Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வண்ணங்கள் - 17

Advertisement

TNWContestWriter098

Well-known member
Member


கதிர் கண்மணியை பார்த்து கண் சிமிட்டியதும் அசந்து நின்றுவிட்டனர் மற்ற இருவரும் .

"ஏற்கனவே ரெண்டு பேருக்கும் ஒருத்தர ஒருத்தர் தெரியுமா?

" ஆமாம்.. அவளை மூணு வருஷமா தெரியுமே .. "

"என்னது ..மூணு வருஷமாவா ?"

"ஆமாம் ..ஒரே காலேஜ் தானே "

"என்னது ஒரே காலேஜா ? ஒன்னாவா படிக்கிறீங்க ?"

"என்ன பார்த்தா ஸ்டுடென்ட் மாதிரியா தெரியுது . நான் லெக்ச்சரர்ங்க. எனிவே தாங்க்யூ பார் தி காம்ப்ளிமென்ட் "

"என்னது லெக்ச்சர்ரா ? "

" என்ன ஷாலு ? நம்ப மாட்டேங்கறாங்க ?"

"என்னது ஷாலுவா?"

"ஆமாங்க ..அதானே அவள் பெயர் ..விசாலினி .. செல்லமா ஷாலு "

"என்னது செல்லமாவா ? "

"ஆமாம் ..லவ் பண்ற பொண்ண செல்லமா தானே கூப்புடனும் ?"

"என்னது லவ் பண்றீங்களா ? "

"ஏன் சிஸ்டர் இப்படி என்னது என்னதுன்னு அடுக்கறீங்க ?"

"அடிப்பாவி பூனை மாறி இருந்துக்கிட்டு இப்படி ஒரு ஆளை கரெக்ட் பண்ணியிருக்க ? எங்ககிட்டல்லாம் சொல்லவேயில்லை " என்று கண்மணியை பார்த்து கேட்க .."அதுதான் நேத்தே சொன்னேன்ல உனக்கு அண்ணன் மாதிரி ..சைட் அடிக்க கூடாதுன்னு " என்று அவள் கவுண்டர் கொடுக்க ..மயக்கமே வரும் போல் இருந்தது ஸ்வாதிக்கு.

கண்மணி புறம் திரும்பியவன் .."எதுக்கு வர சொன்ன ஷாலு? "

அவனிடம் இரண்டு நாட்களாக தான் கண்டும் கேட்டும் வந்தவை பற்றி கண்மணி உரைக்க .. ஸ்வாதிக்கும் இதெல்லாம் தெரியாது தானே அவளும் ஒரு வித அதிர்ச்சியோடு கேட்டுக் கொண்டிருந்தாள் .

"எங்கேடி அவனை அடைச்சு வச்சிருக்காங்க ?"

"எங்க தோப்பில தான் "

"அங்கேயா ?" என்றவள் முகம் பேயறைந்தவள் போல் மாற ."என்ன காத்து கருப்பு இருக்குன்னு சொல்ல போறியா ?"

"இல்லடி ஒரு தரவ எங்கப்பா அம்மா ரெண்டு பெரும் பேசுவதை கேட்டிருக்கேன் ..பல பேர உங்க தோப்புக்குள்ள கொன்னு புதைச்சிருக்காங்க .. உங்க அப்பா ஊர் தலைவர் இல்லையா யாரும் சந்தேகப்பட மாட்டாங்க அப்படின்னு பேசிக்கிட்டாங்க.. "
"எங்கப்பா இப்படியெல்லானு எனக்கு இதுவரை தெரியாதுடி "

"உங்கப்பா மட்டுமில்லை நம்ம குடும்பத்தில மெஜாரிட்டி இப்படி தான்..சொல்லப்போனா உங்கப்பாவுக்கே பல விஷயங்கள் தெரியாதுன்னு பேசிக்கிட்டு இருந்தாங்க .. "

"சரி ..இப்போ என்ன செய்றது?"

"மொதல்ல அவனை அங்கிருந்து வெளியே கொண்டு வரணும் ..வேற எங்கேயாவது மறச்சு வைக்கணும். இல்ல அவன் ஊருக்கே கொண்டு சேர்க்கணும் . அதுக்கு ஐடியா சொல்லுங்க. எது செய்றதா இருந்தாலும் ராத்திரிக்குள்ள செய்யணும் " நால்வருமாக என்ன செய்வது என்று முடிவெடுத்தவர்களாக பெண்கள் மூவரும் தங்கள் வீட்டை நோக்கி செல்ல கதிர் வேறுபுறம் சென்றான்.

