மலர் உண்மையிலேயே ஆச்சரியப்படுத்தறா. ஏன்னா இப்போ கிராமத்தில் இருக்கும் பிள்ளைகளில் கொஞ்சம் பேரு கூட நகரத்து வாழ்க்கை முறைக்கு தங்களை மாத்திக்கும் போது மலர் கிராமத்து வாழ்க்கையை வாழ விரும்பி இந்த குடிசையே போதும்னு சொல்றது ஆச்சரியமாக இருக்கிறது.
அடுத்து தருமன் மயிலு ஜோடிக்கு தான் கல்யாணம். இவங்க கல்யாணமாவது நாள் கிழமை பார்த்து நல்லா நடக்குமா, இல்ல அதுவும் மலருகருப்பனோடது மாதிரி அவசரமா நடக்குமா?
எப்படியோ இப்போதைக்கு சாப்பாடு பிரச்சனை முடிஞ்சது. அடுத்த வேளை வரதுக்குள்ள சீக்கிரமாக போய் சமைக்க தேவைப்படும் பண்ட பாத்திரங்களை வாங்கிட்டு வருவான் கருப்பன்.