Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலாகி காதல் செய்வோமே 03(A)

Advertisement

lekha_1

Active member
Member
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...

சென்ற பதிவிற்கு ஆதரவளித்தவர்களுக்கு ரொம்ப நன்றி... இதோ அடுத்த பதிவுடன் வந்துவிட்டேன். சின்ன வயதில் இருந்து கிரிக்கெட் பார்க்கிறேன் என்றாலும் அதோட டேர்ம்ஸ் அன்ட் கண்டிஷன்ஸ் எதுவும் அவ்வளவா தெரியாது, அப்பாவும் தம்பியும் சொல்வது மட்டும் தான். எனக்கு தெரிந்தது கொஞ்சம், இண்டர்நெட் உதவியுடன் கொஞ்சம் என்று ஒரு மேட்சைப் பற்றி எழுதியிருக்கிறேன். படித்து கருத்து சொல்லவும். இன் கேஸ், ஓகே என்றால் கதையில் இதே போன்று சில மேட்ச்கள் வரும் (ஃபுல் கமென்டரி எல்லாம் இல்லைப்பா, நம்ம கிரிக்கெட்டில் எண்ணற்ற WOW மொமண்ட்ஸ் இருக்கு. அதில் சிலவற்றை எழுதலாம் என்ற ஒரு எண்ணம்.) நீங்கள் சொல்வதைப் பொறுத்து தான் இவை இடம் பெறுவதும் பெறாததும். இதோ அடுத்த பகுதி!





காதல் 03(A)

695

அனிலா அன்று கன்சர்ட்டிற்கான ஒத்திகையை முடித்துவிட்டு வந்திருந்தாள். இன்னும் இரண்டு தினங்களே இருக்கின்றன அந்த நிகழ்ச்சிக்கு. பாயல் தன் உறவினர் வீடு அருகில் இருக்கிறது என்றதால் அவர்களை காண சென்றுவிட்டாள். ஆலனும் தனக்கு கிடைத்த புதிய நட்புடன் சென்றுவிட, தனியே தாங்கள் தங்கியிருக்கும் விடுதிக்கு வந்தாள் அனிலா.

அப்போது அவள் தன் அறைக்கு செல்ல லிஃப்டிற்காக நிற்க, சரியாக அங்கே கைப்பேசியில் பேசிக்கொண்டே வந்து நின்றான் முகில். அவன் பேசுவதைக் கேட்ட அனிலாவின் கண்களில் மின்னல்.

அவர்கள் செய்த பெரும்பாலான வீடியோக்களுக்கு நல்ல கமெண்ட்ஸ் வந்தாலும் தென்னிந்திய மொழியில் செய்யும் வீடியோக்களுக்கு மட்டும் சில கமெண்ட்ஸ் உச்சரிப்பு சரியில்லை என்று வரும். அதிலும் பெரும்பாலும் வருவது தமிழுக்கே.

அகில் தமிழில் பேசவும், அவன் உச்சரிப்பை கூர்ந்து கவனித்துக்கொண்டே இருந்தாள் பெண். அவர்கள் இருவரைத் தவிர யாரும் அந்த லிஃப்டில் பயணம் செய்யாததும் வசதியாகப்போயிற்று மங்கைக்கு.

சிறிது நேரத்தில் பதிமூன்றாம் தளம் வர, அவள் இறங்கி தன் அறைக்கு செல்லலானாள். அத்தோடு அவனை மறந்தும் போனாள்.


******

சில நாட்களுக்குப் பின்,

வெற்றிகரமாக தங்கள் நிகழ்ச்சியை முடித்தவர்கள் அதனைப் பற்றி பேசிக்கொண்டே தங்கள் அறைக்கு வந்து சேர்ந்தார்கள். சிறிது நேரத்தில் ஆலன் சென்றுவிட, பாயலும் தன்னை ரிஃப்ரெஷ் செய்து கொள்ள குளியலறைக்குள் புகுந்த சமயம் அவர்களது அறைக்குள் நுழைந்திருந்தான் முகில்.