அவன் சென்றது சுரேஷின் ஊருக்கு தான் !
கதிர் சுரேஷின் ஊருக்கு சென்றபோது ஊரே பரபரப்பாக இருந்தது. ஊரின் நடுவே கூட்டம் கூடியிருந்தது.சுரேஷை காணவில்லை என்று மூன்று நாட்களாக அவன் பெற்றோர் தேட ...அப்போது தான் அவனது நண்பர்கள் ஊருக்குள் நுழைந்தனர்.

அவர்களோடும் தங்கள் மகன் இல்லை என்பதை கண்ட அவர்கள் பதட்டம் இன்னும் அதிகரிக்க .."எங்கடா தம்பிகளா நம்ம சுரேஷு ..எங்க போனான் ?"

அவர்கள் மூவரும் தலை குனிந்தபடி நிற்க ஊர் தலைவர் போன்ற ஒருவர் முன் வந்து பேசினார் "எங்கடா போனான் சுரேஷு பய ..உங்க கூட்டாளி தானே ..எங்களுக்கு தெரியாம என்னவோ நடக்குது..என்னனு சொல்லுங்கப்பா " என்றார் அவர்களில் ஒருவனை பார்த்து.. அவன் அவரது மகன் செந்தில் .

அவரது அருகில் ஒரு இளைஞன் நின்றிருந்தான் ... வெகு களையான மெத்த படித்த தோற்றம் ..அணிந்திருந்த எளிமையான உடையிலும் ஒரு கம்பீரம் இருந்தது.

"இங்க பாரு செந்தில் ..உங்க கூட தான் கடைசியா ஊர்லருந்து வெளிய போயிருக்கான் .மூணு நாளா ஒரு தகவலும் இல்லை..போன் பண்ணா எடுக்கவும் மாட்டேங்கறான். இப்போ சுவிட்ச் ஆப் னு வருது .நீங்க முழிக்கறத பாத்தா வில்லங்கமான ஏதோ காரியம் பண்ணி வச்சிருக்கீங்கன்னு புரியுது.ஒழுங்கா சொல்லிடுங்க " என்றான் அதட்டலாக.

அவன் அதட்டினாலும் அந்த குரலில் ஒரு உரிமையும் பாசமும் தெரிவதை கண்டு கொண்டான் கதிர்.

"அண்ணே.. அது வந்து.." என்று அவர்கள் மென்று முழுங்க ..ஊர் பெரியவர் ரெங்கசாமிக்கு கோபம் தலைக்கேற செந்திலின் கன்னத்தை பதம் பார்த்தது அவரது கரம்.

அறையை வாங்கி அமைதியாக நின்றிருந்தவனை மறுபடியும் கை ஓங்கி வர.. மற்றவர்கள் அவரை பிடித்துக் கொண்டனர்.."இருங்க பொறுமையா விசாரிப்போம்" என்று அவரை சமாதானப் படுத்தினர்.

மற்றோருவன் மெல்ல தயங்கி வாய் திறந்தான் .."சுரேஷு பக்கத்தூரு பொண்ணு ஒருத்திய காதலிக்கிறான் ...ரெண்டு பெரும் காலேஜுல ஒண்ணா படிக்கிறாங்க .."எனவும் கோபமாக இடையிட்டார் ரெங்கசாமி .

"ஏண்டா படிச்சு முன்னேருங்கன்னு காலேஜுக்கு அனுப்புனா அங்க போய் பொம்பள பிள்ளைக பின்னால சுத்துறீங்களா ? நம்ம நெலம எப்படி இருக்கு ?நல்லா படிச்சு நாலு காசு சம்பாதிப்போம்னு இல்லாம காதலிச்சிக்கிட்டு திரியிறீங்களா..அதுவும் அடுத்த ஊர் பொண்ணோட .. அவனுங்க சும்மாவே நம்மள ஏறி மிதிப்பாங்க. இப்போ பெரிய பஞ்சாயத்தே வைக்க போறாங்க"

"கொஞ்சம் அமைதியா இருங்க மாமா ..முதல்ல விசாரிப்போம் "முதலில் பேசிய இளைஞன் அவரை சாந்தப் படுத்திவிட்டு .. செந்திலை பார்த்து "இப்போ எங்க போனாங்க ?" என்று கேட்கவும் மேலும் தயக்கம் கூடியது அம்மூவருக்கும்.

ஏதோ வில்லங்கம் என்று புரிய அனைவருக்குள்ளும் பதட்டம் ஏறியது.

