Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வண்ணங்கள் - 2

Advertisement

TNWContestWriter098

Well-known member
Member
Chapter 2

பித்து பிடித்தது போல் அமர்ந்திருந்த மகளை காணுகையில் பதட்டம் கூடியது வடிவுக்கு!
சொல்லாமல் கொள்ளாமல் கல்லூரியில் இருந்து கிளம்பியிருந்தவள் பேயறைந்தவள் போல நிற்கிறாள்.

இவள் வருகை அறிந்து வந்திருந்த வடிவின் தங்கை பரிமளாவும் இவளை உலுக்காதகுறையாக கேட்டு விட்டாள். பதில் தான் வர காணோம் ..

"அம்மா பண்ணாரி தாயே! என் புள்ளக்கி என்னமோ ஆச்சேம்மா .. நீதான் தாயே காப்பாத்தோணும்" சாமி அறையில் இருந்து திருநீறை எடுத்து வந்து மகளின் நெற்றியில் பூசியவள்.."உங்க அப்பாரு வேற வீட்ல இல்லையே ..நான் என்ன பண்ணுவேன்? " என்று புலம்ப தொடங்க "அப்பா " என்ற வார்த்தையில் சற்றே சுதாரித்தாள் கண்மணி.

அப்பா .. அப்பா ..
அவரா அது ? எவ்வளவு மென்மையானவர்..அவரா ஒருவனை அடிப்பவர் ?
எவ்வளவு தன்மையானவர் ? இவ்வளவு ரௌத்திரம் அவரிடம் கண்டதே இல்லையே ..
அதிர்ந்து ஒரு வார்த்தை பேசாதவரா இன்று காலை அப்படி ஒரு செயலை செய்தார் ?
துடிக்க துடிக்க ஒருவனை அடிக்கும் அளவுக்கு வன்மையானவரா?
இருக்காது ..அவர் இல்லை அது ..தான் பார்த்தது அவராக இருக்காது ..இருக்கவும் முடியாது ..கூடாது
மனம் உருப்போட்டு கொண்டிருக்க அறிவு எள்ளி நகையாடியது.. தங்கள் தோப்புக்குள் வேறு யார் வர முடியும் ?அதுவும் கண்ணாலே கண்ட பிறகு அவரது குரலை கேட்ட பிறகு .. அவராக இருக்காது என்று நம்பும் மூடத்தனத்தை என்ன சொல்வது .. பாசமின்றி வேறெது?
இதற்குள் இவளது தந்தை வீட்டிற்குள் நுழைய .. "ஐயோ உங்க மாமா வந்துட்டாருடி பரிமளா.என்ன பதில் சொல்வேன் அவருக்கு? வாயை திறக்க மாட்டேன்கிறாளே இவ.." புலம்பியபடி அவர் கூடத்திற்குள் செல்ல பின்தொடர்ந்த கண்மணியின் கண்களுக்கு அவர் முகத்தில் இருந்த பதட்டத்தை விட தெளிவாக தெரிந்தது அவர் சட்டையில் ஒரு ஓரத்தில் இருந்த ரத்த கரை!
அதுவரை இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் பொய்க்க நெஞ்சுக்கூடு காலியானது போல் இருந்தது கண்மணிக்கு!
இவர் வேறு பதட்டமாக இருக்கிறாரே ..இவள் சொல்லாமல் கொள்ளாமல் வந்து நிற்பதை கண்டால் என்ன நடக்குமோ என்று வடிவு பதைத்து நிற்க ...
" வடிவு ..கண்மணி காலேஜ் இருக்க ஏரியால கலவரமாம்.. டிவில வருதுன்னு நம்ம சுஜித்து சொன்னான் மா..கண்மணி என்ன செய்யுதோ பத்திரமா இருக்கோ தெரியலையே ..நான் வேற நேத்து ராத்திரில இருந்து வேலையா இருந்துட்டேன்.,.போன் கூட போடல .." என்று புலம்பியபடி வந்தவர் கண்மணியை கண்டதும் கவலை வடிந்தவராய் முகம் மலர்ந்தார்.
என்ன வேலையாய் இருந்திருப்பார் என்ற ஊகத்தில் முகம் சுண்டி நின்றாள் மகள்.

