Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வண்ணங்கள் - 15

Advertisement

TNWContestWriter098

Well-known member
Member
இவர்கள் பேசிக்கொண்டிருக்கையிலேயே வடிவு வந்துவிட்டார் ..தங்களுடன் முத்துச்செல்வி வரவில்லை என்பதை உணர்ந்தவர் ..அவளும் ஏதாவது தவறான முடிவெடுத்து விடுவாளோ என்ற பதைப்பில் ..வெகு வேகமாக வர .. இவர்கள் பேசிக்கொண்டிருப்பதை கண்டு ஆசுவாசமடைந்தார்.

"வாம்மா முத்து. இங்கே தனியா உக்காந்திருக்க வேண்டாம் வா." என்று தன்மையாய் அழைக்க வேறு வழியின்றி எழுந்து சென்றாள்.

"நீங்க ரெண்டு பேரும் வீட்டுக்கு போங்க கண்ணுகளா " என்று இவர்களை பணித்து விட்டு செல்ல ..தன்யஸ்ரீயை அழைத்துக் கொண்டு கிளம்பினாள் கண்மணி.

ஏதோ யோசனையோடு வேகமாக நடந்துகொண்டிருந்தவளை ஓட்டமாய் பின்தொடர்ந்த தன்னுவை கண்டுகொள்ளாமல் இவள் நடக்க "ஏண்டி இப்படி ..வெகுவெகுன்னு போற ?" என்றவள் சற்றே மூச்சு வாங்கி கொண்டு "இது நம்ம வீட்டுக்கு போற வழியில்லையே " என்று கூறியபடியே சுற்றும் முற்றும் பார்த்தாள்.

கண்மணி வீட்டு தென்னந்தோப்பின் வாயிலில் நின்றிருந்தனர் .ஒரு கோடியில் காவலாளி முத்து இளநீர் இறக்கி கொண்டிருந்தான். அவனது கவனத்தை கலைக்காதவண்ணம் மெல்ல இரும்பு கேட்டை திறந்த கண்மணி ஸ்தம்பித்து நின்றிருந்த தன்யஸ்ரீயை கை பிடித்து இழுக்க .."ஐயோ நான் வரலடி " என்று பின்வாங்கினாள் தன்னு.

அவள் முகம் பீதியில் உறைந்திருக்க .."ஏய் என்னடி ?" என்று கிசுகிசுப்பான குரலில் அவளை உசுப்பிய கண்மணிக்கு ஆத்திரமாக வந்தது. ஏன் இப்படி முழிக்கிறாள்?

"ஏய் கண்மணி ..இந்த தோப்புக்குள்ள போகக்கூடாதுன்னு என்ர தாத்தன் சொல்லிருக்காருடி"

"ஏனாம் ?"

"இங்கே நெறைய காத்து கருப்பு அலையுமாம் ..முக்கியமா பொம்பள புள்ளைக உள்ள போனா பிடுச்சிக்குமாம்"

கோபத்தில் முகம் சிவந்தது கண்மணிக்கு.

'இங்கே வெளியே அலையும் ரத்தக் காட்டேரிகளை விடவா தோப்பின் உள்ளே இருக்கப் போகுது?' மனதினுள் நினைத்தவள் இப்போது தன்னுவின் உதவி அவளுக்கு தேவை என்பதால் அவளை தேற்றுவதில் கவனம் செலுத்தினாள்.

"தன்னு..நீ எவளோ தைரியமான பொண்ணு ..நீயே இப்படி பேய் பிசாசுன்னுக்கிட்டு "

"ஏண்டி பேய் இருக்கோ இல்லையோ பேய்ன்னு சொன்னாலே பயமா தானே இருக்கு"

"அந்த பயம் தாண்டி பேயே!"

இப்படி கூறிய கண்மணியை வாயை பிளந்து பார்த்தாள் தன்னு.

"என் கண்மணி நீயா பேசற ? சத்தமா பேசினாலே பயப்படுவ"

ஒரு விரக்தி பெருமூச்சை விட்டவளாய் "நேத்து வரைக்கும் என்ன பாத்துக்க நெறைய பேர் இருக்காங்கன்ற எண்ணத்திலே எனக்குள்ள தைரியம் இருந்துச்சா இல்லையான்னே தெரியல ..ஆனா இப்போ நான் நம்புன யாருமே நான் நெனச்ச மாதிரி இல்ல தன்னு. அதுதான் நானே தான் என்ன பாத்துக்கணும்னு தோணுது. அப்போ தைரியம் வந்து தானே ஆகணும்." என்றவள் நிகழ்வுக்கு வந்தவளாய் .."சரி சரி .. இதெல்லாம் அப்புறம் பேசலாம் ..முத்து நம்மளை கவனிக்கறதுக்குள்ள நாம உள்ளே போகணும் வா " என்றவள் ஒரு மரத்தின் பின் ஒளிந்து பார்க்க .. அப்போது தான் ஒரு மரத்தை விட்டு இறங்கிய முத்து மற்றோர் மரத்தின் மேல் ஏறி இவர்களுக்கு முதுகு காட்டியபடி இருக்க .. சத்தமின்றி உள்ளே நுழைந்தனர் இருவரும்.