இதற்கு மேலும் நடந்ததை மறைக்க முடியாது என்றறிந்து கொண்ட செந்தில் கூறினான்" அந்த பொண்ணு வீட்ல தெரிஞ்சி அவளை அடிச்சி வீட்டுக்குள்ள பூட்டிட்டாங்க ..அது தெரிஞ்சி இவன் அங்க போனான் ..எப்பிடியோ அந்த பொண்ணும் வீட்டை விட்டு கிளம்பிருச்சு. மதுரைல ஒரு பிரெண்டு இருக்கான் .. ரெண்டு பெரும் அங்க போய் கல்யாணம் பண்ணிக்க போறோம்னு எனக்கு போன் பண்ணான். நாங்களும் மதுரைக்கு போனோம் ..ஆனா .."

"ஆனா என்னடா ?" ரெங்கசாமி செந்திலின் சட்டையை பிடித்து உலுக்க "அவன் அங்க வரவே இல்லப்பா ..நாங்களும் ரெண்டு நாள் வெய்ட் பண்ணி பாத்தோம் அங்க இங்க சுத்தி வந்துருவாங்கன்னு.. ஆனா வரவேயில்லை ..போன் பண்ணா போக மாட்டேங்குது ..என்ன ஆச்சு எங்க போனாங்கன்னு தெரியல ..அதான் திருப்பி ஊருக்கு கிளம்பி வந்தோம் "என்றவுடன் மறுபடி செந்திலின் கன்னத்தில் ஒரு அறை விழ..

சுரேஷின் தந்தை தான் வந்து தடுத்தார் .."அண்ணே இந்த பிள்ளையை இப்போ அடிக்கறதில என்ன பிரயோஜனம் ..எம்புள்ள தான் புத்தி கெட்டு போய்ட்டான்.. இப்போ எங்க இருக்கானா என்னவோ தெரியலையே ! அந்த ஊர் பிள்ளையை கூட்டிட்டு ஓடினா விடவே மாட்டானுங்களே ..நம்ம சண்முகம் பயல்ல ஆரம்பிச்சு எத்தனை பேர பாதுப்புட்டோம் ?" என்று அழ துவங்க .."அவனை மட்டுமா கொன்னு போட்டானுங்க ..குடும்பத்தையே இல்ல ஓடஓட விரட்டுனானுங்க " எனவும் பெண்களிடம் இருந்து ஒரு ஓங்கிய அழுகை ஒலி எழ.."எல்லாரும் கொஞ்சம் சும்மா இருங்க "என்று அதட்டினான் அந்த இளைஞன். "கஷ்டப்பட்ட நாங்களே சும்மா இருக்கோம் ..நீங்க ஏன் இப்போ அழறீங்க ?"

"நம்ம ஊருல மட்டுமா.. அக்கம் பக்கம் ஊருலயும் இது மாதிரி எத்தனை நடந்துருக்கு ..அந்த சிங்காரவேலன் அய்யா தம்பிங்க பண்ற அட்டூழியம் ரொம்ப அதிகமா போச்சு ..அதுவும் அவரு தேர்தல்ல ஜெயிச்சபிறகு கேக்கவே வேணாம்"

"நீங்கல்லாம் தானே ஓட்டு போட்டீங்க ? இப்போ புலம்புனா ?"

"அவரு தான் இந்த பக்கத்துல பெரிய குடும்பம் ..அவங்க பேச்ச மீறி பழக்கம் இல்லையப்பா "

"அதெல்லாம் அந்த காலம் ..பெரிய குடும்பம்..பாரம்பரியம் ..ராஜ பரம்பரை இப்படியெல்லாம் சொல்லி தான் இன்னமும் பல பேரு ஏமாத்திக்கிட்டு இருக்காங்க . அவங்க ஏமாத்தறது அவங்க வழக்கம் .ஆனா இன்னும் நீங்கல்லாம் தெரிஞ்சே ஏமாந்துக்கிட்டு இருக்கீங்களே ..உங்களுக்கு இதெல்லாம் தேவைதான் " என்றான் கோபமாய்.

"இப்போ இதெல்லாம் பேச நேரமில்லை ..சுரேஷ தேடணும் முதல்ல .. வேற யாரவது வெளியூர் பிரெண்ட்ஸ் இருக்காங்களா அவனுக்கு ? சொல்லுடா செந்தில் !"

"இல்லண்ணே ..எங்களுக்கு தெரிஞ்சு வேற யாரும் இல்ல "

இதுவரை அமைதியாக ஒரு ஓரமாக நின்றிருந்த கதிர் நகர்ந்து முன்னால் வர .. அப்போது தான் அவனை கவனித்தனர் அனைவரும்
 
பிரச்சனை பெரிதாக போகுது 😢
சூப்பர் 😀
 
Top