'கலவரம்' என்றதும் அதனால் தான் மகள் வாட்டமாய் இருக்கிறாளோ என்று கவலையுடன் தலை முதல் கால் வரை ஆராய்ந்தது வடிவின் தாயுள்ளம்.
"கண்மணி .." வாஞ்சையாய் அழைத்த வேலன் "எப்படி கண்ணு வந்தே? ஒரு போன் போட்டா அப்பா வந்து கூப்பிட்டுருப்பேன்ல " என்றார்.
மெல்ல சுதாரித்தவள் .."நேத்து போனை ஹாஸ்டல்ல மறந்து விட்டுட்டேன்பா ..எல்லாரையும் காலேஜில் இருந்து அப்படியே ஊருக்கு கிளம்ப சொல்லிட்டாங்க .. காலேஜ் பஸ்ஸில கொண்டு வந்து ரயில்வே ஸ்டேஷன் , பஸ் ஸ்டாண்டில எல்லாரையும் இறக்கி விட்டுட்டாங்க .."
"தனியாவா வந்த ?" இப்போது குரலில் கவலை நீங்கி கேள்வி எழுந்தது .."இல்லப்பா பிரெண்ட்ஸ் வந்தாங்க ஈரோடு வரைக்கும் ..கோயம்பத்தூர் போறவங்க ..ஈரோட்ல இருந்து தனியா தான் வந்தேன் பஸ் பிடிச்சி ".
"இந்த விடிஞ்சும் விடியாத வேளையில தனியா வர கூடாது பாப்பா..ஸ்டேஷன் மாஸ்டர் நம்ம ஊர்க்காரர் தான ..அவர்கிட்ட சொல்லிருந்தா எனக்கு உடனே போன் பண்ணிருப்பாரில்லை ?"
'அதனால் தான்பா சொல்லலை ' நினைத்தவள் "அந்த நேரத்தில தோணலைப்பா.”

"நான் வாச தெளிச்சு கோலம் போட்டுக்கிட்டு தான டி இருந்தேன் ..உன்னை பாக்கவேயில்லயே ?" என்று பரிமளா அதி முக்கிய கேள்வியை எழுப்ப ..அவர்கள் வீட்டை தாண்டி தான் இவர்கள் வீடு ...அதை கவனிக்காதவள் போல் "அம்மா ரொம்ப பசிக்குது ..நேத்து சாயங்காலம் கொஞ்சமா தான் சாப்பிட்டேன்" எனவும் பரிமளாவின் கேள்வியை காற்றில் பறக்க விட்டு "போய் புள்ளக்கி ஏதாவது குடுடி " என்றுவிட்டு குளியலறைக்குள் புகுந்தார் வேலன்.

தாயின் கையால் சூடான பில்டர் காஃபி வாங்கி பருகிவிட்டு குளியலறைக்குள் புகுந்தவளின் மனம் காலை கண்ட காட்சியையே பலமுறை மனதுக்குள் ரீவைண்ட் செய்தது .. அவளால் நம்பவே முடியாததாக இருந்தாலும் அதுதான் உண்மை என்று அவளது அறிவிற்கு தெளிவாக புரிந்தது.
மேலும் பல கேள்விகள்..

யார் அவன் ? இளவயதினனாக இருந்தான் ..இவளை விட ஓரிரு வயதே பெரியவனாக இருப்பான் .
அவனை எங்கும் பார்த்திருக்கிறோமா என்று மூளையின் பக்கங்களை புரட்ட... ஒன்றும் தோன்றவில்லை!
இவளது பள்ளியிலோ ..கோயில் விழாக்களிலோ ..உறவினர் வீட்டுவிசேஷங்களிலோ பார்த்தது போல் இல்லை ..பெரும்பாலும் அவளது ஊரை சேர்ந்தவர்களை இந்த சந்தர்ப்பங்களில் பார்த்திருப்பாள்.
அவன் வெளியூரானாக தான் இருக்க வேண்டும் ..
எதற்காக இங்கு வந்திருப்பான் ? அதுவும் அவர்களது தோப்பிற்குள் !
திருடனாக இருக்குமோ ? யாரையும் தாக்கியிருப்பானோ .. அல்லது கொலையே செய்துவிட்டானோ ..அல்லது பெண் பிள்ளைகளிடம் வம்பு செய்திருப்பானோ ..
எதுவாக இருந்தாலும் இப்படி பத்து பேர் சேர்ந்து அடிப்பதெல்லாம் கிடையாதே ..பஞ்சாயத்தில் தான் என்ன செய்வதென்று முடிவெடுப்பார்கள் ..இப்போதெல்லாம் போலீஸ் தான் வந்து கைது செய்து அழைத்து செல்கிறார்கள் ..முன்பு போல் கட்டி வைத்து அடிப்பதெல்லாம் கிடையாது . இதை எப்படி கண்டுபிடிப்பது ?