இங்கு எதற்காக கண்மணி தன்னை அழைத்து வந்திருக்கிறாள் என்று புரியவில்லை தன்னுவிற்கு.

மனதிற்குள் கந்த சஷ்டி கவசத்தை முணுமுணுத்தவாறு கண்மணியை தொடர்ந்தவளுக்கோ உள்ளம் எம்பி எம்பி குதிப்பது போல் இருந்தது.

மோட்டார் அறையை நோக்கி சென்ற கண்மணி .. பின்புறம் இருந்த சிறு சன்னல் திறந்து காண்பிக்க முதலில் ஒன்றுமே புலப்படவில்லை தன்னுவிற்கு.

இருளுக்கு கண்கள் பழக்கப்படும் வரை சற்றே கண்களை கசக்கிப் பார்த்தவள் உள்ளே அரை உயிராய் கிடந்தவனை பார்த்து அதிர்ந்தாள்.அதிர்ச்சியில் கத்த போனவள் வாயை சரியான நேரத்தில் வாயை மூடிக் கொண்டுவிட்டாள்.

"யார் கண்மணி இது?"

"ராமலெட்சுமியோட லவ்வார்டி இந்த பையன் "

"இவனை காணாம தேடுவதா தானே முத்து செல்வி சொன்னா?"

"ஆமாண்டி ..இவன் ரெண்டு நாளா சோறு தண்ணியில்லாம இங்கே தான் அடைச்சு வச்சிருக்காங்க "

"இங்கே யாருடி அடைச்சு வச்சிருப்பா?" என்று கேட்கும் போதே பதிலும் தெரிந்துவிட்டது அவளுக்கு.

ஆனாலும் அரசால் புரசலாக கேள்விப்படும்போது இவ்வளவு அதிர்ச்சியில்லை..அப்படி இருக்காது என்று பாசமுள்ள நெஞ்சம் சுலபமாக நம்பி விடுகிறது. ஆனால் முகத்தில் அறையும் உண்மையை என்ன செய்வது?

சற்று நேரம் அவனையே உற்று பார்த்திருந்தனர் இருவரும் ..தோய்ந்து விழுந்த உடல் துவண்டு கிடைக்க அவனிடம் எந்த அசைவுமில்லை .."செத்துட்டானாடி ?"

"தெரியலையே ..காலைல நான் பாத்தப்போ உயிரோட தாண்டி இருந்தான் "

"காலையில எப்போ டி வந்த ? எதுக்கு வந்த ?"

" நீங்கல்லாம் தூங்கிகிட்டு இருக்கும் போது வந்தேன் டி ..அவன் தான் புள்ள வந்து கூப்புட்டான் "

"என்னடி கொழப்புற ?"

"சரி விடு ..இப்போ என்ன செய்றதுன்னு பாப்போம் "என்ற தன்யஸ்ரீக்கு அவளது வழக்கமான தைரியம் கை வந்திருந்தது.

சுற்றி பார்த்தவளுக்கு ஒரு பிவிசி குழாயின் நீள துண்டொன்று கிடைக்க அதனை எடுத்தவள் அதனை சன்னல் வழியாக விட்டு அவனை இடிக்க லேசான அசைவு தெரிந்தது சுரேஷிடம்.

விழிகளை திறந்து பார்த்தவனுக்கு சன்னல் வழி விழுந்த ஒளிக்கீற்று நம்பிக்கையளிக்க விழியுயர்த்தி பார்த்தான் ..காலையில் பார்த்த அதே முகம் தெரிய "சிஸ்டர் " என்று மிக மெலிதான குரலில் அழைத்தான் . "காப்பாத்துங்க ..காப்பாத்துங்க " என்று முனகினான் இருந்த கடைசி துளி உயிரை சேமித்து !

என்ன செய்வதென்று ஒரு கணம் தான் குழப்பம் இருவருக்கும் ..அடுத்த கணம் எப்படியாவது இந்த உயிரை காப்பாற்றியே ஆக வேண்டும் என்று உறுதி ஏற்பட .."இரு தன்னு " என்றவள் அருகே குவித்து வைக்க பட்டிருந்த இளநீர் ஒன்றை எடுத்து அங்கே கிடந்த அருவாளை எடுத்து சீவினாள் .

அந்த மெல்லிய கரங்களில் எப்படி அவ்வளவு உறுதி ஏற்பட்டது என்று தன்னுவுக்கே புரியவில்லை .

இளநீரை சீவியவள் அந்த குழாயின் ஒரு முனையினை அவனது வாயருகில் வைத்து மறுமுனையில் இளநீரில் கவிழ்க்க துளித்துளியாய் தன் இதழ்களில் இரண்டு நாட்களுக்குப்பின் விழுந்த முதல் துளி நீரை பருகிய சுரேஷின் உயிர் தன் ஊசலாட்டத்தை நிறுத்தியது.
 
Last edited:
Top