முதலில் அவனைக் கண்ட அனிலாவிற்கு அனுமதியில்லாமல் தங்கள் அறைக்குள் நுழைந்ததற்கு கோபம் வந்திருந்தாலும், பொறுமையாக அவனிடம் என்னவென்று கேட்கலாம் என நினைத்திருக்க, அவன் மேலும் பேசிய வார்த்தைகளில் அவள் பொறுமை எல்லாம் எருமையில் ஏறி உலகச் சுற்றுலா சென்றுவிட்டது.

அதுவும் அவன் பணத்தை தன்னை நோக்கி எறியவும், அவனை இழுத்து அறையும் ஆவேசமே வந்துவிட்டது அவளுக்கு. இருந்தும் கண்டம் விட்டு கண்டம் தாண்டிய பொறுமையை இழுத்து தன்னைவிட்டு ஓட விடாமல் கட்டியவள், “இது என் ரூம். If someone has to leave, then it should be you!" என்று நிதானமாக உரைக்க, அவன் முகத்தில் எண்ணற்ற பாவனைகள் வந்து போனது.

பின், அறை வாசலை நோக்கி அவன் வேகமாக சென்று அதன் எண்ணை பார்க்க, அவன் மானசீகமாக தலையில் அடித்துக்கொண்டது இவளுக்கு தெரிந்தது. அதனைப் பார்க்கவும், அவள் இதழோரம் ஒரு ஏளனப்புன்னகை வந்து ஒட்டிக்கொண்டது.

அவன் தவறி தன் அறைக்கு வந்ததைக் கூட அவள் மன்னித்து விட்டிருப்பாள், முதலிலேயே தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டு வெளியேறியிருந்தால்!

ஆனால் அவனோ, உள்ளே வந்ததும் அதிகம் பேசிவிட்டான். அதற்கு அவனுக்கு பாடம் கற்பித்தே ஆகவேண்டும் என்று முடிவு செய்தவள்,

தன்னை நோக்கி மன்னிப்புகோரும் பாவனையுடன் வந்துகொண்டிருந்தவனை நோக்கி,

“சோ, இப்போ புரிஞ்சுதா, யார் வெளியே போகவேண்டும் என்று?” என கேட்க,

“சாரி மிஸ்! நான் ஏதோ நியாபகத்தில் வந்துவிட்டேன்” என்று அவன் உரைக்க,

“அதற்காக இவ்வாறு எடுத்தவுடன் ஒரு பெண்ணைக் கண்டு பேசுவதா? Don’t you have some basic manners?” என்று ஏகவசனத்தில் பேச ஆரம்பிக்க,

அவள் தன்னைப் பற்றி பேசப்பேச அவனுக்கும் கோபம் ஏறியது.

“ஹலோ மிஸ்… whoever you are! ஏதோ தெரியாம வந்ததற்கு நீங்கள் இவ்வளவு பேசுவது நல்லதல்ல” என்று அவன் சொல்ல,

“ஓ… தெரியாம நீங்க…” என்றவள் அதற்கும் மேல் என்ன சொல்லியிருப்பாளோ, அதற்குள் பாயல் அங்கு பிரசன்னமானாள்.

“ஹாய்… நீங்க இந்திய வீரர் தான? சமீபத்தில் டீமில் உங்களை பார்த்தேன். நீங்க எங்கே இங்கே? அனி, உனக்கு இவரை தெரியுமா?” என்று அவனிடம் ஆரம்பித்து அனிலாவிடம் முடித்தாள்.

அதனைக் கேட்ட அனிலா தோளைக் குலுக்கிக்கொண்டு வேறு பக்கம் திரும்ப, அவளை கடைக்கண் கொண்டு பார்த்தவன்,

“ஸாரி சிஸ்டர்! நான் அறை மாறி உங்க அறைக்கு வந்துட்டேன். அதற்காக உங்க அம்மாவிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டிருந்தேன். பட், உண்மையை சொல்லனும்னா, உங்க அக்கா மாதிரியே இருக்காங்க” என்று சிரிப்பை வாய்க்குள் அடக்கியவாறு கூற, (அந்த பச்சப்புள்ள மொகத்த பார்த்தா இந்த வார்த்தைய சொன்ன?)

அவன் கூறியதைக் கேட்டவளோ, அவனை முறைத்தவாறு கெட்ட வார்த்தைகளால் வாய்க்குள்ளேயே அவனுக்கு அர்ச்சனை செய்துகொண்டிருந்தாள்.