அலைபேசியை வேறு ஹாஸ்டலில் விட்டு விட்டதாக பொய் சொல்லியாயிற்று.. அதை வேறு மெயின்டைன் செய்ய வேண்டும்.
மனதிற்குள் குழப்பம் கூட கைகளில் சோப்பை குழைத்தபடி நின்றிருந்தவளை தாயின் குரல் கலைத்தது .."அடியே.. என்னடி செய்யுற ..குளிக்குறியா இல்லை தூங்குறியா ?சீக்கிரம் வா ..அவிச்ச இட்டிலேயே ஆறி அவலா போச்சு .."

"சே இந்த அம்மாவுக்கு கத்தறதை தவிர வேறெதுவும் தெரியாதா? இதே அப்பாக்கு முன்னாலே வார்த்தையே வராது" புலம்பியபடி உடை மாற்றி வந்தவள் உணவு மேஜையில் அமர ..இவளது தலையை தொட்டு பார்த்த வடிவின் கரங்கள் டவலை எடுத்து மக்களது தலையை துவட்டின.

"தலையை கூட சரியா துவட்ட தெரியல ..இவ கம்பியூ...ட்டர் இன்சினீரிங் படிக்கிறாளாம் " என்று நீட்டி முழக்க அதுவரை இருந்த கவலை மறந்து புன்னகை மலர்ந்தது கண்மணியின் இதழ்களில்!
தட்டில் பூப்போல விழுந்த இட்டிலிகளை பார்த்ததும் வழக்கம் போல் தாயின் கைமணத்தில் இதம் சூழ்ந்தது .
" கண்ணு ..ஆத்தாவை போய் பாத்துடு மொதல்ல " என்றார் வடிவு .
சிங்காரவேலனின் தாயார் பொன்னுத்தாய் வெகு நாட்களாகவே படுத்த படுக்கையில் தான்.
அவரை கவனிக்க ஒரு பெண்ணும் வேலைக்கு இருந்தாள்.
இவள் ஆத்தாவின் அறையினுள் செல்ல அந்நேரம் தான் அவருக்கு உணவூட்டிக் கொண்டிருந்தாள் அந்த பெண் யசோதா .அவள் செவிலியர் பயிற்சி பெற்றவள்.
கண்மணிக்கு பொன்னுத்தாய் என்றாள் ரொம்ப பிரியம். சிறு வயதில் அவரோடு தான் எப்போதும் சுற்றுவாள்.
இவளை இடுப்பில் தூக்கி வைத்தபடி அவர் வேலை செய்யும் பாங்கும் அவர் சொல்லும் கதைகளும் நீங்காமல் இன்னும் நினைவில் இருந்தன.
இவள் சென்று ஆத்தாவின் அருகில் அமர்ந்து யசோதாவின் கைகளில் இருந்த உணவு கிண்ணத்தை வாங்கி கொள்ள ..இங்கிதம் அறிந்து அவள் விலகி வெளியில் சென்று விட்டாள்.
"ஆத்தா " என்று பிரியமுடன் அழைத்தபடி பொன்னுத்தாயின் கைகளை கண்மணி பற்ற அம்முதிய பெண்மணியின் முகம் மலர்ந்தது.
விழிகளின் பார்வை மங்கிவிட்டதால் கரங்களால் தன் செல்ல பேத்தியை தடவி மகிழ்ந்தார் பொன்னுத்தாயி.
"எப்போ கண்ணு வந்தே ?"
"கொஞ்ச நேரம் முன்ன தான் ஆத்தா "
"நீ வரதா உங்கப்பன் கூட நேத்து சொல்லலையே " உள்ளே போன குரலில் சொன்ன அந்த முதியவரின் உள்ளம் தன்னை தவிர்க்கிறார்களோ என்று வருந்தியது.
அவரது வருத்தம் பொறுக்காதவளாய் "திடீர்னு உன்ர நெனப்பு வந்துதாத்தா..அதன் சட்டு புட்டுன்னு கிளம்பிட்டேன் "
"அப்படியா ..என்ன பாக்கவா ? என் ராசாத்தி " என்று நெட்டி முறித்த அந்த முதியவள் அச்சிறு பொய்யிலும் உள்ளம் குளிர்ந்தாள் .
அவருக்கு உணவூட்டியபடியே சிறிது நேரம் கண்மணி பேசிக் கொண்டிருக்க .. " அவருக்கு மருந்தளிக்க வேண்டி யசோதா எட்டி பார்க்க "சரியாத்தா.. நீங்க மருந்து சாப்பிட்டு தூங்குங்க ..சாயங்காலம் வந்து நான் பாக்கிறேன்" என்று கூறி வெளியேறினாள் கண்மணி.
தொலைக்காட்சியின் முன் அமர்ந்து சேனல்களை மாற்றியவளுக்கு சலிப்பு தான் ஏற்பட்டது. எந்த சேனல் பார்த்தாலும் ஒரு சீரியலோ பாடலோ ஓடிக் கொண்டிருக்க.. வில்லி மாமியார்கள் மருமகளை ஒழித்துக் கட்டவும் ,விவகாரமான மருமகள் அப்பாவி மாமியாரை கொடுமைப்படுத்துவதும் ,யாராவது யாரையாவது கடத்துவதும் முதுகில் குத்த சதி செய்வதாகவும் வர..மாற்றி மாற்றி பார்த்தவள் அலுத்து போய் எழுந்துவிட்டாள் .எதிலும் மனம் லயிக்கவில்லை.

