வீட்டில் இருந்த மீனாவ காணோம் என்று தான் எழுதி இருக்கிறார்..
கதை அருமை..மயில் சொன்ன கதையை கேட்டு மலர் தன் மனதில் அப்படி என்றால் எங்கள் வீட்டில் உள்ளவர்கள் இங்கே எல்லாருடைய பகையும் சம்பாதித்து வைத்து உள்ளார்களா என்று நினைப்பதை பார்த்தால்...
கருப்பணின் அத்தைதேவியின் மகள் தான் மலர் போல.. இந்த உண்மை கருப்பணுக்கு தெரிந்தால் நிச்சியம் மலரை வெறுத்து விடுவான்..
இயற்க்கை உரத்தை பற்றி மாணவர்கள் தெரிந்து கொள்ளும் இடம் ,அவர்கள் ஆர்வம் அடுத்த தலைமுறை கலப்படமற்ற ஆரோக்கியமாக இருக்கும் ..இந்த காட்சி உணர்த்தும் வகையில் உள்ளது



அய்யனார் கோவத்தில் சிறிதும் தவறு இல்லை.
தேவி ,மீனா போன்ற காதலிப்பதை நான் தவறு என்று சொல்லவில்லை ஆனால் உங்கள் காதல் உங்களை கஷ்ட்டபட்டு பெற்று வளர்த்து ,ஆளாக்கி ,அன்பை பொழிந்த குடும்பத்திற்கு அவமானத்தை தேடி தராமல் பார்த்துக்கொள்ளுங்கள்..
அப்படி நீங்கள் செய்யும்துரோகம் எத்தனை தலைமுறை வந்தாலும் அவர்கள் சாபம் உங்களை வாழ விடாது..
ஒரு உயிரை பலி வாங்கி, குடும்பத்திற்கு அவமானத்தை தேடி தந்த் மீனா, தேவி போன்ற சுயநல வாதிகளை மன்னிக்கவே கூடாது