பாயலோ, அதனை கேட்டு அனிலாவை பார்த்துவிட்டு, “ஸார்… இவ என் அம்மாவும் இல்லை, அக்காவும் இல்லை, என் ஃப்ரெண்ட் இவ…” என்று சிரித்தவாறே கூற,

அவளை திரும்பி முறைத்த அனிலா, “டெல் ஹிம் டு மூவ் ஃப்ரம் திஸ் ப்ளேஸ்” என்று வேறு ஒரு அறைக்குள் சென்று மறைந்தாள்.

அதன்பின், பாயலிடம் சொல்லிவிட்டு தன் அறைக்கு சென்றவனுக்கு கோபம் தணியவில்லை.


*****

ஆலனையும் பாயலையும் தனக்குள் திட்டியவாறு அமர்ந்திருந்தாள் அனிலா. அவர்களால் தானே இந்த ஸ்டேடியத்தில் வந்து அமர வேண்டியதாக இருக்கிறது அவளுக்கு.

ஆம்! அனிலா அந்த புகழ்பெற்ற கிரிக்கெட் ஸ்டேடியத்தில் அமர்ந்திருந்தாள்.

கன்சர்ட் முடித்து ஊரை சுற்றிப்பார்த்துவிட்டு செல்லலாம் என்று சில நாட்கள் கழித்து தான் தங்கள் ஊருக்கு டிக்கெட் போட்டிருந்தனர். இடைப்பட்ட காலத்தில் கிரிக்கெட் நடக்கிறது என்று தெரிந்ததும் ஆலன் அங்கு சென்றே ஆவது என்று ஒற்றைக்காலில் நின்றான். ஏனென்றால், அங்கே விளையாடுவது அவனது நாடாயிற்றே! ஆலன் நியூசிலாந்து நாட்டை சேர்ந்தவன். அதனால் அவன் விளையாட்டை காண விழைய, கிரிக்கெட் பைத்தியமான பாயலோ அவனுக்கு ஒத்து ஊதலானாள்.

இருவரும் நன்கு ரசித்து போட்டியை பார்த்துக்கொண்டிருக்க, அனிலாவோ, ‘பேஸ்பால் ஏன் இவ்வளவு சின்னதா இருக்கு? விளையாடுற விதமும் இப்படி இல்லையே!’ என்னும் விதமாக பார்த்துக்கொண்டிருந்தாள்.

அவளும் தான் என்ன செய்வாள்? இதுவரை ஒரு கிரிக்கெட் போட்டியை கூட கண்டதில்லை. அவ்வாறு ஒரு விளையாட்டு இருக்கிறது என்பது மட்டுமே தெரியுமே தவிர, மற்றும்படி ஒன்றுமே தெரியாது அவளுக்கு.

ஏதோ பந்து போகுது, எல்லோரும் கத்துகிறார்கள் என்று பார்க்க ஆரம்பிக்க, சிறிது நேரத்தில் பாயலின் துணையோடு அவளுக்கு மூன்று சொல் மட்டும் பிடிபட்டது. ‘ஃபோர், சிக்ஸ், அவுட்’ என்பது தான் அது.

அதன்பின், இரு பக்கத்திற்கும் அவள் கைதட்டி ஆர்ப்பரித்துக்கொண்டிருக்க, ஆலனோ அவள் அக்கப்போர் தாங்காமல் பல்லை கடித்தான்.

இதனை உணர்ந்த பாயலோ, “அடியே! நாம நியூசிலாந்துக்கு சப்போர்ட் பண்ண வந்துருக்கோம். நீ என்னன்னா, இந்தியாக்கும் கை தட்டிட்டு இருக்க” என்க,

‘ஐயய்யோ!’ என்று தலையில் அடித்துக்கொண்டவள் அதன்பின் ஆலனை பின்பற்றினாள்.

நியூசிலாந்து அதற்குள் பேட்டிங்கை முடித்து 256 என்னும் டார்கெட்டை இந்திய அணிக்கு வைக்க, வந்த வேகத்தில் முன்னனி ஆட்டக்காரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.

சிறிது நேரம் தட்டுத் தடுமாறி சந்தோஷும் தீபக்கும் நிற்க, ஸ்கோர் நூற்றிக்கு வந்தது.