மனம் சுற்றி சுற்றி தந்தையிடமே வந்தது .
இது அவளறிந்த தந்தையில்லை .. அவர் கோபப்பட்டு இதுவரை அவள் பார்த்ததில்லை !
அல்லது கோபப்படும்படி வீட்டினர் யாரும் நடந்ததில்லையோ ..
வடிவு தான் இவளிடம் எப்போதும் சிடு சிடுவென்று இருப்பாள்.. இந்த அப்பா எவ்வளவு மென்மையாக இருக்கிறார் ..ஆனால் அம்மாவோ வெகுவாக கோபப்படுகிறார் என்று தான் கண்மணிக்கு தோன்றும்.. இவள் எது செய்தாலும் கோபப்பட்டு, கண்டித்து , இவளது சின்ன சின்ன ஆசைகளுக்கு கூட முட்டுக்கட்டை போட்டு என்று இவளுக்கு ஆதங்கமாக இருக்கும் ..காலேஜில் இவளுடன் பயிலும் மாணவிகள் பெரும்பாலும் அம்மா செல்லமாக இருப்பதை பார்க்கையில்!
எவ்வளவு சுலபமாக தாயுடன் வார்த்தையாடுகிறார்கள் ! செல்லம் கொஞ்சுகிறார்கள்! சண்டை கூட பிடிக்கிறார்கள்!
ஆனால் வடிவிடம் அப்படியெல்லாம் செய்துவிட முடியாது. பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு அறிவுரை கிடைத்து விடும்..பள்ளி கதைகளை பேசினால் சற்று நேரம் கூட அவரால் காது கொடுத்து கேட்க முடியாது.
வாயாடாம இருக்க மாட்டியாடி ? என்ற கோப கேள்வி தான் வந்து விழும்.
கண்மணி கூட பெரும்பாலும் அவரிடம் அடம் பிடித்தோ.. பிடிவாதம் செய்தோ இருந்ததில்லை.
அதற்கு அவளது அன்னை விட்டதேயில்லை என்பதே உண்மை!
இவளை தனியே எங்கும் அனுமதிக்கவே மாட்டார் ..பள்ளியில் கூட எத்தனையோ முறை சுற்றுலா சென்றிருக்கிறார்கள் ..அதுவும் காலை சென்று மாலை திரும்புவதாக இருக்கும். அதற்கே அனுமதிக்க மாட்டார் . ஒரு முறை உண்ணாவிரதம் இருந்து கூட பார்த்துவிட்டாள்..'இப்போது சுற்றுலாவிற்கு போவதாயிருந்தால் பள்ளிக்கூடத்திற்கே தடா தான்' என்றுவிட வேறு வழியின்றி இவள் தான் இறங்கி வர வேண்டியிருந்தது.

