழுந்தாள்.

இருவரும் ஒன்றாக வெளியில் வந்தனர். வரும் போது ஒரு ஜோடி குறுக்கே வர சற்றே ஒதுங்கினாள். அப்போது லேசாக அவன் மேல் இடித்ததில் மின்சாரம் பாய்ந்தது போல உணர்ந்தாள் அகிலா.

"என்ன இது? இது வரை இல்லாத உணர்வு? பேருந்தில் போகும் போது எத்தனையோ பேர் தவறுதலாகவும் வேண்டுமென்றும் இடிப்பார்கள். அப்போதெல்லாம் இல்லாத உணர்வு இப்போது என்ன?"

முகம் சிவக்க தடுமாறினாள். அவளது முகம் தாமரையாச் சிவப்பதை சூரியனுக்கே உரிய தாகத்தோடு ஆசையாகப் பருகினான் ஆனந்த்.
 
Nirmala vandhachu ???
 
Top