அப்போது சந்தோஷும் அவுட்டாக, 180 பந்துகளில் 120 ரன் எடுத்திருந்த இக்கட்டான கட்டத்தில் களம் இறங்கினான் முகில். இன்னும் 136 ரன்கள் எடுக்க வேண்டும், 120 பந்துகளில். கைவசம் நான்கு விக்கெட்டுகள் இருந்தன. எளிதான ஒன்றுதான். ஆனால், தற்போது முன்னனியும் மிடில் ஆர்டரும் ஆட்டம் கண்டுவிட்டது. களத்தில் இருப்பவர்களை வைத்து தான் சமாளிக்க வேண்டும். அடுத்து வர இருப்பவர்கள் பவுலர்கள். எனவே, அவர்களை நம்புவதும் கடினம். இவை அனைத்தையும் நினைத்த முகில், அவன் களத்தில் இருக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்தான்.

அதுவும், இன்றைய ஆட்டம் மிகவும் முக்கியமான ஒன்று. அதில் சாதிக்க வேண்டியது அவனுக்கு மிகவும் அவசியம்.

தனக்கு ஏற்பட்ட மெல்லிய பதட்டத்தை தனக்குள் மறைத்தவன், களத்தில் இறங்கினான்.

அவனை நோக்கி வந்த தீபக், “மச்சான், நின்னு ஆடு. பந்தை தூக்கி கொடுத்துறாத” என்று கூற, அதற்கு மெலிதாக தலையாட்டியவன் பந்தை எதிர்கொள்ள தயாரானான்.

பொதுவாக களத்தில் இருப்பவர்கள் ஸ்கோர் போர்ட் பக்கம் தன் கண்களை திருப்பக்கூடாது. அவ்வாறு அதனைக் கண்டால் அவர்கள் பதற்றப்பட வாய்ப்புண்டு. எனவே தன்னெதிரில் இருந்த ஸ்கோர் போர்டை காணாது வேறு புறம் தன் பார்வையை திருப்பியவன் கண்களில் அந்த பெரிய திரையில் விழுந்தாள் அனிலா.

அவள் மதிமுகத்தை பார்த்தவுடனே மதிகெட்டுப்போனது முகிலுக்கு. தன்னையறியாமலே மட்டையில் அழுத்தத்தைக் கூட்டினான்.

அவளைக்காணக் காண அவன் எண்ணம் முழுவதும் அவளே நிறைந்தாள்.

அதே நினைவோடு அந்த பாலை எதிர்கொள்ள, அது எல்லையை நோக்கி பறந்து சென்றது.

“சிக்ஸ்!” என்று சுற்றியிருந்த கூட்டம் கத்த, எதிரில் அவன் பவுண்டரிக்கு அனுப்பிய பால் கேட்சாகிவிடுமோ என்று தவித்துக்கொண்டிருந்த தீபக் அவனை நோக்கி ஒரு புன்னகையை சிந்தி கையை ஆட்டி ஊக்கப்படுத்தினான்.

அதன்பின் அவன் சந்தித்த அனைத்து பால்களையும் பவுண்டரியாகவும் சிக்ஸாகவும் தெறிக்கவிட, இவனை எவ்வாறு இவ்விடம் விட்டு வெளியேற்றுவது என்று எதிரணி யோசிக்கத்தொடங்கிவிட்டிருந்தனர்.

ஆனால், முகிலுக்கு தெரிந்ததெல்லாம் அனிலா நேற்று அவனிடம் பேசியது மட்டுமே! அவளை காயப்படுத்த அவன் வளர்ப்புமுறை தடுக்க, தனக்குள் இருந்த கோபத்தை பந்தின்மீதும் எதிரணியின் மீதும் காட்டி தீர்த்துக்கொண்டிருந்தான் அந்த கிரிக்கெட் காதலன்.

முகிலும் தீபக்கும் நல்லதொரு பார்ட்னர்ஷிப்புடன் விளையாட, அவர்கள் இருவரையும் பிரித்தேயாகவேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தனர் எதிரணியினர்.