மனதின் ஓட்டத்திற்கு வேகத் தடை போட்டவள் மெல்ல மெல்ல இயல்புக்கு மீண்டாள். இருந்தும் காலை கண்ட காட்சி விடாமல் மனதோரம் துருத்தி நின்றது. முயன்று அதை ஒதுக்கியவளாய் "அத்தை வீட்டுக்கு போய்ட்டு வரேன்மா" என்று குரல் கொடுத்தபடி வாசலில் இறங்கினாள்.
"எந்த அத்தை வீட்டுக்குடி ?" என்று கேள்வி எழுப்பியபடி அவள் அன்னை வாசலுக்கு ஓடி வந்த போது தெருமுனையை தாண்டியிருந்த மகளின் உருவத்தை பார்த்தபடி 'கால் ஒரு இடத்தில நிக்காதே இவளுக்கு ' என்று புலம்பியபடி வீட்டினுள் நுழைந்தார்.
தெருவில் இறங்கி நடந்த கண்மணியை கண்ணில் படும் ஒவ்வொருவரும் விசாரித்தபடி இருக்க.. ஊர் பெருந்தனக்காரரின் மகளல்லவா ? அதற்கேற்றாற்போல் "நல்லாருக்கியா தாயி ?" என்று மரியாதையாய் ஒரு சிலரும் "எப்போ கண்மணி ஊருக்கு வந்த ?" என்று உரிமையாய்ஒரு சிலரும் "ஏய் வந்துட்டியா கண்மணி "என்று சந்தோசமாய் ஒரு சிலரும் ..
வித விதமான விசாரணைகளுக்கு பதிலளித்தபடி நடந்தவள் அந்த மத்திய தர வீட்டின் முன் நின்றாள் ..
"அத்தை ..அத்தை"
இவளது குரலுக்கு ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி எட்டிப்பார்த்தார் ..சாதாரண வீட்டில் உடுத்தும் வாயில் புடவையில், தலை குளித்து நுனியில் முடிச்சிட்டு கூந்தலில் ஒரு இணுக்கு மல்லிகையும் ,நெற்றியில் பளிச்சிட்ட வட்ட பொட்டுமாய் மங்களகரமான தோற்றம்!
ஆனால் நிரந்தரமான ஒரு சோகம் அவர் முகத்தில் தென்படுவதாக கண்மணிக்கு தோன்றும்.
அவர் தான் தாமரை ..சொக்கலிங்கம் வாத்தியாரின் துணைவி. நேரடியாக இவளுக்கு தூரத்து உறவு தான் என்றாலும் மனதளவில் மிக நெருக்கமானவர்.
அவருக்கு ஒரே மகன் தான் என்பதால் பெண்பிள்ளையான அவள் மேல் அளவில்லாத வாஞ்சை அவருக்கு !
"கண்ணு "என்று பாசம் பொங்கி வழிய அழைத்தபடி வாசலுக்கு வந்தவர் .."என்ன கண்ணு ?வாசல்ல நின்னுகிட்டு ?உள்ள நீ பாட்ல வர வேண்டியதுதானே ?" என்றபடி இவள் அருகில் வந்தார் .

"வந்திருப்பேன் ..ஆனா என்ன பாத்தும் பாக்காத மாதிரி உக்காந்திருக்காரே.. உங்க வாத்தி..அதுதான் இங்கேயே நின்னுட்டேன் " என்றபடி செய்தித்தாளில் முகம் புதைத்து திண்ணையில் அமர்ந்திருந்தவரின் அருகில் சென்று செய்தித்தாளை பிடுங்க .. செய்தித்தாளின் பின் தெரிந்த முகத்தை கண்டு கைகளைஉதறியபடி பின் நகர்ந்தாள் கண்மணி.
 
Very nice ?
 
அப்பாவோட பாசத்துக்கு பின்னாடி ஏதோ குறை இருக்கறதா நினைக்கிறாளா?. யாரு அது பேப்பருக்கு பின்னாடி இருந்த முகம்? அதுக்கேன் ஷாக்காகி நகரோனும் கண்மணி.
 
சிங்காரவேலன் பத்தி வடிவுக்கு தத்தெறியுமா இல்ல அங்கையும் இது தன
வாத்தி இல்லையா வாத்தியோட பிள்ளையா....
 
Top