தீபக் தனக்கு வரும் வாய்ப்புகளை எல்லாம் ஒற்றை ரன்களாக மாற்றி முகிலையே ஆடுமாறு செய்துகொண்டிருக்க, அவனை ஆட்டமிழக்கச் செய்ய ஸ்பின்னர்களை களமிறக்கி வேலையில்லாது போக, தன் சகாக்களுடன் தீவிரமாக ஆலோசித்துக்கொண்டிருந்தான் எதிரணி கேப்டன்.

தற்போது இந்திய அணி 230 ரன்கள் எடுத்திருந்தது. இன்னும் 20 பந்துகளில் 26 ரன் எடுக்க வேண்டும்.

நியூசிலாந்திற்கு இந்த வெற்றி அவசியமில்லை தான். முன்பே அவர்கள் வரிசையில் முன்னேறியிருக்கிறார்கள். இருந்தும் இந்த மேட்சில் கோட்டை விட விருப்பமில்லை அவர்களுக்கு. எனவே, எவ்வாறேனும் வெற்றி பெற வேண்டும் என்னும் முனைப்புடன் செயல்பட்டனர் அனைவரும்.

அதன்படி அடுத்து வந்தவர் அவன் கண்களுக்கு மேல் பந்தை தூக்கியெறிய, அவன் வீசும்போதே பந்து எவ்வாறு வரும் என்று கணக்கிட்டிருந்த முகில் ஒற்றை காலை தூக்கி அந்த பந்தை அடிக்க முயல, ஒரு நொடி ஸ்டேடியமே ஸ்தம்பித்துப்போனது.

ஏனென்றால், இத்தகைய பால் வரும்போது அதனை அடிக்காமல் இருப்பதே புத்திசாலித்தனம். சிறிது பிசங்கினாலும் ஆட்டமிழக்கப்போவது உறுதி.

‘போயிற்று!’ என்று அனைவரும் மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டிருக்க, அந்த பந்து அவனைத் தாண்டி விக்கெட்கீப்பரிடம் தஞ்சமடைந்திருந்தது.

அம்பையர் மூன்றாவது நடுவரிடம் முடிவெடுக்க கேட்க, முகிலோ, பெவிலியனை நோக்கி சென்றான். தீபக் முடிவு வரும் வரை நிற்க சொல்லி கேட்டும் அவன் நிற்கவில்லை.

ஏனென்றால் அவன் அறிவான் பந்து அவன் மட்டையில் பட்டதை.

அதன்படி மூன்றாவது அம்பையரும் ‘அவுட்’ என்று பதில் தர, இந்திய அணிக்கு நல்லதொரு ஸ்கோரையும் அளித்து, இதுவரை தன்னை கவனிக்காத பலரை தன்னை நோக்க வைத்துவிட்டு சென்றான் முகில்.

ஆலன், “That’s why cricket is called a gentleman’s game” என்று உரைக்க, அப்போது தான் தலைக்கவசத்தை கழற்றிய முகிலின் முகத்தை அனிலா கண்டாள்.

ஏற்கனவே அவன் ஆட்டத்தில் ஈர்க்கப்பட்டவள், அவன் செய்கையினால் பெரிதும் ஈர்க்கப்பட்டாள்.

அதன்பின் வந்த பவுலர்கள் நிதானமாக ஆட, மறுபக்கம் தீபக் தன் அதிரடியை காட்ட என்று அந்த முத்தரப்பு தொடரில் முதல் வெற்றியை சுவைத்தே விட்டது நம் அணி.

ஆட்டம் முடிந்து வெளியேறிய அனிலாவிற்குள் சிறிது சலனத்தை அவனுக்கே தெரியாமல் ஏற்படுத்தியிருந்தான் முகில், அவளுக்கும் தெரியாமல்.






(உண்மையை சொல்லப்போனால், முகிலால் தான் மேட்ச் ஜெயிச்சாங்கன்னு எழுத தான் நினைத்தேன். ஏனோ தெரியவில்லை, கடைசியில் முகிலை அவுட்டாக்கிவிட்டேன். இருந்தும், அந்த அவுட்டும் வர்த்து தான்னு நான் நினைக்கிறேன்… வர்த்தா? வேஸ்டான்னு நீங்க தான் சொல்லனும்… ஈஈஈஈஈ….)
 
Top